World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Deep unease as Israel celebrates its 60th anniversary

ஆழ்ந்த அமைதியின்மைக்கிடையில் இஸ்ரேல் அதன் 60 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது

By Jean Shaoul
8 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஹீப்ரூ நாட்காட்டியின்படி, இன்று இஸ்ரேல் அதன் 60 வது ஆண்டுவிழாவை எட்டியிருக்கிறது. அது உருவாக்கப்பட்ட உண்மையான தேதியான, மே 14-16ம் தேதிகளில் ஜெரூசலேமில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டுடன் உலக தலைவர்கள் இந்த நிகழ்வை வரவேற்க இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அதிபர் மிக்கைல் கோர்பசேவ், முன்னாள் அமெரிக்க செயலாளர் ஹென்றி கீஸ்சிங்கர், 12 நாடுகளின் தலைவர்கள், ஊடகம் மற்றும் வியாபாரத்துறை பெரும்புள்ளியான ரூபேர்ட் முர்டோக் மற்றும் கூகிளின் இணை நிறுவனர் சேர்ஜி பிரின் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

விமான கண்காட்சிகள், மத்திய தரைக்கடற்கரையில் ஒரு கடல் பயிற்சி மற்றும் மாபெரும் பாராசூட் குதிப்புகள் போன்ற உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சார்பில் அப்பிராந்தியத்தில் உள்ள ஒரு பாதுகாக்கும் ஓர் அரணாக இஸ்ரேல் இருப்பதையே எடுத்துக் காட்டுக்கிறது.

கொண்டாட்டங்களின் மத்தியிலும், இஸ்ரேலின் வெளியில் அல்லது உள்ளுக்குள் இருக்கும் ஒரு வர்ணணையாளராலும் கூட இஸ்ரேலுக்குள் நிலவிவரும் அதன் ஆழ்ந்த அதிருப்தி உணர்வையும், அவநம்பிக்கையின்மையையும் வேறுபடுத்திப்பார்க்க முடியவில்லை. பல இஸ்ரேலியர்கள் ஆடம்பரமான ஒரு கொண்டாட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள்: செலவுகளை குறைக்க வேண்டும் என்ற ஒரு இணையத்தளத்தினூடான கோரிக்கை, எதிர்பார்த்த 10,000 த்தையும் தாண்டி மார்ச் மாத இறுதியில் 90,000 கையொப்பங்களை பெற்றிருக்கிறது. அதன் விளைவாக, திட்டமிட்ட 28 மில்லயன் டாலரில் (1998 இன் ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் செலவிடப்பட்ட 70 மில்லியன் டாலரை விட இது மிகவும் குறைவாகும்) 35 சதவீதத்தை கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் நினைவுச்சின்ன திட்டங்களுக்கு அறிவிக்கும் கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

இந்த நிகழ்வை சார்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களிலும், லெபனான், சிரியா மற்றும் ஜோர்டானின் மோசமான அகதிகள் முகாம்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பாலஸ்தீனர்கள் எவ்வாறு உள்ளனர் என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க விமர்சகர்கள் தவறிவிட்டனர்.

அவர்களை பொறுத்தவரை, நாக்பா அல்லது பேரழிவு என அவர்கள் அழைக்கும் இஸ்ரேலின் உருவாக்கம் என்பது 700,000 த்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் தங்களின் தாய்நாட்டை விட்டு பலவந்தமாய் வெளியேற்றப்பட்டு மற்றும் பறந்தோடிச் சென்று வறுமை நிறைந்த, புலம்பெயர்ந்த வாழ்க்கையை தொடங்குவதுடன் ஒரே பொருளைக் கொண்டதாக இருக்கிறது. அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன மற்றும் அவர்கள் மீண்டும் திரும்பி வர அனுமதிக்கப்படவில்லை. இன்று, உண்மையான அகதிகளும் மற்றும் அவர்களின் வழிவந்தோரும், 1967ம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் அகதிகளானவர்களின் எண்ணிக்கையும் சுமார் 4.5 மில்லியனை எட்டியிருக்கிறது.

இஸ்ரேலின் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்காக, மேற்குக்கரை மற்றும் காசாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மூன்று நாள் கதவடைப்பு செய்கிறார்கள். பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மேற்குகரை மற்றும் காசாவின் பேரணிகளில் பங்கேற்க காலை 11.00 மணிக்கு தங்களின் பணிகளை நிறுத்திக் கொள்வார்கள். ஒலிஎழுப்பிகள் மதியம் இரண்டு நிமிடங்கள் அமைதி அனுஷ்டிக்க ஒலி எழுப்பும்.

துண்டாடப்பட்ட பாலஸ்தீனத்தை வழங்கியதன் மூலம் பாலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் பக்கத்து நாட்டவர்களான அராபியர்களுக்கு இடையே அமைதியை அளித்த 1993 ஆம் ஆண்டின் ஒஸ்லோ உடன்படிக்கையின் நப்பாசைகளால் இன்றும் பல இஸ்ரேலியர்கள் சூழப்பட்டிருக்கையில், சில விமர்சகர்களை தவிர பிறர் இஸ்ரேலின் 50 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்துடன் இந்த முரண்பாட்டை குறிப்பிட்டார்கள். "இஸ்ரேலின் 60ம் ஆண்டு வரலாற்றில் அதன் எதிர்காலம் இவ்வாறு நிச்சயமற்று இருப்பதாக" The Economist இதழ் குறிப்பிட்டது. "சுமார் 20 அல்லது 30 அல்லது 50 ஆண்டுகளுக்கு என அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி இருப்பார்கள் என எத்தனை நாடுகள் கேள்விகள் கேட்கும்? இஸ்ரேலின் உயிர்வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததுபோல் இருக்கவில்லை." என ஓர் இஸ்ரேலிய வரலாற்றாளரும், ஷாலெம் மைய சிந்தனைக்கூடத்தின் மூத்த நபருமான மெக்கேல் ஓரென் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆழ்ந்த ஐயுறவுவாத மனப்பான்மைக்கு பல காரணிகள் அடித்தளமாக அமைகின்றன.

லெபனாலில் பேரழிவு யுத்தம்

லெபனானில் 2006ம் ஆண்டு யுத்தத்தால் ஏற்பட்ட நிச்சயமற்ற இராணுவ விளைவானது இஸ்ரேலுக்கு ஓர் அரசியல் வீழ்ச்சியாகும் என்பதுடன் அதன் ஆளும் மேற்தட்டின் மூலம் ஒரு அச்சுறுத்தலையும் அனுப்பியது. அந்த யுத்தம், ஒரு முக்கிய இராணுவ மற்றும் அரசியல் சக்தியாக ஹெஸ்பொல்லா உருவாவதை தவிர்ப்பதற்காக மட்டுமல்ல. அது மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈரானை இலக்காக கொண்டு அப்பிராந்தியங்களின் எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாஷிங்டனின் மேலதிக மூலோபாய இலக்காக இருந்தது.

ஹெஸ்பொல்லா பெரியளவிலான இழப்புக்களால் பாதிக்கப்பட்டிருந்த போதினும், சுமார் 1000 திற்கும் மேலானவர்களின் உயிரை பலி கொண்டதும், பலரைக் காயப்படுத்தியதுமான வாஷிங்டனின் பின்புலத்திலான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இதில் லெபனானின் அடிப்படை உள்கட்டமைப்பும் அழிவுக்குள்ளானதுடன், மத்திய கிழக்கு முழுவதிலும் அதன் ஸ்தானத்தையும் அழித்துவிட்டது. இதற்கு மாறாக அமெரிக்காவின் ஆதரவுடனான லெபனானின் அரசாங்கம் வாஷிங்டனின் கூட்டு ஆட்சியாக பார்க்கப்படுகிறது.

வழமைசார்ந்த ஆயுதங்களுடன் கூடிய ஒரு கெரில்லா படைக்கெதிரான யுத்தத்திற்கு இஸ்ரேல் துளியும் தயாராக இல்லை என்பதை இந்த படுவீழ்ச்சி எடுத்துக்காட்டியது. இஸ்ரேல் இராணுவத்தின், உளவுத்துறையின் மற்றும் உள்ளாட்டு பாதுகாப்பு சேவைகளின் பலவீனத்தையும் மற்றும் இயலாத்தன்மையும் மட்டுமின்றி, அதன் அரசியல் தலைவர்களின் இராணுவவாதத்திற்கு, பரந்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதையும் அது எடுத்துக்காட்டியது.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளை பயன்படுத்தியே இஸ்ரேலின் இராணுவம் வளர்ச்சியடைந்தது. ஒரு பெரிய உறுதியான இராணுவ எதிராளிக்கு எதிராக நீண்ட தரைப்படை தாக்குதலுக்கு அது தயாராக இல்லாததுடன், அதற்கான பயிற்சி பெற்றிருக்கவில்லை மற்றும் போதிய ஆயுதங்களையும் கொண்டிருக்கவில்லை. மேலும், பெருமளவில் கட்டாயப்படுத்தி சேர்த்துக் கொள்ளப்பட்ட இளைஞர்களையும், ஓய்வு பெற்றவர்களையும், யுத்தத்திற்கு ஒத்துக்கொள்ளாத மற்றும் இராணுவத்துடன் இணைந்து சண்டையிட விரும்பாத பல படையினரையும் அது கொண்டிருந்தது.

தனியார்மயமாக்கல், மறுசீரமைப்பு மற்றும் நிதி குறைப்புகள் ஆகியவற்றுடன் இலஞ்சம் மற்றும் ஊழலும் சொல்ல முடியாத அளவிற்கு உயர்ந்ததால் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகள் (வடக்கு நகரங்கள் மற்றும் பேரூர்களில் அதன் முகாம்கள் மற்றும் வினியோக மையங்கள் ஹெஸ்பொல்லாவின் ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன) முழுமையாக காணாமல் போயின. தெற்கு பகுதிகளில் நண்பர்களை அல்லது குடும்பங்களை அல்லது செல்வத்தை சேர்த்திருந்த குடிமக்கள் தப்பித்து ஓடிப்போன போதிலும், ஏழைகளும் மற்றும் வயதானவர்களும் குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் வினியோகத்துடன் அல்லது எதுவும் இல்லாமல் விடப்பட்டனர். குடிமக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதன் இரக்கமற்றத்தன்மை, Winograd ஆணைக்குழுவின் விசாரணைக்கு மாபெரும் அழுத்தத்தை அளிக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது. அந்த விசாரணை குழு எஹூட் ஒல்மெர்ட்டின் கடிமா-தொழிற்கட்சி கூட்டணி அரசாங்கத்தின் யுத்த நடைமுறைகளை தாக்கியது.

பாலஸ்தீனர்கள் உடனான உறவுகள்

பாலஸ்தீனர்களுடனான உறவு பற்றிய சூழல் வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஒரு ''வெற்றிகரமான'' கதையாக இருந்த போதிலும், இஸ்ரேலியர்கள் மத்தியில் பரவலாக அரசியல் அதிருப்தியை உருவாக்கியது.

அமெரிக்காவால் ஆதரவழிக்கப்பட்ட ''சமாதான நடவடிக்கைகளின்'' நிழல்திரைக்குப் பின்னாலும், பாலஸ்தீன அதிகார ஜனாதிபதி மொஹம்மது அப்பாஸின் கூட்டுசதிகளாலும் இஸ்ரேல் மேற்கு படுகையில் அதன் நில ஆக்கிரமிப்பை மேலும் தீவிரப்படுத்தியது. ஜெருசலேமிற்குள்ளும் அதிலிருந்தும் பாலஸ்தீனர்கள் இருக்கவும், பயணிக்கவும் சாத்தியமற்றதன்மையை கொண்ட சில தீர்வுகளுடன் அரசாங்கம் ஜெருசலேமை சுற்றிவளைத்திருந்தது. தலைநகரை அதற்குரிய தன்மை எதுவும் இல்லாமல் செய்தது. அது துண்டிக்கப்பட்ட பகுதிகள் கொண்ட ஒரு கூட்டாக மேற்குக்கரையை மாற்றி இருந்தது. இதன்மூலம் மேற்குக்கரையில் 60 சதவீத பாலஸ்தீனர்களை முடக்கி, மீதமிருந்த 40 சதவீதத்தினருடன் இஸ்ரேலின் பாதுகாப்பு சுவர் என்றழைக்கப்பட்ட ஊடாக இராணுவ நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை இணைக்கும் சாலைகளில் 550 சாலைமறியல்களினால் பிரித்ததுடன், மக்களின் நடமாட்டத்தை சாத்தியமற்றதாக்கியுள்ளதுடன், பொருளாதாரத்தை உடைத்தழித்தும் உள்ளது.

அதே நேரத்தில், காசா பகுதியில் இஸ்ரேல் அதன் எதிராளிகளை மறைந்திருந்து தாக்கி யுத்தத்தை தொடங்கியது, இதில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்பதுடன் இது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சட்டவிரோதமான மற்றும் கொடூரமான கூட்டு தண்டனையை கட்டாயமாக திணித்தது. பாலஸ்தீனர்களை ஒடுக்குவதற்காக காசாவை பட்டினிக்குள்ளாக்க செய்ய முற்றுகையிட்டது. எரிபொருள் வினியோகத்தை 70 சதவீதம் வெட்டியதால் மின்சார தட்டுப்பாடுகள், தொடர்ச்சியற்ற தண்ணீர் விநியோகத்திற்கு வழியமைத்துடன் மற்றும் நாளொன்றுக்கு 30 மில்லியன் லீட்டர் கழிவுநீர் ஆகியவை காசா கடலில் கலக்கப்பட்டன. இரண்டு வாரங்களுக்கு பின்னர், UNRWA இன் வாகனங்கள் எரிபொருள் இல்லாத காரணத்தால், பல நாட்களுக்கு உணவு வினியோகத்தை நிறுத்தும்படி UNRWA க்கு அழுத்தம் அளிப்பட்டது. காசா மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் சுமார் 1.1 மில்லியன் மக்கள் ஐக்கிய நாடுகளின் உணவு மானியத்துடன், மனிதாபிமான உதவிகளால் வாழ்ந்து வருகிறார்கள்.

எவ்வாறிருப்பினும், மீண்டும் ஒருமுறை, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளானது, ஹாமாஸுக்கும் மற்றும் இஸ்லாம் அரசியலுக்குமான ஆதரவை அதிகரிக்க உதவி இருக்கிறது என்பதுடன் பாலஸ்தீனர்களுடன் ஓர் அமைதியான உடன்படிக்கையை விரும்பும் இஸ்ரேலியர்களின் பெரும்பான்மையினரை வெறுப்படையவும் செய்துள்ளது.

சமூகப் பிளவுகள்

ஆண்டுவிழாவை ஒட்டி பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கி இருக்கும் பல வழிகளில் முக்கியமானதும், கடைசியுமான காரணி என்னவென்றால், தொடர்ச்சியான அரசாங்கங்களால் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற சந்தை கொள்கைகளின் விளைவாக இஸ்ரேலில் ஏற்பட்டிருக்கும் சமூக முரண்பாடுகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். தனியார்மயமாக்கல், ஓய்வூதியம் மற்றும் சுகாதார சீர்திருத்தம், நிதி மற்றும் வரி சலுகைகள், மற்றும் மறுசீரமைப்பு ஆகியவை ஒருகாலத்தில் யூதர்களின் ஒரு தேசிய தாயகத்தின் வாழ்வின் உள்ளடக்கமாக இருக்கும் என கூறப்பட்ட சமத்துவவாதம் மற்றும் கூட்டுழைப்புவாதம் என்பதை வெறும் கனவாக மாற்றியது.

இஸ்ரேலின் பொருளாதாரம் முழுவதுமாக அமெரிக்காவின் நிதி ஆதரவையும், சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களையும் சார்ந்திருக்கிறது. அதன் உயர்நுட்ப தொழில்துறை, உயிரியல் நுட்பம், அணுநுட்பம், நுண்ணிய மூலப்பொருட்கள், மாற்று எரிசக்தி மற்றும் பிரிவுகள் ஆகியவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு 3 சதவீதத்திற்கும் மேலாக பொருளாதார வளர்ச்சி இருந்த போதினும், இஸ்ரேலின் புதிய செல்வம் அதிகளவில் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. வருமான சமத்துவமின்மையை அளவிடும் Gini மதிப்பீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இது வளர்ந்த நாடுகளில் சமநிலையின்றி இருக்கும் பல நாடுகளில் ஒன்றாக இஸ்ரேலைப் பட்டியலிட்டிருக்கிறது.

இருபது சதவீத குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக தேசிய காப்பீட்டு பயிலகத்தின் அறிக்கை கடந்த பெப்ரவரியில் அறிவித்தது. வறுமையிலிருந்து மீட்டு மக்களை பணிக்குத் திருப்புவதற்காக எடுக்கப்பட்ட முறைமைகள் தொழில்வழங்குனர்களுக்கு ஒரு வகையிலான மலிவு கூலிகளை அளித்திருக்கிறது, இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் உழைக்கும் ஏழைகளின் விகிதம் (அதாவது ஒருவர் மட்டுமாவது சம்பாதிக்கும் குடும்பங்கள்) மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. சமூகநலன்கள் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான விளைவுகளின் ஒரு பகுதியாக குழந்தைகள் மத்தியிலான வறுமை கடந்த ஆண்டு 36 சதவீதத்தை எட்டியதன் மூலம் அது அதிகரித்திருக்கிறது.

நிதி நெருக்கடியானது மத்திய வருமான பிரிவினரையும் பாதித்திருக்கிறது. வீடு வாங்குவது என்பது நாளுக்குநாள் சாத்தியமற்று வருகிறது. 2003 இல் இருந்ததை விட புதிய அடமானங்கள் என்பது 2006 இல் 50 சதவீதம் குறைவாக இருந்தது. மத்திய வர்க்க மக்கள் சட்டப்பூர்வ மற்றும் நிதி அறிவுரைகளை கேட்க வருவதால் குடிமக்கள் ஆலோசனை அமைப்புகள் நிறைந்துபோயுள்ளதாக தெரிவிக்கின்றன. குடிமக்கள் குழுக்களின் வலையமைப்பான Yedid இன் துணை மேலாளர் யுவல் யெல்பஷன் கூறுகையில், "தங்களது வரவுசெலவை ஏழைகள் கவனிக்கவேண்டிய தேவையில்லை." என்று தெரிவித்தார்.

ஏனென்றால் இஸ்ரேல் மிகவும் ஆழமாக வாஷிங்டனின் உதவியை நம்பி இருக்கிறது, அமெரிக்க நிதித்துறையில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்போது இந்த சூழல் மேலும் மோசமடையலாம்.

வளர்ந்து வரும் சமூக துருவமுனைப்படுத்திலுக்கு அப்பாற்பட்டு, இஸ்ரேல் அதன் இன, மத மற்றும் சிந்தனைகளாலும் உடைந்து கிடக்கிறது. இஸ்ரேலிய மக்கள் தொகையில் மொத்தம் 20 சதவீதத்தினர் அரேபியர்கள், இவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அகதிகளாக உள்ள அவர்களின் உறவினர்கள் இஸ்ரேலுக்கு திரும்ப முடியாது, அதேசமயம் வெளிநாட்டிலுள்ள யூதர்கள் தன்னிச்சையாக குடிமக்கள் உரிமை பெறுகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு சார்பாக இருந்த போதினும், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற 'மூலோபாயமானவை' என குறிப்பிடப்படும் தொழில்துறையில் பணிகளையோ அல்லது யூதர்களின் தேசியநிதியில் இருந்து இடத்தையோ அவர்களால் வாடகைக்கு பெற முடியவில்லை. அவர்களின் நகரங்கள், பேரூர்கள் மற்றும் கிராமங்கள் தேசிய வரவுசெலவுத்திட்டத்தில் மிகக் குறைவான நிதி ஆதரவையே பெற்றன.

இஸ்ரேலிய வர்ணணையாளர்கள் குடிசனப்பெருக்க கால வெடிகுண்டு பற்றிய எச்சரிக்கைகளால் முற்றிலும் கிலிகொண்டிருந்தார்கள். இஸ்ரேலிய பாலஸ்தீனியர்கள் மற்றும் மேற்குக்கரை மற்றும் காசாவில் இருந்தவர்கள் மத்தியிலான உயர்ந்தபட்ச பிறப்பு விகிதம் எதைக்காட்டுகிறது என்றால், சியோனிசத்தை மையமாக கொண்ட யூத நாட்டின் தன்மைக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேலிலும் மற்ற ஆக்கிரமிப்பு பிரதேசங்களிலும் 20 வருடங்களுக்குள் யூதர்களை விட பாலஸ்தீனியர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

குடியுரிமை, திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற சமூக சட்டங்களின் பல விடயங்கள் அங்கு மத குருமார்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்நாட்டில் மதவாத மற்றும் மதம் சாராத யூதர்களுக்கு இடையே அங்கு முரண்பாடுகள் அதிகரித்து வருகிறது. கூட்டு அரசாங்கங்களை ஒட்டு போடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் தீவிர வலது மதஅடிப்படைவாத கட்சிகளும் மற்றும் குடியேறியவர்களை ஆதரவாக கொண்ட கட்சிகளும் சமூக வாழ்வின் மேலும் பல விவகாரங்கள் தொடர்பான யூத மத சட்டங்கள் மீது அதிகாரத்தை விரிவுபடுத்த விரும்பி வருகின்றன.

ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுடன் ஒப்பிடும்போது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இருந்து வந்த யூத குடும்பங்களும் கூட இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டார்கள். ரஷ்யாவில் இருந்து வந்த 1 மில்லியன் புலம்பெயரந்தோரில் யூதர்கள் அல்லாத புலம்பெயர்ந்தோர் 300,000 த்திற்கும் அதிகமாக இருக்கின்றனர். இந்த அடுக்குகளில், வளர்ந்து வரும் சமூக துருவ முனைப்படுதலும், அரசியல் நிலைநோக்கின்மையும் இஸ்ரேலின் சொந்த நவ-நாஜி இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அங்கு கடந்த இரண்டு வருடங்களில் 500 தாக்குதல்களும், துஷ்பிரயோகங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதுடன் முக்கியமாக இஸ்ரேலில் பல நூற்றுக்கணக்கான இளைய நவ-நாஜிக்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீவிர மத அடிப்படைவாத யூதர்களும் வீடற்ற மக்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதை படமெடுத்ததற்காக தாக்குதல் மற்றும் இனவாதம் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் சில வாரங்களுக்கு முன்னதாக, இரண்டு இளம் ரஷ்ய புலம்பெயர்ந்தோர்க்கு 18 மாதம் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு இடையிலான தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு நான்கு உறுப்பினர் கொண்ட குழுவும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களை சந்தித்தன.

யூத மக்களின் முக்கிய வெளி "எதிரிகளாக" ஒன்றிணைந்திருப்போருக்கு எதிராக தேசிய அரசியல் ஐக்கியத்தை கோரும் யூதத்தின் மையத்தூணை இந்த சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திகள் அசைத்து விட்டிருக்கின்றன. அதே போல, நாட்டின் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையையும் அவர்கள் அசைத்துவிட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலின் சில மிக முக்கிய பயிலகங்களும் அழுத்தத்தின் கீழ் வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான துணை ஒப்பந்தகாரராக செயல்படும் அதன் செயல்பாடானது, மேலும் பல மடங்கிலான இராணுவச் செலவுகள் மற்றும் தொடர்ந்து வரும் அதன் அண்டை நாடுகளுடனான குறிப்பாக ஈரான் மற்றும் பாலஸ்தீனர்களுடனான குழப்பங்களையே குறிக்கிறது. ஆனால் இராணுவத்தில் சேர விருப்பமில்லாத தன்மையும் அங்கு வளர்ந்து வருகிறது. மதம் காரணமாக விலகுவதாக அல்லது உளவியல்ரீதியான பிரச்சனைகளை குறிப்பிட்டு, தேசிய சேவைக்கு அழைக்கப்பட்ட இளைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்களில் கால் பகுதியினர் அதை தவிர்த்திருக்கின்றனர். அறவியல் காரணங்களுக்காக போருக்குபோக பல துணைப்படை பிரிவினரின் அளவும் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலுக்குள் அரசியல், சமூக மற்றும் தொழில்துறை அதிருப்தியும் கூட அதிகரித்து வருகிறது. அரசாங்கம் ஊழல் மற்றும் விலைக்குவாங்க கூடிய நிதி மேற்தட்டின் பிரதிநிதியாய் விளங்குகிறது. பிரதம மந்திரி ஒல்மெர்ட்டின் ஒப்புதல் அளவுகள் 10 சதவீதத்திற்கும் கீழ் இருப்பதை காட்டும் கருத்துகணிப்புகளுடன் அது பரவலாக கடிந்து கொள்ளப்படுகிறது. ஒல்மெர்ட்டும் கூட ஊழலுக்கான மூன்று விசாரணையில் இருக்கிறார் என்பதுடன் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் தண்டிக்கப்படலாம் என்பதால் அடுத்த தேர்தலும் மிக விரைவில் ஏற்படலாம்.

60 ஆண்டுகளுக்கு முன்னாள் யூத மக்களுக்கு அளிக்கப்படுவதாக இருந்த பாதுகாப்பான பொருளாதார எதிர்காலம் என்ற சியோனிச கனவு என்பது வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிட்டது. இன்று இஸ்ரேலுடன் அதிகரித்து வரும் அவநம்பிக்கையின்மையை அது சுட்டிக் காட்டுகிறது.

யூத அரசுடன் இஸ்ரேலிய தொழிலாளர்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு பல காரணிகள் அடங்கியிருக்கின்றன, குறிப்பாக படுகொலைகளும் (Holocaust), விரோத மற்றும் கொடுங்கோலாட்சிகளால் இஸ்ரேல் சூழப்பட்டிருப்பதும் ஆகும். இதை தவிர, உழைக்கும் வர்க்கங்களிடையே என்ன குழப்பங்கள் இருந்தாலும், பாலஸ்தீனர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பும், அண்டை நாட்டு அரேபியர்களுடனான அமைதிக்கான விருப்பமும் அங்கு எப்போதும் நிலவுகிறது. எதிர்வரும் காலத்தில், வர்க்க பிளவுகள் இஸ்ரேலுக்குள் அதிகரிக்கையில் இந்த மனவிருப்பங்கள் பெருமளவில் வெளிப்படும்.

அனைத்து இஸ்ரேலிய குடிமக்களுக்கும் ஒரு நாகரீகமான வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதமளிப்பதுடன், இன, மத மற்றும் முதலாளித்துவத்தால் ஆதரித்து வளர்க்கப்படும் தேசிய பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு அரேபிய மற்றும் யூத உழைக்கும் வர்க்கங்களை ஐக்கியப்படுத்துவதால் மட்டுமே இதுபோன்ற நோக்கங்கள் எட்ட முடியும். இஸ்ரேல் மற்றும் அரேபிய ஆளும் மேற்தட்டுக்களுக்கு எதிராகவும், மத்திய கிழக்கில் ஐக்கிய சோஷலிச நாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பொதுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இந்த வரலாற்று பணியை நிறைவேற்ற தேவையான ஒரு தலைமையை உருவாக்க உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முனைகின்றது.