World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan roiled by flour and electricity shortages, food price rises

மாவு மற்றும் மின்சார பற்றாக்குறை, உணவுப்பொருட்கள் விலை உயர்வால் பாகிஸ்தான் குழப்பமடைந்துள்ளது

By Vilani Peiris and Keith Jones
21 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஆதரவுடைய பாகிஸ்தானின் சர்வாதிகாரி, வறுமை மற்றும் விலை உயர்வை ஏற்படுத்தி இருக்கும் மாவு பற்றாக்குறையால், மாவு ஆலைகளினதும் வினியோக மையங்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் வினியோக வாகனங்களின் காவலுக்கும் ஆறாயிரத்திற்கும் மேலான துணை இராணுவத் துருப்புக்களை நிறுத்தி இருக்கிறார்.

ஞாயிறன்று, ஜனவரி 13ல், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய உணவு குழுவால் (FCC), வனத்துறை காவலர்கள் மற்றம் எல்லையோர காவற்படையினரும் செயலில் இறங்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. முந்தைய தினங்களில், அரசு உணவு வினியோக மையங்களின் வெளியே நீண்ட வரிசையில் நின்றிருந்த பசியால் வாடும் மக்கள் வெறும் கையோடுத் திரும்பிச் சென்றதுடன், பல்வேறு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

அரசினால் மானியம் வழங்கப்படும் மாவு கிடைக்குமானால், பாகிஸ்தான் ரூபாயில் ஒரு கிலோவிற்கு 14 முதல் 18 வரை விற்கப்படுகிறது. ஆனால் ஜனவரியின் ஆரம்பத்தில் வெளிச்சந்தையில் அது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, சில இடங்களில் ரூபாய் 60ஐ எட்டியிருந்தது.

அண்ணளவாக ஒரு அமெரிக்க டாலருக்கு சமமான 60 ரூபாய் என்பது பாகிஸ்தானில் தினக்கூலியாளின் ஒரு நாள் சராசரி கூலியாகும். 160 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில் நான்கில் மூன்று பங்கினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கிறார்கள்.

இந்த விலை உயர்வானது ஏற்கனவே அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலை உயர்வால் தினசரி வருமானம் சுமைக்குள்ளாக்கப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை மேலும் பாதித்திருக்கிறது. 2007ல் 14 சதவீத உயர்வு உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளாக உணவுப்பொருட்களின் விலை ஒவ்வொருவருடமும் 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது.

டிசம்பர் 27ல் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் மற்றும் முன்னாள் பிரதம மந்திரியான பெனாசீர் பூட்டோவின் படுகொலையை அடுத்து நாட்டில் திடீரென வெடித்த கலகத்தால் மாவு பற்றாக்குறை ஏற்பட்டதாக அரசாங்கம் குறை கூறியிருக்கிறது. அரசாங்கமும் மற்றும் புஷ் நிர்வாகமும் தலிபான் உட்பட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதிகளுடனான பாகிஸ்தான் இராணுவத்தின் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் நெருங்கிய இணைப்பையும், பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனான அதன் பல தசாப்த கால விரோதத்தையும் நிராகரித்து, பூட்டோவின் படுகொலைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளை குறிப்பிட்டுக் காட்டியுள்ளன.

எவ்வாறிருப்பினும், இராணுவ உளவுப்படை பிரிவுகள் அல்லது அவர்களின் கூட்டாளிகளே பூட்டோ இறப்பின் உண்மைப் பொறுப்பாளிகள் என பாகிஸ்தானியர்களில் பெரும்பான்மையினர் நம்புகின்றனர்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட 1300 மக்களின் நேர்காணலுடன் எடுக்கப்பட்ட பாகிஸ்தான் கருத்துக்கணிப்பு ஒன்றில், இராணுவம் மற்றும் அதன் முகாமைகளே பூட்டோவின் படுகொலைக்குப் பின்னனியில் இருப்பதாக 23 சதவீத பாகிஸ்தானியர்கள் நம்புவதாகவும், 25 சதவீதத்தினர் அரசாங்கத்தின் அரசியல் கூட்டாளிகளை சந்தேகிப்பதாகவும், மற்றும் 12 சதவீதத்தினர் அமெரிக்காவையும் குற்றஞ்சாட்டி இருப்பதைக் கண்டறிந்தது. வெறும் 17 சதவீதத்தினர் மட்டுமே தாலிபான் மற்றும் அல்கொய்தா இதற்கு பொறுப்பாகும் என நம்புவதாக வாக்களித்தனர்.

கலகங்களின் போது, குறிப்பாக பூட்டோவின் சொந்த மாகாணமான சிந்தில் பெருமளவிலான தானியங்கள் மற்றும் மாவு பொருட்கள் திருடப்பட்டு விட்டதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் அரசாங்கத்தின் கருத்து மிகவும் பெரிதுப்படுத்தப்பட்டு இருப்பதாக எதிர்கட்சி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெருமளவில், அரசாங்க எதிர்ப்பு கலகங்கள் ஒரு அதிகரித்து வரும் குழப்பத்திற்கு இட்டுச்சென்றுவிட்டன.

2007ன் தொடக்கத்தில் 5 இலட்ச தொன் கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க அரசாங்கம் முடிவெடுத்தது, ஆனால் அதேசமயத்தில் பாகிஸ்தான் தனக்கே தானியங்களின் பற்றாக்குறையை உணர்ந்ததுடன், பற்றாக்குறையை சமாளிக்க ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து 70 சதவீதம் உயர்ந்த விலையுடன் கோதுமையை இறக்குமதி செய்ய தீர்மானித்தது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் பர்கத்துல்லா கான் பார்பர் கூறுகையில், "பணப்பயிர்கள் (2007 தொடக்கத்தில் உருவாக்கப்பட்டவை) பற்றிய கருத்துக்கள் தவறாக இருக்க வேண்டும் மற்றும் ஏற்றுமதி அனுமதிக்கப்படாத போது கோதுமை ஏற்றுமதியை நியாயப்படுத்த வடிவமைக்கப்பட்ட அல்லது அந்த கருத்துக்கள் சரியென்றால், கோதுமை சேமிப்பு எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதுடன், தற்போதைய நெருக்கடி செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும்." என்று தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க அளவிலான கோதுமை மற்றும் மாவு பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து அதிக விலை கிடைக்க கூடிய ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு கடத்தப்பட்டு இருக்கின்றன.

2004ல், அதன் நவ-தாராளமய பொருளாதார கொள்கையைக் கருத்தில் கொண்டு, மாகாண எல்லைகளுக்கிடையே கோதுமையை பரிமாறிக் கொள்ள அரசாங்கம் பதுக்கல்களை மற்றும் விலை ஏமாற்றுக்களை தடுக்கவும் அறிமுகப்படுத்திய கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

கடந்த வார தொடக்கத்தில் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய மத்திய உணவு குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் பரூக் அஹ்மத் கான் கூறுகையில், தமது நோக்கம் வினியோகத்தை அதிகரிப்பதே அல்லாமல் பதுக்கல்காரர்களை வேட்டையாடுவதல்ல என தெரிவித்தார். அவர் கூறியதாவது: "யார் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதற்கு நான் பொறுப்பல்ல. விலையை குறைப்பது மற்றும் வினியோக நிலைமைகளை சீர்திருத்துவதே எனது பணி" என்று தெரிவித்தார்.

கோதுமை மற்றும் மாவுப்பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான மத்திய உணவுக் குழுவின் நேரடி பிரசாரத்திற்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கையாக ஜனவரி 15ல் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுடனான அதன் சாமன் எல்லையை மூடியது, பின் அடுத்த நாளில் அதை திறந்துவிட்டது. காபூலில் உள்ள அமெரிக்காவால் பதவியிலிருத்தப்பட்ட அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு தேவையான எரிபொருள் வினியோகத்திற்கு அவசியமான அந்த எல்லையை மூட கட்டளையிட்டதை மறுத்திருந்தது. அப்பிராந்திய உள்ளூர் யுத்த தளபதிகள் மற்றும் கடத்தல்காரர்களின் எல்லையோர அதிகாரிகளால் மூடப்பட்டதாக அது தெரிவிக்கிறது.

மாவு பொருட்களின் நெருக்கடியானது பாகிஸ்தானின் சீர்கெட்ட மின்சார பற்றாக்குறை எனும் ஒரு மிகப் பெரிய பிரச்சனையுடன் தொடர்புடையது.

மின்வெட்டுக்கள் காரணமாக மா ஆலைகள் தங்களின் செயல்பாடுகளை கட்டாயமாக குறைத்துக் கொள்ள வேண்டி இருப்பதும் மாவு பொருட்களின் பற்றாக்குறைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மத்திய உணவுக் குழுவின் ஆணைக்கு கட்டுப்பட்டு, நாட்டின் 90 சதவீத மாவாலைகள் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 19 மணி நேர மின்சாரத்தை பெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக நீர் மற்றும் மின்சார அமைச்சகம் கடந்த வார மத்தியில் அறிவித்தது.

ஆனால் பொருளாதாரத்தின் பெருமளவிலான பிரிவுகள் மின்சார பற்றாக்குறையால் தொடர்ந்து பீடிக்கப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தானின் மின்சார அமைப்பு நீண்ட காலமாக மின்வெட்டு மற்றும் மின்னழுத்த குறைவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தனியார்மயமாக்கல் புதிய முதலீடுகளை ஈர்க்கும் என அரசாங்கம் கூறியது. ஆனால் கராச்சி மின்சார வினியோக கழகத்தின் விற்பனையானது அதிக விலையுயர்வை ஏற்படுத்தி இருப்பதுடன் மின்வெட்டுக்களை மோசமாக்கவில்லை என்றாலும், அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

மின்சார உற்பத்தி மற்றும் தேவையை சமாளிக்கும் ஒரு முயற்சியாக, நீர் மற்றும் மின்சார அபிவிருத்தி ஆணையம் நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டை டிசம்பரில் அறிவித்தது. டிசம்பர் இறுதியில் நடந்த கலகங்களால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோகம் பாதிக்கப்பட்ட பின்னர் இது எட்டு மணி நேரமாக இரட்டிப்பாக்கப்பட்டது.

ஜனவரி தொடக்கத்தில், அனைத்து நாடுகளின் எஃகு உருக்கு ஆலைகள் மற்றும் பல்வேறு எஃகு மறு உற்பத்தி ஆலைகளை இரண்டு வாரங்களுக்கு மூடி வைக்கும்படி அரசாங்கம் ஆணையிட்டது, இது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தற்காலிக வேலைநீக்கத்திற்கு இட்டுச் சென்றது.

மின்சார சேமிப்பிற்காக ஜவுளி ஆலைகளும் மாலையில் ஐந்து மணி நேரம் செயல்பாடுகளை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

நேற்றைய Dawn இதழின் கட்டுரையின்படி, மின்சார வெட்டு மற்றும் பலுசிஸ்தானில் இருந்து வரவேண்டிய இயற்கை எரிவாயு பிரச்சனையால் சாய்ல்கோட்டின் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி இருந்தனர்.

டிசம்பர் மத்தியில், எரிவாயு தேவையையொட்டி நூற்றுக்கு மேம்பட்ட ஜவுளித்துறை ஆலைகள் மூடப்பட்டதாக இதே செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது.

மறுசீரமைப்பு, தனியார்மயமாக்கல் மற்றும் தொழிலாளர் எதிர்ப்பு சட்டங்கள் போன்ற வலதுசாரி பொருளாதார திட்டங்களுக்கான, முஷாரப் அரசாங்கம் தொடர்ந்து புஷ் நிர்வாகத்தாலும் சர்வதேச மூலதனத்தின் பரிந்துரையாளரான Economist இதழ் போன்றவற்றாலும் புகழ்ந்துரைக்கப்படுகிறது. அந்நிய மற்றும் வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களின் மூலதனம் புதிய இலாபம் உருவாக்கும் வாய்ப்புகளையும், பாகிஸ்தானின் ஏராளமான மலிந்த கூலியுழைப்பையும் சுரண்டிக்கொள்வதாலும் மற்றும் அமெரிக்காவின் அதிகரித்துவரும் நிதிஉதவிகளால் அதிகாரிகளின் படைகள் தமது வயிற்றை நிரப்பிக்கொள்கையிலும் கடந்த ஐந்து வருடங்களாக பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதத்திற்கும் மேம்பட்ட விகிதத்தில் வளர்ந்திருக்கிறது.

ஆனால் பெருமளவில் எண்ணெய் மற்றும் இறக்குமதியை சார்ந்திருப்பதாலும், சீர்கெட்ட உள்கட்டமைப்பு வசதிகளாலும், கல்வி மற்றும் சுகாதார கவனிப்பிற்கான முதலீட்டில் பின்தங்கி இருப்பதாலும் பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் சிக்கலைச் சந்தித்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, ஏற்கனவே செல்வத்திற்கும் ஏழ்மைக்கும் இடையிலான துருவப்படுத்தல் இந்நாட்டில் பாரியளவில் வித்தியாசப்பட்டிருக்கையில், அதிகரித்துவரும் பொருளாதார பாதுகாப்பின்மையால் இந்த விரிவாக்கம் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையுடன் தொடர்பு கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2008ல் வீழ்ச்சியடையும் என்று எச்சரித்திருந்த சர்வதேச நாணய நிதியம், அந்நாட்டில் உருவாகியுள்ள தற்போதைய கணக்குவழக்குகள் மற்றும் வர்த்தக பற்றாக்குறை குறித்தும் தனது வருத்தங்களை வெளியிட்டிருந்தது. ஜூலை ஒன்று முதல் தொடங்கிய நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியின்போது, பாகிஸ்தானில் 8.24 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது.

சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் உட்பட எதிர்வரும் ஆண்டுகளில் வரையறுக்க முடியாத நடைமுறைகள் தேவைப்படுவதாக அரசாங்கம் தொடர்ந்து அங்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

நிதி குறியீடுகளில் ஏற்படும் இழப்புகளைச் சரி செய்ய சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்.... புதிய விரிவான பொருளாதார குழப்பங்கள் ஏற்படலாம் என மத்திய வங்கி எச்சரித்திருக்கிறது. ஆனால் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்ற அச்சத்தில் எண்ணெய் விலையை உயர்த்தவும் மற்றும் பிற கடுமையான நடைமுறைகளைச் செயல்படுத்தவும் அரசாங்கம் தாமதப்படுத்தி வருகிறது

எதிர்காலத்தில் என்ன ஏற்படும் என்ற கணிப்பில், நாட்டின் அபிவிருத்தி நிதி அறிக்கையில் 15 சதவீதம் அல்லது 80 பில்லியன் ரூபாய் வெட்டு ஏற்படலாம் என இஸ்லாமாபாத் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஜ்) ஆகிய இரண்டு முக்கிய எதிர்கட்சிகளும் பாகிஸ்தானின் நிலவி வரும் பொருளாதார பிரச்சனைகளைப் பற்றியும், குறிப்பாக விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூகநல சேவையின்மை ஆகியவற்றின் மீதான ஆழ்ந்த கோபத்தையும் மிகத் துல்லியமாக அறிந்துள்ளன. இது முதலாளித்துவ எதிர்ப்பை காட்டியுள்ளதுடன், அதன் தலைவர்களின் வீண்பேச்சுக்களின் மத்தியிலும் முஷாரப் ஆட்சிக்கு எதிராக பரந்த மக்களின் எவ்வித எதிர்ப்பையும் தடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. சர்வாதிகாரத்திற்கு எதிரான மாபெரும் சவால் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி விடும் என்றும், இராணுவ ஆட்சியை நீக்கவும் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்குமான நாகரிகமான வருமானம் அளிக்கக் கூடிய தீவிர சமூக பொருளாதார நடைமுறைகளை வலியுறுத்தி பாகிஸ்தானின் வாஷிங்டனுடனான இராணுவ கூட்டணியை உடைக்கவும் வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களை அதிகரிக்கும் எனவும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

தொழிலதிபர்களின் மத்தியில் முக்கிய புள்ளியாகவும் மற்றும் இராணுவத்தின் முன்னாள் அரசியல் ஆதரவாளருமாகவும் ஷெரீப் இருந்தாலும் கூட, பூட்டோவின் அரசியல் வாரிசான அவரின் கணவர் அஷப் அலி ஜர்தாரி அப்பகுதியில் தமது சுரண்டும் நலன்களை தொடர்வதற்கு இஸ்லாமாபாத்தில் ஒரு இராணுவ ஆதிக்கம் வாய்ந்த ஒரு அரசாங்கம் பதவியில் இருப்பதை தாம் விரும்பவதை தீர்மானகரமாக புஷ் நிர்வாகம் மற்றும் அதன் பிரிட்டிஷ் கூட்டாளிகள் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றபோதிலும் வாஷிங்டன் மற்றும் லண்டனின் ஆதரவிற்கு அழைப்பும் விடுகின்றார்.