World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The "paradigm shift" in German foreign policy

ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் "அடிப்படை நிலை மாற்றம்"

Stefan Steinberg
3 April 2010

Use this version to print | Send feedback

ஜேர்மனியச் செய்தி ஊடகத்தில் பல சமீபத்தியக் கருத்துக்கள் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கிரேக்கக் கடன் நெருக்கடி பற்றிய நிலைப்பாடு தொடர்பாக எச்சரிக்கை உணர்வைத் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டத்தில், மேர்க்கெல் கட்டளைகளை இட்டு கிரேக்கத்திற்கு எவ்வித ஐரோப்பிய உதவியும் கண்டிக்கும் நிபந்தனையின் கீழ் தான் கிடைக்கும் என்றும், அதுவும்கூட கடைசித் தீர்வாகத்தான் கொடுக்கப்பட முடியும் என்றும் கூறினார்.

மேர்க்கெலின் அடிப்படை நிலைப்பாடு பற்றி பல வலதுசாரி அரசியல் கருத்துக்கள் மற்றும் ஜேர்மனியின் பரபரப்பு செய்தி ஊடகத்தால் வரவேற்கப்பட்டுள்ளபோது, மற்ற வர்ணனையாளர்கள் இது ஜேர்மன் வெளியுறவின் அடிப்படைக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது, நீண்டகால மற்றும் ஆபத்தான விளைவுகள் உள்ளடக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Der Spiegel உடைய சமீபத்திய பதிப்பு இப்பிரச்சினை குறித்து "அங்கேலா மேர்க்கெல் எந்த அளவிற்கு ஒரு ஐரோப்பியர்? போருக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையை சான்ஸ்லர் கைவிடுகிறார்" என்ற தலைப்பில் பிரச்சினையை எழுப்புகிறது. "ஜேர்மனியின் பெரும் ஐரோப்பியச் சார்பு உடைய சான்ஸ்லர்களான" இரு பழைமைவாத கொன்ராட் அடிநெளவர் மற்றும் ஹெல்முன் கோல் மற்றும் சமூக ஜனநாயக ஹெல்முட் ஷ்மித் இன் பங்கைப் பற்றிப் பாராட்டும் ஏடு கிரேக்க நெருக்கடிக்கு மேர்க்கெல் கொண்டுள்ள அணுகுமுறை ஒரு "அடிப்படைக் கொள்கை மாற்றம்", இவருக்கு முன் பதவியில் இருந்தவர்கள் கொண்டிருந்தவற்றிலிருந்து அடிப்படை முறிவைக் கொண்டுள்ளது என்று விவரித்துள்ளது.

ஜேர்மனிய சான்ஸ்லர் "பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஆணையத்தின் முக்கிய பங்காளிகளுடன் தன் நலன்களை அதிக பரபரப்பு இல்லாமல் அமைதியாகச் செயல்படுத்தும்" அணுகுமுறையை முன்பு கொண்டிருந்தார் என்று ஏடு எழுதியுள்ளது. " இப்பொழுது மேர்க்கெல் "இக்கொள்கையை ஒரு முக்கியமான பிரச்சினையில் கைவிட்டுள்ள முதல் சான்ஸ்லர் ஆகிறார். ஜேர்மனிய நலன்கள், ஐரோப்பிய நலன்கள் தனித்தனியானவே, ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்." என்று Der Spiegel குறிப்பிட்டுள்ளது.

இதே கருத்தைத்தான் ஜேர்மனிய வெளியுறவு மந்திரியும் 1998 முதல் 2005 வரை துணை சான்ஸ்லராகவும் ஜேர்மனிய பசுமைக் கட்சியின் தலைவராகக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருந்து வரும் ஜொஸ்கா பிஷ்ஷர் இந்த வாரம் முன்னதாக Süddeutsche Zeitung பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"Frau Germania என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில், பிஷ்ஷர் கேட்கிறார்: "ஏஞ்சலா மேர்க்கெலுக்கு என்ன ஆயிற்று? சிறிது காலம் முன்புதான் ஜேர்மனிய சான்ஸ்லர் "ஐரோப்பியப் பெண்மணி" என்று பாராட்டப்பட்டார். இப்பொழுது பெருகிய முறையில் ஜேர்மனியப் பெண்மணி என்ற தோற்றத்தைக் கொடுக்கிறார். உலக நிதியப் பொருளாதார நெருக்கடிக்காலத்தில் உறுதியான தலைமையைக் கொடுப்பதற்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரம் அதன் கூண்டுக்குள் முடங்குகிறது."

இதுவரை ஜேர்மனியானது ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் வழிவகையால் கணிசமாக இலாபம் அடைந்துள்ளது என்றும் பிஷ்ஷர் சுட்டிக் காட்டுகிறார். அவர் எழுதுவது: "ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் இயக்கும் கருவியாக ஜேர்மனி எப்பொழுதும் செயல்பட்டு வந்துள்ளது, இதுவும் அதன் அரசியல், பொருளாதார நலன்களை ஒட்டித்தான் இருந்துள்ளது... நோக்கம் எளிமையானது: ஜேர்மனி கொடுக்கிறது, அதையொட்டி இலாபத்தைப் பெறுகின்றது. இந்தச் சூத்திரத்தின் முதல் பகுதியை ஜேர்மனி முறிக்குமானால், ஐரோப்பியத் திட்டம் தீவிரச் சேதத்திற்கு உட்படுவதுடன், அதேபோல் ஜேர்மனிய நலன்களும் சேதம் அடையும். ஆயினும்கூட இந்தத் திசையில்தான் சான்ஸ்லர் மேர்க்கெல் சென்று கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது."

நிதிய தேர்வுத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யூரோப்பகுதி அங்கத்தவ நாடுகள் அகற்றப்பட வேண்டும் என்னும் மேர்க்கெலின் அழைப்பையும் பிஷ்ஷர் குறை கூறியுள்ளார். "யூரோவும், ஐரோப்பிய ஒன்றியமும் அத்தகைய அபராத நடவடிக்கைகளுக்குப் பிறகு தப்பிப் பிழைக்கும் என்று அவர் கருதுகிறாரா?"

கிரேக்கம் மற்றும் பிற யூரோப்பகுதி நாடுகள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேர்க்கெல் வலியுறுத்துவது ஜேர்மனிய நலன்களுக்குத் தீமை பயப்பதாகிவிடும், "பணக்குறைப்பை இந்த நாடுகளில் ஏற்படுத்தும் அவையோ ஜேர்மனிய ஏற்றுமதிகளுக்கு முக்கியச் சந்தைகள் ஆகும்." என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிஷ்ஷரின் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தற்பொழுதைய மோதலின் முக்கியப் பொறுப்பு, ஜேர்மனி மற்றும் பிரான்ஸிடம்தான் உள்ளது. "வழிநடத்துவதற்குப் பதிலாக, பிரான்ஸ், ஜேர்மனி இரண்டும் இடைவிடாமல், பகிரங்கமாக ஒன்றையொன்று தகர்க்க முற்படுகின்றன. இந்த மோதல் கிரேக்கத்தின் மறுகட்டமைப்பிற்கு எவர் விலை கொடுப்பது என்பது பற்றி இருந்தாலும், உண்மைப் பிரச்சினை இரு பங்காளிகளுக்கும் இடையே உள்ள உள் அவநம்பிக்கைத்தனம் ஆகும். அதுதான் நிரந்தர மனவிரோதப் போக்கின் ஆபத்தில் கொண்டுவிடும்."

அமெரிக்கச் சரிவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி ஜேர்மனிய, ஐரோப்பிய செல்வாக்கை உலக அரங்கில் பெருக்க முற்படும் ஜேர்மனிய முதலாளித்துவத்தின் ஒரு அடுக்கின் சார்பில் பிஷ்ஷர் பேசுகிறார். 2007ல் பேர்லினில் Humboldt பல்கலைக்கழகத்தில் நடத்திய உரையில், பிஷ்ஷர் "அமெரிக்கா அதன் ஒருதலைப்பட்ச அரசியலினால் தன்னையை வலுவிழக்கச் செய்து கொண்டுள்ள நிலையில், உலகின் ஐரோப்பாவின் முக்கியத்துவம் குறைந்து வருவது பற்றிப்" பெரிதும் தாக்கினார்.

ஓராண்டிற்குப் பின், பிஷ்ஷர் ஒரு "ஐரோப்பிய தற்பொழுதைய உயர் மாற்றத்தை" ஜேர்மனிய, ஐரோப்பிய முதலாளித்துவ நலன்களுக்கு முன்வைப்பதற்கு, அதுவும் பெருகிய வணிக மோதல்கள் ஒருபுறத்தில் அமெரிக்காவுடனும் மறுபுறத்தில் சீனா மற்றும் ஆசியா நாடுகளும் இருக்கும் நேரத்தில், நிறுவுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். "இதை பாதுகாக்கும்" அவருடைய இயக்க சக்தி ஒரு வலுவான ஜேர்மனிய-பிரான்ஸ் அச்சு ஆகும்.

இப்பொழுது பிஷ்ஷர் ஐரோப்பிய நாடுகள் நல்லிணக்கத்துடன் ஒருங்கிணைதல் என்ற நம்பிக்கைகள் நசுங்கி விட்டன என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளார். 2007-2008 நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து, ஐரோப்பிய அரசியல் அரங்கில் அப்பட்டமான தேசிய நலன்களை பெருகிய முறையில் ஆதிக்கம் கொண்டுள்ளன. இந்த வளர்ச்சிக்குப்பின் சக்தி வாய்ந்த பொருளாதார காரணிகள் உள்ளன. தொழிலாளர் செலவினங்களுக்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஐரோப்பிய நாடுகளிடையே உள்ள இந்த மகத்தான பொருளாதார இடைவெளி குறித்து ஒரு உட்பார்வை கொடுக்கின்றன.

தொழிலாளர் செலவினங்கள் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 30.9 என்று உள்ள நிலையில், ஜேர்மனி ஐரோப்பிய நாடுகளின் நான்காவது இடத்தில் உள்ளது. ஜேர்மனியத் தலைநகரம் பேர்லினில் இருந்து இரண்டு மணிநேரக் கார்ப் பயணத்தில் உள்ள போலந்தில் தொழிலாளரின் செலவினங்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் மலிவாக, மணி ஒன்றிற்கு 6.9 என்று உள்ளது. ஐரோப்பிய உறுப்பு நாடான பல்கேரியா கடைசி இடத்தில், மணி ஒன்றிற்கு 2.9 என்ற செலவின அடிப்படையில் உள்ளது.

அதே நேரத்தில் நிதிய நெருக்கடி தனிப்பட்ட நாடுகளுக்குள் குறிப்பிடத்தக்க வகையில் சமூக துருவப்படுத்தல்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

இந்த அடித்தளத்தில் உள்ள பொருளாதார வேறுபாடுகள்தான் ஐரோப்பிய நாடுகளைத் தனியே செல்ல உந்துதல் கொடுத்து அவற்றை பெருகிய முறையில் தேசியவாதக் கொள்கைகளை ஏற்கச் செய்கின்றன.

ஐரோப்பா பற்றி ஜேர்மனியக் கொள்கையில் மாற்றம் ஆழ்ந்த அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பாவின் அமைதி என்பது கண்டத்தின் முக்கிய தொழில்துறை சக்தியான ஜேர்மனி இரு பிளவானதுடன் பிணைக்கப்பட்டிருந்தது. அதை சக்தி வாய்ந்த அமெரிக்கா ஒருபுறமும், மாஸ்கோவில் இருந்து ஸ்ராலினிச அதிகாரத்துவம் மறுபுறத்திலும் மேற்பார்வைக்கு உட்பட்டிருந்தது. பனிப்போரின் இறுதியில் ஸ்ராலினிச நாடுகளின் சரிவு மற்றும் அமெரிக்காவின் வலுக்குன்றிய நிலைமைகள் ஜேர்மனிய மறு ஒற்றுமைக்கான நிலைமைகளைத் தோற்றுவித்து, உலக அரங்கில் அதன் நலன்களை மீண்டும் உறுதிப்படுத்த வைத்துள்ளது.

மேர்க்கெல் எடுத்துள்ள நிலைப்பாடு ஜேர்மனிய ஒரு தேசியக் கூட்டிற்குள் தள்ளிவிடும் நிலையைப் பிரதிபலிக்கிறது என்று பிஷ்ஷர் எழுதியுள்ளார். ஆனால் ஐரோப்பாவின் மிகப் பெரிய, அதிக ஏற்றுமதிச் சார்பைக் கொண்ட பொருளாதாரம் உலகச் சந்தையில் இருந்து பின்வாங்குதல் இருக்க முடியாது. ஒன்றுபட்ட ஜேர்மனி கட்டமைத்துள்ள சக்திவாய்ந்த உற்பத்தி சக்திகள் ஜேர்மனிய முதலாளித்துவத்தை திரைக்குப் பின்னால் இருந்து வெறிவந்து "ஐரோப்பாவை சீராக்க" வழிகாண வேண்டும் என்று கூற நேரடியாகவும், அப்பட்டமாகவும் ஜேர்மனியின் நிதியச் சார்பினை ஒட்டி வெளிவரச் செய்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் இரு முறை ஜேர்மனிய விரிவாக்க நோக்கம் ஐரோப்பாவையும் உலகையும் போருக்கு இழுத்ததில் முக்கிய காரணியாக இருந்தது. ஐரோப்பாவை கட்டாய முறையில் மறுசீரமைக்கும் ஜேர்மனிய முயற்சி, தவிர்க்க முடியாமல் பழைய விரோதங்களைப் புதுப்பிக்கும், கண்டத்திற்கு அதையொட்டி பேரழிவு விளைவுகள் ஏற்படும்.

இது ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிராக ஐரோப்பிய சோசலிச நாடுகள் ஐக்கியம் என்ற புரட்சிகரத் வேலைத்திட்டத்திற்காக உலகத் தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றுபட்டு அதன் சுயாதீன முன்னோக்கை முன்வைத்து வளர்க்க வேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகிறது.