World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French "anti-capitalist" Olivier Besancenot justifies collaboration with reformists and Polish nationalists

பிரெஞ்சு "முதலாளித்துவ-எதிர்ப்பு" ஒலிவியே பெசன்ஸநோ சீர்திருத்தவாதிகள் மற்றும் போலந்து தேசியவாதிகளுடனான ஒத்துழைப்பை நியாயப்படுத்துகிறார்

By Antoine Lerougetel and Stefan Steinberg
27 May 2009

Use this version to print | Send feedback

பிரான்ஸின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) முக்கிய வேட்பாளரான ஒலிவியே பெசன்ஸநோ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பெல்ஜியத்தின் Tournai ல் மே 22ல் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். WSWS நிருபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சமீபத்தில் போலந்திற்கு அவர் சென்றதை பற்றி பெசன்ஸநோவிடம் குறிப்பான வினாக்களை எழுப்பினர்.

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு பயணித்த பின்னர் மே 16ம் தேதி PPP எனப்படும் போலந்தின் தொழிற் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் Katowice ல் பெசன்ஸநோ பேசினார். PPP மிக நெருக்கமாக "ஆகஸ்ட் 80" தொழிற்சங்கத்துடன் செயல்படுகிறது; தன்னுடைய உறுப்பிர்களுள் வெளிப்படையான தேசியவாதிகளை கொண்டுள்ளது; அதில் முன்னாள் போலந்து சர்வாதிகாரி Jozef Pilsudski மற்றும் வலதுசாரி மக்கள் கட்சி Samoobrona (Self-Defence of the Republic of Poland) செயலர்களும் அடங்குவர்.

Katowice PPP மாநாட்டில் பெசன்ஸநோவுடன் பேசிய முக்கியமான பேச்சாளர்களில் ஒருவர் Bogdan Golik ஆவார்; இவர் போலந்தின் வணிகக் குழுவின் துணைத் தலைவர் ஆவார். இவர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சமூப்ரோனாவின் பட்டியலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பொழுது சமூக ஜனநாயகக் குழுவுடன் அமர்கிறார். ஐரோப்பிய தேர்தலில் PPP ன் முக்கிய வேட்பாளர்களில் கோலிக்கும் ஒருவர் ஆவார். கடோவைஸில் இவர் பேசுகையில் பல முறையும் "போலந்து நலன்களை" தீவிரமாக Strasbourg பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்த ஒரே நபர் என்று வலியுறுத்தினார்.

இத்தகைய பிற்போக்கு நபர்களுடன் பெசன்ஸநோ தோன்றியது NPA சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாத சக்திகளுடன் ஒத்துழைக்கத் தயார் என்பதை தெளிவாக்கியது மட்டும் இல்லாமல், அது வெளிப்படையாக தேசியவாத கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயார் என்பதையும் காட்டியது.

Tournai செய்தியாளர் கூட்டத்தில் கடந்த வெள்ளியன்று வலதுசாரிகளான கோலிக் போன்றவர்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பது பற்றி WSWS ஆல் வினாவப்பட்டபோது, பெசன்ஸநோ Katowice PPP மாநாட்டில் தான் பங்கு கொண்டதை நியாயப்படுத்தி அதே நேரத்தில் கோலிக்கின் தேசியவாத நிலைப்பாடுகளையும் மூடிமறைத்தார். "நான் எந்த வலதுசாரி தேசியவாதிகளையும் பார்க்கவில்லை. "நாங்கள் முதலாளித்துவ எதிர்ப்பு சர்வதேசிய வாதிகளிடம்தான் விவாதித்தோம்" என்று பெசன்ஸநோ கூறினார்.

அப்படியானால் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி உடன் கோலிக் பிரெஞ்சு சோசலிசக் கட்சியினூடாக ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினர் என்பது நன்கு அறியப்பட்டாலும், பிரெஞ்சு சோசலிசக் கட்சி (PS) உடன் அரசியல் ஒத்துழைப்பை NPA நிராகரிப்பதாக கூறுவதை எப்படி அவர் விளக்க முடியும் என்று WSWS பெசன்ஸநோவை கேட்டது.

இந்தக் கேள்வியினால் வெளிப்படையாக உறுத்தலுக்கு ஆளான பெசன்ஸநோ விடையிறுத்தார்: "PPP இந்த யூரோ எம்.பி.உடன் உடன்பாட்டைக் கொண்டுள்ளது. உங்கள் தொலைபேசியை எடுத்து நீங்களே PPP ஐ கேளுங்கள். அவருடைய வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி என்னிடம் நீங்கள் கேட்டால் நான் பதில் கூறமுடியாது. அவர் எமது கூட்டாளி அல்ல. நான் அவர் பேசுவதைக் கேட்டுள்ளேன், அவர் முந்தைய குழுவைவிட்டு நீங்கியதற்கு காரணம் மற்றும் எந்த அடிப்படையில் என்பதைப் பற்றி அவருடைய உரையைக் கேட்டுள்ளேன்."

இதன் பின் பெசன்ஸநோ, "நாங்கள் கூறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு இடது ஒருங்கிணைப்பில் கோலிக் இல்லை... PPP அதன் உறவுகளையும் கூட்டுக்களையும் கொண்டுள்ளது."

"அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டதற்கு விளக்கங்கள் கொடுக்கத் தேவையில்லை... நான் ஒன்றும் வேறு நாடுகளுக்கு அவற்றிற்கு நல்ல, அல்லது கெட்ட மதிப்பெண்கள் கொடுக்க செல்லுவதில்லை."

WSWS குழு எழுப்பிய வினாக்களில் பெசன்ஸநோ அதிர்ந்து போனார் என்பது வெளிப்படை. ஆனால் போக்டன் கோலிக்கின் அரசியல் செயற்பாடுகள், வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது என்று அவர் கூறுவது ஏற்கத் தக்கது இல்லை.

NPA (அல்லது அதன் முன்னோடி Ligue Communiste Revolutionnaire LCR) சமீப ஆண்டுகளில் போலந்தின் தொழிற் கட்சியுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டுள்ளது. 2006ம் ஆண்டில் PPP மற்றும் அத்துடன் இணைந்த "ஆகஸ்ட் 80" தொழிற்சங்கதத்தின் Boguslaw Zietek, LCR இன் சர்வதேச போக்கால் வெளியிடப்படும் சஞ்சிகையான International Viewpoint க்கு பேட்டி கொடுத்தனர்.

அந்தப் பேட்டியில் Zietek பெப்ருவரி 2009 ல் NPA நிறுவன மாநாட்டில் பெசன்ஸநோ முன்வைத்த நிலைப்பாட்டிற்கு ஆதரவை வெளிப்படுத்தினார்--அதாவது வரலாறு மற்றும் அரசியல் மரபுகள் அரசியல் நட்புக் கட்சிகளை தேர்ந்தெடுப்பதில் பங்கு ஏதும் கொள்ளவில்லை என்று. PPP யின் சார்பில் பேசிய Zietek கூட்டாக நினைவிழப்பதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். "1989க்கு முன் மக்கள் என்ன செய்தனர் என்று செயற்கையாக வரலாற்றுப் பிரிவுகள் ஏற்படுத்தப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். இன்று போலந்திற்கு எவரேனும் நன்மை செய்ய விரும்பினால், அவர்கள் முன்பு ஆளும் கட்சியில் இருந்தார்களா அல்லது எதிர்க்கட்சியில் இருந்தார்களா என்பது முக்கியம் இல்லை."

Zietek 2008ல் பாரிஸில் LCR மாநாடு ஒன்றில் பேசினார். கடந்த காலத்தில் அரசியல் காட்டிக் கொடுப்புக்கள் பொது மன்னிப்பு பெறவேண்டும் என்று Zietek, பெசன்ஸநோ கோரியபோதிலும், இருவரும் அனுபவம் நிறைந்த அரசியல் வாதிகள் ஆவர். PPP யின் முக்கிய தலைவரின் வலதுசாரி அரசியல் பின்னணியை பற்றித் தனக்கு ஏதும் தெரியாது என்று பெசன்ஸநோ சமீபத்தில் கூறியிருப்பது சிறிதும் நம்பத்தகுந்தது அல்ல.

எப்படிப் பார்த்தாலும், கோலிக் பற்றி பெசன்ஸநோவின் அணுகுமுறையை விட முக்கியமானது அவருடைய சந்தர்ப்பவாதமும் தேசியப் பார்வையும் ஆகும். முதலில் PPP இன் முக்கிய வேட்பாளர் "நாம் பேசிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவில் இல்லை" என்று தெரிவிப்பது முதலில் அபத்தம் ஆகும்; இதுவோ NPA இன் மையவாத கூட்டு ஆகும், இதில் PPP க்கும் தொடர்பு உண்டு.

மற்ற நாடுகளுக்கு செல்வது "அவற்றிற்கு நல்ல அல்லது மோசமான மதிப்பெண்கள்" கொடுப்பதற்கு அல்ல என்ற பெசன்ஸநோவின் வாதம் பற்றி என்ற கூறமுடியும்? எத்தகைய வலதுசாரித் தன்மை கொண்டிருந்தாலும் இவர் "மோசமான மதிப்பெண்" கொடுக்காமல் இருப்பாரா? இது வெறும் தேசிய மேம்போக்குத்தனம், சந்தேகத்திற்கு உரிய சக்திகளுடன் கூட்டுக்கு பச்சை விளக்கு காட்டுவது போல் ஆகும்.

பெல்ஜிய செய்தியாளர் கூட்டத்தில் NPA இன் அணுகுமுறை, ஐரோப்பிய சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாதக் கட்சிகள் பற்றி முற்றிலும் தந்திரோபாய உத்தியைத்தான் கொண்டிருந்தது என்பதை பெசன்ஸநோ தெளிவுபடுத்திவிட்டார். ஜேர்மனிய அல்லது பிரெஞ்சு இடது கட்சி போன்ற அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றும் பிரச்சினையில் பெசன்ஸநோ வலியுறுத்தியதாவது: "இவை தந்திர உத்தி பற்றிய வினாக்கள்; ஐரோப்பிய தரத்தில் சமூக ஜனநாயகத்தில் இருந்து சுதந்திரமாக இருப்பது பற்றி பேசும்போது தீர்க்கப்பட வேண்டியது...ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு இடது கட்சிகளுக்கு சகோதர கரத்தை நீட்டி, எங்கள் வேறுபாடுகளையும் உணர்கிறோம். இது ஒரு தந்திர உத்தி விவாதம். அந்த முகாமில் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். உண்மைகளின் சரியான அனுபவத்தில் போராட்டத்தில் முன்னேறுவோம்."

இப்படி NPA இன் அடிப்படை தேசிய முன்னோக்கு ஏற்கனவே அதன் நிறுவன மாநாட்டில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதற்கு பதிலாக "ஒரு தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஐரோப்பா" என்ற தெளிவற்ற கருத்திற்கு ஆதரவாக கொண்டதில் இருந்தே வெளிப்படை ஆயிற்று. இந்த முழக்கம் பலமுறையும் Tournai செய்தியாளர் மாநாட்டில் பேச்சாளர்களால் கூறப்பட்டது.

பெசன்ஸநோ கட்டோவைசில் தோன்றியது, NPA, பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் PPP உடன் ஒத்துழைப்பதை நியாயப்படுத்தியது ஆகியவை தீவிர எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஐரோப்பாவில் தற்போதைய நெருக்கடி தீவிரமாகுகையில், புதிய முதலாளித்துவக் கட்சி எல்லா சக்திகளுடனும் ஒத்துழைத்து தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சுயாதீன இயக்கத்தை திசை திருப்பிவிடும்.