World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

European elections

Germany: The significance of the Socialist Equality Party campaign

ஐரோப்பிய தேர்தல்கள்

ஜேர்மனி: சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் முக்கியத்துவம்

By Ulrich Rippert
12 June 2009

Use this version to print | Send feedback

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஒன்றுதான் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கு பெற்றவற்றில் முதலாளித்துவ நெருக்கடியின் உண்மையான அளவினை தெளிவுபடுத்தி சமுதாயத்தில் ஒரு சோசலிச மாற்றத்தினையும் முன்வைத்ததாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு கூறியது: "கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்ததைப் போலவே நெருக்கடி மனித குலத்தை அப்பட்ட மாற்றீட்டுடன் எதிர்கொள்ளுகிறது. சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதே அதுவாகும். நிதிய மூலதனத்தின் ஆதிக்கத்தை முறிக்காமல் எந்த சமூக அல்லது அரசியல் பிரச்சினையும் தீர்க்கப்பட முடியாது. முதலாளித்துவத்தை ஓரளவு திருத்துவதாலும் நெருக்கடி தீர்க்கப்பட முடியாது. அதற்கு ஒரு சமூக மாற்றம் அவசியம், ஒரு சோசலிச சமூகம் கட்டமைப்பது தேவை."

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்கள் பல்லாயிரக்கணக்கில் ஜேர்மனியில் உள்ள நகரங்களில் வழங்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி பேர்லின், போகும், லைப்சிக், பிராங்பேர்ட், ஹாம்பேர்க், முதல்தடைவையாக மூனிச் நகரிலும் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களிலும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடனும், தொழில் வழங்கு நிலையங்களில் தொழிலாளர்களுடனும் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் கணக்கிலடங்கா விவாதங்களை நடத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பாக எங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும் நான் முதலில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு 9,673 வாக்குகள் கிடைத்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தலில் கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட இது கணிசமாக குறைந்துள்ளது என்றாலும், தேர்தல்களின் முக்கியத்துவத்தை எத்தனை வாக்குகள் பெறப்பட்டன என்ற குறுகிய கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்வது தவறாகிவிடும்.

சோசலிச சமத்துவக் கட்சி கடந்த ஐரோப்பியத் தேர்தலில் 2004ம் ஆண்டு பங்கு பெற்றி 25,000 வாக்குகளை பெற்றது. அப்பொழுது ஹார்ட்ஸ் IV சட்டங்கள் மற்றும் ஹெகார்ட் ஷ்ரோடர் அரசாங்கத்தின் சமூகநல எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிரான வலுவான எதிர்ப்பு இயக்கம் இருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை (SPD-Green) கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான அணிவகுப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் பல நகரங்களில் நடைபெற்றன. இன்று, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், தங்கள் நலன்களை பாராளுமன்ற முறை ஊடாக காப்பாற்றலாம் என்று கருதும் ஒரு பகுதி தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கைகளை சிதைந்து விட்டன.

இதைத்தவிர, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பாத்திரம், அடையாளம் ஆகியவை வாக்களார்களின் பரந்த பிரிவுகளால் நன்கு அறியப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகிறது--அதாவது இது பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளுக்கு ஒரு ஜனநாயக மூடுதிரையை கொடுக்கிறது, ஐரோப்பிய பெரும் சக்திகள் மற்றும் சக்தி வாய்ந்த வணிகக் கூட்டமைப்புக்களின் நலன்களுக்காக வெளிப்படையாக செயல்படுகிறது என்பது வெளிவந்துள்ளது. சில கூட்டாட்சி மாநிலங்களில், பிரெண்டன்பேர்க் போன்றவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெளிவாக்கும் வகையில் வாக்காளர்களில் 30 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள்தான் வாக்களித்தனர்.

மக்களின் பெரும் பிரிவுகள் அனைத்து நடைமுறைக் கட்சிகளாலும் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர். இதனால் தனிப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் காட்டும் புதிய அரசியல் கூட்டுக்கள் ஏற்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது. ஐரோப்பிய தேர்தல்களில் ஜேர்மனியில் பங்கு பெற்ற 31 கட்சிகள், அரசியல் குழுக்களில் 12க்கும் மேலானவை முதல் தடவை நிற்கின்றன. இவற்றில் இரு கட்சிகள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், ஒரு கட்சி குடும்பங்களுக்கு எனவும் சில மத குழுக்களாகவும் இருந்தன.

இந்தக் குழுக்களில் பலவும் வலதுசாரித் தன்மை கொண்டவை. ஆனால் எல்லாம் அப்படியானவையல்ல. சற்று கூடுதலான இடது சார்புடைய Pirate Party என்று அழைக்கப்படுவது ஆகும். இது இணையதளத்தில் ஜனநாயக உரிமைகளுக்கு அழைப்பு கொடுத்து தடைகள் கண்காணிப்பு ஆகியவற்றை எதிர்க்கிறது. அது தனது முதல்தடவை பங்கு பெற்றதிலேயே 0.9 சதவிகிதம் ஜேர்மனியில் வாக்குகளை பெற்றது. அது தோன்றிய நாடான ஸ்வீடனில் பாராளுமன்றத்தில் நுழையும் முதல் முயற்சியிலேயே 7 சதவிகிதம் பெற்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் செய்தி ஊடகத்தின் திட்டமிட்ட புறக்கணிப்பை எதிர்கொண்டது என்பதும் குறிப்பிடப்பட வேண்டும் ஒரு நாளேடு அல்லது தொலைக்காட்சி நிலையம் கூட சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் பற்றிக் குறிப்பிடவில்லை. சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களுடன் பேட்டிகள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. மிகவும் அதிகம் தெரியாத அரசியல் குழுக்கள்கூட வானொலி நேரம் ஒதுக்கப்பட்டு, இடது கட்சியின் கம்யூனிச மேடையின் செய்தித் தொடர்பாளர் Sahra Wagenknecht கூட தொடர்ச்சியான உரையாடல் நிகழ்வுகளில் பங்கு பெற முடிந்தபோது, சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் செய்தி ஊடகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. சட்டபூர்வமாக இயங்கும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலைய நேரங்கள் கூட சாதகமற்ற நேரங்களில்தான் ஒலி/ஒளி பரப்ப சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் காலத்திற்கு உரியது, வெடிப்புத் தன்மை நிறைந்தது என்பதால் அது மக்களிடம் இருந்து எப்படியும் மறைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது தெளிவாயிற்று.

எங்கெல்லாம் சோசலிச சமத்துவக் கட்சிக்கு பார்வையாளர்களை பெற முடிந்ததோ, அங்கெல்லாம் அதற்கு ஆதரவும் உடன்பாடும் கிடைத்தன. டஜன் கணக்கில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்து மூன்று முக்கிய நகரங்களில் புதிய கிளைகளுக்கான தளங்கள் நிறுவப்பட்டன. கட்சித் தலைமையகமும் பல சாதகமான பிரதிபலிப்பை பெற்றது. முந்தைய தேர்தல் பிரச்சாரத்தைவிட கூடுதலான தொடர்புகள் பெறப்பட்டன.

ஒப்புமையில் குறைந்த வாக்குகளை கட்சி பெற்றதை விட முக்கியமானது இந்த சாதகமான அனுபவங்களுடன் தேர்தல் முடிவு சோசலிச சமத்துவக் கட்சி உடைய அரசியல் பகுப்பாய்வை முற்றிலும் உறுதிபடுத்தியது என்ற உண்மை ஆகும்.

சமூக ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; ஒரு வரலாற்றுத் திருப்பு முனை ஆகும். இதுவரை ஆளும் வர்க்கம் சமூக ஜனநாயக கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் சமூகப் போராட்டங்களை அடக்க நம்பியிருந்தது. இந்த சமூக சீர்திருத்த அதிகாரத்துவத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சி சமூகப் போராட்டங்கள் மற்றும் வெளிப்படையான வர்க்கப் போராட்டங்களுக்கு புதிய அரங்கை அறிமுகப்படுத்தும்.

வாக்குப் பதிவு நிலையங்கள் மூடப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஜேர்மனிய அரசாங்கம் நாட்டின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடித் தொடரன Arcandor ஐ திவாலுக்குத் தள்ளும் முடிவை எடுத்து 56,000 வேலைகளை அச்சுறுத்திவிட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். இதைத்தவிர, ஓப்பல் பற்றி எந்த முடிவும் வரவில்லை. பொருளாதார மந்திரி ஹூட்டன்பேர்க் (CSU) இன்னும் பல வணிக அமைப்புக்களுடன் சேர்ந்து கார்த் தயாரிப்பு நிறுவனத்தை திவால்தன்மைக்கு தள்ளும் ஆர்வத்தில் உள்ளார்.

சமூக ஜனநாயக கட்சிக்கு கிடைத்த பாரியவாக்குகள் இழப்பு என்ற நிலையில், பழைமைவாதிகளில் ஒரு பிரிவு தடையற்ற சந்தை தாராளவாத ஜனநாயககட்சிக்கு (FDP) மாறியிருக்கையில், இத்தகைய புதிய தாராள சக்திகள் வலுப்பெற்றதாக உணர்ந்து தாக்குதலில் ஈடுபடக்கூடும்.

சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்துள்ள சர்வதேச சோசலிச திட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி வரவிருக்கும் சமூகப் போராட்டங்களிலும் பெரும் முக்கியத்துவத்தை கொண்டிருக்கும். இது தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்கனவே நன்கு புலனாயிற்று. தேர்தல் பிரச்சாரத்தில் ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்ட விதத்தில் நன்கு தெரியவந்தது.

இந்த அடிப்படையில் எமது ஆதரவாளர்களுக்கும் கிட்டத்தட்ட 10,000 வாக்களித்தவர்களுக்கும் நாங்கள் உடனடியான அழைப்பை விடுக்கிறோம். அரசியலில் தீவிரமாக இருப்பது தேவையாகிவிட்டது! பலவிதங்களில் ஒருவர் சோசலிச சமத்துவக் கட்சி கட்டமைப்பதற்கு உதவ முடியும். ஒரு சில மாதங்களில் கூட்டாட்சித் தேர்தல்கள் வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி அதில் பங்கு பெறுவதற்கான உரிமை ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. ஆனால் எமது அரசியல் பணி தேர்தல் பிரச்சாரங்களுடன் நின்றுவிடுவதில்லை. நம் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி பெரும் பணி நீக்கங்கள், ஊதிய, பொதுநலச் செலவுக் குறைப்புக்களை என்ற விதத்தில் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதல்களை எதிர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள், தொழிற்சங்கங்களின் பிரிக்கும் தந்திரோபாயங்களுக்கு எதிரான எமது போராட்டம் வேலைகள் மற்றும் ஊதியங்களை பாதுகாப்பதற்கு கட்டமைக்கப்படும் நடவடிக்கை குழுக்களுடன் நேரடியாக பிணைந்திருக்கும். அவைதான் தொழிலாளர்களை நெருக்கடியில் ஒரு சுயாதீன அரசியல் பங்கை வகிக்க உதவும்.

இறுதியில், இந்த இலக்கிற்கு எங்களுக்கு கடந்த ஞாயிறன்று வாக்களித்து நம்பிக்கையை எங்கள் மீது காட்டிய அனைவருடைய தீவிர ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளராக இங்கு பதிவு செய்து கொள்ளவும்.