World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Local elections in North Rhine-Westphalia

German Left Party ready to work with right-wing CDU

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ளூர் தேர்தல்கள்

ஜேர்மன் இடதுகட்சி, வலதுசாரி கிறிஸ்த்தவ ஜனநாயக யூனியனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது

By Sybille Fuchs
1 September 2009

Use this version to print | Send feedback

சமூக ஜனநாயக கட்சியின் (SPD) பல தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளையும், கட்சி உறுப்பினர்களின் சரிவையும் தொடர்ந்து, இடது கட்சி (Left Party) சந்தேகத்திற்கிடமின்றி, ஜேர்மன் அரசியல் அரங்கின் வலதில் உள்ள கட்சிகளுடன் அரசியல் உறவுகளை வலுப்படுத்த முயன்று வருகிறது.

ஒரு வாரத்திற்கு முன்னர் தான், இடது கட்சியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தின் பிராந்திய தலைவர் வொல்வ்காங்க் சிம்மர்மான் Frankfurt Rundschau பத்திரிகைக்கு பின்வருமாறு தெரிவித்தார்: "நிச்சயமாக, நாம் CDU உடன் [வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக சங்கம்] இணைந்து வாக்களிக்கலாம். உள்ளடக்கத்தை பொறுத்த வரையில் நமக்கு உடன்பாடு இருக்குமானால், நமக்கு அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை."

பல ஆண்டுகளாக மத்திய அளவிலும், குறிப்பாக வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவிலும் பொதுத்துறை சேவைகளைத் தனியார்மயமாக்கலிலும், அத்துடன் இணைந்திருக்கும் சமூக வீழ்ச்சியிலும் பின்புலத்தில் தூண்டுவிசையாக இருந்து வரும் CDU விற்கு காட்டப்பட்டிருக்கும் இந்த அரசியல் இசைவு, இடதுகட்சி மேலும் வலதின் பக்கம் திரும்பி இருப்பதையே பிரதிபலிக்கிறது. தமது நிலைப்பாட்டை மூடிமறைப்பதற்காக, சிம்மர்மான் தொடர்ந்து கூறுகையில், "பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்க கூடாது அல்லது ஒருவேளை ஹார்ட்ஸ் IV சலுகைகளைப் பெறுவோருக்கான நல்ல பேருந்து பயணச்சீட்டை வழங்வது" பற்றி (CDU உடன் சேர்ந்து) உடன்பாட்டிற்கு வருவது சாத்தியமாகலாம் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற கருத்துக்களால் சிம்மர்மான் யாரை முட்டாளாக்க நினைக்கிறார்? CDU அதன் சமூக எதிர்ப்பு கொள்கைகளிலிருந்து உடைத்து கொள்ள வேண்டும் என்று அவர் புத்திசாலித்தனமாக எதிர்பார்க்கிறாரா? இதில் வேறு ஒரு விடயம் உள்ளடங்கியுள்ளது. நாட்டின் இரண்டு முக்கிய "மக்கள் கட்சிகளான" CDU மற்றும் SPDன் மீது வளர்ந்து வரும் பொதுமக்களின் எதிர்ப்புணர்வையே ஞாயிறன்று நடந்த மாகாண மற்றும் உள்ளூர் தேர்தல்கள் எடுத்துக்காட்டுக்கின்றன. இந்த சூழ்நிலையில், தன்னைத்தானே அரசியல் அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கான ஒரு சக்தியாக காட்டிக் கொண்டு இடதுகட்சி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக SPD அல்லது CDU உடன் கூட்டணியில் இறங்க தயாராக இருக்கிறது.

பேர்லினின் சமீபத்திய அனுபங்களில் இருந்து அந்த பாடத்தை தான் பெற முடிகிறது. திவாலாகி போன Berlin Banking Societyன் மோசடியில் CDU மற்றும் SPD சம்பந்தப்பட்டிருந்ததன் காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் அந்நகர கூட்டணி அரசை உடைந்ததைத் தொடர்ந்து, இடதுகட்சி SPD இற்கு முண்டுகொடுக்க நகர்ந்தது. இதனால், உருவான சிவப்பு-சிவப்பு(SPD-Linkspartei) கூட்டணி அரசாங்கத்தால் தலைநகரின் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விளைவுகள், பேரழிவுகளாக இருந்தன.

இன்று, பேர்லினின் மொத்த நகர்பகுதிகளும் வறுமை குடிகொண்டிருக்கும் குடியிருப்புகளாக (ghetto) மாற்றப்பட்டுள்ளது. நகரில், மூன்றில் ஒரு குழந்தை அரசு நல உதவிகளைச் நம்பி உள்ளது. மேலும் பொதுத்துறை தொழிலாளர்களின் சம்பளங்கள், மத்திய சராசரியைவிட அண்ணளவாக பத்து சதவீதம் குறைவாக உள்ளது. நகரில் சமூக சேவைகளைப் பொறுத்தவரையிலும், மற்றும் அதை போன்ற நிகழ்வுகளுக்கான முக்கிய பொறுப்பில் ஒரு தசாப்தமாக Heidi Knake Werner இருந்து வருகிறார். ஜேர்மன் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஸ்டாலிஸ்டுகளுக்கு பின்னைய ஜனநாயக சோசலிசத்திற்கான கட்சியின்(PDS) ஒரு முன்னாள் உறுப்பினரான இவர், தற்போது இடதுகட்சியில் ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளார்.

வொல்வ்காங்க் சிம்மர்மானும் பண்பற்ற தீவிர-இடதுகளின் அதே அடுக்கைச் சேர்ந்தவர் தான். பல தசாப்தங்களாக, பொதுத்துறை சங்கமான Verdiல், ஒரு முன்னணி தொழிற்சங்க அதிகாரத்துவவாதியாக இருந்த இந்த 59 வயதுக்காரருக்கு, உள்ளூர் அளவிலும், மற்றும் தேசிய அளவிலான தொழிற்சங்க காட்டிக்கொடுப்பிலும் ஒரு பங்கு இருந்தது. அதே நேரத்தில், ஓர் இடசாரி (leftist) என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்க விரும்பிய அவர், "இடது" சந்தர்ப்பவாத பத்திரிகையான SOZஇல் (Socialist Newspaper) கட்டுரைகள் எழுதி வருகிறார்.

PDSன் நீண்டகால உறுப்பினரான சிம்மர்மான், அக்கட்சியின் வரலாறு குறித்து நன்கு அறிவார், அக்கட்சி ஆட்சியில் இருந்த அனைத்து பிராந்தியங்களிலும் அது வியாபார நலன்களுக்கு ஆதரவளித்ததையும், சமூகநல கொள்கைகளுக்கு எதிராக இருந்ததையும் கூட அவர் நன்கு அறிவார். அந்த விதிகளுக்கு, பேர்லின் மட்டும் விதிவிலக்கல்ல.

எவ்வாறிருப்பினும், இன்றும் முக்கிய அரசியல் பதவிகளைத் தக்க வைத்திருக்கும் மேற்கு ஜேர்மனியின் இடதுகட்சியைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள் கிழக்கு ஜேர்மன் ஸ்ட்ராலினிச கட்சியான சமூக ஐக்கிய கட்சியின்(SED) பல முன்னாள் அங்கத்தவர்களான நாட்டின் கிழக்கில் உள்ள இடதுகட்சியை விட தாங்கள் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் தீவிரமான கொள்கையைப் பின்பற்றி வருவதாக குறிப்பிடுகின்றன. உதாரணமாக, மார்ச்சில் Bielefeld நகரில் நடந்த ஒரு கூட்டத்தில், மேற்கு ஜேர்மன் இடதுகட்சியின் ஒரு முக்கிய பிரபலமான Sarah Wagenknecht, உலக சோசலிச வலைத்தளத்தின் (WSWS) செய்தியாளர்களிடம், பேர்லினின் பேரழிவுமிக்க சமூக மதிப்பீடானது கிழக்கு ஜேர்மனின் PDS உறுப்பினர்களால் ஏற்பட்ட விளைவே அல்லாமல், இடதுகட்சியின் பிரதிநிதியால் ஏற்பட்டதல்ல என்று தெரிவித்தார். நாட்டின் மேற்கு இடதுகட்சி தற்போது அதன் கரங்களை வலதுசாரி CDUன் பக்கம் நீட்டிவருவதிலுள்ள உண்மை, இந்த நிலைப்பாட்டின் போலித்தனத்தையே காட்டுகிறது.

CDU அதன் ஆதரவை இழந்து விட்டிருக்கும் போதினும், SPDஆல் அதனை தனக்கு சாதகமாக்க முடியவில்லை என்பதை தான் கடந்த வாரயிறுதியில் வெளியான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் உள்ளூர் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வளர்ந்து வரும் பரந்த அதிருப்தியைக் கட்டுப்படுத்தி வைக்க, SPD மற்றும் இடது கட்சிக்கு இடையிலான கூட்டணியின் தேவை குறித்து தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். சிம்மர்மானின் கருத்துக்களின் முக்கியத்துவம் என்னவென்றால், SPD மற்றும் பசுமைக்கட்சியுடனான கூட்டணியோடு மட்டும் இடதுகட்சி நின்றுவிடாது, ஜேர்மன் முதலாளித்துவத்தின் யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தின் முதன்மை கட்சியான CDU உடன் இணைந்து செயல்படவும் அது தயாராக உள்ளது.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்திலுள்ள பல நகராட்சிகள் கடுமையான நிதி சூழ்நிலைமைகளின் காரணமாக மிகுந்த கடனில் உள்ளன. அத்துடன், கண்டிப்பான சமூக வெட்டுக்களை மேலும் கூடுதலாக அமுலாக்க வேண்டிய கணிசமான அழுத்தத்திலும் அவை உள்ளன. இடதுகட்சி, இதுபோன்ற சமூக எதிர்ப்பு கொள்கைகளுக்கு குறுக்காக நிற்காது என்பதையே CDUவிற்கான சிம்மர்மானின் இசைவு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, கிழக்கு ஜேர்மன் நகராட்சிகளின் சான்றாக, ட்ரேஸ்டன் மற்றும் பேர்லின் வீட்டுத்துறை பங்குகள் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இவையெல்லாம் இடதுகட்சியின் ஆதரவுடன் தான் நடந்தது. வாடகை உயர்வும், குடியிருப்போர் சேவைகளின் அழிவும் தான் இந்த கொள்கையின் விளைவாக அமைந்தன.

நாட்டின் கிழக்கில், CDU மற்றும் இடதுகட்சிக்கு இடையிலான கூட்டணிக்கு பல உதாரணங்கள் ஏற்கனவே உள்ளன. 2006ல், Cottbus நகருக்கான முதல்வர் பதவிக்கு இடதுகட்சி மற்றும் CDU இரண்டும் கூட்டு வேட்பாளரை நிறுத்தின, மேலும் Chemnitz நகர நிர்வாகத்தில் 2008ல் இரண்டு கட்சிகளும் பதவிகளைப் பகிர்ந்து கொண்டன.