World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Official unemployment in Britain tops 2.4 million

உத்தியோகபூர்வ வேலையின்மை பிரிட்டனில் 2.4 மில்லியனை கடந்தது

By Julie Hyland
17 August 2009

Use this version to print | Send feedback

ஜூன் மாதம் இங்கிலாந்தில் வேலையின்மை 14 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு உயர்ந்ததுள்ளது; பொருளாதார வல்லுனர்கள் இது 3.5 மில்லியனையும் கடக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிரங்கள் 220,000 மக்கள் ஜூன் முடிந்த மூன்று மாத காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் இது உத்தியோகபூர்வ வேலையின்மையை 2.4 மில்லியனுக்கு, 7.8 சதவிகிதத்திற்கு உயர்த்தியுள்ளது என்றும் காட்டுகின்றன. இங்கிலாந்து முழுவதிலும் அனைத்து பிரிவிலும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

ONS (Office for National Statistics-) எனப்படும் தேசியப் புள்ளிவிவரங்கள் அலுவலகத்தில் இருந்து வெளிவந்த தகவல்கள் 25 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் வேலை இழப்புக்களில் மிகக் கடின பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் என்றும், கடந்த ஆண்டு 18ல் இருந்து 24 வயது வரை வேலையற்று இருந்தவர்கள் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் என்றும் கூறுகின்றன.

16 வயதில் இருந்து 24 வயதினரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி உள்ளனர்; இது ஜூன் முடிந்த மூன்று மாத காலத்தின் 6 சதவிகித உயர்வை 928,000 என்று கொண்டுவந்துள்ளது. இவர்களுள் 722,000 பேர் 18ல் இருந்து 24 வயது வரை உள்ளவர்கள், மிச்சமுள்ள 206,000 16ல் இருந்து 17 வயதிற்குள் இருப்பவர்களாவர்.

கடந்த இரு மாதங்களில் 18ல் இருந்து 24 வயது வரையில் வேலையற்றுள்ளவர் நிதியை பெறுபவர்களின் எண்ணிக்கை 75 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரம் குறிப்படித்தக்கது; ஏனெனில் நலன்களைப் பெற விரும்புவர்கள் மகத்தான தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.

16 வயது முதல் 18 வரை இருப்பவர்களுடைய நிலைமை --பெரும்பாலானவர்கள் அரச நிதியத்திற்கு உரிமை அற்றவர்கள்-- இன்னும் மோசமாகும். அவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் உத்தியோகபூர்வமாக வேலையில்லாதவர்கள் என்று பதிவாகியுள்ளனர்.

கார்டியனில் எழுதிய பொருளாதார வல்லுனர் David Blanchflower, "ஓராண்டிற்கு முன்பு 16 ல் இருந்து 24 வயதிற்குள் இருந்தவர்கள் மொத்த வேலையின்மையில் 14 சதவிகிதமாக இருந்தனர்; அப்போதில் இருந்து 10 வேலைகளில் ஐந்துக்கும் மேல் இழக்கப்பட்டவை இந்த வயது வரம்பில் இருப்பவர்களால் நேரிடுகிறது."

3.5 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் இருப்பது "முற்றிலும் இயல்பாகிவிடும்" என்று அவர் கூறினார், "பல மாதங்களுக்கு வேலையின்மையில் பெருக்கம் இருக்கும்" என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் வேலையின்மை பட்டியலில் தள்ளப்படுகின்றனர். மிகப் பெரிய இழப்புக்கள் முன்பு உற்பத்தித் தொழிலை நம்பியிருந்த பிராந்தியங்களில் பதிவாகியுள்ளன.

West Midlands பகுதியில் வேலையற்றவர்கள் எண்ணிக்கை 39,000 அதிகரித்து 285,000 (10.6 சதவிகிதம்) என்று ஆயிற்று; Scotland இல் 31,000 பெருகி 188,000 (7 சதவிகிதம்); Yorkshire மற்றும் Humber பகுதியில் 24,000 உயர்ந்து 233,000 (8.8 சதவிகிதம்). தென்கிழக்கில் இது 26,000 அதிகரித்து 263,000 என்று (5.9 சதவிகிதமாக) ஆயிற்று. தலைநகர் லண்டனில் வேலையின்மை 27,000 அதிகரித்து 359,000 (8.9சதவிகிதம்) ஆகியுள்ளது.

ONS அறிவித்த இக்காலக்கட்ட வேலை இழப்புகளுள் 2,380க்கு மேல் Lloyds Banking Group இலும், Steelmaker Corus இல் 2,045, அமெரிக்க கணினித் தயாரிப்பாளர் Hewlett-Packard 710 பேர், Greater Manchester போல்டனில் உள்ள எக்சைட் ஆலையில் 400 பேரும் அடங்குவர்.

அலையென வந்துள்ள மாதாந்திர வேலை இழப்புக்கள் பற்றி குறிப்பிடுகையில் RBS நிதியச் சந்தைகளை சேர்ந்த Ross Walker, "என்னைப் பொறுத்தவையில் முக்கியமான எண்ணிக்கை வேலையில் இருப்பவர்கள் பற்றியதாகும். இது மிக அதிகமாக 271,000 குறைந்துள்ளதை காட்டுகிறது; எனவே பொருளாதாரம் இன்னும் மாதம் ஒன்றிற்கு 90,000 மேற்பட்ட வேலைகளை இழந்து கொண்டிருக்கிறது.

இப்புள்ளிவிவரங்கள் ஒரு புதிய "இழந்த தலைமுறை" பற்றிய பேச்சை தொடக்கியுள்ளது; 1980களின் ஆரம்ப ஆண்டுகளில் தாட்சரின் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் காலத்தில் இளைஞரிடையே வேலையின்மை இதேபோல் உயர்ந்த அளவு பெருகி நகரங்களுள் இளைஞர் எழுச்சிகளை கண்டது.

ஆனால் இப்பொழுது இளம் வேலையின்மையில் பல நூறாயிரக்கணக்காள இளைஞர்கள் உள்ளனர்; அவர்கள் கெளரவமான வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயர்கல்விகற்க புகுந்து இப்பொழுது பெரும் கடனாளிகளாக உள்ளனர்.

வேலைகள் ஆய்வு பற்றிய பயிலகத்தின் இயக்குனரான Nigel Meager கூறினார்: "ஏராளமான மக்கள் உயர்கல்வி முறை பெற்றுள்ள சகாப்தத்தில் இதுதான் முதல்தடவையாக மந்த நிலையைக் கண்ட காலம் ஆகும்."

1980களில் இளைஞர்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள்தான் பல்கலைக்கழகப் படிப்பிற்கு சென்றனர்; அவ்வாறு செய்தவர்கள் சற்றே கூடுதலான காலத்திற்குப் பின்னராயினும் வேலைபெற முடிந்தது. இப்பொழுது இளைஞர்களில் 45 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் பட்டதாரிகள் ஆவர்.

நிலைமை மோசமாகத்தான் போகும் என்ற பொதுக்கருத்துதான் உள்ளது. Bank of England தன் காலண்டு அறிக்கையில், மந்த நிலை எதிர்பார்த்ததைவிட "ஆழ்ந்த தன்மை உடையது" என்றும் இங்கிலாந்தில் பொருளாதார நிலைமை "மெதுவாகவும் நீடித்தும் இருக்கும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் எச்சரித்தார்.

வங்கி நெருக்கடி தோற்றுவித்த "பெரும் சீர்குலைவு" பரந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வங்கியின் கவர்னர் Mervyn King கூறியுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.4 சுருக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மே மாதம் கணிக்கப்பட்டிருந்த 3.9 சதவிகிதத்தை விட அதிகம் என்றும் அவர் கூறினார்.

CIPD-The Chartered Institute of Personnel and Development, 1,000 ஊழியர்களை பற்றிய ஒரு காலாண்டு அளவையில் வேலைகள் நிலைமை "இருண்டு" இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.

"உடனடியான வேலை வாய்ப்பு என்று வரும்போது, சிறந்த முறையில் கூறக்கூடியது நிலைமை மெதுவாக மோசமாகி வருவது என்பதுதான்" என்று CIPD உடைய தலைமை பொருளாதார வல்லுனர் John Philpott கூறினார்.

ஏற்கனவே உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தீவிர சமூக நெருக்கடிக்கு சான்றாக இருந்தாலும், இவை வேலை இல்லாமல் இருக்கும் அதிக எண்ணிக்கையை மறைக்கின்றன. இந்த ஆண்டு www.marketoracle.co.uk நடத்திய ஆராய்ச்சியின் போது கிடைத்த தகவல்கள், "வேலையின்மை புள்ளிவிவரங்கள் உண்மை வேலையின்மையை மறைக்கும் வகையில் பெரிதும் திரிக்கப்படுகின்றன; உண்மையில் 16ல் இருந்து 64 என்ற வேலை செய்யும் வயதில் இருப்பவர்களை புள்ளிவிவரங்களில் சேர்த்துக்கொண்டால் இது 6 மில்லியனுக்கும் அதிகமாகப் போகும்."

பெரிய அளவில் பொதுத்துறைகளில் வேலைவெட்டுக்கள் திட்டமிடப்படுகின்றன; தொழிற் கட்சி, கன்சர்வேடிவ் இரண்டுமே பிரிட்டனின் நாணய மதிப்பு பற்றி சர்வதேச நிதியச் சந்தைகளில் உத்தரவாதம் அளிக்க இது தேவை என்று கூறுகின்றன. "இந்த ஆண்டு கடைசியில் தனியார் பிரிவுத் துறையில் பெரும்புயல் போல் மற்றும் வேலை நீக்கங்கள் தொடராது எனக் கூறுவது இப்பொழுது முடியாது." என்றார் Philpott.

வேலையின்மை புள்ளிவிவரங்கள் அவற்றின் விளைவுகளை ஒட்டி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. "புதிய தொழிற் கட்சியின் சிறப்பு கூற்றான பொருளாதார திறமையும் சமூக நீதியும் கைகோர்த்து செல்கின்றன" என்பதாகும் என்று கார்டியன் தலையங்கத்தில் கூறியுள்ளது. வேலையின்மை புள்ளி விவரங்கள் "இந்த நன்கறியப்பட்ட மந்திரத்திற்கு எதிர் கருத்திற்குத்தான் உறையவைக்கும் சான்றாக உள்ளது" என்று அது தொடர்ந்து எழுதி, "பிரிட்டிஷ் சமூகத்தில் ஆழ்ந்த தீய மாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றும் எச்சரித்தது.

மந்தநிலை "நியாயமான வெகுமதிகள்" என்பதை சேதப்படுத்திவிட்டது என்று எச்சரித்த டைம்ஸ், இது பொருளாதார முறையின் நியாயத்தைப் பற்றி மக்கள் வினா எழுப்பக் காரணமாக கூடும் என்றும் கூறியுள்ளது.

"பிரிட்டனில் இப்பொழுது 12 பேரில் ஒருவர் வேலையில் இல்லை" என்று நாளேடு கூறுகிறது. "இவர்களுள் பெரும்பாலனவர்கள் வேறு எங்கோ நடந்த தவறின் விளைவுகளுக்காக கஷ்டப்படுகின்றனர். லண்டன் நகரத்திற்கு போனஸ்கள் பழையபடி வந்துவிட்டன; ஆனால் Birmingham நகர உற்பத்தித் தொழில் இடர்பாட்டில்தான் உள்ளது. பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது, பணத்தின் செலவினம் குறைவாகவே உள்ளது; இது முதலீட்டு வங்கியாளராக இருப்பதற்கு சிறந்த நேரம்; சிறு வணிகத்தை நடத்துபவர்களுக்கு, கடன் கிடைக்காத நிலையில், மோசமான நேரம் ஆகும்."

குறிப்பாக வேலையின்மை அதிகரிப்பு, ஊதியங்களை குறைத்து தொழிலாளர்கள் வேலை இழப்பிலும், நிலைமைகளிலும் முக்கிய மறுசீரமைப்பை செய்ய பயன்படுத்தப்டுகின்றன.

"தொடர்ந்த வேலையின்மையின்" எண்ணிக்கை எழுச்சி பற்றி எழுதிய Independent, "இது இங்கிலாந்தின் தாராளமயமாக்கப்பட்ட தொழிற் சந்தை, உத்தியோகபூர்வ வேலையின்மையின் மொத்த எண்ணிக்கையை குறைவாக காட்டுவதற்கு கதைகூறும் சான்றை ஆதரிப்பதுடன், மரபார்ந்த வேலைகளுக்கும், தற்காலிக, பாதுகாப்பற்ற, குறைந்த ஊதிய வேலைகள் என்ற அந்திம உலகத்திற்கு ஏராளமானவர்களை தள்ளியுள்ளது" என்று கூறியுள்ளது.

1.6 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் குறைந்த வேலைநேரம், தற்காலிக அல்லது பகுதி நேர வேலை என்பதற்குள் தள்ளப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் நிரந்தர வேலையில்லாததால் அவதியில் உள்ளனர்; கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் முழுநேர வேலை கிடைக்காததால்தான் பகுதி நேர வேலையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

போனஸ் தவிர சராசரி வருமான்கள் 3ல் இருந்து 2.5 சதவிகிதம் குறைந்துவிட்டன; இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஏராளமான மக்கள் இரண்டாம் காலாண்டில் திவால் என்று அறிவிக்கப்பட்டுவிட்டனர். தனிநபர் திவால்தன்மை ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு உயர்ந்து 33,000த்திற்கு சற்று உயர்வாயிற்று --இது 1960 களில் இத்தகைய சான்றுகள் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து மிக அதிகம் ஆகும்.

Mervyn King தன்னுடைய அறிக்கையில், 175 பில்லியன் பவுண்டுகள் வரிசெலுத்துவோர் பணத்தை வங்கிமுறையுள் உட்செலுத்தியும் தனிக்கடன்கள் கொடுக்கப்படுவது "கடந்த ஆண்டில் அதிகம் வளரவில்லை, வணிகத் துறைக்கு கடன் கொடுக்கப்படுவது உண்மையில் சரிந்துள்ளது." என்று தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் Financial Services Authority லண்டன் நகரத்தில் ஊதியம், போனஸ்கள் பற்றி தன்னுடைய திட்டங்களை முன்வைத்தது; இது முந்தை கருத்துக்காளான தடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதில் இருந்து கணிசமான பின்வாங்கலைத்தான் குறிக்கிறது. தற்போது வரிப்பணம் செலுத்துபவர்களின் மூன்றில் இரு பங்கினருக்கு சொந்தமான Royal Bank of Scotland ஐ எடுத்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இரு வங்கியாளர்கள், பல மில்லியன் பவுண்டு போனஸ் பொதியைப் பெற்றுள்ளனர்--ஒருவருக்கு முதலாண்டு மட்டும் 7 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது