World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Talks with Iran open in Geneva amid threats and provocations

அச்சுறுத்தும், ஆத்திரமூட்டும் நோக்கில் ஜெனீவாவில் ஈரானுடனான பேச்சுக்கள் ஆரம்பமாகின்றன

By Bill Van Auken
1 October 2009

Use this version to print | Send feedback

ஈரானின் அணுசக்தித்திட்டம் பற்றி அச்சுறுத்தல், ஆத்திரமூட்டும் செயல்கள் என்று மேலை அரசாங்கங்களும் செய்தி ஊடகமும் தோற்றுவித்துள்ள சூழல்களுக்கு நடுவே ஈரானுக்கும் P5+1 என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனிக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் இன்று ஜெனிவாவில் தொடங்குகின்றன.

30 ஆண்டுகளில் தெஹ்ரானுடன் முதல் தடவையாக நடத்தும் நேரடிப் பேச்சுக்களில் தான் பங்கு பெறுவது ஒரு பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் உடன்பாட்டிற்கு அல்ல, மாறாக ஈரானில் "ஆட்சி மாற்றத்தை" கொண்டுவரும் நோக்கத்தையுடைய ஒரு புதிய சுற்று தண்டனை தடைகள் மற்றும் எதிர்கால இராணுவ நடவடிக்கைக்கான அரங்கை அமைப்பதற்குத்தான் என்று ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் வலுவாகத் தெரிவிக்கின்றன.

ஜெனீவா பேச்சவார்த்தைகளுக்கு முன்னதாக வாஷிங்டன் வேண்டுமென்றே கடந்த வெள்ளியன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெறித்தனமான சூழலைத் தூண்ட முற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, பிரிட்டனின் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோர் இணைந்து நின்று கோம் நகரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் இரகசியமாக இருப்பதாகக் கூறப்படும் ஈரானிய அணுசக்தி நிலையம் பற்றி அறிவித்தனர்.

இப்பொழுது மேற்கத்தைய சக்திகள் இந்த நிலையத்தை தங்கள் கோரிக்கையான ஈரான் தன்னுடைய அணுத்திட்டம் பற்றி "வெளிப்படையான உண்மையைக்" கூறவேண்டும், அனைத்து யுரேனிய செறிவூட்டல் முயற்சிகளையும் நிறுத்தவேண்டும் என்பதின் மையப் பகுதியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் (IAEA) நான்கு நாட்களுக்கு முன்பு தெஹ்ரான் இந்த நிலையம் பற்றித் தெரிவித்து உடனடியாக IAEA அதன் வாடிக்கையான ஆய்வை மேற்கொள்ள அனுமதிப்பது பற்றிய விவாதத்தையும் தொடங்கியுள்ளது. இத்தகைய ஆய்வுகள் ஏற்கனவே ஈரானின் நாடன்ஸில் உள்ள பெரிய நிலையத்தில் நடந்துவருவது, இந்த ஆலைகளில் ஆயுதத்திட்டம் ஏதும் இல்லை என்பதைத்தான் காட்டியுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டிடம் இருந்தும் இராணுவத் தாக்குதல் என்ற அச்சுறுதல்கள் தொடர்ந்து இருக்கும் நிலையில், தன்னுடைய அணுசக்தித் திட்டத்தை பரவலாக வைத்திருப்பதற்கு ஈரானுக்கு நிறைய காரணங்கள் உண்டு; அதேபோல் அவற்றை நிலத்தடியில் இராணுவத் தளங்களுக்கு அருகே வைத்திருக்கவும் காரணங்கள் உண்டு.

தெஹ்ரானால் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி பரவா உடன்படிக்கை (NPT) என்று சர்வதேச அமைப்பிற்கு புதிய நிலையம் கட்டமைப்பு பற்றி அணு எரிபொருள் அதற்குள் கொண்டுவருவதற்கு 180 நாட்கள் முன்னால் தெரிவித்தால் போதும் என்று கூறுகிறது. இவ்விதிகளின்படி, ஈரானின் அறிவிப்பு தேவைப்படும் கெடுவிற்கு குறைந்தது ஓராண்டிற்கு முன்பே வந்துள்ளது.

ஈரான் ஜெனீவா பேச்சுக்களுக்கு முன்னதாகவே புதிய ஆலை பற்றி விவாதிப்பதாக விருப்பம் இல்லை என்று கூறியுள்ளது. "இந்தப் புதிய ஆலை எங்கள் உரிமைகளின் ஒரு பகுதி, அது பற்றி விவாதிக்கத் தேவையில்லை" என்று ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹி கூறியுள்ளார். "எங்கள் அணுசக்தி உரிமைகள் தொடர்பாக நாங்கள் எதையும் விவாதிக்கப் போவதில்லை."

மாறாக, தெஹ்ரான் ஒரு பரந்த செயற்பட்டியலை முன்வைத்துள்ளது; அதில் அணுவாயுத பரவா திட்டம் மட்டும் இல்லாமல், ஆப்கானிஸ்தான், ஐக்கிய நாடுகள் சீர்திருத்தம் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன.

"அவர்கள் பேசமாட்டார்கள், நாங்கள் பேசுவோம்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபேர்ட் கிப்ஸ் தெஹ்ரானின் அறிக்கையான அது கோம் நிலையம் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்பது குறித்துக் கூறினார். "ஈரானியர்கள்தான் உலகத்திற்கு அவர்கள் திட்டம் ஒரு விசையை சமாதானத்திற்கானது, அணுவாயுத இரகசியத்திற்கு அல்ல என்று காட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

இத்தகைய அறிக்கைகள் புஷ் நிர்வாகம், ஈராக்கியரிடத்தில் இருப்பதாகக் கூறிய பேரழிவு ஆயுதங்கள் என்று ஈராக் போருக்கு முன் கூறிய அலங்காரச் சொற்கள்தான் எதிரொலிக்கின்றன. அப்பொழுது "பொறுப்பு" பாக்தாத்திடம்தான் இல்லாத அத்தகைய ஆயுதங்கள் இல்லையென நிரூபித்தல் வேண்டும் என்று இருந்தது, ஒரு இயலாத செயல்தான் அது.

IAEA தலைவர் மஹ்மத் எல்பரடேய் அதன் புதிய செறிவூட்டல் ஆலை கட்டப்படத் தொடங்கியவுடனேயே தெரிவிக்காததில் ஈரான் "சட்டத்திற்கு எதிர் தவறான திசையில் உள்ளது", (இந்த NPT திருத்தத்தையே தெஹ்ரான் ஒருபொழுதும் ஒப்புக்கொண்டதில்லை) என்று கூறியதை அனைத்து மேலைச் செய்தி ஊடகங்களும் புதனன்று விளக்கமாயத் தெரியும்படி காட்டின. இந்திய தொலைக்காட்சி செய்திப்பிரிவிற்கு (CNN-IBN) கொடுத்த பேட்டியில் எல்பரடேய் கூறினார்: "ஈரானிடம் அணுவாயுத திட்டம் இன்று உள்ளது என்பதற்கு நம்பகமான சான்றுகள் எதையும் நான் காணவில்லை". இரண்டாவது அறிக்கை மேலை செய்தி ஊடகங்கள் அனைத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.

புதனன்று வாஷிங்டன் ஈரானிய அரசாங்கத்திற்கு அதன் இறுதி எச்சரிக்கைகளுக்கு ஆதரவாக கோம் நிலையத்தை பற்றி கூறுவதைத் தொடர்ந்தது. வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது போல், "அமெரிக்க அதிகாரிகள் நிலையம் பற்றிய தகவல் வந்துள்ளது, புனித கோம் நகரத்திற்கு அருகே நிலவறைப் பகுதியில் மறைந்துள்ளது என்பது தங்களுக்கு பேச்சு வார்த்தைகளில் ஒரு வேகம் காட்ட உதவும் என நம்புகின்றனர்."

ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசுகையில் அமெரிக்க செக்ரடரி ஆப் ஸ்டேட், ஹில்லாரி கிளின்டன், ஈரான் "தன்னுடைய சர்வதேசக் கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும்" என்றும் இல்லாவிடின் "இன்னும் தனிமைப்படுத்தப்படுதல், சர்வதேச அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

அது கொண்டிருப்பதாக கூறப்படும் கடைமகளை ஈரான் செய்தல் என்பது "ஆய்வுகளுக்கு உடன்படல் என்பது மட்டும் இல்லாமல், அதனுடைய நடவடிக்கைகள் அது சமாதான நோக்கங்களுக்காகத்தான் நிலையங்களை கொண்டிருக்கின்றன என்பதை கண்காணிப்பு, மேற்பார்வை ஆகியவற்றிற்கு உத்தரவாதம் செய்யும் வகையிலும் இருக்க வேண்டும்." என்றார். வேறுவிதமாகக் கூறினால், வாஷிங்டன் ஈரான் மேலை "மேற்பார்வை" என்று வேறு எந்த நாட்டிலும் கோரப்படாததை ஏற்க வேண்டும் என்று கோருகிறது.

கோம் ஆலையை ரஷ்யா மற்றும் சீனா ஈரானுக்கு எதிராக அதன் அணுத்திட்டத்திற்காக மற்றொரு சுற்று ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கு உட்படும் விதத்தில் வாஷிங்டன் பயன்படுத்துகிறது.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் அமெரிக்கா இன்னும் மற்ற மேலை சக்திகளுடன் G20 பிட்ஸ்பேர்க் உச்சிமாநாட்டில் சேர்ந்து ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் என்று அச்சுறுத்துகையில், கிரெம்ளினின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் மாஸ்கோவின் அணுகுமுறை டெஹ்ரான் IAEA உடன் ஒத்துழைக்கிறதா இல்லையா என்பதை ஒட்டி நிர்ணயிக்கப்படும் என்றார். முன்னதாக ரஷியா வலுவான பொருளாதாரத் தடைகளை எதிர்த்துள்ளது; அமெரிக்கா அதன் பிடியை தன் எல்லைப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளமுடைய நாட்டின் மீது இறுக்குவதில் அதற்கு அதிக ஆர்வம் இல்லை.

சீனாவைப் பொறுத்தவரையில் அது பேச்சுவார்த்தைகளுக்கு தாழ்ந்த மட்ட அதிகாரியைத்தான் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் குறிப்பு புதிய பொருளாதார தடைகளுக்கு தன் எதிர்ப்பை அது மாற்றிக் கொள்ளும் விருப்பம் இல்லை என்பதைக் காட்டுவது ஆகும். தற்போது சீனாவின் எண்ணெய் இறக்குமதிகளில் 15 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது; ஈரானில் சீன முதலீடுகள் $100 பில்லினுக்கு மேலாக உள்ளன; அதே நேரத்தில் பெய்ஜிங் அந்நாட்டில் இருந்து தனக்குத் தேவையான சக்தி வளங்களை நாடியுள்ளது.

பெயரிடப்படாத மேற்கத்தைய அதிகாரிகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை மீண்டும் ரஷ்யா, சீனா ஆகியவை புதிய ஐ.நா. தடைகளை அரசியல் அல்லது பொருளாதார காரணங்களை ஒட்டி தடுத்தால், அவை இல்லாமலேயே தடைகளைச் சுமத்தத்தயாராக உள்ளன என்று கூறியதாக Associated Press தெரிவித்துள்ளது.

வாஷிங்டனின் மற்றொரு ஒருதலைப்பட்ச தடைத் தொகுப்புக்களை எதிர்பார்த்து, கனக்டிக்கட் ஜனநாயகக் கட்சிக்காரரும் அமெரிக்க செனட்டின் வங்கிக் குழுத் தலைவருமான செனட்டர் கிறிஸ்டோபர் டோட், செவ்வாயன்று தான் ஈரானின் பெட்ரோல் எரிவாயு அளிப்புக்களைத் திணற வைக்கக்கூடிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அத்தகைய பொருட்களுக்கு காப்பீடு செய்யும் நிதிய நிறுவனங்கள் இரண்டும் இலக்கு கொள்ளப்படும் என்றார். மகத்தான எண்ணெய் இருப்புக்கள் இருந்தபோதிலும், ஈரானிடம் போதுமான சுத்திகரம் செய்யும் திறன், அதன் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை; எனவே அது தனக்கு தேவையான பெட்ரோல் பொருட்களில் 40 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது.

டிசம்பரை ஒட்டி தடைகள் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது இலக்காகும்; அப்பொழுது வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஈரானுடன் தங்கள் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலைக்கு வந்துவிட்டதாக அறிவித்து தண்டனை நடவடிக்கைகளைத் துவங்கும்.

ஜெனிவா பேச்சு வார்த்தைகளில் வியக்கத்தக்க முறையற்ற தன்மை உள்ளது. ஈரானிடம் அணு குண்டு இல்லை. அது தன் அணுசக்தித் திட்டம் சமாதான நோக்கங்களுக்குத்தான் என்று கூறுகிறது. அமெரிக்காவிற்கு எதிர்ப்புறம் மேசையில் இது தனியாக உள்ளது; அமெரிக்காவிடம் மகத்தான அணுவாயுதக்கிடங்கு உள்ளது; அது ஒன்றுதான் குடிமக்களுக்கு எதிராக அணுவாயுதத்தைப் பயன்படுத்திய நாடு. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா என ஈரான் நான்கு மற்ற அணுவாயுத நாடுகளையும் எதிர்கொள்கிறது. இதைத்தவிர, அதன் தேவைகள் அனைத்தையும் குறுகிய கால முன்னறிவிப்பில் அணுவாயுதங்களைத் தயார் செய்ய அது பெற முடியும் என்பதை ஈரான் நிறுத்த வேண்டும் என்று சொல்லப்படும் வழிவகையை ஏற்கனவே முடித்துவிட்ட ஜேர்மனியும் மேசையின் எதிர்ப்புறத்தில் உள்ளது.

அணுவாயுத பரவாத்திட்டத்தைச் செயல்படுத்தாத வாஷிங்டன் டெஹ்ரானுக்கு, கடந்த வாரம் ஒபாமா கூறியது போல், "எல்லா நாடுகளும் பின்பற்றப்பட வேண்டிய விதிகளை முறிப்பதாக" உபதேசிக்கிறது. இதற்கிடையில் IAEA உறுப்பு நாடுகள் அமெரிக்கா 200 அணுவாயுதங்களைக் கொண்டுள்ளதாக மதிக்கப்படும், அணுவாயுத பரவா உடன்படிக்கையில் கையெழுத்திட மறுக்கும் இஸ்ரேலை ஆய்விற்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கோருவதை கண்டிக்கிறது.

ஜெனிவா மாநாட்டிற்கு முன்னதாக, செய்தி ஊடகங்களில் பெருகிய கோஷ்டிக் கூச்சல் ஒபாமா நிர்வாகம் ஈரானிய அரசாங்கத்துடன் "மனித உரிமைகள்" பிரச்சினைக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வந்துள்ளது; அதாவது, அணுசக்திப் பிரச்சினையைப் பயன்படுத்தி ஈரானின் "பச்சை" வண்ண எதிர்ப்பின் கரங்களை வலுப்படுத்தி ஆட்சி மாற்றம் சாதிக்கப்பட முடியுமா என்ற நம்பிக்கைக்காக.

வாஷிங்டன் போஸ்டில் எழுதும் ரொபேர்ட் காகன், தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலுக்கு ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்பட்டுள்ள "விரிவாக்கத்திற்கு" ஆலோசகர், "விரைவில் முடுக்கிவிடக்கூடிய பொருளாதாரத் தடைகள்" , வெறுமே தூதரக தீர்மானங்கள் என்று இல்லாமல், சுமத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். "சரியான அளவு உள் எதிர்ப்பு மற்றும் வெளி அழுத்தக் கலவை இருந்தால் ஆட்சி விழும் என்பதற்கான கணிப்பு அதுவாக அணுசக்தித்திட்டத்தை கைவிடும் என்பதை விட அதிகமாகத்தான் உள்ளது" என்று அவர் எழுதியுள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை வெளியிட்ட கட்டுரை ஒன்றில், வலதுசாரி போர் வெறியர் மைக்கேல் லிடீன் ஜேனீவா பேச்சுக்களை உதறித்தள்ளிய விதத்தில் எழுதுவதாவது: "ஈரானில் மாற்றம் என்பதற்கு அரசாங்கத்தில் மாற்றம் தேவை. பொது அறிவு மற்றும் அறநெறிப் பார்வை நாம் தைரியமான எதிர்க்கட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது."

பிரிட்டிஷ் Daily Telegraph தன்னுடைய கருத்துக்கள் பகுதியில் எதிர்பாராத "மனித உரிமைகளுக்கு" வாதிடுபவர் கட்டுரையை வெளியிட்டுள்ளது; அவர் எழுதியிருப்பதாவது: "மேற்கு நாடுகள் புதிய பொருளாதாரத் தடைகளை இப்பொழுது சுதந்திரத்திற்கான தேசிய குரல் ஒலித்துக் கொண்டிருப்பதுடன் நயமாகப் பிணைத்துவிட்டார்கள் என்றால், இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் மிகப் பெரிய நட்பினரை சர்வதேச ஒற்றுமை எனும் சக்தி வாய்ந்த ஆயுத்த்தால் ஆயுதபாணியாக்கிவிடுவர். இந்த எழுச்சி மத்திய கிழக்கு முழுவதும் ஸ்திரத்தன்மைக்கான கட்டமைப்பை மாற்றும்."

இதை எழுதியவர் ஷாவின் மகனான பட்டத்து இளவரசர் ரேஜா பஹ்லவி ஆவார்; ஷாவின் ஆட்சி 1979 புரட்சியில் அது அகற்றப்படுமுன், அடக்குமுறை, சித்திரவதை இவற்றுடன் பிணைந்திருந்தது.

மேலே உள்ள அனைத்து கட்டுரைகளும் தெளிவாக்குவது போல் வாஷிங்டனின் நோக்கம் ஈரானைப் பொறுத்த வரையில் அணுவாயுதப் பரவலை நிறுத்துவது அல்ல; ஆனால் ஆட்சி மாற்றம் ஆகும்; அதாவது அமெரிக்க மூலோபாய நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்கும் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருதல் ஆகும். அந்த அமெரிக்க நோக்கங்களுக்காக இப்பொழுது இரு போர்கள் --எண்ணெய் வளம் உடைய பாரசீக வளைகுடா, மற்றும் காஸ்பியன் படுகையில் நடக்கின்றன. அணுசக்திப் பிரச்சினை இந்த இலக்கைத் தொடர ஒரு வழிவகை; மேலைச் சார்பு உடைய எதிர்க் கட்சிக்கு ஆதரவு மற்றொரு வழிவகை.

மூன்றாவது விருப்புரிமை இராணுவ நடவடிக்கைதான். தூதரக நெறியில் நடவடிக்கை என்பது ஜெனிவாவில் நடந்த கொண்டிருக்கும்போதே, இந்த விருப்பமும் கடந்த வாரம் ஒபாமா கூறியதுபோல் (ஜோர்ஜ் டபுள்யூ புஷ் கருத்தை எதிரொலித்து) "மேசையில் இருந்து" அகற்றப்படவில்லை.

புதனன்று பிபிசி கொடுத்த தகவல்: "முன்னேற்றம் இல்லை என்றால், இன்னும் அதிக பொருளாதாரத் தடைகள் பற்றிய பரிசீலனை வேண்டும்; ஆண்டு இறுதிக்குள் முடிவு ஏதும் ஏற்படவில்லை என்றால், பின் ஒரு தூதரின் கருத்துப்படி, 'தூதரக முறை ஏதும் செய்வதற்கில்லை என்று கூறுவது இயலாது, நாம் அப்பொழுது ஆபத்தான இடத்தில் இருப்போம்.' அது சாதாரண மொழியில் அதற்குப் பின் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவெடுக்கும் வாய்ப்பு உண்டு என்ற குறிப்பைத் தரும்."

இதற்கிடையில் இஸ்ரேலிய வலைத் தளம் Debka File பென்டகன் ஒரு "15 டன் மிகப் பெரிய நிலவறையை உடைக்கும் குண்டு" தயாரிக்க உத்தரவு கொடுத்துள்ளது என்று தெரிவிக்கிறது. இதன் பெயர் Massive Ordanance Penetrator (MOP) என்பதாகும். இது 60 மீட்டர் வரை நிலத்தடியில் இருக்கும் இலக்கைத் தாக்கி வெடிக்கும். டிசம்பர் 2009க்குள் அத்தகைய 10 குண்டுகள் வேண்டும் என்று கூறப்படுகிறது. டெப்கா மேலும் கூறுவது: "விமானப்படைப் பிரிவுகளும் கடிகாரத்தை கருத்தில் கொண்டு உழைக்கின்றன; ஒரு B2as Stealth குண்டு எடுத்துச் செல்லும் விமானத்தை, இந்த குண்டை எடுத்து வீசும் திறனுடையதற்கு ஏற்றவிதத்தில் தயாரிக்கிறது."

கடந்த ஆகஸ்ட் மாதம் பென்டகன் $68 மில்லியனை ஜூலை 2010 காலகெடுவை ஒட்டிய ஒரு MOP க்காக கேட்டு தந்தது; அது ஈரானுடன் "தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய குண்டு" என்று விளக்கியது.