World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Western media steps up pressure on China over Iran

மேலைச் செய்தி ஊடகம் ஈரான் பற்றி சீனா மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது

By John Chan
8 October 2009

Back to screen version

ஈரான் மீது அதன் அணுசக்தி திட்டங்களுக்கு எதிரான அமெரிக்க அழுத்தம் பெருகுகையில், அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களில் பேச்சுவார்த்தைகள் முறிந்தால் தெஹ்ரானுக்கு எதிரான புதிய தண்டனைமுறை பொருளாதாரத்தடைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கு சீனா எதிர்த்து வருவது பற்றி ஒரு தெளிவான சீன எதிர்ப்பு உணர்வு தோன்றியுள்ளது.

ஈரானுடனான சீனாவின் கணிசமான முதலீடுகள், வணிகம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல கட்டுரைகள் வந்துள்ளன. செப்டம்பர் 23ம் தேதி பிரிட்டனை தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ் சீன நிறுவனங்கள் BP நிறுவனம், இந்தியாவின் Reliance உட்பட பல ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விற்பனையை குறைத்து வருகையில் ஈரானுக்கு பெட்ரோல் விற்பனையை தொடக்கி இருப்பதாக கூறியுள்ளது. கட்டுரையில் இதற்கு சான்று ஏதும் கொடுக்கப்படவில்லை; ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான சீன நிறுவனங்கள் ஈரானுக்கு தேவைப்படும் பெட்ரோல் இறக்குமதிகள் மூன்றில் ஒரு பங்கை இடைத் தரகு அமைப்புக்கள் மூலம் அளித்துவருவதாக கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோர் பெரும் நாடகப்பாங்கில் ஒரு "இரகசிய" யுரேனிய அடர்த்தி ஆலை உள்ளது என்பதை பிட்ஸ்பேர்க் G20 மாநாட்டில் வெளிப்படுத்தி, புதிய பொருளாதாரத் தடைகளின் சுற்று வரும் என்றும் அச்சுறுத்தினர். பல திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்று ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மீது முடக்கும் தன்மையுடைய தடையாகும்; ஈரானில் எண்ணெய் இருப்புக்கள் மிக அதிகமாக இருந்தாலும், அதன் சுத்திகரிப்புத்திறன் குறைவுதான்.

பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ள இதே கருத்தை நியூயோர்க் டைம்ஸ் தன்னுடைய செப்டம்பர் 30 "ஈரானுடனான சீன உறவுகள் தடைகளில் சிரமத்தை கொடுக்காலம்" என்ற தலைப்பில் எடுத்துக் கூறியுள்ளது. சீனா தன்னுடைய எண்ணெய் இறக்குமதியில் 15 சதவிகிதத்திற்கு ஈரானை நம்பியுள்ளது, 120 பில்லியன் டாலர் எரிபொருள் தொடர்பு உடன்பாடுகளையும் முதலீட்டையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொண்டுள்ளது, இதற்கு ஈடாக சீனப் பொருட்கள் மிகப் பெரிய அளவில் ஈரானில் விற்கப்படுகின்றன. "சீன இயந்திரக் கருவிகள், ஆலைக் கருவிகள், இரயில் எஞ்சின்கள், மற்றும் கனரகப் பொருட்கள் என்று ஈரான் பெரிதும் இறக்குமதி செய்து, சீனாவுடன் அதன் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக கட்டமைத்துக் கொண்டுள்ளது" என்று அது அறிவித்துள்ளது.

இக்கட்டுரை ஈரானில் அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் மாறுபட்ட அக்கறைகளை நேரடியாக அடிக்கோடிட்டுள்ளது. "அமெரிக்கா கிட்டத்தட்ட ஈரானுடன் எந்த நிதிய உறவுகளையும் கொள்ளவில்லை, அதன் அரசாங்கத்தை உலக உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தல் என்று கருதுகிறது, ஒரு எழுச்சி பெறும் ஈரான் வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்கக் கூட்டுக்களையும் எரிபொருள் உடன்பாடுகளையும் அச்சுறுத்தக்கூடும் என்று கவலைப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக தெஹ்ரானுடனான சீனாவின் பொருளாதாரப் பிணைப்புக்கள் விரைவில் வளர்கின்றன. அது ஈரானை ஒரு அச்சுறுத்தல் என்று காணமால் நட்புத் திறனைக் கொண்டுள்ளதாக நினைக்கிறது. அதே போர் அணுவாயுதம் ஏந்திய ஈரான் அப்பகுதியில் அமெரிக்கச் செல்வாக்கை குறைத்து மத்திய கிழக்கில் பென்டகனின் அமெரிக்க தந்திரோபாய வளங்களை வற்றச்செய்துவிட்டாலும் சீனாவிற்கு எந்த கவலையும் இராது" என்று கட்டுரை அறிவிக்கிறது.

தற்போது இத்தகைய கட்டுரைகளின் தன்மை 2002 கடைசியிலும் 2003 ன் தொடக்கத்திலும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி புஷ் நிர்வாகத்தின் ஈராக் படையெடுப்பிற்கு துணை நிற்க மறுத்த நேரத்தில் இருந்ததோடு ஒப்பிடும்போது மிகவும் மிருதுவானதுதான். ஆனால் அமெரிக்க துருப்புக்களுக்கு ஆபத்து விளைவித்து பிராந்திய, உலக உறுதிப்பாட்டை குறைக்கும் திறனுடைய ஒரு போக்கிரி நாட்டிற்கு பெய்ஜிங் உதவுகிறது என்று கூறும் திறனுடைய கண்டனங்கள் நியூயோர்க் டைம்ஸின் வர்ணனையில் இருப்பதை அறிய பெரும் கற்பனை தேவை இல்லை. இந்தக் கட்டத்தில் முக்கிய நோக்கம் சீனா மீது அழுத்தம் கொடுப்பதுதான். அதுதான் முந்தைய குறைந்த வரம்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் அமெரிக்க நடவடிக்கையுடன் இணைந்து நிற்க வேண்டும் என்பதற்காக ஆதரித்திருந்தது.

நன்கு அறியப்பட்டுள்ள ஈரானுடனான சீனப் பொருளாதார அக்கறைகளை செய்தி ஊடகங்கள் வெளிப்படுத்துவது, ஈராக்கில் "பழைய ஐரோப்பா" மற்றும் ரஷ்யாவை அவற்றின் எண்ணெய் நலன்களுக்காக வாஷிங்டன் நடத்தும் அலங்காரச் சொற்களை தாக்குதலைப் போலவே பாசாக்குத்தனமானதுதான். உண்மையில் சீனா என்று இல்லாமல் ஜப்பான்தான் அதிகம் ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்கிறது அல்லது ஐரோப்பிய ஒன்றியம்தான் இன்னமும் ஈரானின் பெரும் வணிகப் பங்காளி என்பவை பற்றி எவரும் எழுதுவதில்லை. அதே போல் அணுசக்தித் திட்டம் உட்பட ஈரானுடன் நெருக்க உறவுகளைக் கொண்ருக்கும் ரஷ்யாவும் விவாதத்தில் இடம் பெறுவதில்லை. அமெரிக்க ஏவுகணை திட்டம் பற்றி ஒபாமா மாற்றி, கிழக்கு ஐரோப்பாவில் தளங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட்டதற்கு ஈடாக ரஷ்யா, ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு தரத் தயார் என்பதை வலுவாக வலியுறுத்தியுள்ளது.

ஈரானுடன் மோதலுக்கு அழுத்தம் கொடுப்பவர்களுடைய பொருளாதார நோக்கங்கள் பற்றி குறிப்பு ஏதும் காட்டப்படுவதில்லை. உயர்கல்வியாளாரான மூனிச் பல்கலைக்கழகத்தின் Micheal Bauer, Deutsche Welle வானொலிக்கு வரலாற்று ரீதியாக ஜேர்மனிய ஈரானின் மிக முக்கியமான வணிகப் பங்காளி நாடாக இருப்பது என்றும் இப்பொழுது ஒரு சங்கடத்தை எதிர்கொள்ளுகிறது என்றும் கூறியுள்ளார். "ஈரானுடன் உறவுகளில் ஒரு திருப்பும் வரும் என்று பேர்லின் நம்புகிறது. ஏனெனில் அதையொட்டி பொருளாதாரத் தடைகள் ஒரு பிரச்சினையாக வராது. ஆனால் தடைகள் எடுக்கப்பட்டுவிட்டால், அவை சீனா, ரஷ்யா இரண்டு நாடுகளில் இருக்கும் ஆரம்ப இடத்திற்கு மிகவும் பின்தங்கித்தான் இருக்கும் என்று ஜேர்மனிய தொழில்துறை அஞ்சுகின்றன" என்று அவர் விளக்கினார்.

ஈரான் மற்றும் கட்டாருடன் OPEC இன் நிலைப்பாட்டில் ரஷ்யா ஒரு இயற்கை எரிவாயு குழுவைத் தோற்றுவிக்கும் திட்டம் பற்றியும் ஐரோப்பிய சக்திகள் கவலை கொண்டுள்ளன. அத்தகைய குழு உலகின் எரிவாயு இருப்புக்களில் 60 சதவிகிதத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். கடந்த அக்டோபரில் அறிக்கப்பட்டபோது, ஐரோப்பிய ஒன்றியம் திட்டத்தை உடனடியாக எதிர்த்தது. தன்னுடைய எரிவாயு இறக்குமதிகளில் பாதிக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவைத்தான் நம்பியுள்ளது; இது சமீப ஆண்டுகளில் மாஸ்கோவால் அளிப்புக்கள் நிறுத்தப்படும் என்று ஐரோப்பாவின் மீது அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

ரஷ்ய எரிபொருள் விநியோகத்தின் மீது நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான ஐரோப்பிய முயற்சிகள் ஐரோப்பாவை அமெரிக்காவுடன் நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளன. இந்தப் பொது நலன்கள்தான் ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு, வாஷிங்டனால் முன்னாள் சோவியத் குடியரசுகளில் பல "வண்ணப் புரட்சிகளுக்கு" ஊக்கம் கொடுக்கப்பட்டது, மற்றும் இப்பொழுது ஈரானில் என்று ஐரோப்பா பங்கு பெறுவதற்கு பின்னணியில் உள்ளது. இதைத்தவிர அதன் சொந்த மிகப் பெரிய இருப்புக்களும் மத்திய ஆசியா, காகசஸ் பகுதியில் எரிபொருள் வளம் கொழிக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் பொருளாதாரத் தடைகள் இல்லாததுதன் ஈரானுடன் மோதவேண்டும் என்ற அதன் உந்துதலுக்கு இடம் கொடுக்கிறது. உண்மையிலேயே ஒரு வினா எழுப்பப்பட வேண்டும்: ஈரானுடன் தொடர்புகள் சீராக்கப்பட்டு, தடைகள் அகற்றப்பட்டுவிட்டால் என்ன நேரிடும்? உடனே அனைத்து பெரும் சக்திகளும் தெஹ்ரானில் பொருளாதார, அரசியல் செல்வாக்கிற்கு பரபரப்புடன் விரைந்து செல்லும். ஈரானுடன் எவ்வித இராஜதந்திர உறவுகளும் மற்ற வணிக மூலதனமும் கொண்டிராத அமெரிக்கா பெரும் நலன்களற்ற நிலையில் தொடங்க வேண்டியிருக்கும். ஆனால் மோதலும் தடைகளும் அமெரிக்க போட்டியாளர்களின் நிலைமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த உதவும்.

ஒபாமாவிற்கு அவருடைய தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ஆலோசகராக இருந்த முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski 1996ல் எழுதிய தன்னுடை புத்தகமான The Grand Chessboard என்பதில் பரந்த மூலோபாயப் பிரச்சினைகள் அமெரிக்காவை எப்படி எதிர்கொள்ளுகின்றன என்று உயர்த்திக் காட்டியுள்ளார். "மிக ஆபத்து தன்மைத் திறன் (அமெரிக்காவிற்கு எதிராக) என்பது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவற்றின் கூட்டணிதான்; இந்த "ஒருமுனைப்படுத்தாத-எதிர்" கூட்டணியின் ஒற்றுமையானது சிந்தனைரீதியான உடன்பாடு என்று இல்லாமல் அவை கொண்டுள்ள பிரச்சனைகளை ஒட்டியதானதாக இருக்கும். சீன-சோவியத் முகாமில் முன்வைக்கப்படும் போட்டியின் அளவையும் பரப்பையும் இது நினைவுறுத்தும்; ஆனால் இப்பொழுது சீனா தலைவராகவும் ரஷ்யா அதைப் பின்பற்றும் நாடாகவும் இருக்கும். இந்த நிலையை தவிர்ப்பதற்கு, ஒரு தொலைதூர நிலை அது என்றாலும், அமெரிக்க மூலோபாயத் திறமை யூரேசியாவின் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்குள் ஒரே நேரத்தில் தேவைப்படும்."

இந்தப் பரந்த கருத்துக்கள்தான் 1999ல் சேர்பியாவிற்கு எதிரான நேட்டோ போர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் மீது அமெரிக்கப் படையெடுப்புக்கள் மற்றும் இப்பொழுது ஈரானுக்கு எதிரான அச்சறுத்தல்கள் ஆகியவற்றில் இருக்கின்றன. அதன் பொருளாதார சக்தி குறைந்து வருகையில் வாஷிங்டன் பெருகிய முறையில் தன்னுடைய இராணுவ வலிமையை அதன் போட்டியாளர்களுக்கு எதிராக நெம்புகோல் போல் பயன்படுத்துகிறது. Brzezinski உடைய கருத்துக்கள் ஈரானின் முக்கியத்துவம் மற்றும் அமெரிக்க மூலோபாயச் சிந்தனையில் சீனா பெற்றுள்ள முதலிடம் ஆகியவற்றை தெளிவாக்குகிறது. மத்திய ஆசியாவில் செல்வாக்கிற்கான போராட்டம் சீனாவை சுற்றி அமெரிக்க நட்பு நாடுகள், இராணுவத் தளங்கள் என்று தென் கொரியா, ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தெற்கு, மத்திய ஆசியா வரை என நிலைநிறுத்தப்படும்.

சீனா ஒன்றும் அமைதியாக இருந்துவிடவில்லை. ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டு அது Shanghai Cooperation Organistion (SCO) என்ற அமைப்பை சில மத்திய ஆசியக் குடியரசுகளுடன் 2001ல் ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கப் படையெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன்னர் மேற்கொண்டது. மாஸ்கோவும் பெய்ஜிங்கும் தெஹ்ரானின் முழு உறுப்பினர் அந்தஸ்தை நிராகரித்தாலும், SCO வில் பார்வையாளர் நாடு என்ற முறையில் ஈரான் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் வாஷிங்டனை வெளிப்படையாக பகைத்துக் கொள்ள அவை விரும்பவில்லை. ஆயினும்கூட, SCO அமைக்கப்பட்டது மற்றும் அது ஈரானை இணைத்துக்கொண்டது ஆகியவை அமெரிக்காவுடனான அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து தன்னுடைய முக்கியமான எரிபொருள் பெறுதலை காப்பாற்றிக் கொள்ளுவதிலும் பெய்ஜிங் தீவிரமாக உள்ளது. தன்னுடைய கடல் பாதைகளை காப்பாற்றிக் கொள்ள கடற்படையை வளர்த்துக் கொண்டிருப்பதுடன், சீனா ஆபத்திற்கு உட்படக்கூடிய கடல் சந்துகளுக்கு மாற்றீடாக நிலவழி குழாய்த்திட்டங்களையும் நாடுகிறது. இந்த மூலோபாயத்திற்கு ஈரான் மையத்தில் உள்ளது. துர்க்மெனிஸ்தான் இப்பொழுது தான் சீனாவிற்கு எரிவாயுவை ஒரு 7,000 கி.மீ. எரிவாயுக் குழாய்த்திட்டத்தின் மூலம் டிசம்பரில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளது. ஈரான் தன்னுடைய பெரும் இருப்புக்களை பிறருக்கு விற்க முன்வந்தவுடன், இருபுறமும் செயல்படும் திறனைக் கொண்டுள்ள, ஒரு குறைந்த தூர குழாய்திட்டம், ஈரானுக்கும் எரிவாயு கொடுப்பதற்கும் ஈரானிய எரிவாயு சீனாவிற்கு செல்லுவதற்கும் மேற்கொள்ளப்படும்.

பாக்கிஸ்தான் மூலம் செல்லும் மாற்றுவழி குழாய்த்திட்டத்திற்கான வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது. ஒரு 3,000 கி.மீ. ஈரான்-பாக்கிஸ்தான்-இந்தியா (IPI) குழாய்த்திட்டம் பற்றி இறுதி முடிவுகள் எடுக்க அமெரிக்க அழுத்தத்தின்கீழ் இந்தியா தயங்கியுள்ளது. அதுபற்றி இந்தியா முடிவு எடுக்காவிட்டால் அது ஈரான்-பாக்கிஸ்தான்-சீனா குழாய்த்திட்டமாகக் கூடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இது உடனடியாக புது டெல்லியின் எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது.

அமெரிக்காவுடனான போட்டியில் எரிபொருள் பங்கு பற்றி பெய்ஜிங் முற்றிலும் அறிந்துள்ளது. அரசாங்க சிந்தனைக்குழு ஒன்று வெளியிட்ட Asia & Africa Review செப்டம்பர் பதிப்பு கூறுவதாவது: "அமெரிக்கா எப்பொழுதும் உலக எண்ணெய் விநியோகத்தில் மத்திய கட்டுப்பாட்டை கொள்ள விரும்புகிறது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒற்றுமை உள்ளது; ஆனால் போட்டியும் உள்ளது; அமெரிக்கா எப்பொழுதுமே நம்மை எதிரித் திறன் உடைய நாடு என்றுதான் காண்கிறது." இதன் பின் அது கொடுத்த எச்சரிக்கை: "இருதரப்பு பூசல்கள், மோதல்கள் [அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே] தவிர்க்க முடியாதவை. மத்தியகிழக்கில் கண்காணிப்பை நாம் குறைத்துக் கொள்ள முடியாது. அதுவும் எரிபொருள் நலன்களின் பாதுகாப்பை பொறுத்த வரையில்.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் சீனாவுடனான போட்டி அமெரிக்கத் தலைமையில் ஈரானுக்கு எதிராக நடக்கும் பிரச்சாரம் தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாறாக அணுசக்திப் பிரச்சினை பொருளாதார, மூலோபாய நலன்கள் பற்றிய போராட்டத்திற்கு ஒரு வசதியான போலிக்காரணம்தான். அதுவோ ஒரு பரந்த மோதலை தூண்டும் திறனைக் கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved