World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Five years after the invasion of Iraq: A debacle for US imperialism

ஈராக் படையெடுப்பிற்குப் பின் ஐந்து ஆண்டுகள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சங்கடம்

By the editorial board
19 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

வாஷிங்டன் தன்னுடைய "அதிர்ச்சி மற்றும் பெரும் திகில்" படையெடுப்பை பாக்தாத்தில் ஏவுகணைகள் மற்றும் துல்லியமாக இயக்கப்பட்ட குண்டுவீச்சுகளுடன் நடத்தத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர் அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய புவிசார்- அரசியல் பேரழிவாக மாறிவிட்டது என்பது நன்கு புலனாகியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக நிலை மற்றும் டாலர் கணக்குகளில் பார்க்கும்போது போர்ச் செலவுகள் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்பு வியட்நாமில் நீடித்த தலையீட்டை ஒட்டி ஏற்பட்ட மகத்தான சேதத்தையும் இது விழுங்கிவிட்டது. அது ஏற்கனவே அமெரிக்க உள்நாட்டுப் போர், முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் கொரியப் போர்க்காலத்தை விட அதிகமாக நீடித்து விட்டது. வியட்நாமில் கூட ஐந்து ஆண்டுகள் அதிக அளவு இராணுவம் பயன்படுத்தப்பட்ட பின்னர் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறத்தலைப்பட்டது.

அமெரிக்க இராணுவவாதத்தின் மாபெரும் தடுக்க முடியாத தன்மையின் விளக்கிக்காட்டலாக தொடுக்கப்பட்ட "விருப்பத் தேர்வான போர்", செயற்பாட்டில் சங்கடம் கொடுப்பதாக மாறி, அமெரிக்க இராணுவ சக்திகளை முறியும் நிலைக்கு மிதமிஞ்சி ஈடுபடுத்தி ஊறுபடுத்தியிருப்பதுடன், உலகின் ஒவ்வொரு மூலையிலும் அமெரிக்காவின் மூலோபாய நிலையை அரித்தழித்து விட்டது.

ஈராக்கிய மக்களை பொறுத்த வரை, போர் ஒரு பேரழிவை தோற்றுவித்து விட்டது. அமெரிக்க மக்களுக்கும் இது கஷ்டம், சோகம் ஆகியவற்றை தவிர வேறு எதையும் கொடுத்துவிடவில்லை. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஒற்றை மிகப் பெரிய போர்க்குற்றம் என்று கேள்விக்கிடமின்றி இது உள்ளது. அதன் உந்துதல் நோக்கம், செயல்படுத்தப்பட்ட முறை ஆகியவை கடந்த நூற்றாண்டில் இதே போன்று நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் அடிப்படைக் கூறுபாடுகளைத்தான் கொண்டுள்ளன.

நூரெம்பேர்க்கில் சர்வதேச நீதிமன்றம், மூன்றாம் ரைக்கின் தலைவர்களுக்கு தண்டனை கொடுத்த மன்றம் அதன் தீர்ப்பை கீழ்க்கண்ட விதத்தில் சுருக்கமாக தெளிவாக்கியது: "போர் என்பது அடிப்படையில் ஒரு தீமையாகும். இதன் விளைவுகள் சண்டையிடும் நாடுகளுடன் நின்றுவிடவில்லை, உலகம் முழுவதையும் அது பாதிக்கும். எனவே ஒரு ஆக்கிரமிப்பு போரை தொடங்குவது ஒரு சர்வதேசக் குற்றம் மட்டும் அல்ல; தலையான சர்வதேச குற்றமும் ஆகும், மற்ற போர்க்குற்றங்களில் இருந்து இது வேறுபட்டு நிற்பதில் இது முழுமையான தீமை அனைத்தையும் திரட்டாக கொண்டுள்ளது."

இப்படி "திரட்டப்பட்ட தீமை", ஈராக்கின்மீது போர் தொடுக்க வேண்டும் என்ற முடிவால் ஏற்பட்டது, இன்னும் தொடர்கிறது. மிக நம்பகமான மதிப்பீடுகளில் இருந்து அது இதுவரை ஒரு மில்லியன் ஈராக்கிய மக்கள் உயிரைக் குடித்து, அவர்கள் நாட்டில் ஏற்பட்ட வன்முறை அழிவு இவற்றை ஒட்டி 4 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்களை நாட்டிற்குள்ளேயே அகதிகளாவும் ஆக்கியுள்ளது அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறு செய்துள்ளது.

பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், அமெரிக்காவில் ABC News, மற்றும் ஜேர்மனிய ஜப்பானிய தொலைக் காட்சி நிறுவனங்களால் நடத்தப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த கருத்துக் கணிப்பு பாக்தாத்தில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் குறைந்தது ஒரு நபராவது ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடங்கியதில் இருந்து தங்கள் குடும்பத்தில் கொல்லப்ட்டுவிட்டனர் என்று கூறியதை தெரிவித்துள்ளது.

இதே கருத்துக் கணிப்பு ஈராக்கியர்களில் 70 சதவிகிதத்தினருக்கும் மேலானவர் அமெரிக்க படைகள் தங்கள் நாட்டை வீட்டு நீங்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று தெரிவிக்கிறது; இந்த உணர்வு ஆக்கிரமிப்புக் காலம் முழுவதும் உறுதியாக இருந்திருக்கிறது; ஆனால் இது அமெரிக்க அரசியல் ஆட்சி அமைப்புகள் மற்றும் செய்தி ஊடகத்தால் அசட்டை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்தியுள்ள பிரித்தாளும் மூலோபாயமும், இனவழி அரசியலை தளமாகக் கொண்டு ஒரு கைப்பாவை ஆட்சியை அங்கு நிறுவும் வாஷிங்டனின் முயற்சிகளும் காட்டுமிராண்டித்தனமாக குறுகியவெறி போர் நடத்தும் சூழலை அங்கு உருவாக்கியுள்ளது; அது கணக்கிலடங்கா பாதிப்பாளர்களை ஏற்படுத்தி, பாக்தாத்தின் பெரும் பகுதிகளை அதேபோல் ஷியா, சுன்னி மற்றும் குர்திஷ் ஈராக்கியர்கள் முன்பு அருகருகே ஒற்றுமையுடன் இருந்த பிற இடங்களையும் "இனவழிப் படுகொலைக்கும்" உட்படுத்தியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயர்தர வெடிமருத்துகள் அமெரிக்கரால் பயன்படுத்தப்பட்டதை ஒட்டி ஏற்பட்ட சமூக கட்டுமான தகர்ப்பு --அதேபோல அதற்கு முன்பு தண்டனை அளித்த பொருளாதார தடைகளும் சேர்க்கப்பட வேண்டும்-- அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வெளிவந்துள்ள சிதைவைத்தான் இன்னமும் அதிகமாக்கியுள்ளது. முக்கியமான அடிப்படைக் கட்டுமானம் பேரழிவிற்கு உட்பட்டு நிற்கிறது; மக்களுக்கு மின்வசதி, எரிபொருள், தூய குடிநீர், சுகாதார வசதிகள், குப்பை சேகரிப்பு ஆகியவை இல்லாமல் நரகத்திற்கு ஒப்பான நிலைமைகள் ஏற்பட்டு பெரும் பொது சுகாதார நெருக்கடி எழுந்துள்ளது. 600க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்கள் கொல்லப்பட்டது, ஆயிரக்கணக்கானவர்கள் ஓட்டம் பிடித்தது ஆகியவையும் மருந்துப் பொருட்கள், கருவிகள் ஆகியன கடுமையான பற்றாக்குறையும் சேர்ந்து ஈராக்கின் பொது சுகாதாரத்தை சரியும் நிலையில் தள்ளியுள்ளன.

அமெரிக்க படைகளிடையே இறப்பு எண்ணிக்கை விரைவில் 4,000 என்று உயரும். குறைந்தது 60,000 க்கு மேற்பட்டோராவது காயமுற்றுள்ளனர்; பல ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள், கடற்படையினர்கள் இந்த கறைபடிந்த காலனித்துவ போருக்கு அனுப்பப்பட்டவர்கள், கடுமையான உளவியல் பிரச்சினைகளுடன் திரும்ப வந்துள்ளனர்.

அமெரிக்க சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள செலவைப் பொறுத்த வரையில், இப்பொழுது ஆக்கிரமிப்பு மாதம் ஒன்றுக்கு $12 பில்லியனை விழுங்குகிறது என்றும் மொத்தம் $3 டிரில்லியனுக்கும் மேலாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் கூட்டு பொருளாதாரக் குழு கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, இதுவரை போர் சராசரியாக நான்கு பேர் கொண்ட அமெரிக்க குடும்பத்திற்கு $16,900 செலவை கொண்டிருக்கிறது என்றும் இந்த இழப்பு 2017 ஐ ஒட்டி $37,000 ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய பரந்த தொகைகள் அமெரிக்காவின் தேவையான சமூகத் தேவைகளில் இருந்து திருப்பிவிடப்படுகின்றன; அதே நேரத்தில் பெரும் செலவுகள் பொருளாதாரத்தை மந்த நிலையில் தள்ளக்கூடிய அச்சுறுத்தலை கொடுத்துள்ள சீற்றம் நிறைந்த நிதிய நெருக்கடிக்கும் கணிசமாக உதவியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியின் வக்கிர புத்தியின் அளவு -- மற்றும் மனித உயிர் பற்றி பொருட்படுத்தா அவரது குற்றம் சார்ந்த தன்மை -- கடந்த வாரம் அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருப்பவர்களுடன் வீடியோ பேச்சு நடத்துகையில், புஷ் அமெரிக்காவின் காலனித்துவப் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தான் பொறாமை கொண்டிருப்பதாகவும் அது "வியத்தகு அனுபவம்", "ஒரு சில விதங்களில் பெரும் கவர்ச்சி உடையது" என்றும் அறிவித்தார்.

இதே அளவிற்கு போலித் தோற்றத்தைக் கொண்டதாகத்தான் துணை ஜனாதிபதி டிக் செனி பாக்தாத்திற்கு அறிவிப்பு இல்லாமல் சென்றிருந்தபோது கூறிய கருத்துக்களின் தன்மையும் இருந்தது. ஐந்து ஆண்டுப் போர் ஒரு "வெற்றிகரமான முயற்சி", "முயற்சிக்கு தக்க மதிப்பு இருந்தது" என்று அவர் கூறியிருந்தார்.

இதில் உண்மை என்னவென்றால், சதாம் ஹுசைனை அகற்றி உறுதியான அமெரிக்க ஆதவாளர் அரசாங்கத்தை விரைவாக அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அமெரிக்க படையெடுப்பு நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும் அந்நாட்டில் 160,000 அமெரிக்க துருப்புக்கள் இருக்கின்றன -- கடுமையான பாதுகாப்பு உடைய பசுமைப் பகுதியிலும் கூட மிக அதிக அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் செனியை சுற்றி இருப்பதே இதைச் சுட்டிக் காட்டுகிறது-- என்பதுடன் எந்தப் பகுதியும் முழுமையான பாதுகாப்பில் இருக்கிறது என்று கூறுவதற்கும் இல்லை.

ஓராண்டிற்கு முன் பென்டகன் முன்னெடுத்த படைப்பெருக்கமானது, படையெடுப்பின் ஆரம்பத்தில் அமெரிக்க தளபதிகள் ஆக்கிரமிப்பு படைகளை இருத்த வேண்டிய நிலை பற்றி நம்பிய நிலைமைகளுக்கு இன்னமும் இட்டுச் செல்லவில்லை. "சிறப்பான முறையில் மாற்றத்தை கொடுத்துள்ளது" என்று செனி குறிப்பிட்ட படைகள் விரிவாக்கம் அன்றாடம் நடக்கும் குருதி கொட்டுதலை நிறுத்திவிடவில்லை. அமெரிக்க அரசாங்க புள்ளிவிவரங்களின்படிக்கூட, பெப்ருவரி மாதம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 26 ஈராக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

கொடூரமான இறந்தவர் எண்ணிக்கை பட்டியலில் குறைவு ஏற்பட்டதற்கு பெரிதும் காரணம் அமெரிக்க சமாதான முயற்சிகள் அல்ல; மாறாக ஆக்கிரமிப்பு கட்டவிழ்த்துவிட்ட குறுகிய வெறி வன்முறையானது, கொலை செய்யப்பட வேண்டியவர்களை அற்பமாக்கி சுன்னி, ஷியா மக்களை பெரிதும் பிரித்துவிட்டது. இதற்கு இடையில், பென்டகன் முன்னாள் சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு நிதியும், ஆயுதங்களும் கொடுக்கிறது; அவர்களுக்கு வாஷிங்டன் அல்லது அமெரிக்க ஆதரவுடைய அரசாங்கத்தின்மீது விசுவாசம் கிடையாது; அவர்கள் இப்பொழுது ஷியா மேலாதிக்கம் நிறைந்த பாதுகாப்பு படைகளைத்தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக காண்கின்றனர்.

தங்கள் நாட்டு நிலைமை பற்றி ஈராக்கியர்கள் கொண்டுள்ள உள்ளுணர்வு, சமீபத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளபடி, பாதிக்கும் மேலானவர்கள் பாக்தாத்திலும் அன்பர் மாநிலத்திலும் அமெரிக்க படைகள் வலிமையுடன் இருப்பது விஷயங்களை மோசமாக்கியுள்ளது என்று நம்புகின்றனர்.

பொய்களின் அடிப்படையை தளமாகக் கொண்ட போர்

இப்பொழுது உலகமெங்கும் நன்கு அறியப்பட்ட முறையில், 2002, 2003 ஆரம்பப் பகுதியில் தயாரிக்கப்பட்ட போர் ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாக்தாத்திற்கும் அல் கொய்தாவிற்கும் இருந்த உறவு பற்றிய வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்கள், கற்பனை உரைகள் பற்றிய பிரச்சாரங்களின் அடிப்படையில் இருந்தன. இவை இரண்டும் இருந்ததில்லை என்று நிரூப்பிக்கப்பட விருந்தன.

தேசிய சட்டமன்ற ஜனநாயகக் கட்சியினரின் உடந்தையுடன், புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து எழுந்த பயங்கள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நீண்டகாலமாக தயாரித்திருந்த திட்டங்களை கொண்டு உலகில் இரண்டாம் அதிக எண்ணெய் வளங்கள் இருக்கும் நாட்டின்மீதான கட்டுப்பாட்டை கொள்ளுவதற்கு முயன்று, அந்நாட்டை அமெரிக்க இராணுவசக்தி அப்பகுதி முழுவதிலும் விரிவாக்கப்படுவதற்கு அரங்காக மாற்ற முற்பட்டது.

இரு அரசியல் கட்சிகள் நடத்திய இடைவிடாத பிரச்சாரம் மற்றும் அதற்கு பணிந்து நடந்த செய்தி ஊடகத்தின் ஆதரவு இவற்றினால் மக்களின் நோக்குநிலை மாறினாலும், அங்கே போர் உந்துதலுக்கு பரந்த அளவில் எதிர்ப்பு இருந்தது; இது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நடைபெற்ற மகத்தான ஆர்ப்பாட்டங்களில் பிரதிபலித்தது.

படையெடுப்பு தொடங்கி ஐந்து ஆண்டுகள், ஆரம்ப பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டதை காட்டுவது மட்டுமின்றி, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க கொள்கை உலக மக்களுடைய பார்வையில் முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்பட்டதையும் காட்டியுள்ளன. அமெரிக்க கொள்ளைமுறை கொள்கைகளை ஜனநாயக உடை உடுத்திக் காட்டும் பழைய முயற்சி --இரூ உலகப் போர்கள் மற்றும் அதைத் தொடர்ந்த பனிப்போரில் பயன்படுத்தப்பட்டது --இப்பொழுது உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் இகழ்வுடன் நிராகரிக்கப்பட்டுள்ளது; அவர்கள் ஈராக்கில் நடக்கும் கொலைகள் அடக்குமுறை, அபு கிறைப்பிள் நடக்கும் வக்கிரமான சித்திரவதைக் கொடூரங்கள் ஆகியவை பற்றி கசப்புணர்வு கொண்டுள்ளனர்;

இதே போன்ற முக்கியத்துவம்தான் அமெரிக்காவிற்குள் இருக்கும் அரசியல் முறை பற்றிய குறைமதிப்பும் உள்ளது. இரு முக்கிய கட்சிகளும், உத்தியோகபூர்வ கதையை செய்தி ஊடகம் பிரசுரித்ததை இடைவிடாமல் நிராகரித்த முறையில் அமெரிக்க மக்கள் பெரும் அளவில் போரை எதிர்க்க முன்வந்தனர். ஆயினும்கூட அது குறைவற்று நடக்கிறது; அதை தொடக்கிய ஜனாதிபதி --மில்லியன்கணக்கான மக்களால் வெறுக்கப்படுபவர், மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருடைய ஆதரவை மட்டுமே பெற்றுள்ளவர்-- தடையற்ற இராணுவவாத கொள்கையை தொடர்வதற்கு குறைவற்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவினுள் இருக்கும் அரசாங்க முறை முழுவதையும் சூழ்ந்திருக்கும் ஜனநாயகமற்ற, அழுகிய தன்மையை இதைத்தவிர வேறு எதுவும் அப்பட்டமாக அம்பலப்படுத்த முடியாது.

அமெரிக்க இராணுவவாதத்தின் உலகந்தழுவிய வெடிப்பு, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆகியவை தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளன. இறுதிப் பகுப்பாய்வில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் ஈரானுக்கு எதிரான புதிய போர் அச்சுறுத்தல் ஆகியவை அமெரிக்க ஆளும் வர்க்கம் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்க நிலையை இராணுவ சக்தியால் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியின் விளைவுதான்; அதுவும் தன்னுடைய பொருளாதார கனத்தினால் அதை நிலைநிறுத்த முடியாது என்பதை அது அறிந்துள்ள நிலையில். வாஷிங்டனின் முக்கியமான போர் நோக்கங்கள் மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் இருக்கும் எண்ணெய் வளங்கள்மீது இரும்புப் பிடியை நிறுவதல்; அப்பொழுதுதான் ஐரோப்பிய, ஆசிய பொருளாதாரப் போட்டி நாடுகள்மீது தீர்க்கமான மூலோபாய சாதக நிலையை அடைய முடியும் என்பது ஆகும்.

ஈராக் போர் ஒரு மனச்சிதைவினால் வரவில்லை. உலகந்தழுவிய ஒன்றிணைந்த பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையே இருக்கும் பெருகிய அழுத்தங்கள் நிறைந்த உலக நிலைமையின் தவிர்க்க முடியாத விளைவாகும் அது; இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவு மிக வெடிப்புத் தன்மை நிறைந்த விளைவுகளை கொடுக்கிறது. அமெரிக்க தீரச் செயல்கள் ஈராக்கில் தோல்வி அடைந்தாலும், புறநிலை அழுத்தங்கள் வாஷிங்டனை சீனாவிலிருந்து ரஷ்யா, வெனிசுலா வரையிலான பகைவர்களுடன் புதிய மோதல்களை நோக்கித் தள்ளுகின்றன.

இக்கொள்கைக்கு உந்துதல் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி வெறுமனே இணைவில் அல்ல உடலமைப்பு முழுவதையும் பாதிக்கின்றதாகும். நிதிய வட்டங்களுக்குள்ளேயே இப்பொழுது வீடுகள் குமிழ் வெடித்ததுடன் வெளிப்பட்டுள்ள கடன் நெருக்கடி அமெரிக்காவை 1930களின் பெருமந்த நிலைக்குப் பின் வந்துள்ள கடும் பொருளாதார சரிவின் விளிம்பில் தள்ளியுள்ளது என்று பரந்த அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தீவிர வெளிப்பாடு இடைவிடாமல் வளரும் சமூகச் சமத்துவமின்மை ஆகும். நிதிய உயரடுக்கின் கொள்கையான இராணுவ சக்தியை உலகச் சந்தையை கட்டுப்படுத்த பயன்படுத்தும் முயற்சி, வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள், ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலில் விளைந்துள்ள உழைக்கும் மக்களுடைய இழப்பில் அதைத் தொடர வேண்டும் என்ற கருத்தே ஆகும்.

ஜனநாயகக் கட்சியினரும் போரும்

2008 தேர்தல் பிரச்சாரத்தின் வளர்ச்சி ஏற்கனவே அமெரிக்க மக்கள் மீண்டும் வாஷிங்டன் ஈராக்கிய மக்களுக்கு எதிரான குற்றம் நிறைந்த போரைத் தொடர வேண்டுமா என்பது பற்றிக் கூறும் உரிமையை இழந்துவிட்டதைத்தான் காட்டுகிறது. ஜனநாயகக் கட்சி, முன்னரே இருக்கும் பாதையில் செல்லும் வகையில், மீண்டும் அமெரிக்க வாக்களாளர்களின் போர் எதிர்ப்புப் பெரும்பான்மை உடையவர்கள் கணிசமாக அரசியலில் செல்வாக்கற்று இருப்பற்குத் தயாரிக்கிறது.

2002 இடைக்கால தேர்தல்களில், காங்கிரசில் இருந்த ஜனநாயகக் கட்சி தலைமை ஈராக் படையெடுப்பிற்கு தேவையான ஒப்புதலைக் கொடுப்பதற்கு வாக்குகளை வேண்டுமென்றே அளித்தது; இதையொட்டி விவாதம் "பிரச்சினைக்கு" இல்லை என்று காரணமாயிற்று; மேலும் பொருளாதார பிரச்சினைகள் ஒட்டி வெற்றிகரப் பிரச்சாரம் நடத்தத் தயார் செய்தது. இதன் விளைவு காங்கிரசின் இரு பிரிவுகளிலும் குடியரசுக் கட்சியினரிடம் கடுமையான தோல்வி அடைந்ததுதான்.

2004ல் கட்சித் தலைமை இரு அமெரிக்க செனட்டர்கள், ஜோன் கெர்ரி மற்றும் ஜோன் எட்வர்ட்ஸ் ஆகியோரின் வேட்பு மனு நோக்க நகர்ந்தது; இவர்கள் இருவரும் 2002 ல் போருக்காக வாக்களித்தவர்கள்; அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக்கியவர்கள், உண்மையில் கெர்ரி, தான் தேர்ந்தெடுக்ப்பட்டால் அவருடைய "விரிவாக்கத்தை" ஏற்படுத்த இருப்பதாகத்தான் கூறியிருந்தார்.

2006ல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மற்றும் செனட் இரண்டிலும் கட்டுப்பாட்டை பெற்றனர்; அந்த வாக்கு மக்கள் போரை நிராகரித்தனர் என்பதைத் தெளிவாகக் காட்டியிருந்தது. காங்கிரஸ் கட்டுப்பாட்டை பெற்றாலும், காங்கிரஸ் போரை நிறுத்த ஏதும் செய்யவில்லை, தொடர்ந்து நிதியைத்தான் கொடுத்து வந்தது.

இப்பொழுது ஜனநாயக வேட்பு மனுவில் எஞ்சியிருக்கும் இரு வேட்பாளர்ககளும் தேசிய பாதுகாப்பு பிரச்சாரத்தில் முனைந்துள்ளனர் இதில் அவர்கள் இருவருள் எவர் சிறந்த தளபதியாக செயல்பட முடியும் என்ற பிரச்சினை விவாதிக்கப்படுகிறது. ஹில்லாரி கிளின்டன் மற்றும் பரக் ஒபாமா இருவருமே ஈராக்கில் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இருக்க வேண்டும், அமெரிக்க நிலையங்கள், நலன்கள் காப்பு ஆகியவற்றிற்கு இருக்க வேண்டும், ஈராக்கிய கைப்பாவை சக்திகளுக்கு பயிற்சி அளிக்க இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர்; இதன் பொருள் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் அந்நாட்டில் காலவரையற்று இருக்கும் என்பதாகும். ஒபாமாவின் முன்னாள் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் BBC க்குக் கொடுத்த சமீபத்தியபேட்டி ஒன்றில் படைகள் திரும்பப் பெறுதல் பற்றிய உறுதிமொழிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை என்றும், இவர் அனைவரும் வெள்ளை மாளிகையில் நுழைந்த உடன் உறுதிமொழி துண்டிக்கப்பட்டு விடும் என்றும் இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், ஆளும் உயரடுக்கிற்குள் போர் பற்றியும் ஈராக்கில் அமெரிக்க கொள்கையின் வருங்காலம் பற்றியும் கடுமையான பிளவுகள் உள்ளன. ஆனால் இந்த வேறுபாடுகள் உலக அளவில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னேற்றும் நிலைப்பாட்டில்தான் தொடங்குகின்றன; ஈராக்கில் மகத்தான அமெரிக்க இராணுவ சக்தியை கட்டி வைத்திருப்பது மற்ற இடங்களில் சக்தியை பயன்படுத்துவது தடைக்குள்ளாகியிருக்கிறாதா என்றுதான் இருக்கின்றன. ஈராக்கில் இருந்த படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று வாதிடும் பல ஜனநாயகக் கட்சியினர் இதே துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகின்றனர்.

இப்படி ஈராக் போருக்கான தாராள வாத எதிர்ப்பு எனக் கூறப்படுவதின் தன்மை மிகக் கோரமான வடிவமைப்பில் ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் கருத்துப் பிரிவில் வந்தது; இதில் ஏட்டின் ஆசிரியர் குழு "ஒன்பது இராணுவ, வெளியுறவு விவகாரங்கள் வல்லுனர்கள் அவர்கள் 2003 வசந்த காலத்தில் கொண்டிருந்த அணுகுமுறை பற்றிச் சிந்திக்குமாறு" கோரியது. விதிவிலக்கு இல்லாமல் ஒன்பது பேரும் போருக்கு ஆதரவு கொடுத்தனர்; இவர்கள் பெரும்பாலும் நிர்வாகத்தில் இருந்தும் வலதுசாரி சிந்தனைக் குழுவிலும் இருப்பவர்கள். ரிச்சார்ட் பேர்ல் மற்றும் போல் ப்ரீமர் போன்றவர் ஈராக்கிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு நேரடிப் பொறுப்பு கொண்டவர்கள் ஆவர்.

இதன் உட்குறிப்பு மார்ச் 2003ல் ஈராக்கிற்கு எதிரான போர் தேவை என்பதில் அனைவருக்கும் உடன்பாடு இருந்தது என்பதாகும். பின்னர்தான் கருத்து வேறுபாடுகள் "தவறான உளவுத் தகவல்கள்" மூலம் என்றும் புஷ் நிர்வாகம் இத்தேவையான செயலை செய்வதில் தவறான அணுகுமுறையைக் கொண்டது என்பதும் வெளிவந்தது.

இது ஒரு பொய். போர் பொய்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட குற்றச்செயல் என்பதை மில்லியன் கணக்கான மக்கள் அறிந்திருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளத்தைப் பொறுத்தவரை போருக்குப் பின்னே என்ன இருந்தது அல்லது அது என்ன உண்டு பண்ணும் என்றவாறாக பிரமைகளைக் கொண்டிருந்ததில்லை.

"The crisis of American capitalism and the war against Iraq" என்று மார்ச் 21, 2003 வெளியிட்ட கட்டுரையில் நாம் எழுதினோம்: "புஷ் நிர்வாகம், அதற்கு உடந்தையாக லண்டனில் இருப்பவர்கள் கூறும் நியாயங்கள் அனைத்தும் அரைகுறை உண்மைகள், தவறுகள், அப்பட்டமான பொய்கள் இவற்றின் அடிப்படையில் உள்ளன. இக்கட்டத்தில் போரின் நோக்கம் ஈராக்கில் இருப்பதாகக் கூறப்படும் "பேரழிவு ஆயுதங்களை" அழித்தல் என்ற கூற்றுக்களுக்கு விடையிறுக்கத் தேவையில்லை. பல வாரங்கள் மிகக் கவனமான ஆய்வுகள் அந்நாட்டில் நடத்தப்பட்டும், முக்கியத்துவம் வாய்ந்த தடயச் சான்றுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை."

மேலும் நாம் மிகத் துல்லியமாகக் கணித்தோம்: "தொடங்கியுள்ள போரின் ஆரம்ப கட்டங்களின் விளைவுகள் எப்படி இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை எதிர்கொள்ளும் நிலையில்தான் உள்ளது. அது உலகத்தை வெல்ல முடியாது. மத்திய கிழக்கில் இருக்கும் மக்கள் மீது மீண்டும் குடியேற்றத் தளைகளை அது சுமத்த முடியாது. தன் நாட்டு உள் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வை போரின் மூலம் இது காண முடியாது. மாறாக போரினால் ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகள், பெருகும் எதிர்ப்பு ஆகியவை அமெரிக்க சமூகத்தில் இருக்கும் அனைத்து உள் பூசல்களும் போரினால் அதிகரிக்கும்."

இன்று போருக்கு எதிரான ஒரு திறமான போராட்டம் எதிர்ப்புக்கள் மற்றும் இருக்கும் இரு கட்சி முறைக்கு முறையீடு, அல்லது இன்னும் கூடுதலான அதிகாரத்தை ஜனநாயகக் கட்சியிடம் கொடுக்கும் வகையில் கிளின்டன் அல்லது ஒபாமாவை வெள்ளை மாளிகையில் இருத்தி செனட்டிலும் அவர்களுக்குக் கூடுதல் பெரும்பான்மை கொடுப்பதின் அடிப்படையில் நடத்தப்படமுடியாது. ஏகாதிபத்தியம் என்பதே நிராகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் தேவை ஆகும்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் போர்களை முடித்தல், இன்னும் கூடுதலான குருதி சிந்தும் போர்களை ஈரான் இன்னும் பிற இடங்களில் நடத்தும் நன்கு முன்கூட்டி தீர்மானிக்கப்பட்ட திட்டங்களை முறியடிப்பது என்பது போருக்கு ஆதாரமாக இருக்கும் முதலாளித்துவ முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை போராடுவதற்கு திரட்டுவது ஒன்றுதான்.

இதன் பொருள் சமரசத்திற்கு இடமில்லாத வகையில் ஜனநாயகக் கட்சியுடன் உடைத்துக் கொள்ள வேண்டும், ஒரு வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கம் சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்துடன் கட்டமைக்கப்பட வேண்டும் என்பது ஆகும்.

அனைத்து அமெரிக்கப் படைகளும் ஈரான், ஆப்கானிஸ்தானில் இருந்து நிபந்தனையின்றி உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தும் இந்த ஆக்கிரமிப்பு போர்களை தொடுப்பதற்கு சதிசெய்தவர்கள் சட்ட பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் பொறுப்பு ஏற்கச்செய்யப்பட வேண்டும் என்று கோரியும், சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் நவம்பர் தேர்தலுக்கு முன் வரவிருக்கும் போராட்டங்களின் மையத்தில் முன்வைக்க இருக்கும் மாற்றீடு இதுதான்.

எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும், ஐந்து ஆண்டு கால ஈராக் போரின் படிப்பினைகளை கற்குமாறும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் சுயாதீனமான அரசியல் அணிதிரளலுக்கான இந்த போராட்டத்தில் எங்களுடன் சேருமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

இன்று போருக்கு எதிரான ஒரு திறமான போராட்டம் எதிர்ப்புக்கள் மற்றும் இருக்கும் இரு கட்சி முறைக்கு முறையீடு, அல்லது இன்னும் கூடுதலான அதிகாரத்தை ஜனநாயகக் கட்சியிடம் கொடுக்கும் வகையில் கிளின்டன் அல்லது ஒபாமாவை வெள்ளை மாளிகையில் இருத்தி செனட்டிலும் அவர்களுக்குக் கூடுதல் பெரும்பான்மை கொடுப்பதின் அடிப்படையில் நடத்தப்படமுடியாது. ஏகாதிபத்தியம் என்பதே நிராகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் தேவை ஆகும்.