World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Re-elected Congress-led government to accelerate pace of pro-investor "reforms"

இந்தியா: மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முதலீட்டாளர்கள்-சார்பு "சீர்திருத்தங்களை" விரைவுபடுத்தும்

By Keith Jones
18 May 2009

Use this version to print | Send feedback

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இந்தியாவில் ஒரு மாத காலம், பல கட்டங்களில் நடந்த தேர்தலில் 543 உறுப்பினர்கள் கொண்ட லோக் சபாவில் அறுதிப் பெரும்பான்மைக்கு 13 இடங்கள் குறைந்தாலும், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுவாக காட்டியுள்ளது --அதிலும் குறிப்பாக 60 இடங்கள் கூடுதலாக 205க்கு தன் எண்ணிக்கையை உயர்ந்தியுள்ள காங்கிரஸ்-- காங்கிரஸ் உட்பட அரசியல் நடைமுறையின் கணிப்புக்களை பொய்த்துவிட்டது. ஒரு தொங்கு பாராளுமன்றம் வரும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ், சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன் போட்டி அணியான தேசிய முற்போக்குக் கூட்டணி (NDA) அல்லது மூன்றாம் அணியுடன் இணைந்திருந்த கட்சிகளை பகிரங்கமாக ஆதரவிற்கு அழைத்திருந்தது. "ஒரு முக்கிய காங்கிஸ் மூலோபாயம் இயற்றுபவர்", "அதிக கனவுகளில்கூட இத்தகைய முடிவை எதிர்பார்க்கவில்லை" என்று இந்து பத்திரிகையிடம் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் தேர்தல் முடிவுகளை "ஒரு மகத்தான ஆதரவு தந்துள்ள முடிவு" என்று விரைவில் பறைசாற்றினர். இது ஒரு மிகையான கூற்றாகும். தேர்தல் குழு இன்னமும் முழு முடிவுகளை வெளியிடவில்லை; ஆனால் தொடக்கப் புள்ளிவிவரங்கள் காங்கிரஸ் தன்னுடைய வெகுஜன 2004ம் ஆண்டின் ஆதரவுப் பங்கை 2 சதவிகிதப்புள்ளிகள் கூடுதலாக உயர்த்தி இப்பொழுது 28.5 சதவீதமாக கொண்டிருக்கிறது.

அவ்வாறு இருந்தும்கூட, காங்கிரஸ் கட்சியும் அதன் UPA அரசாங்கமும் தேர்தல்களில் இருந்து பெரும் வலிமையைக் கொண்டு வெளிப்பட்டுள்ன. காங்கிஸ் கட்சி மட்டும் தனியாக முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சி்களும் பெற்ற, பாரதிய ஜனதா கட்சித் தலைமையில் இருக்கும் NDA இணைந்து பெற்ற இடங்களைவிட கிட்டத்தட்ட 50 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுது NDA மற்றும் மூன்றாம் அணிக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளிடம் இருந்து தனக்கு தேவையான பாராளுமன்ற கூட்டுக் கட்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியான நிலை உள்ளது. மேலும் அதன் கூட்டாளிக் கட்சிகளான வட்டார, சாதித் தளத்தை கொண்டவற்றை --அவற்றில் எதுவும் 19 இடங்களுக்கு மேல் வைத்திருக்கவில்லை-- அவற்றில் எதுவும் எதிர்க்கட்சி பலகைகளில் உட்கார்ந்திருக்கும் கட்சிகளால் மாற்றீடு செய்யப்பட்டுவிடும் என்ற அச்சுறுத்தலையும் கொடுக்க முடியும்.

இந்திய பெருவணிகம் தேர்தல் முடிவுகளை பெரிதும் பாராட்டி காங்கிரஸ் தலைமையிலான UPA அதன் புதிய அரசியல் வலிமையை பயன்படுத்தி வியத்தகு முறையில் முதலீட்டாளர்-சார்பு "சீர்திருத்தங்களை" விரைவுபடுத்தக் கோரியுள்ளது. இதில் ஆலைகளை மூடுதல், ஒப்பந்த வேலை கொடுத்தல் அல்லது பொதுத்துறை பிரிவுகளை (அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள்) முழுமையாகவோ பகுதியாகவோ விற்பனை செய்தல் ஆகியவற்றின் மீது இருந்த தடைகள் அகற்றப்பட வேண்டும், வெளிநாட்டு முதலீட்டிற்கு சில்லறை விற்பனைத் துறையில் கூடுதலான வாய்ப்புக்கள், இந்தியாவின் பெருகும் ஆயுதத் தொழிலை தனியார் முதலீட்டிற்கு விடுதல், வங்கி மற்றும் நிதியப் பணிகளில் (ஓய்வூதியங்கள், காப்பு உட்பட) கட்டுப்பாட்டை தளர்த்துதல் ஆகியவை அடங்கியுள்ளன.

இந்திய வணிக, தொழில்துறை கூட்டமைப்பு மன்றத்தில் (FICCI) தலைவர் ஹரிஷ்பத் சிங்கானியா, "ஒரு சிதைவு இல்லாமல், தெளிவாக வந்துள்ள தீர்ப்பு பற்றி தொழில்துறை மகிழ்ச்சி அடைகிறது.... இது அரசாங்கத்தை விரைவான, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்யும்." என்றார்.

"ஏற்கனவே நாங்கள் புதிய அரசாங்கத்திற்கு 100 நாள் செயற்பட்டியலைக் கொணடுள்ளோம்; பதவி ஏற்றவுடன் பிரதம மந்திரியிடம் அதைக் கொடுப்போம். சீர்திருத்தங்கள் இன்னும் விரைவாக இனி நடக்கும்."

இந்தியாவின் ஏற்றுமதிகளில் மிகப் பெரிய சரிவு வந்துள்ளதை மேற்கோளிட்டு --இதில் மார்ச் மாதம் 33 சதவிகித சரிவும் அடங்கும்-- இந்திய ஏற்றமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் அரசாங்கம் அவர் உறுப்பு நிறுவனங்களுக்கு வரி விடுப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "ஏற்றமதித் துறை வேலை வாய்ப்பு சார்புடைய தொழில்துறையாதலால், நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரி கொடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்" என்று சக்திவேல் கூறினார்.

பெருநிறுவனச் செய்தி ஊடகம் இதேபோல் அரசாங்கம் அதன் வலுவான ஆதரவைப் பயன்படுத்தி பெரு வணிகத்தின் செயற்பட்டியலை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பதில் அழுத்தம் காட்டியுள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் ஏட்டின் தலையங்கம், "இந்த வரலாற்றுத் தன்மை வாய்ந்த வெற்றியை பயன்படுத்துக" என்ற தலைப்பில் கொடுத்த கருத்துக்கள் மாதிரியாக உள்ளன. அது வட்டார மற்றும் சாதி அடிப்படைக் கட்சிகளின் வலு குறைந்ததைப் பாராட்டியது; அவற்றின் உட்பிரிவுகள் மற்றும் போலித் திருப்தி செய்யும் உறுதிமொழிகள் பெருவணிகத்தின் செயற்பட்டியலுக்கு குறுக்கே வந்தன; அதுவும் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி முதல் நான்கு ஆண்டுகள் UPA ஆட்சியின் கீழ் காங்கிரஸின் "சுதந்திரமாக்கும்" முயற்சிகளுக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை அடையமுடியாமல் செய்தது போல் ஆகும். இந்துஸ்தான் டைம்ஸ் கூறியது: "மூன்றாம், நான்காம் அணிகள் அளித்த விருப்புரிமைகள் அவற்றின் தன்மையை ஒட்டி அம்பலமாகிவிட்டன; ஒரு சிறந்த முறையில் அவர்கள் சிறப்பாக வேண்டாம் என்று கூறுபவைதான்; மோசமான தன்மையில் இரகசியமாக செயல்களை முடிக்கக்கூடியவை. ஆனால் UPA க்கு இப்பொழுது இடது போன்ற ஆல்பட்ராஸை கழுத்தில் கட்டித் தொங்கும் தேவையில்லாததால், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சீர்திருத்தங்கள் விரைவுபடுத்த உறுதியுடன் செயல்படும் என்று நம்புகிறோம்".

காங்கிரஸ் தலைமை அதைத்தான் செய்யும் என்பதில் கேள்விக்கு இடமில்லை; இது ஜூன் கடைசி அல்லது ஜூலையில் தொடங்கும். பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவர் சுரேஷ் டெண்டுல்கர் தேர்தல் முடிவுகளுக்கு விடையிறுக்கும் வகையில் கூறினார்: "அரசாங்கத்தின் செயற்பட்டியலில் பொருளாதார சீர்திருத்தங்கள் உறுதியாக உயர்ந்து இருக்கும்."

ஒபாமா நிர்வாகமும் காங்கிரஸ் தலைமையிலான UPA மீண்டும் தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க செனட் குழுக்கூட்டத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் உதவி செயலராக தனது நியமனம் பற்றி சாட்சியம் அளித்த போது, ரொபேர்ட் பிளேக் வாஷிங்டன் விரைவில் "அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையே உள்ள மூலோபாய பங்காளித்தனத்தை வலிமைப்படுத்தும்" என்றார்.

இந்திய உயரடுக்கு இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆர்வமுடன் காண்கிறது; அதன்படி இந்தியாவிற்கு எதிரான, சர்வதேச அணுசக்திப்பொருள் விற்பனைத் தடை முறிகிறது; UPA அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாக "உலக": பங்காளித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் வாஷிங்டனுக்கும் புது தில்லிக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் அது வந்தது.

காங்கிரஸும் BJP யும்.

காங்கிரஸ்/UPA தேர்தல் வெற்றிக்கு சில காரணிகள்

ஏற்றுமதியில் எழுச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் வரத்து அதிகமானதை ஒட்டி இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் பகுதியில் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சியின் பலன்கள் பெரும்பாலும் சமூகத்தின் மிக அதிக சலுகை பெற்றவர்களுக்குத்தான் சென்றது. ஆனால் மக்களின் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து வாழும், புதிய தாராளக் கொள்கை சீர்திருத்தங்களால் கடந்த இரு தசாப்தங்களாக தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற இந்தியாவின் நிலைமை சமீபத்திய ஆண்டுகளில் சற்று முன்னேறியது; இதற்குக் காரணம் நகரங்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கூடுதலாக பணம் அனுப்பியது, தொடர்ந்த நல்ல பருவ மழை பொழிந்தது. விவசாயத் துறையில் அரசாங்க முதலீட்டிற்கு ஓரளவிற்குப் பெருக்கம் மற்றும் சமூக நலச் செலவினங்கள் செய்யப்பட்டவை ஆகியவை ஆகும். கிராமப்புற இடர்களைக் குறைக்கும் வகையில் விவசாயிகள் பட்டுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டம் கொண்டுவந்து ஒவ்வொரு வறிய குடும்பத்திலும் ஒரு உறுப்பினருக்கு 100 நாட்கள் உடல் உழைப்பு, குறைந்த ஊதியம் ஆண்டு ஒன்றுக்கு கொடுக்கப்பட்டது ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

கடந்த ஏழு மாதங்கள் தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதிகளில் மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் மிக அதிகமான குறைப்பைக் கண்டன. ஆனால் மக்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸின் கூற்றான UPA தான் இந்தியாவை மீண்டும் உயர்ந்த, "உள்ளடங்கிய" பொருளாதார வளர்ச்சியை மீட்க சிறந்த கட்சி என்பதைத் தெளிவாக ஒப்புக் கொண்டனர்.

காங்கிரஸ்/UPA வெற்றிக்கு இதே போல் முக்கியமாக இருந்தது அதன் எதிர்ப்பாளர்கள்மீது மக்கள் கொண்ட எதிர்மறைக் கருத்துக்கள்தான்.

பாரதிய ஜனதாக் கட்சி அல்லது BJP வகுப்புவாதம் நிறைந்த, வலதுசாரிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இது காங்கிரஸ் பயங்கர வாதத்தின்மீது "மிருதுவாக" இருப்பதாக தாக்கி, BJP அரசாங்கம் ஒரு "வலுவான" வெளிநாட்டுக் கொள்கையை ஏற்கும் என்றும் அதில் எல்லை கடந்து பாக்கிஸ்தான்மீது தாக்குதல்கள் நடத்த முடியும் என்றும் பறையறிவிக்கப்பட்டது; மேலும் எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் தற்போதைய, வருங்கால BJP முகங்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. வாழ்நாள் முழுவதும் பாசிச RSS ன் உறுப்பினராக இருக்கும் அத்வானி புராணக் கடவுள் இராமருக்கு ஒரு புகழ்பெற்ற அயோத்தி மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டும் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்; இது 1992-93 ல் 1947 பிரிவினைக்குப் பின்னர் பெரும் குருதி கொட்டப்பட்ட வகுப்புவாத கலகங்களில் உச்சக் கட்டத்தை அடைந்தது. குஜராத்தின் முதல் மந்திரியான மோடி 2002ல் முஸ்லிம் எதிர்ப்பு இனக் கொலையைத் தூண்டிவிட்டார்; அதையொட்டி 2,000 பேர் உயிரிழந்ததுடன் 100,000 பேர் வீடுகளையும் இழந்தனர்.

இந்திய மக்கள் வெளிப்படையாக BJP ஐ நிராகரித்துள்ளனர். இது 116 இடங்களில் வெற்றி பெற்றது; 1989 தேர்தல்களுக்கு பின்னர் இது அதற்கு மோசமான முடிவு ஆகும்; இதன் NDA கூட்டணி மொத்தம் 174ல் இருந்து 158க்கு சரிந்தது. BJP மற்றும் அதன் மகாராஷ்டிர கூட்டுக் கட்சியான சிவ சேனைக்கும் ஆதரவு முக்கிய நகர்ப்புற மையங்களில், டெல்லி, மும்பை உட்பட, குறைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் BJP ஒரு தென்னிந்திய மாநிலத்தில் காலூன்றிய நிலையில் (கர்னாடகா), மற்றபடி அதற்கு ஆதரவு முற்றிலும் மேற்கு, வடக்கு இந்தியாவுடன்தான் உள்ளது. அதன் எம்.பி.க்கள் பலரும் மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பிகார் மாநிலங்களில் இருந்து வருகின்றனர்; அவை பொருளாதார அளவில் பிற்போக்குத்தனமாகவும், வறிய நிலையிலும் உள்ளவை ஆகும்.

BJP தோல்வியின் பரப்பு வெளிவந்தவுடன் அத்வானி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சனிக்கிழமை அன்று இராஜிநாமா செய்தார்.

தேர்தல் முடிவுகள் பல மாநில மற்றும் சாதித் தளக்கட்சிகளுக்கும் பெரும் தாக்குதலைக் கொடுத்தன; இவை 1980களில் தோன்றியவை, 1996ல் இருந்து ஒவ்வொரு அரசாங்கம் அமைக்கப்படுவதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. இவற்றில் ஆந்திரப் பிரதேசத்தை தளமாகக் கொண்ட தெலுகு தேசக் கட்சி (TDP), பீகாரை தளத்தைக் கொண்ட ராஷ்டிரிய ஜனதாதளம் (RJD), மற்றும் தலித்துக்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்று தவறாக கூறிக் கொள்ளளும் பகுஜன் சமாஜ் கட்சி (BJP), இருந்தன. இக்கட்சிகளுக்கு ஆதரவு குறைந்துள்ளது என்றால், பெருகிய முறையில் இவை பிடித்துக் கொள்ளும் ஊழல் வாய்ந்த பல உள்ளூர்த் தலைவர்களின் கருவிகள் என்பதும் அவற்றின் மக்களை ஈர்க்கும் சொற்கள் இருந்தாலும் உண்மையில் முதலாளித்துவத்தின் கூற்றான இந்தியாவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம், குறைவூதிய தொழிலாளர் தொகுப்பாக மாற்றும் திட்டத்தை அவை விசுவாசத்துடன் செயல்படுத்துகின்றன என்பது அறியப்பட்டுவிட்டது.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் இடது முன்னணிக்கு ஒரு பெரும் பின்னடைவு

ஆனால் தேர்தலில் மிகப் பெரும் இழப்பை அடைந்தது CPM, மற்றும் அதன் இடது முன்னணி என்பதில் சந்தேகம் இல்லை. லோக் சபாவில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கும் மேலாகக் குறைந்துவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு CPM மற்றும் இடது முன்னணி முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதாரக் கொள்கையில்" இருந்து விளைந்த பெருகிய பொருளாதார பாதுகாப்பற்ற தன்மை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக மக்கள் சீற்றம் அலையென வந்ததில் தங்களுடைய சிறந்த முடிவுகளைக் கண்டன.

தேர்தல்கள் முடிந்த உடனேயே ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தங்கள் தொழிலாள வர்க்கத்தையும் விவசாய ஆதரவாளர்களையும் காட்டிக் கொடுக்கும் விதத்தில் இந்திய முதலாளித்துவத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸின் எடுபிடியாக செயல்பட்டது. BJP க்கு எதிராக "மத சார்பற்ற" காங்கிரஸை ஆதரிக்க வேண்டியது தேவை என்று கூறிய CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற கட்சிகளையும் ஊக்குவித்து, UPA-வைத் தோற்றிவிக்க காங்கிரஸுடன் உழைத்தது. UPAஇன் குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தை இயற்றுவதில் காங்கிரஸுக்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முக்கிய பங்கை ஆற்றியிருந்தனர்; அதற்கு "மனித முகத்துடன் கூடிய சீர்திருத்தம்" என்று வடிவங்கொடுக்கப்பட்டது; அதாவது இந்தியாவின் உழைப்பவர்கள் நலன்கள் மற்றும் விழைவுகளை, தன்னை செல்வக்கொழிப்பாக்கிக் கொள்ள, இந்தியாவை பெரிய சக்தியாக்க வேண்டும் என்ற இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலுடன் இணைக்க முடியும் என்று அதில் கருதப்பட்டது.

காங்கிரஸ் அரசாங்கத்திலும் இடது பங்கு பெற வேண்டும் என்று ஆர்வம் காட்டியது, இது பாராளுமன்ற கூட்டல், கழித்தல் ஆகியவற்வறை ஒட்டி மட்டுமல்ல. 2004 தேர்தல்கள், எதிர்பாராமல் காங்கிரஸை முதல் இடத்திற்கு கொண்டுவந்தது, மக்கள் மிகப் பெரிய அளவில் முதலாளித்துவ வர்க்க மூலோபாயத்திற்கு எதிர்ப்பை காட்டினர் என்பதை அறிந்து, தனக்கு "மக்கள்-சார்பு" முகம் ஒன்றை அளிக்கவும் இந்திய முதலாளித்துவத்தை அச்சுறுத்தும் நிலைமையை குறைக்கவும் ஸ்ராலினிஸ்ட்டுக்களை பயன்படுத்திக் கொள்ள ஆவலுடையதாக இருந்தது.

முன்னதாக இருந்த BJP தலைமையிலான NDA அரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்து சிறிதும் வேறுபட்டிராத வகையில், காங்கிரஸ் வலதுசாரி சமூகப் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றியமைக்கு எதிர்ப்புக் கூறினாலும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சிறுபான்மை UPA அரசாங்கம் பதவியில் இருப்பதற்குத் தேவையான வாக்குகளை இடது அளித்தது.

இறுதியில் காங்கிரஸ் இடது முன்னணியை அது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்கு மறுத்த நிலையில் கழற்றிவிட முடிவெடுத்தது

இதற்கிடையில் எங்கு அது அதிகாரத்தில் உள்ளதோ, அங்கெல்லாம் இடது முன்னணி தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளிடம் இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குதல் (வேலைநிறுத்தம் கூடாது என்ற சட்டங்களை சுமத்துதல் உட்பட), வரிகளைக் குறைத்தல், சிறப்பு பொருளாதார பகுதிகளை நிறுவுதல் ஆகியவற்றை செய்வதற்காக வெளிப்படையான மோதலில் ஈடுபட்டது. மேற்கு வங்கத்தில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வன்முறை போலீஸ் நடவடிக்கைகளை பயன்படுத்தி நந்திகிராமம், சிங்கூர் ஆகிய இடங்களில் சிறப்பு பொருளாதார பகுதிகளை நிறுவுவதற்காக விவசாயிகளது நிலங்களை பறிக்கும் முயற்சியில், மக்கள் எதிர்ப்பை நசுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறவில்லை

2004 தேர்தல்களில் இடது முன்னணி 61 இடங்களைக் கைப்பற்றியது; இதில் 43 CPM உடையது ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் CPM 17 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது; இடது முன்னணியே மொத்தத்தில் 24 இடங்களில்தான் வந்துள்ளது. 1951க்கு பின்னர் இந்த அளவு குறைந்த விதத்தில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கவில்லை.

கடந்த 32 ஆண்டுகளாக இடது முன்னணி ஆட்சி நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி 2004ல் இருந்த 35 என்பதற்கு பதிலாக 14 தொகுதிகளில்தான் வென்றுள்ளது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பின்பற்றிவரும் வலதுசாரி கொள்கைகள் திருணமூல் [அடிவேர்கள்] காங்கிரஸ் கட்சியை, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதியும் முன்னாள் BJP கூட்டாளியுமான மமதா பானர்ஜியை "பெரு வணிக ஆதரவுடைய" இடதிற்கு எதிராக உழைப்பாளிகளின் பாதுகாவலர் என்று காட்டிக் கொள்ள உதவியுள்ளது.

மாநில அளவில் 2006 ல் காங்கிரஸ் தலைமையிலான "சீர்திருத்தங்களுக்கு" எதிராக நடந்த எதிர்ப்பு அலையின் போது அதிகாரத்திற்கு வந்த இடது, இப்பொழுது 4 லோக் சபா இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது; காங்கிரஸோ 15 இடங்களை வென்றுள்ளது.

கடந்த ஜூலை காங்கிரசால் தூக்கி எறியப்பட்டபின், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காங்கிரஸ்-எதிர்ப்பு, BJP எதிர்ப்பு மூன்றாம் அணி என்ற கருத்தை முன்வைத்தனர். தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் என்ற நிலைப்பாட்டின்கீழ் இது ஒரு அரசியல் இழிசெயல் ஆகும். ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பல வலதுசாரி மாநில, சாதித்தளத்தை உடைய கட்சிகளை ஒன்றாக இணைத்தனர்; அவை அனைத்தும் முன்பு BJP அல்லது காங்கிரஸின் நட்பு காட்சிகளாக இருந்தன. இதையொட்டி இடது ஒரு "மதசார்பற்ற, மக்கள்-சார்புடைய" அரசாங்கத்தை அமைக்கும் என்று ஸ்ராலினிஸ்டுகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸும் அதன் நட்புக்கட்சி திமுகவும், இடதை ஏளனம் செய்யும் வகையில், அதன் நட்பு கட்சி அஇஅதிமுக 2003ல் தமிழ்நாடு அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை, வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களை பயன்படுத்தியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை மொத்தமாக பதவிநீக்கம் செய்தும் முறியடித்ததை சுட்டிக் காட்ட முடிந்தது.

வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னதாகவே மூன்றாம் அணி பங்காளிக் கட்சிகள், AIADMK, TDP, JD(S) ஆகியவை அக்கப்பலில் இருந்து மாறி காங்கிரஸ் அல்லது BJP உடன் சேரத் தயாராக இருந்தன.

தேர்தல் முடிவுகளுக்கு விடையிறுக்கும் வகையில் CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்: "நாங்கள் ஒரு பெரிய பின்னடைவை கொண்டுள்ளோம். கட்சி எதிர்கொண்டுள்ள மோசமான செயற்பாட்டுக்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்."

குறிப்பாக CPM பெருவணிகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில், கட்சித் தலைமையில் முக்கியமான பிரிவு, கடந்த கோடையில் எடுக்கப்பட்ட முடிவான காங்கிரஸ் தலைமையிலான UPA க்கு பாராளுமன்ற ஆதரவை விலக்கிக் கொள்ளுவது என்ற முடிவை எதிர்த்தது. முன்னாள் CPM சட்ட மன்ற உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜி, காரத் இராஜிநாமா செய்யவேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். 2004ல் உடன்பாடுகளின் அடிப்படையில் சாட்டர்ஜி லோக் சபா தலைவராக (ஸ்பீக்கர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்; இடது முன்னணி அப்பொழுது UPA உதவிக்கு சென்றது. அவர் UPA க்கு ஆதரவை இடது திரும்பப்பெற்றபின் விலக்கிக் கொள்ள மறுத்ததை அடுத்து CPM ல் இருந்து நீக்கப்பட்டார்.

ஒரு முன்னோடில்லாத பொருளாதார ஏற்றம் இருந்த நிலையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் உதவியுடன் காங்கிரஸ் தலைமையிலான UPA கடந்த ஐந்து ஆண்டுளில் சில நெருக்கடிகள் இருந்த போதிலும் கூட, பெருவணிகத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வர்க்கப் போராட்டத்தை மூடிவைக்க முடிந்தது. இரண்டாம் UPA அரசாங்கம், மாறிவிட்ட சூழ்நிலையில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுகிறது; இது தொழிலாள வர்க்கத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நேரடி மோதலை ஏற்படுத்தும். ஏற்கனவே உலகப் பொருளாதார நெருக்கடி பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவையும் வேலையின்மையில் அதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடையிறுக்கும் வகையில் பெருவணிகம் முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறியிருப்பது மட்டும் இல்லாமல், அரசாங்கம் செலவினங்களை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகிதம் இருக்கும் மத்திய மற்றும் மாநிலங்களின் பட்ஜெட் பற்றாக்குறை பெரிதும் குறைக்க வேண்டிய அளவிற்கு அது இருக்க வேண்டும் என்றும் கோருகிறது.