World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Government fears crisis will spur political radicalisation

Germany's Left Party and the European elections

ஜேர்மனியின் இடது கட்சியும் ஐரோப்பியத் தேர்தல்களும்

By Lucas Adler
13 June 2009

Use this version to print | Send feedback

கடந்த ஞாயிறு நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியில் இருந்து ஜேர்மனியின் இடது கட்சி ஆதாயம் பெறவில்லை என்பது தெளிவாகியது. ஒரு இரட்டை இலக்கு முடிவு வரும் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் அதற்கு 7.5 சதவிகித வாக்குகள்தான் கிடைத்துடன், ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்திலும் கடைசி இடத்தைத்தான் பெற முடிந்தது.

ஜனநாயக சோசலிச கட்சி (PDS) எனப்படும் இதன் முன்னோடிக் கட்சி ஐரோப்பியத் தேர்தல்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பெற்ற வாக்குகளை விட 1.4 சதவிகிதம்தான் இடது கட்சியால் அதிகமாக பெற முடிந்தது. இதையொட்டி குறைந்தது 10 சதவிகிதம் என்று அறிவித்திருந்த அதன் இலக்கை அது அடைய முடியவில்லை. மொத்த வாக்குகள் என்ற நிலையில் அது 390,000 புதிய வாக்காளர்களை பெற்றது. மேற்கு மாநிலங்களில்தான் கட்சிக்கு புது ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும். ஆனால் நாட்டின் கிழக்குப் பகுதியில் கணிசமான இழப்புக்கள் அதற்கு இருந்தன. கிழக்கில் இதன் முன்னோடி கட்சியான ஸ்ராலினித்திற்கு பிந்தைய PDS இன் ஆதிக்கத்தினால் அங்கு முன்பு இடது கட்சிக்கு அங்கு கணிசமான ஆதரவைப் பெற முடிந்தது.

மேற்கு மாநிலங்களில் இடது கட்சி சராசரியாக 2 முதல் 4.6 சதவித வாக்குகளைப் பெற முடிந்தது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு PDS பெற்ற மொத்தத்தைவிட இரு மடங்கு ஆகும். பவேரியா, பாடன் வூட்டம்பேர்க் ஆகிய இடங்களில் இடது கட்சி தன் வாக்குகளை மூன்று மடங்கு அதிகமாக்கிக் கொண்டது. சிறிய சார்லாந்தில் ஆறு மடங்கு அதிகம் பெற்றது. சார்லாந்த் (12 சதவிகிதம்), ஹாம்பேர்க் (6.7 சதவிகிதம்) ஆகிய மாநிலங்களில்தான் இடது கட்சி 5 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை பெற முடிந்தது.

மெக்லென்பேர்க்-மேற்கு பொமரேனியா ஆகியவை தவிர அனைத்து கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களிலும் 2004 உடன் ஒப்பிடும்போது இடது கட்சி வாக்குகளை இழந்துள்ளது. பேர்லின், பிராண்டன்பேர்க், சாக்சனி, சாக்சனி-அன்ஹால்ட் மற்றும் தூரிஞ்கியா ஆகியவற்றில் மொத்தம் 100,000 வாக்குகளை இழந்தது. குறிப்பாக இடது கட்சி அதிகாரத்தில் இருந்த பகுதிகளில் எல்லாம் வாக்காளர்கள் பெற்ற அனுபவத்தை ஒட்டி இது நிகழ்ந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஜேர்மனியின் இளம் வாக்காளர்களிடையே கட்சி அதன் செல்வாக்கை இழந்துள்ளது.

தேர்தல் முடிவின் முக்கியத்துவம் ஐரோப்பிய தேர்தலை 2005 கூட்டாட்சி (Bundestag) தேர்தல் முடிவுடன் ஒப்பிட்டால் நன்கு தெளிவு ஆகும். அப்பொழுது PDS மற்றும் அதன் மேற்குப்புற பங்காளியுமான தேர்தல் மாற்றீடும் (WASG- இவற்றில் பல தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் முன்னாள் SPD அலுவலர்களும் இருந்தனர்) சமூக ஜனநாயகம்-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் சமூகநல எதிர்ப்புக் கொள்கைகளுக்கு பெருகிய முறையில் ஏற்பட்ட எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில் விரைவில் ஒன்றாக சேர்ந்து இடது கட்சியை அமைத்தன. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கடந்த வாரத் தேர்தலில் பெற்றதை 8.7 சதவிகித விட மொத்த வாக்குகளின் 12% வாக்குகளை பெற்றது.

இந்தப் பின்னணியில் தற்போதைய தேர்தலில் இடது கட்சியின் முடிவை ஆராய்ந்தால், முடிவு தெளிவாக உள்ளது: தொழிலாளர்கள், வேலையின்மையில் வாடுபவர் மற்றும் Hartz IV சமூகநல உதவித் தொகைகளை நம்பி இருப்பவர்கள் கட்சியை பெருகிய முறையில் உதறித் தள்ளிவிட்டனர். உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில், கட்சியின் இடது அலங்காரச் சொற்களை வீச்சுக்களின் மத்தியிலும் கட்சியின் வலதுசாரிக் கொள்கை இன்னும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வங்கிகளை மீட்கும் பொதிகளுக்கு இடது கட்சி ஆதரவு கொடுத்து, Hartz IV சட்டங்களை அகற்றும் திட்டங்களையும் கைவிட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடன் இணைந்து இது தொழிலாளர்கள் வேலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கு எதிராகவும் நடந்து வருகிறது.

இவ்விதத்தில் ஐரோப்பியத் தேர்தலில் முடிவு, இடது கட்சியை எதிர்கொண்டுள்ள அடிப்படை சங்கடத்தின் வெளிப்பாடு ஆகும். பல தசாப்தங்களாக சமூக ஜனநாயகம் தான் மேற்கு ஐரோப்பாவில் வர்க்கமோதல் தலையெடுக்காமல் செய்து சமூக சமரசக் கொள்கை மூலம் முதலாளித்துவ ஒழுங்கைக் காப்பதில் முக்கிய கருவியாக உள்ளது. பூகோளமயமாகிய பொருளாதாரம் அத்தகைய கொள்கையின் அடிப்படையை அகற்றியுள்ளது. சமூக ஜனநாயகம் அதற்கு பிரதிபலிப்பாக தீவிர வலதிற்கு மாறியுள்ளது.

சமூக ஜனநாயக கட்சி அலுவலர்களில் ஒரு குழு, முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் தொழிற்சங்க அதிராகரத்துவத்தில் நீண்ட காலம் இருந்தவர்களும் சமூக ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு பதிலாக இடது கட்சியை நிறுவினர். குழுவினரின் நோக்கும் சமூக ஜனநாயகத்தின் சீர்திருத்தவாதத்தின் தோல்வியினால் படிப்பினைகளை பற்றுவது என்று இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை தடுக்கும் வகையில் அத்தகைய திட்டத்தை புதிப்பிப்பது இயலும் என்ற போலித் தோற்றங்களை எழுப்பியது ஆகும். கட்சித் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைனின் இடது அலங்காரச் சொற்களின் நோக்கமும் இதுதான். ஆனால் இடது கட்சியின் அரசியல் நடைமுறை அதன் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது.

முதலாளித்துவத்தின் நெருக்கடி அதிகரிக்கையில், இடது கட்சி சமூக ஜனநாயக கட்சியின் சுவடுகளைப் பின்பற்றி இன்னும் வலதிற்கு நகர்ந்துள்ளது. இது உள்பூசல்கள் இல்லாமல் நடத்தப்பட முடியாதது.

பல இடது கட்சி அலுவலர்களுக்கும் குறிப்பாக லிஸ்பன் ஒப்பந்தத்தை அது நிராகரித்தது, தோல்வியுற்ற ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு மாற்று கொடுத்தல் என்ற கட்சித் தலைமையின் இடது அலங்காரச் சொற்கள் சற்றே அதிகமானவை என்ற கருத்து உள்ளது. இதையொட்டி கட்சியின் முன்னாள் முக்கிய ஐரோப்பிய பிரதிநிதியான Sylvia Yvonne Kaufmann மற்றும் இரு மாநிலப் பாராளுமன்ற பிரதிநிதிகளும் கட்சியை விட்டு தேர்தலுக்கு சற்று முன்னதாக விலகிவிட்டனர்.

தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு மற்றொரு முன்னாள் ஐரோப்பிய பிரதிநிதி Andre Brie கட்சியின் தலைவர் லாபொன்டைனை Der Spiegel இதழில் கடுமையாகத் தாக்கினார். லாபொன்டைனின் சர்வாதிகாரப் போக்கு மற்றும் அதிகார அரசியல் முறை "இடது கட்சியை அரசியல் திறைமையற்ற தன்மைக்கு" ஒதுக்கிவிடும் அச்சத்தைக் கொடுத்துள்ளது என்று Brie அறிவித்தார். லாபொன்டைனுக்கு "தாழ்ந்து நிற்பவர்களால்" கட்சியின் மீது மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது, இவர்கள் அதிகாரத்தை "தங்கள் அதிகார விளையாட்டு மற்றும் பதவிகளுக்குப் போட்டி என்று பயன்படுத்துகின்றனர் என்றார்.

சில காலத்திற்கு Brie ஜனநாயக சோசலிச கட்சியின் (PDS) முக்கிய "அறிவுஜீவி" என்று கருதப்பட்டார். 1969ல் கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிச சோசலிஸ்ட் ஐக்கிய கட்சியில் (SED) அவர் சேர்ந்தார். கிழக்கு ஜேர்மனியின் அரசாங்க அமைப்பின் உத்தியோகபூர்வ ஆலோசகராக இருந்து, அரசாங்கப் பாதுகப்புப் பிரிவான Stasi க்கு உத்தியோகபூர்வமற்ற ஊழியராகவும் செயல்பட்டார். எவ்வித முற்போக்கு அலங்காரச் சொற்களையும் தவித்து சோசலிசத்தில் இருந்து கட்சியை வார்த்தையளவில் ஒதுக்க விரும்பும் இடது கட்சிப் பிரிவில் இவர் உள்ளார்.

அத்தகைய நிலைப்பாடு முதிர்ச்சியடையாத தன்மை உடையது என்று லாபொன்டைன் கருதுகிறார். ஆனால் Brieயுடன் அவருக்கு அடிப்படை வேறுபாடுகள் ஏதும் கிடையாது. தேர்தல் முடிவு பற்றி முழுக்கட்சித் தலைமையும் வெளிப்படையான ஏமாற்றத்தைக் வெளிப்படுத்தியது. சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளுடன் கூட்டாட்சி அளவில் வருங்கால கூட்டணி அராசங்கத்தை அமைக்கும் முன்னோக்கை இது குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. சமூக ஜனநாயக கட்சி உடைய 21 சதவிகிதம், பசுமையினரின் 12 சதவிகிதம் இவற்றுடன் ஒப்பிடுகையில், மூன்று கட்சிகளும் மொத்தத்தில் ஐரோப்பியத் தேர்தலில் 40 சதவிகிதம்தான் இணைந்து பெற முடிந்தது.

தேர்தல் முடிவுகள் பற்றிய தன் அறிக்கையில், சமூக ஜனநாயக கட்சி பெற்ற பரிதாபமான முடிவைப் பற்றி தன்னுடைய ஏமாற்றத்தை பகிரங்கமாக ஒஸ்கார் லாபொன்டைன் தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காதவர்கள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகள் பற்றி ஏமாற்றம் அடைந்து வாக்களிக்காதவர்களைத்தான் இதற்குக் குறைகூறினார். அவர்கள் ஒதுக்கப்பட்டதாக நினைத்து வாக்களிக்க வராமல் ஒதுக்கிவிட்டனர் என்று லாபொன்டைன் அறிவித்து, "இது ஜனநாயகம் முழுவதற்குமே ஒரு தெளிவான பிரச்சினை ஆகும்" என்று முடிவாகக் கூறினார்.

இதைவிடத் தெளிவாக இடது கட்சி இலக்கு வைத்திருந்து குழுவை பற்றி லாபொன்டைன் தெளிவாகக் கூறியிருக்க முடியாது. தொழிலாளர்கள், வேலை இல்லாதவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என்று சமூக ஜனநாயக கட்சியிடம் இருந்து சீற்றத்துடன் திரும்பியவர்கள் என்று இல்லாமல் சமூக ஜனநாயக கட்சிக்காரர்களே அவ்வாறு செய்துள்ளனர். அது தன்னுடைய தேர்தல் தளத்தை இழந்து கொண்டிருக்கிறது. இதே கருத்தைத்தான் பிரையும் Der Spiegel இடம் கூறினார்: "சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகளுக்கு எதிரான போராட்டம் அவர்களைப் பிணைத்துக் கொள்ளும் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்." என்றார்.