World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Oppose the closure of Abbeydale Grange!

Defend public education for all!

பிரிட்டன்: ஏபிடேல் கிரேஞ்ச் மூடப்படுவதை எதிர்க்கவும்!

அனைவருக்கும் பொதுக் கல்வி என்பதைக் காக்கவும்!

By Tania Kent and Colleen Smith
24 November 2009

Use this version to print | Send feedback

நவம்பர் 21, சனியன்று, இங்கிலாந்தில் தெற்கு யோர்க்ஷயரில் உள்ள ஷெபீல்டின் ஏபிடேல் கிரேஞ்ச் பள்ளியை சேர்ந்த கிட்டத்தட்ட 150 பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதன் திட்டமிடப்பட்டுள்ள மூடுதலை எதிர்த்து அணிவகுத்தனர்.

Protesters march in Sheffield against closure of Abbeydale Grange School
ஏபிடேல் கிரேஞ்ச் பள்ளி மூடலை எதிர்த்து எதிர்ப்பாளர்கள் ஷெபீல்டில் எதிர்ப்பு அணிவகுப்பு

இந்த அணிவகுப்பிற்கு FLAGS பெற்றோர்கள்-ஆசிரியர்கள் அமைப்பு (Forging Links with Abbeydale Grange, ஏபிடேல் கிரஞ்ச் உடன் பிணைப்பு ஏற்படுத்தும் அமைப்பு), அழைப்பு விடுத்திருந்தது. பல பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசினர்; அதில் 2010 பொதுத் தேர்தலில் ஷெபீல்ட் மத்திய தொகுதியின் தொழிற் கட்சி, பசுமைக் கட்சிகளின் வருங்கால வேட்பாளர்களும் இருந்தனர்; பள்ளியில் எட்டாம் ஆண்டில் சிறப்புத் தேவைகள் நாடும் குழந்தையின் தாயார் பாலா ஹன்டர்; இடைக்காலத் தலைமை ஆசிரியர் டேவிட் ஸ்மித், பள்ளி ஆளுனர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜோன் கொல்ட்ரன் ஆகியோரும் பேசினர்.

ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான கொலீன் ஸ்மித் எதிர்ப்பு அணியில் பேசினார்; பள்ளியின் சமூகத் தொடர்பு மேலாளரும் மூத்த ஆசிரியருமான Ibrar Hussain ம் பேசினார். (இத்துடன் உள்ள வீடியோ காட்சியைப் பார்க்கவும்)

டிசம்பர் 9ம் தேதி தாராண்மை ஜனநாயகவாதிகளின் (Liberal Democrat) கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஷெபீல்ட் நகரவை, மூடுதல் பற்றி இறுதி முடிவு எடுக்கும்; இது மூன்று மாத "ஆலோசனை வழிவகைக்கு" பின் வருவதாகும். இந்த ஆலோசனை ஒரு போலியானது ஆகும், கல்வி முறையைத் தனியார் மயமாக்குதல், செலவினங்களை குறைத்தல் என்ற செயற்பட்டியலை தொடர்வதற்கு முன் ஜனநாயக முடிவு என்ற போலித்தோற்றத்தை கொடுக்கும் வடிவமைப்பு கொண்டது ஆகும்.

பள்ளியைத் திட்டமிட்டு மூடுவதானது மாணவர்கள், குடும்பங்கள், ஆசிரியர்கள் என்று பள்ளியிலும் மக்களின் பரந்த பிரிவுகளிலும் எதிர்ப்பைக் கொண்டிருப்பது, உள்ளூர் அளவில் கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் ஜனநாயகவாதிகளுடைய ஆதரவுடன் தொழிற் கட்சியால் தேசிய அளவில் திணிக்கப்படும் சமூகக் கொள்கைகளுக்கு சுயாதீன அரசியல் எதிர்ப்பைத் திரட்டும் தேவையை தோற்றுவித்துள்ளது

ஏபிடேல் போன்ற பள்ளிகளை இலக்கு வைத்துள்ளது கடந்த ஒரு தசாப்தமாக கல்வி முறையில் தொழிற்கட்சி மறுகட்டமைப்பு எனக்கூறும் முறையுடன் முற்றிலும் இயைந்துதான் உள்ளது. மிக வறிய, நலனற்ற அடுக்குகளில் இருந்து மாணவர்களை எடுத்துக் கொள்ளும் பள்ளிகள் கடுமையாகச் சாடப்பட்டு பல ஆய்வு முறைகள் மூலம் அவமானப்படுத்தப்படுவதுடன், லீக் அட்டவணைகள் வெளியீட்டின் மூலம் "தோல்வியுற்ற பள்ளிகள்" என இழிந்த முறையில் காட்டுவதை முடிவாகப் பெறுகின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இப்பள்ளிகளை மூடுதல் அல்லது தனியார் துறையிடம் ஒப்படைத்தல் என்பதைத் தவிர வேறு மாற்றீடுகள் ஏதும் சிந்திக்கப்படவில்லை. இப்பள்ளிகளை எடுத்துக் கொள்ளுபவர்கள் தேர்ந்த அரசாங்க உதவிகளைப் பெறுகின்றனர், ஆனால் அவர்கள் தொழிலாள வர்க்கக் குழந்தைகளுக்கு இரண்டாந்தரக் கல்வியைத்தான் அளிப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஏபிடேல் கிரேஞ் பலதரப்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது; இதில் 100 நாடுகளுக்கு மேற்பட்டவற்றை சேர்ந்த குழந்தைகள் பயில்கின்றனர். சமூகத்தில் நலன்கள் குறைந்த பின்னணியில் விரட்டப்படும் நிலையில் இருந்து பிரிட்டனுக்குத் தப்பி வரும் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளை வரவேற்கிறது என்ற உரிய சிறப்பை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. கணிசமான எண்ணிக்கையில், போர்ப் பகுதியில் இருந்து வருவதால், 11 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில், குழந்தைகள் முறையான பள்ளிப் படிப்பின் அனுபவத்தையே இங்கு பெறுகின்றனர். இது தவிர்க்க முடியாமல் இப்பகுதியில் உள்ள மற்ற பள்ளிகள் எதிர்கொள்ளாத சவால்களை எதிர்நோக்கிக் கொண்டுவருகிறது.

Protesters demonstrate outside Sheffield Town Hall
ஷெபீல்ட் நகரவைக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

பிரிட்டனின் அகதிகள்குழு (The Refugee Council of Britain) பள்ளியுடன் இணைந்து செயல்புரிந்து மூடலுக்கு எதிராக ஏபிடேலை ஆதரித்து ஒரு மனுவையும் கொடுத்துள்ளது. "எங்கள் ஆய்வு குறைந்த ஆங்கில அறிவித் திறமைகளுடன் வரும் புது மாணவர்களைச் சேர்ப்பதில் தயக்கம் காட்டலாம்; ஏனெனில் பொதுச் சாதனைகள் மற்றும் மதிப்பீடுகளில் இதன் தாக்கம் இருக்கும் என்ற கவலை உள்ளது. எங்கள் அனுபவம் ஏபிடேல் கிரேஞ்ச் இத்தகைய மாணவர்களை, ஆங்கில அறிவுத் தேவை உடையவர்களை வரவேற்றுள்ளது, பல நேரமும் கல்வி பாதிப்பிற்கு உட்பட்டுள்ள மாணவர்களின் அனுபவமாக உடையது, அவர்கள் பலவற்றைச் சாதிக்க உதவியுள்ளது... மிகவும் சரிந்த நிலையிலுள்ள குழந்தைகளுக்கு தேர்ந்த ஆதரவைக் கொடுப்பதில் பள்ளி ஊக்கம் காட்டி வருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளியின் சிறந்த பணி நகரவைக்கோ அரசாங்கத்திற்கோ எந்த ஆர்வத்தையும் கொடுக்கவில்லை. ஜூன் 2008ல் தொழிற்கட்சி அரசாங்கம் துவங்கிய தேசிய சவாலின் ஒரு பகுதியாக பல இலக்குகள் கொள்ளப்பட்டன; அதில் ஒன்றுதான் ஏபிடேல் பள்ளி மூடப்படுதல் ஆகும். அத்திட்டத்தின்படி 30 சதவிகித மாணவர்கள் GCSE தரத்தில் A-C ஐந்துக்கும் குறைவாகப் பெற்றிருக்கும் 638 பள்ளிகள் மூடுதலுக்கு இலக்காயின.

இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள ஷெபீல்டின் பத்து பள்ளிகளில் ஏபிடேல் கிரேஞ்சும் ஒன்றாகும். General Certificate of Secondary Education--GCSE--இடைநிலைக் கல்விப் பொது சான்றிதழ் முடிவுகள் 2011க்குள் மாற்ற வேண்டும் அல்லது மூடுதலை அல்லது தனியார்மயத்திற்கு மாற்றப்படுவதை எதிர்நோக்க வேண்டும் என்று அவற்றிற்கு அரசாங்கம் கூறிவிட்டது. ஏபிடேலின் 2009 GSCE முடிவுகள் ஷெபீல்ட் பள்ளிகளிலேயே ஏழாம் உயர்ந்த முன்னேற்ற முடிவுகள் ஆகும். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்; ஆனால் அது முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கல்வித்துறையில் தனியார்துறையின் பங்கை உயர்த்தும் இரகசிய முயற்சியை Natioanl Challenge கொண்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் "குறைந்த செயற்பாடு புரியும்" பள்ளிகளில் விரைவாகக் குறுக்கிட்டு மூடுவதற்கு போதுமானவற்றைச் செய்வதில்லை என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால் பிரச்சினையில் முக்கிய ஆதாரம் ஏபிடேல் போன்ற பள்ளிகளில் நிதியங்கள் மிக மிகக் குறைவு ஆகும். வறிய பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் இழப்பில் செல்வப்பகுதிக்கு பணிபுரியும் பள்ளிகள் கல்வி வெற்றியைக் காட்டுகின்றன. நிதி கொடுக்கும் சூத்திரங்கள் செல்வப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு ஆதரவைக் கொடுக்கின்றன.

கல்விச் சாதனையில் சமூகச் சமத்துவமின்மை என்பது ஒரு முக்கிய நிர்ணயிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதை உறுதி செய்யும் பல ஆய்வுகள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுகின்றன. ஷெபீல்டில் மிக உயர்ந்த வறுமைத்தரத்தை ஏபிடேல் கிரேஞ்ச் கொண்டுள்ளது. அதன் மாணவர்களில் 40 சதவிகிதத்தினர் பள்ளி உணவிற்கு கட்டணம் கொடுக்க இயலாதவர்கள். வசதி படைத்த இடங்களில் உள்ள பள்ளிகளுடன் ஏபிடேல் போன்ற பள்ளிகளை ஒப்பிடுவது, சமூக நலக்குறைவின் பாதிப்பு கல்வித் தேர்ச்சியில் எப்படி இருக்கும் என ஆராயாமல் நடத்துவது, தோல்விக்கு கட்டியம் கூறி தானே அதைச் செயல்படுத்துவதற்கு ஒப்பாகும்.

பள்ளியை மூடி மாணவர்களை ஷெபீல்டில் மற்ற பள்ளிகளுக்கு அனுப்பிவைப்பதின்மூலம் சாதனைத் தரங்கள் உயரும் என்று நகரவை கூறுகிறது. இது எப்படி அடையப்பட முடியும் என்பதை அவர்கள் சரியாக விளக்கவில்லை. ஷெபீல்டின் தென்மேற்கில் உள்ள பள்ளிகள் ஏற்கனவே அதிக மாணவர்களைக் கொண்டுள்ளது; வகுப்புக்களில் மாணவர் எண்ணிக்கை 30க்கும் மேல் உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக இப்பள்ளியில் கட்டமைக்கப்பட்டுள்ள அனுபவம் இழக்கப்படும், மாணவர்களும் ஆசிரியர்களும் பல பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விடுவர்.

ஏபிடேலை ஒரு கல்விக்கழகப் பள்ளியாக மாற்றுவதும் ஒரு மாற்றீடு அல்ல. ஏற்கனவே 200 கல்விக்கழகப் பள்ளிகள் தொழிற் கட்சி அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளன; அடுத்த ஆண்டு முடிவிற்குள் அத்தகைய பள்ளிகள் இன்னும் 200 வரவுள்ளன. இக்கொள்கையின் பேரழிவுகர விளைவை ஒட்டி சமீபத்தில் அரசாங்கம் இத்தகைய கல்விக்கூடங்களின் மிகப் பெரிய நிதி கொடுக்கும் அமைப்பான United Learning Trust (ULT) ஐ இனி பள்ளிகளை எடுத்துக் கொள்ளுவதை நிறுத்துமாறு கட்டாயத்திற்கு உட்படுத்தியது.

ULT என்பது ஒரு ஆங்கேலிக்கன் அறக்கட்டளை ஆகும்; இதற்குத் தலைவர் முன்னாள் கன்சர்வேடிவ் கல்வி மந்திரி ஏஞ்சலா ரம்போல்ட் ஆவார்; இதன் குழுவில் முன்னாள் கான்டர்பரி ஆர்ச்பிஷப் காரே பிரபுவும் உள்ளார். தற்பொழுது ULT 17 பள்ளிகளை நடத்துகிறது. தொழிற்கட்சியின் குழந்தைகள், பள்ளிகள், குடும்பங்கள் துறையின் மந்திரி எட் பால்ஸ் இவை தம் கல்வித்தரங்களை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்த நேர்ந்தது.

200 கல்விக்கூடங்களில் நான்கு சிறப்பு விதிகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் ULT யின் கல்விக்கூடங்களில் 7 வெறுமனே "திருப்திகரமானவை" என்றும் 2 ஐ "போதுமான தரம் அல்ல" என்றும் கண்டறிந்துள்ளனர்.

பள்ளிகள் மந்திரியான Vernon Croaker கையெழுத்திட்டுள்ள கடிதம் புதிய திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டதற்கு ஷேபீல்டில் உள்ள தோல்வியுற்ற இரு கல்விக்கூடங்கள்தான் என மேற்கோள் காட்டுகிறது. ஆயினும்கூட ULT உடைய "தைரியமான" முடிவான "இலவசப் பள்ளி உணவு, பிற தேவைகள் அதிக சதவிகிதம்" இருக்கும் பள்ளிகளை எடுத்துக் கொள்ளுவதற்கு பாராட்டு கூறியுள்ளார். ஏபிடேல் அல்லது பொதுத்துறையில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு அத்தகைய ஊக்கச் சொற்கள் ஏதும் கூறப்படவில்லை. இவர்கள் ஒவ்வொரு நாளும் அத்தகைய பணியைத்தான் செய்துவருகின்றனர். வறிய பள்ளிகளை தர்மத்திற்கும், தனியார் துறைக்கும் தள்ளும் விதத்தில் அரசாங்கம் கல்விக்கூடங்களை நிறுவியுள்ளது--இவை சமூகத்திலேயே குறைந்த நலன்களையும், அதிக இழப்புக்களையும் கொண்டவை.

எல்லா கல்விக்கூடங்களும் கணிசமான அரசாங்க நிதிகளைப் பெறுகின்றன. இரு மற்ற ஷெபீல்ட் கல்விக்கூடங்கள், ஷெபீல்ட் பார்க் மற்றும் அதன் துணைப் பள்ளி ஷெபீல்ட் ஸ்பிரிங்ஸ் இரண்டும் அவற்றிற்கு இடையே 50 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றன. இவை இப்பொழுது சிறப்பு முறைகளில் உள்ளன. அரசாங்கப் பள்ளியாக இருந்தபோது Waltheof என்று அறியப்பட்டிருந்த ஷெபீல்ட் பார்க், ஒரு தனியார் கல்விக்கூடமாக மாற்றப்படுமுன் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. தனியார் கல்விக்கூடங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிணைத் தொகைகள் வங்கிப் பிணை எடுப்புகளின் சிறிய அளவில் உள்ளன. சமூகத்தின் வறிய அடுக்குகளில் இருந்து செல்வம் கொழிக்கும் அடுக்குகளுக்கு அரசாங்கம் செல்வத்தை மாற்றுவதின் ஒரு பகுதியாகும் இது.

இந்தப் பின்னணியில் நிர்வாகக்குழுவினர், சில பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆதரவுடன் ஏபிடேல் பள்ளியை ஒரு கூட்டுறவு அறக்கட்டளையாக மாற்றவேண்டும் என்று கூறியுள்ள திட்டம், மூடலை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்ற முயற்சியானாலும்கூட, எதிர்க்கப்பட வேண்டும். கூட்டுறவு அமைப்பு, அரசாங்கத்தின் அழைப்பான நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஒரு 200 கல்விக்கூடங்களை கட்டமைக்கும் இலக்கை அடைய முன்வருமாறு விடுத்த அழைப்பிற்கு கொடுத்துள்ள விடையிறுப்பு ஆகும்; அவை பல பள்ளிகளை வலைப்பின்னலாக எடுத்துக் கொண்டு நிறுவும் நோக்கம் கொண்டதாகக் கூறியுள்ளன.

கூட்டுறவு அமைப்பு ஒரு கல்வி நிறுவனம் அல்ல; ஆனால் ஒரு சில்லறை விற்பனைப் பிரிவு ஆகும்; பள்ளிகளை நடத்துவதில் அதற்கு அனுபவம் ஏதும் கிடையாது. அரசியல் அளவில் இது தொழிற் கட்சியுடன் இணைந்துள்ளது; அக்கட்சிதான் கல்வி, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது இத்தாக்குதலையே நடத்துகிறது. அறக்கட்டளை தோற்றுவிப்பது அரசு கல்வித்துறையில் பெரும் தனியார் துறை மேலோங்குவதற்குத்தான் வழிவகுக்கும்.

ஆசிரியர்கள், பெற்றோர்றகள் மற்றும் ஏபிடேலின் மாணவர்கள் தங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை பரந்த முறையில் விரிவாக்குவதற்காக இதே போன்ற தாக்குதலை எதிர்கொண்டுள்ள மற்ற பள்ளிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை நாட வேண்டும். பள்ளியின் மூடல் அல்லது தனியார்மயமாக்கப்படுவதை கொள்கைரீதியாக எதிர்க்க தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட வேண்டும்.

தொழிற்கட்சி அரசாங்கத்தின் சமூகத்தைப் பிரிக்கும் கொள்கைகள், ஒரு பள்ளியை மற்றொன்றிற்கு எதிராக மோதவிடல், தொழிலாளருக்கு எதிராக தொழிலாளரைத் தூண்டுதல் என்று உள்ளன. தோல்வியுற்ற பள்ளிகள் என வருவதற்குக் காரணம் அவற்றிற்கு இழப்புக்களும் சமூகச் சமத்துவமின்மையும் அதிகம். பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கை மகத்தான முறையில் கல்வித்துறைக்கு நிதியை உட்செலுத்துவது ஆகும். கூடுதலான கல்வி நிதி ஒதுக்கப்படுதல் என்பதுடன், ஏராளமான சமூக முன்னேற்றக் கொள்கைகள் சமூக சமத்துவமின்மையை அகற்றும் விதத்தில் எடுக்கப்பட வேண்டும். இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய சுயாதீன கட்சியை கட்டியமைப்பதற்கான அரசியல் தாக்குதலின் ஒரு பகுதியாகத்தான் கருக்கொள்ளப்பட முடியும்.