World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Another costly week in Afghanistan

ஆப்கானிஸ்தானில் மற்றொரு பெரும் இழப்புக்கள் நிறைந்த வாரம்

By James Cogan
13 October 2009

Use this version to print | Send feedback

இன்னும் கூடுதலாக 60,000 துருப்புக்களை ஆப்கானிஸ்தானிற்கு தேவை என்னும் கோரிக்கையை ஒபாமா நிர்வாகம் பரிசீலித்து வருகையில், இப்பொழுது அங்குள்ள 100,000 அமெரிக்க, நேட்டோ ஆக்கிரமிப்பு படைகள் முன்னோடியில்லாத விகிதத்தில் இறப்புக்களை தொடர்ந்து எதிர்கொள்ளுகின்றன. நூரிஸ்தான் மாகாணத்தில் இப்பொழுது கைவிடப்பட்டுவிட்ட ஒரு தளத்தின் மீது நடைபெற்ற பெரிய கிளர்ச்சி தாக்குதலில் எட்டு அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர், இன்னும் 10 துருப்புகள் உயிரிழந்துள்ளனர், டஜன் கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர். அக்டோபர் மாத இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 29 ஆகிவிட்டது; 2009 ல் இறப்பு எண்ணிக்கை இப்பொழுது 408 ஆக உள்ளது.

இப்படி உயரும் இறப்பு எண்ணிக்கைக்கு காரணம் தாலிபன் தலைமையிலான எழுச்சியின் கணிசமான வளர்ச்சி ஆகும். துருப்புக்களின் எண்ணிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க இராணுவம் இந்த மாதம் தாலிபன் கூட்டு எழுச்சியாளர்கள் 7,000 த்தில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 25,000 ஆகி இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பஷ்டூன் போர்ப்பிரபுக்கள் மற்றும் முன்னாள் அமெரிக்க நிதி உதவி பெற்ற சோவியத் எதிர்ப்பு முஜாஹதின் தலைவர்கள் குல்புதின் ஹெக்மத்யர் மற்றும் ஜலாலுதின் ஹக்கானி தலைமையில் இருக்கும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் அடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் 80 சதவிகித நிலப்பரப்பிலும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தாலிபனின் தீவிர கெரில்லா குழுக்கள் செயல்படுவதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி அப்துல் ரஹீம் வர்டக் பாக்கிஸ்தான், முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசுகள் மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து குறைந்தது 4,000 இஸ்லாமிய போராளிகள் தாலிபனுடன் பக்கம் நின்று போராடுவதாக சனிக்கிழமையன்று கூறினார்.

சமீபத்திய இறப்புக்களில் அமெரிக்க, பிரிட்டிஷ், போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன், ஆஸ்திரேலியத் துருப்புக்களும் அடங்குவர். இவற்றில் பெரும்பாலானவை முன்ஆயத்தம் இன்றித்தயாரித்துள்ள வெடிக்கருவிகள் (IED) அல்லது நிலக்கண்ணிகள் உள்ளன; இவற்றை கெரில்லாக்கள் பெருகிய ஆபத்துதரக்கூடிய திறமையில் நிறுவியுள்ளனர். ஆப்கானிய அரசாங்கத் துருப்புக்கள், போலீசார், அரசாங்க அதிகாரிகளும் உயரிழந்துள்ளனர் அல்லது காயமுற்றுள்ளனர். ஞாயிறன்று கிழக்கு மாநிலமான பாக்டிக்காவில் நான்கு ஆபிரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். கவர்னரும் பாடிக்கா மாவட்டத்தின் போலீஸ் தளபதியும் சனிக்கிழமை IED யால் கொலையுண்டனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில், குறிப்பிடப்படாத இடத்தில், ஒருவேளை ஹீரட் மாநிலமாக இருக்கலாம், IED தாக்குதலில் வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்க சிப்பாய் இறந்து போனார். அன்றே இரு போலந்து சிப்பாய்கள் அவர்களுக்கு பொருளை ஏற்றிவந்த வாகனம் நிலக்கண்ணியுடன் தொடர்புற்ற நிலையில் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு சிப்பாய்கள் தீவிரமாக காயமுற்றனர். எட்டு ஆண்டுப் போரில் 15 போலந்துத் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் போலந்து அரசாங்கம் 2,000 சிப்பாய்களை நிறுத்தி வைத்துள்ளது.

வெள்ளியன்று தென் மாகாணமான உருஸ்கனில் நடந்த ஒரு தாக்குதலில் ஒரு ஆஸ்திரேலிய சிப்பாய் காயமுற்றார். ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய சிப்பாய்களின் மொத்த எண்ணிக்கை 1,550 ஆகும். கடந்த இரு ஆண்டுகளில் 10 பேர் இறந்துள்ளனர், 80 பேருக்கும் மேலானவர்கள் காயமுற்றுள்ளனர்.

துணைக் கார்ப்பொரல் ஜேம்ஸ் ஹில் கடந்த வியாழனன்று ஒரு IED யால் கொல்லப்பட்ட போது ஆப்கானிஸ்தானில் இறந்த 221வது பிரிட்டிஷ் சிப்பாயானார். எழுச்சியாளர்கள் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய இராணுவத் தளமாக Camp Bastion க்கு அருகே பயிற்சி நிலையத்திற்கு பிரிட்டஷ் துருப்புக்கள் செல்லும் பாதையில் ஒரு குண்டுத் தாக்குதல் நடத்த முடிந்தது. இந்த பாதுகாப்பு மீறலைப்பற்றிய விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு குழந்தைகளால் வைக்கப்பட்டிருக்கலாம் என்று செய்தி ஊடகங்கள் தகவல் கொடுக்கின்றன; அவர்கள் இந்தப் பாதுகாப்புப் பகுதியில் செலவிடப்பட்டுவிட்ட பித்தளை கார்ட்ரிட்ஜ்ஜுகளை எடுக்க அனுமதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு இதுவரை, மொத்தத்தில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள 9,000 பிரிட்டிஷ் துருப்புக்களில் இதுவரை 84 பேர் இறந்துள்ளனர், 300 பேருக்கும் மேலானோர் காயமுற்றுள்ளனர்.

பால்க் மாகாணத்தின் வடக்குப் புற நகரமான மஜர் -இ-ஷரிப்பிற்கு அருகே ஸ்வீடன், பின்லாந்து நாடுகளின் கூட்டு ரோந்தும் வியாழனன்று தாக்கப்பட்டன. எழுச்சியாளர்கள் ராக்கெட் உந்துதல் பெற்ற எறிகுண்டுகள் மற்றும் சிறு குண்டுகளை இவர்களின் கவச வண்டீகள் மீது எறிந்தனர். இரு ஸ்வீடன் நாட்டு சிப்பாய்கள் காயமுற்றனர். ஆப்கானிஸ்தானில் ஸ்வீடனும் பின்லாந்தும் முறையே 430, 130 சிப்பாய்களை கொண்டுள்ளன. சமீப காலம் வரை பால்க்கில் ஒப்புமையில் அதிக எழுச்சி நடவடிக்கை இருந்ததில்லை.

கடந்த புதனன்று மேற்கு மாகாணமான பாட்கிஸில் ஒரு IED தாக்குதலில் ஸ்பெயின் நாட்டு சிப்பாய் கொல்லப்பட்டார்; அந்நாட்டின் சிப்பாய்கள் இறப்பில் இது ஏழாவது ஆகும்; இப்பகுதி பால்க்கை போல் நாட்டின் "பாதுகாப்புப் பகுதிகளில்" ஒன்று எனக் கருதப்பட்டிருந்தது. மத்திய ஆசியா வழியாக நேட்டோவின் வடக்குப்புறத்தில் இருந்து வரும் பொருட்கள் அளிப்பை இடையூறு செய்யும்பொருட்டு தாலிபன்கள் இப்பொழுது மாகாணங்களை இலக்கு கொண்டு தாக்குகின்றனர். பாக்கிஸ்தான் மூலம் வரும் வாகனங்கள் வரிசையாக கிளர்ச்சியாளர் தாக்குதலுக்கு ஆளாகுவதை அடுத்து இந்த வழி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

பரந்த மக்கள் ஆதரவை, குறிப்பாக இனவழி பஷ்டூன் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆதரவைக் கொண்டு வந்துள்ள உறுதியான, விரிவான எழுச்சி வாஷிங்டனில் துருப்பு எண்ணிக்கைகள் அதிகரிப்பிற்கான மாற்றீடுகள் பற்றிய விவாதத்திற்கு எரியூட்டியுள்ளது.

தாலிபனுடன் எதிர்ப்பை நிறுத்தி காபூலின் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சியின் நெறித்தன்மையை எற்க உடன்பாடு பெற வேண்டும் என்பது ஒரு விருப்புரிமை ஆகும். கடந்த வாரத்தில் பல ஆண்டுகளாக போர் பிரச்சாரத்தில் தாலிபனுக்கும் அல்கொய்தா வலைப்பின்னலுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றிய சிதைந்த தன்மையை ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். வெள்ளை மாளிகை செய்தி ஊடக மந்திரியான கிப்ஸ் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் "உறுதியாக வேறுபாடு உள்ளது என்றும்" தாலிபான் ஒரு "நாடுகள் கடந்த அச்சுறுத்தலை கொடுக்கவில்லை" என்றும் கூறினார். இத்தகைய அறிக்கைகள் பல தாலிபன் பிரிவுகள், அதன் நட்பு அமைப்புக்களுடன் சமாதானம் செய்யக்கூடிய வாய்ப்புக்களை சுட்டிக் காட்டுகின்றன.

ஆனால் எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர், தாலிபானுக்கு ஒன்றும் வாஷிங்டன் ஆணைகளை ஏற்க வேண்டும் என்ற காரணம் ஏதும் இல்லை. இராணுவ மற்றும் அரசியல் வகையில் அது 2001 படையெடுப்புக் காலத்தில் இருந்து இப்பொழுது மிக வலுவான நிலையில் உள்ளது. ஆகஸ்ட் 20 ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. கணக்கிடப்பட்ட ஐந்து மில்லியன் வாக்குகளில் குறைந்தது 1.5 மில்லியன் வாக்குகள், முக்கியமாக தற்போது இருக்கும் ஜனாதிபதி ஹமித் கர்சாயிக்கு நலன்களைக் கொடுக்கும் வகையில் மோசடி வாக்குகளாக இருக்கலாம். பஷ்டூன் தெற்குப் பகுதியில் மக்களில் மிகக் குறைந்த 5 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்தனர்; ஏனெனில் தேர்தல் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த தாலிபனுக்கு அவர்கள் அஞ்சியிருக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்ககு பின்னர் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை; வெள்ளை மாளிகையோ கர்சாய் மற்றும் ஆவருடைய ஆதரவாளர்கள் அப்பட்டமான தேர்தல் மோசடி செய்தது பற்றி எப்படி நடந்தது கொள்ளுவது என்று இன்னமும் சிந்தித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள மூத்த ஐ.நா. பிரதிநிதி வார இறுதியில் "பரந்த மோசடிக்கான" சான்றுகள் இருந்தன என்பதை ஒப்புக் கொண்டார்.

ஒபமா நிர்வாகம் கர்சாய் வெற்றி பெற்றுவிட்டார் என்ற கூற்றை அனுமதித்து விட்டால், இது கைப்பாவை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விரோதத்திற்கு இன்னும் எரியூட்டும். ஒபாமா நிர்வாகம் புதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றால் குளிர்காலம் முடியும் வரை இது இயலாது; இது தாலிபனுக்கு தன் செல்வாக்கை விரிவாக்க அனுமதித்துவிடும். எந்த முடிவு எடுத்தாலும் ஆப்கானிஸ்தானில் "ஜனநாயகம்" அதன் படையெடுப்பினால் வந்துவிட்டது என்னும் பிரச்சாரம் முற்றிலும் இழிவுபடுத்தப்பட்டுவிட்டது.

ஒபாமா எதிர்கொள்ளும் மற்றொரு சங்கடம் ஆப்கானிய படைவிரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் துருப்புக்களை எங்கிருந்து திரட்டுவது என்பது ஆகும். தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல் இன்னும் 60,000 துருப்புக்கள் தேவை என்று கோரியிருப்பதாகக் கூறப்படுகையில், அடுத்த ஆறு மாதங்களில் 15,000 பேர்தான் திரட்டப்பட முடியும் என்று நம்பப்படுகிறது. ஈராக்கில் இன்னும் 120,000 சிப்பாய்கள் உள்னர்; அவர்கள் ஜனவரி தேர்தல்களுக்கு பின்னரும் அங்கு இருப்பர் என்று கூறப்படுகிறது.