World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Management speculation threatens survival of Porsche car works

ஜேர்மனி: நிர்வாகத்தின் ஊகச்செயல்கள் Porsche இன் இருப்பை அச்சுறுத்துகின்றன

By Ludwig Weller
3 August 2009

Use this version to print | Send feedback

பல மாதங்கள் கொந்தளிப்பான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், Volkswagen, Porsche ஆகியவற்றிற்கு இடையே அதிகாரப் போராட்டம் இறுதியில் ஒரு அவசர உடன்பாட்டில் முடிவடைந்தது. இதன்படி VW பந்தய கார் உற்பத்தியாளரை பல பில்லியன்கள் யூரோக்களை ரொக்கமாக கொடுத்ததின் மூலம் மீட்டது. இந்த உடன்பாட்டின் பொருள் Porsche என்பது Volkswagen உடன் இணைக்கப்படும் பத்தாவது வகையான கார் ஆகும். இதனால் ஐரோப்பாவின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பாளரின் சந்தை மேலாதிக்கம் வலுப்படுத்தப்படும்.

இரு கார் நிறுவனங்ளின் முக்கிய சொந்தக்காரர்களும் அதே பெரும் செல்வம் செழிக்கும் தொழில்துறை மரபில் உறுப்பினர்கள்தாம். இவை நாஜிக்களுக்கு கீழ் செல்வம் மற்றும் பிரபல்யம் ஆகியவற்றில் உயர்ச்சி கண்டவை, பின்னர் பல ஆண்டுகள் இதுதொடர்பான பிரச்சனைக்குள் அகப்பட்டு இருந்தவையாகும். முன்பு Porsche, Piech வம்சங்களுக்கு இடையே பெரும்பாலான பங்குகள் கொள்ளவது, மகத்தான இலாபம் பெறுதல், தனிப்பட்ட டம்பம் ஆகியவற்றில் இருந்த குடும்ப பூசல் என்ற வடிவமைப்பை கொண்ட அதிகாரப் போராட்டம் பெருகிய முறையில் சமீபத்திய மாதங்களில் கார்த் தொழிலில் உள்ள சர்வதேச நெருக்கடியின் விளைவுகளால் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன், சமீபத்தில்தான், ஒரு கண்காணிப்பு குழு கூட்டமானது முன்பு கிட்டத்தட்ட 14 பில்லியன் யூரோக்கள் என்று இருந்த Porsche இன் கடன்கள் ஊகித்ததைவிட மிக அதிகம் என்பது வெளிவந்தது. Spigel வலைத் தளத்தின்படி, Porsche இற்கு புதிய மூலதனம் உட்செலுத்தப்படாவிட்டால் இரு வாரங்களுக்குள் திவாலாகியிருக்கும். "Deutsche Bank உடைய தலைவர் ஜோசப் ஆக்கர்மான், Porscheன் கூட்டு முதலாளியான Wolfgang Porscheயிடம் நிலைமை எவ்வளவு கடினம் என்பதை இரகசியமாகக் கூறினார்" என்று Der Spiegel ஏடு அதன் சமீபத்திய பதிப்பில் கூறியுள்ளது.

திவால்தன்மையை தவிர்ப்பதற்கு Porsche, VW இரண்டும் இந்த மாத நடுவில் "அடிப்படைக்கான ஒப்பந்தம்" ஒன்றில் கையெழுத்திட ஒப்புக் கொண்டன. இது VW ä Porsche நிறுவனத்தின் 49.9 பங்குகளை வாக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தும். அடுத்து, கட்டார் எமிரேட் VW உடைய கூட்டு உரிமையாளராக வரும். மூன்றாவது நடவடிக்கையின்படி, Porsche மற்றும் Piech குடும்பங்கள் Porsche Automobile Holding என்னும் அமைப்பிற்கு மூலதனத்தை அதிகரிக்கும். அது பின்னர் 2011ல் VW உடன் இணைக்கப்படும்.

ஒன்றுவிட்ட சகோதரர்களான Ferdinand Piech, Wolfgang Porsche இருவருக்கும் இடையே நடக்கும் பூசல்கள் ஒருபுறம் இருந்தாலும், இருவருமே VW கண்காணிப்புக் குழுவில் இயக்கக்குழுவில் இடம் பெறுவர். Oliver Porsche மற்றும் Michel Piëch இருவரும் சமீபத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட Porsche உடைய இயக்குனர் Wendelin Wideking, அவருடைய நிதித்துறை தலைவர் Holger Harter ஆகியோருடைய இடத்தை பெறுவர். ஜேர்மனிய கூட்டாட்சி மாநிலமான Niedersachsen (20 சதவிகிதத்திற்கு சற்று அதிகமானபங்கு), மற்றும் கட்டார் (20க்கு சற்று குறைவான சதவிகிதம்) இவற்றுடன் Porsche/Piech குடும்பங்கள் VW இன் சந்தைப் பங்குகளில் 30க்கும் மேல் கொண்டு நிர்வாகத்தின் மிகப் பெரிய ஒற்றை பங்குதாரராக இருக்கும்.

உலகின் மிகப் பெரிய தொழில்துறை பெருநிறுவனங்களில் ஒன்று, கிட்டத்தட்ட 370,000 தொழிலாளர்களை உலகம் முழுவதும் கொண்டது, இதன் விளைவாக ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு உட்படும். இதன் வேர்கள் நாஜி ஆட்சி சகாப்தத்திற்கு செல்லுகின்றன. இந் நிறுவனம் அரசாங்க அமைப்புக்களின் கருத்திற்கு ஏற்ப IG Metall தொழிற்சங்கத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடனும் பெருநிறுவன கொள்கைகளை கடுமையாக செயல்படுத்தும்.

Porsche இன் கையேற்றுக்கொள்ளும் திட்டங்கள் நிறைவேறவில்லை என்றாலும், Stuttgart நகர விளையாட்டுக் கார் உற்பத்தியாளரை திவாலுக்கு கிட்டத்தட்ட கொண்டுவந்தாலும், Porsche/Piech குடும்பம் இப்பொழுது அதன் நோக்கங்களை சுற்றிவளைத்து தொடர முற்படுகிறது.

Porsche ன் முன்னாள் இயக்குனரான Wiedeking 2005ல் பாரிய VW நிறுவனத்தை எடுத்துக் கொள்ளும் முயற்சியை தொடக்கினார். 2008 இறுதியில் VW வெளியிட்ட பொது பங்குகள் அனைத்திலும் 42 சதவிகித்தை Porsche கொண்டிருந்தது. Wideking ம் அவருடைய நிதிய மேலாளர் Holger Harter ம் பங்குச் சந்தையில் இருந்த மிகவும் அபாயமான விற்பனையாளர்கள் மூலம் இப்பங்குகளை வாங்க பணத்தை சூதாடியிருந்தனர். உண்மையில் Porsche கார்கள் உற்பத்தி செய்யப்படுவது இரண்டாம் முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருந்தது. விரைவான இலாபங்களுக்கான இடைவிடா உந்ததுல், தனிப்பட்டமுறையில் செல்வக் கொழிப்பு பெற வேண்டும் என்பது அவர்களுடைய வணிகக் கொள்கைகளின் உந்துசக்தியாக இருந்தன.

தொடர்புடைய அனைவரும் நடைபெற்ற செயல் பற்றி மகிழ்ச்சி அடைந்து அதில் கிடைக்கும் இலாபத்தை எதிர்நோக்கினர். Wideking ஆண்டு ஒன்றிற்கு 80 மில்லியன் யூரோக்கள் ஊதியமாக வீட்டிற்கு எடுத்துச்சென்றார். Härter சற்றே குறைவாக எடுத்துச் சென்றார். Wideking இற்கு அடிபணிந்து நிற்பவர் என்று அறியப்பட்ட IG Metall தொழிற்சாலை தொழிற்சங்கத்தலைவர், இந்த கையேற்கும் திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில், "ஒரு வெளிநாட்டு பெருநிறுவன சூறையாடுபவர் என்பதை விட Porsche நல்லதுதான்" என்று வாதிட்டார். தானும் ஏணியின் உச்சியில் இதையொட்டி செல்ல முடியும் என்று நம்பினார். நிறுவனத்தின் சொந்தக்காரர்களான Wolfgang Porsche, Ferdinand Piech இருவரும் அந்த நேரத்தில் தங்கள் நிறுவன நலன்கள் உயரும் என நினைத்து இந்த முயற்சியில் ஒத்துழைத்தனர்.

பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, Porsche/Piech குடும்பம் எந்த தடுப்பையும் காட்ட மறுத்து, வேண்டுமேன்றே பல்லாயிரக்கணக்கான வேலைகளை ஆபத்திற்கு உட்படுத்தியது. அவர்களுடைய நோக்கம் VW பங்குகளில் 75 சதவிகிதத்தை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதாகும். அதையொட்டி "கட்டுப்பாடு மற்றும் இலாப மாற்ற உடன்பாட்டை" பதிவு செய்யும் உரிமை பெறலாம் என நினைத்தனர். இதற்காக 6 பில்லியன் கூடுதலாக கடனை Porsche வாங்க வேண்டியிருந்தது; அப்பொழுதுதான் அது VW பங்குகளில் இன்னும் 8.2 சதவிகிதம் வாங்க முடியும்.

அதுதான் முடிவின் தொடக்கமாயிற்று. பல வங்கிகள் பெருகிய முறையில் Porsche ன் எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் நம்பிக்கை இழந்தன. தங்கள் பணம் போய்விடுமோ என்ற பயத்தில் அவை கடன் அதிகம் கொடுப்பதற்கான நிபந்தனைகளை கடுமையாக்கி, குறுகிய காலத்தில் கடன் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. இப்பொழுது அவை VW பங்குகள் தம்மிடம் பிணைவைக்கப்படவேண்டும் என்றுகோருவதுடன் Piech, Porsche குடும்பனங்களின் தனி சொத்துக்களில் இருந்து பாதுகாப்பு மூலதனம் தேவை என்றும் கோருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், Porsche/Pieche குடும்பங்களுக்குள் பூசல்கள் தீவிரமாயின; கண்காணிப்புக் குழுவின் தலைவரான Ferdinand Piech இறுதியில் உயரிடத்திற்கு வந்தார். இதனால் இறுதியில் இணைப்பு சாதகமானது. Porsche ஐ மீட்பதற்கு VW மூலதனம் வேண்டும் என்றும் அதை VW அமைப்புக்களுடன் இணைத்துவிட வேண்டும் என்றும் கருதினார். Wendelin Wideking பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய நிதி தந்திரக்காரர் ஹார்ட்டரும் நீக்கப்பட்டார். அவர்கள் நாடக பாணியில் பிரிவுபசாரம் பெற்றதுடன், 50 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஒரு தங்கக் கைகுலுக்கலும் கொடுக்கப்பட்டது.

சமீபத்திய தகவல்கள்படி, Porsche இன் நிதிய இடர்பாடு முடிவடையாமல் இருந்ததுடன் VW நிறுவனம் முழுவதையும் நிதிய சகதியில் இழுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Porsche இன் மரபுவழி

Porsche, Piëch குடும்ப மரபு அதன் புகழ், செல்வாக்கு ஆகியவற்றிற்கு அதன் நிறுவனரான Ferdinand Porscheஇன் கண்டுபிடிப்புக்களுக்கு கடமைப்பட்டது ஆகும். நன்கு அறியப்பட்ட பந்தயக்காரான Porsche தயாரிக்கப்படுவதற்கு முன்பே, முதல் உலகப் போர்க் காலத்தில் Ferdinand Porsche விமான இயந்திரங்களையும் வெடிமருந்து பீரங்கிகளையும் கண்டுபிடித்திருந்தார். பின்னர் அவர் நாட்டில் சாதாரணமாக ஓடக்கூடிய வாகனத்தை நாஜிக்களின் ஆயுதத் தொழில்துறைக்காக வளர்த்தார். 1935 ஐ ஒட்டி ஹிட்லர் "Porsche என்னும் சிறந்த பொறியியல் வல்லுனரின் திறைமைகளை" பயன்படுத்தினார். அவரை "குறிப்பிட்ட சிறிய காரை" வடிவமைக்குமாறும் கூறினார். போர் சூழலை ஒட்டி, ஒரு சில Vokswagen Beatle மாதிரிகள்தான் தயாரிக்கப்பட்டன.

ஆனால் பின்னர் வொல்வ்ஸ்பேர்க் நகரில் இருந்த பாரிய Volkswagen தொழிற்சாலைகள் அவற்றைத் தொடர்ந்து நிறுவப்பட்டன. நாஜிக்கள் தொழிற்சாலைகளுக்கான ஆரம்ப மூலதனமான 20 மில்லியன் Reichsmaks ஐ 1933ல் நசுக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து பெற்றனர்.

1928TM Ferdinand Porsche இன் மகள் நாஜிக்காலத்தில் வொல்வ்ஸ்பேர்க் Volkswagen பணியிடத்தில் மேலாளராக இருந்த வியன்னா வக்கீல் Anton Piëch (இன்றைய Ferdinand Piëch இன் தந்தை) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1990களின் நடுப்பகுதியில் தொடங்கிய Porsche பந்தய கார்த்தயாரிப்பு நிறுவனத்தின் பிந்தைய "வெற்றி", பொதுவாக Porsche இன் இயக்குனர் Wendelin Wiedeking க்கு உரியாதாக கூறப்படுகிறது. Wiedeking 1993ல் நிர்வாகக் குழுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது, பந்தய கார்த் தயாரிப்பு நிறுவனம் கடுமையான நெருக்கடியில் இருந்தது. தொழிற்சாலை தொழிற்சங்ககுழுவுடன் இணைந்து செயல்பட்டு, Wiedeking இரக்கமற்ற முறையில் வேலையழிப்பு திட்டத்தை செயல்படுத்தி, 3000 வேலைகளை தகர்த்து "சரியான நேரத்தில்"("just-in-time") என்னும் உற்பத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

புதிய. எழிலான மாதிரிகள் அவருடைய நிர்வாகத்தீன்கீழ் வளர்க்கப்பட்டன. இவை மிக சிறப்பாக குறிப்பாக அமெரிக்காவில் விற்பனையாயின. அங்கு அந்த நேரத்தில் பணத்தை நிதிய ஊக முறையில் முக்கியமாக திரட்டிய பல புதிய பணக்கார அடுக்கு ஏற்பட்டிருந்தது. தங்கள் பணத்தை என்ன செய்வதென்று தெரியாத முறையில் அவர்களில் பலரும் ஆடம்பரப் பொருட்களான Porsche விளையாட்டு கார் போன்றவைற்றை தங்கள் சில்லரை ரொக்கத்தில் இருந்து வாங்கினர். இதற்கிடையில் மில்லியன் கணக்கான மக்கள் குறைவூதியம், வறுமை ஆகியவற்றிற்கு தள்ளப்பட்டனர்.

அப்பொழுது முதல் Porsche உடைய Wiedeking ஜேர்மனியின் உயர்ந்த மேலாளாராக கருதப்பட்டார். எந்தவித உறுத்தலும் இன்றி அவர் செய்லபடும் முறையும் பல மில்லியன்கள் ஊதியம் வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையும் வணிக உலகிலும் அரசியல் வட்டங்களிலும் மிகவும் புகழப்பட்ட திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் முன்னுதாரணம் என மதிக்கப்பட்டன. 15 வயதில் 30 வயதிற்குள் இலட்சாதிபதியாக வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்று கூறிய Wiedeking, Porsche உடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்; அதன் படி அவர் தனக்கு நிர்வாகத்தின் இலாபங்களில் 0.9 சதவிகிதம் கட்டாயம் உண்டு என்று உறுதிபடுத்திக் கொண்டார். இவ்விதத்தில் அவர் ஜேர்மனியின் மிக அதிக ஊதியம் பெற்ற மேலாளர் ஆனார். 1994ல் "ஆண்டின் மேலாளர்" என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்; 2008ல் "ஆண்டின் ஐரோப்பிய மேலாளர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Wiedeking நான்கு ஆண்டுகளுக்கு முன்பு Porsche இற்காக VW ஐ எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டவுடன், அவர் ஐரோப்பிய ஒன்றியம் "VW சட்டம்" என்று கூறப்படுவதை தகர்த்துவிடும் என்று ஊகித்தார். ஆனால் அது இன்னும் நடைபெறவில்லை. 1960ல் இயற்றப்பட்ட VW சட்டத்தின்படி, சிறுபான்மைக் குழு உரிமைகள் இருந்தபோதிலும் இந்த மாநிலம் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி கட்டுப்படுத்தும் செல்வாக்கை கொண்டிருக்கும். (Niedersachsen மாநிலம் VW உடைய பங்குகளின் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது). எந்த பங்குதாரரும் வாக்குப் போடும் உரிமையில் 20 சதவிகிதத்திற்கும் மேல் கொள்ளக்கூடாது. இதன் விளைவாக ஆபத்துக்குரிய கையேற்றல்கள் மற்றும் சிறுபான்மை பங்குதாரரைத் தடுப்பது ஆகியவை தவிர்க்கப்பட முடியும். ஆனால் மற்றொரு விளைவு Niedersachsen உடைய தடுப்பதிகாரம் Porsche 75 சதவிகித பங்குகளை அடையும் முயற்சியை தடுத்துவிட முடியும்: இதனால் VW இன் இலாபங்கள் மூலதனம் ஆகியவற்றை நேரடியாக அடைதலும் இயலாது.

IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்களின் பங்கு

Stuttgart ல் இருக்கும் Porsche தொழிற்சாலை தொழிற்சங்ககுழுக்கள் மற்றும் வொல்ப்ஸ்பேர்க்கில் இருக்கும் VW தொழிற்சாலை தொழிற்சங்ககுழுக்களும் "தங்கள்" நிறுவனங்கள் நிபந்தனையற்ற முறையில் கையேற்றுக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதற்கு ஆதரவைக் கொடுத்தன.

ஒரு புறத்தில், Porsche இற்கு எதிராக ஒரு கூட்டு உள்ளது. இதில் Niedersachsen மாநில அரசாங்கம், VW தொழிற்சாலை தொழிற்சங்ககுழு மற்றும் VV கண்காணிப்புக் குழுவின் தலைவர் Ferdinand Piëch பீஷ் ஆகியோர் உள்ளனர். மத்திய அரசின் பெரும் பிரிவும் VW க்கு ஆதரவு கொடுக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் வொல்ப்ஸ்பேர்க்கில் அதிபர் அங்கேலா மேர்க்கெலுக்கு (CDU) அரங்கு அமைத்தது IG Metall, SPD இரண்டிலும் உறுப்பினராக இருக்கும் Bernd Osterloh வால் என்பது நினைவில் கொள்ளத்தக்கது ஆகும். இது CDU அதிபருக்கும் Niedersachsen பிரதம மந்திரி வொல்பிற்கும் (CDU), "VW தான் ஜேர்மனி" என்று பறையறிவிக்கும் அரங்கை கொடுத்தது.

ஒரு வலுவான தேசியவாத குரலில் அவர்கள் மத்திய அரசாங்கம், VW நிறுவனம் மற்றும் VW தொழிலாளர்கள் அனைவரும் ஒரே நலன்களைப் பகிர்ந்து கொள்ளுவதான தோற்றத்தை கொடுத்தனர். Osterloh தெற்கில் இருந்தும் பிரஸ்ஸல்ஸில் இருந்தும் வரும் சூறையாடுபவர்களுக்கு எதிரான சாடி, கூட்டாட்சி அரசாங்கத்தை புகழ்ந்தார். அது தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார். உண்மையில் மேர்க்கெல், வுல்ப் மற்றும் பீஷ் ஆகியோர் Volskswagen, VW சட்டம் ஆகியவற்றிற்கு வாதிட்டனர். இதற்குக் காரணம் அவர்கள் தேசிய, பிராந்திய பொருளாதாரங்கள் (அதாவது வணிக இலாபங்கள்) ஆபத்தில் இருப்பதாகக் கருதியதுதான்.

இத்தகைய பொருளாதார தேசிவாதம் ஒரு நாட்டின் அல்லது ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர் பிரிவை பிறருக்கு எதிராக ஏவுவதைத்தான் செய்யும். இது தொழிலாளர்களை பிரிக்க முற்படுவதுடன், அவர்கள் நலன்களை "அவர்கள்" நிர்வாகத்தின் நலன்களுக்கு அடிபணியவைக்கும் நோக்கத்தையும் கொண்டது.

பதுங்குகுழியின் மறுபுறத்தில், தொழிற்சாலை தொழிற்சங்க குழுத்தலைவரும் Porsche கண்காணிப்புக் குழுவின் உபதலைவருமான Uwe Hück, Wiedeking இற்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் VW சட்டத்தை அகற்ற வலுவாக வாதிடுகிறார். IG Metall தொழிற்சங்கத்தில் ஒரு முக்கிய புள்ளியும், SPD உறுப்பினருமான Hück, பாடன் வூர்ட்டன் பேர்க்கின் பிரதம மந்திரி Günther Oettinger (CDU) அவருக்கு துணையாக உள்ளார் என்பதை அறிவார். Porscheஇன் ஜேர்மனிய வணிக இடத்தை காக்க முற்படுகையிலும் மற்றும் VW மீது வாயளவிலான தாக்குதலை நடத்துகையிலும் தொழிலாளர்களின் நலன்களை வளர்ப்பதில் Osterlohவை விட Hück ஒன்றும் அக்கறை கொண்டுவிடவில்லை. மாறாக தொழிற்சாலை தொழிற்சங்ககுழுவில் இருக்கும் பெரும் புள்ளிகளுக்கு நிறைய ஊதியம் உள்ள வேலை வேண்டும் என்று செயல்படுகிறார். நிர்வாகத்தின் முடிவெடுக்கும் கூட்டங்களில் பங்கு பெறும்போது, VW, Porsche இன் தொழிற்சாலை தொழிற்சங்ககுழுக்களில், சக மேலாளர்கள் பணியை செய்வது மட்டும் இல்லாமல், மேலாளரின் ஊதியத்தையும் பெறுகின்றனர். நிர்வாகத்தின் Caynne விளையாட்டு காரையும் 355 குதிரை சக்தி உடைய Porsche சிறப்பு மாதிரியையும் Hück வைத்திருக்கிறார். VW ஐ வெற்றிகரமாக Porsche எடுத்துக் கொண்டால், Hück ஜேர்மனியில் பெரும் சக்தி வாய்ந்த தொழிற்சாலை தொழிற்சங்ககுழுத் தலைவராக வந்திருப்பார் என்பது உறுதி.

கையேற்றுக்கொள்ளும் முடிவு வந்தவுடன், VW நிர்வாகம் ஐரோப்பாவின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பாளராக வந்துவிட்டபின், இப்பொழுது அது உலகிலேயே மிகப் பெரிய நிறுவனமாகும் நோக்கத்தை வெளிக்காட்டியதுடன், உலகச் சந்தையின் தலைமையான டோயோடாவையும் கடக்கும் விருப்பத்தைக் காட்டியுள்ளது.

VW Porsche எடுத்துக் கொள்ளுவதின் IG Metall தொழிற்சங்கத்தின் ஆரம்ப பிரதிபலிப்பு நிறுவனத்தின் மூலதனத்தில் 10 சதவிகிதப் பங்கை கோருவதாக உள்ளது. IG Metall உடைய தலைவர் Berthold Huber இரு கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் இணைப்பை வரவேற்றுக் கூறினார்: "வரவிருக்கும் வழிவகைகளில் நாங்கள் ஆக்கப்பூர்வ பங்கைக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்." ஓப்பலில் தொழிற்சங்கத்தின் தொடர்பை போலவே, IG Metall நிறுவனத்தின் மூலதன நலன்களில் நேரடிப் பங்கை IG Metall ன் செயலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிற்சங்ககுழு உறுப்பினர்கள் அடைய விரும்புகிறது. Huber கூறுவது: "முடிவு எடுப்பதில் உள்ள எங்கள் பங்கை நாங்கள் விரிவாக்கினாலும், நிர்வாகத்தின் பங்குகளைப் பெறுவதில் தொழிலாளர்களுக்காகவும் நாங்கள் பாடுபடுவோம்." தொழிலாளர்பிரிவும் புதிய நிறுவனத் தொகுப்பில் "கணிசமான பங்கை" கொள்ள வேணடும் என்று அவர் கூறினார்.

"சக தொழிலாளர் நிதியம் கொள்ளும் பங்கு" என்ற சொற்றடரை VV, Porsche தொழிலாளர்கள் கேட்கையில் எச்சரிக்கை மணிதான் ஒலிக்கும். IG Metall ம் தொழிற்சாலை தொழிற்சங்ககுழு பிரதிநிதிகளும் ஓப்பலை Magna நிறுவனம் வெற்றிகரமான ஏலத்தை எடுப்பதற்கு உரத்து குரல் கொடுக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இந்த முதலீட்டாளரிடம் இருந்து தொழிலாளர் மூலதனப்பங்காக ஒரு பில்லியன் யூரோ இருக்க வேண்டும் என்று உடன்பாடு செய்துள்ளனர். ஆனால் இதையொட்டி 10,000 வேலை இழப்புக்கள் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். மிகச் சிறிய விவரங்கள் வரை இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. தொழிலாளர்களின் முதுகிற்கு பின்னே இது நடக்கிறது. விடுப்பு ஊதியம், கிறிஸ்துமஸ் மேலதிக கொடுப்பனவு ஆகியவற்றை மட்டும் குறைப்பதின் மூலம் எப்படி தேவையான மூலதன முதலீடு பெறப்பட்டு, பின்னர் எப்படி அவை IG Metall செயலர்களால் பிரத்தியேகமாக "நிர்வாகம்" செய்யப்பட முடியும்.

VW, Porsche இணைப்பு கார்த் தயாரிப்புத் தொழில்துறையில் வணிக ஏகபோக உரிமைகள் ஏற்படும் புதிய அலைக்கு பாதையை திறக்கின்றன. இவை தொழிலாளர்கள் பிரிவின் மீது மிருகத்தனமான தாக்குதலை காட்டும். ஏற்கனவே VW அதன் அரசாங்க செல்வாக்கை பயன்படுத்தி அதன் போட்டி நிறுவனமான ஓப்பலை திவாலுக்குத் தள்ளியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் செப்டம்பர் மத்திய தேர்தல் முடியும் வரை இவை வெளிவராது. இது ஒரு தொல்லை கொடுக்கும் போட்டி நிறுவனத்தை அகற்றும், பின்னர் VW சந்தையில் அதன் பங்கை எடுத்துக் கொள்ள முடியும்.

வொல்ப்ஸ்பேர்க்கில் உள்ள தொழிற்சாலை தொழிற்சங்ககுழு ஏற்கனவே அரசாங்கத்தின் மேலதிக கொடுப்பனவு திட்டம் (பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதை வாங்குவோருக்கு அரசாங்கம் 2500 வழங்கும் திட்டம்) முடிவடைந்த பின், எதிர்பார்க்கப்படும் விற்பனை பற்றாக்குறைவை மிகக் குறைந்ததாக இருக்க அனைத்தையும் செய்யவேண்டும் என்றும் அறிவித்துள்ளன.