World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani military launches offensive into South Waziristan

பாக்கிஸ்தானிய இராணுவம் தெற்கு வஜீரிஸ்தானில் தாக்குதலைத் தொடங்குகிறது

By James Cogan
19 October 2009

Use this version to print | Send feedback

இரண்டு பாக்கிஸ்தானிய இராணுவப் பிரிவுகள், ஜெட் போர் விமானங்கள், துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுடைய ஆதரவுடன் தெற்கு வஜீரிஸ்தானின் பழங்குடிப் பகுதியில் தலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இடங்களில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த தாக்குதலை சனி அதிகாலையில் ஆரம்பித்தன. குறைந்தது 30,000 துருப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான திட்டமிடல் துணைநபர்களைக் கொண்ட இப்படை ஒபாமா நிர்வாகத்தின் "ஆப்-பாக்" (AfPak) போரில், பாக்கிஸ்தான்-ஆப்கானிஸ்தான் என்ற இரு பகுதிகளிலும் மிக அதிக துருப்புக்களை கொண்ட இராணுவ நடவடிக்கை ஆகும்.

கரடுமுரடான அப்பகுதியில் உள்ள சாலைகள், அங்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. ஏராளமான டாங்குகளும், கவச வாகனங்களும் அப்பகுதிக்குள் மூன்று புறத்தில் இருந்து குவிகின்றன. வடக்கில், மக்கீன் நகரைச் சுற்றிவளைத்து துருப்புக்கள் நகர்கின்றன. கிழக்கில் இருந்து ஒரு கிராமங்களின் இணைப்பை அடையும் வகையில் லாட்டா நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் துருப்புக்கள் நகர்ந்துள்ளன. அங்கு தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசுத் தன் தலைமையகத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. தெற்கில் இருந்து துருப்புக்கள் தெற்கு வஜீரிஸ்தானின் மையப்பகுதியில் இருக்கும் கனிகுராம் சிறுநகரத்தை நோக்கிச் செல்லுகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வஜீரிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளன. தப்பித்துச் செல்ல சாத்தியமான பாதையை மூடிவிடுவது இதன் நோக்கம் ஆகும்.

இராணுவ தளபதிகள் செய்தியாளர்களிடம் ஆறு முதல் எட்டு வாரங்கள் நடவடிக்கைகள் இருக்கும் என்றும் பகுதியில் பல இடங்களுக்கு செல்ல முடியாமல் செய்துவிடும் குளிர்கால பனிப்பொழிவிற்கு முன் இந்நடவடிக்கை முடிந்துவிடும் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். குறைந்தளவு துருப்புக்களைக் கொண்ட 2004ல் நடைபெற்ற தாக்குதல் பெரிய உயிரிழப்புக்களை இராணுவம் பெற்ற நிலையில் சில நாட்களிலேயே தேக்க நிலையை அடைந்தது. இது பாக்கிஸ்தான் அரசாங்கம் தலிபானுடன் மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒரு அவமானம் தரும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் முடிவுற்றது.

தற்போதைய தாக்குதலின் கூறப்படாத இராணுவ இலக்கு அப்பகுதியில் இருக்கும் தலிபான் மற்றும் பழங்குடிப் போராளிகள் குறைந்தது 10,000 முதல் 15,000 வரை கொல்லப்பட வேண்டும் என்பதாகும். இருபுறத்திலும் பெரும் பொதுமக்கள் இறப்புக்கள் இருக்கக்கூடும் என்றாலும் இராணுவத்தின் இழப்புக்களும் இரு புறமும் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட 150,000 மக்கள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர் என்றாலும், பெரும்பாலும் வறிய பழங்குடி விவசாயிகளான 350,000 குடிமக்கள் இராணுவத்தின் வலையில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியின் பாக்கிஸ்தானிய அரசாங்கம் இரத்தம் சிந்துவதை செயல்படுத்துவதில் இராணுவம் தடையற்று இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. போர்ப்பகுதியில் எந்த செய்தியாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. தலிபான் மற்றும் இராணுவ இறப்புக்கள், சாதாரண மக்கள் இறப்புக்கள் உட்பட போரைப் பற்றிய எந்த தகவலும் முற்றிலும் அரசாங்கமும் இராணுவ செய்தியாளர்களும் வெளியிடும் பிழையான தகவலாகவும் மற்றும் பிரச்சாரமாகவும்தான் இருக்கும்.

இச் செயற்பாட்டின் நோக்கம் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் அக்டோபர் 11 ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத்தின்மீது தலிபான் தாக்குதலைத் தொடர்ந்து அப்பட்டமாக கூறப்பட்டது. வஜீரிஸ்தானில் தாக்குதல் விரைவில் தொடங்கும் என்று குறிப்புக் காட்டிய மாலிக் அறிவித்தார்: "ஸ்வாட்டில் உங்களுக்கு என்ன செய்தோமா அதையே இங்கும் செய்வாம் என்ற செய்தியை தலிபான்களுக்கு கொடுக்க நான் விரும்புகிறேன்."

வட மேற்கு எல்லைப்புற மாகணத்தின் (NWFP) ஸ்வாட் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நடந்த தாக்குதல்களில் இராணூவம் கிட்டத்தட்ட 2,000 தலிபான் தொடர்புடைய இஸ்லாமிய இயக்கத்தின் விசுவாசிகளைக் கொன்று தங்கள் வீடுகளில் இருந்து இரண்டு மில்லியன் மக்கள் ஓடுமாறும் செய்தது. அப்பகுதி இப்பொழுது நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் உள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கொலைக்குழுக்கள் டசின்கணக்கான தலிபான் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டவர்களை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாக்கிஸ்தானிய இராணுவம் வஜீரிஸ்தான் தாக்குதல் பற்றி முதலில் கொடுத்துள்ள தகவல்கள் எதிர்பார்த்தபடி ஊக்கம் தரும் வகையில் உள்ளன. தெற்கிலும், கிழக்கிலும் இலக்கு வைக்கப்பட்ட சிறுநகரங்கள் அதிகம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் வீழ்ச்சியடைந்துவிட்டன. விமானத் தாக்குதல்களில் ஆறு தலிபான் விமானத் தாக்குதல் எதிர்ப்பு இயந்திரத் துப்பாக்கி நிலைகளை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

குறைந்தது 60 தலிபான் போராளிகள் முதல் நாள் போரில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறுகிறது. இராணுவத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமுற்றனர். ஒரு இராணுவ செய்தித் தொடர்பாளர் "இப்பகுதி முழுவதும் கையிலிருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வகைகளும் நிலக்கண்ணிவெடிகளும் அதிகமாக உள்ளன; ஆனால் போராளிகளிடம் இருந்து எதிர்ப்பு அதிகமாக இல்லை." எனக்கூறினார்.

CNN க்கு தொலைபேசி மூலம் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதற்கு முற்றிலும் மாறான கருத்தைக் கூறினார். ஒரே ஒரு போராளியைத்தான் காணவில்லை என்றும் குறைந்தது 68 துருப்புக்கள் அப்பகுதி முழுவதும் நடைபெற்ற பெரும் மோதலில் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார். பாக்கிஸ்தானின் Dawn ஏடு 1,500 ஆப்கானிய தலிபான் போராளிகள் தெற்கு வஜீரிஸ்தானுக்குள் தங்கள் பாக்கிஸ்தானிய நண்பர்களுக்கு வலுச்சேர்க்க வந்துள்ளதாக தகவலைப் பெற்றுள்ளது.

அமெரிக்க, பாக்கிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையேயான கூலிப்படை உறவுகளின் வரலாற்றில் சமீபத்திய அத்தியாயம்தான் வஜீரிஸ்தான் தாக்குதல் ஆகும். 2001ல் இருந்து இஸ்லாமாபாத் நாட்டின் வட மேற்கில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களுக்கு பரிவுகாட்டும் இனவழி பஷ்டூன் பழங்குடி மக்கள் மீது உள்நாட்டுப் போரை நடத்தத் தயாராக உள்ளது. அமெரிக்க அரசியல், இராணுவ, நிதிய உதவிகள் நாட்டின் ஊழல் மிகுந்த ஆளும் உயரடுக்கிற்கு தொடர்ந்து வருவதைக் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் நோக்கம் ஆகும்.

இத்தாக்குதலை தயார் செய்வதில் அமெரிக்க இராணுவம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் வஜீரிஸ்தான் பகுதியில் ஆளில்லாத பிரிடேட்டர் ட்ரோன்கள் நோட்டம் பார்த்துள்ளன. இவை பல கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்புக்களை போராளிகள் நடமாட்டம், நிலைப்பாடு ஆகியவற்றை கண்காணித்துள்ளதுடன், இதைத்தவிர தலிபான் தலைவர்கள் என்று கருதப்பட்டவர்கள் மீது ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளது. ஒரு பிரிடேட்டர் முன்னாள் தலிபான் தலைவரான பைதுல்லா மெசுத்தை ஆகஸ்ட்டில் நடத்திய தாக்குதலில் கொன்றது.

நியூயோர்க் டைம்ஸ் கருத்துப்படி அமெரிக்க இராணுவம் சமீபத்தில் பாக்கிஸ்தானிய விமானப்படைக்கு புதிய தோற்ற வடிவமைப்பு முறைகள் ஆகியவற்றைக் கொண்ட F 16 போர் விமானங்களை கொடுத்து அதன் இலக்குகளைத் தாக்கும் திறனை அதிகரித்துள்ளது. பல மாதங்கள் இதற்கு முன்னதாக நடத்தப்பட் விமானத்தாக்குதல்கள், பீரங்கித் தாகற்குதல்களை அடுத்து இது வந்துள்ளது. அவை இராணுவத் தளத்திற்கு அருகே இருக்கும் தலிபானின் பாதுகாப்பு நிலைகளை வலுவிழக்க வைக்கும் நோக்கத்தை கொண்டவை. அதே நேரத்தில் தரைத்தாக்குதலுக்கு முன்பு இயன்றளவு போராளிகளை முயன்று கொல்ல வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது.

துருப்புக்கள் முன்னேறுகையில், தெற்கு வஜீரிஸ்தானத்திற்குள் 100 இடங்கள் விமானத்தின் மூலம் அதிகசக்தி உடைய குண்டுகள், வெடி குண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நவீனப்படுத்தப்பட்ட அமெரிக்க விமானத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆயுதங்களால் அழிக்கப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தானுக்கு ஆயுதங்களை விரைவாக அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதனால், பாக்கிஸ்தானிய விமானப்படை 24 மணிநேரமும் தரைச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக விமானத் தாக்குதல்களை இந்தக் கொலைகார நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுத்தமுடியும்.

அமெரிக்க இராணுவம் தாக்குதலை திட்டமிட்டு, ஒருங்கிணைப்பதில் கொண்டுள்ள மத்திய பங்கு அமெரிக்க மத்திய தலைமையகத்தின் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ், இஸ்லாமாபாத்திற்கு ஞாயிறன்று பாக்கிஸ்தான் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை கூற வந்ததில் இருந்து அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பெட்ரீயஸுடன் முன்னாள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் கெர்ரியும் சேர்ந்து வந்தார். அவர் பாக்கிஸ்தானிய அரசாங்கத் தலைவர்களிடம் இராணுவத்திற்கு அல்லாத $7.5 பில்லியன் உதவி அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொடுக்கப்பட இருப்பதின் விவரங்களை விளக்கினார். விவாதத்திற்கு உரிய அமெரிக்கக் கோரிக்கைகளில் பாக்கிஸ்தான் இராணுவம் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரம் மற்றும் வஜீரிஸ்தானில் உள்ள பழங்குடி பகுதிகளைத் தாக்க வேண்டும் என்பது அடங்கியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை முல்லா ஒமரின் கீழ் செயல்படும் முக்கிய ஆப்கானிய தலிபான் தலைமை குவெட்டாவில் இருந்துதான் செயற்படுகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளது.

வஜீரிஸ்தான் தாக்குதலும் பரந்த அமெரிக்க சதித்திட்டங்களும் பாக்கிஸ்தானை இன்னும் சீர்குலைக்கத்தான் உதவும். இராணுவம் ஏராளமான தலிபான்களை கொல்லுவதில் வெற்றி அடைந்தாலும், பலரும் தப்பிப் பிழைத்து பல ஆண்டுகளுக்கு கெரில்லா வகை போரைத் தொடர்வர். பாக்கிஸ்தான் முழுவதும் மற்றும் சர்வதேசரீதியாகவும் இதன் முடிவு மிருகத்தனமான முறையில் ஒரு தொடர் பதிலடி என்றவகையில் பல இஸ்லாமிய அமைப்புக்களிடம் இருந்து வரும். அவை இப்பொழுது அரசாங்கத்துடனும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களுடனும் போரில் ஈடுபட்டிருப்பதாகக் கருதுகிறன. கடந்த இரண்டே வாரங்களில் முந்தைய தாக்குதல்களுக்கான பயங்கரவாத பதிலடிகள் 200க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளன.

பல பொதுமக்கள் வஜீரிஸ்தானில் இருந்து அடைக்கலம் நாடியுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாண சிறுநகரான டாங்கில் இருந்து ஒரு பாக்கிஸ்தானிய செய்தியாளர் BBC இடம் கூறினார்: "இராணுவம் விரும்பும் அனைத்து போராளிகளையும் கொல்லட்டும். அரசாங்கம் ஏற்கனவே புதிய, இன்னும் சக்தி வாய்ந்தவர்கள் அவர்களுக்கு பதிலாக வருவதற்கான விதைகளை வைத்துள்ளது." என்றார்.