சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: August 2-August 8

வரலாற்றில் இந்த வாரம்: ஆகஸ்ட் 2- ஆகஸ்ட் 8

2 August 2010

Use this version to print | Send feedback

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்: தென் ஆபிரிக்க தொழிலாளர்கள் இனப்பாகுபாடு எதிர்ப்பு போராட்டத்தில் முன்னிலை எடுத்தனர்


கடையில் இனப்பாகுபாட்டு யுகத்தின் அறிகுறி

1985ல் இந்த வாரம், 270,000 உறுப்பினர்களைக் கொண்ட சுரங்கத் தொழிலாளர் தேசிய சங்கம் (என்.யு.எம்.), ஒரு வார காலத்துக்குள் தென்னாபிரிக்காவின் கறுப்பினத்தவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமை அகற்றப்படாவிட்டால் இனப்பாகுபாட்டு அரசாங்கத்துக்கு எதிராக காலவரையறையற்ற வேலை நிறுத்தமொன்றை முன்னெடுப்பதாக அறிவித்தது. வெள்ளையர்களுக்கு சொந்தமான வியாபாரங்களுக்கு எதிரான ஒரு நாடு பூராவுமான பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாகவும் என்.யு.எம். அச்சுறுத்தியது.

1985 ஆகஸ்ட் 25 அன்று தீர்மானிக்கப்பட்டிருந்த இந்த வேலை நிறுத்தம் பி.டபிள்யு. போதாவின் அரசாங்கத்தின் படி, சட்டவிரோதமானதாக இருந்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த பகுதியினருக்கும் அரசுக்கும் இடையிலான ஒரு சவாலுக்கு களம் அமைத்தது. இந்த வேலை நிறுத்தம் தென்னாபிரிக்காவின் தங்கச் சுரங்கங்களில் 70 வீதத்தையும் நிலக்கரிச் சுரங்கங்களில் 20 வீத த்தையும் இழுத்து மூடி, போராடிக்கொண்டிருக்கும் தேசிய பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகவும் அச்சுறுத்தியது.

நாடு பூராவும் கறுப்பின தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவந்த கிளர்ச்சிக்கு பதிலிறுப்பாக, ஜூலை 21 அன்று அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்ள் கைது செய்ப்பட்டு மேலும் 20 பொலிசாரின் கைகளில் கொல்லப்பட்ட போதிலும், அரச வன்முறைகளும் ஊரடங்குச் சட்டங்களும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதில் தோல்விகண்டன. ஆகஸ்ட் 8, வெகுஜனக் கிளர்ச்சிகள் துர்பன் என்ற துறைமுக நகரத்தைச் சூழவுள்ள பிரதேசத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. ஆர்ப்பாட்டங்களில் பலவும் சில வன்முறை நடவடிக்கைகளும் கறுப்பின உயர் தட்டினரை இலக்கு வைத்ததாக இருந்தன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் வளர்ச்சி கண்டுவந்த வர்க்கப் பண்பு, தென்னாபிரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள சீர்திருத்தவாத சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், அவர்கள் கறுப்பின ஆளும் தட்டுக்கு ஒரு இருப்பிடத்தை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உக்கிரமாக அழைப்புவிடுத்தனர். பரவிவரும் கிளர்ச்சிகள், மிகப்பெரும் ஆபிரிக்க பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தை கவிழ்த்துவிடும் என இச் சக்திகள் பீதி கண்டன.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: எஞ்சியிருந்த அமெரிக்க சொத்துக்களை கஸ்றோ தேசியமயமாக்கினார்


கியூபத் தலைநகர்

கியூபா மீது அமெரிக்கா வியாபாரத் தடையை விதித்ததற்கு பதலிறுக்கும் வகையில், 1960ல் இந்த வாரம், இந்த சிறிய தீவு தேசத்தில் எஞ்சியிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான சொத்துக்களை பிடல் காஸ்ட்ரோ தேசியமயப்படுத்தினார்.

1959ல் ஃபுல்ஜென்சியோ பட்டிஸ்டாவின் அமெரிக்க ஆதரவு சர்வாதிசாகரத்தை காஸ்ட்ரோ வின் கொரில்லா இயக்கம் அகற்றிய பின்னர் மெதுவாக அபிவிருத்தியடைந்து வந்த அமெரிக்க-கியூப உறவின் சீரழிவின் உச்ச கட்டமாக இந்த தேசியமயமாக்கம் இருந்தது.

காஸ்ட்ரோ வின் அரசாங்கம் முதலில் சோசலிசத்துக்கு தனது எதிர்ப்பை சத்தமாக பறைசாற்றியது. “நான் சோசலிசத்துடன் உடன்படவில்லை... நாம் கம்யூனிசத்தை எதிர்க்கின்றோம்” என 1959 ஏப்பிரலில் பிரகடனம் செய்த காஸ்ட்ரோ, உடனடியாக வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டுக்கு முயற்சித்தார். ஆனால், எய்ஸெனஹௌவர் நிர்வாகமானது, கியூப தேசியவாத இயக்கம் பெரும் அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு இலத்தின் அமெரிக்காவின் ஏனைய இடங்களிலும் பின்பற்றப்படலாம் என அச்சம் கொண்டது.

இந்த இளம் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை ஏற்பாடு செய்த வாஷிங்டன், பெருந்தொகை தொழில்துறை பொருட்கள் மற்றும் எண்ணெய்க்கு மாற்றாக, அமெரிக்க சந்தைகளுக்கு சீனியை ஏற்றுமதி செய்வதிலேயே முழுமையாக தங்கியிருந்த கியூப பொருளாதாரத்தின் திருகாணிகளை கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கியது.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: எதியோப்பியா தொடர்பாக பிரான்ஸ் இத்தாலியிடம் சரண்டைந்தது.


1938ல் பிரித்தானிய பிரதமர் நெவில் சம்பர்லைன் உடன் முசோலினி

பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மூன்று நாடுகளின் கலந்துரையாடல்கள், ஆபிரிக்க முனையில் இத்தாலி-எத்தியோப்பிய நெருக்கடி சம்பந்தமாக நாடுகளின் கழகத்தின் பேரவையின் சார்பாக ஒரு உடன்பாட்டை எட்டின. இந்த உடன்படிக்கை, ஐரோப்பிய சக்திகளால் காலனித்துவமயமாக்கப்படாது எஞ்சியுள்ள இரு ஆபிரிக்க அரசுகளில் ஒன்றுக்கு எதிரான இத்தாலியின் யுத்தத் தயாரிப்புக்களை தொடர்வதற்கு பெனிதோ முசோலியின் பாசிச அரசாங்கத்துக்கு ஒரு வெற்றி காசோலையை கொடுப்பதற்கு சமனாகும். இந்தப் பேச்சுவார்த்தையில் எத்தியோப்பியா ஒரு பங்காளியாக இருக்கவில்லை.

இந்த உடன்படிக்கை, “சகல விவகாரங்கள் சம்பந்தமாகவும் இத்தாலியின் போக்கை ஆரம்பம் முதல் இறுதிவரை ஏற்றுக்கொண்டுள்ளது. ஏறத்தாழ போலி சமரச முன்னெடுப்புகளத் தொடர்வதைத் தவிர வேறெதற்கும் இத்தாலி கீழ்படியவில்லை,” என நியூ யோர்க் டைம்ஸ் ஏற்றுக்கொண்டது. நடுவர் தீர்ப்புக்கள் “எல்லைச் சம்பவங்களில்” –அதாவது எரித்திரியா மற்றும் சோமாலியாவில் உள்ள தனது காலனிகளில் இருந்து எத்தியோப்பியாவுக்குள் திட்டமிடப்படும் இத்தாலிய ஆத்திரமூட்டல்கள்- மீது குவிமையப்படுத்தப்பட்ட போதிலும், இத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெறுகின்றன என்பதுபற்றிய எந்தவொரு கலந்துரையாடலும் நிராகரிக்கப்பட்டன.

“ஜநாயக” சக்திகளுக்கும் சர்வாதிகார இத்தாலிக்கும் இடையிலான உண்மையான பேச்சுவார்த்தைகள், நாடுகளின் கழக்த்துக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்டதோடு 1906 தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த தீர்மானம், லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகியவற்றால் மேலாதிக்கம் செலுத்தப்படும் மூன்று தனித்தனி செல்வாக்குப் பகுதிகளாக எத்தியோப்பியாவை கருதியது.

முசோலினியின் குறிக்கோள் பற்றி கடும் முன்னெச்சரிக்கையாக இருந்த, ஆபிரிக்காவின் மிகப் பெரும் பகுதியை தமக்கிடையில் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரான்சும் பிரிட்டனும், நாஸி ஜேர்மனிக்கு ஒரு சாத்தியமான எதிர் சமசக்தியாக இத்தாலியை பேணிக்காக்க விரும்பின.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: கருப்பினத்தவர்களை வாக்களிப்பில் இருந்து ஒதுக்கி வைக்க ஒக்லஹோமா கல்விப் எழுத்துப் பரீட்சை அமுல்படுத்தியது


ஒரு பங்குமுதல் பிரிவு குடும்பம்

அடிமைத்தனத்தின் முடிவுக்கு முன்னதாக வாக்களிக்கத் தகுதி கொண்டிருந்தவர்களின் வழியில் பிறக்காத எந்தவொரு வாக்ளிக்கும் வயுதுடைய பிரஜைக்கும் எழுத்தறிவு பரீட்சையை கட்டாயமாக்குவதற்காக, ஆகஸ்ட் 2 அன்று, ஒக்லஹோமா வாக்காளர்கள் மாநில அரசியலமைப்பை திருத்தியமைத்தார்கள். இந்த நடவடிக்கை விளைபயனுள்ள விதத்தில் சுமார் 30,000 ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்தது. இந்த திருத்தம் ஒரு குறுகிய வரையறையிலேயே நிறைவேற்றப்பட்டது.

ஆபிரிக்க அமெரிக்கர்களை விளைபயனுள்ள விதத்தில் வாக்களிப்பில் இருந்து தடுத்த தெற்கு மாநிலங்களில் ஒக்லஹோமா கடைசி மாநிலமாகும். 1890களில் தொடங்கி, தெற்கில் மாநிலத்துக்கு மாநிலம் எழுத்தறிவு பரீட்சை, இதர “பாட்டனார் வழித்தோன்றல் விதிகள்” மற்றும் தேர்தல் வரிகள் போன்ற ஒரு தொடர்ச்சியான “ஜிம் கிரோவ்” வாக்களிப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டங்கள் வறிய வெள்ளையர்கள் மத்தியிலும் வாக்களிப்பை மோசமாக குறைத்தது.

இந்த புதிய நடவடிக்கைகள், உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்து வந்த மறுகட்டமைப்பு காலகட்டத்தில் பெற்ற ஜனநாயக நன்மைகளை பறித்ததோடு பங்குமுதல் பிரிவினருக்கு உதவிபுரிந்தது - அடிமைத்தனத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக வறிய தென்பகுதியில் தொழிற் கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

உக்கிரமான வன்முறைகள் மற்றும் கறுப்பினத்தவர்களை விசாரணையின்றி கொலை செய்தல் மூலம் இந்த காலகட்டம் முன்மாதிரியானதாக இருந்தது. ஜிம் கிரோவ் இனவொதுக்கல் மற்றும் வாக்களிப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது போலவே, 1890 மற்றும் 1910 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

கறுப்பின மற்றும் வெள்ளையின வறியவர்கள் மத்தியில் அரசியல் ஒத்துழைப்பை நோக்கிய நகர்வுக்கு பதிலிறுப்பாகவே தெற்கு ஆளும் தட்டு இந்த வன்முறைகளையும் இனவாத சட்டங்களையும் அமுல்படுத்தின. இந்த இன ஒத்துழைப்பானது 1880 களின் கடைப் பகுதியில், தெற்கு விவசாயிகள் கூட்டணி மற்றும் கறுப்பின விவசாயிகள் கூட்டணியிலேயே முதல் முதல் தோன்றியது. இந்த இரு விவசாயிகள் சங்கங்களிலும் மில்லியன் கணக்கான உறுப்பினர்கள் இருந்தனர் – கறுப்பின விவசாயிகள் கூட்டணியில் மட்டும் 1.2 மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். வறிய வெள்ளையர்களுக்கும் வறிய கருப்பினத்தவர்களுக்கும் பொது எதிரிகளே இருப்பதாக அவர்கள் கருதினர். ஆனால் இந்த இயக்கம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகவே இருந்ததோடு தெற்கில் டிமோக்கிரடிக் கட்சி மட்டுமே கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை தோன்றியதற்கு எதிராகப் போராட இயலுமையற்றது என்பதை நிரூபித்தது.