World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Citizen of the world: a brief survey of the life and times of Thomas Paine (1737-1809)

உலகின் குடிமகன்: தோமஸ் பெயினின் வாழ்க்கையும், அவர் காலங்களும் குறித்த ஒரு சுருக்கமான ஆய்வு (1737-1809)

By Ann Talbot
8 June 2009

Back to screen version

ஜூன் 8ஆனது, 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த புரட்சியாளரான தோமஸ் பெயினின் 200வது நினைவு தினத்தைக் குறிக்கிறது. ரூதெர்ஹாம் கலை விழாவின் ஒரு பகுதியாக Rotherham Metropolitan District Local History Council இனால் பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் செப்டம்பர் 24, 2004ல் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தி தொடர்பாளர் ஆன் டால்போட்டினால் அளிக்கப்பட்ட உரையை நாங்கள் இங்கு மீண்டும் பிரசுரிக்கிறோம்.

1788 குளிர்காலத்தில், ஒரு சிறு குழு ரூதெர்ஹாமில் உள்ள டோன் நதிக்கு குறுக்காக ஒரு பாலத்தைக் கட்டிக் கொண்டிருந்தது. கிறிஸ்துமஸூக்கு முன்னதாக சிறந்த பார்வையாளர்களின் ஒரு கூட்டம் அந்த கட்டுமானத்தை பார்வையிட இருக்கிறது என்ற உண்மை, அதுவொரு சாதாரண பாலம் இல்லை, அதன் வடிவமைப்பாளர் ஒரு சாதாரண பொறியாளரும் இல்லை என்பதற்கான ஓர் அறிகுறியாக இருந்தது. 1776 கிறிஸ்துமஸ் தினத்தில், டிரென்டன் (Trenton) யுத்தத்திற்கு முன்னதாக வாஷிங்டன் போர்வீரர்களுக்கு படித்துக்காட்டப்பட்ட புரிந்துணர்வும், அமெரிக்க நெருக்கடியும் (Common Sense and The American Crisis) என்பதன் ஆசிரியரான தோமஸ் பெயினினின் தலைமையில் அந்த திட்டம் நடந்து கொண்டிருந்தது.

"இந்த காலங்கள் முயற்சியுடையவர்களின் ஆன்மாக்களில் உள்ளது" என்று அது தொடங்கியது. "இந்த நெருக்கடியில், சுட்டெரிக்கும் வீரர்களும், ஒளிவீசும் தாய்நாட்டை காப்பவர்களும் இந்த நாட்டின் சேவையிலிருந்து விலகுவார்கள்; ஆனால் தற்போது அதற்காக நிற்கும் அவர்கள், ஆண் மற்றும் பெண்ணின் அன்பிற்கும், நன்றியுணர்ச்சிகளுக்கு உட்பட்டிருப்பார்கள். நரகத்தைப் போலுள்ள டைரேன்னியை (Tyranny) எளிதில் வெற்றி கொள்ள முடியாது; இருப்பினும், கடுமையான போராட்டம், மிக பிரமாண்ட வெற்றி என்ற இந்த ஆறுதலை நாம் நம்முடன் வைத்திருக்கிறோம்." இது தான் டாம் பெயின் (Tom Paine), வாஷிங்டன் (Washington) மற்றும் ஜெபர்சனின் (Jefferson) நண்பருமான, உலகின் குடிமகன்.

அவர் உருவாக்கி கொண்டிருந்த பாலம், மனிதனை விட மிகவும் குறைந்த புரட்சிகரத்தன்மை கொண்டதல்ல. அதுவோர் இரும்பு பாலம். 1779ல் கோல்புரூக்டேலில் (Coalbrookdale) கட்டப்பட்ட ஓர் இரும்பு பாலம் பிரான்சில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அது பற்றிய ஒரு புதிய முன்வைப்பும் (Concept) இருந்து வந்தது. அதில் புதிய மூலப்பொருளின் முழு சக்தியும், சிறிதும் விடுபடாமல் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டது.

200,000 மூலதன மதிப்பு கொண்ட ஒரு நிறுவனமான ரூதெர்ஹாமின் வால்கர்களின் ஆதரவுடன், பெயின் அவரின் பொருளாதார வெற்றியின் விளிம்பில் இருந்ததாகவும், ஒரு வளமான ஓய்வூதியத்திற்கு செல்லவிருப்பதாகவும் தான் தெரிந்தது. ஆனால் அந்த காலங்கள், டாம் பெயினின் ஆன்மாவை முடிவுக்கு கொண்டு வந்துவிடவில்லை. மூன்று ஆண்டுகளுக்குள், இலண்டன் விடுதி முற்றத்தில் துருப்பிடிக்கும் நவீன மாதிரிதிட்டங்களுடன், அவரின் பாலம் கட்டும் திட்டங்களும் ஓரங்கட்டப்பட்டன, பெயின் மீண்டும் அரசியலுக்கு வந்தார்.

இஸ்லிங்டனில் உள்ள ஏஞ்சல் விடுதியில், இரவில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மனிதனின் உரிமைகள் புத்தகத்திற்கு அவர் இறுதி வடிவம் கொடுத்து கொண்டிருந்தார். அவரின் அந்த புத்தகம், பிரெஞ்சு புரட்சி, சமூக சமத்துவம் மற்றும் மனிதனின் பிரபஞ்ச உரிமைகளை கண்டனத்திற்குட்படுத்திய எட்மண்ட் பேர்க்கேயின் (Edmund Burke) பிரெஞ்சு புரட்சியின் பிரதிபலிப்புகள் என்ற புத்தகத்திற்கு பதிலளிப்பதாக இருந்தது. இந்த இரண்டு புத்தகங்களும் பிரிட்டன் மற்றும் அதற்கு அப்பாலும் அரசியல் வடிவங்களை மாற்றி அமைத்தன. எட்மண்ட் பேர்க்கே தனிப்பட்ட வகையில் ஒரு நண்பராக இருந்தார்; பாலங்களில் நடந்து வரும் வேலைகளை பார்வையிட மாஸ்போரோஹிற்கு அவர்கள் வரக் காரணமான, Whig அணியின் மதிப்புமிக்கவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். ஆனால் பிரெஞ்சு புரட்சி மீதான அவர்களின் கருத்துக்கள் முற்றிலும் வெவ்வேறாக இருந்தன.

ஓர் கோட்பாடற்ற அரசியல் நம்பிக்கையின் பின் இணைந்திருந்த பல வர்க்க மனிதர்களை கொண்டிருந்த Whig கட்சியின் பழைய உறவுகள் பிரான்சில் உள்ள அரசியல் நிகழ்வுகளை அல்லது பிரிட்டனில் உள்ள சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை தாங்க முடியாது போனது. பிரெஞ்சு புரட்சியில் அப்போதிருந்த சொத்துறவுகள் மீதான ஓர் அச்சுறுத்தலை பேர்ககே மிக சரியாக பார்த்தார். உழைக்கும் மக்கள் பிரெஞ்சு புரட்சிக்கு ஆதரவாக பேரணியில் சென்ற போது, ஷெபீல்டு மற்றும் அதன் அண்டை நகரங்களிலும் விரைவிலேயே அது வெளிப்படும் ஓர் அச்சுறுத்தலாக அது இருந்தது. அந்த ஆண்டுகளில், பொதுவாக கருதப்பட்டதைவிட பிரிட்டன் புரட்சிக்கு மிக நெருக்கத்தில் வந்தது. பிரிட்டனில் புரட்சி வெற்றி அடைந்திருந்தால், மூன்று முற்போக்கான ஜனநாயக குடியரசுகள் நவீன உலகை மிக வித்தியாசமான வழியில் வடிவமைத்திருக்கும்.

"இரண்டு புரட்சிகளிலும் ஒரு பங்காக வாழ்வது ஏதோவொரு காரணத்திற்காக இருந்து வந்திருக்கின்றது!" என்று 1789ல் ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு தோமஸ் பெயின் எழுதினார். சிலவேளைகளில் இரண்டு என்பது குறைமதிப்பிடப்பட்டது. அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி மற்றும் தொழிற்புரட்சி ஆகிய மூன்று புரட்சிகளில் பெயின் பங்கு பெற்றிருந்தார். நாம் வாழும் இந்த உலகை உருவாக்க அவர் உதவினார். இந்த குறிப்பிடத்தக்க மனிதரின் தொடர்ச்சியான அரசியல் பங்களிப்பை இந்த உரை எடுத்துக்காட்டும்.

ஆகவே, தோமஸ் பெயின் என்பவர் யார்?

சில இடங்களில் துண்டுதுண்டாக இருந்தாலும், அவரின் வாழ்க்கை வரலாற்றின் எளிய உண்மைகள் சாதாரணமானவை. பெயினின் அங்கீகரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வரலாறு 1892 எழுத்தப்பட்டது முதலாக, பல புத்தகங்களில் அவை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மொன்கூறே கொன்வேயினால் எழுதப்பட்ட தோமஸ் பெயினின் வாழ்க்கை என்பது வாழ்க்கை வரலாற்றின் தரமான படைப்பாக இருக்கிறது. விபரங்களில் சிலவேளைகளில் தவறாக இருந்தாலும் கூட, ஓர் அடிமை ஒழிப்பு கோட்பாட்டாளரும், ஆப்ரகாம் லிங்கனின் ஆதரவாளருமான கொன்வே, உணர்வுபூர்வமான ஒரு வரலாற்று பதிவாளராக இருந்தார். நியூ ரோசெல்லில் இருந்த பெயினின் வீட்டை அழியாது காப்பாற்றி வைத்திருக்கும் தோமஸ் பெயின் தேசிய வரலாற்று சமூகத்தின் முதல் தலைவராக அவர் இருந்தார். ஆய்வுகளுக்கான நிறைய நவீன படைப்புகள் மிகவும் துல்லியமாக இருக்கலாம், ஆனால் அவை பொதுவாக பெயினின் வாழ்வில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும் தொட்டிருக்கின்றன. வழக்கமாக, அமெரிக்க ஆண்டுகள் அல்லது பிரெஞ்சு அனுபவம் ஆகியவற்றை பற்றியே அவை குறிப்பிடுகின்றன. ஆனால் இவை இரண்டையும் மிக அரிதாக தான் இணைத்த்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது, எரிக் போனரின் டாம் பெயினும், புரட்சிகர அமெரிக்காவும் என்பதாகும். பெயினின் வாழ்க்கை முழுவதையும் தொட்டிருக்கும் சமீபத்திய சிறந்த ஆய்வு, ஜோன் கீனின் - டாம் பெயின்: ஓர் அரசியல் வாழ்க்கை என்பதாகும்.

பெயினின் வாழ்க்கை கதையானது, தொழில்துறையில், விஞ்ஞானத்தில், பெயினை பொறுத்த வரை அரசியலில் தங்கள் பாதையை உருவாக்கி கொண்ட வறுமையான பின்னணியில் இருந்து சுயமாக கற்றறிந்து வந்த மனிதர்கள் என்ற ஒரு புதிய சமூக வடிவத்தின் அனுபவத்தை பிரதிபலிக்கிறது. அவர் இந்த புதிய வடிவத்தின் மிக சிறந்த உதாரணம்.

அவர் கிழக்கு ஏங்கிலியாவின் தெட்போர்டில் (Thetford, East Anglia) ஜனவரி 29, 1737ல், ஒரு நண்பர்களின் மத சமூகத்தை (Quaker beliefs) சார்ந்த மேலுடை தயாரிப்பாளரான ஜோசப் பெயினுக்கும், ஓர் ஏங்கிலியரான (Anglican) பிரான்செஸ் காகிற்கும் மகனாக பிறந்தார். குழந்தை பருவத்திலேயே இறந்து போன அவரின் சகோதரியைப் போலவே, பெயினும் இங்கிலாந்தின் கிறிஸ்துவ ஆலயத்தில் ஞானஸ்தானம் பெற்றிருக்க கூடும், ஆனால் இதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அவர் அன்னையின் ஏங்கிலியத்தையோ அல்லது அவர் தந்தையின் நண்பர் கழகத்தின் நம்பிக்கைகளையோ அவர் பின்பற்றவில்லை, ஆனால் ஒரு கிறிஸ்துவ விவிலிய மொழிநடை அவரின் ஆரம்பகட்ட வளர்ப்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தெட்போர்ட் இலக்கண பள்ளியில் அவர் படிப்பிக்கப்பட்டார். நகரத்தின் சுதந்தரமனிதராக இருந்ததால், சலுகைதேர்வு பெற்றிருந்த நகரத்திற்கு வெளியில் வாழ்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த 10சென்ட் கட்டணத்தை செலுத்தாமலேயே, அச்சிறுவனை அவரின் தந்தையால் இலக்கண பள்ளிக்கு அனுப்ப முடிந்தது. ஆனால் அவருக்கான காகிதங்கள், தூவற்பேனாக்கள் மற்றும் மை போன்றவற்றை அவர்கள் வாங்க வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு ஒரு போராட்டமாகவே இருந்தது.

அவரை போன்ற பின்னணியைக் கொண்டிருந்த பல சிறுவர்களைப் போலவே, பெயினும் தொழிற்பயிற்சிக்காக தமது 12வது வயதில் பள்ளியை விட்டு நின்றார். பெயின் விஷயத்தில், அவர் அவரின் தந்தையின் கீழ் ஒரு மேலுடை தயாரிப்பவராக தொழிற்பயிற்சிக்காக அமர்த்தப்பட்டார். அந்த தொழில் சலித்து போனதாலோ அல்லது அந்த தொழில்துறை சரிந்து வருவதை உணர்ந்ததாலோ, பெயின் வீட்டை விட்டு வெளியேறி, 1756ல் ஒரு தனியார் போர்கப்பலில் வெளிநாட்டிற்கு கப்பலேறினார். அதிருஷ்டவசமாக, பெயினின் தந்தை அவசரமாக இலண்டனுக்கு சென்று அவருக்கு அறிவுரை கூறி அழைத்து வந்தார். அவர் தேர்ந்தெடுத்திருந்த The Terrible என்ற அந்த கப்பல் ஒரு போட்டி பிரெஞ்சு தனியார் போர்கப்பலினால், அந்த பயணத்தில் கைப்பற்றபட்டு, அதன் கப்பலோட்டிகளில் 17 பேர் மட்டுமே தப்பித்தனர்.

பெயின் சிலகாலம் லண்டனில் மேலுடை தயாரிப்பவராக பணியாற்றினார், ஆனால் அதற்கடுத்த ஆண்டில் மற்றொரு தனியார் போர்கப்பலான The King of Prussia கப்பலோட்டியாக அவர் சேர்ந்தார். ஆனால் இந்த முறை அவர் கப்பற்பயணம் மேற்கொள்வதை அவர் தந்தையால் தடுக்க முடியவில்லை. இது பிரான்சுடனான ஏழு ஆண்டு கால யுத்த காலமாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு பின்னர், ா30 கையிருப்புடன் பெயின் கரை திரும்பினார்.

இரண்டாவது பயணம் மேற்கொள்வதற்கு மாறாக, அவருக்கு மிக பெரிய அதிஷ்டமாக இருந்த விஞ்ஞானம் மற்றும் மெய்யியல் கல்வியை பெற இலண்டனின் பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளை அவர் பயன்படுத்தினார். சமூகத்தின் பெரும் பிரிவுகள் பல்கலைக்கழக கல்வியில் இருந்து விலக்கப்பட்டிருந்த அந்த காலத்தில், பலரால் இவ்வாறு தான் உயர்கல்வி பெறப்பட்டது. பெயினுக்கு இக்கல்வி பிற்காலத்தில் சாதகமாக இருந்தால், அவருக்கு இதுவொரு வாழ்க்கை மாற்றும் அனுபவமாக அமைந்தது. அவர் வாழ்நாளில் இந்த காலகட்டத்தில், அவருக்கு அரசியலில் ஆர்வம் இருக்கவில்லை. உத்தியோகபூர்வமான அரசியல் உலகம் மோசமாக இருந்தது. அது அவருக்கு வெறுப்பாக இருந்தது. அவர் அரசியலுக்கு வருவதற்கு விஞ்ஞானம் தான் ஒரு பாதையாக அமைந்தது. அவர் சேர்ந்திருந்தவர்களில் பலர் மேம்பட்ட அரசியல் மற்றும் சமூக சிந்தனையை கொண்டிருந்தார்கள். அது பிரபஞ்சத்தின் மீதான பகுத்தறிவு சிந்தனையிலிருந்து சமூக அமைப்பின் மீது சிந்தனையை செலுத்துவதற்கு ஒரு சிறிய படியாக இருந்தது.

ஆனால் வாழ்விற்கு பெயின் தொடர்ந்து சம்பாதிக்க வேண்டி இருந்ததால், விரைவிலேயே அவர் ஒரு மேலுடை தயாரிப்பராக கென்டில் நிலைத்துவிட்டார். இங்கு அவர் ஓர் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்தார், ஆனால் அப்பெண்மணி குழந்தை பிறப்பின் போது மரணமடைந்தார். மனைவியை இழந்தவராக இருந்த பெயின் ஒரு சுங்கதீர்வையாளராக உருவாக முடிவெடுத்தார். பொதுச்சேவையின் இந்த சிறிய பிரிவு அவருக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் என்று அவர் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார். அது அவ்வாறு இருக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு உள்ளேயே, ஒரு மூத்த அதிகாரியின் நேர்மையின்மையால் இருக்கலாம், அவர் வெளியேற்றப்பட்டார்.

வேலையில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் பணியில் அமர்வதற்காக லண்டனுக்கு சென்று மனு அளிக்க வேண்டியிருந்தது. அதற்கடுத்த ஆண்டு, அவர் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டார், ஆனால் ஒரு பதவிக்காக அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், ஒரு தொழிலாளருக்கு அளிக்கப்படுவதை விட குறைவான வருவாயில் அவர் ஒரு நடைமுறை ஆசிரியராக ஆனார். அவரின் லண்டன் வசிப்பு, விஞ்ஞான வட்டாரங்களுடன் மீண்டும் கலந்து பழக அவருக்கு வாய்ப்பளித்தது. அவர் சந்தித்தவர்களில் பென்சமின் பிராங்கிளினும் ஒருவர். அந்த சந்திப்பு, அவர்கள் இரண்டு பேருக்கும் மட்டுமின்றி அவர்களின் வழிதோன்றல்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்க போவதை உணர்த்தியது.

இறுதியாக, சுசெக்ஸினின் லெவிசில் ஒரு சுங்கதீர்வாளர் பதவி காலியானது. இங்கு தான், முதன்முறையாக முதிர்ச்சி பெற்ற பெயினின் ஏதோவொன்று உருவாக தொடங்குகிறது. மீண்டுமொரு முறை திருமணம் செய்து கொண்ட நிலையில், சுங்கதீர்வாளர்களின் சம்பள உயர்விற்காக பிரச்சாரம் செய்ய தொடங்கினார், அத்துடன் உள்ளூர் அரசியலிலும் ஈடுபட்டார்.

காவலர் மற்றும் கணக்காளர் போன்ற நகர அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் Society of Twelve அமைப்பிலும் அவர் ஓர் உறுப்பினரானார். உள்ளூர் ஏழைகளின் நலன்களுக்கும், சாலை பராமரிப்பு மற்றும் தெரு விளக்கிடுதல் போன்றவற்றை ஏற்பாடு செய்த வெஸ்ட்ரீ கூட்டங்களிலும் அவர் பங்கெடுத்தார். லெவிஸ் வெனிஸ் போலில்லை, ஆனால் ஒரு குடியரசு வகையிலான அரசியலின் நடைமுறை அனுபவத்தை அளிப்பதில் அந்த அனுபவம் அவருக்கு பயனுள்ளதாக இருந்தது.

உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அரசியலை விவாதிக்கவும், மாவடி மற்றும் சிப்பிகளின் ஒரு நல்ல பேரத்திற்காகவும், White Harthல் கூடிய ஹெட்ஸ்டார்ங் மன்றத்தில் ஓர் உறுப்பினராகவும் அவர் இருந்தார். முதன்முறையாக பெயின் இங்கு தான், பிரிட்டனுக்கும், அதன் அமெரிக்க காலனிகளுக்கும் இடையிலான மோதல்களில் இருந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவித்திருக்க கூடும்.

அந்த ஹெட்ஸ்டார்ங் மன்றத்தின் ஓர் உறுப்பினராக இருந்த உள்ளூர் பத்திரிகையின் ஆசிரியர், பிரிட்டன் அரசாங்கத்தை தாக்கி அமெரிக்க துண்டு பிரசுரங்களை மறுபதிப்பு செய்தார். அவர், 1770 ஆகஸ்டில் லெவிசில் ஒரு பிரமாண்ட வரவேற்பை பெற்ற ஜோன் வில்கெசின் ஓர் ஆதரவாளராவார். தீவிர அரசியலில் வில்கெசின் பங்களிப்பு குறுகிய காலத்திற்கு தான் இருந்தது, ஆனால் தனியுரிமை மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான ஒரு பரந்த அரசியல் போராட்டத்தில், பெயினிற்கு இது முதல் அனுபவமாக அமைந்தது.

லெவிஸில் பெயினின் காலம் திவால் நிலைமையாலும், அவரின் இரண்டாவது மனைவியுடனான பிரிவினாலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1774ல், நடுநிலை வயதை அடைந்தபோது, நிலையான வேலை இல்லாமல், அவருக்கு முன்னால் இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அவருக்கு பின்னால் பலர் என்ன செய்ய இருந்தார்களோ அதையே அவரும் செய்தார் - அவர் அமெரிக்காவிற்கு கப்பலேறினார். எவ்வாறிருப்பினும், பென்சமின் பிராங்கிளினிடமிருந்து ஓர் அறிமுக கடிதத்தை அவர் வைத்திருந்ததால், பல புலம்பெயர்வோர்களை விட செளகரியமாகவே அங்கு அவர் வந்திறங்கினார்.

பிலடெல்பியாவில், இந்த வேலையில்லா சுங்கதீர்வாளர், The Pennsylvania Magazine என்றவொரு புதிய பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார். லெவிஸ் அவரின் அரசியலுக்கான அறிமுகமாக அமைந்ததென்றால், இந்த பத்திரிகை அவரின் செய்தியாளருக்கான (இதழியலுக்கான-journalism) அறிமுகமாக இருந்தது. பிரிட்டன் மற்றும் அதன் காலனிகளுக்கு இடையிலான மோதல்கள் அதன் உச்சகட்டத்தை எட்டி வந்த நிலையில், பெயினின் செய்தியாளர் (இதழியல்) வாழ்க்கை தொடங்கியது.

இந்த காலத்தின் போது, பெயினின் கட்டுரைகள் பொதுவாக காலனி நாடுகளின் மீதான பிரிட்டனின் கொள்கைகளை விமர்சித்து இருந்தன, ஆனால் அவர் ஒருபோதும் சுதந்திரத்திற்கு அறிவுறுத்தவில்லை. பெரும்பாலும் யாருமே செய்யவில்லை. அமெரிக்கர்கள் தங்களைத்தாங்களே பிரிட்டிஷ்காரராக சிந்தித்தார்கள். ஆங்கிலேயர்களான தங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று அவர்கள் எண்ணியதால், காலனி நாட்டு அதிகாரிகளின் கைகளில் தங்களை ஒப்படைக்க அவர்கள் மறுத்தார்கள். 1775, ஏப்ரல் 19ல், லெக்சிங்டன் கூட்ட அரங்கத்திற்கு வெளியில் இருந்த அமெரிக்க போராட்டகுழுவின் மீது துப்பாக்கி சூடு நடத்த தளபதி ஜோன் பிட்கெயிர்ன் பிரிட்டிஷ் துருப்புகளுக்கு ஆணையிட்ட போது, இவை அனைத்தும் மாறின. அனைவராலும் அறியப்பட்ட, லெக்சிங்டன் யுத்தம் ஆங்கிலோ-அமெரிக்க உறவுகளில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

காங்கிரஸ் ஆயுதப்படைக்கு அழைப்பு விடுத்ததுடன், ஜோர்ஜ் வாஷிங்டனை அதன் படைகளுக்கு பொறுப்பாளராகவும் நியமித்தது. ஆயுதப்படைக்கு புகலிடமாக இருந்ததற்கு இடையில், பல அமெரிக்கர்கள் ஒரு தீர்வு சாத்தியம் என்று தொடர்ந்து எண்ணியதுடன், வெளிப்படையாக சுதந்திரம் குறித்து பேசவில்லை. பெயின் மட்டும், 1776 ஜனவரியில் தொடங்கப்பட்டிருந்த புரிந்துணர்வு (Common Sense) எனும் அவரின் துண்டறிக்கையில், அச்சமின்றி அந்த எண்ணத்தை எழுத்துக்களில் வெளியிட துணிந்தார்.

முதல் பதிப்பு இரண்டே வாரங்களில் விற்று தீர்ந்தது. பின்னர் பதிப்புரிமை பெற்ற பதிப்புகள் தோன்றின. அந்த உணர்வு அமெரிக்காவில் மட்டுமின்றி, மாறாக ஐரோப்பா முழுவதுமே பரவியது. ரஷ்யாவிலும் கூட பதிப்புகள் வெளியிடப்பட்டன.

அமெரிக்காவின் விடுதலைக்காக மக்கள் ஏற்கனவே கூட குரல் கொடுத்திருந்தார்கள். பெயின் முதலாவது ஆள் அல்ல. பெயினின் அழைப்பில் முக்கியமாக இருந்தது என்னவென்றால் சரியான நேரமும், ஒரு சுதந்திர அமெரிக்கா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்தும் தான்.

ஒரு நிலை-ஒழுங்கற்ற சிந்தனைகளை நெறிப்படுத்துவதில் பெயின் வெற்றி பெற்றார். சற்றே வெளிவர துடித்து கொண்டிருந்த ஒரு கருத்துக்கு அவர் அரசியல் உணர்வை அளித்தார். இவ்வாறு செய்ததன் மூலம், பெரியளவில் நாட்டிலும், காங்கிரஸிலும் விவாதங்களைத் தோற்றுவித்திருந்தார்.

முடியாட்சிக்கான முக்கிய யோசனையையும் ஏளனம் செய்த அவர், அரசியல் விவாதங்களை மிக தெளிவாக ஒரு குடியரசு திசையில் திருப்பினார். பெயின் புரிந்துணர்வு (Common Sense) எழுதும் வரை, பெரியளவில் ஒரு குடியரசு வடிவிலான அரசாங்கத்தை நிர்வகிப்பது சாத்தியம் என்று ஒருவரும் எண்ணவில்லை. அதுவரை, வெனிஸ் போன்ற நகர-அரசுகளில் அல்லது மிகப்பெரிய சுவிட்சர்லாந்து மாகாணங்களில் குடியரசுவாதிகள் தடை செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, ஒரு முழு தேசியத்தை வலியுறுத்தி ஓர் ஒருங்கிணைந்த குடியரசு குறித்து பேசுவதில் பெயின் தெளிவாக இருந்தார். இது இதற்கு முன் ஒருபோதும் செய்யப்படவில்லை. அவர், ஒரு நவீன கண்டம் கடந்த குடியரசு என்ற வகையில் அமெரிக்காவை கருதியதால், இந்த இருப்பத்தோராம் நூற்றாண்டில் நாம் வாழும் இந்த உலகை பெயின் குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைத்தார் என்று கூற முடியும்.

அதுவொரு முக்கிய சாதனையாக இருக்க முடியாது, ஆனால் பெயின் அதற்கும் மேலாக சென்றார்: அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அமெரிக்க காலனிகளின் போராட்டத்தை ஒரு சர்வதேச கேள்வியாக கண்டறிந்தார். "அமெரிக்காவின் விடயம் என்பது மனிதயினத்தின் விடயமாகும்," என்று அவர் எழுதினார். அவர் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் இருந்த காலனித்துவ அடக்குமுறைக்கு எதிரான மற்றும் ஐரோப்பாவில் இருந்த உள்நாட்டு கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்துடன் அதை பார்த்தார். அமெரிக்கா மனிதயினத்திற்கான ஓர் புகலிடமாக இருக்க வேண்டியிருந்தது.

அந்த முதல் மாதங்களில், புரட்சிகர படைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தால், பெயினின் நம்பிக்கைகள் எதற்கும் ஆகியிருக்காது. மேலும் அவர்கள் இருந்தார்கள் என்பதற்கான ஒவ்வொரு தோற்றமும் அங்கு இருந்தது. பலவீனமான பயிற்சியுடன், பலவீனமான சாதனங்களுடன் மற்றும் ஒவ்வொரு தோல்வியிலும் அவர்களின் நியாய சுமைகளுடன் இருந்தார்கள், ஆனால் கடினமானவர்கள் அவர்களுக்கு எதிராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் எதற்காக சண்டையிட்டு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டியதன் மூலம் இராணுவத்தின் நரம்புகளை திடமாக்குவதில் பெயினின் எழுத்துக்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தன.

இங்கிலாந்து உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அதுவரை ஒருபோதும் முயற்சிக்கப்படாத வழியில், அமெரிக்க நெருக்கடி என்றழைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான துண்டறிக்கைகளில், சாதாரண படைவீரர்களின் அரசியல் நனவை உயர்த்துவதில் அவர் ஒரு கருவியாக இருந்தார்.

உயர்ந்தளவில் பயிற்றுவிக்கப்பட்ட Hessian mercenaries படையினரை முகங்கொடுக்க தயாராகி இருந்த, Trentonல் கூடியிருந்த வாஷிங்டனின் படையினர்களுக்கு முதல் அமெரிக்க நெருக்கடி படித்து காட்டப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட அமெரிக்க சுதந்திரம் யுத்தத்தை நிறுத்தி விடவில்லை, ஆனால் பிரிட்டிஷ் அதிகாரம் வெற்றிகொள்ளமுடியாதது அல்ல என்று அது நிரூபித்தது. யுத்தம் அதற்கடுத்த ஆறு மாதங்களுக்கும் தொடர்ந்தது, ஆனால் பிரிட்டனுடனான போராட்டம் சுதந்திரத்திற்கான போராட்டம் என்று பெயின் எடுத்துக்காட்டிய இருந்தது போலவே, தொடர்ந்து வரும் யுத்தமும் எவ்வாறு போரிடப்பட வேண்டும் என்று அவர் எடுத்துக்காட்டினார்.

தங்களைத்தாங்களே அரசியல்வாதிகள் என்றும், அனைத்திற்கும் மேலாக சமமானவர்கள் என்றும் எண்ணிய குடிமக்களுக்கான ஒரு யுத்தமாக அது இருந்தது. ஐரோப்பாவின் பண்டைய ஆட்சிகளுக்கு இது அபாயகரமான யோசனையாக இருந்தது.

அமெரிக்காவின் புரட்சிகர யுத்தம் முடிவுடன், பெயின் அவரின் முதல் விருப்பான விஞ்ஞானத்திற்கு தற்காலிகமாக திரும்ப முடிந்தது. அவர் தம்மைத்தாமே பாலங்கள் கட்டுவது, இடிதாங்கிகள் அமைப்பது மற்றும் இயற்கை அதிசயங்களை ஆராய்வது ஆகிய திட்டங்களில் ஈடுபடுத்தி கொண்டார். பெயினைப் பொறுத்தவரை, இது அவரின் அரசியல் வாழ்க்கையிலிருந்து எந்த வகையிலும் தனித்துபட்டதல்ல. ஒரு வளமான அமைதியான உலகை உருவாக்கும் திறன் கொண்ட விஞ்ஞானத்தை ஓர் உலகளாவிய நாகரீகப்படுத்தும் சக்தியாக அவர் பார்த்தார்.

நியூயோர்க்கில் இருந்து கொண்டு, ஹார்லெம் நதியை இணைப்பதற்கான ஒரு திட்டத்தை அவர் உருவாக்க தொடங்கினார். அவருக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவி. முதல் விஷயம் அவருக்கு ஜோன் ஹாலிடம் இருந்து கிடைத்தது. சுய-கல்வியாளரும், ஆங்கிலேயருமான Boulton and Watt, John Wilkinson, Banks and Onions, and Walker's of Rotherham ஆகியவற்றிற்காக ஜோன் ஹால் பணியாற்றி இருந்தார்.

இந்த காலத்தில் தான் பெயின் ஓர் இரும்பு பாலத்திற்கான திட்டங்களை தயாரிக்க தொடங்கினார். மேலும் பென்சில்வேனியா அரசு சபையிலும் ஒரு மாதிரியை காட்சிக்கு வைத்தார். ஆனால் அவருக்கு தேவையான அளவை அமெரிக்க இரும்புத்துறையால் வினியோகிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. மிக முன்னேறிய இரும்பு தொழிற்சாலையும், பெரிய மரங்களின் பற்றாக்குறையும் கொண்டிருந்த ஐரோப்பா சரியான இடமாக இருந்தது. 1787ல், பெயின் பாரீஸிற்கு சென்றார். அங்கு அவரின் மாதிரி மற்றும் திட்டங்களை விஞ்ஞானத்திற்கான பயிலகத்தின் முன் சமர்ப்பித்தார். அது உற்சாகத்துடன் கவனிக்கப்பட்டது, ஆனால் அரசாங்கம் தோற்றநிலையில் திவாலாகி இருந்ததால், பாரீஸில் பாலங்கள் கட்டுவதற்கு அது பொருந்தாத நேரமாக இருந்தது. அந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. பெயினினதும் விதிவிலக்காகவில்லை.

"நடைமுறைக்கேற்ற இரும்பு மனிதர்களை" எதிர்பார்த்து, பெயின் இங்கிலாந்து திரும்பினார். மிகவும் நடைமுறைக்கேற்ற அதேசமயம் சிறந்த மூலதனம் கொண்டதாக Walker's of Rotherham இருந்தது. அந்த நிறுவனம் வடிவமைப்பை பார்வையிட அதன் பிரதிநிதிகளை இலண்டனுக்கு அனுப்பியது. 1788 அக்டோபரின் போது, Masboroughல் ஒரு பெரியளவிலான மாதிரி திட்டத்தில் பெயின் பணியாற்றி கொண்டிருந்தார். உள்ளூர் மந்திரி Francis Foljambeன் வீட்டருகில் இருந்த டோன் நதிக்கு குறுக்காக அவர் ஒரு பாலம் கட்ட வேண்டியதிருந்தது. இந்த திட்டம் ஒருபோதும் முழுமை பெறவில்லை, ஆனால் பெயின், தொடர்ந்து வால்கெரின் ஆதரவுடன், ஒரு பெரிய திட்டத்தை தேம்ஸூக்கு பாலம் அமைப்பதை மனதில் வைத்து கொண்டு இலண்டனில் பாலத்தை காட்சிக்கு கொண்டு வர முடிவெடுத்தார்.

பாலம் கட்டுவது மற்றும் இரும்பு உருவாக்குவது மற்றும் வால்கெரின் இரும்பு நிறுவனத்தின் வரலாறு ஆகியவை குறித்து என்னை விட நிறைய தெரிந்திருக்கும் பலர் இங்கு இருப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன், ஆனால் நான் பதிலளிக்க விரும்பும் கேள்வி என்னவென்றால்:

வால்கெர் போன்ற ஒரு "நடைமுறை இரும்பு மனிதர்", தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக நீண்டகாலத்திற்கு பின்னர் ஒரு புரட்சிக்கு தலைமை தாங்கிய ஒருவரான பெயினுடன் இணைந்து ஏன் பணியாற்ற வேண்டும்?

இதை புரிந்து கொள்ள, அக்காலத்தின் அரசியல் மற்றும் சமூக உறவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கான அமெரிக்க யுத்தம், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இருந்த பிரிட்டிஷ் மக்களின் பரந்த பிரிவுகளிடையே பெரியளவில் பிரபலமாகி இருந்தது. தங்களால் ஊழல் மற்றும் ஒடுக்குமுறை என்று அங்கீகரிக்கப்பட்டிருந்த ஓர் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்க காலனிகளின் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். பெயினால் வெளிப்படையாக வால்கெருடன் அரசியல் குறித்து விவாதிக்க முடிந்ததை, அவர்களுக்கு இடையிலான கடிதத்தொடர்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

சால்போர்டிலுள்ள தொழிலாள வர்க்க போராட்ட நூலகம், தோமஸ் பெயினினால் தோமஸ் வால்கெருக்கு எழுதப்பட்ட The Trial (வழக்கு) இன் ஒரு நகலைக் கொண்டிருக்கிறது, அதில் வால்கெர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

"ஒட்டுமொத்த அமைப்புமுறையே மோசடியானது (தவறு மற்றும் குறைகள்) என்பதை கொடுங்கோன்மையின் ஆதரவாளர்கள் எவ்வாறு உள்ளுணர்வில் நனவாக கொண்டுள்ளார்கள். அது சரியானதென்று அவர்கள் நனவுபூர்வமாக இருந்தால், அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும்."

பெயின் $1000க்கும் சற்று அதிகமான தொகை மட்டுமே அவரின் பெயரில் கொண்டிருந்தார், ஆனால் மூலதனம் வைத்திருந்த மனிதர்கள், அவரின் தொழில்நுட்ப திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருந்தார் என்பதுடன் அவரின் அரசியல் சிந்தனைகக்கும் அனுதாபிகளாக இருந்தார்கள். தொழில்துறை விரிவாக்கமும், மிக சமஅளவிலான அரசியல் அமைப்புமுறையும், ஒன்றையொன்று வலுப்படுத்தும் என்பது புரிந்து கொள்ளப்பட்டது. பல்வேறு சமூக பின்புலத்தையும், வளங்களையும் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒரு பொதுவான Whig நோக்கத்தில் ஒன்றிணைந்துவிட்டதாக, அவர்கள் தங்களைத்தாங்களே பாராட்டி கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட திட்டமோ அல்லது அமைப்பையோ கொண்டிருக்காமல், நவீன பார்வையில் ஒரு கட்சியால் எதையும் செய்ய முடியாது, Whigs ஒரு பரந்த அடிப்படையிலான அரசியல் கண்ணோட்டத்தை பிரதிபலித்தது.

பெயின் இலண்டனில் அவரின் பாலத்தை காட்சிக்கு வைத்தவுடன், ஒரு சில மாத இடைவெளியில் அனைத்தும் மாறிபோனது. 1789 கோடைகாலத்தில் பிரான்சில் நடந்த நிகழ்வுகள், பிரிட்டனில் உடனடியாக எச்சரிக்கையை எழுப்பவில்லை. ஜூனில், பொதுமக்கள் கூட்டம் அரசரை எதிர்த்தது. ஜூலையில், பாரீஸ் மக்கள் ஆயுதங்களை பறித்துக்கொண்டதுடன், பாஸ்ரியையும் கைப்பற்றியது. ஆகஸ்டில், தேசிய சட்டசபை பண்ணையடிமை முறையைக் கைவிட்டதுடன், அமெரிக்க மாதிரியின் அடிப்படையில் மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகளின் ஓர் உறுதிமொழியை ஏற்படுத்த தொடங்கியது. இங்கிலாந்தில் Whigs இந்த மாற்றங்களை வரவேற்றது.

அதற்கடுத்த ஆண்டின் வசந்தகாலத்தில், கருத்து மிக துல்லியமாக துருவமுனைப்படுத்தப்பட்டது. இந்த மாற்றத்தின் கிரியாவூக்கி ஒரு புத்தகமாக இருந்தது. அது எட்மண்ட் பேர்க்கேயின் பிரதிபலிப்புகளும், பிரெஞ்சு புரட்சியும் என்பது. எட்மண்ட் பேர்க்கே ஒரு Whig அரசியல்வாதியாகவும், அரசியல் பிரச்சாரகராகவும் இருந்தார். அவர் பெயினின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்தார். பலமுறை அவருடன் இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்த பெயின், பிரான்சிற்கான ஒரு சிறிய பயணத்தின் போது அவருக்கு உற்சாகத்துடன் கடிதம் எழுதினார். பேர்க்கே அவரின் அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை, எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதிலேயே, நவீன வார்த்தைகளில் கூறுவதானால், இடது அரசியலிலேயே செலவிட்டிருந்தார். அவர் 60 வயதில் இறந்திருக்காவிட்டால், கத்தோலிக்குகள் மற்றும் நாத்திகர்களுக்கும் வாக்குரிமை வழங்குவதை ஆதரித்த ஒருவரை, அயர்லாந்திற்கு சுயஆட்சி வேண்டிய ஒருவரை, அடிமைத்தனத்தை எதிர்த்த ஒருவரை, இந்தியாவை சூறையாடியதற்காக வாரன் ஹாஸ்டிங்கை இழித்து பேசிய ஒருவரை, பாராளுமன்ற சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்த ஒருவரை, அரசாங்க ஊழலை தாக்கிய ஒருவரை, முடியாட்சியின் அதிகாரத்தை பிடுங்க முயன்ற ஒருவரை, அமெரிக்க புரட்சிக்கு ஆதரவளித்த ஒரு தீவிரவாதியை வரலாறு நினைவில் கொண்டிருந்திருக்கும். ஆனால் 61வது வயதை எட்டும் ஆண்டில் தான், பேர்க்கே பிரெஞ்சு புரட்சியின் பிரதிபலிப்புகளை பற்றி எழுதினார். அந்த புத்தகத்தில் அவரின் மதிப்பு அடங்கியுள்ளது. அந்த புத்தகத்தில் தான் புரட்சி மற்றும் ஞானம் குறித்த, குறிப்பாக சமூக சமத்துவம் குறித்த, அனைத்து கோட்பாடுகளையும் பகிரங்கமாக அவர் அறிவித்தார். அவர் குறிப்பாக அதன் சர்வதேசியவாதம் குறித்து அஞ்சினார்.

பிரெஞ்சு சிந்தனைகள் பிரிட்டனில் தொற்றி பரவுவதை தடுக்க, அவர் "அவரின் சிறந்த நண்பர்களை கைவிட்டு, அவரின் மோசமான எதிரிகளுடன் சேரக்கூடும்" என்று அவர் தெரிவித்தார். மிக துல்லியமாக இதை தான் அவர் செய்தார். Whigsஐ உடைத்த அவர், பிரெஞ்சு புரட்சிக்கு ஆதரவை தொடர்ந்த வாழ்நாள் நண்பர்களிடமிருந்தும் துண்டித்து கொண்டார். பெயினும் அவர்களில் ஒருவராக இருந்தார்.

தொடக்கத்தில் ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக எது தோன்றியதோ, அதுவே பிரிட்டிஷ் அரசியலை மாற்றியமைத்த ஓர் அரசியல் திருப்புமுனையாக அமைந்தது. பதினேழாம் நூற்றாண்டில் ஸ்டெளர்ட்களுக்கு (Stuarts) எதிர்ப்பு காட்டாமல் வளர்ந்து கொண்டிருந்ததால், Whigsக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக பேர்ககே உணர்ந்தார். பிரிட்டன் உள்நாட்டு யுத்தம் முதலாக, ஒருபுறம் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் ஒரு கூட்டணியை நிர்வகித்து கொண்டும், மறுபுறம் ஆட்சியாளர்கள், நகர குறுங்குழுக்களுக்குடனும் மற்றும், பின்னர், தொழில்துறையினருடனும் இணைந்து செயல்பட அதற்கு சாத்தியப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் போது, தங்களின் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார கோரிக்கைகளை பயன்படுத்த முடியும் என Whig பெருமகன்கள் உணர்ந்தனர். தொழில்துறை புரட்சி ஒரு தொழிலாள வர்க்கத்தை உருவாக்கி விட்டிருந்ததாலும், நகர்புற மக்கள் என்ன செய்ய முடியும் என்று பிரெஞ்சு புரட்சி காட்டிவிட்டிருந்ததாலும், பிரெஞ்சு புரட்சி, சிலவேளைகளில் மிக அடிப்படையாக, தொழிற்துறை புரட்சியாக அந்த காலத்தை நெருக்கமாக கொண்டு வந்தது. பேர்க்கேயின் வித்தியாசப்படுத்தல் இந்த அரசியல் திருப்பத்திலிருந்து அடையாளம் காணப்படவேண்டும். பேர்கேயின் பிரதிபலிப்புகளுடன் நாம் நவீன பிரிட்டனின் வர்க்க அரசியலின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருக்கின்றோம்.

பேர்க்கேயின் வாழ்க்கையில் கடைசி ஏழு ஆண்டுகள், பிரிட்டனின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கையை திசைதிருப்பும் பிரச்சாரங்களில் செலவிடப்பட்டது. அதை செய்வதில் அவர் வெற்றி கண்டார். வெளிப்படையாக பேர்க்கேயுடன் தம்மைத்தாமே ஒத்திசைவாக்கி கொண்ட "இளையவரான" வில்லியம் பிட், உள்நாட்டில் எதிர்ப்பிற்கான எவ்வித அறிகுறியையும் கருணையில்லாமல் ஒடுக்கிய போதினும், பிரான்சுக்கு எதிராக ஒரு கடுமையான யுத்தத்தைத் தொடர்ந்தார்.

புரட்சியுடன் அனுதாபம் கொண்ட திறமையும், புத்தெழுச்சியும் பொருந்திய ஒரு நபர் கூட இல்லை என்பதால் இந்த நிகழ்வுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. கவிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளும் அதன் மிக புகழ்வாய்ந்த ஆதரவாளர்களாக இருந்தார்கள், ஆனால் பிரெஞ்சு புரட்சியுடனான ஐக்கியத்தில் பிரிட்டன் முழுவதும் அரசியல் சமூகத்தை தோற்றுவித்த பெருந்திரளான சராசரி மக்களும் அதில் இருந்தனர். பேர்க்கேயின் பிரதிபலிப்புகள் புத்தகம் 19,000 நகல்கள் விற்கப்பட்டன, ஆனால் அதற்கான பெயினின் மறுமொழியாக வெளியான மனிதனின் உரிமைகள், 200,000 நகல்கள் விற்றன. 1640களுக்கு பின்னர் இதுவரை அதுபோன்றொரு துண்டறிக்கை இதுவரை வரவில்லை.

அமெரிக்க புரட்சியின் போது, விடுதலை ஒப்பந்தத்தின் (Magna Carta) காலத்தைய பண்டைய அரசியல் அமைப்பின்கீழ் தமது உரிமைகளை பாதுகாக்கவும், பொதுச்சட்டத்தில் வைத்து பேணி காக்கவும் பல அமெரிக்கர்கள் தங்களைத்தாங்களே ஆங்கிலேயர்களாக பாவித்து கொண்டதால், பேர்க்கேயின் பழமைவாத Whiggismத்திற்கு புரட்சியை ஆதரிக்க தொடர்ந்து சாத்தியக்கூறுகள் இருந்தது. பேர்க்கே, ஒருசில குறிப்பிட்ட மக்கள் குழுவிற்கு மட்டும் பொருந்த கூடிய வரலாற்றுரீதியாக வரையறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளின் பக்கம் நின்றார், ஆனால் சுதந்திர பிரகடனமானது முற்றிலும் மாறுபட்ட முன்னோக்கை, மனிதனின் உலகளாவிய உரிமைகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் மகிழ்ச்சிக்கான தேடுதல் ஆகியவற்றில் அமைத்து கொண்டிருந்தது.

இரண்டு முன்னோக்குகளும் பொருத்தமில்லாமல் இருந்தன, ஆனால் அது உடனடியாக வெளிப்படவில்லை. அது பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தின் விளைவு மற்றும் பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்தின் தோற்றத்தினலும் பேர்க்கேயிற்கு தெளிவானது.

ஜாகோபின்களின் (Jacobins) மாதிரியில் அரசியல் சமூகங்களை அமைத்த உழைக்கும் மக்கள், பேர்க்கேயின் பார்வையில், "ஒரு காட்டுமிராண்டி கூட்டமாக" அல்லது "அசுத்தமான பெருங்கூட்டமாக" இருந்தார்கள். அவர்களும் அந்த வகையில் பிரதிபலித்தார்கள். 1792 நவம்பரில் Valmyல் பிரெஞ்சு இராணுவம் வெற்றி பெற்றதைக் கொண்டாட, ஷெப்பீல்டு வழியாக 5,000 தொழிலாளர்கள் பேரணி சென்ற போது, அவர்கள் பேர்க்கேயின் உருவம் ஒன்றை பன்றியில் ஏற்றி கொண்டுவந்தனர். வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பங்கினரும், வாக்குரிமையற்றவர்களில் பெரும்பான்மையினரும் தெளிவான ஜாகோபின்களும், நிரந்தரமான விழிப்பணர்வின் நோக்கங்கள் பற்றி மசோதாவை திருத்த முற்றிலுமாக தகுதியற்றிருந்தனர் என்று அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பேர்க்கேயின் பிரச்சாரம் ஒரு தொடர்ச்சியான ஒடுக்குமுறையை உருவாக வழிவகுத்து, பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன, கூட்டங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டன, அமைப்புகள் சட்ட விரோதமாக்கப்பட்டன. அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள், வெளியேற்றப்பட்டார்கள் மற்றும் தூக்கிலிடப்பட்டார்கள். அது 1819 ஆகஸ்டில் நடந்த பீட்டர்லூ படுகொலையை உச்சநிலைக்கு கொண்டு சென்றது.

அவர் காலத்திய பிரெஞ்சு அரசியல் தத்துவவாதிகளுடன் ஒப்பிடும் போது, பேர்க்கேயை பெரியளவில் கூறமுடியாது. அவர் எழுத்துத்திறன் அவரின் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தியது. ஆனால், பிரிட்டன் புரட்சிகர பிரான்சின் மீது யுத்தம் தொடர்ந்ததால், ஐரோப்பாவில் பெரும்பாலான பிற்போக்கான ஆட்சிகளுக்கு பிரிட்டன் நிதிவழங்குனராக இருந்ததாலும், பிரதிபலிப்புகள் ஓர் உலகளாவிய தாக்கத்தை கொண்டிருந்தது. எதிரிகளால் சூழப்பட்டு பிரான்ஸ் தனியாக நின்றது. அதன் உதவிக்கு வந்திருக்க கூடிய ஒரேயொரு மற்றொரு முன்னேறிய குடியரசும், அவ்வாறு செய்யவில்லை. பிரான்சுக்கு ஆதரவளிக்க கூறிய ஜேபர்சனின் ஆலோசனைக்கு இடையிலும், உள்நாட்டில் இந்த யுத்தத்தினால் புதிய நாட்டில் பழைமைவாத பிரிவுகளால் தூண்டிவிடக் கூடிய ஓர் இடைவிடாத குழப்பத்தை கருத்திலெடுத்து வாஷிங்டன் நடுநிலையாக இருந்தது. 1793ல் இருந்து 1815 வரை ஒரு குறுகிய இடைநிறுத்தத்துடன் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்த, ஏதோவொரு நேரத்திலோ அல்லது மற்ற நேரத்திலோ உலகின் பெரும் பாகங்கள் ஈடுபட்டிருந்த, சில மதிப்பீடுகளின்படி பிரெஞ்சு மக்களில் மூன்று பங்கினரை குறைத்து விட்ட, அந்த நீண்ட யுத்தம் இல்லாமல் இருந்திருந்தால், புரட்சியின் போக்கு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இந்த அனுபவம் யுத்த வெற்றியாளர்களை நோக்கியும், இராணுவத்தின் வெற்றி தளபதியான நெப்போலியன் போனாபர்டை நோக்கியும் வரலாற்று மதிப்பீடுகளை திருப்பியது. பிரிட்டன், குறிப்பாக 1975ன் பஞ்சத்திற்கிணையான நிலைமைகளில் புரட்சிக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தது என்பதை பின்னறிவைக் கொண்டு மிக எளிதாக உள்மதிப்பிட முடியும். ஒரு சிறிய வரலாற்று நிகழ்வுக்காக, அந்த காலத்திய மிக நவீன தொழிற்துறை மற்றும் பொது வளங்களை சேதப்படுத்தி கொண்டு, மூன்று வளரும் முதலாளித்துவ குடியரசுகளின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. இது பெயினின் பார்வையில் மிகவும் அதிகமாக இருந்தது.

பேர்க்கேயின் பிரதிபலிப்புகள் வெளிவருவதற்கு முன்பாகவே, பெயின் ஏற்கனவே அவரின் மனிதனின் உரிமைகள் புத்தகத்தை எழுத தொடங்கிவிட்டிருந்தார், ஆனால் பிரதிபலிப்புகள் வெளியான உடன், அப்போது இங்கிலாந்திற்கு திரும்பியிருந்த பெயின், அவரின் முந்தைய படிவத்தை பேர்க்கேயிற்கான பதிலுரையாக மாற்று பாணியில் திருப்பினார். மனிதனின் உரிமைகள் புத்தகம், ஒரு பெருந்திரளான மக்களுக்கான அரசியல் எழுத்தின், முற்றிலும் ஒரு புதிய வடிவத்தைக் குறிக்கிறது. அது உயர்ந்தமட்ட நடைமுறைப்பாணியில் இருக்கிறது. பேர்க்கே அரசியலில் இருந்து வெளியேற்ற விரும்பிய மக்கள் வகையினருக்காக பெயின் சொந்த பின்னணியை போன்று கொண்டிருந்த மனிதர்களான சாதாரண கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை நோக்கி அது திருப்பப்பட்டிருந்தது. புரிந்துணர்வை (Common Sense) போலவே, சர்வதேச அளவில் அதுவும் பெருமளவில் விற்பனையானது.

எவ்வாறிருப்பினும், பிரிட்டன் அரசாங்கம் அந்த புத்தகத்தை ஒரு மிகவும் சாதாரண கண்ணோட்டத்தில் தான் எடுத்துக்கொண்டது. அவதூறு தூற்றியதற்காக பெயினை விசாரணையில் தள்ளினார்கள். அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட ஒரு நீதியரசர் குழு பெயினைக் குற்றவாளி என்று முடிவு செய்தது. அப்போது அவர் பிரான்சில் இருந்தார். இருந்தபோதினும், தீர்ப்புக்கு பின்னர் அவரின் வழக்கறிஞ்ஞர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்து தனது வாகனத்தில் லண்டன் தெருக்களில் வந்தபோதும் ஆதரவாளர்களின் கூட்டம் அவரைப் பாராட்டியது. தீவிற்கு அப்பால் (பிரான்சில்), பெயினுக்கு ஒரு கதாநாயனைப் போல விருந்துபச்சாரம் நடத்தப்பட்டது. குடிமகன் உரிமை அளிக்கப்பட்டு, தேசிய மாநாட்டில் ஒரு பிரதிநிதியாகவும் ஆக்கப்பட்டார்.

ஆட்சியாளர்களின் சதிகளாலும், நெருக்கமான அண்டை நாடுகள் இல்லாமல் செய்ததாலும், பண்டைய ஆட்சியை மீண்டும் ஸ்தாபிப்பதன் மூலம் அவர்களின் சொந்த நலன்களை அதிகரிப்பதற்கான தீர்மானத்தாலும் அவர் குடிமகனாக ஆகியிருந்த நாடு அச்சுறுத்தப்பட்டது. பிரான்ஸ் தனித்துவிடப்பட்டது; அதன் பொருளாதாரம் மற்றும் செலாவணி பொறிந்து வந்தது. இந்த உண்மைகள் புரட்சியின் வரலாற்றிற்கு நிறம் கொடுத்தன. பிரெஞ்சு புரட்சியாளர்கள், ஓர் அவசர யுத்தகால ஆட்சியை உருவாக்க வேண்டிய மற்றும் கடுமையான முறைமைகள் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தொடர்ந்து தள்ளப்பட்டார்கள். அதீத அச்சத்தின் விளைவாக பெரிய பயங்கரங்கள் ஏற்பட்டன.

1792 செப்டம்பரில், அன்னிய இராணுவத்திற்கு பாரீஸிற்கான சாலை திறந்து விடப்பட்டதுடன், பாரீஸ் மக்களின் மிக ஏழ்மையான பிரிவினர் Sans Culottes, நகரத்தைக் காக்க வழித்தடைகளை அமைக்க விரைந்தனர்; அத்துடன் அதற்குள்ளிருந்து தங்களைத்தாங்களே பாதுகாக்க, அவர்கள் விரைவாக ஆட்சிஅதிகார கைதிகளை தூக்கிலிட தொடங்கினார்கள். ஜெபர்சன் குறிப்பிடுவது போல, புரட்சியை காப்பாற்ற "மக்கள் ஆயுதமேந்திய" வேண்டிய தேவைக்குத் தூண்டிவிடப்பட்டார்கள். "துப்பாக்கி ரவைகள் மற்றும் குண்டுகளின் அளவிற்கு குருட்டுத்தனமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாக குருட்டுத்தனம் கொண்ட ஓர் இயந்திரமாக அது இருந்தது," என்று அவர் தெரிவித்தார். ஆனால் புரட்சியின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து Sans Culottes அவசியமாக தேவைப்பட்டது. மேலும் ஜாகோபின்கள் மட்டும் தான் இந்த சமூக சக்தி உணர்வை அளித்த ஒரேயொரு அரசியல் குழுவாக இருந்தது. ஜாகோபின்கள் மற்றும் கிரோடின்களுக்கு (Girondins) இடையில் தொடர்ந்த மோதலில், பெயின் கிரோடின்களுடன் இணைந்திருந்ததால் அவர் அவர்மீதே அவநம்பிக்கை கொண்டார்.

சமூக அளவில், ஜாகோபின்கள் மற்றும் கிரோடின்களுக்கு இடையில் மிக சிறிய வேறுபாடு மட்டுமே இருந்தது. புரட்சியின் போக்கிற்கு அவர்கள் அளித்த பிரதிபலிப்பில் தான் அவர்களுக்கிடையிலான வேறுபாடு இருந்தது. 1792 வாக்கில், ஆரம்பகாலத்தில் அதன் தலைவர்கள் மத்தியில் இருந்த பிரபலங்கள், தயங்கி கொண்டிருந்தார்கள் என்பதுடன் நிகழ்வுகளின் போக்கை பின்னிறுத்தவும் விரும்பினார்கள். Sans Culottes உருவாவதை அனைத்து சொத்துக்களுக்குமான ஓர் அச்சுறுத்தலாகவும் அவர்கள் பார்த்தார்கள். புரட்சிக்கு எதிராக முடியாட்சிவாதிகளுடன் சதி செய்யவும் அவர்களில் சிலர் தயாரானார்கள். அவர்களில் பெயினும் ஒருவராக இருந்தார். ஆனால் அரசர் தூக்கிலேற்றப்படுவதற்கு எதிராக அவர் வாதிட்டார். சில கோணத்தில், பிரெஞ்சு புரட்சி அதன் நீண்டதூர போக்கில் பெயினை பின்னுக்கு தள்ளிவிட்டு சென்றது.

ஆனால் பெயினின் பண்பை சிறிது விரிவாக பார்ப்பது மதிப்புள்ளதாக இருக்கும். அந்த செல்வ குடும்பத்தால் 1791ல் வாரென்னிக்கு (Varenne) விமானம் ஏற முடியாமல் போன பின்னர், லூயி நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டவர்களில் பெயினும் ஒருவராக இருந்தார். அதுவரை குடியரசுவாதம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாத அந்த காலத்தில், குடியரசு சமூகத்தை உருவாக்கிய ஒரு சிறு குழுவில் அவரும் ஒருவராக இருந்தார். 1792ல், லூயி அவரின் நாட்டுக்கு எதிராக சதி செய்ததற்காக விசாரணை நடத்த ஆதரவாக அவர் வாதாடினார். அதற்கடுத்த ஆண்டில் லூயி இன் தண்டனையை எதிர்த்தார், ஏனெனில் அவர் மனதை மாற்றி கொண்டார் என்பதல்ல, மாறாக, லூயியை நீக்குவதானது, சிம்மாசனத்திற்கு அவர்களின் கோரிக்கையை முன்னிருத்த அவரின் சகோதரரை அனுமதிக்கும் என்பதை அவர் உணர்ந்தார். இரண்டு விஷயங்களிலுமே வழக்கு மற்றும் தூக்கு பற்றிய கேள்வியில் பெயின் ஐரோப்பிய வகையில் கேள்வியை பார்த்தார். அந்த வழக்கானது, பிரான்சுக்கு எதிராக ஐரோப்பாவின் மற்ற முடிசூடியவர்கள் செய்த சதியின் வழியை, குறிப்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த வழியை வெளிப்படுத்த கூடும். லூயியை சிறையில் வைப்பதால், யுத்தத்திற்கு பின்னர் அவரை நாடு கடத்துவதால், பிரான்சுக்கு எதிராக சதி வலுப்படுத்தப்படுவதை தடுப்பது சாத்தியமாகும் என்று அவர் எண்ணினார். லூயி உயிரோடு இருந்திருக்கலாம், ஆனால் ஒரு சாதாரண குடிமகனின் அந்தஸ்திற்கு அவர் குறைக்கப்பட்டார். அந்த சூழ்நிலையில் அவரின் அரசியல் மதிப்பீட்டின்படி, பெயின் தவறாக இருந்திருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் அவரின் குடியரசு கொள்கைகளில் இருந்தோ அல்லது முடியாட்சிக்கு அவரின் எதிர்ப்பிலிருந்தோ விலகவில்லை.

1793 கோடையில், கிரோடின் (Girondin) உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆண்டின் இறுதியில், பெயினும் கூட சிறையில் இருந்தார். அவர் காய்ச்சலினால் இறந்திருக்க கூடும், அத்துடன் சந்தர்ப்பவசத்தால் தூக்கு தண்டனையிலிருந்தும் தப்பித்தார். 1796 ஜூலையில் ரொபேஸ்பியரின் (Robespierre [Thermidor]) வீழ்ச்சியுடன், பெயின் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க தூதராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த ஜேம்ஸ் மோன்ரோ, பெயினின் உடல்நலத்தை குணப்படுத்த அவரை தம் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அவரின் குறைநிலையிலும் கூட, பெயினின் அறிஜீவி சகவாசிகள் அவரை கைவிடவில்லை. அவரின் தத்துவார்த்த புரிதல் கூர்மையாகவும், எப்போதும் போல சவால் விடுவதாகவும் இருந்தது. அந்த வேளையில் எழுதிய The Age of Reason (பகுத்தறிவின் காலகட்டம்), பெயினின் சிறந்த படைப்புகளில் இறுதியானதாக அமைந்தது. பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் பிரிட்டனில் அது சிறந்த விற்பனையை எட்டியது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் மதம் மற்றும் சடவாதம் குறித்த பருப்பொருள், சிந்தனை பற்றிய விமர்சனத்தை உயர்த்துவதில் பங்களிப்பு செய்தது. அவர் சிறைப்பிடிக்கப்படுவதற்கு சற்று முன்னர் அவர் அதன் முதல் பாகத்தை முடித்தார். "My fellow citizens of the United States"க்கான( அமெரிக்காவின் எனது சக குடிமக்கள்) அர்பணிப்பு லுக்சம்பேர்க் சிறையில் எழுதப்பட்டது, Monroes' இல்லத்தில் அவர் சுகப்பட்டு வந்த போது இரண்டாம் பாகம் எழுதப்பட்டது. சிலவேளைகளில், நாம் சுயசரிதம் எழுத அது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அது, காரணங்களின் மூலம் பிரபஞ்சத்தின் வடிவத்தை புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானம் மற்றும் மனித திறமையின் நம்பிக்கைக்கான ஒரு தனிப்பட்ட சான்றாக உள்ளது.

"யூத தேவாலயத்தாலோ, ரோமன் தேவாலயத்தாலோ, கிரீக் தேவாலயத்தாலோ, துருக்கிய தேவாலயத்தாலோ, புரோட்டெஸ்டன்ட் தேவாலயத்தாலோ, அல்லது எனக்கு தெரிந்த வேறு எந்த தேவாலயத்தாலோ அறிவிக்கப்படும் கோட்பாட்டை நான் நம்புவதில்லை," எனது சொந்த சித்தனையே எனது தேவாலயம் ஆகும்'' என்று அவர் எழுதினார்.

ஒரு இளைஞராக அவர் எவ்வாறு விஞ்ஞானத்திடம் ஈர்க்கப்பட்டார் என்று அவர் நினைவுகூர்கிறார்:

"அரசியல் என்றழைக்கப்படுவதில் எனக்கு எவ்வித சார்பும் கிடையாது. சந்தோசமான வாழ்க்கை (Jockeyship) என்ற வார்த்தையில் இருப்பதை விட, வேறு எவ்வித யோசனையும் என் மனதிற்கு கிடைக்கவில்லை. ஆகவே என் சிந்தனையை அரசாங்க விஷயங்களில் திருப்பிய போது, எனக்கு கற்று கொடுக்கப்பட்ட நியாய மற்றும் தத்துவ கோட்பாடுகளுக்கு பொருத்தமான ஓர் அமைப்பின் வடிவத்தை எனக்கு நானே உருவாக்க வேண்டி இருந்தது."

அவர் அவரின் சொந்த வாழ்க்கை குறித்து ஒரு வரலாற்று மதிப்பீட்டை உருவாக்குகிறார். ஒரு உலகளாவிய நோக்கில் அவரின் சொந்த பங்களிப்பை அமைக்கிறார்:

''அமெரிக்காவின் விவகாரங்களில் உலகிற்கு ஒரு பரந்த காட்சி திறப்பதை நான் பார்த்தேன், அல்லது குறைந்தபட்சம் நான் பார்த்ததாக நினைத்தேன். இங்கிலாந்துக்கு பொருத்திய வகையில் அமெரிக்கர்கள் பின்தொடர்ந்து வந்த திட்டத்தை அவர்கள் மாற்றி, அவர்களை அவர்களே சுதந்திரமாக அறிவித்தால் ஒழிய, புதிய பிரச்சனைகளின் பெருக்கத்தில் அவர்களை அவர்களே இழுத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், மனிதகுலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த வளங்களையும்

அவர்கள் தீர்த்து விடுவார்கள். அந்த முனைவுகளிலிருந்து தான் புரிந்துணர்வு (Common Sense) என்ற பெயரில் நான் அந்த படைப்பை வெளியிட்டேன். இதுவரை அதுபோல் வேறொன்றையும் பிரசுரிக்காத வகையில் அதுவே முதல் படைப்பாக இருந்தது. இதுவரை என்னை நானே ஆராய்ந்த வகையில், நான் ஒருபோதும் எந்த விஷயத்திலும், அமெரிக்காவின் விவகாரங்களில் இல்லாமல் இருந்தாலும் கூட, எதிலுமே ஓர் எழுத்தாளராக உலகில் அறியப்படவில்லை. 1775ம் ஆண்டு இறுதியில் நான் புரிந்துணர்வில் (Common Sense) எழுதினேன். அதை 1776 ஜனவரி முதல் நாளில் பிரசுரித்தேன். அதற்கடுத்து வந்த ஜூலை நான்காம் தேதி சுதந்திரம் அறிவிக்கப்பட்டது."

அவர் தாம் மரணிக்க இருப்பதை உணர்ந்த நிலையிலும், கிறிஸ்துவத்திற்கு இணங்க மறுக்கிறார்:

''ஒரு யோசனையை சிந்திப்பதற்கும், பிரதிபலிப்புகளால் அதற்கேற்ப செயல்படுவதற்கும் நான் தகுதி பெற்ற காலத்திலிருந்து, கிறிஸ்துவ அமைப்பின் உண்மையை நான் சந்தேகித்ததில்லை அல்லது அதுவொரு வித்தியாசமான விவகாரம் என்றும் எண்ணியதில்லை; அது என்னவென்று குழப்பமாக எனக்கு தெரியும், ஆனால் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் போது, கிறிஸ்துவ ஆலயத்தின் சிறந்த பக்தராக இருந்த என் உறவினரால், கடவுள் குழந்தையின் மரண மீட்பு என்று அழைக்கப்படும் ஒரு பகுதியின் மீது வாசிக்கப்பட்ட ஒரு பேருரையைக் கேட்டேன். பேருரை முடிந்த பின்னர், நான் தோட்டத்திற்கு சென்றேன், நான் தோட்டத்தின் படிகளில் கீழிறங்கி சென்று கொண்டிருந்தேன் (என்னால் துல்லியமாக அந்த இடத்தை நினைவுபடுத்தி பார்க்க முடிகிறது), நான் எதை கேட்டேனோ அதை மீண்டும் நினைத்த போது நான் அதிர்ச்சியடைந்தேன், வேறு எந்த வழியிலும் பழிவாங்க முடியாத போது தன் மகனையே கொன்ற ஓர் உணர்ச்சிவயப்பட்ட மனிதனை போன்று எல்லாம்வல்ல கடவுள் செயலை உருவாக்குவது தான் அது என்று எனக்குநானே எண்ணினேன். ஒரு மனிதன் அவ்வாறான செயலை செய்தால் அவர் தூக்கிலிடப்படுவார் என்பது எனக்கு நிச்சயமாக தெரிந்தது, எதற்காக அதுபோன்ற பேருரைகள் நிகழ்த்தப்பட்டன என்று எனக்கு புரியவில்லை. கவலையற்ற குழந்தை பருவத்தில் எதுவும் சார்ந்திருக்காத எண்ணங்களில் இதுவும் ஒன்றல்ல. இதுபோன்றதொரு செயலை செய்வதற்கு கடவுள் மிக நல்லவர் என்றும், எவ்வித தேவையின் போதும் அதை செய்வதற்கு அவர் மிகவும் வல்லமைபடைத்தவரும் கூட என்று நான் கொண்டிருந்த எண்ணத்திலிருந்து, அது எனக்கொரு முக்கிய பிரதிபலிப்பாக இருந்தது. இப்போதும் அதே போன்று தான் நான் நம்புகிறேன்; ஒரு குழந்தையின் மனதிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய எதையும் கொண்டிருக்கும் மதத்தின் எவ்வித அமைப்புமுறையும் ஓர் உண்மையான அமைப்புமுறையாக இருக்க முடியாது." என்று அவர் எழுதினார்.

ரொபேஸ்பியரின் வீழ்ச்சிக்கு பின்னரும் கூட, பெயின் பாதுகாப்பாக இல்லை. ஒரு புதிய அபாயம் எழுந்தது, மிகவும் அபாயகரமானதாக கூட இருக்கலாம். புரட்சி ஒரு பிற்போக்குவாத திசையில் திரும்பியது. 18ம் புரூமர் 1799ல், போனபார்ட்டை பதவிக்கு கொண்டு வந்த சதியுடன், பெயின் மீண்டும் ஐயுறவிற்குட்பட்டார், புரட்சி முடிந்துவிட்டதாக நெப்போலியன் அறிவித்தார். 1802வாக்கில், மீண்டும் அமெரிக்கா திரும்பிய பெயின், அங்கு ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இறக்க நேர்ந்தது.

பெயினின் வாழ்க்கையை நாம் எவ்வாறு மதிப்பிட வேண்டும்?

அவரின் வாழ்க்கை ஒரு தோல்வியாக பார்க்கப்பட கூடும். பிரிட்டன் கப்பற்படைக்கு பீரங்கி உருவாக்கி அளித்து வால்கெர் பணக்காரர் ஆனார். நெல்சனின் யுத்தக்கப்பலின் முன்னணியில் இருந்த பீரங்கிகளில் எண்பது, வால்கெரினால் வெற்றி கொள்ளப்பட்டது. பண்ணைகளில் வழக்கமான ஒரு நடைபயணத்தில் கூட வால்கெர் பீரங்கிகளின் பரிசோதனை வெடிப்புகளைப் பார்க்க முடிந்தது. பெயின் பெரியளவில் செல்வம் ஈட்டவில்லை. ஒரு பாலம் கட்டுமானராக இருந்து செல்வத்தை சேர்த்திருக்ககூடியதும் நடைமுறையில் சாத்தியமாகவில்லை. அவரின் புத்தகங்களில் இருந்தும் அவர் பெரிதாக ஒன்றும் பெறவில்லை, புரட்சிகர காரணங்களுக்காக அவர் அவரின் சம்பாத்தியங்களை அளித்துவிட்டார்.

அரசியல்ரீதியாக கூட அவரின் சாதனைகள் மங்கலாக பார்க்கப்படுகிறது. அவர் மரணப்படுக்கையில் இருந்த போது, அவரின் நாத்திகம் குறித்த வார்த்தைகளை திரும்ப பெற முயற்சித்து, கிறிஸ்துவ மந்திரிகளால் அவர் தொந்தரவு செய்யப்பட்டார். அவரின் மரணத்தின் போது, அவர் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தூற்றப்பட்டார். அவரின் நீண்ட கால நண்பரான ஜேப்பர்சன் கூட, தாமஸ் பெயின் என்ற பெயருடன் வெளிப்படையாக தொடர்பு கொண்டிருந்தது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது.

ஆனால் உண்மையில், பெயினின் சாதனைகள் அவரின் நெருக்கமான சமகாலத்தவர்களின் பெரிய வெற்றிகளை விட மிக கணிசமாக உயர்ந்திருந்தன. இரண்டு நவீன குடியரசுகளை உருவாக்குவதில் அவர் பங்கு வகித்த பகுதியில் பெயினின் வெற்றி இருக்கிறது. அரசியல் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருந்ததோ, நடத்தப்பட்டு வந்ததோ அந்த பாதையை அவர் மாற்றினார். பெயினுக்கு முன்னால், அரசியல் என்பது தனியுரிமையைக் காப்பாற்றுவதற்கானதாக இருந்தது; பெயினுக்கு பின்னர், பெருந்திரளான மக்கள் குரல் கொடுக்க தொடங்கியதுடன், அவர்களும் அரசியலில் ஈடுபட தொடங்கினார்கள்.

பெயினின் புகழ், அடுத்த பெரிய புரட்சி எழுச்சியில், அமெரிக்க உள்நாட்டு யுத்த காலத்தில் புத்துயிர் பெற தொடங்கும். மேலும் முதலாவது தொழிலாள வர்க்க இயக்கமான Chartism த்தின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். அரசியல் நிரலில் சமூக சமத்துவம் எப்போதெல்லாம் பின்னோக்கி தள்ளப்படுகிறதோ, அப்போதெல்லாம் பெயினின் நினைவு மதிக்கப்படும்.

அவரின் வெளிப்படையான தோல்விகள், அக்காலத்தில் சாத்தியப்பாடுகளால் தமது விருப்புகள் பறிக்கப்பட்டிருந்தவர்களின் தோல்விகளாகும். அனைவருக்கும் செல்வவளங்களை உறுதிப்படுத்த மிக நவீன உற்பத்தி நுட்பங்களைப் பயன்படுத்தி சமூக சமத்துவத்தின் அடிப்படையில் ஓர் அமைதியான உலகளாவிய நாகரீகத்திற்கான அவரின் பார்வை, அப்போது எட்ட முடியாமல் போனது, ஆனால் மதிப்புமிக்க அது உயிர்வாழ போராடி கொண்டிருக்கிறது. தோல்விகளை விட, அவை இன்றும் நிறைவேறாத பெயினின் வாழ்க்கை நோக்கங்களாக உள்ளன. இறுதியாக, பெரிய உற்பத்தியாளர்கள் செய்ததை விட, நிலைபேறுடைய நவீன உலகை பெயின் படைத்துக்காட்டினார். நாம் இன்னும் பல விஷயங்களில் பெயின் காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved