World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: PSG collects 4,680 signatures to support European election campaign

ஜேர்மனி: சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்திற்காக 4,680 கையெழுத்துக்களை சேகரிக்கிறது

By our correspondents
3 April 2009

Use this version to print | Send this link by email | Email the author

 

PSG stall

பேர்லினில் PSG இன் பிரச்சாரம்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gelichheit, PSG) ஜேர்மனியத் தேர்தல்கள் அதிகாரியிடம் 4,680 செல்லுமதியான கையெழுத்துக்களை அளித்தது. இது ஜூன் மாதம் நடக்க இருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கு பெறுவதற்கான உரிமையை கட்சிக்கு கொடுக்கிறது. வாக்குச் சீட்டில் கட்சியின் பெயர் பதிவு பெறத்தேவை என்ற சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச 4,000 உத்தியோகபூர்வரீதியான கையெழுத்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக கட்சி கொடுத்துள்ளது.

"நான்கு வார காலம் மட்டுமே இந்த விண்ணப்பத்திற்காக பிரசாரத்தில் ஈடுபட்டாலும், எமது கையெழுத்து சேகரிக்கும் பிரச்சாரம் அதன் சொந்த இயக்கவியலை அபிவிருத்தி செய்துகொண்டது" என்று PSG நிர்வாகக் குழு உறுப்பினர் லுட்விக் வெல்லர் கூறினார். "இக்காலகட்டத்தில் நாங்கள் பல தொடர்புகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர்கள் கையெழுத்து சேகரிக்க உதவினர். சில நேரம் தங்கள் நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் அழைத்து வந்தனர். இதைத்தவிர, எங்களுக்கு இணையதளம் மூலமும் கணிசமான ஆதரவு வந்தது. உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் டஜன் கணக்கில் கையெழுத்து படிவங்களை அச்சடித்து எடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கையெழுத்துக்களை சேகரித்தனர். அவை முறையாக நெறிப்படுத்தப்பட உரிய தேர்தல் அலுவலகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் PSG அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்."

கடந்த நான்கு வாரங்களில் PSG உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நகர மையங்களிலும், தொழிலாளர் வேலை வாய்ப்பு அலுவலங்கள், ஆலைகள் முன்னதாக பிரச்சாரங்களை நடத்தி 5,500 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை சேகரித்தனர். 10,000க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கைகளை வினியோகித்தனர். ஒவ்வொரு கையெழுத்தும் தனி படிவத்தில் கொடுக்கப்பட வேண்டும். அதில் கையெழுத்திடுவோர் பற்றிய முழு விலாசம், பிறந்த தேதி என இருக்க வேண்டும். இத்தகவல் பின்னர் தேர்தல் பதிவு அலுவலங்களால் ஆய்விற்கு உட்பட்டு உறுதி செய்யப்படும். உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்ட கையெழுத்துக்கள்தான் மத்திய தேர்தல் அலுவலருக்கு அளிக்கப்பட முடியும்.

சில தேர்தல் பதிவு அலுவலங்கள் தெருக்களின் பெயர்கள் சரியாக இல்லை, வீட்டு எண்கள் பெயர் சரியாக இல்லை எனக்கூறி படிவங்களை ஏற்க மறுத்தன. குடியேறியவர்கள் மற்றும் இளைஞர்களும் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்களிக்க தகுதி அற்றவர்கள் என்பதால் அவர்களுடைய கையெழுத்துக்களும் மறுக்கப்பட்டன.

PSG பிரச்சாரத்தின் கணிசமான வெற்றி மாறியுள்ள அரசியல் நிலைமையுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. "இந்த நெருக்கடி ஒரு தற்காலிக நிகழ்வு அல்ல என்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர்; இது முதலாளித்துவ அமைப்புமுறையுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது என்று அறிவர்". வெல்லர் மேலும் கூறியது: "ஆனால் நடைமுறையில் உள்ள கட்சிகள் எதுவும் இந்த உண்மையைக் கூறுவதில்லை. மாறாக எப்படி முதலாளித்துவத்தை மீட்கலாம் என்று அவை விவாதிக்கின்றன."

தொழிலாளர்கள், வேலையற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் PSG யின் சோசலிச முன்னோக்கை மிக சாதகமாக எதிர்கொண்டனர். ஒருவர் கூறினார்: "முதலாளித்துவம் சீர்திருத்தப்பட முடியும் என்ற கருத்தை இனியும் மக்கள் கேட்கத் தயாராக இல்லை. கடந்த ஆண்டுகளிலும் தசாப்தங்களிலும், இதற்கு முற்றிலும் மாறானதைத்தான் அவர்கள் அனுபவித்துள்ளனர்; அது இப்பொழுது இந்த நெருக்கடியில் நன்கு வெளிப்பட்டுள்ளது."

பிரச்சாரம் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு சக்தி வாய்ந்த எதிர்கொள்ளலை ஜேர்மனிய தலைநகரானட பேர்லினில் கொண்டது என்று Weller கூறினார். இங்கு மக்களின் பரந்த அடுக்குகள் நேரடியாக நகரத்தின் இடது கட்சி-சமூக ஜனநாயகக் கட்சி (Linkspartei-SPD) கூட்டு செனட்டின் விளைவுகளை அனுபவித்துள்ளனர். ஜேர்மனி முழுவதும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவரையும் கூட்டங்களில் பங்கு பெற அழைப்புவிடுத்ததிலும் நன்கு புலனாயிற்று.

ஒரு புதிய கட்சி, சர்வதேச சோலிச திட்டத்தை முன்வைப்பதற்காக கட்டமைப்பது பற்றிய விவாதம் அதிகமாக இடது கட்சியின் பங்கு பற்றிய முரண்பாடுகளுடன் பிணைக்கப்பட்டது. இடது கட்சி அதிகாரத்தை கொண்டுள்ள இடங்களில் அது வலதுசாரி கொள்கைகளை செயல்படுத்துகிறது. கட்சியின் பாராளுமன்றக் குழு Hartz IV என்னும் மிகக் குறைவான வேலையின்மை ஊதியங்களுக்கு ஆதரவு கொடுப்பதுடன் மிகச் சிறிய அதிகரிப்பைத்தான் மற்ற சமூகநல கொடுப்பனவுகளிலும் கேட்கிறது. இடது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தருகிறது. இதன் தலைவர் ஓஸ்கார் லாபோன்ரைன் ஜேர்மனிய அரசாங்கத்தின் வங்கி மீட்பு பொதிக்குப் பாராட்டை தெரிவித்தார். கட்சியின் மற்றொரு முக்கிய உறுப்பினர் வெளிப்படையாக காசா மீது இஸ்ரேலிய பயங்கரவாத குண்டுவீச்சுக்களை நியாயப்படுத்தினார்.

PSG யின் பிரதிநிதிகள் இடது கட்சியின் வலதுசாரி நிலைப்பாடுகள் கட்சியின் கண்ணோட்டத்தில் வேர்களை கொண்டிருந்தன என்பதை தெளிவுபடுத்தினர். கட்சியின் முக்கிய வேட்பாளரான உல்ரிச் ரிப்பேர்ட் இடது கட்சியை பற்றி பேர்லினில் நடந்த கூட்டத்தில் தெரிவித்த கருத்தாவது: "இந்த அமைப்பு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை காக்கும் நோக்கத்தை கொண்ட அவர்களுடைய கருவி அல்ல. இது, தொழிலாளர்கள் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதை தடுக்கும் நோக்கத்தை கொண்ட ஆளும் வர்க்கத்தின் ஆரம்ப முயற்சியாகும்."

PSG தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில் இத்தகைய முற்போக்கான ஆதரவு பிரச்சாரத்திற்கு கிடைத்திருப்பது இப்பிரச்சாரம் எதிர்காலத்தில் வெற்றிகொள்ளவுள்ள ஆதரவிற்கான அடையாளமாகும். அதே போல் முதலாளித்துவத்திற்கு ஆதரவு மற்றும் அனைத்துவித சந்தர்ப்பவாதங்களுக்கு எதிரான சோசலிச முன்னோக்குகள் பற்றிய விவாதங்களையும் இது நன்கு தொடக்கி வைக்கும். உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு தீவிர ஆதரவு தருமாறு அழைப்பு விடுக்கிறோம்.