World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain's Party Leaders Debate: An exercise in political engineering

பிரிட்டனில் கட்சித் தலைவர்கள் விவாதம்: அரசியல் உத்திகளில் ஒரு பயிற்சி

By Chris Marsden
17 April 2010

Use this version to print | Send feedback

வியாழனன்று பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவாதம், ஒரு கூடுதலான பங்கு பெறும் தன்மையுடைய ஜனநாயகத்திற்கான ஒரு வரலாற்றுச் செயல் என்று கருதப்பட்டது. அத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவது இதுதான் முதல் தடவை ஆகும்.

இறுதியில் இது ஆளும் உயரடுக்கு உண்மையான ஜனநாயக விவாதத்தின் குறைந்தபட்ச வெளிப்பாடு மற்றும் அதன் அரசியலில் கூலிக்கு உழைப்பவர்களுக்கு அது ஆணையிடும் செயற்பட்டியலில் உள்ள முடிவு எடுக்கும் தன்மையை பற்றிக்கூட விவாதிக்க அனுமதி கொடுக்க மறுத்தலைத்தான் நிரூபிக்க உதவியது.

மில்லியன் கணக்கான வாக்களார்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி எழுப்பும் மற்றும் விவாதிப்பதற்கான எந்த வாய்ப்பையும் அடிப்படையிலேயே ஒதுக்கிவிட்ட விவாதம் தான் இது--இதில் தொழிற் கட்சிக்கு கோர்டன் பிரெளன், கன்சர்வேடிவ்களுக்கு டேவிட் காமரோன் மற்றும் லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு நிக் கிளெக் என்று பொறுக்கி எடுக்கப்பட்ட பார்வையாளார்களுக்கு முன்பு, முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையிறுத்தல் என்று நாடகம் போல் நடத்தப்பட்ட விவாதம் தான் இருந்தது.

இது நடத்தப்படுவதற்கு முன்னதாகவே, கட்சித் தலைவர்கள் விவாதத்தின் வடிவம் பற்றி ஒரு 76 புள்ளி உடன்பாட்டை கண்டிருந்தனர். 90 நிமிடங்கள் நீடிக்கும் மூன்று விவாதங்கள் நடத்தப்பட வேண்டும், அவை முறையே ITV, Sky மற்றும் BBC யால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் விவாதம் உள்நாட்டு விவகாரங்களை கொண்டிருந்தது. இரண்டாவது வெளியுறவு விவகாரங்களையும் மூன்றாவது பொருளாதாரம் பற்றியும் இருக்கும்.

செய்தியாளர்கள் குழு ஒன்று வினாக்களை தேர்ந்தெடுத்திருந்தது. கருத்துக் கணிப்பு நிறுவனம் ICM ஆனது பால், வயது, இனம், சமூக வர்க்கம் இவற்றின் அடிப்படையில் பார்வையாளர்களை தேர்ந்து எடுத்திருந்தனர். பாராட்டுக் கரவொலி அல்லது ஏளனம் செய்ய பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இது ஒரு விவாதமாக இல்லாமல், ஒன்பது மில்லியன் மக்களுக்கும் மேலான பார்வையாளர்கள் கவனமாக தொகுக்கப்பட்ட பிரச்சார முறைக்கு அரசியல் செயற்பாட்டுக் கருவியின் ஒரு வடிவமாக இருந்தது.

விவாத தொடக்கத்தில் ஒரு நிமிட அறிக்கைகள் பிரெளன் இரட்டை சரிவு மந்த நிலையின் ஆபத்து பற்றி எச்சரித்தல் மற்றும் தொழிற் கட்சியின் கொள்கையான விரைவில் வெட்டுக்கள் இல்லை என்பது தொடரப்பட வேண்டிய தேவையைக் காட்டியது. காமிரோன் ஒரு புதிய தொடக்கம் பற்றி உறுதியளித்து, "ஒரு பெரிய சமூகம்" வரும் என்றும் உறுதியளித்தார் --அதன் பொருள் எப்படி இருந்த போதிலும். இரு கட்சி முறையில் இருந்து தன்னை முறித்துக் கொண்டவிதத்தில் கிளெக் தன்னைச் சித்தரித்துக் கொண்டு, "ஏதேனும் புதிய, ஏதேனும் மாறுபட்ட" செயற்பாடு வரும் என்றார்.

1930 களுக்கு பின் வந்துள்ள மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே, மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வேலைகள் பற்றியும், தங்கள் வீடுகளை இழக்கக்கூடிய நிலை பற்றியும், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற அடிப்படை சமூகப்பணிகளில் இழப்புக்கள் பற்றியும் கவலை கொண்டிருக்கையில், செய்தியாளர் குழு தேர்ந்தெடுத்த முதல் கேள்வி குடியேற்றத்தை பற்றியும், இரண்டாவது சட்டம், ஒழுங்கு பற்றியும் இருந்தன.

பிரெளன் "நியாயமாகவும் திறமையான செயல்பாடும் கொண்ட" குடியேற்றக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடையிறுக்கையில் பிரெளன், "நிகர உள்குடியேற்றம் குறைந்து கொண்டிருக்கிறது ...ஏனெனில் நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளால்" என்று பெருமையாக பேசிக் கொண்டார்.

குடியேற்றம் "கட்டுப்பாட்டை மீறிவிட்டது" என்று கடிந்து கொண்ட காமிரோன், குடியேற்றத்திற்கு வரம்பை அறிமுகப்படுத்த இருப்பதாக உறுதி கூறி, "இது நூறாயிரக்கணக்கில் இல்லை, பல்லாயிரக்கணக்கில்தான்" என்றார்.

"மற்றவர்கள் குடியேற்றம் பற்றி கடுமையாகப் பேசுகின்றனர், ஆனால் குழப்பத்தைத்தான் அளித்துள்ளனர்" என்று கிளெக் குற்றம் சாட்டினார். வெளியேற்றப்படும் கட்டுப்பாடுகளை மீட்டு, முதலாளிகளுக்கு இவர்களுடைய திறைமை தேவைப்பட்டால் மட்டுமே குடியேறுபவர்கள் நாட்டிற்குள் வருதல், பின் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழ்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும் விதத்தில் தான் செயல்பட இருப்பதாக" அவர் உறுதியளித்தார்.

குற்றங்கள் எப்படிச் சமாளிப்பது என்ற கேள்விக்கு காமிரோன் சட்டம், ஒழுங்கு என்ற முரசை அடித்ததைக் கண்டது. சுருக்கமான சொற்களில் நிலைமை பற்றி வருந்திய அவர் பஸ் நிறுத்தங்களை சிதைக்கும் இளைஞர்கள் உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதை அளிப்பதாக உறுதி கூறிய பிரெளன், டோரிகள் போலன்றி தொழிற் கட்சி, "பொலிசிற்கு செலவு செய்வது தொடரும்" என்றார்.

"மாற்றப்பட முடியாத குற்றவாளிகள் ஓடிவிடுகின்றனர்" என்று மூன்று முறை குறிப்பிட்ட கிளெக், சிறைகள் செயல்படுவது "நெரிசல் நிறைந்த குற்றக் கல்லூரிகள்" போல் உள்ளது என்றார்.

"குற்றம்" பற்றிய விவாதம் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை கொடுக்கும் குற்றவாளிகளை பற்றித் தொடரவில்லை--அதாவது பில்லியன் கணக்கில் கொள்கையடித்து, ஏமாற்றிய வங்கியாளர்களை பற்றி இல்லை. அவர்கள் தண்டனை அல்லது காவலுக்கு உட்பட்ட தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுவதற்குப் பதிலாக, பொதுக் கருவூலத்தின் திறவு கோல்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவுகளை சூழ்ந்த ஊழல் பற்றி எழுப்பப்பட்ட கேள்வி அனைவரிடத்தில் இருந்தும் போலியாக காட்டப்பட்ட சீற்றத்தையும் அரசியல் தூய்மை ஆக்கப்படும் என்ற உறுதிமொழிகளையும் விடையாகப் பெற்றது.

பொருளாதார நெருக்கடி பற்றிய விவாதம் இறுதியில் எழுந்தபோது, வெட்டுக்களுக்கு எதிர்ப்பு பற்றி சிறிதும் கருத்து இல்லாமல் அரசாங்க வரவு-செலவுப் பற்றாக்குறை எப்படி குறைக்கப்படும் என்பதற்கு விடை கொடுக்கும் விதத்தில் தான் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதன் பின் விவாதம் மிகுயதார்த்தத் தன்மையை கொண்டது. தொடக்கத்தில் தொழிற் கட்சியின் திட்டமான தேசிய காப்பீட்டில் ஒரு சிறிய அதிகரிப்பு பற்றி காமிரோனின் எதிர்ப்பில் குவிப்பைக் கொண்டது. அவர் அதை "வேலைகள் மீது வரி" என்று கண்டித்தார். இதற்கு பிரெளன் மறுப்புத் தெரிவித்து, 6 பில்லியன் உடனடி வெட்டுக்களை கொண்டுவரும் டோரிக்களின் திட்டம் பொருளாதாரத்தை ஒரு இரட்டை சரிவு மந்த நிலையில் ஆழ்த்திவிடும் என்று எச்சரித்தார்.

ஒரு உயர்ந்த அறநெறித் தளத்தைக் கொள்ளும் நிலைப்பாட்டை கிளெக் காட்டிக் கொண்டார்--வெட்டுக்கள் தேவை என்ற உண்மையை கூறி லிபரல் டெமக்ராட்டுக்கள் அவை 115 பில்லியன் பவுண்டுகள் இருக்கக்கூடும் என்று அதன் எதிரிகள் குறிப்பிட விரும்பாத தொகை பற்றியும் கூறினார். "இவர்கள் இருவரும் வீணடிப்பது பற்றி பேசுகின்றனர். அதே நேரம் பொது நிதியில் உள்ள இருண்ட பள்ளத்தை வைட்ஹாலில் இருக்கும் சிறு பூச்செடிகள், paperclips மூலம் நிரப்பி விட முடியும் என்பது போல்" என்றார்.

கிளெக் காட்டிக் கொள்வது ஒருபுறம் இருக்க, இந்த அறிக்கையில் ஒரு உண்மை உள்ளது. 6 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களை எப்பொழுது சுமத்துவது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் இறுதியில் பொதுச் செலவினங்களில் இருந்து கிட்டத்தட்ட 50 பில்லியன் பவுண்டுகள் குறைக்கப்பட வேண்டியதின் தேவை பற்றி மறைத்தலில் உடன்பாட்டைக் காண்பிக்கிறது. மேலும் இந்தத் தொகை தேர்தலுக்குப் பின்னர் வரவிருக்கும் மாதங்களில் உண்மையாக் கோரப்படும் நடவடிக்கைகளின் உண்மை அளவினால் மிகச் சிறியதாக போய்விடும். Financial Times "ஆனால், இறுதியில், தற்போதைய நிதியானது போர்த் தொகையில் --60 பில்லியன் பவுண்டுகள்-- குவிப்பை காட்டுகிறது. இது இந்த ஆண்டு பற்றாக்குறையின் அளவான 167 பில்லியன் பவுண்டுகளில் மிகச் சிறியதாகிவிடுகிறது."

ஒரு நிதிய நிர்வாக நிறுவனமான London Capitol ல் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருக்கும் அசோக் ஷா, கிரேக்கம் பற்றியதை தொடர்ந்த விதத்தில் எச்சரித்தார்: "சந்தையில் இன்னும் கூடுதலான ஊகத் தாக்குதல்களை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்... இரு முக்கிய பாதிப்பிற்கு உட்படக்கூடியவை போர்த்துக்கல் மற்றும் பிரிட்டனாக அனேகமாக இருக்கிறது."

Territorial Army ல் உள்ள ஒருவர் எழுப்பிய வினா, துருப்புக்கள் நல்ல முறையில் ஆயுதங்களை கொண்டிருப்பது, ஆதரவு பெறுவது பற்றியது, பிரெளன், காமிரோன் மற்றும் கிளெக்கை ஆப்கானிய போருக்கான தங்கள் ஆதரவை அலங்காரப் பூச்சுடன், -நம் "இளைஞர்களுக்கு" ஆதரவு எனக் காட்டிக் கொள்ள உதவியது--இந்த ஆக்கிரமிப்போ பெரும்பாலான மக்களினால் எதிர்க்கப்படுகிறது.

"ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நினைவிற் கொள்ளுவோம்" என்று பிரெளன் கூறினார். "இவர்கள் கொண்டிருந்த நம்ப முடியாத அளவிற்கு இருந்த தைரியத்திற்கு கோர்டன் கொடுத்த புகழாரத்துடன் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன்....அவர்கள் மிக, மிகச் சிறந்தவர்கள்" என்று காமிரோன் கூறினார்.

டிரைடென்ட் அணுவாயுத முறைக்குப் பதிலாக வேறு ஏதேனும் திட்டங்களைக் கைவிடுமாறு கிளெக் முறையிட்டார். ஆனால் அவ்வாறு சேமிக்கப்படும் பணம் முன்னணியில் இருக்கும் துருப்புக்கள் மீது செலவழிக்கப்பட்டால் நல்லது என்று கூறத்தான் அந்த வாதம் இருந்தது.

இதைத் தொடர்ந்து கல்வி, சுகாதாரம், சமூகப் பராமரிப்பு ஆகியவை பற்றி வெற்றுத்தன கருத்துப் பறிமாற்றங்கள் இருந்தன. பிளேயர் மற்றும் காமிரோன் தேசிய சுகாதாரச் சேவை காப்பாற்றப்படும் என்ற பாசாங்குத்தனமான உறுதிமொழிகளில்தான் அவை சிறந்திருந்தன. தன்னை சிறப்பித்துக் கொள்ளும் வகையில் கிளெக் சுகாதாரப் பாதுகாப்புக்கள் மற்ற பொதுநலச் செலவுகளைப் போலவே அகற்றப்படுதலை எதிர்கொள்ளுதல் வேண்டும் என்றார்.

விவாதத்தின் ஒரு கூறுபாடு, பல முறையும் பிரெளன் கிளெக்குடன் தன்னை இணைத்துக் கொள்ளும் விதத்தில் கொண்ட முயற்சிகள் ஆகும். ஏழு முறை தன் அறிவிப்புக்களை "நான் நிக் கூறுவதுடன் உடன்படுகிறேன்" என்றார். ஒருவித விகிதாசார பிரதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியைக் கூறினார். இது லிபரல் டெமக்ராட்டுக்களுடன் அரசாங்கத்தை ஒரு கூட்டணி மூலம் அமைக்க வாய்ப்பு உள்ளது என்ற பிரெளனின் கணக்கீட்டைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

கன்சர்வேடிவ்கள் அல்லது தொழிற்கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு கடினம் என்று தோன்றுகிறது. ஏனெனில் இரண்டுமே அவற்றின் வலதுசாரி, வணிகச் சார்பு உடைய கொள்கைகளுக்கு கணிசமான சமூகத் தளத்தைக் கொண்டிருக்கவில்லை. இது கிளெக்கிற்கு பதவி கொடுக்க உதவக்கூடிய, இதுவரை இல்லாத, பங்கை அளிக்கிறது.

இந்த இலக்கிற்காக பெரும்பாலான செய்தி ஏடுகள் கிளெக்கை அன்றைய இரவு விவாதத்தில் வெற்றி பெற்றவர் என்பதை ஒப்புக் கொண்டது மட்டும் இல்லாமல் அவருடைய வேதனைக்கு மாற்று மருந்து போல் இருந்த பங்கை மிக அசாதாரண அளவிற்குப் பாராட்டின.

"பிரிட்டிஷ் அரசியலில் இருந்து இரு கட்சி மேலாதிக்கத்தை கிளெக் முறித்தார்...லிபரல் டெமக்ராட் தலைவர் கணத்தின் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்" என்று The Independent கூறியது.

"இவருடைய நம்பிக்கை மிகுந்த வாதமும் விவாத வடிவமைப்பின் அரிய நேர்த்தியும்" அவருக்கு ஒரு "பொதுவான வெற்றியைக் கொடுத்தது" என்று The Telegraph எழுதியது.

கார்டியன் தலையங்கம் "இவருக்குப் பின்னே இரு போட்டியாளர்களையும் தள்ளவிட்ட இவர் தன்மையை" குவிப்புக் காட்டியது. பாட்ரிக் வின்டோரும், போலி கர்டிஸும், "அரசியல் தளத்தை மாற்றும் இவர் திறன்" பற்றியும் "வெளிப்பட்ட சிறந்த தன்மை" பற்றியும் பேசினார்கள்.

உவப்பற்ற விவாதத்தை பார்த்தவர்களுக்கு இத்தகைய பாராட்டுச் சொற்கள் வியப்படையச் செய்யும். ஏனெனில் கோர்டன் பிரெளன் அல்லது டேவிட் காமரோனாக இல்லாததால்தான் கிளெக் முக்கியமாக நலன்களை அடைந்தார்.

முதலாளித்துவ அரசியல் கணிப்புக்களில் அவர் இப்பொழுது முக்கியம் என்று கருதப்படுவதால் தான் இத்தகைய எதிர்கொள்ளல் அவருக்கு உள்ளது. 1977 லிபரல் லேபர் கூட்டணிக்குப் பின்னர் முதல் தடவையாக அரசாங்கத்தில் பங்கிற்கு ஒரு வாய்ப்பு வருமோ என்பதற்காக லிபரல் டெமக்கிராட்டுக்கள் கவனத்துடன் காணப்படுகின்றனர். அப்பொழுது அக்கூட்டு சர்வதேச நிதிய நிறுவனம் ஆணையிட்ட குறைப்புக்களைச் சுமத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. மே 6 க்கு பின்னர் அமைக்கப்பட உள்ள அரசாங்கத்தில் இதன் பங்கு கிளெக் உறுதியளித்துள்ளதை விட அதிக "காட்டுமிராண்டித்தன வெட்டுக்களைக்" கொண்டிருக்கும்.

தலைவர்களின் விவாதங்கள் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த மதிப்பீட்டை உறுதிபடுத்த உதவுகிறது. "இப் பொதுத் தேர்தல் ஒரு அரசியல் மோசடி ஆகும். அடுத்த அரசாங்கத்தின் தன்மை எப்படி இருந்தாலும், அதன் செயற்பட்டியல் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுவிட்டது. சர்வதேச நிதிய நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் தங்கள் செய்கையால் வராத பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றன.

இன்றைய அரசியல் பெரும் செல்வம் படைத்த நிதியத் தன்னலக் குழுவின் ஏகபோக உரிமையின் கீழ் உள்ளது. அதுதான் இவற்றின் அனைத்து முக்கிய கட்சிகளையும் கட்டுப்படுத்தி அவற்றின் கொள்கைகளையும் நிர்ணயிக்கிறது. இந்த நிலைமை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் மற்றும் சமூக இயக்கத்தின் மூலம் தான் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும். அது தன் சொந்த சோசலிச கட்சியின் கீழ் தான் இயக்கப்பட முடியும்--அது இழிந்த பாராளுமன்ற முறைக் கட்டமைப்பிற்கு புறத்தேதான் இன்றியமையாமல் கட்டமைக்கப்பட வேண்டும்.