World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Following attack on army headquarters

Pakistan vows to mount new military offensive

இராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதலை அடுத்து

புதிய இராணுவ தாக்குதலை அதிகரிப்பதற்கு பாக்கிஸ்தான் சபதம்

By Keith Jones
12 October 2009

Use this version to print | Send feedback

அடையாளம் தெரியாத அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களால் பிணையாளியாய் எடுக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் தாக்குதலில் ஈடுபட்டதற்கு முடிவு கட்டும் வகையில், நேற்று பாக்கிஸ்தான் இராணுவமானது, கோட்டை நகரமான ராவல் பிண்டியில் அமைந்திருக்கும் அதன் சொந்த தேசிய தலைமையக வளாகத்தின் ஒரு பகுதியை இடித்துத்தள்ள நிர்பந்திக்கப்பட்டது.

இராணுவம் சார்பில் குரல்தருபவரான மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினால் அதிகப்படுத்தப்பட்ட கொமாண்டோ தாக்குதலை, அது 39 பிணையாளிகளில் மூன்று பேரும் இரு இராணுவ சிப்பாயும் இறப்பதில் முடிவுற்றபோதிலும், அதனை "பெரியளவில் வெற்றி" என்று முழங்கினார். நான்கு கிளர்ச்சியாளர்களும்கூட கொல்லப்பட்டனர், ஒருவர் பிடிக்கப்பட்டார்.

நேற்றைக்கு முதல்நாள், ஒன்பது பேர் இராணுவ தலைமையக வளாகத்தில் உள்ள இரு சோதனைச்சாவடிகளை மூர்க்கமாய் தாக்கியபொழுது நான்கு இராணுவத்தினர்கள், ஒரு பிரிகேடியர் ஜெனரல், ஒரு கேர்னல் மற்றும் நான்கு கிளர்ச்சியாளர்கள் என பத்துப்பேர் கொல்லப்பட்டனர். தாக்கியவர்கள் இராணுவ சீருடை அணிந்திருந்ததுடன் கையெறி குண்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் சகிதமாய் ஆயுதம்தரித்து, இராணுவ நம்பர் பிளேட்டை அணிந்திருந்த ஒரு வேனில் வந்திருந்தனர்.

துப்பாக்கிகள் தீயைக் கக்க, கிளர்ச்சியாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட முதலாவது சோதனைச் சாவடியை தகர்ப்பதில் வெற்றிபெற்றனர், ஆனால் இரண்டாவதில் காவலர்களால் திருப்பித்தாக்கப்பட்டனர். தப்பிப்பிழைத்த கிளர்ச்சியாளர்கள் வளாகத்தின் ஒரு கட்டிடத்திற்குள் புகலிடம் கொண்டு, அங்கே கண்ட இராணுவம் மற்றும் குடிமக்களை பிணையாளிகளாக பிடித்தனர். அதன் கடுமையான தடுமாற்றத்தில், பாக்கிஸ்தான் இராணுவம் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் முடிந்துவிட்டது, அதன் கட்டிடங்களுள் ஒன்று கைப்பற்றப்பட்டு பெரிய எண்ணிக்கையில் இராணுவம் மற்றும் குடிமக்கள் பிணையாளிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டிபிடிக்க மட்டும் செய்ய வேண்டும் என்றது.

இத்துணிகரத் தாக்குதலுக்கு பொறுப்பாய் ஒரு குழுவும் இன்னும் உரிமைகோராத நிலையில், பாக்கிஸ்தானிய பொறுப்பாளர்கள் அதற்கு தாலிபன் கூட்டு சேர்ந்த போராளிகள் மீது குற்றம் சாட்டியது மற்றும் இராணுவம் விரைவில் தெற்கு வஜிரிஸ்தானில் திரும்பவும் தாக்கப்போவதாக சபதம் செய்தது. "அனைத்துப் பாதைகளும் தெற்கு வஜிரிஸ்தான் செல்லட்டும்", என அறிவித்த உள்துறை அமைச்சர் ரேஹ்மான் மாலிக், "இப்பொழுது அரசாங்கத்திற்கு தாக்குதலைத் தொடுப்பதைத்தவிர வேறு வழி இல்லை" என்றார்.

பல வாரங்களாக, பாக்கிஸ்தானிய அரசாங்கமும் பெண்டகன் அதிகாரிகளும் ஆப்கானிஸ்தானை எல்லையாக கொண்டிருக்கும் பழங்குடிப் பிரதேசமான தெற்கு வஜிரிஸ்தானில் உடனடியாக பெரும் இராணுவத் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று கூறிவந்துள்ளனர். அங்கு வட்டார பஷ்துன் மக்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபன் கிளர்ச்சிகளுக்கு தரும் ஆதரவை நசுக்கவும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை நீண்டகாலமாய் எதிர்த்து வருகின்றனர்.

டாவ்ன் (விடியல்) பத்திரிகை பெயர் குறிப்பிடாத ஒரு பாக்கிஸ்தானிய அதிகாரியை மேற்கோள் காட்டி தெற்கு வஜிரிஸ்தானில் நடைபெறப்போகும் தாக்குதல் "யுத்தங்களின் தாயாக" இருக்கும் என்று கூறியதாக குறிப்பிட்டது, அதேவேளை இராணுவம் சார்பில் குரல்தரும் ஒருவர் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரண்டு டிவிஷன்கள் அல்லது 28,000 துருப்புக்கள் வரையில் பங்கேற்க போவதாகக் கூறினார். இம்மாத ஆரம்பத்தில் வரவிருக்கும் பாக்கிஸ்தானிய இராணுவத் தாக்குதலை எதிர்பார்த்து பழங்குடி பகுதியில் வசிப்பவர்கள் பறந்தோடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆப்கான் தலிபான்களுக்கு "பாதுகாப்பான புகலிடமாக" பாக்கிஸ்தான் உதவியாய் இருந்து வருகிறது என்று கூறும் வாஷிங்டனில் இருந்து வரும் கடும் அழுத்தத்தின் கீழ், பாக்கிஸ்தானிய இராணுவம் கடந்த வசந்த காலத்தின்பொழுது வடமேற்கு எல்லை மாகாணத்தின் மலாக்காண்ட் பகுதியில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அத்தாக்குதல் நூற்றுக்கணக்கானோர் இறப்பிலும் இரண்டு மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு ஓடியதிலும் முடிந்தது. தப்பியோடிய பல குடிமக்கள் இராணுவம் தீவிரமாயும் கண்மூடித்தனமாயும் குண்டுகளை வீசியதுடன், சொல்லமுடியாத அளவு கிராம மக்களை கொன்றதாகவும் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்களை அழித்ததாகவும் கூறினர். குடிமக்களில் பெரும்பகுதியினர் அண்மைய வாரங்களில் ஸ்வாட் பள்ளத்தாக்கிற்கு திருப்பியதுடன், இராணுவமானது தாலிபன் ஒத்துழைப்பாளர் என கூறப்படுபவர்களுக்கு எதிராக படுகொலை நடவடிக்கையை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

இந்த வார இறுதி தாக்குதலுக்கான பதிலடிகொடுக்கும் சபதத்தில், மாலிக் கற்பனை செய்வதற்கு இடமளிக்காது ஸ்வாட் பள்ளத்தாக்கை உதாரணமாக குறிப்பிட்டார். "ஸ்வாட்டில் உங்களுக்கு நாம் என்ன செய்தோமோ அங்கும் கூட அதையே செய்வோம் என்று தாலிபனுக்கு செய்தி அளிக்க விரும்புகிறேன்" என்றார்.

கடந்த வாரத்தில் இந்தவார இறுதித் தாக்குதல் பாக்கிஸ்தானில் நடைபெற்ற மூன்றவது பெரிய தாக்குதலாகும். வெள்ளிக்கிழமை அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாண தலைநகரான பெஷாவரில் சந்தையில் ஒரு கார்குண்டு வெடித்த்தில் 52 பேர் உயிரிழந்தனர், 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர், தாலிபன் உரிமை கோரிய ஒரு தற்கொலைக் குண்டுவெடிப்பு தாக்குதலில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐ.நா உலக உணவு திட்டத்தில் உதவிப்பணியாற்றும் ஐந்த தொழிலாளர்கள் இறந்தனர்.

அண்மைய திடீர்த்தாக்குதல்களை, குறிப்பாக பாக்கிஸ்தானிய இராணுவ தலைமையகத்தின் மீதான மிகத்தெளிவான கொமாண்டோ பாணி தாக்குதலை வாஷிங்டன் தனது நீண்டகாலக் கோரிக்கையான அதிகரித்த அளவில் சுற்றி வளைக்கும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க - நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு அதிக ஆதரவுதருமாறு கோருவதை பின்னோக்கிப் போகவிடாமல் முன்னோக்கி செலுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளும். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயங்கரவாதிகள் "(பாக்கிஸ்தான்) அரசு அதிகாரத்திற்கு அதிகரித்த அளவில் அச்சுறுத்தி வருகின்றனர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பாக்கிஸ்தானிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் குற்றச்செயலில் உடந்தையாய் இருத்தலுடன், அமெரிக்க படைகள் பாக்கிஸ்தானுக்குள் டஜன் கணக்கில் ட்ரோன் ஏவுகணைகளை ஏவின. ஆனால் வாஷிங்டன் பாக்கிஸ்தான் இறையாண்மைமீது இன்னும் அதிகமாய் வெளிப்படையான படையெடுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று - அதாவது அமெரிக்கத் துருப்புக்களை "கடுமையாய் மேற்கொள்ளும்" பணிகளை மற்றும் /அல்லது பாக்கிஸ்தானுக்குள்ளே இணைந்த கூட்டு தரைப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்குமாறு திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தான் போரில் பிரதான முன்னணியாகவும் சண்டையின் பெரும் சிரமத்தை பாக்கிஸ்தான் இராணுவம் தாங்கிக்கொள்ளவும் பாக்கிஸ்தானை ஆக்குவதற்கான அதன் நோக்கத்தை கோடிட்டுக்காட்டும் விதமாக, ஒபாமா நிர்வாகம் ஆப்-பாக் போரை கடந்த குளிர்காலத்தில் ஆப்கான் "துருப்புக்கள் அலை எழுச்சிக்கான" இறுதி செய்யும் திட்டங்களாக இருந்ததாக மீளவும் பூசிமெழுகியது.

ஆப்கானில் பொம்மை அரசாங்கத்தை வலுப்படுத்தும் வாஷிங்டன் முயற்சி மீண்டும் நெருக்கடியில் உள்ளது- ஒபாமாவின் ஆப்கான் கொமாண்டர் ஸ்டான்லி மக்ரிஸ்டல் கூடுதலாக 40,000 மேலாக துருப்புக்களை கேட்டுக்கொண்டுள்ளார் மற்றும் பத்தாயிரக்கணக்கிற்கும் மேலான துருப்புக்கள் "அலை எழுச்சியின்" விளைவாக அனுப்பப்பட்டுள்ளது - வெள்ளை மாளிகையும் பெண்டகனும் மீண்டும் பாக்கிஸ்தான் பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளன.

கடந்த புதன்ன்று நடந்த வெள்ளை மாளிகை ஆப்கான் "போர் அவையின்" கூட்டத்தில் பாக்கிஸ்தான் குவிமையமாக இருந்ததாக கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அமெரிக்க துருப்புக்களை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்ற மக்கிரிஸ்டல் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகத்திற்குள்ளே உள்ள ஏனையோரும் "பாக்கிஸ்தான் முல்" மாற்றீடு என்பதை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இது அமெரிக்கா தன்னிச்சையாக ட்ரோன் தாக்குதல்களை திடீரென அதிகப்படுத்துவதை மற்றும் பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க சிறப்புப்படை திடீர் சோதனைகளை அதிகப்படுத்துவதை உள்ளடக்கும் மற்றும் தாலிபனுக்கும் அதோடு தொடர்புடைய இஸ்லாமிய குடிப்படைகளுக்கு எதிரான தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை இஸ்லாமாபாத் நழுவவிடாது பற்றிக்கொள்ள அழுத்தம் கொடுப்பதையும் உள்ளடக்கும்.

இதற்கிடையில், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் எளிதில் ஒத்திசைந்துபோகும் பதிலாளாக பல பத்தாண்டுகளாக சேவைசெய்துவரும் பாக்கிஸ்தான் மேற்தட்டுக்குள்ளே, வாஷிங்டனின் என்றும் தீவிரமாகிவரும் கோரிக்கைகள் மற்றும் அழுத்தம் மீதாக திருப்திகளும் முறுகல்களும் வளர்ந்துவருகின்றன.

தாலிபன் நட்புக் குழுக்களுடன் ஒத்துப்போதல்களை அடைவதற்கான பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளை மெரிக்கா உரத்து எதிர்ப்புத்தெரிவிக்கும் அதேவேளை, வாஷிங்டன் தாலிபனுக்குள்ளும் அதனைச்சுற்றுலும் உள்ள சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இறுதியில் தயாராகி வருவதையும் அது திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டி வருகிறது.

கடந்தவாரம் பாக்கிஸ்தானிய இராணுவ கொமாண்டர்களின் கூட்டம் அமெரிக்காவின் "பாக்கிஸ்தானுடனான அதிகரித்த பங்காண்மை 2009 சட்டத்தின்" சில நிபந்தனைகளைப் பற்றி "பெருங் கவலைகளை" எழுப்பியது. பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் நவாஸ் ஷ்ரிப்பின் முஸ்லிம் லீக் உளபட எதிர்க்கட்சியினர், அந்த விமர்சனத்தில் விரைந்து சேர்ந்துகொண்டனர்.

அச்சட்டம் பாக்கிஸ்தானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அமெரிக்க பொருளாதார உதவியை ஆண்டுதோறும் அளிக்கும். பணம் உள்ளே வருவதற்கு, அமெரிக்க அரசுத்துறை செயலர் ஒவ்வொரு ஆறுமாதமும் பாக்கிஸ்தான், ஆப்கான் போரில் வாஷிங்டனின் கட்டளையை இஸ்லாமாபாத் செய்து வருவது சக்திமிக்கவகையில் கருதப்படுகிறது என்பது உள்பட, வரிசையான நிபந்தனைகளை நிறைவேற்றிவருகிறது என்று கட்டாயம் சான்றளிக்க வேண்டும்.

இராணுவத்தின் சினத்தை மிகவும் தூண்டியது எதுவென்றால் உயர் அதிகாரிகளை நியமித்தல் உள்பட, இராணுவத்தின் மீது மக்களது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா விரும்புகிறது என்ற பிரிவாகும். இந்நடவடிக்கை பாக்கிஸ்தானிய படை அதிகாரிகளின் சுயாட்சி மற்றும் பரந்த சலுகைகளை அச்சுறுத்தும் நடவடிக்கை ஆகும்.

வாஷிங்டன் பல பத்தாண்டுகளாகவே பாக்கிஸ்தானிய இராணுவத்தை நாட்டின் மைய அமைப்பாக முன்னேற்றுவித்து, அதற்கு தாராளமாய் ஆயுதங்கள் அளித்து, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் உள்பட அடுத்தடுத்து வந்த இராணுவ சர்வாதிகாரத்தை ஆதரித்தது, அது 2008ல்தான் அகற்றப்பட்டது.

பெண்டகன் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கிடையே உள்ள நெருக்கமான உறவு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தூணாக விளங்குகிறது.

இராணுவம் அப்படி தாக்கிய பிரிவுகளில் சில அமெரிக்காவுக்கான பாக்கிஸ்தானிய தூதர் வலியுறுத்தலின் பேரில் சட்டமசோதவில் வைக்கப்பட்டது என்று பாக்கிஸ்தானிய செய்தித்தாள்கள் கருத்துரைத்தன. நிச்சயமாக பாக்கிஸ்தானிய ஜனதிபதி அஸிப் அலி சர்தாரி, வலதுசாரி சமூகப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாகவும் அமெரிக்காவின் சூறையாடும் போருடன் நெருக்கமாக இனம்காட்டிக் கொண்டதன் காரணமாகவும் தனது புகழை இழந்த இவர், ஆரம்பத்தில், எழுதப்பட்ட வகையில் அமெரிக்க மசோதாவை தனக்காகவும் தனது அரசாங்கத்திற்காகவும் அதிக அதிகாரத்தை மீட்டுக்கொள்ள பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை கொண்டு, பலமாய் ஆதரித்தார்

இராணுவ அழுத்தத்தின் கீழ், ஆயினும், சர்தாரி சந்தர்ப்பத்திற்கேற்ப போக்கை மாற்ற இருந்தார். பத்திரிகை செய்திகளின்படி, சனிக்கிழமை அன்று, பாக்கிஸ்தானிய இராணுவ தளபதி அஷ்பாக் கயானி உடனான கூட்டத்தில், தனது அரசாங்கம் மசோதா பற்றிய படை அதிகாரிகளின் அக்கறைகளை வாஷிங்டனிடம் எழுப்பப்போவதாக உறுதி அளித்தார்.

பாக்கிஸ்தானிய உதவி சட்டத்திற்கு இணைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிபந்தனைகள் யாதெனின், பாக்கிஸ்தானிய பாதுகாப்பு- உளவு நிறுவன அமைப்பின்பகுதிகள் தொடர்ந்து பாக்கிஸ்தானிய தேசிய நலன்கள் பற்றிய அவர்களின் உணரும் சக்தியை, வாஷிங்டன் மற்றும் வால்ஸ்ட்ரீட் நலன்களுக்கு மேலாக தொடர்ந்து வைப்பார்கள் என்ற கவலைகள்தான். சுருங்கக் கூறின், அவர்கள் இந்தியாவுடனான பாக்கிஸ்தானின் பலபத்தாண்டுகால நீண்ட பகைமையில் தாலிபனை புவிசார் அரசியல் சொத்தாகத் தொடர்ந்து புரந்து ஆதரிப்பர் மற்றும் பாக்கிஸ்தானுக்குள்ளே ஒரேயடியான உள்நாட்டு யுத்தத்தை மேற்கொள்ளதயங்குவர், அது அரசை சீர்குலைக்கும் மற்றும் அதற்கு தீங்கு விளைவை எற்படுத்தக் கூடும்.

பாக்கிஸ்தானிய மேற்தட்டின் பரந்த பகுதிகள் அமெரிக்காவை "பிறர் இன்பத்தில் நண்பனாய் பங்குகொண்டு துன்பத்தில் விலகுபவன்" என்று அஞ்சுகின்றன, அதன் நீண்டகால குறிக்கோள் இஸ்லாமாபாத்தை பலியிட்டு இந்தியாவுடன் மூலோபாய பங்காளித்தன்மையை உறுதிப்படுத்துவதாகும். ஆப்கான் விவகாரங்களில் பிரதான பாத்திரத்தை ஆற்ற இந்தியாவை அமெரிக்கா அனுமதிப்பதாக அவர்கள் கோபமடைந்துள்ளனர். மற்றும் அவர்கள் முன்னேறிய அணு ஆற்றல் தொழில் நுட்பத்தை இந்தியா பெறுவதற்கு வழிவகை செய்யும் அமெரிக்க அணு ஆற்றல் உடன்பாட்டின் கீழ் அமெரிக்கா இப்பிராந்தியத்தின் சக்தி சம்பலநிலையை அடிப்படையில் மாற்றிவிட்டதாக சினம்கொண்டுள்ளனர். அதன் மூலம் அதன் நாட்டுக்குள்ளே உற்பத்தியான அணு ஆயுத அபிவிருத்தி திட்டத்தின் வளங்கள் மீது ஒருமுகப்பட அதனை அனுமதித்துள்ளது.

இந்தியா அதன் பங்கிற்கு, ஒபாமா நிர்வாகம் அதன் ஆப்கான் போரை மேற்கொள்வதன்மூலம், இந்தியாவை விட பாக்கிஸ்தானுடன் அதன் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அஞ்சுகிறது. இதனை இடையூறு செய்யும் முயற்சியில், பாக்கிஸ்தானை சர்வதேச பயங்கரவாதத்தின் பிரதான மூலம் என்று கண்டனம் செய்யும் தூண்டல் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நீண்டகாலமாக இயங்காது கிடக்கும் இந்தோ பாக்கிஸ்தானிய அமைதி செயற்பாட்டைப் புதுப்பிப்பதற்கான முன்நிபந்தனையாக, இஸ்லாமாபாத் காஷ்மீரி கிளர்ச்சிக் குழுக்களை, அவை அமெரிக்காவால் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குழுக்களில் இருப்பதால் அவற்றை நசுக்குவதில் மிகத் தீவிரத்தைக் காட்டவேண்டும் என்று புதுதில்லி கோருகிறது.

மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவ மூலோபாய வேட்கை விரிவுபடுத்தும் போரை விளைவிக்கும், அது ஆப்கானிஆதான் மற்றும் பாக்கிஸ்தான் மக்களுக்கு அதிகரித்த அளவில் அழிவுகளையும் துயரங்களையும் விளைவிக்கும் மற்றும் முழு பிராந்தியத்தையும் ஸ்திரமற்றதாக்கும், அதன்மூலம் இன்னும் பெரிய பேரழிவுகளின் விதைகளை விதைக்கும்