World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Threat of US-led sanctions against Iran

ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் பொருளாதாரத் தடை அச்சுறுத்தல்

By Peter Symonds
14 September 2009

Use this version to print | Send feedback

அமெரிக்கா சுமத்தியுள்ள கால அவகாசம் முடியும் தறுவாயில், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மீண்டும் சர்வதேச அரங்கின் மையத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் இறுதிக்குள் அணுசக்தி பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தைகளுக்கு நேரிய முறையில் தெஹ்ரான் இணங்கவில்லை என்றால் அமெரிக்கா இன்னும் புதிய, கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு அழுத்தும் கொடுக்கும் என்று கடந்த மாதம் ஒபாமா நிர்வாகம் எச்சரித்திருந்தது.

கடந்த வெள்ளியன்று அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனியுடன் (P5+1) ஈரானுடன் பேச்சு வார்த்தைகளுக்கு ஒப்புக் கொண்டது. இது தெஹ்ரான் ஒரு ஐந்து பக்கத் திட்டத்தை புதனன்று அறிவித்தற்கு பின்னர் வந்த அறிவிப்பு ஆகும். ஆனால், அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் P.J.Crowley ஈரானிய ஆவணத்தை உதறித் தள்ளும் வகையில், "ஈரானின் விருப்பம் செயலில் எப்படி என்பதைச் பரிசோதிப்பதற்காத்தான்" அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறுகிறது என்று அறிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் சுமுக முடிவு ஏற்படுவது கடினமாகும். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஈரான் அதன் யுரேனிய அடர்த்தித் திட்டம் மற்றும் பிற அணுசக்தி நிலையங்களை மூடவேண்டும் என்று கோருகின்றன. இது பல முறையும் ஈரானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் அணுவாயுத பரவல் தடை உடன்படிக்கையின் கீழ் ஈரானுக்கு உள்ள அணுசக்தி எரிபொருள் தயாரிக்கும் உரிமைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார். தெஹ்ரானின் திட்டம் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் பற்றி எந்தக் குறிப்பையும் காட்டவில்லை.

கூட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்னும் வாஷிங்டனின் முடிவு ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்துவதைவிட ரஷ்யா, சீனா மீது அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் தடுப்பதிகார உரிமைகளை கொண்டுள்ளதுடன், கூடுதலான பொருளாதாரத் தடைககளுக்கு தங்கள் எதிர்ப்பை முன்னரே காட்டியுள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் P5+1 பேச்சுவார்த்தை ஈரானுடன் நடக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றன. அது அடுத்த வாரம் நடக்க இருக்கும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்ட தொடக்கத்திற்கு முன் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. இது ஐ.நா. கூட்டத்தில் தெஹ்ரான் மீது அழுத்தத்தை அதிகரிக்க பயன்படுத்தபடலாம் என்ற பார்வையும் உள்ளது.

ஆனால் கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ் ஈரானுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கை கொடுக்கும் வகையில் கூறினார்: "விவாதத்தில் இருக்கும் சில பொருளாதாரத் தடைகள், எண்ணெய், எண்ணெய் பொருட்கள் பற்றியவை உட்பட, ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்ற கட்டாயப்படுத்துவதற்கு உரிய கருவி அல்ல. இவை இன்னும் முழு தடுப்புக்களுக்கான வழிவகைதான். இது ஒன்றும் ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் ஆதரவைப் பெறும் என்று நான் நினைக்கவில்லை."

வாஷிங்டனில் இருந்து வந்த அழுத்தத்தை அடுத்து, ஐ.நா.பாதுகாப்புக் குழு ஏற்கனவே ஈரானிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என்று நாட்டின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்பு உடையவையாக கருதப்படுபவற்றிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை சுமத்தியுள்ளது. இதைத்தவிர, அமெரிக்க அதன் ஒருதலைப்பட்ச நிதியத் தடைகளைச் சுமத்தி மற்ற நாடுகளும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது. இப்பொழுது விவாதிக்க இருக்கும் திட்டம் ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணைப் பொருட்கள் ஏற்றுமதி மீது தடையாகும். இந்த நடவடிக்கை ஈரானின் பொருளாதாரத்தின் மீது முடக்கிவிடும் தாக்கத்தைக் கொடுக்கும். ஏனெனில் ஈரானில் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாததால் ஈரான் அதன் எரிபொருள் தேவைகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது.

அமெரிக்காவிற்குள்ளேயே செய்தி ஊடகமும் அரசியல் ஆளும் வர்க்கமும் ஈரானுடன் அதனிடம் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதங்கள் பற்றி மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன கடந்த வியாழனன்று நியூயோர்க் டைம்ஸ் ஈரான் "அணுசக்தித் தயாரிப்பிற்கான ஆபத்து நிறைந்த, விரைவான அணுசக்தி எரிபொருளைப் போதுமான அளவிற்கு கொண்டுள்ளது" என்ற முடிவிற்கு அமெரிக்க உளவுத்துறை வந்துள்ள, மிகைப்படுத்தப்பட்ட கூற்று பற்றி எழுதியுள்ளது. இக்கட்டுரையில் ஆயுதத் தரத்திற்கு வரக்கூடிய அணுசக்தி எரிபொருள் அடர்த்தி தயாரிப்பிற்கான சான்றுகள் எதையும் கொடுக்கவில்லை. அதேபோல் 2007 தேசிய உளவுத்துறை மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ள 2004ல் அணுவாயுதத் திட்டங்களை தெஹ்ரான் கைவிட்டுவிட்டது என்பதை அமெரிக்க உளவுத்துறைகள் திருத்திக் கொண்டுவிட்டன என்பதற்கும் சான்றுகள் கொடுக்கவில்லை.

செய்தித்தாளின் கூற்று சர்வதேச அணுசக்தி அமைப்பிற்கு (IAEA) அமெரிக்கத் தூதர் Glyn Davies கூறிய கருத்துக்களை ஒத்துத்தான் உள்ளது; அவர் கடந்த வாரம் அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் ஈரான் "செய்யும் திறன் இருக்கும் தன்மையை" கொண்டுள்ளது என்றார். அணுவாயுதப் பரவல் எதிர்ப்பு உடன்படிக்கையின்கீழ் தன் உரிமைகளைப் பயன்படுத்துவதாக கூறும் ஈரான் பலமுறையும் அணுவாயுதங்களை தான் தயாரிக்க உள்ளது என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது. மேலை நாடுகள் மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை IAEA விற்குக் கொடுத்தள்ள சான்றுகள் என்பவற்றை கட்டுக்கதைகள் என்று நிராகரித்துள்ளது.

கடந்தவார கட்டுரையை தொடர்ந்து நியூயோர்க் டைம்ஸ் சனிக்கிழமை அன்று ஒரு தலையங்கத்தை "அந்த செப்டம்பர் கால கெடு" என்ற தலைப்பில், பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றால் ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு கொடுத்து எழுதியிருந்தது. "அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் ஈரான் எதிர்ப்பைத் தொடர்ந்தால், இன்னும் கூடுதலான அழுத்தம் கொடுக்கக்கூடிய பொருளாதாரத் தடைகள் பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுள் ஈரானில் புதிய எரிசக்தி முதலீட்டிற்கு தடை, ஈரானுக்கு பெட்ரோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுத்தப்படல் ஆகியவை இரு முக்கிய கருத்துக்கள்" என்று தலையங்கம் கூறியது. "வாஷிங்டனும் ஐரோப்பாவும் ரஷ்யா மற்றும் பாதுகாப்புக் குழுவை தன்னோடு இணைத்துச் செல்ல முடியவில்லை என்றால், தாங்களே இம்முறை இதைச் செயல்படுத்த வேண்டும்."

கடந்த வியாழனன்று ஜனநாயகக் கட்சியின் மன்ற வெளியுறவுக் குழுவின் தலைவரான ஹோவர்ட் பெர்மன் ஈரானின் பெட்ரோல் இறக்குமதிகள் குறித்து அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு சட்டமியற்றுவதை செய்ய இருப்பதாக எச்சரித்தார். "இதுவரை ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்னும் ஜனாதிபதி ஒபாமா அழைப்பை பொருட்படுத்தவில்லை. அதன் போக்கை ஈரான் மாற்றிக் கொள்ளவில்லை என்றால்.....அடுத்த மாதம் என்னுடைய சட்டவரைவை கொண்டுவந்து ஈரானை இறுக்கும் வழிவகைகளைத் தொடக்குவேன்." "Advocacy Day on Iran" என்ற இஸ்ரேலிய ஆதரவுக் குழுக்களின் சார்பில் நடந்த கூட்டத்தில் பெர்மன் இவ்வாறு பேசினார்.

ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலின் அழுத்தத்தின் கீழ் உள்ளது. இஸ்ரேல் அணுவாயுதத்தை கொண்ட ஈரானைப் பொறுத்தக் கொள்ள முடியாது என்றும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது வான்வழித் தாக்குதல்கள் என்ற அதிகம் மறைப்பில்லாத அச்சுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு அசாதாரண நடவடிக்கையில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகு ரஷ்ய அரசாங்கத்தை அது திட்டமிட்டிருக்கும் S-300 விமான-எதிர்ப்பு ஏவுகணைகளை ஈரானுக்ற்கு விற்பதை தொடர வேண்டாம் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகின்ற -இக்கருவிகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை தடுக்கும்திறனைக் கொண்டவை.

ஒரு இஸ்ரேலிய தாக்குதல் இல்லாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை சுமத்த முற்படும் அமெரிக்கச் செயல்கள், பாரசீக வளைகுடாவில் அழுத்தங்கள அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதுடன், இராணுவ மோதலையும் தூண்டும். ஈரானுக்கு பெட்ரோலியம் ஏற்றமதி கூடாது என்ற தடைக்குப்பின் இருக்கும் தர்க்கம், அது செயல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது அழுத்தம் கொடுத்தல் அல்லது அது பலனளிக்காவிட்டால், ஈரான் மீது பொருளாதார முற்றுகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். ஒபாமா நிர்வாகம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்கள் நடக்காது என்று கூறவில்லை.

இத்தகைய விருப்பங்கள் பரிசீலனையில் இருப்பதை அடிக்கோடிடுவது போல், பிரான்சின் இராணுவத் தலைவர், தளபதி Jean-Louis Georgelin வியாழனன்று இராணுவ நடவடிக்கை ஒரு உகந்த விருப்புரிமை இல்லை என்று அறிவித்தார். வாஷிங்டனில் இருக்கும் அட்லான்டிக் குழுவின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கயில் அவர் "ஈரானில் இராணுவ நடவடிக்கையை திட்டமிடுவது ஒரு கடினமான செயல் ஆகும்; ஏனெனில் ஒரே தாக்குதலில் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட முடியும் என்பது பற்றி நாங்கள் உறுதியாக இல்லை; ஒரு தாக்குதலில் ஒரு முறை தோற்றுவிட்டால், அது பேரழிவில் கொண்டுவிடும்." என்று கூறினார்.

வெள்ளியன்று ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புட்டின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எச்சரிக்கும் வகையில் ஈரான் மீதான தாக்குதல் "மிக ஆபத்தானது, ஏற்கத் தக்கது அல்ல." என்றார். இது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று கூறிய அவர், "பயங்கரவாத வெடிப்பிற்கு இது வழிவகுக்கும்" என்றும் கூறினார். "இத்தகைய தாக்குதல்கள் கூறப்படும் இலக்கை அடையுமா என்பது பற்றி நான் சந்தேகப்படுகிறேன்." என்றார்.

ஈரான் மீது தீவிரமடைந்துள்ள அழுத்தம், புஷ்ஷின் நிலைப்பாட்டை விட தெஹ்ரான் மீது ஒபாமா கொண்டுள்ள நிலைப்பாடு அடிப்படையில் அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எண்ணெய் வளம் கொழிக்கும் பகுதிகளான மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய ஆதிக்கத்தை நிறுவ முற்படும் விழைவுகளுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஈரானிய ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா முயலுகிறது. அணுசக்தி பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்தத் தயார் என்று ஒபாமா கூறுவது எப்பொழுதும் ஈரான் அமெரிக்க ஆணைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் பொருளாதாரத் தடைகள், இராணுவத் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற அச்சுறுத்தலை பின்னணியில் கொண்டுள்ளது.