World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military again shells hospital in no-fire zone

இலங்கை இராணுவம் மீண்டும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆஸ்பத்திரி மீது ஷெல் வீசுகிறது

By Sarath Kumara
15 May 2009

Use this version to print | Send feedback

புதன் கிழமை இன்னுமொரு இரத்தத்தை உறையவைக்கும் யுத்தக் குற்றத்தை இழைத்துள்ள இலங்கை இராணுவம், வடகிழக்கு கரையோரத்தில் உள்ள "பாதுகாப்பு வலயத்தில்" எஞ்சியுள்ள ஒரே ஒரு மருத்துவமனை மீது ஷெல் தாக்குதல் நடாத்தியுள்ளது. இதில் டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இடைத் தங்கல் வைத்தியசாலையை மூன்று ஷெல்கள் தாக்கியதாக ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ்சுக்கு ஒரு அரசாங்க வைத்தியர் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குள் இந்த ஆஸ்பத்திரி மீது இரண்டாவது முறையாக தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் மூன்றாவது தடவையாக இந்த வைத்தியசாலை தாக்குதலுக்குள்ளானதாக டாக்டர். வி. சன்முகராஜா அசோசியேடட் பிரஸ்சுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். ஒரு ஷெல் ஆஸ்பத்திரியின் நிர்வாக அலுவலகத்தின் மீது விழுந்த அதே வேளை இனனொன்று நோயாளர்கள் நிறைந்திருந்த இடத்தில் விழுந்தது.

இந்த புதிய தாக்குதலில் நோயாளர்கள், உறவினர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட குறைந்பட்சம் 50 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர் என டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார். நாள் பூராவும் ஷெல் தாக்குதல் தொடர்ந்ததாக அவர் கூறினார். செவ்வாய் கிழமை இராணுவம் இதே இடத்தின் மீது நடத்திய ஷெல் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

"பெருந்தொகையான உதவியாளர்கள் ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டதால் எங்களால் மக்களுக்கு சரியாக சிகிச்சையளிக்க முடிவதில்லை. ஷெல் வீசப்படும் போது நாங்கள் பங்கருக்குள் ஓட வேண்டும். பின்னர் கிடைக்கும் இடைவெளியில் எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்க வேண்டும்," என வரதராஜா தெரிவித்தார்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், வேலை செய்வது ஆபத்தானது என்பதால் மருத்துவமனை ஏறத்தாழ கைவிடப்பட்டு வருகிறது என வியாழக்கிழமை அசோசியேடட் பிரஸ்சுக்கு பெயர் குறிப்பிடாத ஒரு மூன்றாது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். மருத்துவ பராமரிப்பு அத்தியாவசியமாகியுள்ள மிகவும் மோசமாக காயமடைந்த சுமார் 400 நோயாளர்கள் அங்கிருப்பதோடு அவர்களுடன் 100 சடலங்களும் புதைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தமிழ்நெட், புதன் கிழமை நடந்த ஷெல் வீச்சில் சிறுவர்கள், நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றது. "ஆஸ்பத்திரியையும் பொதுமக்கள் அழுவதையும் பார்த்தால் அழிவை மட்டுமே நீங்கள் உணர்வீர்கள்" என ஒரு மருத்துவ அதிகாரி அந்த இணையத்திற்குத் தெரிவித்தார்.

இந்த அழிவுகளுக்கான முழு பொறுப்பும், மோதல்களை நிறுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களை நிராகரித்து, சிவிலியன்களின் உயிர்களை குற்றவியல் முறையில் அலட்சியம் செய்து தாக்குதலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவ உயர் தளபதிகளையுமே சாரும்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயாலளருமான கோடாபய இராஜபக்ஷவும், புலிகள் 48 மணித்தியாளத்துககுள் நசுக்கப்படுவர் என திங்களன்று இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள நிலத்துண்டு அளவில் ஒரு சில கிலோமீட்டர்களுக்கும் கூடுதலானதல்ல. இங்கு கிட்டத்தட்ட 50,000 பொதுமக்கள் இருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

பெப்பிரவரியில் இந்த முழு பிரதேசத்தையும் பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் அறிவித்த போதிலும், இந்த வாரம் எஞ்சியுள்ள புலிப் போராளிகளுக்கு எதிராக இராணுவம் தனது தாக்குதல்களை புதுப்பித்த நிலையில், பிரதேசத்தின் எல்லையை மீண்டும் வரையறுத்தது -இது 200 மற்றும் 500க்கும் இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கிழக்கு ஆரம்பப் பாடசாலை அரசாங்கம் மீண்டும் அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்த போதிலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் மருத்துவமனை மீது இராணுவம் ஷெல் வீசியது.

இந்த வலயத்துக்குள் நிலைமை கிலியூட்டுகிறது. மே 9ம் திகதியில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட நிவாரணங்களையாவது வழங்க அதனது விநியோகக் கப்பலால் கரையை நெருக்க முடியவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று தெரிவித்தது. "இடைவிடாமல் மோதல்கள் தொடர்கின்ற நிலையில், சிவிலியன்கள் கையால் தோண்டிய பங்கர்களுக்குள் பாதுகாப்புத் தேடத் தள்ளப்பட்டுள்ளனர். அரிதான தண்ணீர் மற்றும் உணவை தேடுவது இன்னும் சிரமமாகியுள்ளது" என ஒரு அறிக்கை விளக்கியுள்ளது. "எல்லைமீறிய மனிதாபிமான அழிவை எமது ஊழியர்கள் காண்கின்றனர்" என செஞ்சிலுவைச் சங்க நடவடிக்கைகளுக்கான இயக்குனர் பெய்ரே கிரஹன்பல் தெரிவித்தார்.

தமது யுத்தக் குற்றங்கள் தொடர்பாக வளர்ச்சி கண்டுவரும் ஆதாரங்களுக்கு இலங்கை அரசாங்கமும் இராணுவமும் ஒரு தொகை பொய்களின் மூலம் பதிலளித்துள்ளன. தாக்குதலின் போது இராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை, துருப்புக்கள் "காப்பாற்றும் நடவடிக்கையிலேயே" ஈடுபட்டுள்ளன மற்றும் சிவிலியன்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துவதற்கு புலிகள் மீதே குற்றஞ்சாட்டப்பட வேண்டும், என அவர்களின் பேச்சாளர்கள் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர். வியாழக்கிழமை பாதுகாப்பு வலயத்தில் இருந்து 1,500 சிவிலியன்கள் வெளியேறியுள்ளதாக இராணுவம் பெருமைபட்டுக்கொள்கிறது.

எஞ்சியுள்ள புலிப் போராளிகள் சிவிலியன்கள் வெளியேறுவதை பலாத்காரமாக தடுக்க முயற்சிக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் நிச்சயமாக அதிகரிக்கின்றன. யுத்த நிறுத்தமொன்றுக்காக பெரும் வல்லரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தமது பயனற்ற முயற்சிகளுக்கு தமிழ் பொதுமக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் புலிகளின் செயல், அதன் பிரிவினைவாத வேலைத்திட்டம் மற்றும் முன்நோக்கில் இருந்தே தோன்றுகிறது. அதன் முன்நோக்கு எப்போதும் தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அன்றி தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது.

ஆயினும், சிவிலியன்கள் மீது வேண்டுமென்றே இராணுவம் தொடுக்கும் தாக்குதல்களை நியாயப்படுத்த புலிகளின் செயலை எந்தவிதத்திலும் பயன்படுத்த முடியாது. கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும் மோதல்களின் போது அடிக்கடி இராணுவம் பயன்படுத்தி வந்த மூலோபாயத்தின் பாகமே எஞ்சியுள்ள ஆஸ்பத்திரிகள் மீதான ஷெல் தாக்குதல்களாகும். ஆட்டிலறி தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் சிவிலியன்களை பீதிக்குள்ளாக்கவும் அவர்களை அங்கிருந்து விரட்டி, புலிப் போராளிகள் மீது ஒட்டு மொத்த தாக்குதலைத் தொடுக்க வழியைத் திறக்கவும் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், புதிய செய்மதி படங்கள் மற்றும் கண்கண்ட சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு செவ்வாய் கிழமை இன்னுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது பாதுகாப்பு வலயத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் கூற்றை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. 9 திகதி முதல் 400க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு 1,000 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் மனித உரிமைகள் கண்கானிப்பக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்ததாவது: "அண்மைய செய்மதி படங்களும் நேரடி சாட்சிகளும், மோதல் பிரதேசத்தில் சிவிலியன்கள் மீது கொடூரமான ஷெல் தாக்குதல் தொடர்வதை காட்டுகிறது. சிவிலியன்களை பீரங்கிக்கு இறையாகப பயன்படுத்துவதில் தமிழ் புலிகளோ அல்லது இலங்கை இராணுவமோ எந்தவிதத்திலும் தயங்குவதில்லை என்றே தோன்றுகிறது."

35 வயதான பாதிக்கப்பட்ட ஒரு பெண், அரசாங்கத்தின் ஆட்டிலறி தாக்குதலில் இருந்து தப்புவதற்காக பல நாட்களை ஆழமில்லாத பங்கர்களுக்குள் கழித்ததாகவும் தப்பி வர முடியாமல் புலிகள் தடுத்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்குத் தெரிவித்தார். மே 9 அன்று, அவளும் மேலும் 15 பேரும் மறைந்திருந்த பங்கருக்கு அருகில் ஷெல் விழுந்த போது, அவள் தற்செயலாக உயிர் தப்பியுள்ளாள். பங்கர் தோன்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ட்ரக் வண்டி அழிக்கப்பட்டது. "ட்ரக்டர் அழியாவிட்டால் நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம்," என அவள் தெரிவித்தாள்.

எந்தவொரு பாதுகாப்புமின்றி பல நாட்கள் தோண்டப்பட்ட குழிக்குள் தானும் தனது குடும்பமும் இருந்ததாக இன்னுமொரு பொதுமகன் தெரிவித்தார். அவர்கள் எல்லாப் பக்கமும் தாக்குதல் தொடுத்தார்கள். "எமது மூன்று பிள்ளைகளுக்கும் உணவும் தண்ணீரும் எடுக்க மட்டுமே நாங்கள் பங்கரை விட்டு வெளியே வந்தோம்." மே 9 அன்று, அவரது 15 வயது மருமகன் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டதோடு அவரது மருமகனின் மூத்த சகோதரனும் சகோதரியும் காயமடைந்தனர். இராணுவம் அருகில் உள்ள காட்டில் புலிப் போராளிகளை தாக்குகிறது என நினைத்துக் கொண்டார்.

புலிகளும் அட்டூழியங்களைச் செய்வதாக அதே நபர் குற்றஞ்சாட்டினார். ஏப்பிரல் முற் பகுதியில் பல நூறு பேர் பாதுகாப்பு வலயத்தை விட்டு வெளியேற முயற்சித்தனர், "முதல் வரிசையில் இருந்தவர்கள் மீது அவர்கள் [புலிகள்] துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அவர்கள் செத்தார்களா பிழைத்தார்களா தெரியாது. துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கிய உடனேயே நாங்கள் நிலத்தில் படுத்துவிட்டோம். அது முடிந்தவுடன் எங்களால் முடிந்த வேகத்தில் நாங்கள் திரும்பிச் சென்றோம். சூடு பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவர்."

வட இலங்கையில் பல வாரங்கள் நடந்த அட்டூழியங்களின் பின்னர், முதற் தடவையாக நிலைமையை ஆராய புதன் கிழமையன்று ஐ.நா. பாதுகாப்புச் சபை உத்தியோகபூர்வமாகக் கூடியது. விளைவு, இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் குற்றவியல் யுத்தத்துக்கும் விளைபயனுள்ள வகையில் ஆதரவளிக்கும் ஒரு கட்டுப்படாத தீர்மானமாகும். அது "பல ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக" புலிகளை "கடுமையாக கண்டனம் செய்ததோடு" "ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பத்தாயிரக்கணக்கான சிவிலியன்களை வெளியேற அனுமதிக்குமாறு" கேட்டுக்கொண்டது.

இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய சாட்சிகள் இருந்த போதிலும், அந்தத் தீர்மானம் கண்டனம் செய்வது ஒரு புறமிருக்க குற்றச்சாட்டுக்களைக் கூட தெரிவிக்கவில்லை. சிக்கிக்கொண்டுள்ள சிவிலியன்கள் பற்றி "பெரும் கவலையை" வெளியிட்டு அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை இராணுவத்தை கேட்டுக்கொண்ட அதே வேளை, பாதுகாப்புச் சபை மோதல்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவில்லை. கனரக ஆயுதங்களை பாவிப்பதை நிறுத்துமாறு மட்டுமே கேட்டுக்கொண்டது. "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ள சட்டபூர்வமான உரிமையை" ஏற்றுக்கொள்வதன் மூலம் அது இனவாத யுத்தத்தையும் நியாயப்படுத்தியது.

இலங்கையிலான மோதல், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பைவிடவும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" அல்ல. கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும், குறைந்தபட்சம் 70,000 உயிர்களைப் பலிகொண்ட இந்த உள்நாட்டு யுத்தமானது, அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்கள் தசாப்த காலங்களாக முன்னெடுத்த தமிழர் விரோத பாரபட்சங்களின் நேரடி உற்பத்தியாகும். இராஜபக்ஷ ஆட்சி, சகல இன பின்னணிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் செலவில், தீவின் சிங்கள மேற்தட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை பலப்படுத்துவதன் பேரில், புலிகளை நசுக்க உறுதிகொண்டுள்ளது.

தமிழ் சிவிலியன்களின் துன்பங்கள் பற்றி பெரும் வல்லரசுகள் காட்டும் அக்கறைக்கும் ஐ.நா. விவாதத்துக்கும் தொடர்பில்லை. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சும், இலங்கையிலும் மற்றும் பரந்து விரிந்த பிராந்தியத்திலும் தமது மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு பொருத்தமான விதத்தில் யுத்தத்துக்கு முடிவு கட்டும் ஒரு "அரசியல் தீர்வை" அமுல்படுத்துவதன் பேரில் கொழும்பு அரசாங்கத்துக்கு நெருக்குவராம் கொடுக்கும் ஒரு வழிமுறையாகவே ஐ.நா. தீர்மானத்தை முன்நிலைப்படுத்துகின்றன. இராஜபக்ஷ அரசாங்கத்துடன் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு கொழும்பில் தமது சொந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தவே சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பானும் அத்தகைய நகர்வை எதிர்க்கின்றன.

இலங்கை யுத்தம் அதன் துன்பகரமான முடிவை எட்டுகின்ற நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரித்த சகல சக்திகளும், தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் மீது படுகொலைகளை திணிக்க உதவியதோடு, இப்போது அதைச் சுரண்டிக்கொள்ள சூழ்ச்சி செய்கின்றன.