World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Thousands demonstrate against run-down of the education system

ஜேர்மனி: கல்வி முறையின் தரகுறைப்பு பற்றி ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By our correspondents
18 June 2009

Use this version to print | Send feedback

"அனைவருக்கும் இலவசக் கல்வி தேவை" என்று எழுதியுள்ள பதாகையுடன் மாணவர்கள்

200,000 என்று மதிப்பிடப்பட்ட பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஜேர்மனி முழுவதும் 70 நகரங்கள், பெருநகரங்களிலும் அரசாங்கம் நாட்டின் கல்வி முறையை வீழ்ச்சியடைய வைப்பதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தனர். புதனன்று நடைபெற்ற பெரும் ஆர்ப்பாட்டங்கள் இந்த வாரம் இதுவரை நடந்த நடவடிக்கைகளின் உயர்கட்டமாக இருந்தன. இவற்றுள் தனித்தனி பல்கலைக்கழகங்களில் நடந்த தனி வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் அடங்கும். ஜேர்மனிய தலைநகரத்தில் மாணவர்கள் தற்காலிகமாக Humboldt, Free பல்கலைக்கழகங்களில் கட்டிடங்களை ஆக்கிரமித்தனர்.

பல்கலைக்கழகங்கள் சமீபத்திய ஆண்டுகள் தொடர்ந்து தீவிர நிதிக் குறைப்புக்களுக்கு உட்பட்டுள்ளன. பல ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல்கலைக் கழகங்களுக்கான வரவுசெலவுத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்பணமோ உயரடுக்கு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட ஒதுக்கப்படுகிறது. அவற்றுள் பேர்லினில் இருக்கும் ஐன்ஸ்டைன் பல்லைக்கழகமும் ஒன்றாகும். பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் குறைப்புக்கள், வீழ்ச்சிகள் ஆகியவற்றில் பலவும் Bologna Process எனப்படும் வடிவமைப்பின்கீழ் நடைபெற்றுள்ளன. இது 1999ல் முதலில் கையெழுத்திடப்பட்டது. கல்வியை ஒரு விலைபொருளாக மாற்றும் நோக்கம் அதில் இருந்தது.

பல்கலைக்கழக மாணவர்களின் சுமையைக் கூட்டும் விதத்தில் 2005ல் ஜேர்மனிய அரசியலமைப்பு நீதிமன்றம் புதிய பயிற்சிக் கட்டணங்களை மாநில அரசாங்கங்கள் செயல்படுத்தலாம் என்று அனுமதித்த முடிவு உள்ளது. பல ஜேர்மனிய மாநிலங்களும் அத்தகைய கட்டணத்தை அறிமுகப்படுத்தின, அல்லது அறிமுகப்படுத்தும் தறுவாயில் இருந்தன. இதையொட்டி கட்டணம் ஒரு பருவத்திற்கு 500 யூரோக்கள் என்று போகக்கூடும். புதிய கட்டணங்கள் வறுமையில் இருக்கும் பல மாணவர்களையும் பாதிப்பதுடன், அவர்கள் தவிர்க்க முடியாமல் பலரும் தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்ள நேரிடும்.

சமீபத்திய செய்தி ஊடகத் தகவல்கள் இளம் மாணவர்கள் இக்கட்டணத்தைக் கட்டுவதற்கு விடுதிகளில் பகுதி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் உதாரணத்தை தெரிவிக்கின்றன. தற்காலிக விடுதி ஊழியர்கள் என்ற முறையில் அவர்கள் அறைகளை சுத்தம் செய்து படுக்கைகளை விரிக்கும் வேலையை ஒரு மணி நேரத்திற்கு மூன்று யூரோக்கள் பெற்றுக் கொண்டு செய்ய வேண்டும்.

புதனன்று பல்கலைக்கழக மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று "அனைவருக்கும் இலவசக் கல்வி" என்பதாகும். பெரும்பாலான மாணவர்கள் இரு அடுக்கு, வருமானத்தை அடித்தளமாக கொண்ட கல்விமுறையை வன்மையாக எதிர்க்கின்றனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவு

ஆசிரியர்கள் குறைப்புக்கள் மற்றும் நிதிய வெட்டுக்கள் நாடெங்கிலும் செய்யப்பட்டமை மாணவர்கள் அதிகமாக இருக்கும் கருத்தரங்குகள், வகுப்பு அறைகள் என்பவற்றைக் கொண்டு வந்துள்ளதுடன் ஆசிரியர்-பேராசிரியர்/மாணவர் விகிதத்திலும் பெரும் சரிவைக் கொண்டு வந்துள்ளன.

அதே நேரத்தில் பட்டப்படிப்பு இளநிலைக்கான புதிய கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களில் கொண்டுவரப்பட்டது மாணவர்கள் விரும்பும் பாடத்திட்டங்களை எடுத்துக் கொள்வதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பின்னர் வாழ்க்கைக்கு உதவும் வேலைச்சார்பு உடைய வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய பொருளாதார, நிதிய நெருக்கடியின் விளைவாக பட்டதாரிகளுக்கு வேலை வாயப்புக்கள் குறைந்து வரும் நேரத்தில், தடைகொடுக்கும் வேலைசார்புடைய பாடத்திட்ட அமைப்பும் குறைந்த வேலை வாய்ப்புக்களும் வெடிப்புத் தன்மையைத்தான் ஏற்படுத்தும்.

மிகக்குறைவான தொழிற்சங்க பதாகைகளே பேர்லின் ஆர்ப்பாட்டத்தில் வெளிப்பட்டிருந்தன. பொதுப் பணித் தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி ஊழியர்களின் பிரதிநிதிகளைக் கொண்டதின் முக்கிய பங்கே நாடு முழுவதும் நடைபெறும் எதிர்ப்பு அலைகள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் எதிர்ப்பைக் குறைத்து, தனிமைப்படுத்துவது ஆகும். திங்களன்று Verdi பொதுப்பணி தொழிற்சங்கங்கள் 30,000 பாலர்பாடசாலை தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முக்கிய நடைமுறை அரசியல்வாதிகளுக்கு அரங்காக மாற்றியது.

பாலர்பாடசாலை ஊழியர்களுக்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருப்பது போல் நிதியக் குறைப்புக்கள், மோசமான பணிநிலைகள் என பல பிரச்சினைகள் இருந்தாலும், தொழிற்சங்கங்கள் முறையான தந்திரோபாயத்தை கையாண்டு அவர்கள் எண்ணிக்கையை குறைக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பாலர்பாடசாலை ஊழியர்கள் ஆகியோரின் கூட்டு ஆர்ப்பாட்டங்களை அமைக்க அவை மறுத்துள்ளன.

கல்வி முறையில் சரிவு என்பது தொடர்ச்சயான அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது. குறிப்பாக சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி (1998-2004) ஆட்சியின் போதும், தற்போதைய "பெரும் கூட்டணி காலத்திலும்" (SPD, CDU, CSU). பேர்லினில் குறைப்புக்கள் நகரத்தின் செனட்டால் செயல்படுத்தப்படுகின்றன. அங்கு ஆட்சி செய்வது சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சிக் கூட்டணியாகும்.

ஜேர்மனி முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பலரும் நடைமுறைக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி குறைகூறினர். பேர்லின் அணிவகுப்பில் பேசிய பேச்சாளர்கள் எவரும் உத்தியோகபூர்வமாக ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்றோ அல்லது ஒரு நடைமுறை அரசியல் கட்சிக்கு தாங்கள் விசுவாசம் என்று ஒப்புக் கொள்ளவில்லை.

SWS நிருபர்கள் பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு மாணவர்களைப் பேட்டி கண்டனர்.

பேர்லின்

22 வயதான மோரிட்ஸ் Humboldt பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலும், 21 வயது ஜோனா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பொறியியலும் படிக்கின்றனர்.

பேர்லினில் 15,000 பேர் கலந்து கொண்டனர் என்று மதிப்பிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் பேர்லினில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் என்றும் பெருகிய முறையில் இரு அடுக்கு கல்வி முறைப் போக்கு வந்துள்ளதாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக என்று கூறினர்.

மோரிட்ஸ் கூறியது: "அடுத்த நான்கு ஆண்டுகளில் பேர்லினில் உள்ள பல்கலைக்கழகங்களில் செனட் இன்னும் 150 மில்லியன் முதலீடு செய்யவேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இந்தப்பணம் இருக்கும் நிலையை பல்கலைக்கழகங்களில் தக்க வைக்க மட்டுமே போதுமானதாக இருக்கும். பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் புதிய தாராளமயமாக்கலையும் நாங்கள் எதிர்க்கிறோம். குறிப்பாக சில ஆண்டுகள் முன்பு கொண்டுவரப்பட்டுள்ள புதிய இளநிலைப் பட்டப்படிப்பு குறைந்த தன்மை உடையது ஆகும். விருப்பப்பாடங்கள் குறைக்கப்பட்டுவிட்டன. சமூக பிரச்சனைகள் பற்றியவையும் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் பாடங்கள் குறைக்கப்பட்டுவிட்டன."

மோரிட்ஸ் தொடர்ந்து கூறியது: "இத்தகைய நிதியப் பிரச்சினைகளில் முடிவுகள் அரசியலை ஒட்டி அமைகின்றன. நிதிய நெருக்கடியினால் கல்விக்கு பணம் இல்லை என்று கூறப்படுகிறோம். ஆனால் வங்கிகளைக் காப்பாற்ற பணம் தடையின்றி கொடுக்கப்படுகிறது. இங்கும் பேர்லினில் உயரடுக்கு ஐன்ஸ்டைன் நிறுவனம் செனட்டால் 40 மில்லியன் யூரோக்களை அளிக்கப்படுகிறது. நகரத்தின் City Castle (Stadtschloss) ä 100 மில்லியன் செலவில் புதுப்பிக்கத் திட்டங்கள் உள்ளன. விவாதத்திற்கு உரிய கெளரவத் திட்டங்களுக்குப் பதிலாக செனட் அடிப்படைக் கல்வியிலும் அதன் குடிமக்களின் வருங்காலத்திலும் முதலீடு செய்ய வேண்டும்;

பேர்லின் செனட் பற்றிக் கேட்கப்பட்டதற்கு மோரிட்ஸ் தனக்கு சமூக ஜனநாயகக் கட்சி அல்லது இடது கட்சியிடத்தில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தார். "இடது கட்சியின் பிரச்சினை அது இடது அல்ல என்பதுதான். அது சமூக ஜனநாயகம்; 1970களில் சமூக ஜனநாயகக் கட்சி செயல்படுத்திய கொள்கைகளை மறுபடியும் செயல்படுத்த முயற்சிக்கிறது.

"1968 பற்றிய பேச்சு எங்கும் இருக்கிறது; அதுவும் கடந்த ஆண்டு அந்நிகழ்வின் 40ம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்ட பிறகு. அப்பொழுதிற்கும் இப்பொழுதிற்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு 68ல் எதிர்ப்புக்களை நடத்திய மாணவர்களில் பலர் பின்னர் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்; இன்று நிதிய நெருக்கடியை அடுத்து விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு நாங்கள் பயிற்சி பெறுகிறோம்; ஆனால் எங்கள் படிப்பு முடிந்தவுடன் உரிய ஊதியம் கொடுக்கும் வேலையைப் பெறுவோமா என்பது வினாவிற்கு உரியது."

தன்னுடைய பல்கலைக்கழக நிலைமை பற்றி பேசுகையில் Jona கற்பித்தலில் தரம் மற்றும் தன்மை வியத்தகு முறையில் சரிந்துவிட்டது என்றார். 2003ல் இருந்து 20 பேராசிரியர்கள் பதவிகள் நிரப்பப்படக்கூட இல்லை.

பீலெபெல்ட்

பீலெபெல்டில் 4,500 இளைஞர்கள் நகர மையத்தின் வழிசென்ற எதிர்ப்பு அணியில் பங்கு பெற்றனர். இது நகர அரங்கிற்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டததில் முடிவடைந்தது. பள்ளி மாணவர்கள் அதிகமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்தனர். உள்ளூர் பல்கலைக்கழகம் மற்றும் மேலதிக படிப்புக் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கு பெறாதது வியப்பாக இருந்தது.

Minden நகரில் உள்ள நிர்வாக நீதிமன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு முன் அணிவகுப்பாளர்கள் நகரத்தின் மத்திய போக்குவரத்து இடமான Jahnplatz இல் எதிர்ப்பு கூடாது என்று தடை செய்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தபோதிலும் Jahnplatz ஐ ஆக்கிரமித்து புறநகர்ப் போக்குவரத்தை பல மணி நேரம் முடக்கினர். "அது நீதிமன்றம் எடுத்த அரசியல் முடிவு" என்று ஜானிஸ் நம் நிருபரிடம் கூறினார். "உலக கால்பந்தாட்ட நேரத்தில் மக்கள் Jahnplatz ஐப் பயன்படுத்த முடியும், ஆனால் தடையற்ற கருத்து வெளிப்பாடு என்றால் சதுக்கம் தடைக்கு உட்படுகிறது."

எமது நிருபர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள், அமைத்தவர்கள் ஆகியோருடன் பேசினார். அமைப்புக் குழு மற்றும் மாவட்ட மாணவர் குழுவின் உறுப்பினரான Hendrik மாணவர்கள் கணிசமாகப் பங்கு கொண்டது பற்றி சாதகமான ஒரு மதிப்பீடு செய்தது பற்றிப் பேசினார்: "எங்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் கிடைத்தது; அவர்களும் பள்ளிகளில் இருக்கும் நிலைமை பற்றி அதிருப்தி அடைந்துள்ளனர்." இப்பிரச்சனையில் தொழிற்சங்கங்கள் கொண்ட பங்கு பற்றி அவர் சாதகமாக கூறி, "அரசியல்வாதிகள் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அடுத்த கல்வி ஆண்டில் அவை புதிய எதிர்ப்புக்களை அறிவித்துள்ளதாகவும் கூறினார். பாலர்பாடசாலை ஊழியர்கள் ஏன் பங்கு பெறவில்லை என்று கேட்கப்பட்டதற்கு தொழிற்சங்கத்தின் தந்திரோபாயங்கள் "பொருத்தமற்றவை" என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

லைப்சிக்

கிட்டத்தட்ட 3,000 மாணவர்களும் ஆசிரியர்களும் லைப்சிக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். HTWK Leipzig யில் இருந்து ஆர்ப்பாட்டம் நகரத்தின் தென்புறம் நோக்கிச் சென்றது. முன்னேறி செல்கையில் அதன் அளவும் பெருகியது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். நகர மையப்பகுதி வழியே அணிவகுப்பு சென்றபோது லைப்சிக் பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து கொண்டனர்.

ஏராளமான பதாகைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றில் பங்குபெற்றவர்கள் தற்பொழுதைய கல்வி முறை பற்றித் தங்கள் குறைகூறலைத் தெளிவாக்கியதுடன், வங்கிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நூற்றுக்கணக்கான பில்லியன்களை கொடுத்திருக்கையில் கல்விக்கும் இளைஞர்கள் நல்வாழ்விலும் முதலீடு செய்ய மறுப்பது குறித்தும் சீற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

பண்பாட்டு அறிவியல் பயிலும் ரோபர்ட் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக குறைந்த நிதியைப் பெற்று வருகிறது, ஆசிரியர் பதவிகளில் தொடர்ந்து குறைப்புக்களை எதிர்கொள்ளுகிறது என்றார்; ஆனால் மாணவர்கள் எண்ணிக்கையோ அதிகமாகியுள்ளது. அவருடைய கருத்தின்படி முழு Bologna Process பற்றியும் மறு சிந்தனை தேவை. இதுதான் கூட்டாக இத்தகைய இழி நிலைக்கு பொறுப்பு ஆகும். புதனன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்றவை வெற்றி அடையுமா என்று கேட்டதற்கு அவர் அவநம்பிக்கையுடன் "திரும்பிப் பார்த்தால், கடந்த ஆண்டு டிரெஸ்டனில் நடைபெற்ற பெரிய ஆர்ப்பாட்டமும் வெற்றி அடையவில்லை. அதற்குப் பின் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. எதிர்ப்பு என்பது முக்கியம்தான், இயல்பானதுதான், ஆனால் அது போதவில்லை. இன்னும் அதிகச் செயல்பாடு வேண்டும்." என்று கூறினார்.

இதேபோல்தான் அரசியல் அறிவியல் மற்றும் அரபு ஆய்வுகள் பற்றிப் பயிலும் மாணவர் முகம்மதும் கூறினார். சிறந்த பயிலும் சூழல், பல்கலைக்கழகங்களில் நவீனக் கருவிகள் மற்றும் பொதுவாக சிறந்த கல்வி முறை ஆகியவற்றிற்காக அவர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றார். பல்கலைக்கழகங்கள் தனியார் பொருளாதார உதவியை நாடி நிற்பது பற்ற அவர் பெரும் கோபம் கொண்டார். "அரசியல் அறிவு மற்றும் தொடர்பு பாடத்திட்டத்தில் ஒரு பேராசிரியர் உள்ளார்; இவருக்கு ஊதியம் எரிபொருள் விநியோக நிறுவனமான Vettenfall ஆல் கொடுக்கப்படுகிறது. இத்தகைய நபர் எங்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க முடியும், அவர் பயிற்றுவிப்பது சிந்தனைப்போக்களவில் அவர் வேலைபார்க்கும் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படாதா என்ற வினாவை நானே கேட்டுக் கொள்ளுகிறேன். இதில் மோசமான பகுதி என்ன என்றால் மாணவர்கள் பலருக்கு வகுப்பறையில் தங்களுக்கு முன் நிற்கும் ஆசிரியர் அல்லது பேராசிரியர் பின்னணியைப் பற்றித் தெரியாது."

லைப்சிக்கில் மாணர்களுடன் சேர்ந்திருந்த ஆசிரியரான பேர்கிட் விளக்கினார்: "என்னுடைய தொழிலில் பணி நிலைமை மோசமாகிவிட்டது; எப்படி மாணவர்களுக்கு பயிலும் நிலைமை பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மோசமாகிவிட்டதோ, அதேபோல்தான். எனவேதான் நான் ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்துள்ளேன்." ஒரு வகுப்பில் அதிக குழந்தைகள் இருப்பதால் பணியிடத்தில் சத்தம் அதிகம் இருப்பதாக அவர் குறைகூறினார். "குறைந்த அளவில் ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் ஆற்றவேண்டிய பணியோ அதிகரித்துள்ளது." இந்த எதிர்ப்பு உத்தியோகபூர்வக் கொள்கையை மாற்ற இயலுமா என்பது பற்றி அவரால் கூறமுடியவில்லை; ஆனால் இது "ஒரு பொழுதும் தளர்ந்துபோய் விட்டுவிடக்கூடாது" என்பது முக்கியம் என்று அறிவித்தார்.