World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Socialist Equality Party stands in by-election forced by David Davis

Vote Chris Talbot in Haltemprice and Howden

பிரிட்டன்: டேவிட் டேவிஸால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள இடைத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது

ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் இடைத் தேர்தலில் கிறிஸ் ரால்போட்டிற்கு வாக்களிக்கவும்

Statement of the Socialist Equality Party
25 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் 42 நாட்களுக்கு குற்றம் சாட்டாமல் காவலில் வைத்திருப்பதை நீட்டிக்கும் சட்டத்திற்கும் எதிரான முறையான விரோதத்தை திசை திருப்பும் நோக்கத்தில் வலதுசாரி கன்சர்வேட்டிவ் டேவிட் டேவிஸுக்கு ஆதரவு தரும் வகையில் நடக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் இடைத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.

இத்தேர்தலில் தொழிற்கட்சி அரசாங்கத்தால் இயற்றப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகள் அனைத்தையும், சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொண்டு ஒரு சுயாதீன தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை அணிதிரட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து எதிர்க்கும் ஒரே வேட்பாளர் கிறிஸ் ரால்போட் ஆவார்.

உத்தியோகபூர்வக் கட்சிகள் எதுவும் ஜனநாயக உரிமைகளை உண்மையில் பாதுகாக்கவில்லை. அவை அனைத்தும் தொழிலாளர்கள் பெரும்பான்மையோரின் நலன்களுக்கு விரோதமான கொள்கைகளை முன்னனெடுக்கும், பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகள் ஆகும்.

42 நாட்களுக்கு காவலை நீடிக்கலாம் என்பதை எதிர்ப்பவர்கள், பயங்கரவாதிகளின் உரிமைகளை "தேசிய பாதுகாப்பைவிட" உயர்த்தும் குற்றத்தை செய்பவர்கள் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது. தொழிற்கட்சியின் கீழ், இத்தகைய பீதியைப் பரப்புவதன் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசு இரண்டாம் உலகப் போரின்போது அரசாங்கம் உயிர்தப்பி இருக்க உண்மையான அச்சுறுத்தலை எதிர்கொண்டபொழுது எடுத்துக் கொள்ளப்பட்ட அதிகாரங்களுக்கும் அப்பால் சென்றுள்ளது; ஆயினும் கூட, அது தாமே ஒப்புக்கொண்டபடி அதிகபட்சம் ஒரு சில நூறு தனிப்பட்ட நபர்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் சட்டத்தின் வரலாற்று அடித்தளங்களை தலைகீழாய் புரட்டுவதை நியாயப்படுத்துகிறது.

ஈராக் "பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது" என்ற கூற்று சர்வதேச சட்டத்தை மீறி போருக்கு செல்ல போலிக் காரணத்தை கொடுத்தது போல், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதும் பிரிட்டனில் இருக்கும் ஒவ்வொருவருடைய உரிமைகளையும் குறைக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த காரணம் கொடுக்கிறது.

நாற்பத்தி இரண்டு நாட்கள் காவல் என்பது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் தொழிற்கட்சி இயற்றியுள்ள 200 சட்டங்களில் மிகக் கடுமையான ஒன்றாகும்; இவை அனைத்தும் கூட்டாக பிரிட்டனில் ஒரு போலீஸ் அரச எந்திரத்தை நிறுவியுள்ளன.

ஜனநாயகத்தின் அடித்தளமே தனிக்குடிமகனை நாட்டின் மிகச் சக்தி வாய்ந்த கருவியான அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பது ஆகும். இதற்கு மாறாக, தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு புதிய சட்டக் கொள்கையை -- அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றம் என்று கூறினால் குற்றம் என்ற வகையை நிறுவியுள்ளது.

ஆட்கொணர்வை சீர்குலைப்பதுடன் கூட -- குற்றச் சாட்டு இல்லாமல் சிறை என்பது இல்லை --அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தடையற்ற பேச்சுரிமை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் உரிமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றை கீழறுத்துள்ளது. சட்டத்தின் பல பகுதிகளும் மிகத் தெளிவு அற்றவையாக இருக்கும் தன்மையில் உள்நாட்டு மந்திரியால் ஏற்பதற்கில்லை எனத் தெரிவிக்கப்படும் கருத்தை ஒட்டி ஒரு நபர்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படலாம். கல்வியாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் வலைத் தளங்களில் தடையற்று கிடைக்கும் விஷயங்களை நகல் செய்து கொண்டால் கூட காவலில் வைக்கப்படுகின்றனர்; அண்மையில் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர் ரிஸ்வான் சபீர் மற்றும் ஆசிரியர் இசம் யெசா ஆகியோருக்கு இதுதான் நேர்ந்தது (யெசா இப்பொழுது நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்).

பிரிட்டன் தற்பொழுது உலகிலேயே மிக அதிக கண்காணிப்பு நிழற்படக் கருவிகளை கொண்டிருக்கிறது, மிகப் பெரிய DNA தகவல் தளத்தை கொண்டிருக்கிறது என்ற உண்மையில் திருப்தி அடையாமல், அரசாங்கம் இன்னும் கூடுதலான அதிகாரங்களை கோருகிறது; இதில் கட்டாய அடையாள அட்டைகளும் அடங்கும். ஆயினும்கூட உள்ளூராட்சி அதிகாரிகள் வாடிக்கையாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களை பயன்படுத்தி குடியிருப்பவர்களை வேவு பார்க்கவும், மக்களின் தொலைபேசி அழைப்புக்கள் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை வேவு பார்க்கவும் செய்கின்றனர். 2007ல் நிர்வாகக் குழுக்கள் மற்றும் அரசாங்கத் துறைகள் 12,494 விண்ணப்ப மனுக்களை மிக அற்பமான பிரச்சினைகளுக்காக "இயக்கப்பட்ட கண்காணிப்பு" தேவை என்று கோரியவற்றை அளித்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின்கீழ் கொண்டுவரப்பட்ட அதிகாரங்களின் முழு நிலையும் சோகந்ததும்பிய முறையில் சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் ஒரு நிரபராதியான பிரேசிலியரான Jean Charles de Menezes மீது 11 தோட்டாக்களை ஜூலை 2005ல் லண்டன் நிலத்தடி இரயிலில் சென்று கொண்டிருந்த போது செலுத்தியதில் நிரூபணம் ஆயிற்று. அரசாங்கம் இரு ஆண்டுகளுக்கு முன்பே கண்டதும் கொல் உத்தரவை இரகசியமாக செயல்படுத்தியதை காட்டியது; இது போலீசாரே குற்றம் சாட்டுபவர், நடுவர், நடுவர் குழு, தீர்ப்பை செயல்படுத்துவபர் என்று அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ளும் நிலையை கொடுத்துள்ளது.

ஏகாதிபத்தியப் போரும் சமூக சமத்துவமின்மையும்

இத்தகைய சர்வாதிகாரத்தின் புறம் செல்லும் போக்கு தாராண்மை அரசாங்கத்தின் செயல் என்று மட்டும் கூறி விளக்கப்பட முடியாதது. வினா எழுப்பப்பட வேண்டும். அரசாங்கம் தன்னுடைய குடிமக்களுக்கு எதிராகவே அசாதரணமான அதிகாரங்களை கோரும் முற்றுகைக்குட்பட்ட நிலையில் இருப்பதாக ஏன் கருதுகிறது?

ஜனநாயகம் அரிக்கப்படுவது என்பது, இராணுவவாதம் மற்றும் வென்று கைப்பற்றும் காலனித்துவ போர்களை நடத்துவதுடன் பிணைந்துள்ளது. இந்த அரசாங்கம் ஏற்கனவே பிரிட்டனை மூன்று பெரிய இராணுவ நடவடிக்கைகளில் ஆழ்த்தியுள்ளது --முன்னாள் யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்-- தவிரவும், ஈரானுடனான மோதலை விரிவுபடுத்துவதற்கு தீவிரமாக வாஷிங்டனுடன் சதித்திட்டமும் போடுகிறது.

உலகில் முக்கிய பெரிய எண்ணெய் இருப்புக்கள் மற்ற முக்கிய ஆதாரங்கள்மீது கட்டுப்பாட்டை அடைவதற்கான உந்துதல் பிரிட்டனை சர்வதேச அளவில் தீண்டத்தகாத நாடாக ஆக்கியுள்ளது என்பதை அரசாங்கம் அறியும்; மேலும் ஒடுக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களின் நியாயமான விரோதப் போக்கின் குவிப்பாகவும் ஆக்கியுள்ளது. பிரிட்டிஷ் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர் என்பது முற்றிலும் மத்திய கிழக்கை உறுதிகுலைக்கும் தொழிற் கட்சியின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் இங்கிலாந்திற்குள்ளேயே இன, மத பதட்டங்களுக்கு எரியூட்டும் செயற்பாடுகள்தான்.

போருக்கு மாற்றம் என்பது உள்நாட்டுக் கொள்கையிலும் அதன் பிரதிபலிப்பை காட்டும்; அதுவும் இதேபோல் உலக நிதிய உயரடுக்கினால் ஆணையிடப்படுகிறது; அதன் பெரும் செல்வம் ஊக வணிகம் மூலமும் உலகின் சந்தைகள், இருப்புக்கள் ஆகியவற்றை சுரண்டுவதின் மூலமும் அடையப்பட்டவை. தங்கள் முதலீட்டுக்கு வருவாய்க்காக இந்த தன்னலப் பிரபுக்கள் அனைத்து தேசிய அரசாங்கங்களும் ஊதியக் குறைப்புக்கள், நலன்களை அகற்றுதல், பெருநிறுவனங்கள் மீதான வரியை அகற்றுதல் மற்றும் பொதுப் பணி, பொதுநல செலவினங்களை பெரிதும் குறைத்தல் ஆகியவற்றை செய்ய வலியுறுத்துகின்றன.

எனவேதான் குடி உரிமைகள் அரிப்பு என்பது முன்னோடியில்லா வகையில் செல்வம் பெரும் செல்வக்கொழிப்பு உடையவர்களுக்கு மாற்றப்படும்போது தொடர்புடையதாய் நிகழ்கிறது; இது இதுகாறும் இல்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மை மட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய செயற்பாட்டிற்கு மக்கள் ஆதரவைப் பெறுதல் இயலாது என்பதை அரசாங்கம் அறியும். மாறாக செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே பிரிட்டனிலும் உலகெங்கிலும் இருக்கும் பெருகிவரும் பிளவு போலீஸ் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிவகையைத்தான் கொண்டுவரத் தூண்டும்.

இக்காரணத்தை ஒட்டித்தான் அரசாங்கம் தொடர்ச்சியாக ஜனநாயக சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அரசின் உயர் அணிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது --MI5ல் இருந்து ஸ்கொட்லாந்து யார்ட் வரை; மேலும் இதற்கு பெரும் ஆதரவு கொடுப்பவராக ரூபர்ட் மர்டோக்கின் சன் செய்தியேட்டையும் பெறுகிறது, இதன் முன்னாள் ஆசிரியர் கெல்வின் மக்கென்சி ஆரம்பத்தில் தொழிற் கட்சிக்கு பதிலாளாக வேட்பாளராக இருக்க முன்வந்தார்.

பெருவணிகக் கட்சிகளிடத்தில் நம்பிக்கை கிடையாது

எந்த விதத்திலும் ஜனநாயகப் பொறுப்புக் கூறலுக்கு தொழிற்கட்சி கொண்டுள்ள இழிந்த பார்வை, அரசாங்க சட்டத்தில் முக்கியமான ஒன்றிற்கு ஆதரவு தேடுவதற்கு வேட்பாளரை கூட நிறுத்த விரும்பாத தன்மை, 2003ல் அமெரிக்க தலைமையில் மக்கள் எதிர்ப்பை மீறி ஈராக்மீது படையெடுப்பு நடைபெற்றதற்கு ஆதரவு கொடுத்ததுடன் இயைந்துள்ளது; அந்த மக்கள் எதிர்ப்போ லண்டன் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் நகரங்களில் மில்லியன் கணக்கான மக்களை தெருக்களுக்கு கொண்டு வந்தது.

உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தில், தொழிற் கட்சி முடிந்துவிட்ட கட்சியாகும். தொழிலாள வர்க்கத்துடன் தொடர்புகளை துண்டித்துள்ள நிலையில், தன் முந்தைய சீர்திருத்த கொள்கைகளையும் கைவிட்ட நிலையில், இக்கட்சிக்கு எஞ்சியிருப்பதெல்லாம் அரசியலில் ஊழல் மலிந்துள்ள, தங்கள் செல்வக் கொழிப்பில் அக்கறை கொண்ட குழுக்கள்தாம்.

தொழிலாளர்களும், இளைஞர்களும், தொழிற்கட்சியின் பயங்கரவாதக் கொள்கைகளை நிராகரித்து அரசாங்கத்திற்கு எதிராக திரளுதல் முக்கியமானதாகும். ஆனால் இது டேவிட் டேவிஸுக்கும், குடி உரிமைகளுக்கு அவர் காவலர் என்று அவர் கூறிக்கொள்வதற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமும் அடையப்பட முடியாது.

தொழிற்கட்சி தேர்தல் அழிவை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியை மறுசீரமைக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தச் சிறுத்தை தன்னுடைய இயல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.

டோரிக்கள் இன்னும் கூடுதலான தாராளவாத மாற்றீடு என்று காட்டிக் கொள்ள முடிகிறது என்றால், அதன் பொருள் லேபர் தீவிர வலதிற்கு சென்றுள்ளது என்பதுதான். ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் என்பது மார்க்கரெட் தாட்செரின் கன்சர்வேட்டிவ் அராசங்கத்துடன் தொடங்கிது; அதுதான் சமூக நலன் மற்றும் சமுதாய நலன்கள் சிறப்பை தடையற்ற சந்தை பெயரில் தாக்குதல் நடத்த முன்னோடியாக இருந்தது.

இந்த தொழிற்சங்க விரோத சட்டங்களை கொண்ட கட்சிதான் 1984-85 வேலைநிறுத்தத்தில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக பேரழிவு தரக்கூடிய சட்டங்களை பயன்படுத்திய கட்சி ஆகும்; அதில்தான் 10,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டது, மற்றும் உள் நகரக் கலகங்களை தூண்டிவிட்ட இழிவான SUS சட்டங்களின் தூண்டுதல் இருந்தது. இக்கட்சி ஒன்றும் பிறருக்கு குடிமை உரிமைகள் பற்றி உபதேசிப்பதற்கு அருகதை அற்றது ஆகும்.

ஆட்கொணர்வு மீது தாக்குதல் ஆறு வாரங்கள் காவலில் வைக்கும் அதிகாரத்துடன் தொடங்கவில்லை. அரசாங்கத்தின் இந்த பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைக்கு எதிர்ப்பு என்ற தன்மையை டோரிக்கள் காட்டினாலும்கூட, தொழிற்கட்சி சட்டத்தின் தொடக்கங்கள் முதலில் ஜோன் மேஜருடைய கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தீன்கீழ் இயற்றப்பெற்றன. அதற்கு முன்பு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Terrorism Act PTA) டோரிகள்தாம் குற்றச் சாட்டு இல்லாத தடுப்புக்காவல் காலத்தை 48 மணி நேரத்தில் இருந்து ஏழு நாட்களுக்கு அதிகப்படுத்தினர். தன்னுடைய கட்சியில் இருக்கும் மற்றவர்களுடன் 28 நாட்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கு வாக்களித்த டேவிஸ், பல டோரி எம்.பிக்கள் 42 நாட்கள் காவலை எதிர்க்க தயங்கினர் எனக் கூறியுள்ளார், தான் இராஜிநாமா செய்ததற்குக் காரணம் அவர்கள் இறுதியில் தன் கருத்துக்கு பொதுத் தேர்தல்கள் வரும்போது இணங்குவர் என நம்புவதாகவும் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கன்சர்வேட்டிவ்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பேரழிவு தரும் குருதி சிந்தும் போருக்குப் பொறுப்பை தொழிற்கட்சியுடன் ஏற்கிறார்கள்; அவர்களும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பெரிய நிறுவனங்கள் தம்மை செல்வக் கொழிப்புடையதாக ஆக்கிக் கொள்ளும் வடிவமைப்பு உடைய கொள்கைகளுக்கு கட்டுப்பட்டுள்ளவர்கள்.

டேவிட் டேவிஸ் இத்தகைய உயர் அறநெறி நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தைரியமாகக் கூறுவதற்குக் காரணம் ஒரு தொழிற் கட்சி உறுப்பினர்கூட 42 நாட்கள் பற்றியோ மற்ற பிரச்சினை பற்றியோ அரசாங்கத்துடன் உடைத்துக் கொள்ள தயாராக இல்லை என்பதால் ஆகும்.

மாறாக, ஒரு சில தொழிற் கட்சி "இடதுகள்" எனப்படுவோர் தாராண்மை ஜனநாயகக் கட்சி ஆட்களுடன் சேர்ந்து இவருடைய பிரச்சாரத்திற்கு இப்பிரச்சினை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற காரணம் கூறி ஆதரவு கொடுக்கின்றனர். தொழிற்கட்சி இடதின் பயனற்ற தன்மை டேவிஸ் மறு தேர்தல் பிரச்சாரத்தை தொடக்க உதவிய டோனி பென்னின் மூலம் முழுமை அடைகிறது. இவ்வாறு தான் செய்ய முடிவதற்கு காரணம் தொழிற்கட்சி ஒரு வேட்பாளரையும் நிறுத்த மறுப்பது என்பதால், தான் எந்த கட்சி விதியையும் மீறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பிரிட்டன் மத்தியதர வர்க்க தீவிரக் குழுக்கள் எதுவும் --சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) அல்லது ஜோர்ஜ் காலோவேயின் Respect அமைப்பு போன்றவை-- டேவிசுக்கு எதிராக சுயாதீனமான சவால்களை நிறுத்துவதாக குறிக்கவில்லை; ஏனெனில் இது வாடிக்கையாக அவர்கள் மதிக்கும் தொழிற்கட்சி "இடதுகளுடன்" பூசலைக் கொண்டுவந்துவிடும் என்பதனால் ஆகும்.

சோசலிசமும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமும்

இடைத் தேர்தலை கட்டாயப்படுத்தியதில் டேவிஸின் விருப்பங்கள் எப்படி இருந்தபோதிலும், இது சமூக அழுத்தங்களின் கனத்தில் உத்தியோகபூர்வ கட்சிகள் அனைத்தும் இழிசரிவு பெற்றுள்ளதைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.

1930 களில் இருந்து முன்னோடியில்லாத வகையில் ஒரு உலக மந்த நிலை ஏற்பட உள்ளது என்று அனைத்து விவரம் அறிந்த கணிப்பாளர்களும் முன்கூட்டியே கூறியிருக்கும் நிலையில் இந்த இழிசரிவு வந்துள்ளது. சுருள் தன்மையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களில் விலை உயர்ந்து மில்லியன் கணக்கானவர்களை தாக்கியிருக்கும் நிலையில், அடைமானக் கட்டணங்கள், தனிக்கடன்கள் ஆகியவற்றைக் கொடுக்க முடியாமல் திணறுகையில், வேலையின்மை என்ற அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கையில், நிதிய ஊகக்காரர்கள் தங்களை கொழிக்கச் செய்து கொண்டிருக்கின்றனர், அரசாங்கம் அவர்களுடைய தீய செயல்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து உதவுகின்றது.

அடுத்த கட்டமாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதாகக் கூறும் சட்டம் பெருநிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் வாழ்வை காத்துக் கொள்ள முற்படுவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாதம்தான் அரசாங்கம் (Civil Conringencies Act) ல் இருக்கும் அவசரகால நடவடிக்கைகளை Shell லாரி டிரைவர்கள் பூசலுக்கு எதிராக முடுக்கிவிட்டது.

டேவிஸும், அவருடைய ஆதரவாளர்களும் 1215 மாக்னா கார்ட்டாவை (உரிமைச்சாசனம்) எப்பொழுதும் துதி பாடுகின்றனர்; ஏதோ பிரிட்டிஷ் அரசியல் வாழ்வில் குடிமை உரிமைகள் காலந் தொட்டு சிதைக்க முடியாத கூறுபாடுகள் போல் தெரியப்படுத்துகின்றனர். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பில் தொடர்புடைய வர்க்கப் பிரச்சினைகளை மறைப்பதற்குத்தான் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.

ஆட்கொணர்வு விரிவாக்கம், மற்ற ஜனநாயக உரிமைகள் தொழிலாள வர்க்கத்திற்கு விரிவாக்கம் என்பது பல நூற்றாண்டுகள் நடத்தப்பட்ட கடுமையான அரசியல் போராட்டங்களுக்கு பின்னர்தான் அடையப்பெற்றன.

தொழிலாள வர்க்கம் ஒரு பிரத்தியேகமான சமூக அரசியல் சக்தி என்று அமைக்கப்பட்ட பின்னர்தான் பிரிட்டனின் ஆட்சியாளர்கள் சலுகைகள் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர். வாக்களிக்கும் உரிமை விரிவாக்குதல் என்பது 1830களின் சார்ட்டிஸ்ட் இயக்கத்திற்கு பின் வந்தது; அனைவருக்கும் வாக்குரிமை என்பது இறுதியில் 1917 ரஷ்ய புரட்சிக்கு பின்னர்தான் கொடுக்கப்பட்டது. இதேபோல் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தொடர்ச்சியான சட்டபூர்வ தாக்குதல்கள் மற்றும் லிபரல்களுடன் அரசியல் முறிவு, பாராளுமன்றத்தில் தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு தொழிற் கட்சி அமைத்தல் என்ற உச்சக்கட்டத்தை அடைந்த பின்னர்தான் வழங்கப்பட்டது.

சோசலிஸ்ட்டுக்கள் இந்தப் போராட்டங்களில் எல்லாம் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்; ஏனெனில் அவர்கள் ஜனநாயகத்தின் உண்மையான விரிவாக்கம் என்பதின் பொருள், அடக்குமுறை, வறுமை, தேவை இவற்றை அகற்றிய சமூகத்தை தோற்றுவித்தல் என்பதை உணர்ந்திருந்தனர்.

சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் பொறிவைப் பயன்படுத்தி ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பிரச்சாரம் சோசலிசம் மற்றும் சமூக சமத்துவத்தை காக்க முற்படும் அனைத்து நடவடிக்கைகளையும் அவதூறுசெய்வதற்கு தொடக்கப்பட்டது. இது குடி உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முக்கியமான கருத்தியல் கட்டமைப்பை வழங்கியுள்ளது.

தாட்சரிச பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த சட்டங்களை தாங்கள் தழுவியதை சட்டரீதியாக்கும் பொருட்டு தொழிற்கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் இத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியுள்ளன. இது தொழிலாள வர்க்கத்தை அரசியல் வாக்குரிமை அற்றதாகச் செய்துள்ளதுடன் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள்மீது தொடர்ந்த தாக்குதல்களை செய்வதற்கும் உதவியிருக்கிறது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புதிய உண்மையான சோசலிச கட்சியை கட்டியமைத்தல் என்பது அவசியமாகிறது.

பெரும் செல்வம் படைத்தவர்கள் அரசியல் வாழ்வில் ஏகபோக உரிமையைத் தொடர்ந்து அனுபவித்தல் என்ற நிலைமை தொடரக் கூடாது. மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் பணியிடங்களில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நொவதற்கியா நிலையில் ஒரு சில பெருநிறுவன தலைவர்களும் நகர ஊகத்தில் ஈடுபடுபவர்ளும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்து நாடுகளையும் முழுக் கண்டங்களையும் வறுமையிலும் போரிலும் மூழ்கடித்துள்ள அதேவேளை, கொடூரமான தனியார் செல்வக் கொழிப்பு என்பது சமூகத்திற்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் மட்டத்தில், உண்மையான ஜனநாயகம் என்பது இருக்க முடியாது.

பொருளாதார, சமூக வாழ்வை அடிப்படையாக மறு சீரமைக்கும் திட்டம் ஒன்றை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கிறது. இலாப முறை மற்றும் உற்பத்தியை தனியார் உரிமைக் கொண்டாடுதல் என்பவை மாற்றப்பட்டு பொது உடைமையாக உற்பத்தி இருக்க வேண்டும் என்றும் சமுதாய தேவைகள் அனைத்திற்கும் அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேசமயமாக இருக்க வேண்டும்; இதற்கு அனைத்து தேசிய, மத, இன பிளவுகளை கடந்து தொழிலாளர்கள் ஐக்கியப்படுத்தப்பட வேணடும். உலக சோசலிச கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதிதான் சோசலிச சமத்துவக் கட்சி (SEP). ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் இடைத் தேர்தலில் கிறிஸ் ரால்போட்டிற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்துவதுடன், எங்கள் வேலைத்திட்டங்களை ஆதரிப்பவர்கள் அனவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளுமாறும் அதற்கு நிதி அளித்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.