World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Socialist Equality Party (Germany) on the ballot for European Elections

ஐரோப்பிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி வாக்குச் சீட்டில் இடம்பெற்றுள்ளது

By Marius Heuser
18 April 2009

Back to screen version

ஏப்ரல் 10ம் தேதி நடந்த கூட்டத்தில் கூட்டாட்சிச் தேர்தல் குழு சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit - PSG) ஐரோப்பிய தேர்தல்களில் பங்கு பெறலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது. இதையொட்டி சோசலிச சமத்துவக் கட்சியின் பெயர் ஜேர்மனியில் உள்ள சுமார் 63.4 மில்லியன் வாக்காளர்கள் தெரிவு செய்யக்கூடிய வகையில் வாக்குசீட்டில் இருக்கும்.

மொத்தத்தில் 38 கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புக்கள் வாக்குச்சீட்டுப் பதிவு தகுதிக்கு விண்ணப்பித்தன. தேர்தல் குழு முக்கியமான பழைமைவாத அமைப்புக்களான "Alliance of the Centre" போன்ற ஏழு கட்சிகளின் வேண்டுகோள்களை நிராகரித்தது. அதற்கான காரணம் தேவையான 4,000 கையெழுத்துக்களை பதிவு செய்துள்ள வாக்காளர்களிடம் இருந்து பெறாமற் போனமை அல்லது வேறு பொதுவான நிபந்தனைகளை நிறைவேற்றாமல்விட்டதற்காக இருக்கலாம்.

சிறிய வலது சாரி அமைப்புக்கள், Bavaria Party, Citizens Movement Solidarity (BuSo) அல்லது Ecological Democratic Party (ODP) போன்றவை தவிர குடியரசுக் கட்சியினர் (REP), மற்றும் ஜேர்மன் மக்கள் ஒன்றியம் (DVU) என்ற இரு பெரிய வலதுசாரி தீவிரவாத கட்சிகளும் தேர்தலில் கலந்து கொள்ளுகின்றன. ஜேர்மன் தேசியக் கட்சி (NPD), மூன்றாம் அத்தகைய பெரிய கட்சி, ஒருக்கால் மிகப் பெரிய நவ-நாஜிக் கட்சியாக ஜேர்மனியில் இருப்பது ஜேர்மன் மக்கள் ஒன்றியத்திற்கான (DVU) ஆதரவு என்ற முறையில் பங்கு பெறவில்லை. ஆனால் அது இந்த ஆண்டு பின்னர் நடக்க இருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் பங்கு பெறும்.

30 மற்ற கட்சிகளில் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எந்தக் கட்சியும் இல்லை.

ஒஸ்கார் லாபொன்டைன் தலைமையில் உள்ள இடது கட்சி (Links partei) இன்னும் எப்பொழுதாவது தன்னை "சோசலிசக் கட்சி" என்று அழைத்துக் கொண்டாலும், அதன் நடைமுறை அறிவிப்புக்களிலும் இன்னமும் தெளிவாக அதன் சமூக சிக்கனக் கொள்கைகளில் தான் பேர்லின் நகர அரசாங்கக் கூட்டணியை சமூக ஜனநாயகக் கட்சியுடன் (SPD) ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. அதாவது முதலாளித்துவ இலாப முறையின் வடிவமைப்பிற்கு கட்டுப்பட்டு இருக்கப் போவதாக கூறுகின்றது.

ஸ்ராலினிச ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (DKP) யும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறது. முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிசக் கட்சிக்கு கட்டுப்பட்டு மேற்கு ஜேர்மனியில் செயல்படும் அமைப்பான DKP கிழக்கு பேர்லினில் இருந்து பரந்த நிதி உதவியினால் தப்பிப்பிழைத்திருந்தது. இதற்கு மேற்கு ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்திடம் இதற்கு அதிக செல்வாக்கு கிடையாது. இந்த பண வரத்தும் பேர்லின் சுவர் 1989ல் இடிக்கப்பட்டபின் வரண்டுவிட்டது. எனவே கட்சி ஒரே இரவில் சரிந்துவிட்டது. அப்பொழுதில் இருந்து இது நெருக்கமாக ஜனநாயக சோசலிச கட்சியுடன் (PDS) உடன் தொடர்பு கொண்டுள்ளது. இன்னும் சமீப காலத்தில் இது பொதுவாக இடது கட்சியின் பட்டியலில் தனது வேட்பாளர்களை நிறுத்துகின்றது.

PSG ஒன்றுதான் வெளிப்படையாக பொருளாதார நெருக்கடியின் பொருள் முதலாளித்துவ முறை தோற்றுவிட்டது, சோசலிச சமூகத்தால் மாற்றப்பட வேண்டும், பெருநிறுவனங்கள் வங்கிகள் ஆகியவை ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று கூறுகிறது. PSG அனைத்துவித தேசியவாதம், இனவெறி ஆகியவற்றை எதிர்த்து இராணுவவாதம், போர் ஆகியவற்றையும் எவ்வித விட்டுக்கொடுப்புமில்லாமல் எதிர்க்கிறது. PSG ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை நிராகரித்து ஐரோப்பா கீழ்மட்டத்தில் இருந்து ஒன்றுபடுத்தப்பட வேண்டும், தொழிலாளர்கள் அனைவரும் சோசலிச அடிப்படையின்கீழ் திரட்டப்பட வேண்டும் என்று கூறுகிறது.

அதன் தேர்தல் அறிக்கை கீழ்க்கண்ட சொற்களுடன் தொடங்குகிறது: "ஐரோப்பாவின் எதிர்காலம் நிதிய பிரபுத்துவம் மற்றும் அதன் பிரதிநிதிகள் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவம் மற்றும் இருக்கும் ஐரோப்பிய அரசாங்கங்களின் கரங்களில் விட்டுவைக்கப்பட்டால், பின்னர் பேரழிவு என்பது தவிர்க்கப்பட முடியாதது. தொழிலாளர்கள் இந்நிகழ்வுகளில் தலையிட்டு சமூகத்தின் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது."

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கடந்த ஐரோப்பிய தேர்தல்களில் PSG 25,800 வாக்குகளை பெற்றதால் இந்தமுறை இது வாக்குச் சீட்டில் மேலே உள்ள இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

வாக்குச் சீட்டில் இடம் பெறத் தகுதி பெறுவதற்கு PSG 5,000 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற வாக்காளர்களின் கையெழுத்துக்களை கடந்த வாரங்களில் சேகரித்தது. PSG உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நகர மையங்களிலும், கட்சியின் தகவல் நிலையங்களிலும், வேலையின்மை பதிவு அலுவலகங்களுக்கு முன்னும், தொழிற்சாலைகளுக்கு முன்னும் நண்பர்கள், சக ஊழியர்களுக்கு மத்தியிலும் பல விவாதங்களை நடத்தியதுடன், 10,000க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கை பிரசுரங்களை வினியோகித்தனர்.

அடுத்த சில நாட்களிலும் வாரங்களிலும், PSG அதன் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும். தொடர்ச்சியான தேர்தல் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப் பெற உள்ளன. இவற்றில் PSG அதன் சோசலிச முன்னோக்கை விளக்கி, விவாதிக்கும். முதலாளித்துவ முறையின் தோல்வி என்பது எப்படி அனைத்து சீர்திருத்த திட்டங்கள் கட்சிகளின் தோல்வி என்பதையும் விளக்கும்; மேலும் சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி போன்றவை இன்னும் வலதிற்கு எப்படிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதையும் விளக்கும்.

PSG ஒரு புதிய தேர்தல் வலைத் தளத்தையும் நிறுவும். இந்த வலைத் தளம் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதன் வலைத் தள தேர்தல் பிரச்சாரத்தைத் தொடக்கி WSWS ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட வகை செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved