World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British Army chief says military may have 40-year Afghan role

ஆப்கானிஸ்தானத்தில் 40 ஆண்டுகள் இராணுவம் பங்கு கொள்ளும் என்று பிரிட்டிஷ் இராணுவத் தலைவர் கூறுகிறார்

By Harvey Thompson
14 August 2009

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய தலைவரான தளபதி சேர் டேவிட் ரிச்சார்ட்ஸ் பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் இன்னும் 40 ஆண்டு காலம் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 28 அன்று இராணுவத்தின் உயர்தலைமை என்ற முறையில் ஆப்கான் கட்டுப்பாட்டு பொறுப்பை எடுத்துக் கொள்ளும் ரிச்சார்ட்ஸ் டைம்ஸிடம் "இங்கிலாந்து அபிவிருத்தி, ஆட்சி, பாதுகாப்புப் பிரிவு சீர்திருத்தம் என ஏதேனும் ஒருவிதத்தில் அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானத்தில் இராணுவத்தை தொடர்ந்து நிறுத்தும் என நம்புகிறேன்." என்றார்.

சமீபத்திய வாரங்களில் மிக அதிகமான துருப்புக்கள் உயிரிழந்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது, பிரிட்டிஷ் நடவடிக்கைகள் "கடினமானவை என்பது உறுதிதான் ஆனால் வெற்றி பெற்றுவிடும்" என்று ரிச்சார்ட்ஸ் கூறினார்.

"முடிவை வரையறுத்துக் கூறுவது கடினம்; சில முன்னாள் நாடுகளுக்கு இடையேயான போர்களில் இருந்தது போல் சுத்தமானதாக, தெளிவானதாக இருக்காது. ஆப்கானிஸ்தானை ஒரு சுவிட்சர்லாந்து போல் மாற்ற முயலவில்லை என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் துருப்புகள் பங்கு பெறுதல் என்பது "ஒரு இடைப்பட்ட காலத்திற்குத்தான்" தேவைப்படும், இராணுவத்தின் பங்கு "வளர்ச்சி அடையும்" என்று ரிச்சார்ட்ஸ் கூறினார். அதன் பின் மத்திய பணியாக ஆப்கானிய தேசிய இராணுவம், போலீஸ் ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கு மாறும் என்றார். ஆனால் பிரிட்டனின் நீண்டகால ஏகாதிபத்திய நலன்களில் ஆப்கானிஸ்தானில் மூலோபாய முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தியபோது அவர் தன் சொற்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்துக் கூறினார்: "ஈராக்கை போன்றே, இங்கும் இராணுவம் வெளியேற வேண்டியதுதான், ஆனால் ஆப்கானிய மக்களும் எமது எதிரிகளும் இதன் பொருள் நாம் இப்பகுதியைக் கைவிடுகிறோம் என எடுத்துக் கொள்ளக் கூடாது."

எதிர்காலம் பற்றி ரிச்சர்ட்ஸின் கணிப்பு பல மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கருத்தை பிரதிபலிக்கிறது; அவர்கள் கடந்த மாதங்களில் ஆப்கானிஸ்தானத்தில் இங்கிலாந்தின் இராணுவ நிலைப்பாடு பல தசாப்தங்கள் இருக்கும் என்று குறிப்பு காட்டியுள்ளனர். இதில் அமெரிக்காவில் பிரிட்டிஷ் தூதராக இருக்கும் சேர் நைஜல் ஷன்வால்ட், முன்னாள் பாதுகாப்பு மந்திரி டெஸ் பிறவுண் ஆகியோர் அடங்குவர்.

தளபதி சேர் ரிச்சார்ட் டான்னட்டிம் இருந்து தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொள்ளும் ரிச்சார்ட்ஸ், கிழக்கு திமோரில் 1999ம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளுக்கு தலைவராக இருந்தார். 2000ம் ஆண்டில் சீரா லியோனிலும் மற்றும் வடக்கு அயர்லாந்து ஜேர்மனி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். மே 2006 க்கும் பெப்ருவரி 2007க்கும் இடையே அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைக்கு (ISAF) தலைமை தாங்கினார். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அவர்தான் முதன் முதலாக அமெரிக்கரல்லாத அமெரிக்க படைகளுக்கு தலைவராக இருந்தவர் ஆவார்.

கடந்த அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு ரிச்சார்ட்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட போது, ஆப்கானிய உறவுடன் இதன் முக்கியத்துவம் பற்றி WSWS கவனத்தை ஈர்த்திருந்தது.

"பிரிட்டிஷ் இராணுவத்திற்கு ரிச்சார்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அரசியல் மற்றும் இராணுவ உயரடுக்கு வாஷிங்டன்/லண்டன் 'ஆப்கான் ஒருமித்த உணர்வு" என்று அழைக்கப்படும் கருத்தை, அதாவது ஆப்கானிஸ்தானில் மிக அதிகளவு இராணுவ நிலைப்பாடு கொண்டு அனைத்து எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்குவதன் மூலம்தான் அமெரிக்கத் தலைமையில் அங்கு இருக்கும் ஆக்கிரமிப்பை காப்பாற்ற முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது''. என அப்போது நாம் எழுதினோம்.

"ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் "அதிகப்படுத்தப்படவேண்டும்" என்று அதிகமாக பேசிவரும் ரிச்சார்ட்ஸ், இப்பொழுது 30,000 துருப்புக்கள் அதிகம் வேண்டும் என்று கேட்டுள்ளார்." (பார்க்க: "Advocate of Afghan ‘troop surge' selected as head of British Army").

இதன் பின் பல ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ், அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் ஆக்கிரமிப்பு தொடர்புடைய வன்முறை அதிகரித்துள்ளதுடன் ஆப்கானிய பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு படையினரின் இறப்பு விகித எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி ஹெல்மாந்து மாகாணத்தில் லஷ்கார் காவிற்கு வடக்கே இன்னும் மூன்று பிரிட்டிஷ் இராணுவத்தினர் கொல்லப்பட்ட செய்த வந்த நேரத்தில்தான் ரிச்சார்ட்ஸின் கருத்துக்களும் வெளிவந்தன.

ஆகஸ்ட் 8ம் தேதி மற்றொரு இங்கிலாந்து படையினர் ஹெல்மாந்து மாநிலத்தில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை தொடர்ந்து இறந்து போனார்.

பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு ஜூலை மிக அதிக இறப்பு எண்ணிக்கை இருந்த மாதமாக இருந்தது. Operation Panther's Claw ன் முதல் கட்டத்தில் 22 இராணுவத்தினரில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் ஒரு ஐந்து இங்கிலாந்து படையினர் இந்த மாதம் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர். இக்கட்டுரை எழுதும் நேரத்தில் 2001 ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பில் இருந்து பிரிட்டிஷ் துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 196 ஆக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் சமீபத்திய மோதல்களில் வெளிநாட்டு துருப்புக்களிடையே போர் இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜூலை 21ம் தேதி கார்டியன் செய்தித்தாள் கருத்தின்படி, "கடந்த வாரம் இராணுவ மருத்துவர்கள் கொடுத்த தகவல்படி ஹெல்மாந்து மாநிலத்தின் காம்ப் பாஸ்டியன் கள மருத்துவனையில் 157 படையினர்களுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றனர். எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் தங்கள் விதிகளை தளர்த்தி மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட வரம்பை விடக் கூடுதலான படையினருக்கு சிகிச்சை அளித்தனர்."

BBC Radio 4's ன் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு மருத்துவர் கூறினார்: "கடந்த சில வாரங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தன. நீங்கள் பார்த்திருக்க முடியாத, அனுபவித்திருக்க முடியாத வகையில் பல காயங்கள் இருந்தன." சாலையோர வெடிகுண்டு வெடிப்புக்களால் ஏற்பட்ட காயங்களை பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்து இராணுவத்தின் 51 படையினர் மார்ச் 31 அன்று ஆப்கானிஸ்தானில் பெற்ற காயத்தை அடுத்து உறுப்புக்களை அறுவை சிகிச்சை மூலம் இழந்தனர் என்று பாதுகாப்பு அமைச்சரகம் (MoD) கூறியுள்ளது. பாதுகாப்பு அமைச்சரகம் கொடுத்துள்ள சமீபத்திய எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து, சமீபத்திய இறப்பு எண்ணிக்கையைவிட மிக முக்கியமான முறையில் அதிகரிப்பை காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் களத்தில் உள்ள மருத்துவமனைகளில் மே மாத 24, ஏப்ரல் மாதம் 11 ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் 46 படையினர் அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சரகத்தின் எண்ணிக்கையில் பிரிட்டிஷ் படையினர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் மற்றும் தன்மை பற்றி விரிவாகக் கூறவில்லை. ஆனால் 13 பேர் கடந்த மாதம், "மிகத் தீவிரமாக" அல்லது "தீவிரமான காயம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது; இதில் உயிருக்கு ஆபத்து தரும் காயங்களும் உறுப்புக்களை அகற்றும் நிலையும் இருந்தன. ஹெல்மாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் படையினரின் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டதில் இருந்து 200க்கும் மேற்பட்ட படையினர் அத்தகைய காயங்களை அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகளின் முன்னாள் தலைவராக இருந்த கேர்னல் ரிச்சார்ட் கெம்ப் Sunday Mirror இடம் "ஆப்கானிஸ்தானில் செயல்படும் பிரிட்டிஷ் துருப்புகள் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது அதிக அளவில் மிக உயர்ந்த விகிதத்தில் காயமுற்றிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது." என கூறினார்.

காம்ப் பாஸ்டியனில் மருத்துவமனை பாதுகாப்பிற்கு மருத்துவசதி இயக்குனர் என்ற முறையில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு இப்பொழுதுதான் திரும்பியுள்ள கேர்னல் பீட்டர் மஹோனியை மேற்கோளிட்ட Sky News, ஜூலை 30 அன்று பின்வருமாறு எழுதியது: "மிகவும் அதிக வேலை இருந்தது, அதில் சந்தேகமே இல்லை. சில நாட்கள் அறுவைச் சிகிச்சை குழுக்கள் இடைவிடாமல் பணியாற்ற வேண்டியிருந்தது.... காயமுற்ற இளைஞர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது பெரும் அழுத்தத்தை கொடுக்கிறது, குறிப்பாக உங்களுக்கு சொந்தமானது என நீங்கள் கருதுவதை துண்டிக்கிறீர்கள் என்றால், பெரும் உணர்ச்சியை தூண்டிவிடுவது" என்று அவர் கூறியிருந்தார்.

செய்தி நிறுவனம் மேலும் கூறியது: "இம்மாதம் ஒரு வாரத்தில் மட்டும் 157 காயமுற்ற மக்கள் காம்ப் பாஸ்டியன் கள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்; பிரிட்டிஷ், அமெரிக்க, எஸ்தோனியத் துருப்புக்கள் மற்றும் ஆப்கானிய இராணுவத்தினர்களும் சாதாரண குடிமக்களும், சில சமயம் எதிரிப்படையினரும் இருந்தனர்.

"மார்ச் 2006ல் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதில் இருந்து ஆப்கானிஸ்தானில் கள மருத்துவமனையில் 2,650 இங்கிலாந்து துருப்புக்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 230 பேர் ஆபத்துக்கிடம் அல்லது அதிக ஆபத்து காயங்களுடன் இருந்தனர். 2,280 பேர் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்."

சமீபத்திய மாதங்களில் பெரும்பலான இறப்புக்களும், தீவிர காயங்களும் சாலையோர வெடிகுண்டுகளின் விளைவு அல்லது புது முறையில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டு வகைகள் மூலமானதாகும். இப்பொழுது இவை பெருகிய முறையில் திறமையாக உருவாக்கப்பட்டும், பேராபத்தை கொடுப்பதாகவும் உள்ளன.

ஒரு வேல்ஸ் பாதுகாப்புப் படை அதிகாரி சமீபத்தில் கூறிய சொற்கள் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் துருப்புகளிடையே இறப்புக்கள், காயங்கள் ஆகியவை எப்படி உளரீதியான, தனிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை ஓரளவிற்குக் குறிக்கின்றன. Independent ல் எழுதிய கட்டுரையில் அந்த இராணுவத்தினர் வேல்ஸ் பாதுகாப்புப்படை முதல் பட்டாலியனை சேர்ந்த 7 பேர் அதன் தளபதி லெப்டினன்ட் கேர்னல் ரூபர்ட் தோர்மிலோ மற்றும் பிரிகண்டில் இருந்து, 22 வயதான கார்ப்போரல் டேன் எல்ஸன் இறந்தது பற்றி தான் கட்டாயமாக சிலவற்றை கூற விரும்புவதாக அவர் கூறினார்.

அவர் தெரிவித்தார்; "ஒவ்வொரு இறப்புடனும், நாங்கள் ஒவ்வொருவரும் முழு அதிர்ச்சி, சக்தியற்ற தன்மை, செயலற்ற தன்மை என்பவற்றை உணர்வதாக நினைக்கிறேன். குறிப்பாக பாதிக்கப்பட்ட மனிதரை நீங்கள் அறிந்திருந்தால் உங்கள் மனதிற்குள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

"தாயகத்தில் என்றால் ஒரு காரில் ஏறி ஒதுக்கமான இடத்திற்கு சென்று உரத்த குரலில் புலம்பி வேதனை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட முடியும். ஆனால் இங்கு அப்படி எதுவும் செய்யமுடியாது. நம் முகாமிற்குள்ளே அல்லது ரோந்துத் தளத்தில் மூடிய நிலையில் உள்ளோம், செல்வதற்கு இடமில்லை, துயரத்தை தீர்த்துக்கொள்வதற்கு தனியான இடம் ஒன்றும் இல்லை."

அவர் மேலும் கூறினார்: " 'தீவிர காயமுற்றவர்' ஒருவரைப் பற்றி படிக்கும்போது, அவருடைய வாழ்வு என்பது இனி இதேபோல் இருக்காது. அதுபோல்தான் அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கும். அவர்கள் பாதிப்பிற்கு பின்னர் பெரும் துயரத்தில் அமிழ்ந்துவிடுவர். உறுப்புக்கள் அகற்றப்படுவது, இரண்டு அல்லது மூன்று உறுப்புக்கள் கூட அகற்றப்படுவது போன்றவற்றை நாங்கள் முன்னர் பார்த்தது கிடையாது."

வெளிநாட்டுத் துருப்புக்கள் இறப்புக்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் தீவிர, உயிரிழப்புக்களுடன் ஆப்கானிய சாதாரண மக்களிடையேயான இறப்புகளும் தாக்கங்களும் பெரும்பாலும் சான்றுகளுக்கு உட்படாமல் போகின்றன அல்லது செய்தி ஊடகத்தால் சரியாகத் தகவல் கொடுக்கப்படுவதில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் 2009 ன் முதல் ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது.

பேராபத்தை விளைவிக்கும் அமெரிக்க/நேட்டோ வான் தாக்குதல்கள் மற்றும் பதிலடி கொடுக்கும் எழுச்சி நடவடிக்கைகளால் பொதுமக்களின் இறப்புக்களில் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஐ.நா. கொடுத்த எண்ணிக்கையில் இருந்து 24 சதவிகித உயர்வைக் கொடுத்துள்ளன.

பொதுமக்களின் இறப்புக்கள் இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 2008 உடன் ஒப்பிடுகையில் பெப்ருவரி மாதத்தை தவிர மற்ற காலங்களில் உயர்ந்துள்ளன. மிக மோசமான மாதமாக மே இருந்தது. அப்பொழுது 261 சாதாரண மக்கள் கொலையுண்டனர்.

BBC யின் டேவின் லோய்ன் காபூலில் இருந்து ஐ.நா. பதிவு செய்துள்ள அதிக உயர்வு கூட குறைமதிப்பாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார். ஏனெனில் பல இறப்புக்கள் எண்ணப்படுவதில்லை. ஐ.நா. பொதுமக்களின் இறப்புக்களை பதிவு செய்வது மூன்றாம் ஆண்டு ஆகும். எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்கிறது.

ஆகஸ்ட் 11ம் தேதி BBC சமீபத்திய ஆளில்லாத அமெரிக்க ட்ரோன் தாக்குதல் வடமேற்கு பாக்கிஸ்தானில் ஆப்கான் எல்லைக்கு அருகே உள்ள தெற்கு வஜிரிஸ்தான் பற்றி குறிப்பிட்டது. உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகள் "குறைந்தது 10 சந்தேகத்திற்குரிய போராளிகள்" இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று கூறியதாக அது மேற்கோளிட்டுள்ளது.

இத்தகைய டஜன் கணக்கான ட்ரோன் தாக்குதல்களின் இது சமீபத்தியதாகும். இவை பதிவேதும் அற்ற முறையில் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளன.

அமெரிக்க/நேட்டோ இராணுவ ஆக்கிரமிப்பு தூண்டிவிட்டுள்ள பெரும் நெருப்பென உள்ள மோதல்கள் தலைநகரத்திற்கு அருகே படர்ந்துள்ளன. ஆகஸ்ட் 10ம் தேதி, தேர்தல்கள் நடைபெறுவதற்கு 10 நாட்கள் முன்பு, தலிபான் போராளிகள் லோகர் மாநிலத்தின் தலைநகரான Pui-Alam த்தை தாக்கினர். இது காபூலில் இருந்து தெற்கே சில மைல்கள் தூரத்தில்தான் உள்ளது. ஆறு போராளிகள் ராக்கெட்டுக்களையும் எறிகுண்டுகளையும் போலீஸ் தலைமையகத்தின் மீதும் அரசாங்க அலுவலகங்கள் மீதும் எறிந்ததால் ஐந்து ஆப்கானிய போலீசார் கொல்லப்பட்டனர் 26 பேர் காயமுற்றனர்.

"இராணுவ ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேல் பரந்து எழுச்சியாளர்கள் மீது குண்டு வீசியபோது நகரத்தின் ஒரு பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று BBC அறிக்கை ஒன்று கூறுகிறது.