World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German union officials propose double-digit wage cuts for Opel-GM workers

ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரிகள் Opel-GM தொழிலாளர்களுக்கு இரட்டை இலக்க ஊதிய வெட்டுக்கள் திட்டத்தை முன்வைக்கின்றனர்

Ulrich Rippert
11 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

திங்களன்று ஜேர்மனிய செய்தி ஊடகம் Eisenach நகரில் உள்ள ஓப்பல் தொழிற்சாலையின் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவரான ஹரால்ட் லிஸ்கே அந்த ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டை இலக்க ஊதிய வெட்டு செயல்படுத்தக் கூடியதுதான் என அறிவித்தாக தெரிவித்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தால் வினவப்பட்டதற்கு ஹரால்ட் லிஸ்கே தொழிற்சாலை தொழிலாளகளுக்காக ஊதிய வெட்டினை ஏற்றுக்கொள்ள இருப்பதாக உறுதிபடுத்தினார். ஆனால் செய்தி ஊடகம் அவருடைய அறிக்கையின் முதல்பகுதியைத்தான் கூறியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். "நாங்கள் தியாகம் செய்யத் தயாராக உள்ளோம்" என்று அவர் அறிவித்தார்; "ஆனால் எந்த நலனும் கொடுக்காத தியாகங்களுக்கு அல்ல." தொழிற்சாலையின் வருங்காலம் பற்றி உத்தரவாதம் வேண்டும் என்றார் அவர்.

நிர்வாகம் தனி ஆலைகளின் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில், ஓப்பலின் தலைமை நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸில் (GM) பெரும் ஊதியக் குறைப்பு போன்ற இத்தகைய தியாகங்கள் இருந்தபோதிலும்கூட நிர்வாகம் வேலைகளை இல்லாதொழித்துள்ள நிலையில், தொழிற்சாலையின் வருங்காலம் பற்றிய உத்தரவாதம் எவ்வாறு உண்மையாக இருக்கும் என்று கேட்கப்பட்டதற்கு லிஸ்கேயால் சரியான பதிலைக் கூறமுடியவில்லை. "தொழிற்சாலையை காப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செய்ய" தொழிலாளர்கள் தயாராக உள்ளது என்பதைத்தான் தான் தெளிவாக்க விரும்புவதாக அவர் கூறினார்.

தன்னுடைய திட்டம் கடந்த சனியன்று தொழிற்சாலை பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாகவும் லிஸ்கே கூறினார். அனைத்து ஐரோப்பிய GM தொழிற்சாலை தொழிலாளர் குழுவினரின் கூட்டம் வியாழனன்று நடக்க இருக்கிறது. இது மீண்டும் திட்டத்தை விவாதித்து அத்தகைய ஊதிய வெட்டுக்கள் ஐரோப்பாவில் இருக்கும் மற்ற GM ஆலைகளிலும் ஆதரவழிக்கப்படுமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டம் பணி நேரக் குறைப்புக்களை, அதற்கேற்ப ஊதியக் குறைப்பு என்பதையும் பரிசீலிக்கும். அது நிர்வாகம் நிர்ணயிக்கும் செலவினக் குறைப்பு இலக்குகளை அடைவதற்காகவாகும்.

அனைத்து வேலைகள் மற்றும் ஊதியங்களை அவர் ஏன் பாதுகாக்க முன்வரவில்லை என்று கேட்கப்பட்டதற்கு லிஸ்கே கூறினார்: "பணிக் குறைப்புக்கள் தேவை என்பதில் எங்களில் எவருக்கும் சந்தேகம் இல்லை"; ஆனால் அவை "சமூகம் ஏற்கத்தக்க வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்"; "ஆலைகள் நீண்ட காலம் நீடித்துச் செயல்படக் கூடிய இலக்கை அவை கொண்டிருகக வேண்டும்." என்றார் அவர்.

ஓப்பல்-GM பிரதிநிதிகளின் ஐரோப்பிய கூட்டத்திற்கு முன்னால், நிர்வாகத்தின் கூட்டு தொழிற்சாலைக் குழுக்களின் தலைவரான Klaus Franz ஓப்பல் தொழிலாளர்கள் வேலைக் குறைப்புக்கள், ஊதிய வெட்டுக்கள், மற்றும் ஜேர்மனிய ஆலைகளில் ஒன்றை விற்பதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று Die Welt பத்திரிகையிடம் கூறினார். அத்தகைய விற்பனைக்கு உகந்ததாக Eisenach நகரில் உள்ள ஆலை இருக்கக்கூடும்.

Eisenach ஆலையின் வருங்காலம் பற்றிய ஊகத்தைப் பற்றி பிரன்ஸ் அறிவித்தார்: "நாம் கூடுதலான உற்பத்தி இருக்கும்போது, இந்த ஆலை விற்கப்படலாம் என்றால் அதுதான் சமூக மற்றும் அரசியல்ரீதியான சிறந்த முடிவாக இருக்கும்." ஒரு நிதிய முதலீட்டாளருக்கு ஆலையை விற்க முடியும் என்று பிரான்ஸ் கூறினார். "இந்தக்கட்டத்தில் நாம் குறிப்பிட்டதை விரும்பியபடி செய்ய இயலாது."

இப்படி கார்த் தயாரிப்பாளர்கள் முன் முற்றிலும் அடிபணிந்து நிற்றல், ஊதியங்கள், வேலைகள் காப்பாற்றுதலை கைவிடுதல் என்பது ஜேர்மனிய தொழிற்சங்கங்களான IG Metall போன்றவை கொண்டிருக்கும் பங்கு மட்டும் இல்லாமல், அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிற்சங்கங்களும் செய்யும் செயலாகத்தான் உள்ளது. கீழ்மட்டத்திற்கு விரைவில் செல்லும் சர்வதேசப் போட்டியை இவர்கள் தொடங்கிவிட்டனர்; இதில் ஒரு நாட்டின் தொழிலாளர்கள் மற்ற நாடுகளில் உள்ள சகோதர, சகோதரித் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தப்படுகின்றனர்; சில சமயம் உள்நாட்டில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் நிறுத்தப்படுகின்றனர். ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனேடிய கார் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயலாற்றி கார்த்தொழிலாளர்கள் ஒன்றாக எல்லைகடந்த முறையில் ஒருமித்து நின்று எதிர்ப்புக்காட்டுவதை தடுக்கின்றனர்.

கடந்த ஞாயிறன்று கனேடிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் (CAW) ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் கணிசமான விட்டுக்கொடுப்புகளை செய்துவிட்டதாக அறிவித்தது; இதில் ஊதிய முடக்கம் மற்றும் விடுமுறைநாட்கள் குறைப்பும் அடங்கும். இதைத்தவிர கனடாவில் இருக்கும் GM தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய, சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக கட்டணங்களையும் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் (UAW) Fordல் ஏற்கனவே பெரிய வெட்டுக்களுக்கு ஒப்புக்கொண்டு இப்பொழுது GM, Chrysler ஆகிய நிறுவனங்களிலும் விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு பேச்சுவார்தைதகளை நடத்திவருகிறது. டெட்ரோயிட்டில் இருக்கும் நிலைமை ஜேர்மனியில் இருக்கும் தொழிற்சங்க அதிகாரிகளின் வாதமான ஊதியக் குறைப்புக்கள் என்பது வேலைப்பாதுகாப்புகளுக்கு என்பதை வெற்றுச் சொற்களாக்குகிறது. புதிதாக வேலைக்கு எடுக்கப்படும் தொழிலாளர்களின் ஊதியங்கள் அமெரிக்க கார்த்தொழிலில் சமீப ஆண்டுகளில் பாதியாக்கப்பட்டுவிட்டது; அதைத்தவிர ஓய்வூதிய மற்றும் சுகாதார நலன்களிலும் கடுமையான வெட்டுக்கள் வந்துவிட்டன. ஆயினும்கூட பல ஆலைகள் மூடப்பட்டுவிட்டன, பல்லாயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன.

இதேபோல் அமெரிக்க அனுபவமோ "சமமான தியாகங்கள்" என்ற பேச்சுக்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டது. "இணைந்து சுமையை தூக்குவதற்குப் பதிலாக" அமெரிக்காவின் மூன்று பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளும் தங்கள் பைகளை பெரும் செல்வக் கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். 1980 களின் நடுப்பகுதியில் அமெரிக்க கார்த் தொழில் தலைமை நிர்வாகிகள் சாதாரண உற்பத்தித் தொழிலாளர்களைக் காட்டிலும் 12ல் இருந்து 18 மடங்கு அதிகமான ஊதியம்தான் பெற்றனர். அப்பொழுது முதல் தலைமை நிர்வாகிகளுடைய ஊதியங்கள் வானளாவிய முறையில் உயர்ந்துள்ளன. இன்று உயர்மட்ட கார்த்தயாரிப்பு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களை போல் 240 மடங்கு கூடுதல் ஊதியம் பெறுகின்றனர்.

தொழிற்சங்கங்கள் இந்நிறுவனங்களின் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் வைக்கின்றனர். கீழ்நோக்குச் சரிவின் இறுதியில், ஊதியங்கள், நலன்கள், ஓய்வூதியங்கள் ஆகியவை மட்டும் குறைவதோடு இல்லாமல், வேலைகளும் தகர்க்கப்படுகின்றன. பெருமந்த நிலைக்கு பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக் காலத்தில் வேலைகளை இழந்த தொழிலாளர்கள் கடுமையான வறுமை நிலைக்கு விரைவில் தள்ளப்படுகின்றனர்.

ஓப்பலில் ஊதியக் குறைப்புக்கள் என்பது நாடு முழுவதும் ஊதிய வெடுக்களுக்கான அரங்கை அமைக்கும்; முழுத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் நிரந்தரக் குறைப்பை பாரிய முறையில் ஏற்படுத்துவதற்கும் அரங்கு அமைக்கப்படும்.

ஊதியக் குறைப்புக்கள், வேலை வெட்டுக்கள் என்று Opel-GM மட்டும் இன்றி அரசாங்கத்திற்கு எதிராகவும் இத்தகையவற்றை முழுமையாக எதிர்த்துப் போராடுவதை தவிர மாற்றீடு ஏதும் கிடையாது; அரசாங்கமோ அது வழங்கும் உதவி, கடன்கள் ஆகியவற்றிற்கு பிரதியுபகாரமாக ஊதிய மற்றும் பிற சலுகைகளின் குறைப்பை கோருகிறது.

முக்கிய வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை; ஓப்பல் மற்றும் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகள் தேவையான தயாரிப்புக்களை மேற்கொள்ளுவது இன்றியமையாதது ஆகும்.

அனைத்து வேலைகள், ஊதியங்கள் பாதுகாப்பு என்பது ஒரு கொள்கையுடைய வர்க்க நிலப்பாட்டில் இருந்து எடுக்கப்பட வேண்டும். ஓப்பலிலோ ஜெனரல் மோட்டார்ஸிலோ அல்லது பிற நிறுவனங்களிலோ முதலாளித்துவத்தின் உலகளாவிய வீழ்ச்சிக்கு தொழிலாளர்கள் காரணம் இல்லை. வேலையின்மை, வறுமை ஆகியவற்றை தவிர்ப்பதற்கு தொழிலாளர்களுக்கு "வேறு மாற்றீடு" இல்லை என்று கூறப்படுவது அப்பட்டமான பொய் ஆகும்.

இருக்கும் முறைக்கு எதிராக எதிர்ப்பை திரட்டுதல் முக்கியமாகும்; அதேபோல் சமூகத்தை சோசலிச வகையில் மறுசீரமைப்பதற்கான போராட்டத்தை மேற்கோள்ளுவதும் முக்கியமாகும்; அதுதான் மக்களின் பரந்த பிரிவுகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இதற்கு முதல் கட்டம் அனைத்து வேலைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு கொள்கையளவிலான போராட்டம் ஆகும்; அதுதான் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலைக்கொடுக்க வேண்டும் என எடுக்கப்படும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த இலக்கை அடையும் வகையில், தொழிற்சாலை குழுக்களை நிறுவதல் தேவையாகும்; அவை தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக செயல்பட வேண்டும். அத்தகைய குழுக்கள் நிறுவப்பட்டு அவை உலகெங்கிலும் இருக்கும் பிற தொழிற்சாலைகளில் இருக்கும் குழுக்கள், தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு சர்வதேச எதிர்ப்பை ஒன்றுபடுத்தி,ஒருங்கிணைக்க வேண்டும்.

வேலைகள் கொள்கை அடிப்படையில் பாதுகாக்கப்படுதல் என்பதுதான் ஒரு தொழிலாளர்கள் அரசங்கத்தை தோற்றுவிக்கும் நோக்கம் உடைய அரசியல் தாக்குலுக்கான ஆரம்பக் கட்டம் ஆகும். அத்தகைய அரசாங்கம்தான் வங்கிகளையும் முக்கிய தொழில்களையும் தேசியமயமாக்கி ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். ஜேர்மனிய வங்கிகளின் கருவூலத்திற்கு பில்லியன் கணக்கான பணத்தை அள்ளிக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம் முழுப் பொருளாதாரத்தையும் மறு சீரமைத்து பில்லியன் கணக்கான புதிய வேலைகளை தோற்றுவிக்க பில்லியன் கணக்கில் செலவு செய்யும்.