World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

SEP (Germany) appeals for international support for its election campaign

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி) சர்வதேச ஆதரவை வேண்டுகிறது

2 September 2009

Use this version to print | Send feedback

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய பகுதியான, சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gelichheit-PSG), செப்டம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ள தேசிய தேர்தல்களுக்கான அதன் பிரச்சாரத்தில் ஒரு புதிய கட்டத்தை எடுத்துள்ள விதத்தில், எங்கள் தேர்தல் தொலைக்காட்சி பேட்டி மற்றும் தேர்தல் திட்டத்தை ஆங்கிலம், பிரெஞ்சு, துருக்கிய, தமிழ் மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம்.

ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு பற்றிய விவாதத்தை ஊக்குவிப்பதற்காக PSG அதன் வேட்பாளர்களை கூட்டாட்சித் தேர்தல்களில் நிறுத்தி வைத்துள்ளது. வரவிருக்கும் சமூகப் போராட்டங்களுக்கு தொழிலாளர்களை தயார் செய்யும்பொருட்டு எங்கள் கட்சி ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடியின் பரப்பு, விளைவுகள் பற்றி அக்கறையுடன் எடுத்துச்சொல்கிறது.

PSG உடைய நான்கு வேட்பாளர்கள்-- பேர்லினில் உல்ரிச் ரிப்பேர்ட் (58), பாபியன் ரேய்மன் (29); வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் எலிசபெத் சிம்மர்மான் (52), Dietmar Geisenkersting (42) -- அனைவரும் PSG நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

முக்கிய வங்கிகள், பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், அனைவருக்கும் ஒரு அடிப்படை வருமானம் மற்றும் வேலைகளை அளிக்க விரிவான பொதுப் பணிகள் திட்டம் ஆகியவை தேவை என்று PSG அழைப்பு விடுகிறது. இக்கோரிக்கைகளும் இன்னும் மிக அடிப்படை உரிமைகளும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில்தான் அடையப்பட முடியும்.

PSG தேர்தல் பிரச்சாரத்தின் மைய அச்சு ஜேனரல் மோட்டார்ஸ் (GM) மற்றும் ஓப்பலில் வேலைகளைப் பாதுகாப்பது ஆகும். ஒரு ஆலையிலுள்ள தொழிலாளர்களை மற்ற ஆலைத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்ற, பல நாடுகளின் தொழிலாளர்களையும் "தங்கள்" தேசிய ஆளும் உயரடுக்கு, அரசாங்கம் ஆகியவற்றுடன் பிணைக்க முற்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து GM தொழிலாளர்களும் உலகெங்கிலும் உள்ள தங்கள் வேலைகளைக் காக்க சர்வதேச ரீதியாக ஐக்கியப்பட வேண்டும் என்று PSG அழைப்பு விடுகிறது.

PSG பொது இடங்களில் எங்கள் கோரிக்கைகளைத்தாங்கிய நூற்றுக்கணக்கான அட்டைகளை வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை கட்சி வினியோகிப்பதுடன், பல ஜேர்மனிய நகரங்களிலும் தேர்தல் கூட்டங்களை நடத்தவுள்ளது.

முதலாளித்துவத்தை காக்கும் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது, PSG யிடம் குறைந்த வளங்கள்தான் உள்ளன. அது எங்கள் ஆன்லைன் தேர்தல் பிரச்சாரத்தை இன்னும் முக்கியமுடையதாகச் செய்துள்ளது.

"மிகச் சக்திவாய்ந்த முன்னோக்குகளை நாங்கள் பிரதிபலிக்கையில், PSG எங்கள் பிரச்சாரத்தை உத்தியோகபூர்வ செய்தி ஊடகம் மற்றும் பொது மண்டலத்தில் பிரச்சாரம் செய்யும் திறனில் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது." என்று PSG உடைய தேர்தல் பிரச்சாரத்தின் தலைவரான Ludwig Weller கூறியுள்ளார். "ஆனால், இணையதளத்தின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் நாங்கள் கொண்டுள்ள பாதக அம்சங்களை ஈடு செய்கிறது, எங்கள் திட்டத்தை விவாதத்திற்கு உரியதாக ஆக்கும் வகையில் உள்ளது. எங்கள் வாசகர்களின் ஆதரவினால்தான் இது முடிகிறது."

ஜேர்மனியில் வசிக்காத வாசகர்களும் PSG பிரச்சாரத்தை ஆன்லைனில் பார்த்து ஆதரிக்க முடியும்.

நீங்கள்:

எங்கள் தேர்தல் ஒளிப்பட காட்சியை Youtube ல் கண்டு, நண்பர்கள், உறவினர்கள் சக பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எங்கள் குழுவின் Face book, Myspace ல் உறுப்பினராகலாம்

இந்தப் பக்கத்தையும் எங்கள் தேர்தல் அறிக்கையையும் வலைமன்றங்கள், வலைப்பதிவுகளில் வழங்கலாம்.