World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington nuclear conference promotes US campaign against Iran, North Korea

வாஷிங்டன் அணுசக்தி மாநாடானது ஈரான் மற்றும் வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்கப் பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது

By Patrick Martin
13 April 2010

Use this version to print | Send feedback

திங்களன்று ஆயுதக்களைவு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்னும் மறைப்பின்கீழ் ஒரு இரு நாள் நிகழ்வாக அணுசக்திப் பாதுகாப்பு உச்சிமாநாட்டை ஜனாதிபதி பாரக் ஒபாமா திறந்து வைத்தார். ஈரானையும் வட கொரியாவையும் தனிமைப்படுத்தி, அழுத்தம் கொடுத்து இறுதியில் அங்கு இருக்கும் அரசாங்கங்களை அகற்றுவதற்கு சர்வதேச ஆதரவைத் திரட்ட அது முற்பட்டது.

முந்தைய புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான அணுகுமுறையில் இருந்து முறித்துக் கொள்வதை பிரதிபலிப்பதற்கு பதிலாக, ஒபாமாவின் கொள்கை அதே இலக்குகளை--மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் உலகத்தின் மீதான அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை--நிறுவதல், ஆனால் வேறு சொல்லாட்சியை பயன்படுத்தி, சற்றே மாறுபட்ட தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி சாதித்தல் என்று ஆகிறது.

புஷ், செனே, ரம்ஸ்பெல்ட் ஆகியோரின் மோதல் தன்மையை காட்டுவதற்கு பதிலாக ஒபாமா நிர்வாகம் பன்முக விவாதம், உலக உச்சிமாநாட்டு முறை போன்ற செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய 1945 சான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டிற்கு பின்னர், அமெரிக்க மண்ணில் மிக அதிக நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளது.

ஆனால் இதன் நோக்கம் ஈரானுக்கு எதிராக முடுக்கிவிடப்படும் பொருளாதாரத் தடைகளுக்கான சூழ்நிலையை தோற்றுவித்தல், வட கொரியாவை அதன் ஏவுகணை திட்டங்கள் மற்றும் அணு சக்தித் தொழில்நுட்ப ஈடுபாட்டிற்காக பதிலடி கொடுக்கப்படும் என்று அச்சுறுத்தல் கொடுத்தல், மற்றும் சீனா, ரஷ்யா உட்பட அதிக வலுவுடைய சக்திகளின் சவால் திறனுக்கும் எதிராக அமெரிக்க இராணுவத்தின் உயர் நிலையை மரபார்ந்த மற்றும் அணுவாயுதங்கள் மூலம் நிலைநிறுத்துதல் என்பதாகும்.

ஈரானுக்கு எதிராக நேரடி அமெரிக்க இராணுவ ஆக்கிரோஷ நடவடிக்கைக்கு அல்லது கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொடுத்து அதையொட்டி பொருளாதாரப் போர் என்ற நிலை ஏற்படுத்தப்படும் என்பதற்காக அமெரிக்க மற்றும் உலக மக்கள் கருத்தை உருவாக்குவதற்கான முறையாக ஒபாமா நிர்வாகத்தின் ஒரு பகுதி தான் இந்த உச்சிமாநாடு ஆகும். இத்தகைய பொருளாதாரத் தடைகள் ஒரு ஈரானிய எதிர்ப்பை தூண்டிவிடும் வாய்ப்பைக் கொண்டவை, இஸ்ரேல், செளதி அரேபியா அல்லது அப்பகுதியில் உள்ள பிற அமெரிக்க நட்பு நாட்டை பாதுகாத்தல் என்ற மறைப்பில் அமெரிக்கா அதன் ஆக்கிரோஷ நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கும்.

இந்த முழு மாநாடும் ஒரு விகாரமான இரட்டைத் தரத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஈரான், வட கொரியா, சிரியா என்ற மூன்று நாடுகளின் அரசாங்கங்களையும் அமெரிக்க அரசாங்கம் வேண்டுமேன்றே அழைக்க மறுத்துள்ளது--அவை அணுவாயுதப் பரவா உடன்படிக்கையை (NPT) மீறியுள்ளன என்ற காரணம் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின்கீழ் இக்கூற்றுக்கு உண்மைத் தன்மை இல்லை. ஈரான், சிரியா இரண்டுமே NPT யில் கையெழுத்திட்டவை. NPT விதிகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிட நிறுவப்பட்டுள்ள ஐ.நா.வின் பிரிவான சர்வதேச அணுசக்தி அமைப்பு நடத்தும் ஆய்வுகளுக்கு ஒத்துழைக்கின்றன. வட கொரியா உடன்பாட்டில் அனுமதிக்கப்பட்டபடி முன்பு கையெழுத்திட்டிருந்தாலும் 2006ல் விலகிவிட்டது.

இதற்கு மாறாக ஒபாமா நிர்வாகம் NPT விதிகளை பகிரங்கமாக மீறி அணுவாயுதத் தயாரிப்புக்களை பரந்த, வெற்றிகரமாக நடத்தியுள்ள இஸ்ரேல், பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளை அழைத்துள்ளது. ஏனெனில் அவை முக்கிய அமெரிக்க நட்பு நாடுகள் ஆகும்.

பாக்கிஸ்தானும் இந்தியாவும் வாஷிங்டன் மாநாட்டில் அவற்றின் அரசாங்க தலைவர்களால் பிரதிநிதித்துவ படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் பங்கு பெறுவதாக இருந்த இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகு திடீரென போக்கை மாற்றி ஒரு பிரதிநிதியை அனுப்பியுள்ளார். உச்சிமாநாட்டின்போது அரபு நாடுகள் இஸ்ரேலின் அணுவாயுதக் கிடங்கு பற்றி வினா எழுப்ப உள்ளன என்று கேட்டபின் இந்த மாறுதல் வந்தது.

வெள்ளை மாளிகை மற்றும் அரச அலுவலகம் குறித்துள்ள உச்சிமாநாட்டு நிகழ்ச்சி நிரல் மனிதகுலத்தை எதிர்கொண்டிருக்கும் முக்கிய அணு ஆபத்து பற்றி உண்மையான விவாதத்தை ஒதுக்கிவிட்டது--அதாவது அமெரிக்கா, ரஷ்யா இரண்டும் கொண்டுள்ள மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு பற்றி. இவை உலகில் உள்ள ஒவ்வொருவரையும் அழித்துவிடும் அளவிற்கு அதிகமாகக் கொண்டுள்ளன. அதேபோல் பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் மூன்று NPT யில் இல்லாத நாடுகளான இஸ்ரேல், பாக்கிஸ்தான், இந்தியா ஆகியவை பற்றியும் வினாக்கள் எழுப்பப்பட மாட்டாது.

மாறாக முழுக் குவிப்பும் "அரசாங்கமில்லாத அமைப்புக்கள்" அல் கெய்டா போன்றவை அணுசக்தி தயாரிப்புப் பொருட்களை அடைவதற்கான வாய்ப்பை தடுத்தலில் காட்டப்படுகிறது. ஈரானின் ஷியைட் மதகுரு ஆட்சிக்கு எதிரான நன்கு அறியப்பட்டுள்ள அல் கெய்டாவின் விரோதப் போக்கு இருந்தாலும், அணுவாயுதம் கொண்ட "பயங்கரவாதத்தின்" ஆபத்து ஒரு போலிக்காரணமாக தெஹ்ரானுக்கு எதிரான பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பாசாங்குத்தனம் அதிர்வு தருகிறது. வாஷிங்டன் மாநாட்டில் வந்துள்ள அணுவாயுத மற்றும் அணுவாயுதத் திறன் உடைய நாடுகளும் அவற்றிற்கு இடையே மொத்தமாக 2,100 தொன்கள் அணுசக்தியை கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது-- இவைகள் பூமியையே பல முறை அழிக்கும் ஆற்றல் படைத்த 120,000 அணுகுண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

ஆனால் அணுவாயுதங்கள் அழிப்பதற்கு பதிலாக, தற்பொழுது அவற்றை வைத்துள்ள அரசாங்கங்கள் அவற்றை கொள்வதில் கொண்டுள்ள ஏகபோக உரிமையை பாதுகாப்பது என்பதுதான் நோக்கமாக உள்ளது. இதில் மிக அதிகப் பங்கு அமெரிக்காவிடம் உள்ளது. இது ஒன்றுதான் ஒரு போரில் அணுகுண்டை பயன்படுத்தியது--1945 ஹிரோஷிமா, நாகாசகி ஆகிய நகரங்கள் எரிந்து அழிய அது காரணமாயிற்று.

பல சர்வதேச உச்சிமாநாடுகளை போலவே, செவ்வாயன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் பகட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டவை. ஏற்கப்படவுள்ள அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முக்கிய சக்திகளிடையே சுற்றறிக்கைக்கு விடப்பட்டுள்ளது. மிக அதிக அடர்த்தி உடைய யுரேனியம் ப்ளூட்டோனியம் ஆகியவை கடத்தப்படுதல் நிறுத்தப்ப வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்கிறது. நாடுகளில் உள்ள கிடங்குகள் மீது பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இப்பிரிவில் செய்யப்பட வேண்டியவை மற்றும் தனி நாடுகள் தானே முன்வந்து அத்தகைய பொருட்களை அழித்தல் ஆகியவை அதில் இடம் பெற்றுள்ளது.

சிலி, உக்ரைன் இரண்டும் தாங்கள் வைத்திருக்கும் அதிக அடர்த்தியுள்ள யுரேனியத்தை கைவிட இருப்பதாக உச்சிமாநாடு திறக்கும்போது அறிவித்துள்ளன. இதற்காக அவை வாஷிங்டனிடம் இருந்து கணிசமான நிதி வெகுமதியை எதிர்பார்க்கின்றன.

செவ்வாய் நிகழ்ச்சிகளையும் விட முக்கியமானவை மாநாட்டிற்கு முன்னும், மாநாட்டின்போதும் நடைபெறும் இருதரப்புக் கூட்டங்கள் ஆகும். ஒபாமாவுடன் ஒருவருக்கு ஒருவர் என்ற பேசும் விதத்தில் சீனா, பாக்கிஸ்தான், இந்தியா, தென்னாபிரிக்கா, காஜக்ஸ்தான், நைஜீரியா மற்றும் ஜோர்டான் நாட்டுத் தலைவர்கள் உள்ளனர்.

ஒபாமாவால் நிர்ணயிக்கப்பட்ட விதத்தில் வாஷிங்டன் உச்சிமாநாட்டின் அடிப்படைத் தளம் "அமெரிக்க பாதுகாப்பிற்கு, குறுகி, இடைப்பட்ட, நீண்ட காலத்திற்கு ஒற்றை மிகப் பெரிய அச்சுறுத்தல் ஒரு பயங்கரவாத அமைப்பு அணுசக்தியை பெற்றுவிடக்கூடும் என்பதுதான்." என்னும் கூற்றுத்தான். ஆனால் மனிதகுலத்திற்கு "இந்த ஒற்றை மிகப் பெரிய அச்சுறுத்தல் அதன் பிற்போக்குத்தன விழைவுகள் எப்படி இருந்தாலும், அல் கெய்டா இல்லை. மாறாக கணிசமான அணுவாயுத கிடங்குகளை ஏற்கனவே கொண்டிருக்கும் முதலாளித்துவ நாடுகள் ஈடுபட்டுள்ள புதிய ஏகாதிபத்திய போர்கள் என்ற ஆபத்துக்கள்தாம்.

ஒபாமா அணுவாயுதங்கள் இல்லாத ஒரு உலகம் பற்றி தெளிவற்ற வனப்புரையைக் கூறினாலும், அவருடைய உயர்மட்ட தேசியப் பாதுகாப்புத் தளபதிகள், வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் இருவரும் ஞாயிறு தொலைக்காட்சி உரை நிகழ்வுகளில் பங்கு பற்றி, அமெரிக்காவின் இராணுவ வலிமை, அதன் வலுவான அணுசக்தித் திறன் பற்றி பெருமையாகப் பேசுகின்றனர்.

பெயர் கூறப்படாத அமெரிக்க எதிரிகளை கிளின்டன் அச்சுறுத்தினார்--இது ஈரான், வடகொரியா ஆகியவற்றைத்தான் தெளிவாக உட்குறிப்பாகக் காட்டும்--அவை அணுத் தாக்குதல் திறன் கொண்டவை என. அவர் கடந்த வாரம் பென்டகன் வெளியிட்ட அணுப் போர்க் கொள்கை மிகுந்த கட்டுப்பாட்டு தன்மையைக் கொண்டிருக்கிறது என்று கூறிய சட்டமன்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் குறைகூறல்களை நிராகரித்தார்.

"பல எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம். நம்மை தாக்கும் நாட்டில் ஒரு உயிரியல் போர் முறை உள்ளது என்பதை நாம் நிரூபிக்க முடிந்தால், எத்தடையும் இன்றி விரும்புவதை செயல்படுத்துவோம்." என்று அவர் கூறினார்.

ஈரானும் வட கொரியாவும் விதிவிலக்குகளா என்று கேட்கப்பட்டதற்கு கேட்ஸும் இதே போன்ற விதத்தில்தான் பதில் சொன்னார்: "நல்லது, அவர்கள் NPT உடன்பாட்டில் இல்லை. அவர்களை பொறுத்தவரையில் எதுவும் செய்வோம். அனைத்து விருப்புரிமைகளும் பயன்படுத்தப்படலாம்."

பரந்த அமெரிக்க அணுசக்தி நிரல் அடுத்தமாதம் ஐ.நா. மாநாட்டில் வரவிருக்கும் மாநாட்டிற்கு தயாராகிறது. அது NPT பரிசீலனை பற்றி எட்டாவது மாநாடு ஆகும். 1970ல் முதலில் NPT இசைவு பெற்றபோது, அணுவாயுதங்களை கொண்டிருந்த சக்திகள் அவற்றைக் குறைத்து இறுதியில் தங்கள் கிடங்குகளில் இருந்து அகற்றுவதாக உறுதியளித்தன. அதற்கு ஈடாக அணுசக்தி இல்லாத நாடுகள் இதே போன்ற ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது என்றும் கோரின.

ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அணுவாயுதம் இல்லாத நாடுகள் அனைத்தும் உடன்பாட்டின்படி நடக்கின்றன. ஆனால் அணுவாயுதங்களை கொண்டுள்ள நாடுகள் தங்கள் ஆயுதங்களை அழிப்பது பற்றி சிறு அடையாளம் கூடக் காட்டவில்லை. மாறாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடிக்கையாக நடத்தப்படும் ஆய்வுகளானது அமெரிக்கா தன் வலிமையை தனக்கு விரோதம் என்று கருதும் நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில்தான் பயன்படுத்துகிறது--கடந்த காலத்தில் சதாம் ஹுசைனின் ஈராக், முயம்மர் கடாபியின் லிபியா; இன்று ஈரான், வட கொரியா.

வரவிருக்கும் NPT பரிசீலனைத் தொடர் இன்னும் கூடுதலான முறையில் உறுப்பு நாடுகளின் அணுசக்தி திட்டம் பற்றிய ஆய்வு அமெரிக்காவினால் கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல NPT கையெழுத்திட்ட நாடுகள் இதற்கு தயாராக இல்லை. ஏனெனில் அவை IAEA ஐ அமெரிக்க கருவியாகத்தான் நினைக்கின்றன.

அனைத்து நாடுகளும் முழு சிவிலிய அணுத் திட்டத்தை கொள்ளும் உரிமையை அகற்றும் விதத்தில் NPT ஐ திருத்தும் கருத்தையும் அமெரிக்கா கொண்டுள்ளது. இதில் அணுசக்தி எரிபொருள் உற்பத்தியும் அடங்கும். இது ஈரானுக்கு எதிரான அதன் தற்பொழுதைய நடவடிக்கைக்கு சட்டபூர்வ மறைப்பை கொடுக்கும்.

ஈரான், வட கொரியா மீது உடனடியான குவிப்பை தவிர, ஒபாமா நிர்வாகமானது ஆயுதம் பரவா முறையை வலியுறுத்துகிறது. அதில் கூடுதலான நோக்கம் உள்ளது--அதன் அணுவாயுதக் கிடங்கின் அளவு, தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றில் தான் கொண்டுள்ள மகத்தான நலன்களை பாதுகாப்பது என்பதுதான் அது.