World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Elections:

Tamil Nadu parties posture over plight of Sri Lankan Tamils

இந்தியத் தேர்தல்கள்:

தமிழ்நாட்டு கட்சிகள் இலங்கை தமிழர்கள் நிலைபற்றி அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளுகின்றன

By Arun Kumar
2 May 2009

Use this version to print | Send feedback

இலங்கையில் தமிழர்களுடைய துயரம் இந்தியத் தேர்தல் பிரச்சாரத்தில், குறிப்பாக, தீவுத் தமிழர்களுடன் பல நூற்றாண்டு காலமாக தமிழ் பேசும் மக்கள் பழைய பண்பாடு, குடும்ப உறவுகள் கொண்டிருக்கும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சினையாக வெளிவந்துள்ளது.

சமீபத்திய நாட்களில் மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சிகளான தமிழ் இன அடிப்படையைக் கொண்ட திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்), மற்றும் அதிமுக (அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகியவற்றின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் இலங்கைத் தமிழர்களை காப்பவர்கள் எனக் காட்டிக் கொள்ளுவதில் மிஞ்சப் பார்க்கின்றனர்.

இவர்களுடைய நோக்கம் வெளிப்படையாக உள்ளது: தமிழ் நாட்டில் மே 13ம் தேதி இந்தியாவின் ஒரு மாத காலத் தேர்தலின் ஐந்தாம் மற்றும் இறுதி கட்டம் நடைபெறுகிறது; சிங்கள உயரடுக்கின் குருதி கொட்டும் நடவடிக்கையினால் முழுத் தீவிலும் அது மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டிருப்பதால் விளைந்துள்ள மனிதாபிமானப் பிரச்சனை பற்றிய மக்கள் சீற்றத்திற்கு முறையீடு செய்வதன் மூலம் சிடுமூஞ்சித்தனமாக அதிக வாக்குகளைத் திரட்டுவவதாக உள்ளது. .

சமீபத்திய மாதங்களில் நூற்றாயிரக்கணக்கான மக்கள் சென்னையிலும் தமிழ் நாடு முழுவதும் இல்ஙகைத்தீவில் வடக்கு வடகிழக்கில் நடத்தப்படும் தாக்குதலை எதிர்க்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறுகின்றனர். துன்பகரமான வகையில் டஜனுக்கும் மேலானவர்கள் தங்களைத் தாங்களே தீக்கிரையாக்கிக் கொண்டுள்ளனர்.

எதிர்ப்புக்களில் பல இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினால் அழைப்பு விடப்பட்டன; இக்கூட்டில் சிறிய தமிழகக் கட்சிகள் நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) மற்றும் அதன் தமிழ் ஈழத் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுப்பவையாக VCK, MDMK, PMK மற்றும் CPI எனப்படும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளன. இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி)யும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது, மற்றும் அதன் அரங்குகளில் பங்கு பெற அழைக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் சீற்றம் உண்மையானதுதான் என்றாலும், இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையானது, எதிர்ப்புக்களில் ஒரு பிற்போக்குத்தன தமிழ் தேசிய சார்பை கொடுக்க முற்பட்டுள்ளது. சிபிஐ மாநிலத் தலைவரான பாண்டியன் கூறியுள்ள கருத்துக்களில் இது வெளிவந்துள்ளது. "[இலங்கை ஜனாதிபதி] இராஜபக்ச புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்கிறார். ஒரு தமிழன் தன் காலிலேய நின்று உயிரை விடுவானே ஒழிய முழந்தாளில் மண்டியிட்டு பிச்சை கேட்கமாட்டான்" என்று அறிவித்தார்.

சமீபத்திய வாரங்களில் இயக்கம் பெரும் சக்திகள் மற்றும் ஐ.நா. ஆகிவை "ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற" குறுக்கீடு செய்யவேண்டும் என்று கிளர்ச்சி செய்தது; அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் சிறுபான்மைக்கு எதிரான இனப் போரை மீண்டும் நடத்துவதிலும், இன்னும் சமீபத்தில் "இறுதித் தாக்குதல்" நடத்துவதிலும் ஆதரவு தருகின்றன என்பதை இது கருத்திற் கொள்ளவில்லை.

தேர்தல்கள் வந்துள்ள நிலையில் திமுக,அதிமுக இரண்டும் தங்கள் தேர்தல் கூட்டாளிகளிடம் இருந்து முன்னதாகவே தமிழர்கள் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவது அரசியல் சாதுர்யம் என்று நினைத்தன. இவை இரண்டுமே முன்பு பாஜக உடன் தொடர்பு கொண்டிருந்தாலும், இம்முறை திமுக காங்கிரஸ் கட்சியின் வட்டார நட்புக் கட்சியாகவும், அதிமுக, மதிமுக மற்றும் பாமக, இரு முக்கிய ஸ்டாலினிசக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் இவற்றைக் கொண்டுள்ள ஒரு தேர்தல் முகாமை அமைத்துள்ளது.

திமுக தலைவரும் தமிழ் நாட்டின் முதல் மந்திரியுமான மு. கருணாநிதி ஏப்ரல் 23ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு பந்த் என்னும் வேலைநிறுத்தம், வணிக மூடல் ஆகியவற்றிற்கு அழைப்பு கொடுத்து இலங்கையில் போர்நிறுத்தம் கோர புதுதில்லிக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டுள்ளார் இல்ஙகையில் உள்ள தமிழ்க் குடிமக்களின் கடன் நிலை பற்றி மக்களுடைய பரிவு உணர்வு தெளிவாக வெளிப்படும் வகையில் காலையில் இருந்து மாலை முடிய நடந்த இந்த பந்த் தமிழ் நாட்டிலும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியிலும் அன்றாட வாழ்வை முடக்கியது. அநேகமாக அனைத்து பொது மற்றும் தனியார் வாகனங்களும் சென்னையிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் ஓடவில்லை; பெரும்பாலான கடைகளும், வணிக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

கருணாநிதி சமீபத்தில் எல்டிடிஇ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை "என்னுடைய நல்ல நண்பர்" என்று விவரித்ததற்கு கடும் ஆட்சேபம் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் தன்னை பந்தில் இருந்து ஒதுக்கிக் கொள்ள முற்பட்டது. ஆனால் மாநிலத்தின் கட்சிப் பிரிவு அதற்கு ஒப்புதல் கொடுத்தது.

இல்ஙகையில் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரி, கடந்த ஏப்ரல் 27ம் தேதி திங்களன்று கருணாநிதி ஒரு "காலவரையற்ற உண்ணாவிரத்தை" மேற்கோண்டார்; ஆறரை மணி நேரத்திற்குப் பின்னர் இந்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரத்திடம் இருந்து கொழும்பு தான் 50,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடியிருக்கும் சிறு பகுதியைக் கைப்பற்ற முயலும்போது கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது என்று அறிவித்ததைக் கேட்டவுடன் அது ஒரு வெற்றி என்று அறிவித்தார்.

எதிர்பார்க்கக்கூடிய வகையில் இல்ஙகை இராணுவம் விரைவில் தன் உறுதியைக் கைவிட்டு இன்னும் கொடூரமான குடிமக்கள் இறப்புக்களுக்கு வகை செய்தது.

தன்னுடைய உண்ணாவிரதத்தை நடத்திய விதத்தில், ஒரு வேளை உணவிற்கு மேல் இது இறுதியில் போகவில்லை என்றாலும், 85 வயதான கருணாநிதி "தமிழ் மக்களின் சார்பில் இது நடைபெறுகிறது...இல்ஙகையில் உள்ள தமிழர்களைக் காப்பதற்காக" என்று கூறினார்.

உண்மை என்ன என்றால் திமுக இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தில் பங்கு கொண்டுள்ளது; இந்த அரசாங்கம் முக்கியமான அரசியல், இராணுவ ஆதரவை கொழும்புவிற்கு அது 2006ல் எல்டிடிஇ க்கு எதிராக தீவிரப் போரைத் தொடங்கியதில் இருந்து கொடுத்து வருகிறது.

"சமீப ஆண்டுகளில் இந்தியா இரகசியமாக கொடுத்துள்ளது, இன்னமும் கொழும்புவிற்கு இராணுவ உதவியைக் கொடுத்து வருகிறது; இதில் ராடர் கண்காணிப்பு முறைகள், பல தளவாடங்கள் அளிப்பு, ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால், இலஙகையின் விமானப் படை முக்கிய இராணுவ வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது." என்று டைம்ஸ் ஆப் இந்தியா மார்ச் 2ம் தேதி பதிப்பில் கூறியுள்ளது.

எல்டிடிஇ யின் வலுவான பகுதியான வன்னியை கடந்த ஜனவரி மாதம் இலங்கை இராணுவம் கைப்பற்றியதை புது டெல்லி வரவேற்று, 1991 ம் ஆண்டு இந்தியப் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் படுகொலையில் அவரது தொடர்பின் காரணமாக, எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் பிடிபட்டவுடன் அவர் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியது.

சமீப வாரங்களில் இந்தியா அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு குடிமக்கள் இறந்து போனாலும்கூட, எல்டிடிஇ-யை முற்றிலும் தகர்க்கும் கொழும்புவின் உந்துதலை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளது. தேர்தல் நிலைப்பாடுகள், திமுக இடம் இருந்து வந்துள்ள அழுத்தம் மற்றும் இந்தியாவிற்குள்ளேயே தமிழ் தேசிய உணர்வை இப்போர் எரியூட்டியுள்ள நிலை ஆகியவை இதற்கு முக்கிய காரணிகள் ஆகும். அதேபோல்தான் இலங்கையின் குருதி கொட்டும் போர் மற்றும் கொழும்பு தமிழ் உயரடுக்கு கேட்கும் ஒரு "சமாதான முறையிலான தீர்விற்கு" மதிப்பு கொடுக்கப்படாதது, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பல ஆண்டுகளுக்கு அரசியல் உறுதியற்ற தன்மையைத் தொடர வைக்கும்.

அதிமுகவும் அதன் முன்னாள் திரைப்பட நட்சத்திர நடிகைத் தலைவருமான பெரிதும் உயர்ந்துவிட்ட ஜெயலலிதா ஜெயராம் இதுவரை "இலங்கைத் தமிழர்களுக்கு அதிக அக்கறை காட்டியதாக" அறியப்படவில்லை என்று ஆசியன் டிரிப்யூன் எழுதியுள்ளது. பெரும்பாலான தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முற்றிலும் எதிரான வகையில் ஜெயலலிதா வாடிக்கையாக "பயங்ரவாத" எல்டிடிஇ அமைப்பிற்கு எதிராக வலுவான நடவடிக்கை வேண்டும் என்று அழைப்பு விடுப்பார்.

ஆனால் தேர்தலைக் கருத்திற் கொண்டு ஜெயலலிதா பெருகிய முறையில் தொடர்ச்சியாக வலுவான கோரிக்கைகளையும் உறுதி மொழிகளையும் இலங்கைப் போரைப் பற்றி முன்வைத்து, கருணாநிதியின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு எனப்படும் செயல்களை "கேலிக்கூத்து, நாடகம்" என்று எள்ளி நகையாடியுள்ளார்.

அதிமுக உடைய தேர்தல் அறிக்கை தமிழர்கள் அதிகம் இருக்கும் இலங்கை மாநிலங்களில் "நிர்வாக அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்" என்றும் அதுதான் உள்நாட்டுப் போரை முடிப்பதற்கு சிறந்த தீர்வு என்றும் கூறியுள்ளது. ஆனால் ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் அணிவகுப்பு ஒன்றில் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய குறுந்தகடுகள், புகைப்படங்கள் ஆகியவை தன் இதயத்தை கொதிக்க வைப்பதாகக் கூறினார். "தமிழ் மக்களுடைய இந்த பரிதாப நிலை .... முடிவிற்கு வரவேண்டும் என்றால், ஒரு சுதந்திர ஈழம் ஒன்றுதான் தீர்வு" என்றார்

"இன்றுவரை நான் தனி ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு என்று கூறியதில்லை. அரசியல் தீர்வு என்றெல்லாம் கூறியிருக்கிறேன். ஆனால் இப்பொழுது நான் உறுதியாக ஒரு தனி ஈழம் என்றுதான் இலங்கைப் பூசலுக்கு நிரந்தரத் தீர்வு என்று கூறுகிறேன்."

வியாழனன்று ஜெயலலிதா ஒரு படி மேலே சென்றார். அதிமுக தலைமையிலான தேர்தல் கூட்டணி தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் அனைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி அடையுமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார்; அதையொட்டி அவருடைய கட்சி இந்தியாவின் அடுத்த அரசாங்கம் அமைக்கப்படுவதில் பெரும் செல்வாக்கு பெறும் என்றும் அந்த அதிகாரம் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தனி தமிழ் ஈழம் அமைக்கப்பட பயன்படும் என்றும் கூறினார்.

இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கைக்கு குரல் கொடுக்கையில், ஜெயலலிதா இந்திரா காந்தியும் அவருடைய காங்கிரஸ் அரசாங்கமும் 1971ல் வங்கதேசம் உருவாக்கப்பட்டதில் கொண்ட பங்கைப் போல் தன் கட்சிப் பங்கு இருக்க வேண்டும் என விரும்புகிறார். "நாம் சர்வதேச சட்டங்களையும் நெறிகளையும் இந்திரா காந்தி மதித்தது போல் மதிப்போம். அவருடைய மகன் ராஜீவ் காந்தி (IPKF) இந்திய சமாதானப் படையை இலங்கைக்கு 1987ல் அனுப்பியதைப் போல் செயல்படுவோம்."

இலங்கையில் இந்திய இராணுவ தலையீட்டிற்கான ஜெயலலிதாவின் அழைப்பு--இதேபோல்தான் சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி குரல் கொடுத்தார்-- வெகுஜனத் திருப்திக்காக செய்யப்படுகிறது; இது பிற்போக்குத்தனம் ஆகும்.

வெகுஜனத் திருப்தி என்று ஏன் கூறலாம் என்றால் இவ்வம்மையாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பாராளுமன்ற கூட்டல் கழித்தல் எப்படி இருந்தாலும், இலங்கையில் ஒரு தனி தமிழ் நாட்டை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசியல், இராணுவ நடைமுறையில் ஒரு போருக்கு இடம் இல்லை என்பது நன்கு தெரியும்.

இந்திய உயரடுக்கு தெற்கு ஆசியாவில் உள்ள முதலாளித்துவ தேசிய அரசுகளின் எல்லைகளில் எந்த மாற்றத்தையும் தீவிரமாக எதிர்க்கிறது; இதற்குக் காரணம் இத்தகைய "தேசிய சுய நிர்ணய உரிமை" அங்கீகரிக்கப்பட்டால், அளிக்கப்பட்டால் அது இந்தியாவிற்குள் இருக்கும் ஏராளமான தேசிய பிரினைவாத இயக்கங்களுக்கு சட்டபூர்வ நெறியும் சர்வதேச அங்கீகாரத்தையும் அளித்துவிடும் என்று அஞ்சுகிறது.

தன்னுடைய உரையில் ஜெயலலிதா இந்த நிலைப்பாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மற்றொரு நாட்டைப் பிரித்தல் என்பது இந்திய அரசின் நிலப்பகுதி இறையாண்மைக்கு அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்யாது என்று வாதிட்டார்.

இந்திய இராணுவ தலையீட்டிற்கான அழைப்பும் பிற்போக்குத்தனமாகும்; ஏனெனில் வங்கதேசப் போர் மற்றும் பின்னர் இலங்கையில் நிரூபிக்கப்பட்டது போல், இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகள், அதன் உள்நாட்டுக் கொள்கைகளைப் போலவே, நாட்டின் கொள்ளை முறை முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களைத்தான் காக்க உதவின. 1971ல் வங்கதேசத்தில் மற்றும் இலங்கையில் தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மை கொண்டிருந்த 1987லும், இந்தியா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் அளிக்க தலையீடு செய்யவில்லை; இந்திய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தன வர்க்க நலன்களை உறுதி செய்யத்தான் தலையிட்டது.

1971 ம் ஆண்டு இந்திய முதலாளித்துவம் வங்க தேச மங்கள் தங்கள் குறைந்த அந்தஸ்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதையும் இறுதியில் பாக்கிஸ்தானின் இராணுவ ஆதிக்கத்திற்குள் அடக்கப்பட்டதையும் பாக்கிஸ்தானிய உயரடுக்கு என்னும் தன் பெரும் விரோதி மீது ஒரு பயங்கரத் தாக்குதல் கொடுக்கும் வாய்ப்பாகத்தான் கருதியது. இன்னும் முக்கியமாக இருந்த இரண்டாம் காரணி இந்திய ஆளும் வர்க்கத்தின் அச்சமான வங்க தேச தேசியப் போராட்டம் இந்தியாவின் மாநிலமான மேற்கு வங்கத்தில் தொழிலாளர்-விவசாயி அமைதியின்மையில் செல்வாக்கு பெற்று கீழிருந்து ஒரு வலுவான வெகுஜன இயக்கம், 1947 வங்கப் பிரிவினைக்கும் தெற்கு ஆசியாவில் முழு ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட போருக்குப் பிந்தைய தீர்வுகளுக்கு எதிராகப் போகக்கூடும் என்பதைக் கொண்டிருந்தது.

பங்களாதேஷில் இந்தியாவின் தலையீடு இவ்விததில் வங்கதேச மக்களுடைய சுதந்திரத்தை பெறும் நோக்கத்தை கொண்டிராமல், தெற்கு ஆசியா மீது இந்திய மேலாதிக்கத்தை கொள்ளவும், ஒரு முதலாளித்துவ வங்க தேசத்தைத் தோற்றுவிக்கவும்தான் நோக்கம் கொண்டிருந்தது.

இலங்கையை பொறுத்தவரையில், இந்திய உயரடுக்கு தமிழ் மக்களை கொடுமையாக பயன்படுத்தியுள்ளது; முதலில் எல்டிடிஇ க்கு ஆதரவு கொடுத்தும் பின்னர் அதை விலக்கிக் கொண்ட விதத்திலும்; இவை இழிந்த கணிப்புக்களான தெற்கு ஆசியாவில் இதன் நலன்களுக்கு எப்படி உதவும் என்பதைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன.

1980களின் முதல் மற்றும் நடுப்பகுதிகளில், இந்திரா அதற்குப் பிறகு ராஜீவ் காந்தியின் கீழ் இந்தியா எல்டிடிஇ க்கு இராணுவ ஆதரவு கொடுத்துள்ளது; இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு அது பயனுடைய கருவி என்று நினைத்தது; அப்பொழுது இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தது; இந்தியா குளிர் யுத்த காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடாக இருந்தது. ஆனால் LTTE பெரும்பாலான வடக்கு, கிழக்கு பகுதிகளில் கட்டுப்பாட்டைக் கொண்டவுடன், 1987ல் புது தில்லி கொழும்பு மற்றும் எல்டிடிஇ க்கு இடையே ஒரு "சமாதான உட்பாட்டை" சுமத்த முற்பட்டது; அது தெற்கு ஆசியாவில் தேசிய-அரசு முறையை நிலைநிறுத்தும் என்றும், இந்தியாவின் வட்டார மேலாதிக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் என்றும் கருதப்பட்டது.

ஆனால் நடந்தது, சிங்கள முதலாளித்துவம் மற்றும் எல்டிடிஇ இரண்டும் இந்தியா சுமத்திய "உடன்பாட்டை" முற்றிலும் எதிரெதிர் காரணங்களுக்காக எதிர்த்து நின்றன, IPKF ஒருதலைப்பட்சமாக 1990ல் எல்டிடிஇ ஐ ஆயுதம் களையச் செய்த நடவடிக்கைகளில் கணிசமான இறப்புக்களை அடைந்த பின் திரும்பப் பெறப்பட்டது.

1990 களில், குளிர்யுத்தம் முடிந்த நிலையில், இந்திய முதலாளித்துவத்தின் வெளியுறவுக் கொள்கை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் முழுமையாக இணைந்து கொள்ள வேண்டும் என்ற அதன் புதிய சார்பை ஒத்து, வியத்தகு முறையில் ஒரு மாற்றத்தை அடைந்தது. புதுதில்லி கொழும்புவுடன் நெருக்கமான உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டு பின்னர் இலங்கையுடன் தடையற்ற வணிக உடன்பாட்டையும் கொண்டது; இது அப்பகுதிகளில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதரியாக இருக்கும் என்று கருதுகிறது.

சமீப ஆண்டுகளில் இலங்கையில் உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டுவருவதில் இந்தியாவின் நோக்கம் வட்டாரப்பகுதியில் அரசியல் உறுதி வேண்டும் என்பதாக இருக்கிறது. அந்த இலக்கை அதிகரிக்கும் வகையில் அது கூடுதலான இராணுவ ஆதரவை கொழும்புவிற்கு கொடுத்துள்ளது; அதே நேரத்தில் அவ்வப்பொழுது மிக வலிமையுடன் செயல்படவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளுகிறது; ஒன்று அல்லது கூடுதலான தமிழ் பெரும்பான்மை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப் படலாம், என்றும் கூறுகிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் முக்கிய அக்கறை சீனா, பாக்கிஸ்தான் மற்றும் சற்று குறைந்த அளவிற்கு அமெரிக்கா ஆகியவை இலங்கையின் முக்கிய அரசியல் இராணுவ நட்பு நாடு என்ற முறையில் அதிக செல்வாக்கை இங்கு பெற்றுவிடக்கூடாது என்றும் உள்ளது. இதுதான் இந்திய முதலாளித்துவத்தின் தெற்கு ஆசியாவில் தன்னுடைய மேலாதிக்க வட்டார சக்தி என்னும் அந்தஸ்தை அடைவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாகும்; இந்தத் தளத்தில் இருந்துதான் அணுவாயுதம் கொண்ட "உலக சக்தி" என்ற செல்வாக்கிற்கு அது பாடுபடுகிறது.

பிற்போக்கு இந்திய முதலாளித்துவ அரசின் மூலமும் இந்திய, மற்றும் வட்டார தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் மூலமும், இந்தியாவில் இருக்கும் தொழிலாளர்கள் கொழும்பில் நடக்கும் வகுப்புவாதப் போரை எதிர்த்து இலங்கையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க முடியாது --தமிழ் சிறுபான்மையினர் என்று இல்லாமல் சிங்களத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும் போரின் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் உள்ளனர்--

இவ்வாறு செய்வதற்கு இந்தியாவிலும் தெற்கு ஆசியா நெடுகிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்று கட்டமைக்கப்பட வேண்டியது தேவையாகும்; இது ஏகாதிபத்தியம் மற்றும் பலவித போட்டியிடும் தேசிய முதலாளித்துவ வர்க்கங்களை எதிர்ப்பதில், தெற்கு ஆசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக சோசலிச சிறீலங்கா மற்றும் ஈழ சோசலிசக் குடியரசிற்குப் போராடுவதாகும்.