World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Who is Henry Paulson?

யார் இந்த ஹென்றி போல்சன்?

By Tom Eley
23 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க நிதித்துறையை மீட்கும் திட்டமானது தேசத்தின் நிதி விவகாரங்கள் மீதான ஏறக்குறைய வரம்பு கடந்த பணம் மற்றும் அதிகாரத்தினை கருவூல செயலாளரான ஹென்றி போல்சன் அலுவலகத்தின் வசம் ஒதுக்கியிருக்கிறது. அரசியல் மற்றும் நிதித்துறை மேல்தட்டினருடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்த ஒரு நீண்ட வரலாறு போல்சனுக்கு உண்டு.

1970 ம் ஆண்டில், ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் தனது முதுநிலை பட்டத்தை பெற்ற போல்சன் நிக்சன் நிர்வாகத்தில் நுழையும் போது, பாதுகாப்பு துறையின் துணை செயலாளரின் ஊழியர் உதவியாளராக முதலில் சேர்ந்தார். 1972-1973ல், உள்நாட்டு விவகாரங்களுக்கான தலைவரின் உதவியாளரான ஜோன் எர்லிக்மேனிடம் அலுவலக உதவியாளராக இருந்தார். ஜனாதிபதியின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஒற்றுவேலைகள் செய்வது, மிரட்டுவது, மற்றும் பழிவாங்குவது ஆகிய இரகசியமான சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அபாயமான "plumbers" பிரிவை ஒருங்கிணைப்பதில் வேலை செய்து வந்த முக்கிய நபர்களில் எர்லிக்மேனும் ஒருவராக இருந்தார். 1973ம் ஆண்டு எர்லிக்மேன் இராஜினாமா செய்தார், 1975ம் ஆண்டில் நீதிக்கு இடையூறு விளைவித்தது, பொய் சாட்சியம் அளித்தது மற்றும் சதிக் குற்றங்கள் அவர் மீது உறுதி செய்யப்பட்டு, 18 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

போல்சன், தனது தொடர்புகளை பயன்படுத்தி, 1974ல் Goldman Sachs இல் வேலைக்கு சேர்ந்தார். பிரிட்டிஷ் செய்தித்தாளான Guardian தனது 2007 பதிப்பு ஒன்றில் எழுதியது: "வேலையை பெறும் அளவுக்கு அவர் தொடர்புகள் கொண்டிருந்தார் [நிக்ஸன் நிர்வாகத்தில்] என்பது மட்டுமல்ல, வாட்டர்கேட் மோசடி பரபரப்பாக எழுந்த சமயத்தில் அதன் விளைவில் கொஞ்சமும் பாதிப்புறாமல் இராஜினாமா செய்யும் அளவுக்கு அவர் தொடர்பு கொண்டிருந்தார். அங்கிருந்து நேராக தனது தாயகத்தில் இல்லினியாஸில் Goldman க்கு அவர் திரும்ப முடிந்தது".

Goldman Sachs நிறுவனத்தில் போல்சன் மளமளவென உயர்ந்தார். 1982ல் அந்நிறுவனத்தில் பங்குதாரரானார். 1990ல் முதலீட்டு வங்கித்துறைப் பிரிவின் இணைத் தலைவரானார். 1990ல் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் ஆகி விட்டார். 1998ம் ஆண்டில், New York Times பத்திரிகையின் பொருளாதார செய்தியாளர் ஃபுளாயிட் நோரிஸ், "ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு நிகரானது" என்று குறிப்பிட்டதான ஒரு நிகழ்வில் சக தலைவரான ஜோன் கோர்ஸைனை பதவியில் இருந்து அகற்றிய போல்சன், தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியைக் கைப்பற்றினார்.

Goldman Sachs உண்மையில் சிறந்த தொடர்புகளுடனான ஒற்றை வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக இருந்தது. அதன் அதிகாரிகள் உயர் அரசு பதவிகளில் இருந்து வருவதும் போவதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. கோர்ஸைன் நியூ ஜேர்ஸியில் இருந்து செனட்டராகி, இப்போது அந்த மாநில கவர்னராகவே ஆகி விட்டார். கோர்ஸைனுக்கு முன்பு அந்த பதவியில் இருந்தவரான ஸ்டீபன் ஃப்ரீடுமேன், புஷ் நிர்வாகத்தில் பொருளாதாரக் கொள்கையில் ஜனாதிபதிக்கான உதவியாளராக பதவி வகித்தார் என்பதோடு தேசிய பொருளாதார சபை (NEC) தலைவராகவும் பதவி வகித்தார். ஃப்ரீடுமேனுக்கு முன்னதாக Goldman Sachs தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரொபேர்ட் ரூபின் NEC தலைவராக பணியாற்றி விட்டு, பின்னர் பில் கிளின்டன் நிர்வாகத்தில் கருவூல செயலாளராக மாறினார்.

"Goldman Sachs புஷ் நிர்வாகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு விட்டதா?" என்று Agence France Press «பால்சன் நியமனம் குறித்த தனது 2006 கட்டுரையில் கேள்வி எழுப்பியது. போல்சன் தவிர, "ஜனாதிபதியின் ஊழியர் தலைவர் ஜோஸ் போல்டன், மற்றும் Commodity Futures Trading Commission தலைவர் ஜெஃப்ரி ரூபன் ஆகியோரும் Goldman இன் முன்னாள் ஊழியர்கள்" என்பதை அது சுட்டிக் காட்டியது.

"ஆனால் இந்த பாய்ச்சல் இரு வழிப் பாதையில் இருக்கிறது" என்று குறிப்பிட்ட அந்த கட்டுரை, "அமெரிக்க துணை அமைச்சராக இருந்த ரொபேர்ட் ஸோலிக், புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றிய ஃபரியார் ஷிர்சாத் ஆகியோரை Goldman சமீபத்தில் பணியமர்த்தியது" என்று சுட்டிக் காட்டியது.

கருவூல செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் முன்னதாக, போல்சன் தனிப்பட்ட வகையில் குடியரசு வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்திற்கு நிதியுதவி அளிப்பவராக இருந்தார். 1998 - 2006ம் ஆண்டுகளுக்கு இடையே அவர் தனது சொந்த பணத்தில் இருந்து 336,000 டாலர் தொகையை அளித்திருக்கிறார்.

தான் பதவிக்கு வந்தது முதல், மூன்று Goldman Sachs நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் சிதைவதை போல்சன் கண்டிருக்கிறார். மார்ச்சில், Bear Stearns நிறுவனம் JPMorgan Chase நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். பின், ஒரு வார காலத்திற்கு முன்னதாக, லெஹ்மன் பிரதர்ஸ் உடைவதை அவர் அனுமதித்தார். அதே நேரத்தில் மெரில் லிஞ்ச் அமெரிக்க வங்கி மூலம் கையகப்படுத்துவதும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் Goldman Sachs மற்றும் Morgan Stanley மட்டுமே முக்கிய முதலீட்டு வங்கிகளாக எஞ்சியிருந்த நிலை தோன்றியது. இரண்டுமே ஞாயிறன்று வங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கை ஒரு தனித்துவமான பொருளாதார வடிவமாக முதலீட்டு வங்கியின் இருப்பை திறம்பட முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.

நிதித்துறையை மீட்க 700 பில்லியன் டாலர் திட்டத்தை வெளியிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பேயும் கூட, போல்சன் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வாரியிறைக்க தனது பதவியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். ஜூலை 2008 இல் Fannie Mae மற்றும் Freddie Mac திவாலானபோது அதனை மீட்க அவர் அளித்த 70 பில்லியன் டாலர் திட்டம் தோல்வியுற்றது. இதனால் அந்த இரண்டு அடைமான கடன் வழங்கும் பெருநிதி நிறுவனங்களையும் 200 பில்லியன் டாலர் தொகை கொண்டு அரசாங்கம் கையகப்படுத்தும் திட்டத்தை ஏற்பாடு செய்தார் அவர். இதனால் இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வாராக் கடனாகும் அபாயத்திற்குள் தள்ளினார். பின் காப்பீட்டுத் துறையின் பிரம்மாண்ட நிறுவனமான American International Group (AIG) இல் 85 பில்லியன் டாலர் தொகை செலவில் 80 சதவீத பங்குகளை பெடரல் கொள்முதல் செய்ய அவர் ஏற்பாடு செய்தார்.

இந்த மீட்பு முயற்சிகள் எல்லாமே சங்கிலி விளைவாக உலகப் பொருளாதாரம் பொறிவதை தடுப்பதற்காக என்றாலும் மிகவும் முக்கியமானதாக போல்சன் போன்ற இந்த நிதி பொறிவுக்கு முதன்மை பொறுப்பாளர்களாக இருக்கும் செல்வம் கொழிக்கும் பங்குதாரர்களை பாதுகாப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் சேர்த்து தான்.

போல்சன் இந்த நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க அளவு தனிநபர் பொறுப்பினை தாங்கியவராய் இருக்கிறார்.

2006ம் ஆண்டு "Mr. Risk Goes to Washington" என்கிற தலைப்பிட்டு BusinessWeek வெளியிட்ட கட்டுரை ஒன்றில் போல்சனை "இலாப விகிதத்தை துரத்துவதில் மேலும் மேலும் அதிகமான துணிச்சலுடன் செயல்படும் பங்கு பத்திர நிறுவனங்களை கொண்டதாக ஒரு அதீத துணிச்சலுடைய வோல் ஸ்ட்ரீட்டின் முக்கிய கட்டுமான பொறியாளராக" குறிப்பிட்டது. போல்சனின் கண்காணிப்பின் கீழ் இது "அதிகமான கடன்களை பெறுவது" என்றானது: 1999ம் ஆண்டில் சுமார் 20 பில்லியன் டாலர்களாக இருந்த நீண்ட கால கடன் 2005ல் 100 பில்லியன் டாலர்களாக ஆனது. இதன் அர்த்தம் என்னவென்றால், அனைத்து வகை புரிபடாத பங்கு வகைகள் மற்றும் பத்திரங்கள் மீதும் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டன".

"முதலீட்டு வங்கிகள் வெறும் இடைத்தரகர்கள் போல் செயல்படாமல் எப்படி தங்கள் சொந்த மூலதனத்தையே முதலீடு செய்து தங்களது இலாப விகிதத்தை மேம்படுத்த முடியும், இது எந்த பெரிய அளவுக்கானதாக இருக்க முடியும் என்பதை உணர்ந்திருந்த முதல் வோல் ஸ்ட்ரீட் தலைவர்களில் போல்சனும் ஒருவர்" என்றது International Herald Tribune. "மோதலுக்கான சாத்தியக்கூறுகள் எழுந்த போதிலும் முதலீடு செய்வதற்கும், ஆலோசனை அளிப்பதற்கும், நிதி ஒப்பந்தங்களிலும் Goldman நிறுவன உரிமைகளை தீர்மானமாய் நிலைநாட்டினார்" போல்சன் என்றது அப்பத்திரிகை.

ஊக வணிகம் ஊக்கம் பெற்றதில் போல்சன் நன்கு ஆதாயமடைந்தார். இந்த சொத்துகள் நிதி ரீதியான கையாடல்கள் மூலம் உருவானதே தவிர, பொருளாதாரத்தில் உண்மையான மதிப்பை உருவாக்க எதுவும் செய்யவில்லை. மாறாக, போல்சன் போன்ற தனிநபர்களின் அசாதாரண சொத்து குவிப்பு, உண்மையான பொருளாதாரத்தின் சேதாரத்துக்கும், அரசாங்கம் திவாலாவதற்கும், உலகெங்கிலும் வெகுஜன மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவதற்கும் ஒரு இயல்பான காரணமாக இருந்தது.

2004ம் ஆண்டில் போல்சனுக்கு 30 மில்லியன் டாலர் அளவுக்கு சம்பளம் அளிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் அவர் வீட்டுக்கு எடுத்து செல்லும் ஊதிய தொகை 37 மில்லியன் டாலர்களாக இருந்தது. Goldman Sachs இல் தான் பணியாற்றிய காலத்தில், அவர் 700 மில்லியன் டாலர் அளவுக்கு தனிநபர் சொத்தினை குவித்திருந்ததாக, மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பால்சன் கருவூலத்திற்கு சென்று விட்டவுடன், Goldman Sachs நிறுவனத்தில் இருந்த அவரது சகாக்கள் தங்களது கொண்டாட்டங்களை தொடர்ந்தார்கள். 2006ம் ஆண்டின் நிறைவில், போல்சனுக்கு பின் வந்த லாயிட் பிளாங்க்ஃபின் வருட நிறைவு போனஸாக 53.4 மில்லியன் டாலரை பெற்றார். இன்னும் 11 பிற அதிகாரிகள் மொத்தமாக சேர்த்து 150 மில்லியன் டாலர் தொகையை ஆண்டு நிறைவு போனஸாக வாரிக் குவித்தனர். அந்த ஆண்டில் மட்டும், முன்னணி முதலீட்டு நிறுவனங்களான Goldman Sachs, மோர்கன் ஸ்டான்லி, மெரில் லிஞ்ச், லெஹ்மென் பிரதர்ஸ், மற்றும் Bear Stearns ஆகியவை 36 பில்லியன் டாலர்களை போனஸாக அளித்திருக்கின்றன. 2007ம் ஆண்டின் நிறைவில், அதே நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு (மெரில் தவிர) இன்னுமொரு 30 பில்லியன் டாலர் தொகை அளிக்கப்பட்டது.