World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US, Europe step up pressure on Iran

ஈரான்மீது அமெரிக்கா, ஐரோப்பா அழுத்தத்தை அதிகரிக்கின்றன

By Patrick Martin
4 September 2009

Use this version to print | Send feedback

அமெரிக்காவும் மூன்று முக்கிய ஐரோப்பிய சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் ஈரான் தன் அணு ஆராய்ச்சி, வளர்ச்சித் திட்டத்தை செப்டம்பர் 23 கெடுவிற்கு முன்னரே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தங்கள் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்; அந்தத் தேதி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தின் ஆண்டுக் கூட்டத் தொடக்கத்தன்று வருகிறது.

இந்நான்கு நாடுகளில் இருந்தும் வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள், சீனா மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் புதனன்று ஜேர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் கூடி, அதன் யுரேனிய அடர்த்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு ஈடாக வணிக, நிதிய ஊக்கங்கள் அளிப்பிற்கு தெஹ்ரான் சாதகமாக ஒத்துழைக்க வேண்டும் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறுவர் குழு, பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் ஜேர்மனியையும் கொண்டது (எனவே P5+1 என்ற பெயர்), மூன்று ஆண்டுகளாக அவ்வப்பொழுது ஈரானுடன் அதன் அணுசக்தித் திட்டம் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்திவருகின்றன; அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஈரான் அணுவாயுதத்தை கட்டமைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறுகின்றன. ஐ.நா.பாதுகாப்புக் குழு இதே காலத்தில் மூன்று முறை பொருளாதாரத் தடைகளை ஈரானுக்கு எதிராக அறிவித்தது.

ஜேர்மனிய வெளியுறவு மந்திரியின் அரசியல் இயக்குனர் வோல்கர் ஸ்டான்செல் ஆறு கலந்து கொள்ளும் நாடுகளின் சார்பாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, "சர்வதேச சமூகத்துடன் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கும் வகையில், அதன் அணுசக்தித்திட்டத்தை முற்றிலும் சமாதானத் தன்மையை கொண்டு நம்பிக்கையை மீட்கும் அவசர தேவையை ஈரான் உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய சக்திகளின் அதிகாரிகள் ஏப்ரல் மாதம் P5+1 குழு வெளியிட்ட கடந்த அறிக்கைக்கு ஈரானின் பதில் பற்றி தீவிர குறைகூறலை வெளியிட விரும்பினர்; ஆனால் ரஷியா, சீனா இரண்டிலிருந்தும் எதிர்ப்பை பெற்றனர்; அந்த நாடுகள் எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளைகுடாப் பகுதியில் அமெரிக்கச் செல்வாக்கின் விரிவாக்கத்தை எதிர்ப்பதுடன் டெஹ்ரானுடன் பரந்த வணிக உறவுகளைக் கொண்டுள்ளன.

இன்னும் கடினமான நிலைப்பாடு ஈரானுக்கு எதிராக என்பதற்கான உந்துதல் முக்கியமாக ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து, குறிப்பாக ஜேர்மனியிடம் இருந்து வந்துள்ளது. திங்களன்று ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், அணுசக்தி தீட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் பற்றிய செப்டம்பர் கெடு, "மிக முக்கியமானது" என்றார். மேர்க்கெல் இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இருவரையும் பிராங்க்பேர்ட் கூட்டத்திற்கு முன் சந்தித்திருந்தார்.

நேதன்யாகுவுடன் சேர்ந்து நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மேர்க்கெல் ஈரான் மேற்குலகக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், "விசை, நிதிய மற்றும் பிற முக்கிய பிரிவுகளில்" பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்தார். "நாங்கள் [பொருளாதாரத் தடைகள்] பற்றி மட்டும் சிந்திக்காமல், சர்வதேச சமூகத்தில் அவற்றை எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றியும் விவாதிப்போம்" என்று சேர்த்துக் கொண்டார். மேர்க்கெலுடன் சேர்ந்து கூட்டாகத் தோன்றிய நிகழ்ச்சி ஒன்றில் சார்க்கோசி அறிவித்தார்: "ஜேர்மனியும் பிரான்ஸும் பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்த வேண்டும் என அழைப்புக் கொடுப்பதில் ஒன்றுபடும்."

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் இருக்கும் தடைகளை ரஷ்யாவும், சீனாவும் செயல்படுத்த ஒத்துழைத்தால், புதிய கூடுதல் தடைகள் ஏதும் தேவைப்படாது என்றார். "ரஷியாவும் சீனாவும் இதற்கு முற்றிலும் தேவை. நாம் செய்யவேண்டியது அந்நாடுகளுடன் நெருக்கமாக உழைத்து இப்பிரச்சினையில் அவர்கள் செயல்பட வேண்டிய தேவை பற்றி அவற்றை நம்ப வைக்க வேண்டியதுதான்" என்று அவர் கூறினார்.

இந்தப் புதிய அழுத்தத்தை திசைதிருப்பும் வகையில், ஈரானின் உயர்மட்ட அணுசக்தி பற்றிய பேச்சுவார்த்தை நடத்துநரான, Saeed Jalili திங்களன்று ஈரான் அணுசக்தி பிரச்சினைகள் பற்றி புதுப் பேச்சுக்கள் நடத்தக் கோரியதாகத் தெரிவித்தார்; ஆனால் அவர் முழு விவரத்தையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் ஈரான் தொலைக்காட்சியில் வந்த இந்த அறிக்கையை உதறித்தள்ளினாலும், அதன் நோக்கம் நிறைவேறியது; சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் P5+1 குழு இன்னும் வலுவான அறிக்கையை வெளியிடுவதை எதிர்ப்பதற்கு இது தளமாயிற்று.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எந்தப் புதிய ஈரானிய திட்டமும் "தீவிரமாக" பரிசீலிக்கப்படும் என்றும், இன்னும் ஏதும் வரவில்லை என்றும் கூறியது. ஏப்ரல் மாதம் ஜனாதிபதி ஒபாமா ஈரானிய அரசாங்கத்திற்கு எந்த முன்னிபந்தனையும் இன்றி நேரடிப் பேச்சு வார்த்தைகள் நடத்தத் தயார் என்றும், அது ஐ.நா. பொதுமன்றம் கூடவிருப்பதற்கு ஒரு வாரம் முன்பு, செப்டம்பர் 15க்கு முன் இருக்கலாம் என்று முறைசாராமலும் தெரிவித்திருந்தார். இதை மீண்டும் வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் ஒபாமா இரண்டாம் கடிம் ஒன்றையும் ஈரானுக்கு அனுப்பியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ஜேர்மனிய வெளியுறவு அமைச்சரகத்தின் ஸ்டால்செல் ஜலிலியின் அறிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் ஈரான் செப்டம்பர் 23 கெடு வரைதான் புதிய சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என்றார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் அந்தத் தேதியில் ஐ.நா.வில் உரையாற்ற நியூ யோர்க்கிற்கு செல்வார் என்ற ஈரானிய அறிவிப்பு வந்தது. கடந்த ஜூன் 12 அன்று பூசலுக்குட்பட்டுள்ள மறு தேர்தலுக்குப் பிறகு இது இவருடைய முக்கிய வெளிநாட்டுப்பயணம் ஆகும்.

புதிய தடைகள் அச்சுறுத்தலை உதறித்தள்ளும் வகையில் அஹ்மதிநெஜாத் அறிவித்தார்: "இன்னும் பொருளாதாரத் தடைகளை ஈரான்மீது எவரும் சுமத்த முடியாது" என்று உத்தியோகபூர்வ IRNA செய்தி அமைப்பு கூறுகிறது. சர்வதேச அணுசக்தி அமைப்பில் ஈரானின் பிரதிநிதியான அலி அஷ்கர் சோல்ட்நயி P5+1 குழுவுடன் எந்தப் புதிய பேச்சும் அணுசக்தித்திட்டம் பற்றி இராது என்றும் பரந்த பாதுகாப்புப் பிரச்சினைகளைப் பற்றித்தான் இருக்கும் என்றும் கூறினார். "ஈரானின் அணுசக்திப் பிரச்சினைகள் IAEA வில் மட்டும்தான் ஆராயப்பட முடியும்" என்று அவர் கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகவாண்மை (IAEA0, ஐக்கிய நாடுகள் மற்றும் அணுவாயுதம் பரவா உடன்படிக்கை செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைக்கப்பட்டது; இது ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய பிரச்சாரத்தை ஏற்கவில்லை. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஈரான் அதன் யுரேனிய அடர்த்திச் செயல்பாடுகளை தற்காலிகமாக கூட நிறுத்தவில்லை என்றுதான் அமைப்பு உறுதி செய்தது--அவை அணுவாயுதப் பரவா உடன்படிக்கையின்படி முற்றிலும் சட்டபூர்வமானவைதான்; ஆனால் ஈரான் இந்த நடவடிக்கைகள் அணுகுண்டு செய்வதற்கு இயக்கப்படவில்லை என்ற புது உத்தரவாதங்களை ஈரான் கொடுக்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் IAEA உடன் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது; அதன்படி கட்டுமானத்தில் இருக்கும் அரக்கில் இருக்கும் அதன் கன நீர் ஆலையை ஆய்வாளர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர்; மேலும் நடன்ஸில் இருக்கும் அதன் முக்கிய அணுசக்தி நிலையத்தை காமராக்கள் மூலம் கண்காணிப்பது அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளது.

இந்த அமைப்பின் வெளியேறும் இயக்குனர் மகம்மத் எல்பரடேய், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தல் என்பது பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று உறுதியாக அறிவித்தார். Bulletin of the Atomic Scientists இடம், ஒரு அணுவாயுதத் திட்டம் பற்றி சான்றுகள் இல்லாவிட்டாலும், "எப்படியோ பலரும் ஈரானின் அணுவாயுதத் திட்டம் உலகிற்கு பெரும் ஆபத்து என்று கூறுகின்றனர். பலவிதங்களிலும் இந்த அச்சுறுத்தல் அதிகமாகப் பேசப்பட்டுவருகிறது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் பற்றிய இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் , பெருகிய முறையில் வலதுசாரி புதிய கன்சர்வேடிவ் பிரிவுகள் அமெரிக்காவில் அதற்கு ஆதரவு கொடுப்பது மற்றும் ஒபாமா நிர்வாகத்திலேயே அதற்கு ஆதரவு என்ற பின்னணியில், பெருகிய தூதரக வழி நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் மற்றும் வெளியுறவு அமைச்சரகத்தின் ஹில்லாரி கிளின்டன் ஆகியோர் ஒபாமாவின் வனப்புரை காட்டுவதைவிடக் கூடுதலாக இன்னும் ஆக்கிரோஷமான நிலைப்பாடு வேண்டும் என்று குறித்துள்ளனர். ஒரு இஸ்ரேலியத் தாக்குதலை அமெரிக்கா தடுக்க முடியாது என்று பிடென் கூறினார்--இது உண்மையில் ஒரு கேலிக்கூத்தான கருத்தாகும், ஏனெனில் எந்த வான்ழித் தாக்குதலும் அமெரிக்கா அல்லது நேட்டோ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வான்வழியேதான் நடத்தப்பட முடியும்; அது துருக்கி, ஈராக் அல்லது பாரசீக வளைகுடா எதுவாயினும் சரி.

வோல்ஸ்ட்ரீட் ஜர்னல் தலையங்கப் பக்கம் போன்ற வலது தீவிரத்தின் வாடிக்கையான ஆசிரியக் குரல்கள், மற்றும் புஷ் நிர்வாகத்தின் முன்னாள் ஐ.நா. தூதராக இருந்த ஜோன் போல்டன் ஆகியோர் வெளிப்படையாக அமெரிக்க ஆதரவு கொண்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர்; அதே நேரத்தில் தவிர்க்க முடியாத மோதலை ஒத்திவைப்பதற்கு ஒபாமா கையாளும் ராஜதந்திர மூடிமறைப்பையும் கண்டித்துள்ளனர்.