World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US ground attacks reported in Pakistan

பாக்கிஸ்தானில் அமெரிக்காவின் படைகள் நடத்திய தாக்குதல் தகவல்கள் வெளியாகியுள்ளன

By Bill Van Auken
24 December 2009

Use this version to print | Send feedback

பாக்கிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஆழ்ந்திருக்கையில், அமெரிக்க ஏவுகணை, கூலிப்படைகள் தாக்குதல் பற்றிய பெருகிய மக்கள் அமைதியின்மை நிலவுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க சிறப்புப் படைத் துருப்புக்கள் நாட்டின் பழங்குடிப் பகுதிகளில் எல்லை கடந்து இரகசியமாக பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இத்தாக்குதல்களில் "ஹெலிகாப்டர்களில் உயர்மட்டத் துருப்புக்கள் இரவு வேளையில் எல்லை கடந்து ஈடுபட்டதாகவும், இவை பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்படவில்லை" என்றும் "ஒரு முன்னாள் நேட்டோ அதிகாரி" கூறியதாக திங்களன்று பிரிட்டிஷ் நாளேடு கார்டியனில் வந்துள்ள ஒரு கட்டுரை மேற்கோளிட்டுள்ளது.

பகிரங்கமாக அமெரிக்கத் துருப்புக்களின் ஊடுருவல் பற்றி ஒப்புக் கொள்ளப்பட்ட தாக்குதல் செப்டம்பர் 3, 2008ல் நடைபெற்றதுதான்; அப்பொழுது அமெரிக்க கடற்படை சிறப்புப் பிரிவினர் ஹெலிகாப்டர் மூலம் தெற்கு வஜீரிஸ்தானில் ஒரு கிராமத்திற்கு அனுப்பப்பட்டனர்; அங்கு அவர்கள் மூன்று வளாகங்களை தாக்கி கிட்டத்தட்ட 20 பேரைக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அல் கெய்டா போராளிகள் என்று வாஷிங்டன் கூறியபோதிலும், பாக்கிஸ்தானிய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கிராமவாசிகள் என்றும் 6 பெண்கள் 2 குழந்தைகள் அவற்றில் அடங்கியிருந்தனர் என்றும் கூறியது.

இந்த நிகழ்ச்சி பாக்கிஸ்தானில் பரந்த சீற்றத்தை தூண்டியது; இத்தாக்குதலை பாக்கிஸ்தான் அரசாங்கம் "தீவிர ஆத்திரமூட்டுதல்" என்று கண்டித்ததுடன், நாட்டின் பாராளுமன்றம் நாட்டினை இறைமையை மீறும் ஊடுருவல்கள் இராணுவத்தால் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரியது. பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் பாக்கிஸ்தானிய ஆட்சி அதற்கு இணங்கியது என்றனர்; ஆனால் இஸ்லாமாபாத் அதை திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், கார்டியன் தகவல்படி, இந்தத் தாக்குதல் 2003 ல் இருந்து 2008 வரை நடைபெற்ற தாக்குதல்களில் நான்காவது அத்தகையது ஆகும். இத்தாக்குதல்களின் முந்தைய இரு தாக்குதல்கள் இதேபோன்ற படுகொலைகள் அல்லது அல் கெய்டா உறுப்பினர்களை "திடீரென தாக்கி, கைப்பற்றும்" பணிகள் ஆகும்; மூன்றாவது தாக்குதல் கீழே விழுந்துவிட்ட பிரிடேட்டர் ட்ரோனை மீட்பதற்கு நடந்தது; அது ஆப்கானிய எழுச்சியாளர்கள் கைகளை அடைந்துவிடும் என்று அமெரிக்க இராணுவம் அஞ்சியது.

2008 தாக்குதலுக்கு பின்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் அமெரிக்க இராணுவம் எல்லை கடந்த தாக்குதல்களை பாக்கிஸ்தானுக்குள் நடத்துமாறு உத்திரவிட்டதாகவும், இது அந்நாடு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போரில்" ஒரே அரங்குதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அது இருந்தது என்றும் கூறப்பட்டது.

ஜனாதிபதி பாரக் ஒபாமாவாலும் இக்கொள்கை தொடரப்படுகிறது என்பது வெளிப்படை; இது நிர்வாகத்தின் இராணுவ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகத் தீவிரமாக்கப்படக்கூடும்; நிர்வாகம் ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் குறைந்தது 30,000 துருப்புக்களை அனுப்ப உள்ளது.

ஒபாமா பதவிக்கு வந்ததில் இருந்து, CIA மற்றும் அமெரிக்க இராணுவம் விமான ஓட்டி இல்லாத பிரிடேட்டர் ட்ரோன்கள் மூலம் நடத்தும் தாக்குதல்களை இரு மடங்காக்கி நூற்றுக்கணக்கான பாக்கிஸ்தானிய சாதாரணக் குடிமக்களை கொன்றுள்ளது. இப்பொழுது அமெரிக்க நிர்வாகம் பாக்கிஸ்தான் அரசாங்கம் ட்ரோன் தாக்குதல்கள் அதிகப்படுத்தப்படுவதற்கு உடன்பட வேண்டும் என்றும், பாக்கிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாகத்தின்கீழ் இருக்கும் பழங்குடிப்பகுதிகளில், ஆப்கானிய எல்லைக்கு அருகே, பாக்கிஸ்தானிய அரசாங்கமே தன் இராணுவத் தாக்குதலை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

CIA இயக்குனர் லியோன் பானெட்டா, படைகளின் கூட்டுத் தலைவர் கடற்படைத் தளபதி மைக் முல்லன் உட்பட பல உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமாபாத்திற்கு பறந்து வந்து ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பாக்கிஸ்தான் இராணுவம் ஒபாமா நிர்வாகத்தின் இராணுவ விரிவாக்கத்துடன் இணைந்து செயலாற்ற அழுத்தம் கொடுத்தனர்.

அமெரிக்க அதிகாரிகள் பாக்கிஸ்தானிய இராணுவம் வடக்கு வஜீரிஸ்தானில் உள்ள ஹக்கானி இணையம் எனப்படும் புகலிடங்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரினர். அக்குழு சிராஜுதின் ஹக்கானி மற்றும் அவருடைய தந்தையார் ஜலாலுதீன் தலைமையில் உள்ளது. 1980 களில் பிந்தையவர் காபூலில் சோவியத் சார்பு இருந்த ஆட்சிக்கு எதிராக CIA ஆதரவுடன் நடந்த போரில் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் நிதியைப் பெற்றவர்களில் முக்கியமானவர் ஆவார்.

பாக்கிஸ்தான் அரசாங்கம் அதன் மிகப் பெரிய மாநிலமான பலுச்சிஸ்தானின் ஆப்கானிய எல்லையில் இருக்கும் பழங்குடிப் பகுதிகள் மீது டிரோன் தாக்குதல்களை விரிவாக்க இசைவு கொடுக்க வேண்டும் என்றும் வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது. அங்கே அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் பல குவிப்புக் காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தானிய செய்தி ஊடகத் தகவல்கள் அமெரிக்க அதிகாரிகள் குவெட்டா மீது டிரோன் தாக்கதல்களை நடத்த வேண்டும் என்று கூறுவதே அதிகப் பிரசங்கித்தனம் என்ற குறிப்பைக் காட்டுகின்றன; இந்த நகரம் 600,000 மக்கள் அடர்த்தியாக வாழும் இடம் ஆகும். பென்டகன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புக்கள் தாலிபன் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமர் உட்பட பல தாலிபன் தலைவர்கள் இந்நகரத்தில் உள்ள பாதுகாப்பான புகலிடத்தில் இருந்துதான் ஆப்கானிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டமிட்டு இயக்குகின்றனர் என்று கூறுகின்றன.

புதனன்று, "பாக்கிஸ்தானிய தூதரகப் பிரிவு ஆதாரங்கள் அமெரிக்காவில் இருந்து வந்த பல உத்தியோகபூர்வ அதிகாரிகள் பாக்கிஸ்தான் செயல்படத் தவறினால், அமெரிக்க நேரடி நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அதில் பலுச்சிஸ்தான் மீதான டிரோன் தாக்குதல்கள் விரிவாக்கமும் இருக்கும்" என்று கூறியதாக பாக்கிஸ்தான் நாளேடு டவுன் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத், வாஷிங்டனுக்கு இடையே அழுத்தங்கள் பெருகிவிட்டன. இப்பகுதியில் பாக்கிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் நீண்ட காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவியதை எல்லாம் செய்து வந்தாலும், அண்டை ஆப்கானிஸ்தானுடனான போர் மற்றும் பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க ஊடுருவல்கள் ஆகியவை நாடு முழுவதிலும் உறுதிப்பாட்டைச் சீர்குலைக்கக்கூடும். தன்னைக் காத்துக் கொள்ளுவதற்காக பாக்கிஸ்தானின் ஆளும் உயரடுக்கு சமீபத்திய அமெரிக்க கோரிக்கைகளை நிறைவேற்ற தயக்கம் காட்டுவது போல் தோற்றமளிக்கிறது.

இதுதான் செவ்வாயன்று வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி பாக்கிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் வெளியுறவுக்குழுவின் முன் தோன்றி ஒபாமா நிர்வாகத்தின் விரிவாக்கக் கொள்கை பற்றி குறைகூறியதில் பிரதிபலிப்பாயிற்று.

வெளியுவு அமைச்சரகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, அவர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சர்தாரி அராசங்கம் பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க நேட்டோ துருப்புக்களை "கடுமையாக தொடர்வதற்கோ" அல்லது டிரோன் ஏவுகணை நடவடிக்கை விரிவாக்கப்படுவதற்கோ அனுமதிக்காது என்று கூறியதாகத் தெரிகிறது.

"அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மூலோபாயம் பற்றி பாக்கிஸ்தானுக்கு தீவிர உட்குறிப்புக்கள் உள்ளன." என்று அமைச்சரக அறிக்கை குரேஷி கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. "இராணுவ விரிவாக்கத்தின் விளைவாக, ஆப்கானிஸ்தானில் கூடுதலான வன்முறைகள் ஏற்படலாம்; அவற்றை ஒட்டி போராளிகளும், தஞ்சம் கோருபவர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து பாக்கிஸ்தானுக்கு அதிகமாக வரக்கூடும்."

டிரோன் தாக்குதல்கள் "எதிர்பார்க்கும் விளைவுகளைத் தரா, பயனற்றவை" என்று மந்திரி விளக்கினார். பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் இந்த முறையான நிலைப்பாடு CIA இத்தாக்குதல்களை பலுச்சிஸ்தானிலுள்ள ஒரு விமான தளத்தில் இருந்து இஸ்லாமாபாத் நன்கு அறிந்துள்ள முறையில் அதன் அனுமதியுடன் நடத்துகிறது என்ற உண்மையில் தரம் குறைந்து போகிறது.

இதற்கிடையில் அசோசியேட்டட் பிரஸ் பெயரிடாத "ஒரு மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஹக்கானி இணையத்தில் இன்னும் கூடுதலான அமெரிக்க நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது, அது பாக்கிஸ்தானின் ஆதரவுடன் வரும்" என்று கூறியதாக தெரிவிக்கிறது.

இதுவரை பாக்கிஸ்தானிய இராணுவம் ஹக்கானிப் படைகள்மீது வடக்கு வஜீரிஸ்தானில் புதிய தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்கக் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. அதன் துருப்புக்கள் ஏற்கனவே வடக்கு வஜீரிஸ்தானில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன, எனவே இரு நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அது நடத்த முடியாது என்று அது தெளிவாகக் கூறியுள்ளது.

"நாங்கள் பல போர் முன்னணிகளில் போரிட முடியாது" என்று பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஒப் லண்டனிடம் கூறினார்.

இந்த அணுகுமுறை வாஷிங்டனுக்கு சீற்றத்தைக் கொடுத்துள்ளது; தன்னுடய எல்லைக்குள் பாக்கிஸ்தானிய தாலிபன் போராளிகளுக்கு எதிராக வலிமையை பாக்கிஸ்தான் அரசாங்கம் பயன்படுத்தத் தயாராக உள்ளது, ஆனால் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் கூறுபாடுகளுக்கு எதிராக பாக்கிஸ்தான் வலிமையைப் பயன்படுத்தத்தயாராக இல்லை என்று வாஷிங்டன் கூறுகிறது.

பாக்கிஸ்தானுடைய நிலைப்பாட்டின் தளத்தில் ஹக்கானிகளுக்கும் பாக்கிஸ்தானிய உளவுத்துறை அமைப்பு ISI க்கும் இடையே உள்ள நீண்ட கால பிணைப்புக்கள்தான் உள்ளதாக பல பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

தாலிபன் மற்றும் அத்துடன் இணைந்துள்ள எதிர்ப்புக் கூறுபாடுகள் மீதான பாக்கிஸ்தானின் செல்வாக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டவுடன் பாக்கிஸ்தானிய நலன்களைக் காப்பதற்கான வழிவகை என்று கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெருகும் இந்திய செல்வாக்கு பற்றி இஸ்லாமாபாத் குறிப்பாக அஞ்சுகிறது.

"அமெரிக்கர்கள் சென்றுவிட்டால், தன்னுடைய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கு எல்லையில் இந்தியா இருக்கும் என்று பாக்கிஸ்தான் மிகக்கவலை கொண்டுள்ளது" என்று அமெரிக்காவில் முன்னாள் பாக்கிஸ்தானிய தூதராக இருந்த Tariq Fatemi நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார்.

பெருகும் அமெரிக்க-பாக்கிஸ்தானிய அழுத்தங்களுக்கு அளிப்பைக் கொடுப்பதில் பாக்கிஸ்தானிய ஆட்சியின் அரசியல் நெருக்கடியும் உள்ளது; சமீபத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று நாட்டின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷரப்புடன் புஷ் நிர்வாகம் தலையிட்டு கொண்டுவந்த பொது மன்னிப்பை நீக்கியது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தம் சர்தாரியின் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சியின் (PPP) அரசியல்வாதிகளை ஊழல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தது.

இப்பொழுது பாதுகாப்பு மந்திரி அஹ்மத் முக்தர் மற்றும் உள்துறை மந்திரி ரெஹ்மன் மாலிக் என்று வாஷிங்டனுடன் இராணுவக் கொள்கை ஒருங்கிணைப்பில் முக்கிய நபர்களாக இருக்கும் இருவரும், குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதுடன், நாட்டை விட்டு வெளியேறுவதில் இருந்தும் தடைக்கு உட்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரியுள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவற்றின் ஒபாமா நிர்வாகத்தின் சிறப்புப் பிரதிநிதியான ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், Charlie Rose நடத்திய US Public Broadcasting System பேட்டி நிகழ்ச்சியில் தோன்றியபோது "இஸ்லாமாபாத்தில் வெளிவரும் பெரும் அரசியல் நாடகமாகும் இது" என்றார்.

"இது எப்படி முடியும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்" என்றார் ஹோல்ப்ரூக், "இதை மிகவும் உன்னிப்புடன் நாங்கள் கவனிக்கிறோம்" என்றும் சேர்த்துக்கொண்டார்.

அதே பேட்டியில், ஹோல்ப்ரூக் "அல் கெய்டா மற்றும் தாலிபன் தலைமை அண்டைய நாட்டில், நம்முடைய படைகள் போரிட முடியாத நிலையில் இருப்பது" "ஒரு பெரும் சங்கடம் என்றார். இப்பிரச்சினையை சமாளிக்க "வேறு வழிவகைகளை" அமெரிக்கா கையாள வேண்டும் என்றார். மனித உரிமைகள் அமைப்புக்கள் நீதிக்குப் புறம்பான கொலையை நடத்துகின்றன எனக் கூறியுள்ளதை அமெரிக்க டிரோன் தாக்குதல்களைக் காக்கும் விதத்தில், "இத்தாக்குதல்களினால் உலகில் பெரும் ஆபத்தைக் கொடுத்து வந்த சில நபர்கள்... இப்பொழுது உயிருடன் இல்லை" என்றார்.

ஆனால் ஏவுகணைத் தாக்குதல்கள் பாக்கிஸ்தானில் பெருகிய முறையில் அமெரிக்க நிலைப்பாடு இருப்பதுடன் இணைந்த விதத்தில் மக்கள் எதிர்ப்பை அதிகரிக்கும் வகையில் தூண்டியுள்ளன.

இது சமீபத்திய வராங்களில் பல பாக்கிஸ்தானிய நகரங்களில் அமெரிக்க கூலிப்படைகள், இழிவுற்ற இராணுவ ஒப்பந்த நிறுவனம் Blackwater-Xe உடைய நிலைப்பாடு இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து வந்துள்ள ஆர்ப்பாட்டங்கள் ஒரு வடிவம் பெற்றுள்ளது.

ஞாயிறன்று பாக்கிஸ்தானின் நான்காவது மிகப் பெரிய நகரமும் அதன் இராணுவத் தலைமையகம் உள்ள இடமுமான ராவல்பிண்டியில் பிளாக்வாட்டர் எதிர்ப்பு அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாக்கிஸ்தானின் மிகப் பெரிய இஸ்லாமியக் கட்சி, "அமெரிக்கா, திரும்பிப் போ, திரும்பிப்போ" என்ற கோஷத்தில், அணியின் பேச்சாளர்கள் பிளாக்வாட்டரை "அமெரிக்கப் பயங்கரவாதிகள்" என்று கண்டித்து பாக்கிஸ்தானின் இறைமையை வாஷிங்டன் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் நாட்டை வேண்டுமேன்றே அதன் அணுவாயுதங்கள்மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக உறுதிதன்மையை சீர் குலைக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

கடந்த வார இறுதியில், இஸ்லாமாபாத் வக்கீல்கள் சங்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வக்கீல்கள் பிளாக்வாட்டருக்கு எதிராக மற்றும் ஒரு ஆர்ப்பாட்டத்தை சிகாலாவில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு வெளியே நடத்தி, அரசாங்கம் வெளிநாட்டு பயிற்சியாளர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரினர்; அவர்கள் பிளாக்வாட்டர் செயற்பாட்டாளர்கள்தான் என்றும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வக்கீல்களும் மற்றவர்களும் இந்தப் பயிற்சி முகாமே பாக்கிஸ்தானுக்கு அருகில் உள்ள Kahuta அணுசக்தி நிலையத்தின் மீது ஒற்று வேலை பார்ப்பதை முடிமறைக்க ஒரு செயற்பாடு என்றுதான் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்ப்பைத் தொடர்ந்து பாக்கிஸ்தானிய அரசாங்கம பயிற்சிக் கல்லூரியை இஸ்லாமாபாத் போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது.

பிளாக்வாட்டர் தன்னுடைய பெயரை Xe Services என மாற்றிக் கொண்டுள்ளது; இதற்குக் காரணம் 17 ஈராக்கிய குடிமக்களை இதன் துப்பாக்கிதாரிகள் 2007ல் படுகொலை செய்ததை அடுத்து எழுந்த கோரமான அவப்பெயர் ஆகும்.

வாஷிங்டன் மற்றும் பிளாக்வாட்டர் நிர்வாகிகள் பிந்தையதின் ஊழியர்கள் பாக்கிஸ்தானில் செயல்படுகின்றனர் என்பதை மறுத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் இரு இடங்களிலும் வந்துள்ள பல செய்தி ஊடகத் தகவல்கள் பாக்கிஸ்தானில் உண்மையில் கூலிப்படைப் பிரிவு செயல்படுவதாக முன்னாள், தற்போதைய அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை மேற்கோளிட்டுள்ளன.

Blackwater: The Rise of the World's Most Powerful Mercenary Army என்னும் புத்தகத்தின் ஆசிரியரான Jeremy Scahill, நேஷன் ஏட்டில் கடந்த மாதம் பிளாக்வாட்டர் டிரோன் தாக்குதல்களை நடத்துவதற்கு உளவுத் தகவல் சேகரிப்பதிலும் முக்கிய பங்கு கொண்டிருப்பதாகவும், "தற்போது தாலிபன், அல் கெய்டா செயற்பாட்டாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் மீது இலக்கு வைத்து தாக்கும் இரகசியத் திட்டத்தின் மையத்தில் உள்ளது" என்றும் எழுதியுள்ளார்.

டிரோன் தாக்குதல்கள், எல்லை கடந்து சிறப்புப் பிரிவினர் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கக் கூலிப்படைகள் பயன்படுத்தப்படுதல் ஆகியவை ஆப்கானிய எல்லைப் பகுதியில் பாக்கிஸ்தானிய இராணுவம் நடவடிக்கைளை விரிவாக்க வேண்டும் என்னும் வாஷிங்டனில் இருந்து வரும் அழுத்தத்துடன் இணைந்து 180 மில்லியன் மக்கள் இருக்கும் அணுவாயுதம் கொண்ட இந்நாட்டின் அரசியல் உறுதியைக் குலைப்பதற்கான நோக்கமாக உள்ளன.

அமெரிக்க மக்களுக்குத் தெரியாமல், இரகசியமாக நடத்தப்படும் இந்த ஒபாமா நிர்வாகத்தின் இராணுவ விரிவாக்கத்தின் முக்கிய கூறுபாடு இன்னும் பரந்த போரைக் கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.