World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The criminalisation of political dissent in Britain

பிரிட்டனில் அரசியல் கருத்துமுரண்பாட்டை குற்றவகையாக்குதல்

By Julie Hyland
18 April 2009

Use this version to print | Send feedback

"தவறான செயல்களில் இருந்து கணக்கிலடங்கா சோகங்கள் எழுகின்றன" என்று உலக சோசலிச வலைத் தளம் ஜூலை 22, 2005ல் லண்டன் நிலத்தடி இரயில் நிலையத்தில் சீருடையிலில்லாத போலீசார் நிரபராதியான பிரேசில் தொழிலாளி Jean Chales de Menezes அரசாங்கத்தின் சார்பாக கொலை செய்யப்பட்ட போது கூறியிருந்தது.

அந்த எச்சரியையை பின்னர் நிகழ்வுகள் சோகம் ததும்பும் முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. Menezes கொல்லப்பட்டதற்கு பின்னர் இதுவரை அதற்கும் யாரும் பொறுப்புக் கூறவில்லை, போலீஸ் அரசாங்க சட்டபூர்வமான வடிவமைப்பு ஒன்று பிரிட்டனில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் இது பற்றிய தாக்கங்கள் நன்கு தெளிவாகியுள்ளன.

ஏப்ரல் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கைது செய்யப்பட்டு மூன்று போலீஸ் நடவடிக்கைகளில் காவலிலும் வைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இரண்டு நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர். இரண்டுமே "பொது ஒழுங்கிற்கு" அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்ற முறையில் முக்கியத்துவம் காட்டி நடந்தவை ஆகும்.

பொது ஒழுங்கைக் பாதுகாத்தல் என்பது இப்பொழுது அரசியல் எதிர்க்கருத்தை குற்றம் சார்ந்தது என கூறுவதற்கான போலிக்காரணமாகிவிட்டது.

G20 உலகத் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் தொடங்குவதற்கு முன்பே ஐந்து பேர் பிளிமத் நகரத்தில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் "அரசியல் சிந்தனை தொடர்புடைய விவரங்களை" வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் எவ்விதக் குற்றச் சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர். ஆனால் 21ம் நூற்றாண்டு பிரிட்டனில் அரசியலில் தீவிரமாக இருத்தல் என்பது ஒரு குற்றம் எனக் கருதப்படுவது தலைநகரத்தின் தெருக்களில் முன்னணிக்கு வந்துள்ளது.

ஏப்ரல் 1 தொடங்கி, பாரிய போலீஸ் நடவடிக்கை ஒன்று G20 உச்சிமாநாட்டை ஒட்டி நடத்தப்பட்டது. சட்டபூர்வமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நூற்றுக்கணக்கான மக்கள் "காவலுக்குட்பட்டனர்"--மத்திய லண்டனின் பக்கவாட்டு தெருக்களில் கட்டாயமாக போலீஸ் தடுப்பு அரண்களுக்குள் ஏழு மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டனர்.

இந்த அரண்களில் ஒன்றிற்குப் பின்தான் வேலையிலிருந்து வீடு திரும்பிய இயான் ரொம்லின்சன் என்பவர் தடியை வைத்திருந்த முகமூடி அணிந்த போலீஸ் அதிகாரியால் பின்னாலிருந்து தாக்கப்பட்டு, ஒரு சில கணங்களில் அவர் இறந்து போனார்.

நேரில் பார்த்தவர்களின் சாட்சியப்படி, வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் காட்டும்படி, ரொம்லின்சன் மீது போலீஸ் தாக்குதல் என்பது எதிர்ப்புக்கள் போது போலிசார் வாடிக்கையாக நிகழ்த்துவது என ஆகியுள்ளது.

போலீஸ் செயல்கள் "பொது பாதுகாப்பை" நிலைநிறுத்துவதுடன் தொடர்பற்றவையாக உள்ளன. சொல்லப் போனால், இவை ஒழுங்கீனத்தைத் தூண்டி அதையொட்டி கூடுதலான அடக்குமுறையை மேற்கொள்ள உதவும் செயல்களாகத்தான் உள்ளன. சீருடைய அணியாத அதிகாரிகள் தடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மற்றும் Territorial Support Group பங்கு பெறுவது ஆகியவற்றால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. TSG என்பது ஒரு சிறப்பு பகுதி இராணுவ போலீஸ் பிரிவு ஆகும். இது பெரிதும் பகிரங்கப்படுத்தப்பட்ட பல சம்பவங்களில் தொடர்பு உடையது. இதன் உறுப்பினர்களின் அடையாளஎண் மறைக்கப்பட்டிருக்கும்.

போலீசார் G20 உச்சிமாநாட்டு எதிர்ப்புக்கள் பற்றி எடுத்த நடவடிக்கைகள் பற்றிய வீடியோ காட்சிகள் மெனிசிஸ்ஸின் பிறந்த இடமான பிரேசிலில் மிக அதிகமாக உள்ளிறக்கம் (Download) செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேசில் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக போலீஸ் காட்டுமிராண்டித்தனம் மிக அதிகமாக இருக்கும் நாடாகும்.

அரசாங்கம் அதன் "பொது ஒழுங்கு" கொள்கை வெளியே வராது என்று செய்ய தக்க முயற்சிகளை மேற்கொண்டது. போலீசாரை இப்பொழுது வாடிக்கையாக சட்டபூர்வ ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறுபவர்களின் அடையாளம், விலாசம் ஆகியவற்றைக் கோருவதுடன் அவர்களை புகைப்படமும் எடுக்கின்றனர். ஆனால் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பது புதிய தொழிற்கட்சியின் ஓர்வெல்லிய (Orwellian) நெறியில் சட்டவிரோதமானது போலும்.

ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு மாதம் முன்பு 2008ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்ட விதி 76 நடைமுறைக்கு வந்தது. இது போலீஸ் அதிகாரிகளைப் புகைப்படம் எடுக்கும் எவரையும் கைது செய்து, சிறையில் அடைக்கலாம் என்று கூறுகிறது.

G20 எதிர்ப்புக்களின் போது ஒரு நிகழ்வில், புகைப்படக் கருவியில் பதிவாகியபடி, போலீஸ் அதிகாரிகள் புகைப்படம் எடுப்பவர்கள், மற்றும் செய்தி நிறுவன ஊழியர்களை அப்பகுதியை விட்டு 30 நிமிஷங்களுக்குள் நீங்க வேண்டும் என உத்தரவிடுகின்றனர்; அல்லது அவர்கள் கைது செய்யப்படுவர் எனக் கூறுகின்றனர்.

உலகிலேயே மிக அதிக கண்காணிப்பிற்குட்பட்ட மக்கள் இருக்கும் நாட்டில் இந்த நிலையுள்ளது. சராசரி மக்கள் தொகைக்கு மிகமிக அதிகமான முறையில் CCTV குறுகியதூர தொலைக்காட்சி புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் நாடாக இங்கிலாந்து உள்ளது. மேலும் பொது மக்கள் விருப்பம் ஒருபுறம் இருக்க, எந்தவித பாராளுமன்ற விவாதமும் இல்லாமல், சமீபத்திய சட்டம் அனைத்து வலைத்தொடர்பு பணி அளிப்பவர்களையும் (Internet service providers) மின்னஞ்சல்கள் மற்றும் வலைத்தளத்திற்கு சென்றவை பற்றிய தகவல்களை ஓராண்டிற்கு அழிக்காமல் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் தகவல் செய்திகள் இதே போல் சேகரித்து வைக்கப்பட்டு, அரசாங்கமும் மற்றும் பிற அரசாங்க அமைப்புக்கள் கேட்கும்போது கொடுக்கப்படுகின்றன.

இத்தகைய அதிகாரங்கள் போலீசாருக்கு "முக்கியமான" நபர்களின் நடவடிக்கைகளை அறிவதிற்கு போதாது என்பது போல், ஏப்ரல் 13ம் தேதி நாட்டிங்ஹாம் போலீசார் முன்னோடியில்லாத வகையில் 114 பேரை "முன்கூட்டியே " கைது செய்துவிட்டனர். எந்தக் குற்றமும் நடக்கவில்லை. இந்த கைதுகள் போலீசார் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நாட்டிங்ஹாமில் ஒரு விசை நிலையத்தை இலக்கு கொண்டதாக திட்டம் இருப்பது பற்றி "சந்தேகித்தனர்". இதுவரை குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றாலும், இந்தக்கைதுகள் தொடர்ச்சியாக வீடுகளைச் சோதனையிட, தனிப்பட்ட ஆவணங்களையும் கணினிகளையும் கைப்பற்ற பயன்படுத்தப்படுகின்றது.

லண்டன், நாட்டிங்ஹாம் செயல்களுக்கு இடையே போலீஸ் இங்கிலாந்தின் வடமேற்கில் மிகப் பெரிய "பயங்கரவாத-எதிர்ப்பு" சோதனைகளை பல டஜன் ஆயுதமேந்திய அதிகாரிகளை வைத்து நடத்தினர். 12 பேர், பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள், தவிர்க்க முடியாத பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனைகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டனர் என்று கூறப்பட்டது.

மீண்டும் குற்றச் சாட்டுக்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ், சந்தேகத்திற்கு உரியவர்கள் 28 நாட்களுக்கு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் காவலில் வைக்கப்படலாம். இதுவரை பயங்கரவாத நெருக்கடிக்கான கணிசமான ஆதாரங்கள் இருப்பதாக எந்த சான்றுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் பரந்த அளவில் தகவலாக வந்துள்ளது.

சமீபத்திய போலீஸ் நடவடிக்கைகள் அனைத்துமே கடந்த சில ஆண்டுகளில் தொழிற்கட்சி அரசாங்கம் இயற்றிய 200க்கும் மேற்பட்ட தனித்தனி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டன. இவை மொத்தமாக 2006 பயங்கரவாதச் சட்டத்தில் ஒருங்கிணைக்கப்பெற்றன; இதில் உள்துறை மந்திரியால் ஏற்தமுடியாததாக கருதப்படும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவது கூட குற்றம்சார்ந்தவை என முத்திரையிட்டுவிடும்.

அந்த நேரத்தில் பிரதம மந்திரி டோனி பிளேயர் இருக்கும் அரசியல் நிலைமைகள் "நடைமுறையின் விதிகள்" மாற்றப்பட்டுவிட்டன என்ற பொருளைத் தரும் என்று கூறி அவற்றை நியாயப்படுத்தினார்.

இது ஒரு புதிய சட்டக் கோட்பாட்டை உருவாக்கியது--அதிகாரத்தில் இருப்பவர்கள் கூறினால் சில குற்றம் எனக் கொள்ளப்படலாம் என. இப்பொழுது நடைமுறையில் இருக்கும் "விதிகள்", ஆயுதமேந்திய போலீசார் அரசியல் எதிர்ப்பின்மீது சீறிப்பாய்ந்து கைது செய்தல் என்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் பெரிதும் செய்திகளில் தோன்றியிராத ஒரு நடவடிக்கையில், உயர் பொலிஸ் அதிகாரிகள் அமைப்பு நம்பிக்கைக்குரிய உளவுப்பிரிவு (Confidential Intelligence Unit) என்பதை ஏற்படுத்தி "உள்நாட்டுத் தீவிரவாதிகள்" பற்றி அது இலக்கு கொள்ளும் எனக் கூறியது. "நாச வேலை-எதிர்ப்பு" செயல்கள் பொதுவாக M15 னால் நடத்தப்படுகின்றன என்று வைத்துக் கொண்டாலும், CIU தீவிரவாத குழுக்களைக் கண்காணிக்கும் வேலையில் முழுமையாக ஈடுபடுகிறது. இதில் பல ஒற்றர்கள் பிற அமைப்புக்களில் இருத்தப்படுவதும் அடங்கும்.

குடி உரிமைகள்மீதான தாக்குதல் பிரிட்டனில் மட்டும் நடைபெறவில்லை. "முன்னேற்றமடைந்த ஜனநாயகங்கள்" என்று அழைக்கப்படும் பகுதிகள் முழுவதிலுமே இப்போக்கு காணப்படுகிறது. உண்மையில் "ஜனநாயகம்" என்று கூறப்படுவதை அதிகரித்தளவில் போலியான மறைப்பாககொண்டு சர்வாதிகார அதிகாரங்களை அரசாங்கம் தனக்கென எடுத்துக் கொண்ட தன்மையைக் காட்டுகின்றன.

இதற்கு ஆளும் வர்க்கத்திடம் அல்லது அதன் தாராளவாத "விமர்சகர்களிடம்" இருந்து கொள்கையளவிலான எதிர்ப்பு ஏதும் வரவில்லை என்பது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இத்தகைய சர்வாதிகார வழிவகைகளை ஏற்றலுக்குப் பின் இருக்கும் அடிப்படை உந்ததுதல் சக்தி "பொது ஒழுங்கை" தக்க வைத்தல் அல்ல. மாறாக 1930 களுக்குப் பின்னர் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய முறிவு இருக்கும் நிலைமைகளில் இருக்கும்போது இந்த அமைப்பு முறையை பாதுகாக்கும் தேவைக்கும் மற்றும் ஒரு சில சலுகை பெற்றவர்களின் செல்வம், அதிகாரம் ஆகியவற்றை தொழிலாளர் வர்க்கத்தின் இழப்பில் பாதுகாப்பதுமாகும்.

ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதற்கு நிதிய தன்னலக்குழு மற்றும் அதன் பிரதிநிதிகள் அரசியல் வாழ்வின் மீது கொண்டிருக்கும் ஏகபோக உரிமை முற்றிலும் முறிக்கப்பட வேண்டும். இது சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்கப் போராடக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஆரம்பமுயற்சியின் மூலம்தான் அடையப்பட முடியும்.