World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US pressure builds ahead of talks with Iran in Vienna

ஈரானுடன் வியன்னாவில் பேச்சு வார்த்தைகளுக்கு முன்பாக அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிக்கிறது

By Peter Symonds
14 October 2009

Use this version to print | Send feedback

வரும் திங்களன்று ஈரானின் செறிவூட்டம் செய்யப்பட்ட யுரேனிய இருப்புக்கள் பற்றி சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற இருக்கையில், ஒபாமா நிர்வாகம் தெஹ்ரான் மீது அழுத்தத்தை தீவிரமாக்கிக் கொண்டிருக்கிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான புதிய தடைகளைச் சுமத்த ஆதரவு திரட்டுவதுதான் இந்த வாரம் ஐரோப்பாவிற்கு அமெரிக்காவின் அரச செயலாளர் ஹில்லாரி கிளின்டனின் பயணத்தில் மத்திய விடயமாக இருந்தது.

பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கிளின்டன் அக்டோபர் 1ம் தேதி P5+1 என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகியவற்றுடன் நடத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானிடம் இருந்து நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக எச்சரித்தார். "வெறும் சொற்கள் போதாது, சர்வதேச சமூகம் ஈரான் தன்னுடைய சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப வாழத் தயாரிக்கிறது என்று சான்றுகள் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் கால வரையறையற்றுக் காத்திராது" என்றார் அவர்.

கடந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்் ரொபேர்ட் கேட்ஸ் "இன்னும் கடுமையான தடைகள் ஈரானுக்கு எதிராக வரும்" என்ற இடைவிடா அச்சுறுத்தல்களை கொடுத்து வந்ததற்கு இடையேதான் ஒபாமா நிர்வாகம் ஈரானுடன் பேச்சுக்களை நடத்தும் தொடர்பில் இருந்தது. ஆத்திரத்தை தூண்டுகின்ற புதிய நடவடிக்கைகள் பற்றிய விவாதத்தில் ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் விற்பதை முடக்கும் வகையிலான தடையும் அடங்கியிருந்தது; மாபெரும் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் இருந்தாலும், ஈரானில் சுத்திகரிக்கப்படும் திறமை குறைவாக இருப்பதால் அது தன்னுடைய பெட்ரோல் தேவையில் 40 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளது.

இந்த அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் திங்களன்று நிதிச் சேவைகளை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ஈரானின் Bank Mellat, Islamic Republic of Iran Shipping Lines ஆகியவற்றுடன் அனைத்து வணிக நடவடிக்கைளும் முடிவிற்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது; ஈரானின் அணுசக்தி மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுடன் அவைகளுடைய ஈடுபாடு தான் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. ஐ.நா. தீர்மானங்களின் கீழ் என்பதற்கு பதிலாக இந்தத் தடை ஒருதலைப்பட்சமாக சுமத்தப்பட்டுள்ளது; இதற்குக் காரணம் ஈரானை சர்வதேச நிதிய, வங்கி நடைமுறையிலிருந்து துண்டித்துவிடுவதாகும்.

கிளின்டனுடைய பயணத்தின் முக்கிய நோக்கம் இன்னும் கடுமையான தடைகள் ஈரான்மீது சுமத்துவதற்கு ரஷ்யாவின் ஆதரவை ஒருங்கிணைப்பது ஆகும். கடந்த மாதம் ஒபாமா, திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைதிட்டம் பற்றிய திருத்தத்தை அறிவித்து, ரஷ்யா கடுமையாக எதிர்த்திருந்த செக் குடியரசு மற்றும் போலந்தில் அமைக்கப்படவிருந்த தளங்களையும் நிறுவப்போவதில்லை என்றார். இதற்கு பிரதியுபகாரம் என்ற தெளிவான செயலில் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வெடேவ் மொஸ்கோ ஈரானுக்கு எதிரான புதிய தண்டனை நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்று குறிப்புக் காட்டும் வகையில் "சில விஷயங்களைப் பொறுத்தவரையில், தடைகள் தவிர்க்க முடியாதவை" என்றார்.

நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கிளின்டனுடன் வந்திருந்த ரஷ்ய வெளியுறவு மந்திரி Sergei Lavrov பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இன்னும் அதிக தடைகளுக்கு ஆதரவு கொடுப்பதில் மாஸ்கோ கொண்டிருக்கும் தயக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்: "தற்போதைய நிலையில் அனைத்து சக்திகளும் பேச்சுவார்த்தை வழிவகைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அச்சுறுத்தல்கள், தடைகள், அழுத்தங்களுக்கான அச்சுறுத்தல்கள் ஆகியவை ஆக்கபூர்வமானவைகளுக்கு எதிரானவை என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம்" என்றார்

ஆனால் அமெரிக்க அதிகாரிகள் கிளின்டனுக்கும் மேட்வெடேவிற்கு இடையே நடந்த கூட்டம் ஒன்றில் தனிப்பட்ட உத்தரவாதம் பெறப்பட்டது என்று கூறுகின்றனர். ரஷ்ய ஜனாதிபதி "ஜெனீவா முடிவுகள் [அக்டோபர் 1 பேச்சுக்கள்] பற்றி மகிழ்ச்சி அடைந்தாலும், ஈரான் அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதுடன், அவ்வாறு செய்யவில்லை என்றால் தடைகள் வரும் என்பதில் உறுதியாக தெளிவாக உள்ளார்" என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி நிருபர்களிடம் கூறினார்.

ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் ஈரான் அதனிடமிருக்கும் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் அனைத்தையும் ரஷ்யாவிற்கு கூடுதல் செறிவூட்டல் செய்வதற்கு அனுப்புவதையும், அதன் பின்னர் தெஹ்ரானிலிருக்கும் ஒரு ஆய்வு அணு பிளப்பு கருவிக்காக பிரான்சில் அவற்றை எரிபொருள் தண்டுகளாக (fuel rods) வடிவமைத்து மருத்துவ ஐசோடெப்ஸைத் (Medical isotopes: Nuclear medicine is a branch or specialty of medicine and medical imaging that uses radioactive isotopes (radionuclides) and relies on the process of radioactive decay in the diagnosis and treatment of disease) தயாரிப்பதற்கு கொள்கை அளவில் ஏற்று இருப்பதாக கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால், இந்த பூர்வாங்கத்திட்டம் "ஈரான் ஒரு அணுகுண்டைத் தயாரிக்கப் போதுமான செறிவு பெற்ற யுரேனியத்தைக் கொண்டிருக்கிறது" என்ற பரபரப்பான கூற்றுக்களுக்கு முடிவு ஏற்படும். உண்மையில் தெஹ்ரான் யுரேனியத்தை 3.5 சதவிகிதம் வரைதான் செறிவூட்டியுள்ளது--இது அணுவாயுதங்கள் செய்யத் தேவையான 80-90சதவிகிதத்தில் இருந்து பெரிதும் குறைந்தது ஆகும்--அத்தோடு அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடும் திட்டம் ஏதும் இல்லை என்றும் பல முறை கூறிவந்துள்ளது.

திங்களன்று வியன்னாவில் நடக்கவிருக்கும் அடுத்த கூட்டம் இத்திட்டத்தின் விவரங்களை முடிவு செய்ய ஒழுங்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தான் ஒரு வலிந்த தாக்குதல் நிலைப்பாட்டை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்கா தெளிவாக்கியுள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் அமெரிக்கா இந்த உடன்பாட்டை ஈரானின் விருப்பங்கள் பற்றிய முக்கிய சோதனை என்று கருதுவதாகக் கூறினார். "இதை அவர்கள் நிராகரித்தால், "இந்த நபர்கள் உண்மையில் அக்கறையாக இல்லை" என்ற பொருளைத்தான் தரும். ஈரானின் அணுசக்தி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Ali Shirzadian பேச்சுக்கள் முறிந்துபோனால், "ஈரான் [தெஹ்ரான் அணுஉலைக்காக] 20 சதவிகித மட்டத் தேவைக்காக அதனுடைய யுரேனிய செறிவூட்டலைச் செய்துகொள்ளும்" என்று எச்சரித்தார்.

ஜெனீவா பேச்சுக்களில் ஈரான் தன்னுடைய சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் கோம் (Qom) நகரத்திற்கு அருகேயுள்ள செறிவூட்டும் ஆலையை IAEA வின் ஆய்வாளர்களுக்கு காண்பிப்பதாக ஒப்புக் கொண்டது. ஜனாதிபதி ஒபாமா செப்டம்பர் 25 நடைபெற்ற G20 உச்சிமாநாட்டை தெஹ்ரான் மீது அழுத்தத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கப் பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் செய்தி ஊடகங்கள் ஈரானின் "இரகசிய" ஆலை அது அணுவாயுதங்களை தயாரிக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதைக் காட்டுகிறது என்று கண்டித்தன. ஈரானோ ஏற்கனவே IAEA விடம் நான்கு நாட்கள் முன்னதாகவே தன் அணுசக்தி நிலையம் பற்றி அறிவித்துவிட்டது; அணுபரவா உடன்பாட்டின்கீழ் ஒரு அணுஆலை நடைமுறைக்கு வருவதற்கு 180 நாட்களுக்கு முன்பு அது பற்றிய குறிப்பு தரப்பட வேண்டும்.

IAEA கோம் நிலையத்தை முதல் தடவையாக ஆய்வு செய்ய இருப்பது அக்டோபர் 25 அன்று என திட்டமிடப்பட்டுள்ளது. P5+1 க்கும் ஈரானுக்கும் இடையே இன்னும் ஒரு உயர்மட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் இறுதிக்குள் நடக்க இருக்கிறது. ஜனாதிபதி ஒபாமா டிசம்பர் மாதம்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான இறுதி காலக்கெடு என்று அறிவித்துள்ளார். நேற்று மொஸ்கோவில் கிளின்டன் வலியுறுத்தியதாவது: "கணிசமான முன்னேற்றம் இல்லை என்றால், கூடுதலான தடைகளுக்கு ஆதரவை பெறுவதற்கு சர்வதேச கருத்தைத் திரட்ட முற்படுவோம்."

ஏற்கனவே வாஷிங்டன் இருக்கும் தடைகளை செயல்படுத்துவதிலும் புதிய தடைகளுக்கு வகை செய்ய தீவிர ராசதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்ற உண்மை, ஒபாமா நிர்வாகம் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் கடுமையான தடைகளை சுமத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதற்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. புதிய தடைகள் சுமத்தப்படுதல், குறிப்பாக ஈரானுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையை முடக்கும் விதத்தில் தடை என்பது ஈரானுடனான மோதலை விரைவில் தீவிரமாக்கிவிடும்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது பற்றி வேண்டுமென்றே மிருதுவாக நடந்து கொண்டாலும், ஒபாமா நிர்வாகம் அந்த விருப்பத்தைக் கைவிட்டுவிடவில்லை. ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று பலமுறை எச்சரித்துள்ள இஸ்ரேலிய அரசாங்கத்துடன் அமெரிக்க நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவங்கள் தற்பொழுது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன --இதற்கு அடையாள பெயர் Juniper Cobra: இது குறிப்பாக போர் மூண்டால் ஏவுகணைப் பாதுகாப்பு முறையை (Missile defence systems) சோதிப்பதற்காக நடத்தப்படுகிறது. 1,000 அமெரிக்கத் துருப்புக்களுக்கும் மேலாகவும், 15 அமெரிக்க ஏவுகணை போர்க்கப்பல்களும் இதில் பங்குபற்றுகிறது.

இராணுவ விருப்பங்கள் அமெரிக்க செய்தி ஊடகத்திலும் வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது. ஞாயிறு லொஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸில் "ஈரான் அணுசக்திப் பிரச்சினைக்கு முன்னதாக ராஜதந்திரம்--தற்போதைக்கு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணு நிலையங்களைத் தாக்கும் அவசரத் திட்டம் பற்றி விரிவாக விவாதித்துள்ளது. பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு செய்தித்தாள் இத்திட்டங்களில் பல ஏவுகணைத் தாக்குதல்களும் குண்டுவீச்சுக்களும் இருக்கும் என்றும், சாத்தியப்பாடாக, சிறப்புப் படை நடவடிக்கைகள்கூட ஈரானுக்குள் துல்லியமாக இலக்கை தாக்குவதற்கு தகவல் பெறுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் தெரிகிறது.

"[ஈரானின் அணுத் திட்டத்தை] பல ஆண்டுகள் பின்னடைவிற்கு உட்படுத்த திறமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மகத்தான, மிகவும் மகத்தான முயற்சி தேவை" என்று ஒரு முன்னாள் மூத்த அமெரிக்க உறவுத்துறை அதிகாரி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் கூறினார். ஈரானின் நிலத்தடி நிலையங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய புதிய வகை பங்கர்-சிதைப்பு குண்டுக்களின் வளர்ச்சி பற்றிக் கட்டுரை உயர்த்திக் காட்டியிருந்தது. நேற்று ஈரான் இலக்கு என்பதை மறுத்துப் பேசிய பென்டகன், Massive Ordnance Penetrator எனப்படும் மகத்தான வெடிமருந்து ஊடுருவும் செயற்பாட்டைக் கொண்ட 17 டன் குண்டு, B-2 Stealth குண்டுவீசும் விமானத்தில் பொருத்தக்கூடியது விரைவில் வெளிவந்து விடும் என்றார்.

"பேச்சுவார்த்தைகள்" பற்றி ஒபாமாவின் கருத்து ஒரு புறம் இருக்க, அடுத்த மூன்று மாதங்களில் ஈரானுடன் மோதல் விரைவாக அதிகரிக்கும் என்பதைத்தான் அடையாளங்கள் காட்டுகின்றன. புஷ் நிர்வாகத்தின் ஈராக் படையெடுப்பு போலவே, ஈரான் அணுவாயுதக் கிடங்கைக் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் வளம் மிகுந்த மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் பொருளாதார, மூலோபாய மேலாதிக்கத்தை அமெரிக்கா முன்னேற்றிக் கொள்ளுவதற்காக கூறப்படும் போலிக் காரணங்கள்தான். அதன் மிகப் பெரிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களால் ஈரான் ஒரு முக்கிய இலக்காக இருப்பதுடன், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு அருகேயும் அதன் மூலோபாய நிலை இருப்பதும் போலிக்காரணத்தை நாட வைத்துள்ளது.