World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Left Party retreats from its demand for a withdrawal of troops from Afghanistan

ஜேர்மனிய இடதுகட்சி ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்ற தன் கோரிக்கையில் இருந்து பின்வாங்குகிறது

By Peter Schwarz
19 September 2009

Use this version to print | Send feedback

ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இடது கட்சி ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனிய துருப்புக்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தன் கோரிக்கையை குறிப்பிடத்தக்கவகையில் மாற்றிக் கொண்டுள்ளது. கவனத்துடன் செய்யப்படும் சில நடவடிக்கைகளின்படி, கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் போர் மூலோபாயத்தில் ஒரு மாற்றீட்டிற்கு தங்கள் ஆதரவை அடையாளம் காட்டியுள்ளனர். இத்தகைய மூலோபாயம் போரின் முக்கிய சுமையை நேட்டோவின் ஆப்கானிய நட்பு சக்திகளுக்கு மாற்றி, ஜேர்மனிய மக்களிடையே போருக்கு எதிராக இருக்கும் கணிசமான எதிர்ப்பை கீழறுப்பதாகும் --அதே நேரத்தில் ஒரு புவிசார் மூலோபாய முக்கிய பகுதியின் கட்டுப்பாடு என்னும் போருக்கு சென்றதின் முதல் காரணத்தை சிறிதும் கைவிடாமல் இருப்பதும் ஆகும்.

இடது கட்சியின் தலைவர் ஓஸ்கார் லாபொன்டைன் Sächsischen Zeitung இடம் புதனன்று, ஜேர்மனிய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து "உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்பதை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெளிவாக்கியுள்ளார். "உடனடி என்றால் அவசரமாக உடனடி என்று பொருள் இல்லை. பாராளுமன்றம் அதன் பங்காளிகளுடன் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதாகும்" என்று அவர் கூறினார்.

இதேபோன்ற கருத்துக்கள் இடது கட்சி மேலாளர் Dietmar Bartsch ஆலும் Tagesspiegel க்கு கூறப்பட்டது. "ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறு" என்ற கோஷத்தை முன்வைத்தபோது, மறுநாள் ஆப்கானிஸ்தானில் இருந்து அகன்றுவிட வேண்டும் என்று கட்சி கூறவில்லை" என்று அவர் வலியுறுத்தினார். SPD உத்தியோகபூர்வமாக ஆப்கானிஸ்தானில் இருந்து "எவ்வளவு விரைவில் முடியுமோ அப்பொழுது" என்று ஒப்புக் கொண்டாலே அது "முக்கிய அடிவைப்பு" ஆகும், குறிப்பாக நாள் குறிப்பிடவில்லை என்றாலும், என்று அவர் கூறினார்.

இடது கட்சியின் பாதுகாப்பு விவரங்கள் பற்றிக் கூறும் பால் ஷாவர் Spigel Schafer இடம் கூறினார்: "இது ஒன்றும் பெரும் அவசரத்தில் செய்யப்படக்கூடிய விஷயம் அல்ல. ஓராண்டிற்குள் திரும்பப் பெறலாம் என்று முடிவு செய்வதே திரும்பப் பெறுவதுதான். எப்படியும் அதையும் விட நீடித்த அவகாசம் வேண்டாம்" என்றார் அவர். குறைந்த பட்சம் காபூல் அரசாங்கம் இன்னும் அதிக பொறுப்பை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச அடையாளங்களாவது தேவை என்றார் அவர்.

Junge Welt க்கு 10 நாட்கள் முன்பு கொடுத்த பேட்டியொன்றில், இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவரான Dagmar Enkelmann தான் ஏற்கனவே "வெளியேறும் மூலோபாயம் பற்றி பரந்த பொது விவாதத்திற்கு" ஆதரவு கொடுப்பதாகக் கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

"வெளியேறும் மூலோபாயம்" என்பது போரை வேறுவிதத்தில் தொடர்வது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. தற்போது நேட்டோ மற்றும் ஜேர்மனிய அரசாங்கம் இரண்டும் அத்தகைய மூலோபாயத்தை விவாதித்துக் கொண்டிருப்பதுடன் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு ஆப்கானிஸ்தான் பற்றிய மாநாட்டிற்கும் திட்டமிட்டுள்ளன--இந்தத் முன்முயற்சியை Enkelmann வெளிப்படையாக வரவேற்றார்.

ஈராக் விவாகத்தைப் பொறுத்தவரையில், "வெளியேறும் மூலோபாயம்" என்றால் என்ன என்பதை அது தெளிவாக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வழிநடத்திய "வெளியேறும் மூலோபாயத்தின்படி", ஈராக்கிய சிறுகுழுக்களின் தலைவர்கள் இலஞ்சம் கொடுக்கப்பட்டு, ஒருவரோடு ஒருவர் மோதுமாறு செய்யப்பட்டனர்; அதே நேரத்தில் 100,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் மிக அதிக ஆயுதம் நிறைந்த தளங்களில் தொடர்ந்து உள்ளனர். இதன் விளைவு குருதி கொட்டும் உள்நாட்டுப்போரும், நாடு தொடர்ந்து ஆக்கிமிப்பில் இருப்பதும் ஆகும்.

ஆக்கிரமிப்பு சக்திகள் இதேபோன்ற திட்டங்களைத்தான் ஆப்கானிஸ்தானிற்கும் வைத்துள்ளன. ஜேர்மனிய வெளியுறவு மந்திரியும் சமூக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான பிராங் வால்டர் ஸ்ரைன்மயர் வைத்த திட்டம் சமீபத்தில் இடதுகட்சியின் தலைவர் லாபொன்டைனினால் அதிக பாராட்டுக்களை பெற்றது. "ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவ நிலைகொள்ளல் நிறுத்தப்பட வேண்டும் என்று பிற கட்சிகளிடையே வெளிப்படையாக வளர்ந்துவரும் உணர்வு உள்ளது" என்று ஸ்ரைன்மயரின் 10 அம்சத்திட்டம் பற்றி லாபொன்டைன் கருத்துக் கூறினார்.

அமெரிக்காவில் ஈராக் செய்தது போல், ஆப்கானிய இராணுவம் மற்றும் போலீசாருக்கு பயிற்சி கொடுத்தல் அதிகரிக்கப்பட வேண்டும், அதுவும் "பாதுகாப்புப் பிரச்சினை தீவிரமாக உள்ள பகுதிகளில்" என்று ஸ்ரைன்மயர் விரும்புகிறார். அவருடைய கருத்தாய்வு வேண்டும் என்றே படைகளை திரும்பப் பெறுவது பற்றி எந்தக் குறிப்பான தகவலையும் கொடுக்கவில்லை. மாறாக, அவருடைய திட்டங்கள் பிந்தைய கட்டத்தில் படைகள் திரும்பப் பெறுவதற்கான "அஸ்திவாரங்களை" தோற்றுவிப்பதை இலக்காகக் கொண்டுள்ளன.

உடனடியாக துருப்புக்கள் திரும்பப்பெறப்பட வேண்டுமென்ற கோரிக்கையின் தன்மையை மாற்றி, ஸ்ரைன்மையரின் திட்டத்திற்கு ஆதரவை அறிவித்த வகையில், இடதுகட்சி ஆப்கானிஸ்தானில் இராணுவத் துருப்புக்கள் நிலைப்பாட்டிற்கு, பொதுமக்களிடையே கூடுதலான எதிர்ப்பு இருந்தாலும்கூட, பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதை அறிவித்துள்ளது. பல வர்ணனையாளர்கள் கட்சி எப்படி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுகிறது என்பது பற்றிக்குறிப்பாக அறிந்துள்ளனர்.

Taggespiegel ஏடு இந்த வினாவை எழுப்பியது: "இடது கட்சி "ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக துருப்புக்கள் வெளியேற வேண்டும்" என்று கூறுவது "எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்" என்று ஆகிவிட்டது. அரசாங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் திசையில் கட்சி நகர்ந்து கொண்டிருக்கிறதா?'

Spiegel Online, இப்படி கவனத்துடன் இணைந்து பேசும் விதம் "வெளியுறவு பற்றி ஒருமித்த உணர்விற்கு வரத்தயார் என்ற முடிவைக்காட்டுவது போல்: இங்கு கவனியுங்கள், எங்களிடம் ஆப்கானிஸ்தான் பற்றி நீங்கள் பேசலாம் என்று உள்ளது." "ஆப்கானிஸ்தானை பொறுத்தவரையில், SPD, இடது கட்சி மற்றும் பசுமைவாதிகள் கூட்டாட்சி மட்டத்தில் ஒத்துழைப்பிற்காக இருப்பதாகக் கருதப்படும் முக்கிய தடைகள் இருந்தாலும், சமரசங்கள் செய்துகொள்ள முடியும் என்ற அடையாளத்தை லாபொன்டைன் காட்டுகிறார்" என்று கூறியுள்ளது.

இடது கட்சியின் மாறிவிட்ட போக்கு பாராளுமன்றத் தேர்தல்களுக்கு சில தினங்கள் முன்பு வந்துள்ளது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அடுத்த அரசாங்கம் மிகவும் உறுதியற்றதாக இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்துள்ளதுதான். (CDU) கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் தேர்தலுக்கு பின்னர் தடையற்ற சந்தை சார்பு (FDP) Free Democratic Party உடன் கூட்டிற்கு சாதகம் என்று கூறியுள்ளது, ஆனால் அத்தகைய கூட்டணி மிகக் குறுகிய பெரும்பான்மையைத்தான் கொள்ள முடியும், தொடுவானத்தில் வெளிப்பட்டுவரும் சமூக அதிர்ச்சிகளை சமாளிக்கத் திறனற்றுவிடும். தற்பொழுதைய பெரும் கூட்டணி (CDU-SPD-CSU) பல SPD, CDU உறுப்பினர்கள் நம்புவது போல், மீண்டும் ஒரு பதவிக்காலம் ஆட்சியில் இருத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்தால், இது மக்கள் கட்சிகள் என அழைக்கப்படும் இரண்டின் சரிவைத்தான் விரைவுபடுத்தும்.

எனவே இடது கட்சி அடுத்த 2013 தேர்தல்களை பற்றி திட்டமிடுவதுடன் அதற்கு முன்னதாக எப்படி இருக்காலம் என்றும் கணக்கிடுகிறது; பெருகும் சமூக எதிர்ப்பைத் திசை திருப்புவதற்கு, ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தில் பொறுப்பு எடுத்துக் கொள்ளச் சொன்னால் என்ன செய்யலாம் என்றும் கருதுகின்றது. இவ்வித்த்தில் பல ஆண்டுகளாக கட்சி கிழக்கு ஜேர்மனியில் மாநில மற்றும் கம்யூன்கள் மட்டத்தில் தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்துள்ளது.

ஞாயிறு தேர்தல்களுக்கு பின்னர் முத்தரப்புக் கூட்டணி வெளிப்படுவது கடினமாக இருக்கும். SPD உறுதியாக இடது கட்சியுடன் கூட்டு இல்லை என்று கூறிவிட்டது; கட்சியின் "உறுதியை உடைப்பதற்கான" எந்த முயற்சியும் கட்சியை சிதைத்துவிடும். இதேதான் FDP க்கும் பொருந்தும்; அது SPD, பசுமைவாதிகளுடன் அரசாங்கத்தில் கூட்டணி என்பது இல்லை என்று தள்ளிவிட்டது; அதுபோலவே FDP, CDU உடன் கூட்டணி இல்லை என்று பசுமைவாதிகள் கூறிவிட்டனர்.

ஆயினும்கூட, இடது கட்சி தேர்தலுக்கு முன் ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தில் பின்னர் தான் பங்கு பெறுவதற்கான சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. எதிர்பார்ப்பது போல் SPD தேர்தலில் சங்கடத்தை சந்திக்க உள்ளது என்றால், கட்சியின் பழைய தலைமை கீழிறங்கும் கட்டாயத்திற்கு உட்படும். கட்சித் தலைவர் Franz Müntefering 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்; தன்னுடைய கட்சியின் தோல்வியை அடுத்து, ஸ்ரைன்மையர் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிற்க முடியாது. இடது கட்சியுடன் ஒத்துழைப்பு என்பது பேர்லின் மேயர் Klaus Wowereit, SPD இளைய சோசலிஸ்ட்டுக்களின் முன்னாள் தலைவர் Andrea Nahles மற்றும் "இணைய தளக்காரர்கள்" தலைவர் என்று அழைக்கப்படும் Signmar Gabriel ஆகியோர் SPD உயர் தலைமைக்கு வருவது எளிதாகும்.

எனவேதான் இடது கட்சி இப்பொழுது தன்னால் இயன்ற அளவிற்கு SPDக்கு அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சார்லாந்து, துரிஞ்சியா மாநிலத் தேர்தல்களுக்கு பின்னர், புதிய மாநில பாராளுமன்றங்களின் அமைப்பு பற்றிய பேச்சுக்கள் தொடரும்போது, இடது கட்சி SPD பசுமைவாதிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தான் எவ்வித சமரசத்திற்கும் தயார் என்று தெளிவாக்கியுள்ளது. துரிஞ்சியாவில் மாநில இடது கட்சியின் தலைவர் Bodo Ramelow பிரதம மந்திரி பதவியில் இருந்து தான் SPD, பசுமைவாதிகளுடன் கூட்டணி வசதிக்காக இராஜிநாமா செய்யத் தயார் என்று இப்பொழுது அறிவித்துள்ளார். இடது கட்சி மாநிலத் தேர்தல்களில் மிக வலுவாக வெளிப்பட்டும், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிதான் மாநிலப் பிரதமராக இருக்க வேண்டும் என்ற மரபு இருந்தாலும், அவர் அப்படிக் கூறியுள்ளார்.

இடது கட்சியுடன் கூட்டாட்சி அளவில் எப்படிப் பங்கு பெறுவதும், உழைக்கும் மக்களுக்கு எதிராக தவிர்க்க முடியாமல் இயக்கப்படும். அக்கட்சி தற்போதைய அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை தொடரும் என்பதோடு, அனைத்து பொது எதிர்ப்பிற்கும் எதிராக அவற்றைச் சுமத்தும்.