World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Manchester Central: A picture of poverty and social deprivation

மான்செஸ்டர் மத்தியத் தொகுதி: வறுமை மற்றும் சமூக நலன்களை இழந்துள்ள நிலைமை

By Jean Shaoul
14 April 2010

Use this version to print | Send feedback


Robert Skelton

மே 6ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மான்செஸ்டர் மத்திய தொகுதியில் ரொபேர்ட் ஸ்கெல்டனை தன் வேட்பாளராக சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியை தவிர, பல தசாப்தங்களாக பெரிய பெரும்பான்மையுடன் தொகுதியில் நிலைத்துள்ள தொழிற் கட்சி மற்றும் கன்சர்வேடிவ்கள், லிபரல் டெமக்ராட்டுக்கள் மற்றும் பசுமைவாதிகள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றன.

89,000 மக்களை கொண்டுள்ள இத்தொகுதி Moss Side, Hulme, Ancoats, Bradford, Clayton, Miles Platting, Moston, Newton Heath என்னும் மிக வறிய ஏழு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. மேலும் இதன் வணிகப் பகுதியான மான்செஸ்டர் நகர மையமும் இதில் அடங்கியுள்ளது. அங்கு முன்னாள் ஜவுளிக் கிடங்குகளும் அலுவலகங்களும் நகரத்தின் மையப் பகுதியில் தேர்ச்சியுடைய தொழிலாளர்களுக்கு அடுக்கு வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் பல இனங்களைக் கொண்டுள்ளவர்கள் வசிக்கும் மான்செஸ்டர், பிரிட்டனில் மிகப் பெரிய புறநகர்களின் மத்தியில் உள்ளது. இதில் 10 சிறு நகரங்கள் 2.5 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. இன்னும் அதிக பகுதிக்கு வேலைக்கான வாய்ப்புக்களையும் இது கொண்டுள்ளது.

மான்செஸ்டரைப் பாராட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒரு வெற்றிகர சித்திரத்தைத் தீட்டியுள்ளது. 2008-09 க்கான மான்செஸ்டர் நகர நிலை பற்றிய அறிக்கை கூறுகிறது: "மான்செஸ்டர் ஒரு பிரத்தியேகமான நகரம் ஆகும். கடந்த சில தசாப்தங்களில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. புதிய நகர்ப்புற புதுப்பிக்கும் திட்டங்களில் இருந்து விளையாட்டு நிகழ்ச்சிகளில் மாபெரும் வெற்றிகள் வரை, மான்செஸ்டர் அனைவருக்கும் வாய்ப்புக்கள், உயர்தர வாழ்க்கை ஆகியவற்றை அளிக்கும், நீடித்த பொருளாதார வளர்ச்சியின் பிராந்திய சக்திக்கூடமாக திகழ்கிறது."

நகரத்தின் வணிகப் பகுதியில் 1,200 கட்டிடங்களுக்கு சேதமும் தனிப்பட்ட காயங்களையும் IRA குண்டுத் தாக்குதல் ஏற்படுத்திய பின் நகர மையம் புதுப்பிக்கப்பட்டது பற்றி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. Castlefield, Hulme, Moss Side ஆகிய இடங்களில் நடந்துள்ள புதுப்பித்தல் முயற்சி பற்றி அது பாராட்டிப் பேசுகிறது. அதே போல் நகரத்தின் டிராம் போக்குவரத்து விரிவாக்கம், சர்வதேச விமான நிலையம், பல்கலைக்கழகம், புதிய இசை அரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு வசதிகள் பற்றியும் பெருமையுடன் பேசுகிறது.

ஆனால், "அனைவருக்கும் வாய்ப்புக்கள், உயர்ந்ததர வாழ்க்கை ஆகியவற்றை அளிக்கும், நீடித்த பொருளாதார வளர்ச்சியின் பிராந்திய சக்திக்கூடமாகத் திகழ்கிறது" என்னும் சித்திரம் இரண்டு குறுகிய பத்திகளோடு நின்றுவிடுகிறது. வெளிப்படையாக அப்பட்டமாகத் தெரிவதையும் அறிக்கை ஒப்புக் கொள்ள நேரிடுகிறது: அதாவது மான்செஸ்டர் நகரம் அதிக செல்வச் செழிப்பு இல்லாதது, வறுமை, பரந்த நலனின்மைகள் ஆகியவற்றில் ஆழ்ந்துள்ளது என்பதை. 2007 Index of Multiple Deprivation படி(பல பிரிவுகளில் இழப்புக்கள் பற்றிய குறியீடு), இங்கிலாந்திலேயே அதிக நலன்கள் அற்ற நகரமாக நான்காவது இடத்தில் இது உள்ளது. மக்களில் பெரும்பாலானவர்கள் தேசிய அளவில் மிக இழப்புக்கள் நிறைந்த பகுதியில்தான் வாழ்கின்றனர்.


மான்செஸ்டர் அன்கோட்ஸில் நகரவை வீடுகள் தொகுப்பு

"இங்கு பல மக்கள் வேலை செய்யவில்லை, ஏனெனில் அவர்கள் வேலையின்மையில் உள்ளனர், அல்லது உதவிகளைப் பெறுகின்றனர். பள்ளிகளில் தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் தேசிய சராசரியை விட மிகப் பின்தங்கி உள்ளது. இதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புக்களில் மான்செஸ்டரின் இளவயதினருக்கு அதிக நலன்கள் இராது. பலரும் சுகாதார நலன்கள் இன்றி வாழ்கின்றனர், இதையொட்டி இங்கிலாந்தின் மற்ற பகுதிகளை விட ஆண்களும் பெண்களும் முன்கூட்டியே இறந்து விடுகின்றனர்" என்று அறிக்கை கூறுகிறது.

ஒரு காலத்தில் ஜவுளி மற்றும் பொறியியல் தொழில்கள் சரிந்தபின், சுரங்க வேலைகள் மூடப்பட்டபின் ஏற்பட்ட பேரழிவுச்சரிவு-- 1962ல் இருந்து 1975-- மற்றும் 1980 தொடக்கங்கள் மற்றும் 1990 களின் மந்தநிலை மற்ற வேலைகளையும் தகர்த்ததை அடுத்து, சமீப ஆண்டுகளில் வேலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த புதிய வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு நகர மக்களுக்குத்தான் சென்றுள்ளது. இப்பொழுது பெரும்பாலான வேலைகள் நிதிய, வணிகப் பணிகள், சில்லறை விற்பனை, ஒய்வுப் பிரிவுகள், கலாச்சாரம், உணவு வழங்கல் பிரிவுகள், பொதுத் துறைகள் மற்றும் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ளன ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வரும் பிரிவுகள் ஆகியவற்றில் உள்ளன. ஆனால் மான்செஸ்டரின் முன்னாள் ஆண் வேலைத் தொழிலாளர்களுக்கு முழு நேர வேலைகள் அதிகம் கிடைப்பது இல்லை: அவர்களுக்கு முறையான தகுதிகள் இல்லை.


மான்செஸ்டர் மத்தியத் தொகுதியில் இடர்பாடுகள் நிறைந்த வணிகப் பகுதி

லண்டனுக்கு வெளியே மிக உயர்ந்த ஊதியத் தரங்களை மான்செஸ்டர் கொண்டிருக்கலாம். ஆனால் நகரத்தில் வசிப்பவர்களுடைய சராசரி ஊதியம் நகரத்தில் வேலை பார்க்கும் அனைவருடைய சராசரி ஊதியத்தையும் விடக்குறைவு ஆகும். முக்கிய நகரங்களிலேயே இது மிகக்குறைவு ஆகும். ஏனெனில் அதிக ஊதியம் பெறுபவர்கள் நீண்ட காலம் முன்னரே புறநகரங்களில் குடியேறிவிட்டனர்.

வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. வேலை தேடுவோர் உதவி நிதி (JSA-Job Seekers Allowance) நாடும் மக்களின் சதவிகிதம் பெப்ருவரி 2009ல் 5.1 சதவிகிதம் உயர்ந்தது இது உபபிராந்திய மற்றும் தேசிய விகிதங்களான 4.4 மற்றும் 3.9 சதவிகிதங்களைவிட அதிகம் ஆகும். இப்பொழுது மந்த நிலையின் பாதிப்பால் இன்னும் அதிகமாக உள்ளது. கடைகள் மூடப்படுகின்றன, அலுவலகங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. நீண்ட கால வேலையின்மை, JSA ஆல் 12 மாதங்களுக்கும் அதிக காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது, 8.4 சதவிகிதிம் என்று உள்ளது. இளைஞரிடையே வேலையின்மை (16 முதல் 19 வயதில் இருப்பவர்கள் JSA பெறுபவர்கள்) எண்ணிக்கை 9.5 சதவிகிதம் என்று உள்ளது.

நாட்டின் மிக வறிய மக்கள் சிலருக்கு தாயகமாகத்தான் மான்செஸ்டர் மாறிவிட்டது. குறைந்த ஊதியம் அல்லது உதவிகளில் வாழ்க்கை நடத்துவது கடினம் ஆகும் இது மக்களின் சுகாதாரத்தில் பிரதிபலிப்பு ஆகிறது. இங்கிலாந்திலேயே மோசமான சுகாதாரப் பாதுகாப்பு குறியீடுகளில் சில இங்குதான் உள்ளன. நோய்கள், சுகாதார சமத்துவமின்மை என்னும் அதன் பெரும் சுமை உலகின் முதல் தொழில்துறை நகரம் என்ற வரலாற்றிலேயே வேர்களைக் கொண்டுள்ளது. இதைத்தவிர போருக்குப் பிந்தைய காலத்தில் பிரிட்டனின் உலகளாவிய பொருளாதார மேம்பாடு சரிந்துவிட்டது, இழப்புக்களின் இழிந்த தன்மை, நகர்ப்புற வறிய நிலை ஆகியவையும் காரணங்கள் ஆகும்.


இடிக்கப்பட்டுவிட்ட லோயிட் பீல்ட் ஆலைக்கு வெளியே சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ரொபேர்ட் ஸ்கெல்டன்

சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பு இப்பொழுது நாட்டிலேயே இரண்டாம் மிகக் கடைசி இடத்தில் உள்ளது. 1999 க்கும் 2001க்கும் இடையே ஒரு தாய்க்கு பிறந்த சிறுவனுடைய ஆயுட்கால எதிர்பார்ப்பு டோர்செட்டில் பிறந்த சிறுவனை விட 10 ஆண்டுகள் குறைவு ஆகும். அனைத்து முக்கிய நோய்களிலும், குறிப்பாக இதய நோய்கள், புற்றுநோய் ஆகியவற்றில் நகரம் தேசிய சராசரியை விட அதிக இறப்பு விகிதங்களை கொண்டுள்ளது.

இந்த வறிய நிலைமையின் சுமைகளை குழந்தைகள் சுமக்கின்றன. பள்ளியில் அவர்களுடைய சாதனை மிகக் குறைவு என்பது மட்டுமில்லாமல், பள்ளிக்குச் செல்லும் எண்ணிக்கையும் நாட்டிலேயே குறைவு ஆகும். மிகச் சமீபத்திய தகவல் ஆரம்ப பள்ளி சிறுவர்களில் 22 சதவிகிதத்தினர் உடற்பருமனாக இருக்கின்றனர், அதே வயதுப் பிரிவில் 1.6 சதவிகிதத்தினர் குறைந்த எடையில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 18 வயதிற்குட்பட்ட பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் தேசிய சராசரியை விட அதிகம் ஆகும். மான்செஸ்டரில் பிறக்கும் அனைத்துக் குழுந்தைகளிலும் 9 சதவிகிதம் பிறப்பில் குறைந்த எடையைக் கொண்டுள்ளன.

மான்செஸ்டரின் வறுமை விகிதம் தங்கள் சொந்த வீடுகள் வைத்திருக்கும் மக்களின் சராசரி எண்ணிக்கையை விடக் குறைவு என்பதில் பிரதிபலிக்கிறது அதேபோல் தரமும், இருக்கக் கூடிய தன்மையும் பெரிதும் மலிந்த சமூக வீடுகளைத்தான் அதிகம் நம்பியிருக்கும் நிலையும் உள்ளது.

அப்படி இருந்தும், இந்தப் புள்ளிவிவரங்கள் பொருளாதார நலன்களின்மை மற்றும் அதன் சமூகப் பாதிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஏனெனில் சராசரி விகிதங்கள் பெரும் சமூக சமத்துவமின்மையை மூடி மறைக்கின்றன. நகர மையப் பிரிவை தவிர, தொகுதியில் 89,000 மக்களில் 79,000 பேருக்கு தாயகமாக இருக்கும் மற்ற ஏழு பிரிவுகள் நகரத்திலேயே மிக வறிய இடங்கள் ஆகும். இதன் குறியீடுகள் நகரச் சராசரியை விட மிகக் குறைவு ஆகும்.

வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக மான்செஸ்டர் மத்திய தொகுதியில் உணவு உதவியை நாடும் கூடுதலான குடும்பங்கள் இருப்பதாக ஒரு 2008 மதிப்பீடு குறிப்பிட்டுள்ளது. Ancoats and Clayton, Ardwick, Bradford, City Centre, Hulme, Mess Side, Miles Platting, Newton Heath ஆகியவற்றில் மிக அதிகமான விதத்தில் 52 சதவிகித குழந்தைகள் உதவியைப் பெறும் இல்லங்களில் வசிக்கின்றன. Moss Side ல் 61 சதவிகிதக் குடும்பங்கள் உத்தியோகபூர்வமாக உணவு உதவியை பெறுகின்றன. இந்த எண்ணிக்கை கூட பிரச்சினையை குறைவாகக்காட்டுகிறது. ஏனெனில் இது உதவியை நம்பியிருக்கும் குடும்பங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மான்செஸ்டர் மையப்பகுதியில் பல இடங்களிலும் மூடப்பட்ட ஆலைகள், கிடங்குகள் மற்றும் இழிந்த நிலையில் உள்ள வீட்டுக் கட்டமைப்புக்களும் உள்ளன. மூடிய கடைகளும் மிகக் குறைவான சமூக வசதிகளும் தான் மிஞ்சியுள்ளன.

நகர மையத்தை அதிகம் புதுப்பித்தது மற்றும் பெரும் பல்பொருள் அங்காடிகள் நிறுவப்பட்டது ஆகியவை எஞ்சியிருந்த சிறு வணிகம், பொது மதுபானக் கடைகள், விடுதிகள் ஆகியவற்றை திவால் செய்ததுடன், உணவுக்கு பஞ்சத்தையும் சமூகப் பேரழிவையும் தோற்றுவித்துள்ளன. மிக வறியவர்கள் அல்லது கார் வாங்க இயலாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மிக அதிக கட்டணம் வசூலிக்கும், ஒழுங்குமுறையல்லாத பஸ் சேவையாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போருக்குப் பிந்தைய பிரிட்டனில் நீடித்த ஏற்ற நிலைக்கு முடிவில், இத்தகைய நிலைமை இருப்பது தொழிலாளர்களின் மிக அடிப்படைத் தேவைகளையும் விழைவுகளையும் முதலாளித்துவம் பூர்த்தி செய்ய முடியாததற்கு சான்றாக உள்ளது. அதேபோல் நகரம் தொழிற் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததற்கும் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக மான்செஸ்டர் மத்திய தொகுதி தொழிற் கட்சிக்கு பாதுகாப்பான தேர்தல் ஆசனத் தொகுதியாக இருந்து வருகிறது. லிபரல் டெமக்ராட்டுகள் கைப்பற்ற வேண்டும் என்றால் வாக்குகளில் 19 சதவிகித மாற்றம் தேவை. ஆனால் தொழிற் கட்சி மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளிடம் இருந்தும் தொழிலாள வர்க்கம் விரோதப் போக்கு கொண்டுள்ள நிலைமை 2005 தேர்தலில் 42 சதவிகித வாக்காளர்கள்தான், நாட்டிலேயே மிகக் குறைவானவற்றுள் ஒன்று என்று வாக்களிக்க வந்ததில் பிரதிபலிப்பாயிற்று.