சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

SEP holds final election meetings on Trotskyism and the struggle for socialism

ட்ரொட்ஸ்கிசம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி இறுதித் தேர்தல் கூட்டங்களை நடத்துகிறது

By our correspondents
21 August 2010

Use this version to print | Send feedback

Meeting
நிக் பீம்ஸ் சிட்னி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்

70 ஆண்டுகளுக்கு முன்பு லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தும் இன்றைய தொழிலாள வர்க்கத்திற்காக அவர் போராடிய கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இந்த வாரம் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய கூட்டங்கள் எடுத்துரைத்தன.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) யின் தேசிய செயலாளரும் நியூ சௌத் வேல்ஸின் செனட் வேட்பாளருமான நிக் பீம்ஸ் இரு கூட்டங்களிலும் பேசினார். விக்டோரியா செனட் வேட்பாளரான பாட்ரிக் ஓ’கானர் மெல்போர்னில் பேசினார்; SEP யின் தேசிய அமைப்பாளரும் கட்சியின் கிரேண்லர் தொகுதி வேட்பாளருமான ஜேம்ஸ் கோகன் சிட்னி கூட்டத்தில் பேசினார்.

இரு கூட்டங்களிலுமே அதிகமான அளவில் தொழிலாளர்கள், தொழில்வல்லுனர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர்கள் பங்கு பெற்றனர். பலர் SEP உடன் சமீபத்தில்தான் தொடர்பு கொண்டவர்கள்; பெரும்பாலானவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மூலமும், இது அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது அல்லது கட்சிப் பிரச்சாரகர்களால் அவர்களுடைய தொகுதிகளில் வியாபார மையங்கள் மற்றும் பிற இடங்களில் வினியோகிக்கப்பட்டவை. அவர்கள் SEP யின் திட்டத்திற்கும் அது தளமாகக் கொண்டுள்ள ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி விளக்கிய பேச்சாளர்கள் கருத்துக்களை பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்

O'Connor
பாட்ரிக் ஓ’கானர்

மெல்போர்னில் பேசிய பாட்ரிக் ஓ’கானர், கெவின் ருட்டை அகற்றி ஜூலியா கில்லர்டை பிரதம மந்திரியாக பதவியில் இருந்திய தொழிற் கட்சியின் ஜூன் 23-24 அரசியல் சதியின் அடித்தளத்தில் இருந்த காரணங்களை SEP தான் விளக்கியது என்பதைச் சுட்டிக்காட்டி தன் உரையை ஆரம்பித்தார். ஆட்சி மாற்றம் நடந்த சில நாட்களுள் SEP வெளியிட்ட அறிக்கையை அவர் மேற்கோளிட்டார். அதாவது அதில் ஒரு முன்கூட்டிய தேர்தல் தயாரிப்பு உள்ளது, “ருட் எப்படி, ஏன் அகற்றப்பட்டார் என்பது பற்றிய விவாதத்தை விரைவில் முடிக்கும் வகையில்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. தொழிற் கட்சி, லிபரல் அல்லது பசுமைவாதிகள் என்று எக்கட்சிகளும் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள கணிசமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசவில்லை, அல்லது தேர்தலுக்குப் பின் அவர்கள் செயல்படுத்த உள்ள உண்மையான செயற்பட்டியல் பற்றியும் விவாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

சதியின் அடித்தளத்தில் இருந்த பிரச்சினைகளை ஓ‘கானர் விரிவாக ஆராய்ந்தார். சுரங்கவரியை தூர எறிய வேண்டும் என்று கோரிய பெரும் சுரங்க நிறுவனங்களின் பங்கை அவர் சுட்டிக்காட்டினார், ஆனால் உலக நிதிய நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த வேண்டும் என்று பெரு வணிகம் கோரும் பரந்த செயற்பட்டியலின் ஒரு பகுதிதான் என்றும் விளக்கினார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருந்த சர்வதேச நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி ஓ’கானர் எச்சரித்தார்: “அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைத்தல் மற்றும் பல சமூக நலச்செலவுகள், உள்கட்டுமானத் திட்டங்களை அழித்தல் ஆகியவற்றின் உந்துதல் இங்கு ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் சர்வதேசப் போட்டித் தன்மையை அதிகப்படுத்தும், இணையான நடவடிக்கைகளைக் கொண்டுவரும் ஆளும் வர்க்கத்தின் நீண்ட கால கோரிக்கைகளை உயர்த்தியுள்ளது…. சமூகப், பொருளாதார வாழ்வின் எந்தக் கூறுபாடும் முதலாளித்துவ சந்தை மற்றும் இலாப நோக்கம் என்னும் முழு அழிக்கும் சக்தியை தவிர்க்காது.”

ருட்டை அகற்றியதில் முக்கிய பங்கு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஆசிய-பசிபிக் பகுதியில் பெருகிய போட்டி ஏற்பட்டுள்ளதின் விளைவு என்றும் ஓ’கானர் குறிப்பிட்டார். Business Spectator வலைத் தளத்தில் பிரசுரிகிகப்பட்டிருந்த ஒரு கட்டுரையின் முக்கியத்துவத்தையும் அவர் உயர்த்திக் காட்டினார். ருட்டைக் கடைசியாக சந்தித்த பின்னர் ஒபாமா அவருடைய நெருக்கமான ஆலோசகர்கள் ஒருவரிடம் வருங்காலக் கூட்டங்களில் வேறு ஒருவர்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். “இந்நிகழ்வை குறிப்பிடத்தக்க வகையில் செய்தி ஊடகம் இங்கு புதைத்துவிட்டது” என்றார் ஓ’கானர். மேலும் ருட் அல்லது வேறு எவரும் இரு தலைவர்களுக்கும் இடையே இருப்பதாகத் தோன்றும் வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்றிச் சவால் விடவும் இல்லை. பதவி எடுத்துக் கொண்டபின்னர், கில்லர்ட் உடனடியாக வாஷிங்டனுக்கு தன்னுடைய அசைக்கமுடியாத விசுவாசத்தைக் காட்டினார் என்றும் ஆப்கானிய போரில் நிபந்தனையற்ற ஆஸ்திரேலிய இராணுவ ஈடுபாடு தொடர்ந்து இருக்கும் என்றும் உறுதியளித்ததைக் குறிப்பிட்டார்.

SEP பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய ஓ’கானர், லியோன் ட்ரொட்ஸ்கியை மேற்கோளிட்டார்: “நாம் ஏனைய கட்சிகளைப் போன்ற கட்சி அல்ல. எங்களுடைய நோக்கம் இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, அதிக பத்திரிகைகளை வெளிவிடுவது, கருவூலத்தில் அதிகப் பணம் சேர்ப்பது, அதிக பாராளுமன்ற பிரதிநிதிகளை உருவாக்குவது என்பவைகள் அல்ல. அவையெல்லாம் தேவைதான், ஆனால் ஒரு வழிவகை என்னும் முறையில்தான். எங்கள் நோக்கம் உழைக்கும் மக்களின் முழுமையான பொருள்சார் மற்றும் ஆன்மிக விடுதலையும் சோசலிசப் புரட்சி மூலம் அவர்களை சுரண்டலில் இருந்து விடுவிக்கப்படுதல் என்பதும்தான்.”

SEP வேட்பாளர்கள் தேர்தல்களைத் தொடர்ந்து வர இருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தொழிலாளர்களை தயாரிப்பதற்காகத்தான் அதில் பங்கு பெறுவதாக பேச்சாளர் விளக்கினார். தங்கள் நலன்களைக் பாதுகாத்தல் என்பதற்கு “தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற் கட்சி மற்றும் அதன் துணை, பினாமி அமைப்புக்கள் அனைத்திலிருந்தும் முழுமையாக முறித்துக் கொள்ளுதல் அவசியமாகும்”. பசுமைவாதிகள் மற்றும் பல போலி இடது குழுக்கள், சோசலிஸ்ட் அலையன்ஸ் போன்றவை தொழிற் கட்சி “குறைந்த தீமை” என்று வளர்ப்பதில் உள்ள பங்கை அவர் உயர்த்திக்காட்டி, இதையொட்டி அவை தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துடனும் இருக்கும் பாராளுமன்ற வடிவமைப்புடனும் பிணைக்கத்தான் விரும்புகின்றன என்று குறிப்பிட்டார்.

போர், சமூக சமத்துவமின்மை, வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், சுற்றுச்சூழல் மாற்றத்தின் மூலம் சுற்றுச்சூழலை தகர்த்தல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி முதலாளித்துவத்தை அகற்றி உலகப் பொருளாதாரத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுகட்டமைப்பதுதான் என்று ஓ’கானர் விளக்கினார்.

புதன்கிழமை சிட்னி கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய SEP யின் தேசிய உதவிச் செயலாளர் லிண்டா லெவின், ருட்டிற்கு எதிரான அரசியல் சதி ஒரு அரசியல் திருப்புமுனையைக் குறிக்கிறது என்று சுட்டிக் காட்டினார். முழு அரசியல் மற்றும் செய்தி ஊடக ஸ்தாபனங்களின் முழு முயற்சிகள் இருந்தும், “சதியின் ஜனநாயக விரோத துர்நாற்றம் வெறுமனே அகன்றுவிடாது. எதிர்காலத்தில் பிற்கால நிகழ்ச்சிகளை நினைத்துப்பார்க்கும்போது, இந்நிகழ்வு தொழிற் கட்சியின் சவப்பட்டியில் இறுதி ஆணிகளில் ஒன்று என அறியப்படும். இக்கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தின் முக்கிய கருவி என அறியப்படும்” என்றார்.

ஆஸ்திரேலியா என்று மட்டுமின்றி உலகம் முழுவதும் கடந்த 100 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை ”தொழிலாளர் வர்க்கம் பற்றியெடுக்க தொடங்க வேண்டும்” என்று லெவின் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை, படைப்புக்களை ஆராய்தல் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான அவருடைய போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிதல் ஆகியவைகளில் ஈடுபாடு வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய படுகொலைக்குப் பின் வரலாற்றின் முழுப்போக்கும் அவருடைய கருத்துக்கள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றின் சீரிய தன்மையை நிரூபித்துவிட்டன” என்றார் அவர்.

SEP யின் தேசிய அமைப்பாளர் ஜேம்ஸ் கோகனும் அரசியல் சதிக்கான காரணங்களின் தளத்தை ஆராய்ந்து குறிப்பாக ஆப்கானிய போரின் பங்கு பற்றிச் சுட்டிக் காட்டினார். ருட் அகற்றப்படுவதற்கு சற்று முன்னர்தான் பாதுகாப்பு மந்திரி ஜோர் பாக்னெர் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியத் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணை ஒன்றை அறிவித்திருந்தார் என்பதைக் குறிப்பிட்டார்—இந்த நடவடிக்கை வாஷிங்டனால் உறுதியாக எதிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு பின்னர், புதிதாகப் பதவியேற்ற பிரதம மந்திரி கில்லர்ட் “ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ஈடுபாட்டை முடிக்கும் வகையில் கால அட்டவணை ஏதும் தன் அரசாங்கத்தால் விவாதத்திற்குக் கொண்டுவரப்படாது” என்று அறிவித்தார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் அந்நாட்டில் ஆஸ்திரேலிய இராணுவத்தின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் கோகன் கணித்துக் கூறினார்.

Nick
நிக் பீம்ஸ்

இரு கூட்டங்களுக்கும் கொடுத்த விரிவான அறிக்கையில், SEP யின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் ஆகஸ்ட் 1940ல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதின் முக்கியத்துவம் மற்றும் 70 ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான நீடித்த போராட்டத்தின் முக்கியத்துவம் ஆகியவைகள் குறித்து ஆராய்ந்தார். (See full speech at “The Fourth International and the Perspectives of the SEP”).

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கூட்டத்தில், சமரசத்திற்குட்பட்ட காட்டிக்கொடுத்த ஏனைய கட்சிகளைப் போல SEP யும் காட்டிக் கொடுத்துவிடாது என்று எப்படி உறுதியாக தொழிலாளர்கள் நம்ப முடியும் என்று தான் கேட்கப்பட்டதாக பீம்ஸ் விளக்கினார். “நம்முடைய கட்சியின் நிலைநோக்கு அதன் வேலைத்திட்டத்தினாலும், அந்த வேலைத்திட்டத்திற்காக அது வரலாற்று ரீதியாக நடாத்திய போராட்டத்தை ஒட்டியுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று நான் விளக்கினேன். அக்கூட்டத்தில் முழுமையாக விளக்குவதற்குப் போதுமான நேரம் இல்லை. இன்று நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள் மற்றும் அதன் போராட்டங்கள் பற்றிய எனது குறிப்பு இந்த மிக முக்கியமான வினாவிற்கு விரிவான விடையிறுப்பாக இருக்கும்.”

1939ல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு சர்வதேச அளவில் புரட்சிகரப் போராட்டங்களில் ஒரு எழுச்சியைத் தோற்றுவிக்கும் என்பதை ஸ்ராலின் உணர்ந்திருந்தார் என்று பீம்ஸ் விவரித்தார். அதில் ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் தலைமை ஏற்கக்கூடும், அதையொட்டி சோவியத் அதிகாரத்துவத்தை அச்சுறுத்தக்கூடும் என்றும் அறிந்திருந்தார். எனவே ஒரு ஸ்ராலினிச கொலையாளியால் அந்த சாத்தியப்பாட்டை தடுக்கும் பெரும் முயற்சியாக ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட்டார்.

அந்தப் போருக்குப் பிந்தைய புரட்சிகர எழுச்சி, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு, முதலாளித்துவமும் ஒரு பொருளாதார ஏற்றமும் மறு கட்டமைப்பிற்கு தற்காலிகமாக உட்படுவதற்கு அது வழிவகுத்தது என்பதையும் SEP யின் தேசிய செயலாளர் ஆய்வு செய்தார். இந்தக் கடினமான சூழ்நிலைகள் நான்காம் அகிலத்திற்குள் சந்தர்ப்பவாதப் போக்குகள் எழுச்சிபெற வகை செய்தன, அவை அகிலத்தின் மார்க்சிச அஸ்திவாரங்களை தாக்கி இயக்கத்தையே அழிக்க முற்பட்டன.

இப்போக்குகளுக்கு எதிரான போராட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) 1953ல் ஸ்தாபிக்க வகை செய்தது. இது ஒரு நீடித்த, தொடர்ந்த போராட்டத்தை போருக்குப் பிந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க நடத்தியதுடன் அது பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிகரக் கட்சியின் சந்தர்ப்பவாத தலைமையுடனான 1985-86 பிளவின் தோல்வியில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

வெற்றுத்தன அரசியல் சிந்தனையாளர்கள் எப்பொழுதும் புரட்சிகரக் கட்சிக்குள் நடக்கும் பூசல்களை “தேனீர்க் கோப்பைக்குள் புயல்கள் போல” என்று உதறித்தள்ள முற்பட்டன. ஆனால் “இப்போராட்டங்களுக்கும் பரந்த பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சிகளுக்கும் இடையே ஆழ்ந்த தொடர்பு உள்ளது” என்று பீம்ஸ் கூறினார்.

WRP உடனான பிளவின் முக்கியத்துவத்தை மதிப்பிட, கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மூன்று இடைத்தொடர்புடைய வழிவகைகளை பீம்ஸ் ஆராய்ந்தார்: கடந்த கால் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம், தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் ICFI என்னும் புரட்சிகரக் கட்சிக்கான தயாரிப்புக்கள் என்பவையே அவை.

“மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் இன்றைய இயக்கத்திற்கும் ஒரு நீண்ட, கடினமான இடைத் தொடர்பை நாம் காண்கிறோம். அத்தகைய தற்செயல் நிகழ்வின் பொருள் நாம் ஒரு புதிய சமூகப் புரட்சிக்காலத்தில் நுழைகிறோம் என்பதாகும்” என்றார் அவர்.

இக்கூட்டத்தின் அறிக்கைகள் பார்வையாளர்களிடம் இருந்து சிந்தனை மிகுந்த, தீவிர விடையிறுப்புக்களைப் பெற்றது. பல வினாக்களும், ஆர்வமான விவாதங்களும் SEP யின் வரலாறு, சோசலிச முன்னோக்கு பற்றி எழுந்தன. இரு கூட்டங்களிலும் வசூலான நன்கொடைகள் $3,000 க்கும் மேலானதாகும். SEP இன் தேர்தல் நிதி இலக்கு $40,000 ஆகும். $600 மதிப்பிற்கும் மேற்பட்ட நூல்கள் விற்கப்பட்டன. இதில் SEP யின் புதிய துண்டுப்பிரசுரம் : The June 2010 political coup: a warning to the working class மற்றும் சமீபத்தில் அமெரிக்க SEPயின் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த் எழுதிய In Defence of Leon Trotsky ம் அடங்கும்.

மெல்போர்னில் பலதரபட்ட வினாக்கள் எழுந்தன: எப்படி ஒரு புரட்சிகரக் கட்சி அரசியல் இழிசரிவு மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகக் பாதுகாத்துக் கொள்ள முடியும்; உத்தியோகபூர்வப் பிரச்சாரம் ஏன் ஒரு பரந்த அரசியல் நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது; தொழிலாளர்கள் எப்படி தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ள முடியும்; வட கொரியா, பொலிவியா, ஈரான் போன்ற நாடுகள் சோசலிசத்துடன் தொடர்பு கொண்டுள்ளனவா?

சிட்னியில் கலந்துகொண்டவர்கள் சர்வதேச மூலோபாயம், தேசிய தந்திரோபாயம் இவற்றிற்கு இடையே உள்ள உறவுகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களை, குடியேற்ற எதிர்ப்பு மற்றும் பிறவகை தேசியக் கட்டுப்பாடுகள் மூலம் பாதுகாக்க முடியுமா; முதலாளித்துவத்திற்கு ஒரு இறுதி நெருக்கடி வருமா; ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் போருக்கு வகை செய்யுமா என்பவை பற்றி வினா எழுப்பினர்.

பேச்சாளர்கள் இவ்வினாக்களுக்கு விடையளித்து, முறையாகக் கூட்டம் முடிந்த பின்னும், இரு கூட்டங்களிலும் நீடித்த, ஆர்வமான விவாதங்கள் தொடர்ந்தன. இவை தொழிலாளர்கள், இளைஞர்களிடையே ஒரு உண்மையான சோசலிச மாற்றீடு பழைய கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தலைமைகளுக்கு எதிராக வரவேண்டும் என்பதில் பெருகிய அக்கறை இருப்பதைக் காட்டியது. (See “Audience members speak about Trotsky, socialism and the SEP”.)

Click here for full coverage of the SEP 2010 election campaign