World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Caterpillar workers in revolt against the unions

பிரான்ஸ்: தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியில் கட்டர்பில்லர் தொழிலாளர்கள்

By Antoine Lerougetel
28 April 2009

Use this version to print | Send feedback

பிரான்சில் உள்ள கட்டர்பில்லர் மற்றும் கொன்டினென்டல் நிறுவனங்களில் தங்களின் வேலைகளை பாதுகாக்க போராடி வரும் தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசுடன் தொழிற்சங்கங்களால் பேரம் பேசப்பட்ட வேலைநீக்கத்திற்கு எதிராக கடந்தவாரம் கிளர்ச்சி செய்தனர்.

கிரெனோபிளிலுள்ள நாடுகடந்த கட்டிடம் கட்டும் நிறுவனம் மற்றும் விவசாய எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் இரு ஆலைகளில் திட்டமிட்ட 733 வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் கட்டர்பில்லர் தொழிலாளர்கள் கடந்தவாரம் நிர்வாகத்துடன் தங்களின் தொழிற்சங்கம் செய்து கொண்ட சமரச பேரத்தை நிராகரித்தனர்.

சிறந்த உடன்பாடு ஒன்றை வென்றெடுக்கும் முயற்சியில் ஏப்ரல் 1 அன்று, தங்களின் முதலாளிகளுள் நால்வரை பிடித்துவைத்திருக்கும் தொழிற்சங்கத்தினர், கிரெனோபிள் ஆலைகளில் உற்பத்தியை பேணுவதற்காக ஐரோப்பிய நிதிகளை பெற வேண்டி, ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு ஒரு "மனப்பூர்வமான வேண்டுகோளை" எழுதினர்.

ஏப்ரல் 19 அன்று, தொழிற்சங்க பிரதிநிதிகளும் கட்டர்பில்லர் நிர்வாகமும் பாரிசில் உள்ள பொருளாதார அமைச்சின் உதவியுடன் சந்திப்பு நடத்தி, சர்ச்சை முடிவு பற்றிய வரைவு உடன்பாட்டில் கையொப்பமிட்டனர். அது இந்த ஆண்டு வசந்தத்தில் 600 வேலை இழப்புக்களை திட்டமிட்டுள்ளது. எஞ்சிய 2000 தொழிலாளர்கள், அக்டோபரில் வருடாந்த வேலைநேரம் பற்றிய கணக்கெடுப்பால் பதிலீடு செய்யப்பட்ட வாரந்தர வேலைநேர வரையறைகளை அழித்தன் மூலம் உக்கிரமான சுரண்டலை எதிர்கொள்ள நேர்ந்தனர்.

அடுத்த நாள் கட்டர்பில்லர் தொழிற்சங்க பிரதிநிதிகள், பிரதானமாக CGT அலுவலர்கள் (கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பு), கிரெனோபிளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் DDTE பிராந்திய தொழிலாளர் பயிற்சி மையம் இடையேயான கூட்டத்திற்கு முன்னதாக, விவரங்களை இறுதிமுடிவு செய்வதற்காக, கட்டர்பில்லர் தொழிலாளர்களின் ஒரு பரந்த கூட்டத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக பேரத்தை முன்வைத்தபொழுது, 300 வேலைநிறுத்தக்காரர்கள் அவர்களை பேசவிடாது செய்தனர்.

Libération நாளிதழ், ''தங்களின் விளக்கத்தை இறுதிவரை முன்வைக்கமுடியாத தொழிற்சங்க பேராளர்கள் பேச்சுவார்த்தைகளை தொடரவேண்டி வேகமாக DDTE சென்றனர். ஆயினும், சுமார் 200 போர்க்குணமிக்க தொழிலாளர்கள் தங்களின் பேராளர்கள் உள்ளே செல்வதை தடுப்பதற்கு விரைந்து செல்ல தீர்மானித்தனர். அவர்கள் DDTEக்கு வருகை தந்தபொழுது தொழிற்சங்க பிரதிநிதிகள் முட்டைகள் வீச்சின் வரவேற்பின் கீழ் பின்வாங்க நேர்ந்தது. 'இப்பொழுதிலிருந்து, ஆலையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், தீர்மானிக்கப்போவது தொழிலாளர்கள், நாங்கள்தான்' என்று எதிர்க்கின்ற குழு முழங்கியது. பின்னர் அவர்கள், "ஆயுதபாணியாகு! நாங்கள் தொழிலாளர்கள்! நாங்களே வெல்லப்போகிறோம், கட்டர்பில்லரை பின்வாங்க வைக்கப் போகிறோம்." கோபமடைந்த தொழிலாளி கத்தினார்: "அவர்கள் பாரிசுக்கு பணிந்து போய்விட்டனர், விஷயங்கள் இருக்கக்கூடாத வகையில் பேச்சுவார்த்தை செய்யப்பட்டன. அவர்கள் கையெழுத்திட்டிருந்திருக்கக் கூடாது, நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம்'.'

CGT "வரைவு உடன்பாடு சட்ட ரீதியான செல்தகைமையை கொண்டிருக்கவில்லை. நாம் தொழிலாளர்களுடன் பரந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வோம் மற்றும் பேச்சுவார்த்தைகளுடன் முன் செல்வோம் நல்ல நம்பிக்கையின் ஒரு அடையாளமாகவே கையெழுத்திட்டோம், ஆனால் தொழிலாளர்கள் அந்த விதத்தில் பார்க்கவில்லை என்பதை என்னால் விளங்கிக்கொள்ளகூடியதாக இருக்கின்றது." ஆயினும், கட்டர்பில்லர் கையெழுத்திட்ட உடன்பாட்டை நிறைவேற்றவில்லை எனபதால் தொழிற்சங்கம் மீது வழக்குதொடுத்துள்ளது.

பாரிஸ் தொழிற்சங்க பேராளர்களின் பகுதியாக CGTன் Nicolas Benoît, லு மொண்ட் உடனான நேர்காணலில், "நிர்வாகத்துடன் ஒட்டிக் கொண்டு, பல வழக்கறிஞர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு வரைவு உடன்பாட்டில் கையெழுத்திட எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். நாம் ஒரு சமரசத்தை ஏற்பதில் முடிவுற்றது ஏனெனில் நாங்கள் இயக்குநரின் ஒப்புதலைக் கொண்டு வர வேண்டிய தேவை இருந்தது. "மிகக்குறைந்த சலுகைகளை நியாயப்படுத்த வேண்டி, மிகவும் போர்க்குணமுள்ள தொழிலாளர்களை தனிமைப்படுத்த தெளிவாய் வடிவமைத்து, "இல்லாவிடில், கலந்துரையாடல் ஒன்றுக்கும் பயன்தராது" என்றார் Benoît.

தீர்வுக்கு அரசை நம்பும்படி அவர் வலியுறுத்தினார்: "வேலை நிறுத்தக்குழுவின் ஆறு பிரதிநிதிகள், கட்டர்பில்லர் நிர்வாகம், அரசு மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் இவர்களுடன் முத்தரப்பு கூட்டத்தை நாம் விரும்புகிறோம்." பின்னர் அவர் "நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 600 வேலை இழப்புக்களுக்கு பதிலாக அதிக பட்சமாக 450 வேலை இழப்புக்கள், அதேபோல திட்டமிட்ட வருடாந்த வேலை நேரம் பற்றியதை தெளிவாகவும் எளிமையாகவும் ஆக்குவதை இரத்துச்செய்தல்" என்ற இன்னொரு சமரசத்தை முன்மொழிந்தார்.

இயக்குநரின் ஒப்புதலை திரும்பக் கொணர வேண்டிய தேவை தொழிலாளர்களின் வாழ்வவாதாரத்தை நீக்குவதற்கு கையெழுத்திடுவதை விட வேறு தேர்வு இல்லை என்பதற்கு CGT வந்துவிட்டது என்று Benoît ஒத்துக்கொண்டதானது, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளின் மையத்திற்கு செல்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பெருநிறுவன முன்னோக்கின் மீது செயற்பட்டு, வர்க்க நலன்களின் புறநிலையான மோதலுக்கு Benoît இன் பதிலானது முதலாளிகளின் பக்கம் சார்பு எடுப்பதாகும். வேலைகளை பாதுகாத்தல், தொழிற்சாலையை பாதுகாத்தல், வாழ்க்கை தரங்களைப் பாதுகாத்தல் என்பன இப்பொழுது முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்ல தொழிற்சங்கங்களுக்கு எதிராகவுமான ஒரு போர்க்குணமுள்ள அரசியல் போராட்டத்தை இன்றியமையாததாக்குகிறது.

ஏப்ரல் 21 அன்று, பிர்க்கர்டி Clairoix ஜேர்மன் டயர் கம்பெனி ஆலையிலிருந்து கொண்டினென்டல் தொழிலாளர்கள், 1,120 தொழிலாளர்களுடன் அவர்களின் தொழிற்சாலை மூடப்படுவதை இரத்து செய்வதற்கான அவர்களின் சட்டரீதியான வேண்டுகோள் தோல்வியடைந்தது அறிவிக்கப்பட்டதும், மத்திய அரசாங்கத்தின் உள்ளூர் பிரதிநிதிகளின் sous-préfet அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

மார்ச் 16 அன்று கொன்டினென்டல் தொழிலாளர்கள் Reimsல் உள்ள நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தைக் கலைத்து முட்டைகளையும் செருப்புக்களையும் வீசி எறிந்தனர். இப்பொழுது அந்நிறுவனம் தனது நிர்வாகக் குழு கூட்டத்தை 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீசில் உள்ள விடுதியில், கடுமையான பாதுகாப்புக்கிடையில் நடத்துகிறது.

வியாழன் அன்று ஜேர்மன் கொன்டினென்டல் தொழிலாளர்கள் தங்களது ஆலை மூடப்பட்டதன் காரணமாக தங்களின் பிரெஞ்சு சகாக்கள் பாரிசிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட இரயில் வண்டியில், நகரின் வீதி முழுவதும் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டத்திற்காக ஹனோவர் நகர இரயில் வண்டி நிலையம் வந்திறங்கியதும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து புகழ்பெற்ற அழைப்பான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்பதை முரசறைவிக்கும் முழக்க அட்டைகளை ஏந்தி வந்தனர்.

வர்க்க மோதல்கள் விரைந்து பரவுவது, தங்களின் வேலை இழப்புக்கள் பற்றிய அச்சத்தின் காரணமாக பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்கள் வேலையில் எல்லைக்குட்படுத்தப்பட்டிருந்த வேலைநிறுத்தங்கள் கொண்ட முந்தைய கால கட்டத்திலிருந்து ஒரு மாற்றத்தை குறிக்கிறது. 1995 இரயில் தொழிலாளர் வேலைநிறுத்தம் மீதான பரந்த நடவடிக்கை பெருமளவில் பொதுத்துறை தொழிலாளர்களின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பான வேலையுடனும், தங்களது வேலை நிலைமைகள் தொடர்ந்து இல்லாதொழிக்கப்படுவதை தடுக்கப் போராடுவதுடனும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது, தங்களின் வேலைநிறுத்தங்கள் திரும்பத்திரும்ப தொழிற்சங்கங்களால் மூச்சுத் திணறடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டது.

நெருக்கடியின் காரணமாக, எவ்வாறாயினும், பிரெஞ்சு வேலையின்மை எண்ணிக்கையை நாளொன்றுக்கு 3,000 அளவுக்கு வளரச்செய்தது. சமீபத்திய சர்வதே நாணய நிதிய கணிப்பீடான, 2009ல் உலக வர்த்தகம் 11 சதவீதமாக சுருங்குதல் நிலைமை மேலும் மோசமடைவதையே குறிக்கிறது. 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் (கட்டுமானத்துறை நீங்கலாக) பிப்ருவரி தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 18.4 சதவீதம் அளவில் மூழ்கிப்போயுள்ளது. இப்பொழுது தொழிலாளர்கள் உடனடியான வேலையின்மை, மற்றும் ஏழ்மை அச்சுறுத்தலுக்காளாகியதுடன், வர்க்கப் பதட்டங்களின் உண்மை உக்கிரம் மேலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

பூகோள ரீதியாக அளவைக் குறைத்தல் மற்றும் சம்பளத்தை குறைத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த நிறுவனங்களை சார்ந்த ஆலைகளில் குறைந்த நேரம் மற்றும் தொழிலாளர்களை நீக்குதல் ஆகியவற்றை எதிர்க்க பிரான்சில் பல தொழிலாளர்கள் முயற்சித்துக் கொண்டுள்ளனர். கட்டர்பில்லர் அண்மைய மாதங்களில் உலக ரீதியாக தனது தொழிலாளர்களில் 25,000 பேரை வெளியேற்றியது.

உலகரீதியாக கார் விற்பனை பொறிந்துபோனதுடன் கொன்டினென்டல் பிரான்சில் உள்ள Clairoix மற்றும் ஜேர்மனியில் ஹனோவர்-ஸ்டோக்ஹேன் ஆகியவற்றில் அதன் ஆலைமூடல்களை ஆரம்பிக்க மட்டுமே செய்துள்ளது. ஆபிரிக்கா தவிர்ந்த ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள 40 தளங்களில், நிறுவனமானது அதன் தொழிலாளர் எண்ணிக்கையில் 25 சதவீதமான உலகரீதியாக 8,250 வேலைகளை கைவிட இருப்பதுடன், தொழிலாளர்கள் Molex's Villemur/Tarn ஆலையில், அதன் 300 வேலைகளுடன் இந்த ஜூனில் மூடப்படுவதன் காரணமாக அண்மையில் "முதலாளிகள் முற்றுகை" யை நடத்தினர்.

இந்த அபிவிருத்திகள் பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அரசாங்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. சார்க்கோசி வர்க்க சமரசம் என்ற பேரில் மறைந்திருக்கும் சமூக சிக்கனத்தை பின்பற்றும், தனது உள்நாட்டுக் கொள்கைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை முறியடிக்கும் மைய தந்திரோபாயமாக தொழிற்சங்கங்களுடன் நடந்த பகிரங்க பேச்சுவார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டார். தொழிலாள வர்க்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் அதிகரித்துவரும் பதட்டங்கள் சார்க்கோசியின் ஏற்கனவே செல்வாக்கிழந்து வரும் நிர்வாகத்தின் நெருக்கிடியை உக்கிரமடையச்செய்யும்.

அரசானது தொழிலாளர் போராட்டங்களை நேரடியாக நசுக்குதற்கு தயாரித்துக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 17 அன்று, பிரதம மந்திரி Préfets (அதிகாரிகளை) ஐ "முத்தரப்பு இடைத்தரகர் என்பதைவிட போலீஸ் தலைவர் என்ற அவர்களின் மிகவும் வழமையான பாத்திரத்தில், "விழிப்பாக" இருந்து, வேலைத்தளங்களில் ஒழுங்கை பராமரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர்கள், அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் திட்டமிடும் சதியை தங்களின் சொந்த வர்க்க மூலோபாயத்தை கொண்டு கட்டாயம் எதிர்க்க வேண்டும், வேலைத் தளங்களில் சுதந்திரமான ஆலைக்குழுக்களை அமைத்து, அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தங்களின் நடவடிக்கைகளுக்கு பரந்த ஆதரவை அணிதிரட்ட ஒரு அரசியல் தாக்குதலை தொடுக்க வேண்டும்.

அத்தகைய வேலைத்தள மற்றும் குடியிருப்புக்களில் அமையும் குழுக்கள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடிக்கு தொழிற்சாலைகள் மற்றும் தேசிய எல்லைகளை தாண்டி தொழிலாள வர்க்கத்திடமிருந்து பூகோளரீதியான ஒரு அரசியல் பதில் தேவைப்படுகின்றது என்ற புரிதலில் இருந்து கட்டாயம் இயங்கவேண்டும். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய முதலாளித்துவ அரசாங்கங்கள், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளில் உள்ள தொழிலாளர் அரசாங்கங்களால் பதிலீடு செய்யப்படுவது தேவையாகும்.