World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

IMF chief economist calls for drastic UK spending cuts

சர்வதே நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுனர் இங்கிலாந்தில் கடுமையான செலவுக் குறைப்புக்களுக்கு அழைப்பு விடுகிறார்

By Robert Stevens
6 October 2009

Use this version to print | Send feedback

தலைமைப் பொருளாதார ஆலோசகர் Olivier Blanchard சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதார பார்வை பற்றி அக்டபோர் 1ம் தேதி இஸ்தான்புல்லில் பேசுகையில், பொதுநலச் செலவுக் குறைப்புக்களை பெருமளவில் சுமத்த வேண்டிய நாடுகளில் பிரிட்டனையும் மேற்கோளிட்டார். அத்தகைய நடவடிக்கைகளில் தற்பொழுது 65 என்று இருக்கும் ஓய்வு பெற வேண்டிய வயது உயர்த்தப்படுதல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு கட்டணம் அறிமுகப்படுத்துதல் ஆகியவையும் உள்ளன.

இங்கிலாந்தின் பொருளாதாரம் பற்றி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிளான்சார்ட் குறிப்பாக கேட்கப்பட்டார். அதற்கு அடுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் "நடுத்தர காலக்கடன் பார்வையை முன்னேற்றுவிக்கும் நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

இந்த குறைதீர்க்கும் அறிக்கையின் பொருள் பற்றி விளக்குகையில், "இதன் பொருள் ஓய்வு பெறும் வயது சீர்திருத்தம் என்பதாகும்; அதாவது சுகாதாரப் பாதுகாப்பு முறையின் சீர்திருத்தம் என்ற பொருளும் ஆகும். இச்சீர்திருத்தங்கள் அடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டும். நிதிய விதிகளை (வெறுமே) அறிமுகப்படுத்திவிட்டு இச்சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் போவது என்ற கருத்து ஒரு கேலிக்கூத்து ஆகும் என்றும் அவர் எச்சரித்தார்.

உலகப் பொருளாதாரத்திற்கு மீண்டும் வளர்ச்சி நிலை வந்துவிட்டது என்றும் மீட்பு வந்துகொண்டிருக்கிறது என்று கூறும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை 2009ல் உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை 1.1 சதவிகிதம் என்பதில்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

"தற்போதைய புள்ளி விபரங்கள் அரசாங்கங்களின் நெருக்கடிகள் முடிந்துவிட்டன என்று நம்பும் சிந்தனைக்கு தள்ளக்கூடாது" என்று பிளான்சார்ட் உறுதியாகக் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் பிரிட்டனின் மொத்த தேசியக் கடன் அடுத்த ஆண்டு தேசிய உற்பத்தியில் 81.7 சதவிகிதத்தை பிரதிபலிக்கும் என்று குறிப்பிடுகிறது. திட்டமிட்டுள்ள வெட்டுக்கள் மற்றும் வரி அதிகரிப்புக்களுடன் கூட கடன் 2014ல் 98.3 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

"கட்டுமானப் பற்றாக்குறை" மிக அதிகமாக இருக்கும் என்று குறிப்புக்காட்டும் சமீபத்திய கணிப்பு இங்கிலாந்து அரசாங்க செலவிற்கு நிதியளிக்கத் தேவையான கடன் அளவு, "மீட்பிற்கு பின்னரும்" 6.2 சதவிகிதமாக இருக்கும். இது ஒரு முன்னேற்றம் அடைந்த நாட்டின் பொருளாதாரத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய சதவிகிதத்தைவிட கணிசமானளவு அதிகம் ஆகும்.

இங்கிலாந்தின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதத்திற்கும் அதிகமாக 200 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இங்கிலாந்து பொருளாதாரம் பற்றி கொடுத்துள்ள கணிப்பின்படி அது இந்த ஆண்டு 4.4 சதவிகிதம் சுருக்கம் அடையும், ஆனால் 2010ல் 0.9 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்பதாகும். அப்படி இருந்தாலும் வேலையின்மை 7.2 சதவிகிதத்தில் இருந்து 9.3 சதவிகிதத்துக்கு என அடுத்த ஆண்டில் உயரும்.

"வேலைகள் இல்லாத மீட்பு" என்ற தலைப்பில் சர்வதேச நாணய நிதியம், சமீபத்திய வேலையின்மை அதிகரிப்புக்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருப்பது இப்பொருளாதாரங்களின் அடித்தளத்தில் இருக்கும் அதிக தீவிர பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது என்று கூறுகிறது.

"ஆனால் மந்தநிலை தீவிரமாகும்போது, நிறுவனங்கள் அதிர்ச்சி இன்னும் அதிகம் என்று உணர்ந்து விரைவாக வேலை நீக்கம் செய்யத் தொடங்கலாம். உலகப் பொருளாதாரத்திற்கு சமீப அதிர்ச்சிகள் தொடர்ந்து நீடித்த தன்மையை கொண்டிருப்பதை காணும்போது, வேலைகள் இல்லாத மீட்பிற்கான திறனைத்தான் இது கட்டியம் கூறுகிறது. மேலதிக உழைப்பு சேமிப்பு (excess labour) நாளடைவில் குறையக்கூடும்; ஆனால் தனிப்பட்ட பொருளாதாரங்களில் உள்ள வேறுபாடுகளைக் கூறுவது மிகவும் கடினம் என்று அது தெரிவிக்கிறது."

அறிக்கை தொடர்கிறது: "ஆனால் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வேலையிழப்புக்கள் மந்தநிலையால் பாதிக்கப்பட்டன என்பதை மட்டும் இல்லாமல் வீடுகள் குமிழி வெடித்தல், நிதிய முறையின் அமைப்புரீதியான நெருக்கடி ஆகியவற்றாலும் இடருற்றன என்பதை பிரதிபலிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தால் (2009a) ல் நிரூபிக்கப்பட்டதைப் போல் [2006 சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது], இத்தகைய கூட்டு பொதுவாக அதிக உற்பத்தி என்பது குறைவதையும் மீட்பை கணிசமாக தாமதப்படுத்துவதையும் குறித்து, இரு நாடுகளுக்கும் பொதுவாக ஒரு மெதுவான, குறைந்த மீட்புதான் வேலைகளை தோற்றுவிப்பதில் இருக்கும் என்பதைத் தெரிக்கின்றன."

சர்வதேச நாணய நிதியம் இங்கிலாந்தில் பெருநிறுவன திவாலில் 50 சதவிகித அதிகரிப்பு மற்றும் உற்பத்தியில் தீவிரச் சரிவு ஆகியவை பற்றியும் தன்னுடைய கவலைகளை கூறியுள்ளது. மற்ற எதிர்மறை காரணிகள், பவுண்டின் மதிப்புக் குறைவால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் தொடர்தல், மற்றும் மிக அதிகமாக நிதிய, வீடுகள் பிரிவுகளில் பொருளாதாரத்தை நம்பியிருப்பதும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மிகைப்படுத்தப்பட்ட இலாபங்கள் நிதிய முறையில் மறைந்துவிட்ட அளவில், இங்கிலாந்தில் நீண்ட கால வளர்ச்சி என்பது யூரோப்பகுதியை விட கூடுதலான பிரச்சனைக்குட்படும்" என்று அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில் மூன்று முக்கிய கட்சிகளும் பொதுநலச் செலவுகளைக் குறைக்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து பிரிட்டனுக்கு சர்வதேச நாணய நிதியத்தால் கடுமையான குறைப்புக்களை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Daily Mail ல் அக்டோபர் 2 பதிப்பில் வந்துள்ள ஒரு கட்டுரையின்படி, "மூத்த அமைச்சரவை ஆதராங்கள் தொழிற்கட்சி செலவினக் குறைப்புக்களுக்கு திட்டமிட்டிருப்பதாகவும், 75 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விற்க இருப்பதாகவும், இதையொட்டி முக்கிய பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதிப்பு வரும் என்றும் நீதிபதிகள், உயர்மட்ட ஆட்சித் துறை ஊழியர்கள் மற்றும் தேசிய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு ஊதியக் குறைப்பு வரும் என்றும்" குறிப்பிட்டுள்ளது.

"சர்வதேச நாணய நிதியத்தின் கருத்துக்கள் மிகவும் அசாதாரணமானவை, அதுவும் ஒரு தேர்தலுக்கு முன்பு; இது பிரவுண் அரசாங்கம் சேர்ந்துள்ள மலை போன்ற கடன் குவிப்பு பற்றி பெரும் கவலையை பிரதிபலிக்கிறது." என Mail குறிப்பிட்டுள்ளது.

தொழிற்கட்சி பிரதம மந்திரி கோர்டன் பிரவுண் தன்னுடைய அரசாங்கத்தின் திட்டங்களை மீண்டும் வலியுறுத்தி அரசாங்கம் மகத்தான குறைப்புக்களை இந்த வாரம் சுமத்த இருப்பதாகக் கூறினார். Channel 5 News க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர், "நான் ஒரு பற்றாக்குறை குறைப்புத் திட்டத்தை கொடுத்துள்ளேன். வரிகளின் உயர்மட்ட விகிதத்தை நாங்கள் உயர்த்தியுள்ளோம். தேசிய காப்பீடு அரையில் இருந்து ஒரு சதவிகிதம் உயரும், செலவினங்களை நாங்கள் குறைப்போம்." என்றார்.

"16 பில்லியன் பவுண்டுகளுக்கும் மேலான சொத்துக்களை எப்படி விற்பனை செய்ய உள்ளோம் என்பது பற்றி இன்னும் கூடுதலான அறிவிப்புக்கள் வரும்.

இஸ்தான்புல்லில் பேசிய இங்கிலாந்தின் நிதி மந்திரி அலிஸ்டர் டார்லிங் கூறினார்: "செலவழிக்கும் சக மந்திரிகளிடம் நான் கடுமையாக உள்ளேன். முன்னோடியில்லாத சரிவின் நடுவில் நாம் இருக்கையில் கடன் வாங்குதலை குறைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது."

செய்தி ஊடக வர்ணனையாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பார்வை அறிக்கையை எதிர்கொள்ளுகையில் வெட்டுக்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. Daily Telegraph கட்டுரை ஒன்றில், "கடன் வாங்குதல் நின்றால் என்ன ஆகும்" என்ற தலைப்பில், இங்கிலாந்தின் கட்டுமான பற்றாக்குறை, சர்வதேச நாணய நிதியத்தால் மேற்கோளிடப்பட்டுள்ளது "என்னுடைய பதவிக் காலத்தில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது." என்றார். என Jeremy Warner குறிப்பிட்டார், "பிரச்சினை சுய திருத்தம் மூலம் தீர்ந்தால் ஒழிய, இரண்டு முக்கிய கட்சிகளும் ஒப்புக்கொண்டிருப்பதற்கு மேல் இன்னும் பெரிய செலவின குறைப்புக்கள், மற்றும்/அல்லது வரி அதிகரிப்புக்கள் வருவது என்பது தவிர்க்க முடியாதது ஆகும்." என அவர் மேலும் கூறினார்.

Blanchard உடைய அறிக்கை பற்றிக் கூறிய வார்னர் தெரிவித்தார்: "துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு அவர் ஒருவித நிதிய ஊக்கம் பொது தனியார் கொள்வனவு வலுவற்று இருக்கும் வரை தொடரவேண்டும் பிரிட்டன் போன்ற நாடுகளில் விரைவான பொதுக் கடன் பெருக்கம் இருக்கும் என்ற நிலையிலும் அப்படித்தான் இருக்கும். எவ்வாறிருந்தபோதிலும் ஒரு நிலைமையில் இந்த ஆதரவு முடிவிற்கு வரவேண்டும் அல்லது உதவிவழங்குவது பற்றிய முக்கிய பிரச்சனைகள் எழும் "

"தற்போதைய வளர்ச்சிப் போக்கு ஒரு தேசியக் கடன் வளர்ச்சியில் இயலக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்பது எப்படியும் உண்மைதான் என்று அவர் முடிவு எடுத்தார்."

"ஆனால் வருந்தத்தக்க விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உலக மீட்பு பற்றிய கணிப்புக்கள் அடையப்பட்டு விடும் என இந்த முன்கணிப்பு கருதுகின்றது. ஒரு நிதிய நெருக்கடி வந்துவிடும் என்ற நிலையை தரக்கூடிய வேறு காரணிகளும் உள்ளன. பிரிட்டனில் இது நாணயச் சரிவில் ஒரு சரிவு மற்றும் வட்டிவிகிதத்தில் முடங்க வைக்கும் பெருக்கம் என்ற வடிவமைப்பைப் பெறக்கூடும்." என Warner தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய கணிப்பான "நிலைத்திருக்கும் மீட்பு" என்பது தோற்றால், "விருப்பமற்ற முடிவுகளுக்கான" வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் அவர் எச்சரித்தார்.

கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய ஆதரவாளர் Sir Max Hastings தன்னுடைய Daily Mail கட்டுரையில் கேட்டார்: "எனவே பிரிட்டனைக் காப்பாற்ற போதுமான இரக்கமற்ற தன்மையை டேவிட் காமரோன் கொண்டுள்ளாரா?"

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பொதுநலச் செலவுகளில் முன்னோடியில்லாத தாக்குதல்களுக்கு தன்னுடைய அரசாங்கம் தயாரிக்கிறது என்பதைக் கூறவேண்டும் என்று ஹேஸ்டிங்க்ஸ் கோரினார். "அரசாங்க செலவு தற்போதைய மட்டங்களில் இருந்தால், வரிவிதிப்பில் 20 சதவிகித உயர்வு தேவைப்படும். அத்தகைய பொறுத்துக் கொள்ள முடியாத சுமையில் இருந்து தப்பிக்க, செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.

"எந்த அளவிற்கு காமரோன் ஊதி நிற்கும் பொதுத் துறையை இரக்கமற்ற முறையில் சேதப்படுத்துகிறார் என்பதை வரலாறு தீர்மானிக்கும். கடந்த ஆண்டுகளாக தனியார் துறை வருமானங்களைவிட அதிகமாக உயரும் ஆறு மில்லியன் அரசாங்க ஊழியர்களின் ஊதியங்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

"ஓய்வூதியம் பெறும் வயதுகள் மிகக் கடுமையான பொதுத்துறை வேலைகளைத் தவிர மற்றவற்றிற்கு உயர்த்தப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட நலன்கள், குறியீட்டு பிணைப்புடைய ஓய்வூதியங்கள் அகற்றப்பட வேண்டும். வரி செலுத்துபவர்கள் பணத்தில் வருமானத்தை உடையவர்கள் BBC யின் உயர்மட்ட அதிகாரிகளில் இருந்து அஞ்சல் ஊழியர் வரை, இடர்பாட்டின் ஒரு பங்கை ஏற்க வேண்டும்; இது ஏற்கனவே தனியார் துறை நிறுவனங்களில் அனைவர் மீதும் கிட்டத்தட்ட சுமத்தப்பட்டுவிட்டது.

"1997ல் இருந்து கோர்டன் பிரெளவுண், அரசாங்க தொழிலாளர் தொகுப்பில் 600,000 பேரை சேர்த்துள்ளார் பலர் பெயரளவிற்குத்தான் வேலை செய்கின்றனர். காமரோனுடைய இலக்கு அதே அளவிற்கேனும் அத்தகைய வேலைகளைக் குறைக்க வேண்டும்."

அரசாங்கம் குறைப்புக்களால் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத பூசல்களை தோற்கடிக்க தயாராக இருக்க வேண்டும் என்று கோரிய ஹேஸ்டிங்கஸ், "இதையொட்டி சீற்றக் கூக்குரல்கள், எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் வரும். ஆனால் தொழிற்சங்கங்கள் எதிர்த்து நிற்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் பிரிட்டன் நீண்ட கால செலுத்துமதிகளை அடைக்கமுடியும்."

தேசிய சுகாதார சேவையை (NHS) சுற்றி குறைப்புக்கள் வராமல் வேலிபோடுவேன் என்னும் காமரோனின் உறுதிமொழி பதவிக்கு வந்த பின்னர் அவர் மீறும் முதல் உறுதிமொழியாக இருக்க வேண்டும். இந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது போல், உள்நாட்டு நிதிய நெருக்கடி மிகத் தீவிரம், அதன் விளைவுகளில் இருந்து 1,560,000 தேசிய சுகாதார சேவை ஊழியர்களை வெளியேற்றுவதைவிட அதிகமானது."

ஹேஸ்டிங்ஸ் கோரும் மற்ற தாக்குதல்கள் வழிவகை சோதிக்கும் இலவச பஸ் அனுமதிகளும், வயதானவர்களுக்கு குளிர்கால எரிபொருள் படிகள் கொடுத்தல், நகரவை வரிவிதிப்பிற்காக வீடுகள் மதிப்பை பரிசீலித்தல், மதிப்புக் கூட்டு வரியை 20 சதவிகிதத்திற்கு உயர்த்துதல் ஆகியவற்றுடன் உணவு, உடைக்கு கொடுக்கப்படும் தொகைக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஹேஸ்டிங்ஸ் தன்னுடைய பெரும் வெறுப்பை இன்னும் பிரிட்டிஷ் சமூகத்தில் இருக்கும் "தீய சோசலிசக் கொள்கைகள்" என்று அவர் குறிப்பிட்டதன் மேல் வைத்துக் கொண்டார். ஒரு காமரோன் அரசாங்கம் "மில்லியன் கணக்கான மக்கள் ரொக்கம், சலுகைகள், சிறப்பு உரிமைகள் என்று தங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் என்ற நிலையை அகற்ற வேண்டும்."

ஒவ்வொருவரும் அவரவர் பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்தில் கடுமையாகப் போரிட வேண்டும்; தெருக்களில் கூட வந்து மாற்றத்திற்கு போராட வேண்டும். இதற்கு எஃகு போன்ற உறுதி வேண்டும், அரசாங்கம் தன் போக்கில் தளர்வுறாமல் நிற்க வேண்டும்.

"பல தசாப்தங்களாக நாம் மிருதுவாகப் போய்விட்டோம். கடுமையான விருப்புரிமைகள் என்பவை நமக்கு இல்லாமல் போயின. தற்காலிகமாகக் கூட ஒவ்வொரு ஆண்டும் மேலும் சிறப்பைப் பெறுவோம் என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் போகும்; நம்முடைய "பாதுகாக்கும் சமூகத்தில்" எல்லோரும் வெற்றி பெற வேண்டும், பரிசு பெற வேண்டும் என்ற தீய சோசலிசக் கோட்பாடுகளை முறிக்கும் வரை."

"காமரோன் தேசிய ஒற்றுமை அல்லது சமூக இணக்கம் என்பது பற்றிய நம்பிக்கைகளை தாட்சர் பெற்றிருந்ததைவிட அதிகம் கொள்ள முடியாது. அவர் செய்யவேண்டியது ஏராளமான உறுதியான நலன்களுக்கு காயம் ஏற்படுத்த வேண்டும்; அவை ஆரம்பம் முதல் இறுதி வரை அவருடன் போரிடும்." என அவர் முடிவிற்கு வருகின்றார்.