World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Closure of Quelle mail order business costs 7,000 jobs

ஜேர்மனி: Quelle அஞ்சல்வழி பொருட்கள் வணிகம் மூடப்படல் 7,000 பணிகளைத் தகர்க்கிறது

By Peter Schwarz
23 October 2009

Use this version to print | Send feedback

நீண்டகாலமாக நடத்தப்பட்டுவரும் அஞ்சல்வழி பொருட்கள் வணிக நிறுவனமும் தொடர் கடைகளை கொண்ட Quelle மூடப்பட்டு வருகிறது. இது திங்களன்று அரசு மூடும் அதிகாரியான Hubert Görg ஆல் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள 10,500 ஊழியர்களில் கிட்டத்தட்ட 7,000 பேர் தங்கள் வேலைகளை இழப்பர் என்று Financial Times Deutschland கூறியுள்ளது.

பவேரியா மாநிலத்தில் Furth என்னும் இடத்தில் உள்ள Quelle தலைமையகம் மூடப்படுவதைத் தவிர, மொத்தம் 3,500 ஊழியர்களை கொண்ட பல அழைப்பு மையங்களும் (call centre) பாதிப்பிற்கு உட்படும். இதைத்தவிர லைப்சிக்கில் உள்ள நிறுவனத்தின் மத்திய பொதிகள் விநியோக மையமும் மற்றும் பொருட்களுக்கான அளிப்பாணையே சேகரிப்பதும் சிறியளவு பொருட்களை விற்பனை செய்யும் 1,450 Quelle கடைகளும் பாதிக்கப்படும். இந்த மூடல் Deutsche Post இன் துணைநிறுவனமான DHL நடத்தும் கிட்டங்கி மற்றும் பொருள்களை Quelle க்கான அனுப்பும் நிறுவனம் ஆகியவையும் பாதிக்கப்பட்டு, ஊதியத் தகர்ப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Karstadt பல்பொருள் அங்காடித் தொடர் கடைகளின் உரிமையாளரும் Quelle இன் தாய் நிறுவனமான Arcondor நிறுவனமும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திவால் தன்மைக்கு பதிவு செய்தது. அந்த நேரத்தில் ஜேர்மனிய அரசாங்கம் நாடப்பட்ட நிதிய உதவி அனைத்தையும் நிராகரித்தது. அதற்கு காரணம் சமூக ஜனநாயகக் கட்சி பாரியளவில் வாக்குகளை இழந்ததும், தடையற்ற சந்தைக்கு ஆக்கம் கொடுக்கும் FDPக்கு கணிசமான வெற்றி கிடைத்த ஐரோப்பிய தேர்தல்களின் விளைவாகும் இது. முதலாளிகள் அமைப்புக்கள் இந்த வெற்றியை தொடர்ந்து வேலைகளுக்கான பிணை எடுப்பிற்கு எந்த அரசாங்க பொது ஆதரவும் கிடையாது என்று ஒருமுகமாகக் கூறின. இதற்கு Arcondor பலியாகியது.

அப்பொழுது முதல் அரசு மூடல் அதிகாரி, தொழிற்சங்கமான Verdi மற்றும் நிறுவனத்தின் தொழிலாளர் குழுக்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வேலை இழப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும், நிறுவனத்தை பல நிதிய முதலீட்டாளர்களுக்கு பங்கு பிரித்து விற்றல் ஆகியவற்றின் மூலமாக Arcondor குழுவை மீண்டும் இலாபகரமானதாக இயக்க முயல்கின்றனர்.

ஜூன் மாதத்திலேயே Arcondor இன் அஞ்சல் வழிப் பிரிவு முழுச்சரிவையும் எதிர்நோக்கியது. ஏனெனில் வங்கிகள் எவ்விதக் கடன்களையும் கொடுக்க மறுத்துவிட்டன. இதன் பின் கூட்டாட்சி 50 மில்லியன் யூரோக்களுக்கு சிறப்புக் கடனுக்கு ஒப்புதல் கொடுத்தது. இதில் மத்திய அரசாங்கமும் பவேரியா, சாக்சனி மாநில அரசாங்கங்களும் சமமாக நிதி கொடுத்தன. பொருளாதார மந்திரி Theodor zu Guttenberg (CSU) இந்தக் கடன் நிறுவனம் டிசம்பர் 31 வரை தப்பிப்பிழக்க உதவும் என்று உறுதியளித்த பின்னர் நிறுவனம் ஒழுங்குமுறையாக திவாலுக்கு செல்வதை சாத்தியமாக்கினார்.

உண்மையில் இந்தக் கடன் செப்டம்பர் மாத கூட்டாட்சித் தேர்தல்கள் வரைதான் Quelle தப்ப உதவியது. எல்லாவற்றிற்கும் மேலாக 82 ஆண்டுகள் மரபைக் கொண்ட ஒரு பவேரிய நிறுவனம் தேர்தலுக்கு முன் சரிந்தால் அது தனக்கு கணிசமான வாக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று பவேரிய மாநிலக்கட்சியான CSU அஞ்சியது.

அந்த நேரத்தில் WSWS பின்வருமாறு எச்சரித்திருந்தது: "இந்த மரபார்ந்த அஞ்சல் வழி பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மூடல் தேர்தல்வரைதான் தள்ளிவைக்கப்பட்டுள்ளது." இந்த எச்சரிக்கை இப்பொழுது முழுமையாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. தேர்தல் முடிந்து மூன்று வாரங்களில் Quelle முடிந்துவிட்டது என்ற அரசு மூடல் அதிகாரி Görg அறிவிப்பைக் கொடுத்தார்.

தன்னுடைய முடிவை நியாயப்படுத்தும் வகையில் Primondo என்னும் நிறுவனத்தின் கீழ் அஞ்சல் வழி விற்பனையை முற்றாக நேரடியாக முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கு முடியவில்லை என்று Görg கூறினார். எனவே Quella மூடப்பட்டு அதன் இலாபம் தரும் சிறப்பு அஞ்சல் வழி விற்பனைப் பிரிவுகளான Baby-Walz, Elegance, Hess Natur மற்றும் Quelle யின் வெளிநாட்டு வணிக கடைப்பிரிவான HSE 24 ஆகியவை தனித்தனியே விற்கப்படும் என்றார்.

கடந்த வாரம்தான் சாத்தியமான நான்கு வாங்கு திறன் உடையவர்கள் பற்றி Gorg பேசியிருந்தார். அதன் பின் "கூறுபாடு போடுவது" பற்றி உடன்பாடு இல்லாத காரணத்தால் பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. இது அஞ்சல் வழி விற்பனைப் பிரிவிற்கு நிதி கொடுப்பது பற்றியது ஆகும். Quelle வாடிக்கையாளர்களின் கட்டண பத்திரங்களை ஒரு வங்கிக்கு அனுப்பும். அது ஒரு தரகுத்தொகையை கழித்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டிய தொகைக்கு ஈடான நிதிய வழங்கும்.

கூறுபாடு போடுவது மற்றிய ஏற்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்குக் காரணம் Essen Valovis Bank ஆகும். இதுவே முன்பு Quelleக்குச் சொந்தமானதாக இருந்தது. இதைத்தவிர Commerzbank, BayernLB இரண்டும் இருந்தன. இவை வங்கிகளும் மீட்பு நிதியில் இருந்து அரசாங்க உதவியை மிக அதிகளவு பெற்றவையாகும். இவற்றை மத்திய அரசாங்கமும் பவேரிய மாநில அரசாங்கங்களும் கட்டுப்படுத்தும் அளவிற்கு அக்கறை கொண்டுள்ளன. இவ்விதத்தில் மத்திய, மாநில அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை செல்வாக்கிற்குட்படுத்தும் விதத்தில் கட்டுப்பாட்டை கொண்டிருந்தன. ஆனால் தேர்தலுக்குப் பின் அவை Quella வில் ஆபத்திற்கு உட்பட்டுள்ள 7,000 வேலைகளை மீட்கும் அக்கறையை இழந்தன.

இப்பொழுது Quelle இன் திவாலானது பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு கூட்டாட்சி அரசாங்கத்தால் "மீட்கப்பட்ட" மற்ற நிறுவனங்கள் மீதும் இருண்ட நிழலைப் படரவிட்டுள்ளது. இவ்விதத்தில் Die Welt பத்திரிகை Quelle போகும் பாதையில்தான் Karstadt செல்லும் என்று காண்கிறது. "இந்த மாதிரி அடுத்ததாக தோல்வியடையும் பட்டியலில் உள்ளது" என்று அது எழுதியுள்ளது, ஓப்பலின் கார் தொழிற்சாலையின் வருகாலமும் தேர்தலுக்கு பின் குழப்பத்தில்தான் உள்ளது.

Quelle மூடப்படுவதற்கு Verdi யும் ஏற்றுக் கொண்டுவிட்டது. தொழிற்சங்கத்தின் பிரதிநிதி John Rösch நிறுவனக்குழுவில் இருந்தாலும் அவர் தொலைக்காட்சியில் "இது ஊழியர்களுக்குக் கடினமான நேரமும், அப்பிராந்தியத்திற்கு ஒரு தாக்குதலுமாகும். அது ஏற்கனவே உயர்ந்த வேலையின்மையை எதிர்கொண்டுள்ளது" என்றார். அரசியல்வாதிகள் Quelle வை காப்பாற்ற அவர் அழைப்புவிடுக்காதது மட்டுமல்லாது தொழிலாளர்களுக்கான பயிற்சி, வேலைகள் நடவடிக்கை ஆகியவற்றையும் நிராகரித்துள்ளார்.

நிறுவன தொழிலாளர் குழு தலைவர் Ernst Sindel, Quell திவாலை "மாபெரும் பேரழிவு" என்று விவரித்தார். ஆனால் அவரும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்த நேரடிப் பொறுப்பைக் கொண்டவர்கள். வேலைகளைக் காப்பாற்ற அவர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுக்க பிடிவாதத்துடன் மறுத்துவிட்டனர். மாறாக பல ஆண்டுகள் "மறு சீரமைப்புத் திட்டங்கள்" என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் ஆதரவு கொடுத்து தொழிலாளர் வேலை இழப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை எஞ்சியுள்ள வேலைகளை பாதுகாக்கும் என்று உறுதியளித்தனர். அவர்கள் இப்பொழுது பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொள்ளுகின்றனர்.

Quelle சர்வதேச நிதிய முதலீட்டாளர்களுக்கு நிர்வாகி விற்க முயன்றபோது அவர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் வாங்கும் திறனுடையவர்களில் இகழ்வான "வெட்டுக்கிளிகளான"--Cerberus, Sun Capitl, தனியார் பங்கு நிறுவனம் TPG போன்றவைதான் இருந்தன. தொழிற்சங்கமும் பணிக்குழு நிறுவன தொழிலாளர் குழுவும் இடைவிடாமல் புதிய விட்டுக்கொடுப்புகளை ஒழுங்கமைத்தன.

ஜூன் மாதம் திவாலில் இருந்து அவர்கள் கிட்டத்தட்ட 4,000 பணிநீக்கங்களுக்கு உடன்பட்டனர். ஆகஸ்ட்டில் 3,100 பேர் அகற்றப்பட்டனர். கடந்த வெள்ளியன்று மற்றும் ஒரு 800 பேர் வெளியே அனுப்பப்பட்டனர். இவர்கள் ஒரு "மாற்று நிறுவனத்திற்கு", நிறுவன தொழிலாளர் குழு மற்றும் Verdi தொழிற்சங்க ஆதரவுடன் அனுப்பப்பட்டனர். இதையொட்டி Quelle திவால்தன்மை அதன் நிதிய அடிப்படையையும் இழக்கிறது. இப்பொழுதுள்ள மிகுந்த ஆபத்து "மாற்று நிறுவனத்திற்கு நம்பிக்கையுடன் சென்ற தொழிலாளர்கள் அங்கிருந்து நீககப்படுவர் என்பதுதான்" என்று Rösch கூறியுள்ளார்.