World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Election campaign focuses on economy

பிரிட்டன்: தேர்தல் பிரச்சாரம் பொருளாதாரத்தில் குவிப்பைக் காட்டுகிறது

By Jordan Shilton
9 April 2010

Use this version to print | Send feedback

பல மாத ஊகங்களுக்கு பின்னர், இறுதியாக செவ்வாயன்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மே 6ம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின்னர் கணித்துக் கூறமுடியாத வாக்கெடுப்புக்களில் இது ஒன்றாக இருக்கும், எவரும் வெற்றி கிடைக்காத நிலை கூட வரலாம் என்று கருதப்படுகிறது.

பிரிட்டனின் பொருளாதார வருங்காலம் பற்றி வாக்காளர்களின் அச்சத்தை தீர்க்கும் வகையில் அதன் நிதிய நெருக்கடியில் நாட்டை இயக்கிச் செல்வதற்கு தன்னிடம் இரு உறுதியான கைகள் உள்ளன என்று பிரெளன் கூறினார். அனுபவமிக்க அரசியல்வாதிகள் நிறைந்த "குழுவில், தான் ஒருவர்" என்றும் பிரிட்டனின் பொருளாதார மீட்பு கன்சர்வேடிவ்களுக்கு வாக்களிப்பதில் மூலம் ஆபத்திற்கு உட்படுத்திவிடக் கூடாது என்றும் கூறினார்.

கன்சர்வேடிவ்களுடன் தொழிற் கட்சியினுடைய வேறுபாடுகள், உரிய நேரத்தில் செய்வது பற்றியதுதான். குறுகிய காலத்தில் அரசாங்கம் தொடர்ந்து செலவிட வேண்டும், அது மந்த நிலையில் "இரட்டைச் சரிவு" எனப்படுவதற்கு எதிரான தற்காப்பு என்று பிரெளன் வாதிடுகிறார். கடந்த ஆண்டு மந்த நிலையில் இருந்து கடைசியில் வெளியேறிய பொருளாதாரங்களில் பிரிட்டனும் ஒன்றாகும். அதன் நான்காவது காலாண்டு வளர்ச்சி 0.4 சதவிகிதம் என்று 2008 வங்கி நெருக்கடிக்குப் பின் முதல் விரிவாக்கக் காலத்தைக் காட்டியது.

ஆனால் வரவு-செலவுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகிதத்திற்கு அருகில் உள்ள நிலையில், தொழிற் கட்சி இந்த இடைவெளியை அடுத்து பாராளுமன்ற வரைகாலத்திற்குள் 50 சதவிகிதம் குறைப்பதாக உறுதியளித்துள்ளது. இதையொட்டி தீவிர செலவுக்குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் முடியும் வரை அத்திட்டங்கள் பற்றி இரகசியமாக அது வைத்துக் கொள்ள விரும்பினாலும், அத்தகைய பெரும் செலவுக் குறைப்பிற்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் 10 முதல் 20 சதவிகிதக்குறைப்புக்கள் தேவைப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

தொழிற் கட்சி, கன்சர்வேடிவ் என்று இரு கட்சிகளுமே தவிர்க்க முடியாத குறைப்புக்களை செய்ய உறுதிபூண்டிருந்தாலும், தற்பொழுது அவற்றை மூடி மறைக்க முயல்கின்றன.

தன்னுடைய "மத்தியதர வர்க்க" பின்னணியையும், "சராசரி பிரிட்டனுக்கு தான் கொண்டிருப்பதாக உள்ள அக்கறை பற்றியும் பிரெளன் காட்டிக் கொள்ளும் விதத்தில் பல பணியிடங்களுக்கு திட்டமிட்ட ஒழுங்கில் வருகை புரிகிறார்.

கன்சர்வேடிவ் தலைவர் டேவிட் காமரோன் தான் சட்டத்தை மதிக்கும் வரிசெலுத்துபவர் என்னும் பிரிட்டிஷ் சமூகத்தில் "பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளவர்களை" பிரதிபலிப்பதாக கூறுகிறார். தன்னுடைய கட்சியை கூடுதலான "இரக்க உணர்வு", "கவலை காட்டுவது" என்று எடுத்துக் கூறும் முயற்சிதான் காமரோனின் தலைமையில் தொடர்ந்து இருக்கும் பல்லவி ஆகும். கடைசி நாட்களில் அவர் "நவீன" கன்சர்வேடிவ் கட்சி என்ற தகவல் பற்றி குறிப்பு காட்டியுள்ளார். இது வாக்காளர்களுக்கு "நம்பிக்கை, நல்ல போக்கு பற்றிய சிந்தனை, மாற்றம்" ஆகியவற்றை அளிக்கும் என்றும் கூறுகிறார்.

இத்தகைய அலங்காரச் சொற்களுக்கு பின்னணியில், எதிர்க்கட்சிகள் செலவுக் குறைப்புக்கள் இன்னும் கடுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதுவும் மே 7ல் அதிகாரத்தைப் பெறும் நாளில் இருந்து என்று வலியுறுத்துகின்றன. தொழிற் கட்சியினால் அரசாங்கக் கடன் உயர்ந்து போவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை பற்றி குறை கூறியுள்ளனர். தற்பொழுது அரச கடன் ா160 பில்லியன் என்று உள்ளது.

டோரி நிர்வாகத்தில் வருங்கால நிதி அமைச்சராகக்கூடிய ஜோர்ஜ் ஓஸ்போர்ன், தேசியக் காப்பிட்டிற்கான அளிப்புக்கள் முதலாளிகளிடம் இருந்து 1 சதவிகிதம் கூடுதலாக அதிகரிக்கப்படும் தொழிற் கட்சி திட்டத்தைக் கண்டித்துள்ளார். செலவுக் குறைப்புக்களானது வரி அதிகரிப்புக்களுக்கு பதிலாக ஆதரவைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போன்ற கருத்துக்கள்தான் CBI எனப்படும் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பிலுள்ள 38 வணிகத் தலைவர்கள் மற்றும் முன்பு தொழிற் கட்சிக்கு பரிவுணர்வு காட்டிய முக்கியஸ்தர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

BCC எனப்படும் பிரிட்டிஷ் வணிகக் குழு தேர்தல் பிரச்சாரத் தொடக்க நேரத்திலேயே வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், வரவிருக்கும் அரசாங்கம், அரச கடனை வணிகத்தில் இருந்து மாற்ற வேண்டும், குறைவூதிய தொழிலாளர்கள் முதுகுகளில் ஏற்ற வேண்டும், இதையொட்டி மறைமுக வரிவிதிப்பின் தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

BCC யின் தலைமை இயக்குனரான David Frost அறிவித்தார்: "பொதுத் தேர்தல்களின் முடிவு எப்படி இருந்தாலும், புதிய அரசாங்கம் மீட்பை நெரித்துவிடக்கூடிய கூடுதல் வணிக வரிகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு புதிய நிர்வாகத்தின் முதல் 90 நாட்களுக்குள், முதலாளிகள் தேசியக் காப்பீட்டுக்கு கொடுக்கும் கொடுப்புக்களில் 1 சதவிகித அதிகரிப்பு, 2011ல் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது, அகற்றப்பட்டு குறைந்த சேதம் கொடுக்கும் மதிப்புக் கூட்டு வரியில் 1 சதவிகித அதிகரிப்பு வேண்டும்."

இத்தகைய விதத்தில் வணிகச் சமூகத்தில் இருந்து ஆதரவு பிரிட்டனின் வரவு-செலவு பற்றாக்குறை விரைவில் குறைக்கப்பட வேண்டும் என்னும் கன்சர்வேடிவ் அழைப்புக்களுக்கு 20 பொருளாதார வல்லுனர்கள் ஆதரவு கொடுத்து பெப்ருவரியில் எழுதிய கடிதத்தில் வந்துள்ளது. அடுத்த அரசாங்கம் எப்படி வரவு-செலவுப் பற்றாக்குறை குறைக்கப்பட உள்ளது என்பது பற்றிக் குறிப்பு காட்டாவிட்டால், அல்லது அதை உயர் முன்னுரிமையாகக் கொள்ளாவிட்டால், சர்வதேச முதலீட்டாளர்கள் பிரிட்டனின் நாணயத் தன்மையில் நம்பிக்கை இழந்துவிடுவர் என்று கடிதம் எச்சரித்துள்ளது. சர்வதேச தரம் அளிக்கும் நிறுவனங்கள் லண்டனின் AAA அந்தஸ்து அரசாங்கக் கடன் மே 6 தேர்தலுக்கு பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாவிட்டால் ஆபத்திற்கு உட்படும் என்று குறிப்புக் காட்டியுள்ளன.

ஆனால் தொழிற் கட்சியும் நிதிய ஸ்தாபனத்தின் கணிசமான பிரிவின் ஆதரவைக் கொண்டுள்ளது. பிந்தையவை வெட்டுக்களை சுமத்துவதும் விரைவில் ஒரு பொருளாதார சரிவை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றன. 60 உயர்மட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் மேல் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்ட நிதி மந்திரி சான்ஸ்லர் அலிஸ்டேன் டார்லிங் மற்றும் லேரின் விருப்பமான 2011 வரை வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் குறைப்பு தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருப்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அப்பொழுதுதான் பொருளாதார மீட்பு பாதுகாப்புடன் நடைபெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. கடிதத்தில் கூறியுள்ளபடி, "பிரிட்டிஷ் பொது மக்களின் நலனுக்காக--நிதிய உறுதிப்பாட்டுக்கும்--முதல் முன்னுரிமை வலுவான பொருளாதார வளர்ச்சியை மீட்பது என்று இருக்க வேண்டும்."

கடந்த 13 ஆண்டுகளில் தொழிற் கட்சி தன்னை நிதிய உயரடுக்கிற்கு முற்றிலும் அடிபணிந்து நிற்பதைத்தான் காட்டியுள்ளது. இதையொட்டி தொழிலாள வர்க்கத்துடன் அது கொண்டிருந்த தொடர்புகள் அனைத்தையும் வெட்டி விட்டது. தாட்சர் மற்றும் மேஜர் டோரி ஆகியோரின் நிர்வாகம் 1980, 1990 களில் அறிமுகப்படுத்திய பல சீர்திருத்தங்கள் தக்க வைக்கப்பட்டன. பொதுத்துறை தனியார் மயமாக்கம் விரிவாக்கப்பட்டது, தொழில்துறையின் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு, லண்டன் நிதிய வணிக நகரத்தின் வங்கிச் செயல்களுக்கு வரிப் பாதுகாப்பு என்று விவரிக்கப்படும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சமூக சமத்துவமின்மை இப்பொழுது 1930 களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் காணப்படாத தரங்களில் உள்ளது.

சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: "பொதுச் செலவினக் குறைப்புக்களின் முன்னிழல் படிந்துள்ளது வாக்காளர்களுக்கு தங்கள் நிலைமையில் முன்னேற்றம் இருக்கும் என்ற நம்பிக்கையைச் சிறிதும் கொடுக்கவில்லை. இங்கிலாந்தின் நிதியப் பற்றாக்குறை தேசிய மொத்த உற்பத்தியில் 11.1 சதவிகிதம் ஆகும். தொழிற் கட்சியின் அவசரத் திட்டங்களான இந்த சமசீரற்ற தன்மையை சரிசெய்யும் முறை, ஒரு பாராளுமன்ற வரைக்காலத்தில் 11.9 அளவிற்கு பல துறைகளின் செலவுகளையும் குறைப்பது ஆகும்."

பிரிட்டனின் பொருளாதார நிலைமை மிக ஆபத்தாக உள்ளது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிப்பதுடன் ஏற்கனவே கிரேக்கத்துடன் ஒப்பிடுதல்கள் வரத் தொடங்கிவிட்டன. கிரேக்கத்தின் வரவு-செலவுப் பற்றாக்குறை இங்கிலாந்துடன் ஒப்பிடத் தகும் வகையில் உள்ளது. கிரேக்க கடன்மீது வட்டி அதிகரித்துவிட்டது என்ற செய்தி பிரிட்டனும் அதே திசையில் சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையைத் தூண்டிவிட்டுள்ளது.

Capital Econmics ன் Jonathan Loynes, "கிரேக்கத்தின் நிலைபோல் இங்கிலாந்தை மக்கள் அதே மாதிரி நோக்கவில்லை, ஆனால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, இங்கிலாந்தின் நிதி நிலைமை பற்றி பிடிப்பு காண்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அதிக உறுதியற்ற தன்மை உள்ளது."

The Bank for International Settlements (BIS) பிரிட்டனின் பொதுக் கடன் 5 சதவிகிதத்தில் இருந்து ஒரு தசாப்தத்தில் 10 சதவிகிதத்திற்கு அதிகரிக்கும் என்று இந்த வாரம் கணித்துள்ளது. இது கிரேக்க நிலைமையை விட மோசமானது ஆகும். வரவு-செலவுப் பற்றாக்குறையை அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.3 சதவிகிதம் குறைக்கும் திட்டம் பிரச்சினையை தீர்க்க போதுமானதாக இராது என்று BIS கூறியுள்ளது. இதற்கிடையில், OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சி அமைப்பு முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பைக் குறைத்து 0.5 சதவிகித வளர்ச்சி விகிதம்தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

தேர்தல் பிரச்சார தொடக்கம் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு இருந்தது போல் கன்சர்வேடிவ் வெற்றி அவ்வளவு உறுதியல்ல என்ற செய்தி கிடைத்ததற்கு சந்தைகள் எதிர்மறையில் எதிர்கொண்டன. கார்டியன் நடத்திய கருத்துக் கணிப்பு கன்சர்வேடிவ்களுக்கு நான்கு புள்ளி ஆதாயத்தைத்தான் தொழிற் கட்சிக்கு எதிராகக் கொடுத்துள்ளது. பிரிட்டனின் தேர்தல் முறையில் இது ஒரு பாராளுமன்ற பெரும்பான்மைக்கு வழிவகுக்காது. டாலருக்கு எதிராக பவுண்டின் நிலை செவ்வாயன்று 0.2 சதவிகிதம் குறைந்தது. இந்தப் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளபடி, "இந்த ஆண்டு இதுவரை யூரோவிற்கும் ஸ்டேர்லிங்கிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதற்கு எந்தக் காரணத்தையும் முதலீட்டாளர்கள் கொண்டிருக்கவில்லை. இரண்டுமே டாலருக்கு எதிராக 6.3 சதவிகிதக் குறைவைக் கண்டுள்ளன. ஆனால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ள இங்கிலாந்து தேர்தல், மே 6 என உறுதியாக்கப்பட்டுள்ளது, நிலைமையை மாற்றக்கூடும்--ஆனால் ஸ்டேர்லிங்கிற்கு சாதகமாக என்று கூறமுடியாது."

எவருக்கும் பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் பாராளுமன்றம் இருந்தால், லிபரல் டெமக்ராட்டுக்கள் முக்கியக் கட்சிகள் ஒன்றுடன் பெரும்பான்மைக்காக சேர அழைக்கப்படலாம். பாராளுமன்றத்திற்கு சில சிறு சீர்திருத்தங்கள், இங்கிலாந்தின் முதலில் அதிக வாக்குப் பெறுபவர் இடம் பெற வேண்டும் என்பதைக் கைவிட வேண்டும் போன்றவற்றைத்தவிர, லிபரல்களின் நிலைப்பாடு தொழிற் கட்சி மற்றும் கன்சர்வேடிவ்களிடம் இருந்து அதிகம் மாறுபட்டிருக்கவில்லை; கட்சித் தலைவர் Nick Clegg "கடுமையான வெட்டுக்கள்" வேண்டும் என்று கூறியுள்ளார்.