World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Interior Ministry plans to expand the powers of the secret police

ஜேர்மனியின் உள்துறை அமைச்சரகம் இரகசியப் போலீஸின் அதிகாரங்களை விரிவாக்கத் திட்டமிடுகிறது

By Justus Leicht
30 September 2009

Use this version to print | Send feedback

தற்பொழுது Wolfgang Schäuble இன் தலைமையில் இருக்கும் உள்துறை அமைச்சரகம், ஜேர்மனிய அரசாங்கம் தன் குடிமக்களையே வேவு பார்க்கும் அதிகாரத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு இரகசியப் பிரிவுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு போலீசுக்கும் இரகசியப் பிரிவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பெரிதும் அகற்றப்பட்டுவிடும்.

சமீபத்தில் Süddeutsche Zeitung செப்டம்பர் 22 தேதியிட்ட, "கூட்டணிக்கு தயாரிப்புக்கள்" என்ற ஆறுபக்க கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்று இருப்பது பற்றிய தகவலை வெளியிட்டது. இது அரசாங்கத்தின் Schäuble இன் கீழ் உள்ள பொதுப் பாதுகாப்புத் துறையின் தலைவரால் இசைவு கொடுக்கப்பட்டது. உள்துறை மந்திரி ஏற்கனவே முன்பு தனித்தனியே இயங்கி வந்த போலீஸ், உள்நாட்டு இரகசியப்பணிப் பிரிவுகளை பொதுப் பாதுகாப்புத் துறை என்று இணைத்து விட்டார்.

Schäuble இன் உதவி செயலாளரும், இரகசியப் பணிப்பிரிவின் முன்னாள் தலைவருமான August Hanning, Süddeutsche Zeitung இல் வெளியிட்டுள்ள ஆவணம் "ஒரு துறை உட்குறிப்பு என்றும் இன்னும் பல அதில் செய்யப்பட வேண்டும்" என்றும் அறிவித்தார். இதன் பொருள் இரு நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டன, மற்றவை இன்னமும் சுமத்தப்படவில்லை என்பதாகும்.

Süddeutsche Zeitung அல்லது தானும் ஆவணத்தின் பிரதியை கொண்டிருப்பதாகக் கூறும் Spiegel Online இதுவரை அதை வெளியிடவில்லை. ஆயினும்கூட இரகசியப் பிரிவிற்கு முன்பு போலீசார் கொண்டிருந்த அதிகாரங்கள் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு--என்ன வேறுபாடு என்றால், இரகசியப்பிரிவினால் வேவு பார்க்கப்பட்ட மக்கள் அரசாங்க ஒற்றுக்கு எதிராக சட்டப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது ஒருபுறம் இருக்க, தங்கள்மீது இருந்த கண்காணிப்பை அறியவே முடியாது.

வருங்காலத்தில் இரகசியப் பிரிவு ஆன்லைன் தகவல்களைத் தேட அனுமதிக்கப்படும்: இதுவரை BKA எனப்படும் கூட்டாட்சி குற்றவிசாரணை அமைப்பு ஒன்றுதான் அதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் ஆறுமாத கால தகவல்கள் வரை தேடவும் அனுமதி உண்டு--யார் எவரை அழைத்தார்கள், அழைப்பு நீடித்த நேரம், மொபைல் தொலைபேசியாக இருந்தால் எங்கிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது போன்றவை. இணையதளப் பணி அளிப்பவர்களும் வைத்திருக்கும் தகவல்களும் இரகசியப் பிரிவிற்கு வழங்கப்படும். மின்னஞ்சல்களை பொறுத்தவரையில் அனுப்பப்பட்ட நேரம், அனுப்பியவர், பெற்றவர் தகவல்களும் பெறப்படும். ஒரு நபரின் வலைத்தள ஆய்வு நடவடிக்கைகள், இறக்கம் செய்பவை பற்றியும் இரகசியப் பணி அறியமுடியும்.

செய்தியாளர்கள், வக்கீல்கள் ஆகியோரைக் கண்காணிக்கும் உரிமையும் இந்த அதிகாரங்களில் அடங்கும். போலீஸ் மற்றும் அரசாங்க வக்கீல்களுக்கு சேகரிக்கப்பட்ட தகவல்களை அணுகும் உரிமையைக் கொடுத்த சட்டம் இப்பொழுது தலைமை நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. மேலும் வருங்காலத்தில் இரகசியப் பிரிவு காமிராக்கள் மற்றும் ஒலி பெருக்கிகளையும் பயன்படுத்தி தனியார் வசிக்கும் இடங்களைக் கண்காணிக்க முடியும்

இதுவரை மிகத் தீவிர குற்றங்கள் தொடர்பில் மட்டும் அனுமதிக்கப்பட்ட, நீதிமன்றத்தின் இசைவிற்கு உட்பட்ட "மரபியல் கைரேகைப் பதிவு" என அழைக்கப்படுவது--இப்பொழுது சந்தேகப்பட்டவர்களை அடையாளம் காணும் போலீஸ் அதிகாரத்தில் வாடிக்கையான செயலாகிவிடும். தூண்டி விடுபவர்கள் பயன்படுத்தப்படல், மற்றும் தகவல் கொடுப்பவர்களின் உதவி அதிகமாக பயன்படுத்தப்படும்; தாங்கள் ஊடுருவும் குழுக்கள் செய்யும் குற்றங்களைப் போன்ற "மாதிரிகளையே" அவர்களும் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்விதத்தில் குற்றங்கள் தொடர்வது என்பது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தின் பணிக்காக செய்யப்படும்போது மன்னிக்கப்பட்டுவிடும்.

உள்துறை அமைச்சரகத்தின் "பட்டியலில்" இயற்றப்பட்டு இருக்கும் கோரிக்கைகள் கட்டாயம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டவற்றுடன் தொடர்புபடுத்திக் காணப்பட வேண்டும். 2007ல் இருந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு தகவல் தொகுப்பில் 38 விசாரணைப் பிரிவுகள் தொகுத்த தனிநபர்கள் பற்றிய தகவல் சான்றுகள் உள்ளன. இவ்வாண்டுத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாத எதிர்ப்பு தகவல் தளத்தை விரிவாக்க பல்வேறு அதிகாரங்களாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தகவல் ஒப்புமைகளை, தானே அனுமதிக்கப்படும் விதத்தில் முயற்சிகள் மேற்கோள்ளப்பட்டன.

1994ம் ஆண்டு BND எனப்பட்ட கூட்டாட்சி உளவுத்துறைப்பிரிவு, வெளி இரகசியப் பிரிவிற்கு சர்வதேச தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் அனுமதி வழங்கப்பட்டது; போதை கடத்தல் போன்ற சாதாரண குற்ற நடவடிக்கைகளை பொறுத்தவரையிலும்கூட அதற்கு அனுமதிக்கப்பட்டது. 1998ல் இருந்து "GroBer Lauschangriff" (பெரிய ஒற்றுப் பதிவு செய்யும் நடவடிக்கை) நடைமுறையில் உள்ளது. 2004ல் தலைமை நீதிமன்றம் குறைகூறியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை சற்று மாறுபட்ட முறையில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தால் அப்பொழுது அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடார் தலைமையில் தொடரப்பட்டது

பசுமை வாதிகள் ஆதரவுடன், அப்பொழுது உள்துறை மந்திரியாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) ஓட்டோ ஷிலி, BKA விற்கும், உள்நாட்டு வெளிநாட்டு இரகசியப் பிரிவுகளுக்கும் புதிய அதிகாரங்களை பெறும் ஒரு சட்டத்தை கொண்டுவந்தார். அப்பொழுது முதல் உள்நாட்டு இரகசியப் பிரிவு--BND மற்றும் இராணுவ உளவுத்துறைப் பிரிவு MAD-- இரண்டும் விமானப்பணி நிறுவனங்கள், வங்கிகள், அஞ்சல் துறை, தொலைத் தொடர்பு, தொலைப்பணிகள் ஆகியவற்றிடம் இருந்து தகவல்களைப் பெற முடிந்தது. இந்த அதிகாரம் பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்களிடம் என்று மட்டும் இல்லாமல், ஜேர்மனிக்குள்ளே "அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகள்" பற்றிய விசாரணையிலும் நாடப்படலாம். மொபைல் தொலைபேசி இருக்கும் இடம் பற்றிய தகவல் அறியும் அதிகாரமும் விரிவாக்கப்பட்டது.

இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட BKA சட்டம், வெளியேறிய SPD, CDU பெரும் கூட்டணி அரசாங்கத்தால் இயற்றப்பட்டது; இதன் பொருள் அதிகாரிகள் முதல் தடைவையாக தவிர்க்க இயலாத விசாரணைகளைத் தொடக்க முடியும்--அதாவது ஒரு குற்றம் நடந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லாத வழக்குகளிலும் விசாரணை நடத்தலாம். தனியார் கட்டிடங்களில் உள்ள இரகசிய வீடியோ கண்காணிப்பைப்பயன்படுத்தும் அதிகாரமும் BKA விற்கு வழங்கப்பட்டது; தவிர "தொடர்புடையவர்கள்மீது" உளவு பார்க்கவும் --அதாவது சந்தேகத்திற்கு உரியவர்களுடன் தொடர்பு கொண்ட மூன்றாம் நபர்களைப் பற்றியும் விசாரிக்க அனுமதி உண்டு.

இப்பொழுது திட்டமிட்டுள்ள சட்டமியற்றுதல் பற்றிய விரிவாக்கங்கள் மீண்டும் ஜேர்மனிய போலீஸ் அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பெருக்கும். இரகசிய போலீஸ் அனுமதிக்கப்படாத ஒரே செயல் குடிமக்களை விசாரணை செய்தல், கைது செய்தல், சிறையில் அடைத்தல் என்பதுதான். இவை போலீசாரால் செய்யப்படும்; அது சந்தேகத்திற்கு உரியவரின் தனி வாழ்வு பற்றி ஒவ்வொரு கூறுபாடு பற்றிய தவகலை இரகசியமாக அறிந்து அதனை அடிப்படையாகக் கொண்டு தன் நடவடிக்கையை எடுக்கும். அத்தகைய ஒற்று வேலைக்கு சட்டபூர்வ சவால்களை கொடுப்பது கிட்டத்தட்ட முடியாதவை ஆகும்.
போலீஸ் மற்றும் இரகசியப்பிரிவு தனித்தனியே செயல்படுவது, BKA பொறுப்புக்களை அரசாங்க போலீஸ் அதிகாரிகள் இணைந்த பொறுப்புக்கு வரையறுத்தல் என்பவை அவற்றின் தொடக்கத்தை ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் கொண்டிருந்தன. ரைஹ் பாதுகாப்பு அலுவலகம், நாஜிக்கால கெஸ்டாபோ (அரசாங்க இரகசியப் போலீஸ்) இவற்றின் அனுபவத்தின் அடிப்படையில் ஒப்புமையில் மிகச் சக்தி வாய்ந்த அதிகாரம் மேற்கு ஜேர்மனியில் அனுமதிக்கக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியில் Stasi (அரசாங்க இரகசியப் போலீஸ்) உறுதியாக நிறுவப்பட்டிருந்தது. இப்பொழுது அதேபோன்ற முறை ஒன்றுபடுத்தப்பட்டுவிட்ட ஜேர்மனிய அரசிலும் தோற்றுவிப்பதற்கான உந்துதல் நடக்கிறது.

வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் ஊக வணிகர்கள் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரின் இழப்பில் செல்வம் கொழிக்க வகைசெய்வதைத் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாத அரசானது, தவிர்க்க முடியாமல் பொதுமக்களை விரோதப் போக்கு, அவநம்பிக்கை ஆகியவற்றுடன்தான் காண்கிறது. இதன் விளைவாக அரசானது தனக்கே மக்கள்மீது கண்காணிக்க, ஒற்றுவேலை பார்க்க வரம்பில்லாத அதிகாரங்களை கொடுத்துக் கொள்ள முற்படுகிறது.