World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Reports of indiscriminate bombing in South Waziristan

தெற்கு வஜீரிஸ்தானில் கண்மூடித்தனமான குண்டுவீச்சு பற்றித் தகவல்கள்

By James Cogan
21 October 2009

Use this version to print | Send feedback

தலிபான் மற்றும் மெசுத் பழங்குடி போராளிகளுக்கு எதிராக தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் பாக்கிஸ்தானின் முதல் ஐந்து நாட்கள் தாக்குதல் மிகக் குறைந்த இராணுவ ஆதாயங்களைத்தான் தோற்றுவித்துள்ளன; அதே நேரத்தில் மனிதாபிமான வகையில் பெரும் பீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் போர்ப்பகுதியில் இருந்து தப்பி ஓடுவதால் பெரும் நெருக்கடி வளர்ந்துள்ளது.

தெற்கு வஜீரிஸ்தானின் வடக்குப் பகுதியில் இராணுவம் அதன் தளமான Razmak ல் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கும் முக்கிய தலிபான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சிறு நகரமான Makeen ஐ நோக்கி முன்னேறுவதில் அதிக முன்னேற்றம் அடையவில்லை. மற்றொரு சிறு நகரமான Ladha விலும் தலிபான்கள் மற்றொரு வலுவான தளத்தைக் கொண்டுள்ளனர்; இது மக்கீனில் இருந்து தெற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. இரு சிறு நகரங்களும் வான்வழி மற்றும் தரைத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் இருந்து வெளியே செல்லும் சாலைகள் முழுவதும் இராணுவ சாலைத்தடைகளால் மூடப்பட்டு பகுதி முழுவதும் இராணுவ ஊரடங்கு உத்தரவின்கீழ் உள்ளது. தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தப்பியோட முயலும் சாதாரணக் குடிமக்கள் போர்ப்பகுதியில் இருந்து தொடர்ந்த தாக்குதல் என்ற அச்சத்தின்கீழ் நடந்து வெளியேறும் கட்டாயத்தில் உள்ளனர். Dawn செய்தித் தாள் லாதாவின் மக்களைத் தொடர்பு கொண்டபோது, சாலைகளில் 12 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கொல்லப்பட்டதாகவும், இது விமானத் தாக்குதலினால் இருக்கும் என்றும் கூறினர்.

சனிக்கிழமையன்று தாக்குதல் தொடங்கு முன் குறைந்தது 112,000 சிவிலிய குடிமக்கள் ஏற்கனவே தெற்கு வஜீரிஸ்தானில் இருந்து தப்பியோடி, ஐ.நா. அகதிகள் ஆணையத்தில் பதிவு செய்திருந்தனர். ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பார்பாரா பீர்லிங், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் நேற்று "அகதிகள் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் பூசல் நீடிக்கையில் 250,000 எனப்போகும்" என்று கூறினார். பல்லாயிரக்கணக்கான மற்ற குடிமக்கள், தங்கள் வீடுகளை விட்டு ஓடிவந்தவர்கள், பகுதிக்குள் பொறி போல் அகப்பட்டுக் கொண்டு உணவு, உறைவிடத்திற்கு வழியில்லாமல் தத்தளிக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

தன்னுடைய 90 வயது தாயாரை மக்கீனில் இருந்து தூக்கிக்கொண்டு தப்பித்து வந்த கஷீத் கான் கார்டியன் நிருபர்களிடம் திங்களன்று Dera Ismail Khan நகரத்தில் ஒரு உதவி நிலையத்தில் கூறினார்: "அவர்கள் சாதாரண மக்களை இலக்கு வைக்கின்றனர். நானே அதை நேரில் பார்த்தேன். வாகனங்களையும் வீடுகளையும் அவர்கள் தாக்கினர். மக்கீனில் முக்கிய பஸ் நிலையத்தையும் தகர்த்தனர்." மற்றொருவர் கூறினார்: "ஒரு தலிபான் கூட இலக்கு வைக்கப்படவில்லை. சாதாரண மக்கள்தான் தாக்கப்படுகின்றனர்."

Fazlu Rehman என்னும் Dera Ismail Khan ல் இருந்து இடம் பெயர்ந்த நபர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்: "ஏராளமாள குண்டுவீச்சுக்கள், வீடுகள் மீது, மசூதிகள் மீது, மத பள்ளிகள் மீது, அனைத்தின் மீதும் நடக்கின்றன."

வார இறுதியில் மக்கீனில் இருந்து உறவினர்கள் வந்திருந்த ஒரு டாக்டர் BBC இடம் கூறினார்: "வஜீரிஸ்தானில் குளிர்காலம் மிகவும் கடுமையாக இருக்கும்; அது இன்னும் பொறுக்க முடியாத குளிர் என வருவதற்கு முன்பே மக்கள் வெளியேற முற்பட்டுள்ளனர். என்னுடைய குடும்பம் சில நாட்களுக்கு முன்பு வந்தது. அனைவரும் நடந்தே வந்ததால் அது ஒரு கடினமான பயணமாகும். ... குண்டு வெடிப்புக்கள், ஊரடங்கு உத்தரவுகளை மீறி அவர்கள் வரவேண்டியதாயிற்று. இப்பொழுது என்னுடன் உள்ளார்கள்; அனைவரும் நலம்; ஆனால் சிலர் குளிர்காய்ச்சலினாலும் களைப்பினாலும் கஷ்டப்படுகின்றனர். எங்கள் வீட்டில் இப்பொழுது 33 பேர் உள்ளனர்.... வஜீரிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் பல காலம் நீடித்தால் நாங்கள் எப்படிச் சமாளிப்பது?'

துருப்புக்கள் தெற்கு வஜீரிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள சிறு நகரமான Jandola வில் இருந்து முன்னேற முயல்கின்றன. அதில் அவர்கள் கோட்கை கிராமத்தைச் சுற்றியுள்ள போராளிகளுடன் பெரும் பூசலில் ஈடுபட்டுள்ளனர்; இந்த இடம் பாக்கிஸ்தானிய தாலிபனின் புதிய தலைவரான ஹகிமுல்லா மெசுத்தின் பிறந்த இடம் என்பதால் அடையாள முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒரு இராணுவச் செய்தித் தொடர்பாளர் Dawn செய்தித்தாளிடம் நேற்று கூறினார்: "கோட்கைக்குள் துருப்புக்கள் இனிமேல்தான் நுழைய வேண்டும்; இந்த கோட்டையை எப்படியும் காக்க வேண்டும் என்று தாலிபன்கள் உறுதியாக உள்ளனர்." பாக்கிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அஷ்பக் காயானி அவர்கள் தாலிபனுக்கு எதிராக "கூட்டாக எழுந்து" தாக்குதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற முறையீடு செய்ததை மக்கிளாட்சி செய்தித்தாள்களிடம் மெசுத் பழங்குடித் தலைவர்கள் நிராகரித்து விட்டனர்.

பெயர்கூற விரும்பாத இராணுவ ஆதாரங்கள் McClatchy செய்தித்தாட்களிடம் ஏழு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், ஏழு பேர் காயமுற்றனர்; இது போராளிகள் கிராமத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இராணுவத்தினரை அகற்ற நடத்திய எதிர்தாக்குதலில் ஏற்பட்டது என்றன. 6,000 குடிமக்கள் இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் இராணுவம் கூறுகிறது--பெரும்பாலானவர்கள் முழுக் கிராமமும் பொறுப்பற்ற முறையில் தகர்க்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டைத் தவிர்க்கும் வகையில் இவ்வாறு கூறியிருக்கலாம்.

கோட்கையையும் துருப்புக்கள் புறவழியே கடந்து Sraragha சிறுநகரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்று கூறப்படுகிறது; இது பகுதியின் தென்மேற்கில் இருக்கும் வானாவில் இருந்து முன்னேறும் படைகளுடன் தொடர்பு கொள்ளுவதற்கான முயற்சியாக இருக்கலாம். லாடாவிற்கு தெற்கே ஏழு கிலோ மீட்டரில் இருக்கும் சிறு நகரமான Kaniguram பகுதியிலுள்ள Sherwasngai என்னும் இடத்தில் துருப்புக்கள் தலிபானுடன் ஏற்கனவே போரிடுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த கத்திப்படிக்குள், வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு என்று நடவடிக்கைகள் வெற்றிபெற்றால், தலிபான்கள் லாடாவிற்கும் மகீனுக்கும் இடையே ஒரு சிறிய கொலைகாரப் பகுதியில் தள்ளப்படுவர். பாக்கிஸ்தானிய அரசாங்கம் எந்த போர்நிறுத்தத்திற்கும் உடன்படப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது. அதன் நோக்கம் தெற்கு வஜீரிஸ்தானத்தில் உள்ள 10,000 முதல் 15,000 போராளிகளைக் கொல்லுவது, நிரந்தரமாக அவர்களுடைய முந்தைய தளங்களையும், பயிற்சி முகாம்களையும் ஆக்கிரமிப்பது என்று உள்ளது.

இதுவரை 100 தலிபான்கள் கொல்லப்பட்டுவிட்டதாக இராணுவம் கூறுகிறது; இதில் 15 பாக்கிஸ்தானிய சிப்பாய்கள் உயரிழந்துள்ளனர். ஆனால் சிவிலிய இறப்புக்கள் பற்றி உத்தியோகபூர்வ மதிப்பீடு ஏதும் இல்லை.

Azam Tariq என்னும் ஒரு தலிபான் செய்தித்தொடர்பாளர், நேற்று செய்தி ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு அரசாங்கப் பிரச்சாரத்தை மட்டும் வெளியிடுவதற்காக குறைகூறினார். கோட்கையைச் சுற்றி நடக்கும் போரில் மட்டும் குறைந்தது 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார். பொதுவான விவரங்களைத் தவிர, இருபுறமும் கூறும் கருத்துக்களை சரிபார்க்க இயலாது. பாக்கிஸ்தான் அரசாங்கம் பகுதி முழுவதும் ஊடகம் செல்லக்கூடாது என்று மூடிவிட்டது; அதே நேரத்தில் காட்டுமிராண்டித்தனமாக செய்தியாளர்கள் கடத்தப்பட்டு அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்படுவது என்பது வஜீரிஸ்தானில் தாக்குதல் தொடங்குமுன் எந்த நிருபரும் போராளிகள் வசம் இருக்கும் இடங்களில் நுழையத் தயாராக இல்லை என்றுதான் பொருள்படும்.

பாக்கிஸ்தான் முழுவதும் வஜீரிஸ்தான் மீதான தாக்குதல் அச்சம், உறுதியற்ற நிலை ஆகிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் தலைவர்கள் தாக்குதல் தொடர்ந்தால் பாக்கிஸ்தான் முழுவதும் பதிலடிக்கு உட்படும் என்று எச்சரித்துள்ளனர். கடந்த இரு வாரங்களில் பாக்கிஸ்தான் நெடுகிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இவை பொதுவாக போலீஸ், இராணுவ நிலையங்கள்மீது நடத்தப்பட்டன.

நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள International Islamic University வளாகத்தில் ஒரு பெண்கள் உணவுவிடுதி மற்றும் வகுப்பறையில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றன; இதில் 4 மாணவர்களும் 42 மற்றவர்களும், பெரும்பாலும் இளம் பெண்கள் என, கொலையுண்டனர். பஞ்சாப்பில் சில பொதுப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு வாரம் மூடப்பட்டுவிட்டன. சமீபத்திய குண்டுத்தாக்குதலுக்கு விடையிறுக்கும் விதத்தில் சிந்து, பலுச்சிஸ்தான், வடமேற்கு எல்லைப்புற மாகாண அரசாங்கங்கள் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டன; சில இடங்கில் இது அடுத்த வாரம் வரை மூடியிருக்கும். பஞ்சாப்பில் "அடுத்த அறிவிப்பு வரும் வரை" கல்விக்கூடங்கள் மூடப்பட்டன.

இனவழி பஞ்சாபியத் தளம் கொண்ட இஸ்லாமியக் குழுவான Lashkar-e-Jhangvi, காஷ்மீரி போராளி அமைப்பான Jaish-e-Mohammed ஆகியவை தலிபானுடன் சேர்ந்து அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதி அலி ஆசிப் சர்தாரி அரசாங்கத்திற்கு எதிராக போர் நடத்தச் சேர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டங்களில் கவலைகள் காணப்படுகின்றன. இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் கருதப்படும் நூற்றுக்காணக்கான சந்தேகத்திற்கு உரியவர்கள் கடந்த சில வாரங்களாக பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ நடவடிக்கைகளும் வஜீரிஸ்தானுக்கு வெளியே உள்ள இனவழி பஷ்டூன் பழங்குடிப் பகுதிகளில் தீவிரமாக்கப்பட்டுள்ளன; முந்தைய தாக்குதல்கள் மூலம் இப்பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாகக் கூறப்படுகிறது. மொஹ்மண், பஜெளர், ஒராக்ஜாய் பகுதிகளில் திங்களன்று 24 இஸ்லாமிய போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் வீடுகள் சோதனையின்போது தலிபான் எனக் கூறப்பட்டவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.