World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Iran makes significant concession to defuse nuclear standoff

அணுசக்தி பற்றியதில் விலகிநிற்கும் போக்கை குறைக்கும் விதத்தில் ஈரான் கணிசமான சலுகைகளைக் கொடுக்கிறது

By Peter Symonds
22 October 2009

Use this version to print | Send feedback

ஈரானின் குறைந்த அடர்த்தி உடைய யுரேனியம் மேலும் செறிவூட்டுவதற்கும் தெஹ்ரானில் உள்ள அதன் ஆய்வு உலைக்கூடத்தின் எரிபொருளாக அதனை மாற்றுவதற்குமான வழிவகைக்கு ரஷ்யாவிற்கும் பிரான்சிற்கும் கூடுதல் செறிவிற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு வியன்னாவில் மூன்று நாட்கள் நடந்த கடுமையான பேரங்களுக்கு பின்னர் நேற்று ஒரு வரைவு உடன்பாடு உறுதியாயிற்று. இப்பேச்சுக்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கீழ் நடந்தன; இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகியவை ஈடுபட்டிருந்தன.

அனைத்துத் தரப்பினரலும் வெள்ளியன்று இசைவு கொடுக்கப்படும் இந்த உடன்பாடு ஈரான் பங்கில் கணிசமான சலுகை ஆகும். இது எப்பொழுதும் அதன் அணுசக்தி எரிபொருளை உற்பத்தி செய்யப் போவதாக வலியுறுத்தியிருந்தது. அதன் குறைந்த செறிவுடைய யுரேனிய இருப்புக்கள் பெரும்பாலானவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதின் மூலம், தெஹ்ரான் தான் அணுவாயுதங்களை தயாரிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று பல முறையும் கொடுத்துள்ள அறிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

சமீபத்திய சர்வதேச அணுசக்தி அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஈரான் 4 சதவிகிதம் அடர்த்தி உடைய 1.5 டன்கள் யுரேனியத்தை உற்பத்தி செய்துள்ளது. ஆயுதத் தர தயாரிப்பிற்கு 90 சதவிகித யுரேனிய அடர்த்தி தேவையாகும். அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகம் அதன் இருப்பைக் கணக்கில் கொண்டு ஈரானிடம் அணுகுண்டு தயாரிக்கப் போதுமான அடர்த்தி நிறைந்த யுரேனியம் இருப்பதாகக் கூறின. உண்மையில் ஈரான் அணுஆயுதம் பரவா (NPT) உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நாடாகும்; அதன் மொத்த இருப்பு சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்களால் நெருக்கமாக மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.

வியன்னா உடன்பாட்டின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் உடன்பாட்டின்படி 1.2 டன்கள் குறைந்த அடர்த்தி உடைய யுரேனியம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்றுமதி செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இது ரஷ்யாவால் 20 சதவிகிதம் உயர் அடர்த்தியை பெறும், பின்னர் மருத்துவ ஐசோடோப்புக்கள் தயாரிக்கும் தெஹ்ரானின் உலையின் தேவைக்கு ஏற்ப யுரேனிய-அலுமினிய கலப்பு உலோகத் தட்டுக்களாக மாற்றப்படும். அந்த வடிவத்தில் எரிபொருளோ ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இறுதி பொருட்களோ மற்ற நோக்கங்களுக்கு எளிதில் பயன்படுத்தப்பட முடியாதவை ஆகும். பெரும்பாலான மதிப்பீடுகள் தெஹ்ரானுக்கு அதன் இருப்புக்களை பழைய நிலைக்கு கொண்டுவர ஓராண்டு ஆகும் என்று குறிக்கின்றன.

ஈரானியப் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட புதிய பொருளாதாரத் தடைகள் என்ற அச்சுறுத்தல் உட்பட பல வாரங்கள் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளால் மிரட்டப்பட்டபின் இந்த உடன்பாடு வந்துள்ளது. கடந்த மாத G20 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் நாடக பாணியில் ஈரானிடம் "ஒரு இரகசிய" யுரேனிய அடர்த்தி வழிவகை ஆலை கோம் நகரத்திற்கு அருகே உள்ளது என்றும் தண்டனை நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் எச்சரித்தனர். இதற்கு நான்கு நாட்கள் முன்னதாக தெஹ்ரான் சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் முற்றுப்பெறாத ஆலை இருப்பது பற்றி தகவல் கொடுத்திருந்தது.

சர்வதேச செய்தி ஊடகத்தில் தீவிரப் பிரச்சாரத்துடன் இணைந்திருந்த இந்த அறிவிப்பு ஈரான்மீது மட்டும் இல்லாமல் ரஷ்யா, சீனா மீதும் அழுத்தத்தை கொடுக்கும் வடிவமைப்பை கொண்டிருந்தது; அவை இரண்டும் அக்டோபர் 1ம் தேதி ஜெனீவாவில் நடக்க உள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, புதிய ஐ.நா. தண்டனைகளுக்கு உடன்படத் தயக்கம் காட்டின. இந்தப் பேச்சுக்கள் P5+1 சக்திகள் எனப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகியவற்றிற்கு இடையே நடந்து இரு உறுதியான நடவடிக்கைகளை கொடுத்தன: கொள்கையளவில் ஈரானின் குறைந்த அடர்த்தி யுரேனியம் ஏற்றுமதி செய்யப்பட ஒப்புக் கொள்ளல், சர்வதேச அணுசக்தி அமைப்பு கோம் ஆலையை ஆய்வு செய்தல் என்பவையே அவை. பிந்தையது அக்டோபர் 25 அன்று நடக்க உள்ளது.

ஏற்றுமதி உடன்பாட்டின் தொழில்நுட்ப கூறுபாடுகளை சுமுகமாகத் தீர்க்கும் வியன்னா கூட்டம் இடைவிடாமல் அமெரிக்க செய்தி ஊடகம் ஈரானின் நம்பகமற்ற தன்மை, உடன்பாட்டின்படி நடக்க விருப்பமின்மை இவை பற்றி கூறிய தகவல்களுடன் சேர்ந்தே இருந்தது. யுரேனிய அடர்த்தித் திட்டத்தை தான் கைவிடுவதாக இல்லை, உடன்பாட்டிற்கு பிரான்ஸும் ஒரு தரப்பு என்பதை எதிர்த்து தெஹ்ரான் தோற்றம் கொடுத்தது; பிரான்சை நம்பமுடியாது என்றும் காரணம் காட்டியது. இறுதியில் ரஷ்யாதான் உடன்பாட்டிற்கு முக்கிய தரப்பாக இருக்கும் என்றும் எரிபொருள் தண்டுகள் உற்பத்தி பிரான்சிற்கு துணை ஒப்பந்தம் மூலம் கொடுக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

ஈரானின் யுரேனிய செறிவூட்டல் பற்றிய மோதலின் அடித்தளத்தில், குறைந்த மட்டத்தில்கூட, வியன்னாவின் விவாதத்தில் பொருளுரையாக இல்லாதது, தொடர்ந்து தீர்க்கப்படாதிருந்தது. அமெரிக்கா ஏற்கனவே ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் மூலம் மூன்று தடைத் தொகுப்புக்களை நிறைவேற்றியுள்ளது; அவற்றில் ஈரான் அனைத்து யுரேனிய செறிவூட்டல் திட்டத்தையும் நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஐ.நா. தீர்மானங்கள் சட்டவிரோதமானவை என்று தெஹ்ரான் கண்டித்தது; NPT படி அணுசக்தி எரிபொருள் சுற்றிற்கு தேவையான அனைத்துக் கூறுபாடுகளையும் சமாதான நடவடிக்கைகளுக்காக செய்யும் உரிமை தனக்கு உள்ளது, யுரேனிய செறிவூட்டலும் இதில் அடங்கும் என்று சுட்டிக் காட்டியது. குறிப்பாக ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் உள்நாட்டில் தேசிய உணர்வை தூண்டிவிட்டு பெரும் சக்திகளுக்கு எதிராக ஈரானின் உரிமைகளை வலியுறுத்தி அதன் அணு சாதனைகள் பற்றியும் பெருமையாகப் பேசி வந்தார்.

ஈரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் Saeed Jalili ன் மூத்த உதவியாளர் Abolfazl Zohrahvand திங்களன்று ஒரு பரந்த பிரச்சினையில் சமரசத்திற்கான வாய்ப்பை குறிப்பாகக் காட்டினார். "தற்போதைய திட்டம் எங்கள் பகுதியில் செய்யப்பட வேண்டிய யுரேனிய செறிவூட்டல் பற்றி குறிப்பாக தெஹ்ரான் ஆய்வு உலைக்கூடத்திற்கு தேவையான 5 சதவிகிதத்திற்கு மேற்பட்ட செறிவூட்டல் வேறுநாட்டில் செய்யப்பட வேண்டும் என்பதாகும்" என்றார் அவர். ஆனால் ஈரான் இந்த ஒரு தடவை ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் உடன்பாடு 5 சதவிகிதத்திற்கும் மேலான யுரேனிய அடர்த்திக்கு வருங்காலத்திலும் விரிவாக்கப்படலாம் என்று அவர் குறிப்புக் காட்டியுள்ளார். இன்றுவரை அமெரிக்கா ஈரானுக்குள் அனைத்து செறிவூட்டலுக்கும் முற்றுப்புள்ளி வேண்டும் என்று கூறிவருகிறது.

IAEA வின் இயக்குனர் மகம்மது எல் பரடேய் நேற்று பரவசமாக இருந்தார்; வரைவு உடன்பாட்டை "பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியை அகற்றக்கூடிய முக்கியமான நம்பிக்கையூட்டும் நடவடிக்கை" என்று விவரித்தார். "மக்கள் பெரும் சித்திரத்தை காண்பர் எனப் பெரிதும் நம்புகிறேன், இந்த உடன்பாடு ஈரானுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உறவுகளை முற்றிலும் சீராக்கும் வழியைக் காட்டக்கூடும்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

ஆனால் இந்தக் கட்டத்தில் அனைத்துச் சலுகைகளும் ஈரானிடத்தில் இருந்துதான் வந்துள்ளன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் நாட்டின் தூதரகத் தனிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிரதி நடவடிக்கைகளை செய்யும், குறிப்பாக அதன் வங்கி நிதியப் பிரிவைப் பாதிக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றும் என்று தெஹ்ரான் எதிர்பார்ப்பது வெளிப்படை; இதையொட்டி அதன் எண்ணெய், எரிவாயு உள்கட்டுமானத் திட்டங்களை உயர்த்துவதற்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும் என்றும் நம்புகிறது. உயர்மட்ட ஈரானிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்காரர்கள் --ஈரானின் IAEA பிரதிநிதி அலி அஷ்கர் சொல்டனீயா, சக்திக்கான அமெரிக்க துணை மந்திரி டானியல் போன்மன்-- செவ்வாயன்று தனியாக திட்டத்தின் விவரங்களை விவாதிக்கக் கூடினர்.

டைம் ஏட்டின்படி, இத்திட்டம் ஜூன் மாதம் ஈரான் IAEA வை தெஹ்ரான் உலைத்திட்டத்திற்கு புது எரிபொருள் அளிக்க ஆதாரம் கண்டறியுமாறு கோரியத்தில் இருந்து விவாதத்தில் உள்ளது. ஒபாமா நிர்வாகம் ஜூலை தொடக்கத்தில் ஈரானின் யுரேனிய செறிவூட்டல் பற்றி ரஷ்யாவிடம் கூறியது: அத்திட்டம் IAEA வழியாக செப்டம்பர் நடுப்பகுதியில் ஈரானுக்குக் கூறப்பட்டது. கடந்த மாதம் இந்த ஏற்பாடு ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவை நியூ யோர்க்கில் ஐ.நா.பொது மன்றக்கூட்ட காலத்தில் சந்தித்தபோது உறுதியாயிற்று.

ஆனால் வாஷங்டன் ஈரான்மீது அழுத்தம் கொடுப்பதை சிறிதும் தளர்த்தவில்லை. நேற்றைய அறிவிப்பை தொடர்ந்தும், அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் உடன்பாடு "ஆக்கபூர்வமான தொடக்கம்" என்றாலும், இது "ஆக்கபூர்வ நடவடிக்கைகளின் தொடர்ச்சியை காண வேண்டும்" என்று எச்சரிக்கையுடன் அறிவித்தார். "ஈரானுக்கு சிறந்த வருங்காலத்திற்கான வழிவகை திறந்துள்ளது; ஆனால் வழிவகை நடைமுறை ஒரே போக்கில் செல்லாது. பேச வேண்டும் என்பதற்காக நாங்கள் பேசத்தயாராக இல்லை" என்று அவர் எச்சரித்தார்.

கிளின்டனுடைய பீதி கொடுக்கும் கருத்துக்கள் ஒபாமா நிர்வாகத்தில் நிரந்தர பல்லவியாக உள்ளன: ஈரான் அமெரிக்க கோரிக்கைகளையும் கெடுவையும் நிவர்த்திசெய்யாவிட்டால், கடுமையான தண்டனை நடவடிக்கைகள் தொடரும். தெஹ்ரான் பங்கில் காட்டப்படும் எந்த மறுப்பும், வாஷிங்டனால் சீனா, ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்து புதிய ஐ.நா. தடைகளை கொண்டுவர, அல்லது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எடுக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும்.

வட கொரியாவுடன் முந்தைய அமெரிக்க உடன்பாடுகள் வழிகாட்டி என்று எடுத்துக் கொண்டால், தன்னுடைய பங்கிற்கு வாஷிங்டன் ஈரானுடன் எந்த உடன்பாட்டினாலும் கட்டுப்படாது. கிளின்டன், புஷ் நிர்வாகங்கள் இரண்டுமே பியோங்யாங்குடன் முக்கிய உடன்பாடுகளை தகர்த்தன; அதையொட்டி அதன் அணுசக்தி திட்டத்திலும் நெருக்கடி உள்ளது. இதேபோல் ஈரானுடன் எந்த உடன்பாட்டை கொண்டாலும் அவை எளிதில் அமெரிக்க தூண்டுதல்களால் இல்லை என்று ஆக்கப்பட்டுவிடும்; குறிப்பாக வாஷிங்டன் இன்றுவரை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த தொடர்ந்த பதட்டங்கள், அமெரிக்கா அணுசக்தி பிரச்சினையை போலிக்காரணமாகக் காட்டி மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவின் ஆற்றல் வளங்கொழிக்கும் பகுதிகளில் தன்னுடைய பரந்த பொருளாதார, மூலோபாய ஆதிக்கத்தின் விழைவுகளை அதிகரித்துக் கொள்ள முற்படும் வகையில்தான் பயன்படுத்தும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஜூன் மாதம் நடந்த ஈரானின் ஜனாதிபதித் தேர்தல்களை அடுத்து, தோற்றுவிட்ட வேட்பாளர் மீர் ஹோசைன் மெளசவிக்கு ஆதரவான எதிர்க்கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா ஒரு அசாதாரண பிரச்சாரத்தைக் கொடுத்து தெஹ்ரானில் தன்னுடைய நலன்களுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஆட்சியை அமைக்க முயன்றது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஒபாமா நிர்வாகம் இதேபோன்ற காரணங்களுக்குத்தான் பயன்படுத்த முற்பட்டுள்ளது. அணுசக்தி பிரச்சினையில் உடன்பாடு அடையப்படுமா என்பது அப்பகுதியிலுள்ள அமெரிக்காவின் பரந்த நலன்களுக்கு, குறிப்பாக அமெரிக்கத் தலைமையில் அண்டை ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடக்கும் ஆக்கிரமிப்புக்களில் தெஹ்ரான் உதவத் தயாராக உள்ளதா என்பதைப் பொறுத்தே உள்ளது.