World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Georgian crisis heightens US-Russian tensions over Ukraine

ஜோர்ஜிய நெருக்கடி உக்ரைன் மீதான அமெரிக்க ரஷ்ய பதட்டங்களை அதிகரிக்கிறது

By Niall Green
29 August 2009


Use this version to print | Send this link by email | Email the author

வாஷிங்டனின் ரஷ்யாவின்பாலான போர்நிலைக் கொள்கையினால் காகசஸில் தூண்டப்பட்ட நெருக்கடி விரைவில் உக்ரைனின் வருங்காலம் பற்றிய பெருகிய பதட்டங்களினால் மறைப்பிற்கு உட்படக்கூடும்

ஆகஸ்ட் 7ம் தேதி தெற்கு ஓசேட்டியா மீது ஜோர்ஜியாவின் தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவம் கொடுத்த விடையிறுப்பை அடுத்து, உக்ரைனின் அமெரிக்க சார்புடைய விக்டம் யுஷ்செங்கோ ஜோர்ஜிய ஜனாதிபதி மிகையீல் சாகேஷ்விலிக்கு அரசியல் ஆதரவு கொடுப்பதற்கு டிபிலிசிக்குப் பறந்து சென்றார்.

அவர் தன் நாட்டிற்கு திரும்பியபின், அமெரிக்க மேலாதிக்கம் பெற்ற நேட்டோவில் உக்ரைன் உறுப்புநாடாக வேண்டும் என்ற தன் விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார்; ஜோர்ஜிய நிலைமையை ஒட்டி, உக்ரைன் தன்னுடைய இராணுவப் பாதுகாப்புக்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்; "இந்த ஆண்டு ஒரு சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்" என்று யுஷ்செங்கோ கூறினார்.

மற்றொரு ஆத்திரமூட்டும் தன்மையுடைய நடவடிக்கையாக அவர் ஒரு ஜனாதிபதி ஆணையை வெளியிட்டார்; அதன் கருங்கடல் கடற்படைத் தளம் செபஸ்டாபூலில் இருந்து கப்பல்களை கிரிமிய உக்ரைன் மாநிலத்திற்கு நகர்த்துவததற்குமுன் ரஷ்யா 72 மணி நேர முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று இதில் கோரப்பட்டுள்ளது. ரஷ்யா அதன் கடற்படைக் கப்பல்களை கிரிமிய துறைமுகங்களில் இருந்து 2017 என்றுள்ள ஒப்பந்தக்காலத்துடன் அகற்றிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜோர்ஜிய-ரஷ்ய பூசலைத் தொடர்ந்து யுஷ்செங்கோ ஒரு ஆணையை வெளியிட்டு 1992ம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்து கொண்ட உக்ரைனில் நிறுத்திவைக்கப்படும் ராடார் நிலையங்கள் பயன்பாடு பற்றிய ஒப்பந்தத்தை முடித்து விட்டார்; மாஸ்கோ ஒப்பந்தத்தின் தன் பக்கத்தை மீறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மாறாக, யுஷ்செங்கோ ராடார் நிலையங்களை செயல்படுத்துவதில் மேலை நாடுகளின் ஒத்துழைப்பை வரவேற்க இருப்பதாகக் கூறினார். உக்ரைனின் வெளியுறவு அமைச்சரகம், நாடு "ஐரோப்பிய நாடுகளுடன் தீவிரமான ஒத்துழைப்பை ஏவுகணைப் பாதுகாப்பு முறையில்" நாடும் என்றும் இதில் "உக்ரைனியக் கூறுபாடுகள் ஏவுகணைத் துவக்க எச்சரிக்கை இணைப்பிலும் விண்வெளிக் கட்டுப்பாட்டு முறைகளிலும், விண்வெளித் தகவல் சேகரிப்பில் ஆர்வம் உடைய அயல்நாடுகளுடன் இணைந்து கொள்ளும்" என்றும் கூறியுள்ளது.

இத்தகைய வெடிப்புத் தன்மை அதிகம் உடைய நிலைமையில் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்டும் நுழைந்துள்ளார். புதனன்று கீவில் பேசிய மிலிபாண்ட், தெற்கு ஓசேட்டியா மற்றும் அக்பாஜியாவில் ரஷ்யா நடவடிக்கைகளை கண்டித்து மோதும் தன்மை உடைய உரை ஒன்றை நிகழ்த்தினார்; இதில் அப்பூசலை தூண்டிவிட்ட ஜோர்ஜிய தாக்குதல் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

உக்ரைன் வெளிநாட்டு மந்திரி வொளோடிமிர் ஓக்ரிஸ்கோவுடன் இணைந்து கூட்டத்தில் பேசிய மிலிபாண்ட், அவர் விவரித்த ரஷ்யாவின் "ஒருதலைப்பட்சமான முறையில்" ஐரோப்பிய "வரைபடத்தை மாற்றும்" முயற்சியை கண்டித்தார்.

ரஷ்யாவிற்கு எதிராக "மிகப் பரந்த அளவில் கூட்டணியை" கட்டமைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருப்பம் பற்றி மிலிபாண்ட் கூறினார். "ஒரு புதிய குளிர் யுத்தத்தை நாம் விரும்பவில்லை" என்று கூறிய மிலிபாண்ட், அமெரிக்காவின் திட்டமான விரைவில் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்திற்கு பிரிட்டிஷ் ஆதரவு பற்றி மறைமுகக் குறிப்பு காட்டியபின், "என்னுடைய பயணம் உங்களுக்கு ஒரு எளிய செய்தியை அனுப்பவே வடிவமைக்கப்பட்டது: நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை என்பதுதான்" அது, என்றார்.

மிலிபாண்டின் கருத்துக்கள், அமெரிக்கா மற்ற ஐரோப்பிய முக்கிய சக்திகள் மாஸ்கோ செவ்வாயன்று ஜோர்ஜிய பிரிவினை மாநிலங்களான தெற்கு ஒசேட்டியா மற்றும் அப்காஜியாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் என்பதை உரத்த குரலில் கூட்டாக கண்டிப்பதைக் குறிக்கிறது.

யுஷ்செங்கோவின் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுக்கும் வகையில் ரஷ்ய அதிகாரிகள் கீவ் தெற்கு ஓசேட்டியா மீதான ஜோர்ஜியத் தாக்குதலுக்கு உதவுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உக்ரைன் "ஜோர்ஜியாவிற்கு ஆயுதம் அளித்துவருவதகாவும் அதையொட்டி ஜோர்ஜியா நிறைய ஆயுதங்களை குவித்துள்ளதாகவும், இவ்விதத்தில் ஜோர்ஜிய அதிகாரிகளுக்கு நேரடியாக தெற்கு ஓசேட்டியாவில் இனவழித் துடைத்தழிப்பு மற்றும் தலையீட்டிற்கு ஊக்கம் தருவதாகவும் கூறினார்.

"மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்வதற்கு உக்ரைனுக்கு அறவழி உரிமை இல்லை, உடன்பாட்டில் பங்கு பெறும் முயற்சிக்கும் உரிமை இல்லை" என்று அவ்வறிக்கை கூறியுள்ளது.

ஜோர்ஜியாவில் தாக்குதலின்போது மாஸ்கோ செய்தி ஊடகம் ஒரு ரஷ்ய Tu-22 குண்டுவீசும் விமானம் ஜோர்ஜியா வான்பகுதியில் நிலத்தில் இருந்து வான் ஏவுகணை S-200 ஒன்று உக்ரைனால் கொடுக்கப்பட்டதின் மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது; "பல SAM முறைகளை டிபிலிசிக்கு கீவ் விற்றது பற்றி நாங்கள் அறிவோம், அவற்றுள் S-200 கருவிகளும் இருந்திருக்கக் கூடும்" என்று பெயரிடப்படாத ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

இரு ரஷ்யப் போர்க்கப்பல்கள், கருங்கடல் படைகளின் முக்கிய கப்பல் மஸ்க்வா மற்றும் ஒரு ரோந்துக் கப்பல் இரண்டும் ரஷ்யத் துறைமுகமான நோவோரோசிக்கிற்கு, ஒரு ஜோர்ஜிய கப்பலுடன் கைகலப்பிற்கு பின் ஆகஸ்ட் 10ம் தேதி திரும்பின; ஜோர்ஜியக் கப்பலில் ஏவுகணைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இக்கப்பல்கள் ஆகஸ்ட் 23 அன்று செவஸ்டாபொல் தளத்திற்கு கீவில் இருந்து மேலதிக பூசல் ஏதுமின்றித் திரும்பின.

"ஆரஞ்சுப் புரட்சி"

1991 ஆண்டு வரை சோவியத் குடியரசுகளில் ஒன்றாக இருந்த உக்ரைன் இன்று ஈரோஷியாவின் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படும் வாஷிங்டன் முயற்சிகளை ஒட்டி முன்னணியில் வந்துள்ளது.

அமெரிக்க நிதிய மற்றும் பிற முறையான செயற்பாடுகளின் ஆதரவுடன் கூட 2003ல் சாகேஷ்விலியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த ஜோர்ஜியாவில் "ரோஜாப் புரட்சி" என்று அழைக்ப்பட்டதின் வெற்றியைத் தொடர்ந்து, வாஷிங்டன் தன்னுடைய கவனத்தை உக்ரைன்மீது செலுத்தியது; அது ரஷ்யாவுடன் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை தக்க வைத்திருந்தது.

2004 கடைசிப் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் லியோநிட் குச்மாவிடம் இருந்து எவர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவார் என்பதை நிர்ணயிப்பதாக இருந்தது. அவர் தேர்ந்தெடுத்த நபரும் மாஸ்கோவிற்கு பிடித்தவருமானவர் விக்டர் யானுகோவிச் ஆவார்; இவர் உக்ரைனின் பிரதம மந்திரியாக இருந்து நாட்டின் கிழக்கு ரஷ்ய மொழி பேசும் பகுதியில் இருக்கும் தன்னலச் சிறுகுழுக்களுடன் நெருக்கமாகத் தொடர்பையும் கொண்டிருந்தவர். இவருக்கு எதிராக முன்னாள் குச்மா விசுவாசியாக இருந்து பின்னர் அமெரிக்க சார்பு உடைய அரசியல் வாதியாக மாறிய விக்டர் யுஷ்செங்கோ இருந்தார்.

யுஷ்சேங்கோவும் குச்மா ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த அவருடைய நண்பருமான யூலியா டிமோஷங்கோவும் -- தங்களை "ஆரஞ்சுப் புரட்சியின்" தலைவர்கள் என்று காட்டிக் கொண்டனர்; ஜோர்ஜியாவில் நடைபெற்ற அமெரிக்க ஆதரவு மாற்றத்தின் அடிப்படையில் அது இருக்கும் என்றும் கூறினர்.

மேலை நாடுகளின் ஆதரவுடன் யுஷ்செங்கோ துவக்கத்தில் ஊழல் மிகுந்த குச்மா ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டுவதில் வெற்றி பெற்றார்; குறிப்பாக கீவில் இருக்கும் இளம் உக்ரைனிய பேச்சாளர்களிடையையும் நாட்டின் மேற்குப் பகுதியிலும். ஆனால் "தடையற்ற சந்தை" பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உக்ரைனிய தீவிர நாட்டு வெறி என "ஆரஞ்சு" சக்திகளுக்கு பலம் ஊட்டியவை மக்களின் பெரும்பாலானவர்களால் சந்தேகத்துடனும் அப்பட்டமான விரோதத்துடனும் பார்க்கப்பட்டன; குறிப்பாக மிக அதிக அளவு இருந்த ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினராலும், ரஷ்ய பொருளாதாரத்துடன் நெருக்கமான தொடர்புடைய தொழில்களில் வேலைகளில் இருந்தவர்களாலும் பார்க்கப்பட்டன.

ரஷ்யாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் வேலை பார்க்கிறார்கள்; உக்ரைனியர்களில் 30 சதவிகிதத்தினர் ரஷ்ய மொழியை முதல் மொழியாகக் கொண்டவர்கள் ஆவர்.

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு அளிப்புக்கள் ஐரோப்பாவிற்கு செல்லுவதற்கு முக்கியமான போக்குவரத்து தளமாக இருப்பதுடன் உக்ரைனிய மாநிலமான கிரைமியா ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கும் இடமளித்துள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு பின் ரஷ்ய கடற்படை செவஸ்டாபோலில் இருத்தப்படுவது பற்றி மாஸ்கோவும் கீவும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டன. முன்னாள் சோவியத் கருங்கடல் கடற்படையில் பெரும்பகுதியைக் கொண்ட இப்பிரிவின் தளம், ரஷ்ய இராணுவத்திற்கு உலகு பற்றிய சன்னல் எனக் கொள்ளப்படுகிறது; இதையொட்டி மாஸ்கோவிற்கு கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடலில் ரஷ்யாவிற்கு ஒரு நிலைப்பாடும் ஏற்படுகிறது; அதனால் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கிலும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சன்னலுக்கு அருகேதான் வாஷிங்டன் "ஆரஞ்சுப் புரட்சியை" தூண்டிவிட்டு ஏற்பாடு செய்த வகையில் குறுக்கிட்டுள்ளது.

எனினும், அதிகாரத்தை பெற்ற பின், ஆரஞ்சுக் கூட்டணி உறுதியற்ற தன்மை உடையதாக போய்விட்டது; மேலும் பல தன்னலக் குழுக்களுக்கு இடையே போட்டியும் பெருகிவிட்டது.

ஊழலை அகற்றுவதாகவும் உக்ரைன் மக்களின் வாழ்க்கை தரம் சுதந்திரங்கள் ஆகியவற்றை முன்னேற்றுவிப்பதாகவும் உறுதிமொழிகள் கொடுத்து பதவிக்கு வந்தபின், யுஷ்செங்கோ மிகப் பரந்த அளவில் ஊழல் நலிந்து பெருவணிகத்திற்கு தாழ்ந்து நிற்பதில் முந்தைய குச்மா யானுகோவிச் அரசாங்கம் போல்தான் செல்படுவதால் பெரிதும் வெறுக்கப்படுகிறார். கருத்துக் கணிப்புக்கள் யுஷ்செங்கோவிற்கு 10 சதவிகிதத்திற்கும் குறைவான ஆதரவைத்தான் காட்டுகின்றன.

மக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இரு பங்கினர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வெளியுறவுக் கொள்கையில் யுஷ்செங்கோ செல்வாக்கற்ற வாஷிங்டன் சார்பு உடைய கொள்கைகளை பின்பற்றுகிறார்; நேட்டோவில் உக்ரைனுக்கு நுழைவு வேண்டும் என்பதை இது தளமாகக் கொண்டுள்ளது; மக்களில் 75 சதவிகிதத்தினருக்கு இதில் எதிர்ப்பு என்பதைக் கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன.

யுஷ்செங்கோவிற்கும் டிமோஷிங்கோவிற்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு அரசியல் உள்நாட்டுப் போர்ச் சூழல் நிலவுகிறது; அதிகாரத்தின் நெம்பு கோல்களை எவர் இயக்குவது என்பது பற்றித்தான் இது உள்ளது. இதன் விளைவாக ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை ஆட்சி சீர் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது; மேலும் இது விரும்பும் "தடையற்ற சந்தை" பொருளாதார மறுசீரமைப்பையும் செயல்படுத்த முடியவில்லை; மேலை மூதலதனமோ அதைத்தான் எதிர்பார்க்கிறது.

டிமோஷிங்கோவின் அரசியல் சிறப்புக்கள் சற்றே சிறந்து உள்ளன; இதற்கு ஓரளவு காரணம் அவர் யுஷ்செங்கோவின் எதிர்ப்பாளர் என்பதேயாகும். யுஷ்செங்கோவின் பாராளுமன்ற முகாமில் கூட்டணியில் தற்பொழுது பிரதம மந்திரியாக இருக்கும் டிமோஷெங்கோ பரந்த அளவில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய முன்னாள் "ஆரஞ்சுப் புரட்சி" கட்டாளிக்கு எதிராக நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியும் அதிகாரப் பிடிப்பை விடக்கூடாது என்ற பெரும் முயற்சியில், யுஷ்செங்கோ அரசியல் சீர்திருத்தங்களை முன்வைத்து ஒரு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார்; அது இப்பொழுது உள்ள நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியும் மற்றும் பாராளுமன்றமான வெர்கோவ்னா ராடாவின் மிகப் பெரிய குழுவில் இருந்து வரும் பிரதம மந்திரியும் கொண்டுள்ள அதிகாரப் பகிர்வு முறைக்கு மாறுபட்டதாக இருக்கும். ஒரு ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை நிறுவுதல் என்று வரக்கூடிய வகையில், யுஷ்செங்கோ பிரதம மந்திரிப் பதவி அகற்றப்பட வேண்டும் என்றும் தான் மட்டும் அமைச்சரைவை உறுப்பினர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இத்திட்டம் உக்ரைனியப் பாராளுமன்றத்தில் நிறைவேற அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், "ஆரஞ்சுப் புரட்சியின்" ஜனநாயக விழைவுகளை இது மோசமாக அம்பலப்படுத்தியுள்ளது; அப்புரட்சிதான் அமெரிக்க ஆதரவு உடைய தன்னலக் குழுக்களை பதவிக்குக் கொண்டுவந்தது; இவையோ குச்மா ஆட்சியைவிட ஒன்றும் கூடுதலான வகையில் ஜனநாயக முறைக்கு உறுதியைக் காட்டவில்லை.

உக்ரைனில் ரஷ்ய விடையிறுப்பு

கிரெம்ளின் டிமோஷெங்கோவை 2010 தேர்தலில் யுஷ்செங்கோவிற்குப் பதிலாக ஆதரிக்கக்கூடும் என்ற ஊகப் பேச்சுக்கள் வெளிவந்துள்ளன. ரஷ்ய எதிர்ப்பு தீவிர நாட்டுப்பற்றைத் தன் அரசியல் போக்கை வலுப்படுத்த இவ்வம்மையார் பலமுறை பயன்படுத்தியிருந்தாலும், டிமோஷெங்கோ ஜோர்ஜிய நெருக்கடியில் கிட்டத்தட்ட மெளனம் சாதித்துள்ளது இவர் மாஸ்கோவுடன் இணைந்து தன்னுடைய ஜனாதிபதி விழைவுகளை முன்னேற்றுவிக்கக்கூடும் என்ற அடையாளத்தைக் காட்டுகிறது.

இக்கூற்றுக்களின் உண்மை எப்படி இருந்தாலும், மாஸ்கோ டிமோஷெங்கோவைத்தான் உக்ரைனில் அதன் நலன்களைக் காக்க நம்பியுள்ளது.

அமெரிக்க ஆதரவுடைய கோரிக்கையான உக்ரைன் நேட்டோவில் நுழைவு என்பதை எதிர்கொள்ளும் வகையில் ரஷ்யா ஏற்கனவே அதன் இராணுவ தொழில்துறை வளாகங்களை உக்ரைனில் இருந்து அகற்றும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் குடியரசுகள் மிக அதிக அளவில் பொருளாதாரத்தில் இணைந்திருப்பதைப் பிரதிபலிக்கும் வகையில், சோவியத் காலத்தில் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருந்தது, இரு நாடுகளும் இன்னமும் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை, குறிப்பாக இராணுவத் தொழில்நுட்பத்துறையில் கொண்டுள்ளன. ஆனால் ஜூன் மாதம் ஒரு ரஷ்ய இராணுவ ஒப்பந்தக்கார நிறுவனம் தான் ஒரு உக்ரைன் நிறுவனத்தில் இருந்து ரஷ்ய விரைவு ஏவுகணைத்திட்டத்திற்கான எஞ்சின்கள் கட்டும் பணியை எடுத்துக் கொள்ளுவதாக அறிதவித்துள்ளது.

ரஷ்ய கருங்கடல் கடலோரப் பகுதியில் இருக்கும் நோவோரோசியிஸ்க் துறைமுகத்தை வளர்க்கும் திட்டங்களையும் மாஸ்கோ கொண்டுள்ளது; இது அதன் கடற்படைக்கு ஒரு மாற்றீட்டுத் தளமாக இருக்கும்; 2017க்குப் பின்னர் செவஸ்டாபோலை அது பயன்படுத்த முடியாமல் போனால் இது உதவும்.

மாஸ்கோவுடன் உறவுகள் மேலும் மோசமடையலாம் என்ற முறையில் ஆதாரத்துடன் கூடிய அச்சங்கள் கீவில் உள்ளன; நேட்டோ உறுப்பினர் நுழைவு பற்றிய நடவடிக்கைகள் கிரிமியாவுடன் எதிர்ப்பை தூண்டிவிடக்கூடும்; இப்பகுதி ஒரு தன்னாட்சிக் குடியரசு ஆகும்; இது வரலாற்று, பண்பாட்டு பொருளாதாரப் பிணைப்புக்களை ரஷ்யாவுடன் கொண்டது; இதையொட்டி ஒரு தெற்கு ஓசேட்டிய வகையிலான காட்சி இங்கும் வரலாம் என்ற வாய்ப்பு உள்ளது; அதன் விளைவுகள் ஜோர்ஜிய மோதலைவிட இன்னும் பேரழிவு தரும் வகையில் இருக்கும்.