World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German federal election on September 27

What does the Pirate Party stand for?

செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் ஜேர்மன் தேசிய தேர்தல்

Pirate Party ன் நிலைப்பாடு என்ன?

By Dietmar Henning and Andreas Kunstmann
7 September 2009

Use this version to print | Send feedback

சமீபத்தில் நிறுவப்பட்டுள்ள Pirate Party, செப்டம்பர் 27ம் தேதி ஜேர்மனியின் தேசிய தேர்தலில் முதல் தடவையாக நிற்கிறது. இக்கட்சி மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இணையதளத்தில் தகவல் சுதந்திரம் என்ற தனிப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது.

Pirate Party யின் வேர்கள் ஸ்வீடனில் உள்ளன. இது ஜனவரி 1, 2006 ல் நிறுவப்பட்டது. Pirate Bay என்னும் வலைத்தளத்தில் இருந்து வெளிப்பட்டுள்ளது. அது (முக்கியமாக சட்டவிரோத) இசை, திரைப்படங்கள், மென்பொருட்கள், பிற இணையதளக் கோப்புக்கள் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்து வந்தது. ஏப்ரல் 2009ல் Pirate Bay அமைப்பாளர்களை பதிப்புரிமை மீறல்களுக்கு ஓராண்டு காவல் மற்றும் 2.75 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்த ஒரு ஸ்டாக்ஹோம் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து Swedish Pirate Party 2009 ஐரோப்பியத் தேர்தல்களில் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

அப்பொழுது முதல் ஜேர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் பெரு நாடுகளில் Pirate கட்சிகள் நிறுவப்பட்டுள்ளன. ஏனைய இடங்களிலும் கட்சி நிறுவப்பட ஒழுங்கு நடைபெறுகின்றது.

ஜேர்மனிய Pirate கட்சி செப்டம்பர் 2006ல் கூட்டாட்சி அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டுத் துவக்கத்தில் ஹெஸ மாநிலத்தில் அது 0.5 சதவிகித வாக்கைப் பெற்றது. ஐரோப்பியத் தேர்தலில் 0.9 சதவிகிதம் பெற்றது. ஜூன் மாதம் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி Jorg Tauss கட்சியை விட்டு விலகி Pirate கட்சியில் சேர்ந்து அக்கட்சிக்கு ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் முதல் பிரதிநிதித்துவத்தை அளித்தார். சில இளையத்தளங்களை போலீஸ் தடுக்க அனுமதித்த சட்டத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவளித்ததால் அக்கட்சியை விட்டு நீங்கினார். சிறுவர்களைப் பற்றிய பாலியல்படங்கள் இணையத்தில் வருவதை தடுக்கப்பட வேண்டும் என்ற போலிக்காரணம் இப்புதுச்சட்டம் இயற்ற கொடுக்கப்பட்டது.

அது கொடுத்துள்ள விவரங்களின்படி, ஜேர்மனிய Pirate கட்சி இப்பொழுது 7,200 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் புதிதாக நிறுவப்பட்ட சிறு கட்சிகளில் சிறந்த வகை வாக்குப்பதிவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜேர்மனியத் தேர்தல் சட்டத்தின் தேவைக்கேற்ப பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறத் தேவையான 5 சதவிகித வாக்குகளை அது பெறுவது அநேகமாக இயலாது.

Pirate கட்சியின் வேலைத்திட்டம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். கல்வியைத் தவிர, இக்கட்சி இணையதளத்துடன் நேரடியாகப் பிணைந்துள்ள பிரச்சினைகளான தகவல் பற்றி சுய நிர்ணயம், தடையற்ற முறையில் அறிவுப்பறிமாற்றம், பதிப்புரிமை, காப்புரிமைச் சீர்திருத்தங்கள், வெளிப்படைத் தன்மை மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளுகிறது.

உதாரணமாக Pirate கட்சி வலைத்தள உடன்நிகழ்வு (online) மற்றும் ஒளிப்பதிவு தணிக்கையை நிராகரிக்கிறது. மேலும் தகவல்களை அரசாங்கம் முற்கூட்டியை பதிந்து வைத்துக் கொள்ளுவதையும் நிராகரிக்கிறது. அது "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்" என்ற போலிக்காரணத்தினால் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) யின் தலைமையில் இருந்த முன்னாள் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ சமூக யூனியனின் (CDU) ஏஞ்சலா மெர்க்கெலின் தலைமையில் உள்ள பெரும் கூட்டணியான SPD, CDU, CSU ஆகியவற்றால் விரிவாக்கம் செய்யப்பட்டது. மென்பொருட்கள் மீது இருக்கும் காப்புரிமையையும் Pirate கட்சி எதிர்க்கிறது. பொதுத்தளத்தை கொண்ட மென்பொருளை(Open Source software) பயன்படுத்தும் மற்றும் அதற்காக வாதிடுவோர் இந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர்.

காப்புரிமை நெறித் தொகுப்புக்களிலும் மாற்றங்கள் வேண்டும் என்று Pirate கட்சி வாதிடுகிறது. "வணிக நலன்கள் இல்லாத தனிநபர்கள்" (முன்பு இருந்தது போலவே) "தடையற்ற முறையில் படைப்புக்களைப் பயன்படுத்தி, நகல் எடுத்துக் கொள்ளும்" உரிமையை பெற்றிருக்க வேண்டும். முக்கிய இசை, திரைப்பட, மென்பொருள் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் நகல் பாதுகாப்பு நடவடிக்கைகளை Pirate கட்சி நிராகரிக்கிறது. இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்காக பதிப்புரிமை ஊதியத்திற்கு பொதுவான பகுதிகொடுப்பனவு ஒன்றை அறிமுகப்படுத்துதல் (பண்பாட்டு சீர்விகிதம்-cultural flat rate- என அழைக்கப்படுவது) என்பது கட்சியில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அதன் தேர்தல் வேலைத்திட்டத்தில் அது குறிப்பிடப்படவில்லை.

"அரசு தன் பங்கில் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும்", "வெளிப்படையான அரசாங்கம் " ஆகியவற்றிற்கு Pirate கட்சி அழைப்புவிடுகிறது. தகவல் சுதந்திரச் சட்டம் "திருப்திகரமான அளவிற்கு கொண்டுவரப்படவில்லை" என்று இது கூறுகிறது. அரசாங்கம் கூடுதலான வெளிப்படைத் தன்மையை "முடிவுகள் எடுக்கும் வழிவகைகளில்" கையாண்டு இவற்றை "இன்னும் கூடுதலான குடிமக்கள் புரிந்து, உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில்" கொண்டுவரவேண்டும் என்கிறது. இதன் தேர்தல் வேலைத்திட்டத்தின்படி "வெளிப்படைத்தன்மை" "தேசியப் பாதுகாப்பு" பிரச்சினைகள் என்று வரும்போது முடிவிற்கு வந்துவிடும்.

கல்வித்துறையில் எவ்விதக் கட்டண வசூலிப்பும் கூடாது என்று Pirate கட்சி உறுதியாக நிராகரிக்கிறது. அப்பொழுதுதான் "சமூகப் பின்னணி எப்படி இருந்தாலும் ஒவ்வொருவரும் மிக அதிக அளவிற்கு சமூகத்தில் பங்கு பெற முடியும்" என்பது உறுதியாகும் என்று அதன் வலைத்தளத்தில் கட்சி அறிவித்துள்ளது. "பொருளாதாரத்தின் மிக முக்கிய ஆதாரங்களில் கல்வியும் ஒன்றாகும்; ஏனெனில் நீண்டகாலப்போக்கில், முன்னேற்றம் மற்றும் சமூகச்செழிப்பு ஆகியவை அறிவைத் தக்கவைத்துக் கொள்ளுதல், பெருக்கிக் கொள்ளுதல், மற்றவர்களுக்கு அளித்தல் ஆகியவற்றின்மூலம்தான் அடையப்பட முடியும்."

Pirate கட்சியின் முக்கிய ஆதரவு இணையதளப் பிரிவில் இருந்து வருகிறது. அதன் பாராளுமன்ற வேட்பாளர்கள் கிட்டத்தட்ட மென்பொருள் தயாரிப்பாளர்கள், கணினி விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் என்றுதான் உள்ளனர்.

Pirate கட்சி வெளிப்படையாக சமூகக்கோரிக்கைகள் அல்லது பிற அரசியல் பிரச்சினைகளை எழுப்ப மறுக்கிறது. "எங்களுக்கு நன்கு தெரிந்த சில அரசியல் கொள்கைகள் பற்றித்தான் நாங்கள் வாதிட விரும்புகிறோம், எங்களுக்கு போதிய திறைமை இல்லாத பிரச்சினைகளில் உரிமையுடன் பேச விரும்பவில்லை" என்று அதன் வலைத்தளத்தில் கட்சி கூறியுள்ளது. ஒரு இணையதள அரங்கில் Pirate கட்சி தன்னை இடது அல்லது வலது என்று கருதுகிறதா என்ற வினாவிற்கு கூறும் பதில்: "இல்லை, Pirateக்களான நாங்கள் தீவிரங்களான "வலது", "இடது" போன்றவற்றின் கடுமையான எல்லைக் கோடுகளுக்கு வேளியே இருப்பதாகக் காண்கிறோம்." இக்கட்சி மத்தியிலும் நிற்கவில்லை எனலாம், "ஆனால் அரசியல் நிலைப்பாடுகளின் ஒருதலைப்பட்சமான பார்வையில் (எங்கள் கருத்துக்களில் இது மிக எளிதானது) அது வெளியேதான் உள்ளது."

இத்தகைய நிலைப்பாட்டில் ஒரு அரசியல் கபடமற்ற தன்மையைக் காணலாம். ஆனால் இது உண்மையில் வாக்காளர்களை வேண்டுமென்றே ஏமாற்றத்தான் உதவப் பிரதிபலிக்கிறது. சமூக போராட்டங்களால் பிளவுற்றிருக்கும் ஒரு சமுதாயத்தில் எந்தக் கட்சியும் சமூக வர்க்த்தில் இருந்து தனிப்பட்டு நிற்க முடியாது. இதில் Pirate கட்சியும் அடங்கும். உண்மையில் அது தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தை கடைபிடிப்பதை, முதலாளித்துவ அரசியலமைப்பை, முதலாளித்துவ அரசாங்கத்தை(அதை சில அதிகப்படியான செயல்களுக்காக குறைகூறினாலும்) வெளிப்படையாக விருப்புகிறது.

ஜேர்மனிய அரசியலமைப்பிற்கான அக்கட்சியின் பாராட்டு எல்லையற்றுள்ளது. " 1949ல் நம் நிறுவன தந்தைகள் இயற்றியுள்ள அடிப்படை சட்டம்(Basic Law) அதன் அடிப்படை வடிவமைப்பில் இருப்பதற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்." என்று அதன் தேர்தல் வேலைத்திட்டத்தின் முதல் அத்தியாயத்தில் அறிவிக்கிறது. முன்னர் மேற்கோளிட்ட இணையதள அரங்கிலும் Pirate கட்சி விளக்குவதாவது: "21ம் நூற்றாண்டின் பிரச்சினை "வலது" அல்லது "இடது", "பழைமைவாதம்" அல்லது "சமூக ஜனநாயகம்" என்பவை அல்ல. பிரச்சினை சுதந்திரமா அல்லது சர்வாதிகாரமா என்பதுதான். நாங்கள் சுதந்திரத்தின் பக்கம் மிகத் தெளிவாக நிற்கிறோம். எங்களுக்கு முழு சிறப்பு என்பது நம்முடைய அடிப்படை சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தாராளவாத, ஜனநாயக, அரசியலமைப்புத்தான்.

இத்தகைய சொற்றொடர் வெற்றுத்தன தடையற்ற சந்தை தாராளவாத ஜனநாயக கட்சியின்(FDP) கொள்கை பற்றிய ஆவணத்திலும் இருக்கலாம்.

காப்புரிமை பற்றிய Pirate கட்சியின் திட்டங்கள் ஒரு புதிய "வணிக மாதிரிகளை" "கலைஞர்கள், படைப்பாளர்கள், செய்தியாளர்கள், கணினி வல்லுனர்கள் மற்றும் பிற பண்பாட்டு உழைப்பாளிகளுக்கு" நிறுவதல்; அதையொட்டி "டிஜிட்டல் பண்பாட்டு சமூகத்தின் படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புக்களின் பயன்பாடு, அல்லது அதைச் சுற்றியுள்ள துறைகளில் தடையற்ற சந்தை அடிப்படையில் வருமானங்கள் கிடைக்கும்."

பாப் இசைத் தொழிலைப் பொறுத்தவரையில், கட்சி, "இடைத்தரகர்களை அகற்றுவதின் மூலம் ஊதிய வாய்ப்புக்கள்" சிறப்பாக இருக்க கட்சி உறுதியளிக்கும்; அதாவது, சர்வதேச இசை நிறுவனங்கள் இல்லாமல். இது கலைஞர்களுக்கு தங்கள் படைப்புக்களில் இருந்து "அதிக பகுதி" வருமானத்தைப் பெற உதவும்.

"தனியார் பொருளாதார நலன்களை" ஒட்டி பொது உள்கட்டுமானத்தில் (இரயில் போக்குவரத்து, சாலைகள், மின்விசை அளிப்புக்கள், நீர்வழிப் பாதைகள்) " எவ்விதமான "உருக்குலைக்கும் போட்டி செல்வாக்கை-competition-distorting influence" இக்கட்சி நிராகரிக்கிறது. இத்தகைய இணையங்களில் "பொதுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக" அரசாங்கம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

பெருவணிகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தை மத்தியஸ்திற்கு இழுக்கும் குட்டி முதலாளித்துவத்தின் சொல்லாட்சியாகும் இது. பலமுறை அரசாங்கத்திற்கு முறையிட்டுள்ள நிலையில், கட்சி உழைக்கும் மக்களுக்கு மிக முக்கியமான பிரச்சினைகளான ஊதியங்கள், ஊழியர்கள் உரிமைகள், வேலைகள், சமூகநல விரோதச் சட்டங்கள் போன்றவை பற்றி எந்தக் குறிப்பையும் கூறவில்லை.

Pirate Party ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சி ஆகும். வேலைத்திட்டரீதியாக பார்க்கும்போது FDP மற்றும் பசுமைவாதிகளுக்கு நெருக்கமானது ஆகும். துரிஞ்சியா மாநிலத்தில் இது ஏற்கனவே சமீபத்திய மாநிலத் தேர்தலில் பசுமைவாதிகளுடன் உடன்பாட்டைக் கொண்டது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் உள்ள Pirate Party யின் ஸ்வீடனின் பிரதிநிதியும் பசுமைவாத பாராளுமன்றக்குழுவில் சேர்ந்துள்ளார்.

இதைத்தவிர, கடந்த காலத்தில் போலீஸ் அரசாங்கக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் தகவல் பெறும் உரிமையைக்குறைக்கும் சட்டங்கள், தகவல் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்களுக்குப் பொறுப்பான கட்சிகளுடன் ஒத்துழைக்கவும் தயாராக உள்ளது. Pirate Party யின் செய்தித்தொடர்பாளர் Aaron Koening, Youtubeஇல் ஒரு ஒளிப்பதிவுக்காட்சியில் தன் கட்சியில் முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டால் CDU, SPD கட்சிகளுடன் அரசாங்கத்தில் தான் சேரத்தயார் என்று கூறியுள்ளார்.

Koenig, Bitfilm Network GmbH என்னும் நிறுவனத்தை நிறுவியரும் நிர்வாக இயக்குனரும் ஆவார். இது "திரைப்படங்களின் உள்ளடக்கத்தை இணையத்தில்" கொண்டுவரும் செயல்களைப் புரிகிறது. இவர்தான் Pirate கட்சியின் விளம்பரம், தொடர்பிற்கு பொறுப்பு ஆவார். இவர் ஜூலை மாதம்தான் கட்சியில் சேர்ந்திருந்தார்.

Pirate கட்சிக்கு முக்கிய ஆதரவு ஒழுங்கற்ற, ஆபத்தான பணிகளில் தொடர்புடைய மற்றும் நடைமுறை கட்சிகளில் இருந்து விரோதப்போக்கு உடைய தற்காலத் தொழில்நுட்பத்தினால் செல்வாக்கிற்குட்பட்டவர்களான குறிப்பாக மாணவர்கள், பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்று மின்னணு செய்தி ஊடகத்தின் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்ட இளைஞர்களிடம் இருந்து கிடைக்கின்றது.

ஆனால் Pirate Party விரைவில் அதன் ஆதரவாளர்களை ஏமாற்றத்திற்கு உட்படுத்தும். முக்கியமான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் ஒரு தெளிவான நிலைப்பாட்டைக் கொள்ளாமல், சமூகத்தில் பிளவுகள் உள்ள நிலையில் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாத்தல் முடியாது. சுய-நிர்ணயம், சமூகத்தில் பங்கு பெறுதல், வெளிப்படைத்தன்மை இன்னும் Pirate Party ஆல் வாதிடப்படும் பல பிரச்சினைகள் சமூகச் செல்வத்தின்மீது ஒரு சிறுய நிதிய தன்னலக்குழு கட்டுப்பாட்டைக் கொண்டு, அனைத்து பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகள் அதன் ஆணைகள் மூலம் நிறைவேற்றப்படும் வரை தீர்க்கப்பட முடியாதவை ஆகும்.

Pirate Party தன்னுடைய திட்டத்தில் எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினைகள், கண்காணிப்பு பரப்பப்படல், தகவல் பாதுகாப்பின்மீது தடைகள், தகவல் பெறும் உரிமையில் வரம்புகள் அனைத்தும் சமூக அழுத்தங்கள் பெருகியிருப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும். இவை தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் மற்றும் ஒரு சமூக எழுச்சி ஆபத்திற்கு எதிராக இயக்கப்படுபவை.

எனவே ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம் தேவைப்படுகிறது. புதிய செய்தி ஊடகத்திற்கும் இணையதளத்திற்கும் ஒரு வெளிப்படையான, சுதந்திரமான, தொழிலாள வர்க்கத்தின் சமூக, அறிவார்ந்த தேவைகளை நிறைவு செய்ய முன்னுரிமை--பெருவணிக நிறுவனங்களில் இலாப நோக்கத்திற்கு என்று இல்லாமல்--தேவைப்படுகிறது. இலாபமுறை, தனியார் சொத்துக்கள் மற்றும் தடையற்ற முறை என்றுள்ள முதலாளித்துவ ஆட்சியின் அஸ்திவாரங்களுக்கு எதிராக போராடுவதன் மூலம்தான் ஜனநாயகத்தை பெற்றுக்கொள்ள முடியும்.