World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Day of action at Opel in Germany

The poison of trade union nationalism

ஜேர்மனி ஓபெலில் நடவடிக்கை நாள்

தொழிற்சங்க தேசியவாதத்தின் விஷம்

By Ulrich Rippert
28 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

செய்தி ஊடகத்தால் பெரும் கவனத்துடன் தகவல் கொடுக்கப்பட்ட, வியாழனன்று ஜேர்மனியில் IG Metall தொழிற்சங்கமும் மற்றும் ஐரோப்பியப் தொழிற்சாலை குழுக்களால் ஓபெல் கார் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள், வேலைகளை பாதுகாப்புடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மாறாக அவை தொழிற்சங்கத் தலைமை தன்னுடைய தேசியவாத மற்றும் பாதுகாப்புவரிக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்புக்களாக போயின.

ஜெனரல் மோட்டார்ஸ் ஐரோப்பாவில் 25,000 வேலைகள் உட்பட 47,000 வேலைகளை உலகெங்கிலும் நீக்கவிருப்பதாக அறிவித்ததில் இருந்து, மிகப்பெரிய தொழிற்சங்கமான IG Metall இத்தகைய தேசியவாத, ஐரோப்பிய வெறி உணர்வுகளை பெருக்கும் வகையில் ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஜேர்மனிய தொழிற்சங்க அலுவலர்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்கவிற்கும் இடையே உற்பத்திய மாற்றிக்கொண்டும் மற்றும் ஜேர்மனிய நயமான முறையில் தொழிற்சங்கத் தலைவர்களின் ஜேர்மனிய மாதிரியான "சமூக கூட்டுழைப்பில்" வருடக்கணக்காக தங்கியிருந்த ஜெனரல் மோட்டார்ஸ் மீது நடத்திய தாக்குதல்கள் குறைந்த அளவில்தான் GM நிர்வாகத்திற்கு எதிரானவை ஆகும். மாறாக அமெரிக்க GM தொழிலாளர்களுக்கு எதிராக கூடுதலான முறையில் அமெரிக்கத் தொழிலாளர்கள்தான் நிறுவன நெருக்கடிக்குக் காரணம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் உட்குறிப்பு காட்டியுள்ளனர்.

ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவில் 20,000 வேலைகளை நீக்கத்திட்டம் கொண்டிருப்பது பற்றி வியாழனன்று பேசிய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரோ அல்லது தொழிற்சாலைக் குழு அலுவலர்களோ ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. GM ஆலைகள் பல மூடப்பட உள்ளன; ஏற்கனவே ஊதியங்களோ சமீப ஆண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டன. GM தொழிலாளர்களுடைய சுகாதாரக் காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டன. இப்பொழுது நிர்வாகத்தின் நிறுவனத்தை "மீட்கும்" திட்டத்தின் ஒரு பகுதியாக இன்னும் மிகப் பெரிய குறைப்புக்கள் நிர்வாகத்தால் கோரப்படுகின்றன.

வேலை பாதுகாப்பிற்காக அனைத்து ஆலைகளிலும் உள்ள GM தொழிலாளர்கள் கூட்டுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுவதைத் தடுக்கத் விற்பனைப் பிரிவினர், ஆலைப் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தொழிற்சங்க அமைப்பும் திரட்டப்பட்டிருந்தது. தொழிற்சங்கம் வேலைகள், ஊதியங்கள், பணிநிலைமைகள் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எவ்வித சர்வதேசப் போராட்டத்தையும் நிராகரிக்கிறது; இதில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் அடங்குவர். அத்தகைய போராட்டம் விரைவில் தொழில்துறையின் மற்ற பிரிவுகள் பொதுப்பணி ஊழியர்கள் மற்றும் முழுத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் பரவும் என்று அஞ்சுகின்றனர்.

கடந்த காலத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பிற்குக் விடுத்த அழைப்புகள் தவிர்க்க முடியாமல் போலியானதும் மற்றும் எவ்விதத்திலும் உண்மை உள்ளடக்கம் அற்றதாகத்தான் இருந்தன. ஆனால் இன்று உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நேரத்தில், ஒரு புதிய சர்வதேச மூலோபாயம் அவசரமாகத் தேவைப்படும் காலத்தில், அதிகாரத்துவங்கள் மெளனம் சாதிக்கின்றன.

வியாழனன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் GM ல் இருந்து ஓபெலை பிரிப்பது பற்றிய பிரச்சினையை தங்கள் மத்திய மூலோபாயமாக எழுப்பினர். இதில் அவர்கள் நிபந்தனையற்ற முறையில் ஓபெல் குழுவின் ஐரோப்பிய-ஜேர்மன் நிர்வாகத்துடன் இணைந்து நிற்கின்றனர். அமெரிக்காவை விட ஜேர்மனிய நிர்வாகம் சிறந்தது என்று அவர்கள் கூறுவுடன் ஓப்பல் ஊழியர்கள் ஒரு ஜேர்மனிய ஐரோப்பிய நிறுவனம் போட்டித் தன்மையை பாதுகாத்துக்கொள்ள தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

ஊதியக் குறைப்புக்கள் மற்றும் மோசமான பணி நிலைமைகளுக்கான தொடர்ந்த அழுத்தங்கள் என்ற அலைபோன்ற வெட்டுக்களுக்கு "அமெரிக்க நிர்வாகத் திறமை அற்றதின் விளைவு எனக் கூறப்படுதல் உண்மையுடன் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. நிலைமை ஒன்றும் மற்ற ஜேர்மனிய கார்த் தயாரிப்பாளர்களான வோக்ஸ்வாகன், டைம்லர், BMW ஆகியவற்றில் இருந்து அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. சர்வதேச அளவில் உற்பத்தியை பிணைந்து ஏற்படுத்தும் பின்னணியில், முதலாளித்துவ சுரண்டும் தன்மையின் நிலைமைகள் இன்னும் கூடுதலான முறையில் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் போயிருக்கிறது.

ஜேர்மனியில் ஏற்கனவே காட்டுமிராண்டித்தன வேலைக் குறைப்புக்கள் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் 40,000 தொழிலாளர்கள் ஓபெலின் முக்கிய ஜேர்மனிய ஆலையான Russelheim இல் பணிபுரிந்து வந்தனர். இன்று 16,000 பேர் மட்டுமே எஞ்சியுள்ளதுடன், அவர்களில் பலரும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். Bochum இல் இருக்கும் ஆலை, 1950 களின் துவக்கத்தில் கட்டமைக்கப்பட்டு, அதிக வேலை இல்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது. இது முன்பு 23,000 தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. இன்று எண்ணிக்கை 5,300 இற்கு அண்ணளவாகத்தான் உள்ளது.

தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் தொழிற்சங்கங்களில் இருக்கும் "இணை நிர்வாகிகள்" தொழிலாளர்கள் பெரும் சலுகைகளை நிறுவனத்திற்கு விட்டுக் கொடுக்க வேண்டும், அதுவும் தொழிற்சங்கம் விரும்பும் பிரிட்டிஷ் மாதிரியான வாக்சோலுடன் ஓபெலை இணைக்கும் கருத்தான இன்னும் நிறுவப்படக்கூட இல்லாத நிறுவனத்திற்கு என்று கூறுவது விந்தையாகும். வியாழனன்று பல முறை தொழிற்சங்க பேச்சாளர்கள் தொழிலாளர்கள் "இன்னும் அதிக தியாகங்களை" செய்யத் தயார் என்று அறிவித்தனர்.

தொழிலாளர்களின் இத்தகைய "தியாகங்களை" மிருதுவாக்கும் வகையில் IG Metall உடைய தலைவர் பெர்த்தோல்ட் கூபர் தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர் கிளவுஸ் பிரன்ஸ் இருவரும் ஒரு துவக்க முயற்சியை அறிவித்தனர்--இது ஜேர்மனிய இடது கட்சி மற்றும் அதன் தலைவர் ஒஸ்கார் லாபோன்டைன் ஆகியோரால் வலுவாக ஆதரிக்கப்படுகிறது; அதாவது ஒரு "தொழிலாளர்களின் நிதியப் பங்கு கொள்ளுதல் என்பதாகும். இந்த வழிவகைக்குப் பின் இருப்பது உறுதியாக நடக்கும் தொழிற்சங்க தந்திரோபாயமாகும்; அது வர்க்கப் போராட்டத்தை அடக்கி தொழிலளர்களை நிறுவனத்துடன் நெருக்கமாக பிணைக்க முற்படுகிறது. இத கோரிக்கைதான் முன்பு "ஊழியர்களின் கைகளில் சொத்துக்களை சேகரித்தல்" என்று அழைக்கப்பட்டு தங்கள் நிறுவனங்களிலேயே தொழிலாளர்கள் பங்கு வாங்குவதுடன் பிணைந்திருந்தது.

மந்த நிலை ஆழ்ந்துள்ள சூழல் இருக்கும்போது, இத்தகைய நிதிய முறை பங்கு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுவது என்பதின் பொருள் தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு ஊதியக் குறைப்புக்கள், வேலை இழப்புக்கள் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதுடன், தங்கள் சேமிப்புக்களையும் முதலீடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் உடைமை மற்றும் பொருளாதாரத்தின் இலாப சார்பு என்று எந்த வடிவமைப்பும் மாறவில்லை; இதன் பொருள் நிறுவனம் இறுதியில் செயல்படாமல் போகும்போது தொழிலாளர்கள் அனைத்தையும் இழப்பர் என்பது ஆகும்.

அமெரிக்க மற்றும் சர்வதேசப் போட்டியில் ஒரு ஜேர்மனிய அல்லது ஐரோப்பிய நிறுவனம் கூடுதலான திறமையுடன் உள்ளது என்னும் கிளவுஸ் பிரன்ஸின் கூற்று ஒரு அச்சுறுத்தல் என்று உணரப்பட வேண்டும். தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் IG Metall அலுவலர்களும் ஓபெல் தொழிலாளர்களை ஊதியங்கள், பணிநிலைமைக் குறைப்புக்கள் ஆகியவற்றை துரிதப்படுத்தும் இலக்கு கொண்ட தடையற்ற போட்டியில் விரைவாகத் தள்ள உறுதி கொண்டுள்ளனர்.

தேசிய நலன்கள் பெயரில் முன்வைக்கப்படும் இத்தகைய கொள்கைகளின் விளைவுகள் பேரழிவைத் தரும். தொழிலாளர்களின் ஊதியங்கள், வாழ்க்கை நிலைமை ஆகியவை தொடர்ந்து முதலீட்டை ஈர்க்கும் போட்டியில் முடிவில்லாத வகையில் தியாகத்திற்கு உட்படுகின்றன.

இத்தகைய தேசியவாதச் சார்பின் இதயத்தானத்தில் அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பு என்பது உள்ளது.

சர்வேதேசப் பொருளாதார நெருக்கடி ஜேர்மனிய கார்த்தயாரிப்புத் தொழிற்துறையில் மிகப்பெரிய விளைவுகளை கொண்டிருக்கிறது என்பது அறியப்படடவுடன், IG Metall மற்றும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஐரோப்பிய ஓபெல் நிர்வாகம் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து ஒருவித சமரசத்தைத் தெரிவித்தன. தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசாங்கம் நிதிய உத்தரவாதங்களை அளித்து, நலிந்திருக்கும் தொழிலுக்கு அரசாங்க முதலீடு அளித்தால் தாங்களும் வேலைக்குறைப்புக்களையும் சேமிப்புக்களுக்கும் உதவத்தயார் என்று அறிவித்தன.

வேலைகளையும் தொழிலாளர் உரிமைகளையும் இந்த அடிப்படையில் காப்பாற்றுதல் என்பது முடியாத செயலாகும். இந்த நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பு அல்ல; அவர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் அனைத்து முயற்சிகளையும் மிகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

ஜேர்மனிய அரசாங்கம் கற்பனை செய்து பார்க்க முடியாத பணத்தை ஊகத்தில் செலவிட்டு 1930களுக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவந்துள்ள வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை முற்றிலும் நேர்மையற்ற முதலீடுகளின் அடிப்படையில் பெரும் செல்வத்தை சேர்ந்த வங்கியாளர்கள் எவர்மீதும் எந்தவித குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கள் வாழ்க்கை முழுவதும் வேலைகளில் முதலீடு செய்துள்ள தொழிலாளர்களோ அனைத்தையும் இந்த நெருக்கடியை ஒட்டி இழக்கும் நிலையில் உள்ளனர்--இவர்களுக்கு எவரும் பிணை எடுப்பு கொடுக்கத் தயாராக இல்லை. இந்த நிலைமை பொறுத்துக் கொள்ள முடியாதது ஆகும்.

இதற்கான முதல் நடவடிக்கை உலகில் தொழிலாளர் பிரிவினர் அனைவரும் எந்த நிறுவனத்திலும், அனைத்து வேலைகளைக் பாதுகாத்து சலுகைகள் இழப்புக் கோரிக்கைகள், தியாகத்திற்கான கோரிக்கைகள் ஆகியவற்றை நிராகரிக்க வேண்டும். தொழிற்சாலைக் குழுக்கள் உடனடியாக நிறுவப்பட வேணடும்; இவை தொழிற்சங்கங்களிடம் இருந்து சுயதீனமாக இருக்க வேண்டும்; மற்றைய ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு வேலைகள் பாதுகாப்பு, பணி நிலைமைகள் ஆகியவற்றைக் காக்க ஒரு சர்வதேச போராட்டத்தை அமைக்க வேண்டும்.

இத்தகைய வேலைகளைப் பாதுகாப்பது என்பது தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்படும் நோக்கத்தின் அரசியல் எதிர்ப்பின் ஆரம்ப கட்டமாக இருக்க வேண்டும். அத்தகைய அரசாங்கம் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்கும்; அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அவற்றை முழு சமூக நலன்களுக்கு சேவை செய்விக்கும். அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் நடப்பது போல் ஜேர்மனிய அரசாங்கம் நன்கொடையாக அளிக்கும் பில்லியன் கணக்கான பணத்தை திசை திருப்பி பொருளாதாரத்தை மறு சீரமைக்கவும் மில்லியன் கணக்கில் புதிய வேலைகள் தோற்றுவிக்கவும் செய்யும்.

இத்தகைய கொள்கை ஒரு சர்வதேச அடிப்படையில், உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மிக நெருக்கமான ஒத்துழைப்பின்பேரில்தான் செயற்படுத்தப்பட முடியும்.