World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Deepening crisis surrounds Middle East talks

மத்திய கிழக்கு பேச்சுக்களில் ஆழ்ந்த நெருக்கடி சூழ்கிறது

By Jean Shaoul
3 September 2009

Use this version to print  | Send feedback

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கும் (PA) இடையே ஜனாதிபதி ஒபாமாவின் மத்தியஸ்த்தில் ஓர் உடன்பாட்டு காணப்படுவதற்கு அண்மித்துள்ளதாக குறிப்பிடும் செய்தி ஊடகத் தகவல்கள் மத்திய கிழக்கில் இருக்கும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை நிராகரிக்கின்றன. வாஷிங்டனின் நிலைமையையும் செல்வாக்கையும் மீட்கும் ஒபாமாவின் முயற்சிகளுக்கும் மற்றும் அமெரிக்க பூகோள-அரசியல் நலன்களைத் தொடருவதற்கும் இந்த எண்ணெய் வளமுடைய பகுதி முழுவதும் உள்ள உறுதியற்ற ஆட்சிகளைத்தான் பெரிதும் நம்பியிருக்கவேண்டியுள்ளது.

இஸ்ரேலுடன் உடன்பாடு என்பதுடன் வந்த நம்பமுடியாத கூற்றுக்களில் ஒன்று 2010 வரை மேற்குக்கரையில் புதிய குடியிருப்புக்களுக்கான ஒப்பந்தங்களை இஸ்ரேல் வழங்காது என்பதாகும். கடந்த வாரம் இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நேடன்யாகுவிற்கும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் மத்தியகிழக்கிற்கு அமெரிக்க சிறப்புத் தூதரான ஜோர்ஜ் மிட்செல் ஆகியோருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இவ்வாறு கூறப்பட்டது.

செப்டம்பர் 23ல் நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் அல்லது பிட்ஸ்பர்க்கில் அதற்கு அடுத்த இரு நாட்களில் நடக்க இருக்கும் G20 மாநாட்டிலோ ஒபாமா சமாதான மாநாடு பற்றி அறிவிக்க இருப்பதற்கு முன்பு வாஷிங்டனிலும் ஜேருசெலத்திலும் குறைந்தது இரு சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகளாவது அடுத்த 15 நாட்களில் நடக்கும்.

புஷ்ஷின் பேரழிவு ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒபாமா மாற்றக்கூடும் என்ற நப்பாசைகளை முடுக்கிவிடும் வர்ணனையாளர்களை பொறுத்த வரையில் கடந்த ஆறுமாத கால முடக்கம் பெரும் பாராட்டிற்கு உட்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பாராட்டப்படுவதற்கு ஏதும் இல்லை.

2,400 குடியேறியவர்கள் வீடுகள் கட்டப்படுவதை இந்த முடக்கம் தடுக்கவில்லை. ஏனெனில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்களால் கட்டப்படுகின்றன. அரசாங்கம் உந்துதல் கொடுக்கும் குடியேற்றக் கட்டமைப்புக்கள் மொத்ததில் 40 சதவிகிதம்தான் உள்ளன. கிழக்கு ஜேருசெலத்தில் நடக்கும் கட்டிட வேலைகளையும் முடக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அங்கு பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து நீதிமன்ற உத்தரவுகளின்கீழ் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் குடியேற்றங்கள் கட்டப்படும்.

இதைத்தவிர, தற்காலிகமாக இருந்தாலும் எந்த முடக்கமும் நேடன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிப் பங்காளிகளுக்கும், தீவிர தேசியவாத, மதவாத இயக்கங்களுக்கும் முற்றிலும் ஏற்புடையது அல்ல. இவை அனைத்தும் விரிவாக்க கொள்கையில் உறுதியாக நிற்பதுடன், எந்தவித பாலஸ்தீன நாடு பற்றியும் எதிர்ப்புக் காட்டுகின்றன. தன்னுடைய பங்கிற்கு பாலஸ்தீனிய அதிகாரம் பாலஸ்தீனிய நாடு நிறுவப்படுவது பற்றிய பேச்சுக்கள் மீண்டும் தொடக்கப்பட வேண்டும் என்றால் குடியற்ற கட்டுமானத்தில் முழு முடக்கம் என்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறது.

இது, மேற்குகரை உள்ளடங்கிய காசாவை உள்ளடங்கிய ஒரு இராணுவமற்ற மற்றும் பிரிக்கப்பட்ட நாடு ஒன்று என்பதுதான் ஒபாமா தெளிவாக்கியுள்ளார். அது பல தொடர்ச்சியற்ற வீட்டுகட்டிட தொகுப்புக்களை கொண்டிருப்பதுடன், இவற்றைச் சுற்றி எட்டு மீட்டர் உயரமுள்ள காங்க்ரீட் சுவரும் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின்கீழும் இருக்கும்.

1948, 1967 ல் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்ட அல்லது ஓடிப்போன பாலஸ்தீனியர்கள் மீண்டும் திரும்புவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது. அதேபோல் குடியபெயர்ந்த மக்களின் சந்ததிகள் திரும்புவதையும், 1967 போரில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசெலத்தை பாலஸ்தீன அதிகாரத்திற்கு மீண்டும் கொடுப்பதையும் அது எதிர்க்கிறது. இதை பாலஸ்தீன அதிகாரம் ஏற்றாலும் பாலஸ்தீனிய மக்களாலும் ஏற்பர் என்பது தெளிவல்ல. பாலஸ்தீன மக்கள் முக்கியமாக பாலஸ்தீன அதிகாரத்திற்கு ஆழ்ந்த விரோதமுடையவர்களாக இருக்கின்றனர்.

இதையும் விட முக்கியமானது, செய்தி ஊடகத்தில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும், லண்டன் பேச்சுக்கள் இஸ்ரேலின் ஒரு முக்கிய கோரிக்கையை ஒப்புக் கொண்டன. அதாவது தமது தற்காலிக, பகுதி முடக்க உடன்பாட்டிற்கு விலையாக ஈரானிடம் அமெரிக்க அணுகுமுறை இன்னும் கடினமாக இருக்க வேண்டும் என்பதாகும். வாஷிங்டனும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும் தெஹ்ரான் யுரேனிய அடர்த்தித் திட்டத்தை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கத்தவறினால் இன்னும் கடுமையான பொருளாதார தடைகளைச் சுமத்தத் திட்டமிட்டுள்ளன. எரிசக்தி உற்பத்திக்காகத்தான் யுரேனிய அடர்த்தித் திட்டம் முற்றிலும் நடைபெறுகிறது என்று தெஹ்ரான் வலியுறுத்துகிறது. பொருளாதார தடை ஈரானின் எண்ணெய், எரிவாயு தொழிற்துறையை "முடக்கிவிடும்" என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரி கிளின்டனும் நேடான்யாகுவும் கூறியுள்ளனர்.

ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வது தடைக்குட்பட வேண்டும் என்று இஸ்ரேல் கூறுகிறது. இது ஈரானைக் கடுமையாகப் பாதிக்கும். உலகிலுள்ள எண்ணெய் இருப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளதாக ஈரான் இருக்கையில், அது ஒரு பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். ஆனால் அதன் சுத்திகரிப்புத் திறனைப் பாதித்துள்ள பொருளாதாரத் தடைகளினால் அதற்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், டீசல் தேவைகளில் 40 சதவிகிதத்தை அது இறக்குமதி செய்து கொள்ளுகிறது.

ஆனால் ஐ.நா.ஆதரவு இல்லாமல் அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் தனியாக இதைச் செய்வது கடுமையான வர்த்தக போர்களைக் கொண்டுவந்துவிடும். ரஷ்யா, சீனா ஆகியவற்றிடம் இருந்து உடன்பாட்டிற்கு இசைவு பெறுவது மிகக்கடினம் ஆகும். தடைகளைச் சுமத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் ஒப்புதலைப் பெறுவதற்கு அவற்றின் உடன்பாடு தேவையாகும். சீனா தன்னுடைய எண்ணெய், எரிவாயுத் தேவைகளுக்கு ஈரானைத்தான் நம்பியுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை என்பது ஒரு போர்ச் செயலுக்கு ஈடாகும். ஏனெனில் பாரசிய வளைகுடாவில் நுழையும் கப்பல்களைக் கண்காணிக்க போர்க்கப்பல்கள் தேவைப்படும்.

ஈரானின் எண்ணெய் தொழிலுக்குத் தேவையான கருவி மற்றும் தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதன் மீதான தடை என்பதற்கு மாற்றீடு என்பது ரஷ்யா, சீனாவிற்கு குறைந்த அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கும். ஆனால் மேற்கில் இருந்து வரும் விநியோகஸ்தர்களை பெரிதும் பாதிக்கும். ஆனால் அதனால் குறைந்த உடனடி விளைவுதான் இருக்கும். மேலும் அது இஸ்ரேலுக்கு ஏற்புடைத்ததாக இருக்காது. ஏனெனில் அது ஒன்றை விட்டுக் கொடுத்து மற்றதை பெற விரும்புகிறது. தெஹ்ரான் யுரேனிய அடர்த்தித் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்க இருப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் எவ்வாறு பாலஸ்தீனியர்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உடன்பாட்டில் வாஷிங்டன் விதிகளை வலியுறுத்த விரும்பாததற்குக் காரணம், ஒபாமா நிர்வாகம் ஈரானுடன் எப்படி நடந்து கொள்ளுவது என்பது பற்றிக் கொண்டிருக்கும் பிளவுகளைப் பிரதிபலிக்கிறது. துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் இஸ்ரேல் தனது பாதுகாப்பு நலன்களைக் பாதுகாக்க தேவை என்றால் ஈரான் மீது இராணுவரீதியாகத் தாக்குவதற்கு ஆதரவு கொடுக்கிறார். ஆனால் ஒபாமா இதை எதிர்க்கிறார்.

தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கு வாஷிங்டன் கொண்டுள்ள முயற்சி, கடந்த ஜூன்மாத ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி சக்திகளுக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் நடந்தது, இதுவரை வெற்றியடையவில்லை. ஆனால் தெஹ்ரானின் மதசார்பு உடைய ஆட்சியில் இருக்கும் போட்டி முதலாளித்துவப் பிரிவுகளின் கடுமையான உட்பூசலை அது தொடர்ந்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

அதிகரித்தளவில் உறுதியற்றதாக தோன்றும் ஈரானிய அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் வாஷிங்டன் தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவி மற்றும் அவருடைய ஆதரவாளரும், கோடீஸ்வரருமான முன்னாள் ஜனாதிபதி அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் மீது அதிகாரச் சமநிலையை மாற்றுவதற்கு முயல்கிறது.

இப்பிரிவு ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்டின் வெளியுறவுக் கொள்கையை பொறுப்பற்றது என்று குறைகூறியுள்ளது. இன்னும் விரைவான முறையில் தடையற்ற சந்தையின் பொருளாதாரக் கொள்கைகள், பரந்த அளவில் வெளிநாட்டு மூலதனம் வரவேற்கப்பட வேண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கான ஆதரவை இது அடையாளம் காட்டியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானை அதன் நட்பு நாடுகளான சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்போல்லாவிடம் இருந்து தனிமைப்படுத்த முயல்கிறது. எனவே இது டமாஸ்கஸுடன் நல்லிணக்கத்திற்கு முற்பட்டு, இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே சமாதான ஒப்பந்தத்தையும் விரும்புகிறது. இஸ்ரேலின் வலதுசாரி அரசாங்கம் அத்தகைய சலுகைகள் சிரியாவிற்கு கொடுக்கப்படுவதை எதிர்க்கிறது.

லெபனானில் வாஷிங்டனின் ஆதரவாளரான சாத் ஹரிரி தேர்தலில் போதிய பெரும்பான்மையின்றி வெற்றி பெற்று நான்கு மாதங்கள் ஆகியும் அரசாங்கம் அமைக்க முடியாமல் உள்ளார். இது அரசியலில் அழுத்தமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் எவ்வித மறுசீரமைப்பிற்கும் முக்கியமானது எகிப்து ஆகும். 1978ல் இருந்து இது அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. இஸ்ரேலை அங்கீகரித்த முதல் அரபு நாடு என்ற முறையில் எகிப்து கடந்த 30 ஆண்டுகளாக லெபனானுக்கு எதிரான இஸ்ரேலியப் போர்களுக்கு ஆதரவு தருதல், பாலஸ்தீனியர்களின் அனைத்து போர்க்குணமிக்க எதிர்ப்பை அடக்கும் நோக்கம் கொண்ட எல்லா பேச்சுவார்தைகளுக்கும் தரகராக நிற்றல், எகிப்தின் காசாவுடனான எல்லையை கண்காணித்தல் என்ற விதத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு ஒத்துழைத்துள்ளது.

இன்று எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள பங்கு ஏதேனும் ஒருவிதத்தில் மேற்குகரையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் பாலஸ்தீன அதிகாரத்துவத்திற்கும் காசா மீது கட்டுப்பாடு உடைய ஹமாஸுக்கும் இடையே உடன்பாடு காண வேண்டும் என்பதாகும். அதுதான் காசா மீது பாலஸ்தீன அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டை மீட்பதுடன், எகிப்தின் காசா எல்லை வழியே போராளிகளுக்கு ஆயுதங்களை கடத்தி கொண்டு வருவதற்கு முற்றுப் புள்ளி வைத்து மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து ஆயுதமேந்திய எதிர்ப்பையும் அடக்கும். எகிப்து மற்ற அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளைச் சீராக்கும் வகையில் உடன்பாட்டை காணவேணடும் என்றும், ஈரான் மீதான வாஷிங்டனின் கொள்கைக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் ஒபாமா விரும்புகிறார்.

இது ஒரு வலுவற்ற, மக்கள் ஆதரவு குறைந்த ஆட்சிக்கு மிக அதிக செயலாகும். இஸ்ரேலுக்கான அதன் ஆதரவும் மற்றும் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு, போர் ஆகியவற்றிற்கான ஆதரவும் எகிப்திற்குள்ளேயே ஆழ்ந்த முறையில் அரசியல் உறவுகளை உறுதியற்றதாக்கி, பரந்த அரபு உலகில் அதன் அரசியல் நம்பகத் தன்மையையும் அழித்துவிட்டது. இதனால் வாஷிங்டனுக்கும் கெய்ரோவிற்கும் இடையே உறவுகள் சீராக இல்லை. எகிப்துடன் உறவுகளை மீட்க ஒபாமா விரும்புகிறார்; கடந்த மாதம் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஐந்து ஆண்டுகளில் முதல் தடவையாக வாஷிங்டனுக்கு வருகை புரிந்தார்.

ஆனல் முபாரக் ஆட்சி அதன் இறுதி நாட்களில் உள்ளது. 81 வயது ஜனாதிபதி ஆரோக்கியமற்ற உடல்நலத்தில் இருக்கையில், எகிப்திய அரசியல் வாழ்வில் இவருக்குப் பின் வரப்போவது யார் என்ற பிரச்சினைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. முக்கிய அரசியல் எதிர்த்தரப்பாகிய முஸ்லிம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்பது எகிப்திய, அமெரிக்க ஆளும்வர்க்கம் இரண்டிற்கும் ஏற்புடைத்ததாக இல்லை; அது தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்கள் தேர்தலில் சுயேச்சையாகத்தான் நிற்க முடியும். அதன் உறுப்பினர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம்.

தன்னுடைய 46 வயது மகன் ஹமாலை தனக்குப் பின் பதவிக்கு வர முபாரக் தயார் செய்து வருகிறார். இந்த நடவடிக்கை எகிப்திய மக்களிடையே மட்டும் செல்வாக்கு பெறவில்லை என்பதுடன் இராணுவத்தாலும் விரும்பப்படவில்லை. அதுதான் அதிகாரத்திற்குப் பின்னே உண்மையான சக்தியாகும். இப்பொழுது உள்துறை மந்திரியாக உள்ள தளபதி ஒமர் சுலைமானை முபாரக்கிற்கு பின்னர் பதவிக்கு வர இராணுவம் விரும்புகிறது என்பதற்கான கருததுக்கள் வந்துள்ளன.

பதவியை அடைதல் அமைதியாக இல்லை என்றால், பரந்த அரசியல் அமைதியின்மையை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இராணுவ ஆட்சிமாற்றம் வரலாம் என்ற அச்சம் உள்ளது. அது அப்பகுதி முழுவதிலும் உறுதியைச் சீர்குலைக்கும். சமீபத்திய மாதங்களில் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் பற்றி 1,500க்கும் மேற்பட்ட எதிர்ப்புக்கள் வெளிவந்துள்ளன. இவை பெருகிய வறுமை மற்றும் கஷ்டமான நிலை ஆகியவற்றால் எரியூட்டப்பட்டுள்ளன. எகிப்தின் 78 மில்லியன் மக்கள் பெரும் வேலையின்மையையும், விரைவாக உயரும் பணிவீக்கத்தையும் எதிர்கொள்ளுகின்றனர். 40 சதவிகித மக்கள் வறுமைக்கோடு அல்லது அதற்கு கீழேதான் வாழ்கின்றனர்.